Results 1 to 2 of 2

Thread: lyrics and meaning for Aaya kalaigal Arupathu Naanginaiyum

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    lyrics and meaning for Aaya kalaigal Arupathu Naanginaiyum

    Hello . I need lyrics and meaning for Aaya kalaigal Arupathu Naanginaiyum
    Thanks

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2004
    Posts
    405
    Post Thanks / Like
    SARASWATHI ANTHATHI WRITTEN BY KAMBAR

    AAYA KALAIGAL ARUPATHU NANGINAIYUM
    EYA UNARVIKKU MENNAMMAI - THOOYA
    VURUP PALINGU POL VAALEN ULLATHIN ULLE
    IRUPPALINGU VAARA THIDAR !!

    PADIKA NIRAMUM PAVALACH CHEVVAYUM
    KADIKAMAZH POON THAMARAI POR KAIYUM - THUDIYIDAIYUM
    ALLUM PAGALUM ANAVARAMUM THUTHITHAL
    KALLUM SOLLATHO KAVI !!



    1.
    SEER THANTHA VELLITHAZH POONKAMALA SANATHDEVI SEN SOR
    TRAR THANTHA VENMANATH THAMARAIYAATTI SARORUKA MER
    PAAR THANTHA NATHA NISAITHANTHA VAARANAP PANGAYATHTHAAL
    VAAR THANTHA SOTHI YAMPORUGATH THAALAI VANANGATHUM

    2.

    Vanangum Silai Nuthalum Kazhaitholum Vanamulai Mel
    Sunangum Pudhiya Nilavezhu Meniyum Thottudane
    Pinangum Karuththadang Kangalu Nokkip Piraman Anbal
    Ungangum Thiru Mundilay Marai Nangum Uraippavale !!

    3.

    Uraippar Uraikkum Kalaigalellam Ennil Unnai Andri
    Tharaipa Oruvar Tharavallaro Thandara Mulai
    Varaippa Amuthu Thanthu Inginai Vaazhvittha Maamayile
    Viraippa Sadai Malar Vendamarai Pathi Melliyale !!


    4.

    Iyalanathu Kondu Nin Thiru Namamngal Ethutharkku
    Muyalamaiya Thadumarugindre Nintha Moovulagum
    Saiyalal Amaitha Kalai Magale Nin Thiruvarulukku
    Ayala Vidamal Adiyenaiyum Uvanthu Aandarule !!

    5.

    Arukko Thayathinum Chandro Thayamoth Thazhagerikkum
    Thirukkola Naayagi Senthamizhp Paavai Thisai Mugathhan
    Irukkothu Nathanum Thanu Meppothumini Thirukku
    Marukkola Naan Malaral Ennai AAlum Madamayile !!

    6.

    Mayile Madappidiye Kodiye Ilamaan Pinaiye
    Kuyile Pasum Kiliye Anname ManaKoorirutkor
    Veyile Nilavezhu Meni Minne Ini Veru thavam
    Payilen Magizhnthu Paniven Unathu Por-Paathangale !!

    7.

    Paadam Puyathir Panivaar Thamakkup Palakalaiyum
    Vedantha Muthiyum Thantharul Bharathi Vellithazh-Poom
    Seedam Puyathil Iruppar Iruppaliruppaven Sindaiyulle
    Edam Puviyir Pera Arivava Thenak Kiniye !!

    8.
    Ini Naan Unarvathennen Kalaiyaalai Ilagu Thondaik
    Kani Naanum Sevvithazh Vennirath Thaalaik Kamalavayan
    Rani Naayakiyai Akilaandamum Petra Thaya Manap
    Pani Naan Malar Urai Poovaiyai Aaranap Paavaiyaiye !!

    9.

    Paavum Thodaiyum Pathangalum Seerum Palavidhama
    Mevum Kalaigal Vidhappalidam Vidhiyin Mudhiya
    Naavum Pagarntha Thol Vedangal Naangu Narunkamalap
    Poovum Thiruppatham Poovaal Anipavar Pundhiyume !!

    10.

    Pundhiyir Kooriru Neekkum Pudhiya Madhiya Menko
    Vandhiyir Thondriya Deepamenko Nalloru Mariyor
    Sandhiyir Thondrum Thapanen Komanitha Mamenko
    Undhiyir Thondrum Piranpuyam Thoyum Oruthiyaiye !!

    11.

    Oruthiyai Ondrum Illaven Manathinu Vandhu Thannai
    Iruthiyai Venkamalath Thippalai Yennen Kalai Thoy
    Karuthiyai Impulanum Kalankaamar Karuthai Yellam
    Thiruthiyai Yaanmara Vendrisai Naan Mugan Deviyaiye !!

    12.

    Thevarum Deivap Perumaanu Naanmarai Cheppugindra
    Moovarum Thaana Aagiyulloru Muni Vararum
    Yaavaru Menai Vellavuyiru Mithazh Veluttha
    Poovaru Maathinarul Kondu Gyanam Purigindrathe !!

    13.

    Purigindra Sindhaiyi noode Pugundhu Pugundhirulai
    Arigindra Thaigindra Vella Varivinarum Porulaith
    Therigindra Vinbam Kanithoori Nenjam Thelinth Mutra
    Virigindra Thennen Kalai Manunarthiya Vedhamume !!

    14.

    Vedamum Vedathin Andamum Andathin Meypporulam
    Pethamum Pethathin Margamumu Markkap Pinakkarukkum
    Pothamum Pothavuru Vagi Yengum Pothin Thavinthu
    Nathamum Natha Vandarkkum Vendamarai Naayakiye !!


    15.

    Naayakamaana Malaragamavathu Gyana Vinbach
    Seyakamana Malaragamavathum Theevinaiya
    Leyaka Maari Vidumagamavathu Evvuyirkkum
    Thayaga Maavathum Thathar Svedasa Rorugame !!

    16.

    Saroruka Me ThiruKoilum Kaikalum Thaalinaiyum
    Uroruka Mum Thiru Valkulu Naapiyumon Kirulpor
    Sirorukam Soozhntha Vadanamu Naattamum Seyidalum
    Ororuka Meerarai Maatthirai Yaanaurai Magatke !!

    17.

    Karunthamarai Malar Kadar Thamarai Malar Kaamaruthal
    Aruthamarai Malar Sendamarai Malar Alayamath
    Tharunthamarai Malar Vendamarai Malar Thavi Ezhir
    Perunthamarai Manakkum Kalaik Kootta Pinai Thanakke !!

    18.

    Thanakke Thuniporu Lennum Tholvedam Chathur Mugathon
    Enakke Samaintha Apideka Mennum Imaiyavartha
    Manakketha Maatru Marunthenba Soodu Malarenban Yaan
    Kanakkesa Panthik Kalai Mangai Paatha Kamalangale !!

    19.

    Kamalam Thanil Iruppal Viruppodang Karam Kuvithuk
    Kalam Kadavular Potrumen Poovai Kannir Karunaik
    Kamalam Thanaik Kondu Kandoru Kaatrang Karuthul Vaippar
    Kamalam Kazhikkum Kalai Mangai Yaarani Kaaraniye !!

    20.

    Karanan Pagamum Senniyunch Sertharu Kanniyarum
    Narananaga Magalath Thiruvumor Naanmaruppu
    Varanan Deviyum Matrulla Deiva Madanthaiyarum
    Aaranap Paavai Panitha Kutreval Adiyavare !!

    21.

    Adivedha Naarunch Sirapparntha Vedha Manaithinukku
    Mudive Thavala Mulari Minne Mudiya Viratthina
    Vadive Magizhnthu Panivaar Thamath Mayalirave
    Vidive Yarinthennai Yaalvaar Thalanthanil Verilaiye !!


    22.

    Verilai Endru Adiyarir Koodi Vilangu Ninper
    Koorilai Yaanum Kurithu Nindren Aimpulak Kurumbar
    Maarilai Kalvar Mayakkamanin Malartha Neriyir
    Serilai Entharul Vendamarai Malarch Seyizhaiye !!

    23.

    Sethikkalam Tharkka Markkangal Evvevar Sindanaiyum
    Sothikkalam Murap Pothikkalam Sonnathe Thuninthu
    Saathikkala Migap Pethikkalam Mukthithan Eythalam
    Aathikkala Mayil Valli Pottralai Adainthavare !!

    24.

    Adaiyaala Naan Malarangaiyil Edu Manivadamum
    Udaiyaalai Nunnidai Ondru Milaalai Upanidathap
    Padaiyaalai Evvuyirum Padaippalaip Pathumanarum
    Thodaiyaalai Allathu Matriniyaaraith Thozhuvathuve!!

    25.

    Thozhuvaar Valam Varuvaar Thuthippar Thanthozhin Maranthu
    Vizhuvaar Arumarai Mai Therivaarinba Mai Pulagith
    Thazhuvaarinung Kanneer Malguvaar En Kannaavath ennai
    Vazhuvatha Senchor Kalai Mangai Paalanbu Vaithvare !!

    26.

    Vaikkum Porulum Ilvaazhkkaip Porulu Matrep Porulum
    Poykkum Porulandri Needum Porulalla Poothalathin
    Meikkum Porulu Mazhiyap Porulum Vizhupporulum
    Uyukkum Porulung Kalai Maanunarthu Muraip Porule !!

    27.

    Porulal Irandum Peralagu MendraPorul Porulo
    Marulatha Sorkalai VaanPorulo Porul Vanthuvandhith
    Tharulay Vilangumavark Koliya Ariyathavaruk
    Kirulay Vilangu Nalankilar Meniyilam Kilaiye!!

    28.

    Ilakkung Thirumuga Meiyir Pulaga Mezhum Kankaneer
    Malangum Pazhuthatra Vaakkum Palikku Manamigave
    Thulangu Muruval Saiyak Kalikoorunj Suzhal Punal Pol
    Kalangum Pozhuthu Theliyum Sonmaanaik Karuthinarkke !!

    29.

    Kariyaramung Kannum Kathir Mulaik Kannum Saiya
    Sariyar Karamum Padamum Ithazhum Thavala Narum
    Puriyarntha Thamaraiyum Thirumeniyum Poonbanavum
    Piriya Thennechinu Naavinu Nirkkum Perum Thiruve !!

    30.

    Perum Thiruvum Saya Mangaiyumaki Yen Pedhai Nenjil
    Irumtharulum Senchol Vanjiyaip Potril Ellavuyirkkum
    Porunthiya Gyanam Tharuminba Vedhap Porulum Tharum
    Thirunthiya Selvam Tharumazhiya Perum Seer Tharume !!


    நூல்

    கலித்துறை

    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
    வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
    யிருப்பளிங்கு வாரா திடர்.

    படிக நிறமும் பவளச் செவ்வாயும்
    கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
    அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
    கல்லுஞ்சொல் லாதோ கவி.


    நூல்


    1.
    சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
    றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
    பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
    வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே !!

    2.
    வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
    சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
    பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
    உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே !!

    3.
    உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
    தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
    வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
    விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே !!

    4.
    இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
    முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
    செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
    அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே !!

    5.
    அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
    திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
    இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
    மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே !!

    6.
    மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
    குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்
    வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
    பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே !!

    7.
    பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
    வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
    சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
    ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே !!

    8.
    இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
    கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
    றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
    பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே !!

    9.
    பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
    மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
    நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்
    பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே !!


    10.
    புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
    வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
    சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
    உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே !!

    11.
    ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
    இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
    கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
    திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே !!

    12.
    தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
    மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
    யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
    பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே !!

    13.
    புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
    அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
    தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
    விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே !!

    14.
    வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
    பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
    போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
    நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே !!

    15.

    நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
    சேயக மான மலரக மாவதுந் தீவினையா
    லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
    தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே !!

    16.
    சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
    உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
    சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
    ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே !!

    17.
    கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
    அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
    தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
    பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே !!

    18.
    தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
    எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
    மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
    கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே !!

    19.
    கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
    கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
    கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
    கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே !!

    20.
    காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
    நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
    வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்
    ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே !!

    21.
    அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
    முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
    வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
    விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே !!

    22.
    வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
    கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
    மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
    சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே !!

    23.
    சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
    சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
    சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
    மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே !!

    24.
    அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
    உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்
    படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
    தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே !!

    25.
    தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
    விழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
    தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
    வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே !!

    26.
    வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
    பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
    மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
    உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே !!

    27.
    பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
    மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
    தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
    கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே !!

    28.
    இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
    மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
    துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
    கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே !!

    29.
    கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
    சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
    புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
    பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே !!

    30.
    பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
    இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்
    பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
    திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •