Page 277 of 400 FirstFirst ... 177227267275276277278279287327377 ... LastLast
Results 2,761 to 2,770 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2761
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    கோ,

    அதிகம் கொண்டாடப்படாத பாடகி பி.வசந்தா பற்றிய சிறப்புப்பதிவு அருமை. ஆனால் தமிழில் அவரை பெரும்பாலும் ஹம்மிங் குரல் கொடுப்பவராகவே வைத்திருந்து வஞ்சித்து விட்டனர்.

    நிழலில் இருந்தவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த தங்கள் முயற்சி, பலே...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2762
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வினோத் சாரின் 'முத்துமண்டபம்' விளம்பரப் பதிவைப்பார்த்ததும் மனம் காலத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது. இலட்சிய நடிகரின் ஒரு வித்தியாசமான படம்.

    பாடகர்திலகத்தின் கம்பீரக்குரலில் ஒரு தத்துவப்பாடல், விரக்தியின் விளிம்பில் நின்று கதாநாயகன் பாடுவார்....

    சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
    வெட்கமில்லாமல் துக்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா

    பாய்விரித்து படுப்பவரும் வாய்திறந்து தூங்குகிறார்
    பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை
    கொஞ்சவரும் கிளிகளெல்லாம் கொடும் பாம்பாய் மாறுதடா
    கொத்திவிட்டு, புத்தனைப்போல் சத்தியமாய் வாழுதடா

    சொன்னாலும் வெட்கமடா.....

  4. #2763
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2764
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    vaali - from maalaimalai today


    எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

    அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.

    வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.

    இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், 'வாலி' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், 'உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?' என்று கேலி செய்தார்.

    உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, 'வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.

    அதைப் படித்த ஆசிரியர், 'பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

    ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.

    நண்பர்களுடன் சேர்ந்து 'நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் 'கல்கி', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.

    ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் 'சில்பி' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். 'கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்' என்று சில்பி ஆலோசனை கூறினார்.

    இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.

    வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, 'அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே' என்று வாலியைப் பாராட்டியதுடன், 'பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.

    கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.

    சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.

    ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    'ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.

    `மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.

    அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.

    நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.

    ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.

    காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.

    ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது 'கமர்ஷியல் ஆர்ட்.' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.

    ஸ்ரீரங்கத்தில், 'வாலி பப்ளிசிட்டீஸ்' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. 'கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.'

    எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.'

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.
    gkrishna

  6. #2765
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    From Tamil Hindu -today

    பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான பலே பாண்டியா (1962) படத்தில் பாண்டியன்,மருது, சங்கர் என மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.

    இந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே மாமா மாப்ளே என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது.

    அப்போது கிண்டியில் அமைந்திருந்த நியூட்டன் ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர். ராதாவுக்காக எம். ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.

    அச்சு அசலாகத் தனது குரலில் பாடியதைப் போலவே ராஜு பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், ஏன்டா இங்க என்ன யானை வித்த காட்டவா வந்திருக்கு? என்று எல்லோரையும் துரத்தினாராம்.

    ஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்கவிட்டு ரிகர்சல் பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா.

    படப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர். ராதா ரசித்துக் கொண்டிருப்பதுபோல இரண்டு கேமராகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.

    பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்துபோனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார். முக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.

    பாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.

    படப்பிடிப்பு முடிந்ததும்.. அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே!? என்னாலயே சிரிப்பை அடக்க முடியல என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா... அடப் போய்யா... நான் குதிச்ச குதியில விக் கழன்றுகிட்டு வந்திருச்சு... அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் தீர்ந்துருமே விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான்.. அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம் என்றாராம்.
    gkrishna

  7. Thanks Gopal.s thanked for this post
    Likes madhu, Russellmai liked this post
  8. #2766
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    உடன் வரும் மாய நிழல் - From Today Tamil HINDU


    பாசத்துடனும் ஆசையுடனும் பழகிவந்த காதலி அல்லது கைப்பிடித்த மனைவி திடீரென்று மறைந்த துக்கத்தில் நம் திரை நாயகர்கள் அவள் நினைவாக அல்லல்படும்போது மறைந்தவள் ஆறுதல் சொல்லிப் பாடுவதாக அமைந்த பாடல் காட்சிகள் எல்லா இந்தியத் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட பாடல்கள் அமரத்துவத்தன்மை அடைவதும் உண்டு.

    தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்த உணர்வை வெளிப்படுத்திய இரண்டு திரைப்பாடல்கள், காலத்தைக் கடந்து இன்றும் பெரிதும் கேட்டு ரசிக்கப்படுகின்றன.

    வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.

    லதா மங்கேஷ்கர் பாடிய பல்லாயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று என்று தெரிவுசெய்யப்பட்ட இந்தப் பாடலை எழுதியவர் இந்தித் திரை இசைக் கவிஞர்களின் அரசன் என்று புகழப்படும் ராஜா மெஹதி அலி கான். பாடலுக்கு இசை பாரம்பரிய இசை அமைப்பாளர் மதன்மோஹன். பாடல் இடம்பெற்ற வெற்றித் திரைப்படம் 1966-ல் வெளிவந்த மேரே சாயா (என் நிழல்) என்ற சாதனா - சுனில் தத் நடித்த படம்.

    பாடல் வரிகள்.

    து ஜஹான் ஜஹான் சலேகா

    மேரா சாயா சா ஹோகா

    மேரா சாயா

    கபி முஜ்கோ யா கர்கே

    ஜோ பெஹேங்கே தேரி ஆஸு

    தோ வஹீ பே ரோ லேகே

    உன்ஹே ஆக்கே மேரே ஆஸு

    து ஜிதர் கா ருக் கரேகா

    மேரா சாயா

    ... ...

    இதன் பொருள்:

    நீ எங்கெங்கு செல்கிறாயோ

    என் நிழல் (அங்கெல்லாம்) உடன் இருக்கும்

    என் நிழல்...

    எப்பொழுது என் நினைவில் உன் கண்ணீர் பெருகுகிறதோ அங்கே உடன் வந்து

    அது நிற்கும்படி என் கண்ணீர் தடுத்துவிடும்.

    என் நிழல் உடன் இருக்கும்

    நீ விரக்தி அடைந்தால் நானும் விரக்தியாகிவிடுவேன்

    நான் கண்ணுக்குத் தெரிந்தாலும்

    தெரியாவிட்டாலும்

    உன் உடன்தான் இருப்பேன்

    நீ எங்கு சென்றுகொண்டிருந்தாலும்

    என் நிழல் உடன் இருக்கும்.

    நாயகியை இழந்த பிறகு பாடும் இப்பாடல் வரிகளின் இரண்டாம் பகுதியில் அவள் உயிருடன் இருக்கும்போது பாடிய சில வரிகள் வால்யூம் 2 என்று தனியாக உள்ளன. படத்தில் அவை ஒரே தொகுப்பாகக் காட்சியாக்கப்பட்டிருகின்றன. இந்த உணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஜெமினி கணேசன் - கே.ஆர். விஜயா நடித்த கற்பகம் படத்தின் பாடல்:

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மக்கள் கவிஞர் வாலி எழுதி அவருக்கு மிகவும் புகழ் சேர்த்தது அந்தப் பாடல். பாடியவர் பி. சுசீலா. தான் விட்டுச் சென்ற இடத்திற்கு வந்தவளை நேசிக்கும்படி இறந்த மனைவி பாடும் பாடல் வரிகள் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

    மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா

    உன்னுயிராய் நான் இருக்க என்னுயிராய் நீ இருக்க

    மன்னவா மன்னவா மன்னவா

    கண்ணை விட்டுப் போனாலும்

    கருத்தை விட்டுப் போகவில்லை

    மண்ணை விட்டுப் போனாலும்

    உன்னை விட்டுப் போகவில்லை

    இன்னொருத்தி உடலெடுத்து

    இருப்பவளும் நானல்லவா

    கண்ணெடுத்தும் பாராமல்

    கலங்குவதும் நீயல்லவா

    உன் மயக்கம் தீர்க்க வந்த

    பெண் மயிலைப் புரியாதா

    தன் மயக்கம் தீராமல்

    தவிக்கின்றாள் தெரியாதா

    என் உடலில் ஆசை என்றால்

    என்னை நீ மறந்துவிடு

    என் உயிரை மதித்திருந்தால்

    வந்தவளை வாழவிடு.

    மன்னவா மன்னவா மன்னவா

    நாயகியை நினைத்து வாடும் நாயகன் மட்டுமே ஆறுதல் பெற முடியும் என்பதும் நாயகனை நினைத்து வருந்தும் நாயகிக்கு இம்மாதிரிப் பாடல்கள் ஒருபோதும் திரையில் இடம்பெற முடியாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய காவிய இலக்கணமாகும்.
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #2767
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி.. அருமையான பதிவு. மேரா சாயா-தான் தமிழில் இதயக் கமலம் என்ற பெயரில் வெளிவந்தது. தூ ஜஹான் ஜஹான் சலேகாவை தமிழில் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்று சுசீலாவின் குரலைக் கொண்டு மயங்க வைத்திருக்கிறார்கள். "மன்னவனே அழலாமா" போல இந்தப் பாடலுக்கும் நடித்தவர் கே.ஆர்.விஜயா என்பது ஹைலைட் !!

  11. #2768
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    கிருஷ்ணா ஜி.. அருமையான பதிவு. மேரா சாயா-தான் தமிழில் இதயக் கமலம் என்ற பெயரில் வெளிவந்தது. தூ ஜஹான் ஜஹான் சலேகாவை தமிழில் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்று சுசீலாவின் குரலைக் கொண்டு மயங்க வைத்திருக்கிறார்கள். "மன்னவனே அழலாமா" போல இந்தப் பாடலுக்கும் நடித்தவர் கே.ஆர்.விஜயா என்பது ஹைலைட் !!
    நன்றி மது சார்
    இந்த பதிவை காலையில் நானும் எனது அத்தை ஒருவரும் (அவர் வயது கிட்டத்தட்ட 65 வயது இருக்கும்) சேர்ந்து படிக்கும் போது நீங்கள் சொன்ன இதே தகவலை சொன்னார் .
    இந்த பதிவை எழுதியவர் 'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல' பாடலை பற்றியும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்
    என்றும் அவர் கூறினார்
    மீண்டும் ஒரு முறை நன்றி மது சார்
    gkrishna

  12. #2769
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வினோத் சார்
    செந்தாமரை நிழற்படம் மிகவும் அருமை. அதே போல் முத்து மண்டபம் படநிழற்படமும். தொடர்ந்து தங்கள் பங்களிப்பில் பல அபூர்வ நிழற்படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #2770
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உள்ள(த்)தை அள்ளித்தா

    இந்தத் தொடரில் அடுத்து நாம் பகிர்ந்து கொள்ளப் போவது கே.ஆர்.ராமசாமி, ஜெமினி கணேசன் நடித்து மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த நீதிபதி திரைப்படத்திலிருந்து கே.ஜமுனா ராணி குழுவினர் பாடிய பாடல். பாடலைக் கேட்கத் துவங்கிய உடனே நம்மையும் அறியாமல் நம் கால்கள் தாளம் போடும். அருமையான பாடல். நமக்காக சிறப்பான ஒலித்தரத்தில்

    வந்ததடி ராஜயோகம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •