Results 1 to 10 of 157

Thread: Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம்

Threaded View

  1. #1
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like

    Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம்

    இன்றைக்கு சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்னாள் [2008] ஒரு நாள் நமது ஹப்பின் நிறுவனர் திரு RR அவர்களும் திரு மணிசேகரன் அவர்களும் என்னை தொடர்பு கொண்டு ஒரு பெரிய சுமையை என் தலை மேல் சுமத்தினர். அன்றைய நாளில் மணி சார் நமது ஹப்பில் பாடல்கள் பலவிதம் என்ற தலைப்பில் தமிழ் திரைப்பட பாடல்களின் பின்னணியில் நடந்த சுவையான தகவல்களை எழுதிக் கொண்டிருந்த நேரம். சட்டென்று அவருக்கு அவசர அலுவல் பணி காரணமாக ஜெனிவா செல்ல வேண்டிய சூழல். ஆகவே என்னிடம் அந்த பாடல்கள் பலவிதம் பகுதியை தொடரும்படி கேட்டுக் கொண்டனர். அதை Sivaji Season என்ற தலைப்பில் நடிகர் திலகம் நடித்த திரைப்பட பாடல்களிருந்து ஒரு சில பாடல்களை தேர்வு செய்து அதன் பின்னணியில் உள்ள தகவல்களை வெளிக் கொண்டுவரும் பெரிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியில் என்னை ஈடுப்படுதிக் கொண்டு பத்து பாடல்களை அதன் பின்னணியில் அடங்கியிருந்த தகவல்களை நான் பதிவு செய்தேன். திரைப்பட தொலைக்காட்சி நடிகரும் நமது ஹப்பில் உறுப்பினருமான திரு மோகன்ராம் இந்த முயற்சிக்கு பெரிதும் பக்க பலமாக இருந்து உதவினார். என்னுடைய இந்த தொடர் சிறப்பாக வருவதற்கு நமது ஹப்பின் admin head ஆன RR அவர்களும், மாடரேட்டர் NOV மற்றும் மாடரேட்டர் பிரபு ராம் அவர்களும் தந்த ஊக்கமும் ஆதரவும் மறக்க முடியாதவை. பெரிய அளவில் எனக்கு பாராட்டு கிடைத்தது. அதன் எதிரொலியோ என்னவோ ஒரு சிலர் கண்களை அது உறுத்த ஒரு சில technical tools-ஐ பயன்படுத்தி அந்த திரியை ஹப்பிலிருந்து detach செய்தனர். அதை மீண்டும் தேடி பிடித்து மீள் பதிவு செய்தேன், சிறிது காலத்திற்கு பிறகு அதிலும் ஒரு பகுதி மறைந்து விட்டது. இன்றைக்கு காலம் கனிந்திருப்பதால் நடிகர் திலகத்துக்கென்று ஒரு தனி forum ஒன்று அமைந்திருப்பதால் அந்த திரியில் நான் எழுதியவற்றை [நான் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த என் தொகுப்பிலிருந்து மீண்டும் எடுத்து இங்கே ஒரு தனி திரியாக தொடங்குகிறேன். நான் முன்பே எழுதி பதிவு செய்த பத்துப் பாடல்களின் பின்னணி தகவல்களை வாரம் ஒரு பாடலாக மீள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். சற்றே நீளம் கூடிய பதிவுகள். அன்றைய சூழலுக்கேற்ப பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட பதிவுகள். ஆகவே அனைவரும் நிதானமாக படித்து தங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் ஆதரவையும் வேண்டும்

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •