Page 249 of 400 FirstFirst ... 149199239247248249250251259299349 ... LastLast
Results 2,481 to 2,490 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2481
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராணி முத்துவில் ஜீவ பூமி வந்த தகவலைத் தந்த கிருஷ்ணா கார்த்திக் தங்களுக்கு என் பாராட்டுக்கள்.. தங்கள் நினைவாற்றல் அபாரம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks gkrishna thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2482
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    L.R.ESWARI - maalaimalar write up part 2



    'பாசமலர்' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

    அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த 'பாசமலர்' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

    மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், 'வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

    இந்தப்பாடல் பெரிய 'ஹிட்' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

    அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, 'பாசமலர்' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த 'பணமா பாசமா' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

    அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

    டைரக்டர் ஸ்ரீதர், 'சிவந்த மண்' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.

    அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

    'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த 'ஹம்மிங்', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

    அந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு இணையாக உயர்ந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஓய்வு இன்றி நிறைய படங்களில் பாடினார்.

    அவர் பாடிய மிகப்புகழ் பெற்ற பாடல்களில் சில:

    'காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன்.'

    'ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.'

    'கண்களும் காவடி சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.'

    'அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.'

    'துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.'

    'குடிமகனே பெரும் குடிமகனே.'

    'பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.'

    - இப்படி எண்ணற்றப் பாடல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழுக்கு புகழ் சேர்த்தன. லட்சக்கணக்கான ரசிகர்களை தேடித்தந்தன.

    எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

    'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

    கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
    எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

    எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

    இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'

    இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.

    'உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடி புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?' என்ற கேள்விக்கு பதில் அளித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறியதாவது:-

    'வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த எனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், எனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் எனது கவனம் முழுவதும் இருந்ததால், எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.

    எனது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' என்று கூறினார், எல்.ஆர்.ஈஸ்வரி.
    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #2483
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    க்ருஷ்ணா.. தாசி நா கரெயுவே பா...
    க்ருஷ்ணா........... தாசி நா கரெயுவே பா....
    குவரிய மனசளத கோபாலனே..
    கொளநிந த்வனி கேளி நா பந்தினே...
    க்ருஷ்ணா தாஸி நா கரெயுவே பா.....

    கடலின அலேகளல்லி ஷாந்தியு எல்லி..
    கரெதித மனசினல்லி நெம்மதி எல்லி
    ரவி காணதே தாபரெ அருளுவதெல்லி
    ரசிகனே நீ பரதே நன்னந்த எல்லி..

    க்ருஷ்ணா தாஸி நா கரெயுவே பா..


    .... இந்த வரிகளைப் பாடியவர் எம்.ஆர். விஜயா...
    really super vender
    முதல் வரியே கிருஷ்ணா ஆ ஆ ஆ ஆ
    gkrishna

  7. #2484
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரே பாடல் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் வெளிவந்த அதிசயம் தமிழ் சினிமாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு முன் நடந்ததா தெரியவில்லை. ஒரு பாடல் ஒரு படத்தில் இடம் பெற்று சில ஆண்டுகள் கழித்து வேறொரு படத்தில் அதை பயன் படுத்தியது தெரிந்ததே. ஆனால் கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து பாடல் ஒரே சமயத்தில் அதுவும் ஒரே ஜோடி நடித்து ஒரே மாதிரி காட்சியமைப்பில் இடம் பெற்றது மிகவும் அபூர்வமானது.

    முத்து மண்டபம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றது. எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரி திருமண வரவேற்பில் பாடுவது போன்று காட்சியமைப்பு.



    இதே போல எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரி திருமண வரவேற்பு காட்சி அல்லி திரைப்படத்திலும் இடம் பெற்று, அதிலும் இதே பாடல் பயன் படுத்தப் பட்டிருப்பது அபூர்வமானதாகும்.

    காட்சியில் நடன அமைப்பும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி யிருக்கும்.

    இசை திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்.

    நீங்கள் மேலே பார்க்கும் காட்சியைப் போலவே அல்லி படத்திலும் இருக்கும். ஆனால் சற்றே வித்தியாசமான கேமிரா கோணங்கள், ஆடும் மங்கையர், ஆடும் மேடை இவற்றால் வேறுபடும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2485
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இராகவேந்திரர் சார்,
    இரு படங்களில் ஒரே பாடல் இடம் பெற்றுள்ள
    தகவல் இதுவரை கேள்விப்படாத ஒன்று.இது
    போன்ற தகவல்களை அளிக்கும் தங்களது பணி
    தொடரட்டும்.
    அன்பு கோபு

  9. #2486
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    // ஒரு பாடல் ஒரு படத்தில் இடம் பெற்று சில ஆண்டுகள் கழித்து வேறொரு படத்தில் அதை பயன் படுத்தியது தெரிந்ததே //

    உண்மை... ராகவேந்தர் சார்,

    நமது 'செல்வம்' (1966) படத்தில் இடம்பெற்ற 'எனக்காகவா நான் உனக்காகவா' பாடல் அப்படியே 'வாழையடி வாழை' (1973) படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

    பாடகர்கள் கூட மாறவில்லை. தாராபுரம் சுந்தர்ராஜன் - ஜமுனாராணி பாடிய அதே வெர்ஷன். இரண்டுக்கும் ஒரே இயக்குனர் கே.எஸ்.ஜி...

  10. #2487
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக் சார்,
    செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற-எனக்காகவா
    நான் உனக்காகவா-பாடல் காட்சி வாழையடி வாழை
    திரைப்படத்தில் முத்துராமனும் பிரமீளாவும் காண்பது
    போல் அமைந்துள்ளது.
    அன்பு கோபு

  11. #2488
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ரவியின் படங்களில் அதிகம் பேசப்படாத படங்களில் செல்வியின் செல்வனும் ஒன்று. சில பல பக்கங்களுக்கு முன் இதைப் பற்றிய குறிப்பும் வந்துள்ளது. புகழேந்தியின் இசையில் நான் உங்களைக் கேட்கின்றேன், கொஞ்சவா கொஞ்ச நேரம் , இந்த இரண்டு பாடல்கள் பிரசித்தம். இசையரசியின் குரலில் இன்னொரு பாடலும் இப்படத்தில் நன்றாக இருக்கும். வந்தால் இந்த நேரம் வா வா வா... இது வரை இப்பாடலைக் கேட்காதவர்களுக்காக..

    http://www.inbaminge.com/t/s/Selviyn%20Selvan/
    raghavendra ji.. பி.சுசீலாவும் இன்னொரு பெண் குரல் ( சரளாவோ ) பாடும் "பெண்ணுக்கு பெண்ணு என்னடி.. நீ ஒண்ணும் மறைக்காம சொல்லடி" என்ற பாடல் இந்தப் படம்தானே ?

  12. #2489
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ஒரே பாடல் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் வெளிவந்த அதிசயம் தமிழ் சினிமாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு முன் நடந்ததா தெரியவில்லை. ஒரு பாடல் ஒரு படத்தில் இடம் பெற்று சில ஆண்டுகள் கழித்து வேறொரு படத்தில் அதை பயன் படுத்தியது தெரிந்ததே. .
    vender unmaiyil neengal vender
    gkrishna

  13. #2490
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார் குறிப்பிட்ட 'கன்னிப் பெண்ணைக் கைபிடித்து' பாடல் அல்லி படத்தில் ஆடியோ வடிவில்

    http://www.inbaminge.com/t/a/Alli/
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •