Page 113 of 400 FirstFirst ... 1363103111112113114115123163213 ... LastLast
Results 1,121 to 1,130 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1121
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமக்குள் பகை வளர்ப்பது எந்த விதத்திலும் பயன் தராது. நாம் ஒருவரையொருவர் குறைத்து பேசுவது, எந்த விதத்திலும் நமது லட்சிய புருஷர்களுக்கு பெருமை சேர்க்காது. ஏனென்றால் ஒவ்வொரு துர்ப்ரசாரமும் ,பொய்யுரையும், இன்னொரு எதிர்விளைவை கொடுத்து டொமினோ சுழற்சியையே கொடுக்கும்.



    ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக நானே ஆரம்பிக்கிறேன். இது மாற்று திரியிலும் தொடருமானால் நன்மைக்கே.



    இன்று இந்த வாரம் பிறந்த நாள் காணும் நாடோடி மன்னனுக்கு வாழ்த்துக்கள்.



    ஒரு கலவையான மூன்று படங்களுக்கு ,சுவை குன்றாத திரைக் கதை அமைத்து நீளத்தை உணராத அளவு செய்த திரைகதை குழுவுக்கு முதல் வாழ்த்து.



    சுருக்கமான ,பொருள் பொதிந்த ஆனால் சுவாரஸ்யமான வசனங்கள்.கண்ணதாசன்-ரவீந்திரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.



    ஜி.ராமநாதன் போல ,மேல்தட்டு ,உயர் ரக இசையை போல இல்லாமல்,எளிய கருத்துக்களுக்கு ஏற்ற எளிய,ஜனரஞ்சக,ஈர்ப்பான இசை தந்த சுப்பையாவிற்கு வாழ்த்துக்கள்.



    இதன் இயக்குனர் பன் முக திறமை கொண்டவர்(Editing sense ,Camera sense, Direction). ஒரு அணியை circus ring master போல வேலை வாங்கி தன் பணியை செய்திருப்பார். பல காட்சிகளை நன்கு technical ஆக conceptualise செய்து நேர்த்தியாக execute செய்த திறமைக்கு வாழ்த்துக்கள்.



    சொந்த படத்தில் ,இருந்ததையெல்லாம் கொட்டி ,இழப்பதற்கு எதுவுமில்லை என்ற வகையில் , இவ்வளவு ஆடம்பர செலவு செய்து எடுத்த துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.



    முதல் முதலில் கருத்துக்கள்,எண்ணங்கள்,பொழுது போக்கு,ஜனரஞ்சகம் எல்லாம் சரி விகிதமாக கலந்த வெற்றி படம்.



    நடிப்பு ,இந்த மாதிரி படங்களுக்கு எது குறைந்த பட்ச தேவையோ அது வழங்க பட்டது.(என்ன ,இருவர் தோன்றும் ஐந்து நிமிட காட்சியில் 17 முறை மூக்கு தேய்ப்பதை இயக்குனர் தடுத்திருக்கலாம்). ஆனால் சுவாரஸ்யமான விறுவிறுப்பான சண்டை காட்சிகள்.

    நல்ல உச்ச காட்சி.



    சரோஜாதேவி ஆஹா... வண்ண காட்சிகள் நல்ல படமாக்கம்.



    சுவாரஸ்ய படம் .
    Last edited by Gopal.s; 22nd August 2014 at 01:37 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes masanam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1122
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ARIMA NAMBI COMPLETED 50 DAYS TODAY & FAST NEARING CENTURY IN SATYAM CINEPLEX - THIRD FILM OF VIKRAM PRABHU - 3rd TO COMPLETE 50 DAYS IN A ROW & 2nd TO COMPLETE 100 DAYS SOON

    Last edited by RavikiranSurya; 22nd August 2014 at 02:04 PM.

  5. #1123
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=Murali Srinivas;1158360]உண்மை உணரும் நேரம்
    Nice write up with facts sir

  6. #1124
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நீண்ட நாள் தொடர்பில் இல்லாமல் இருந்த சிறு வயது நண்பர் ஒருவர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பின் பல முயற்சிகளுக்கு பின் இன்று கிடைத்தார் . 1982 கால கட்டத்தில் வெளிநாடு சென்று தற்பொழுது மும்பை கல்யாண் பகுதியில் வசிக்கிறார் . அந்நாளைய நமது ரசிகர் ..நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் . இன்று அவரிடம் இருந்து வந்த முதல் கவிதை மெயில் .

    இது அவர் எழுதியதா அல்லது வேறு யார் உடையதா ? அல்லது ஏற்கனவே நமது திரியில் பதிவிடபட்டு விட்டதா என்பது எனக்கு தெரியவில்லை . ஆனால் இன்னும் நம்மவரின் ரசிகர் ஆக இருக்கிறார் என்பது மகிழ்ச்சிதானே ?



    சிவாஜி கணேசன் – ஒரு சரித்திரம்
    ———————————————–
    திரையில் நீ சிரிக்கிறாய்,
    நாங்கள் குதூகலம் அடைகிறோம்-
    நீ துடிக்கிறாய், நாங்கள் பதறுகிறோம்-
    நீ சவால் விடுகிறாய், நாங்கள் ஆயத்தம் ஆகிறோம்-
    நீ அழுகிறாய், நாங்கள் உடைந்து போகிறோம்.
    கை அசைத்து பிரிந்திருந்தால்
    பரவாயில்லை….
    இதயம் அசைத்து அல்லவா
    இளைப்பாற சென்று விட்டாய் ?
    உனக்கு கிடைத்த
    கைத்தட்டல்கள் எல்லாம்
    உயிர் கொடுக்குமென்றுகணக்கிட்டால் கூட…
    ஓராயிரம் கோடி ஆண்டுகள்
    நீ வாழ்ந்திருப்பாயே?
    ‘வானம் பொழிகிறது’
    வசனத்தை பேசிப்பார்க்காமல்
    ஒரு தமிழ்மகனாவது
    இருந்திருந்தால்…
    பாவம், அவனது புலன்களில்
    ஏதேனும் பழுதுக்ள் இருந்திருக்கும்!
    உன்னை மாதிரி
    நடிக்க பழகியே…
    இங்குசிலர் நடிகர்களாகி விட்டனர் !
    குணத்தளவில் நீ
    குழந்தையாக இருந்ததால் தான்
    அரசியல்நாகம்
    உனனைத் தீண்டிய போது
    எஙகளுக்கு விஷம் ஏறியது!
    நாங்கள் உன்னைத்தலைவனாய் தான் கொண்டாடினோம்..
    அரசியல் தலைவனாய் அல்ல-
    குடும்பத்தலைவனாய்!
    எங்கள் கலைத்தாயின்
    தலைமகனை
    கரை வேட்டிகளுக்கும்,
    கதர் சட்டைகளுக்கும்
    தத்து கொடுப்பதற்கு
    நாங்கள் ஒப்புக்கொள்வதாய் இல்லை!!!
    ‘ப்ரிஸ்டிஜ் பத்னாபன்’,
    ‘பாரிஸ்டர் ரஜினிகாந்த்’,
    ‘சிக்கல் ஷண்முகசுந்தரம்’
    என்று கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கூட
    மனப்பாடமாகி
    மனசுக்குள் சப்பண்மிட்டு
    அமர்ந்து விட்டதே?!
    நிஜத்தில் திடீரென
    நிகழ்ந்து விட்டால்
    தாங்கமுடியாதென்பதால் தான்,
    திரைப்படங்களில் இறந்து காட்டி
    ஒத்திகை குடுத்தாயோ…?
    எது எப்படியோ…
    விண்ணுலகில்
    அப்பரில் ஆரம்பித்து
    கட்டபொம்மன் வரை
    உனக்கு நன்றி செலுத்த வேண்டுமாம்-
    வரிசை அங்கும்
    பெரிசாய்தான் இருக்கிறது….
    உனக்கு வந்த இறுதிஊர்வலம் போல்!
    gkrishna

  7. Likes eehaiupehazij, Russellmai liked this post
  8. #1125
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear Mr.Gopal. At this stage, I don't think your optimistic review on a movie starring the icon of other thread would attract any bouquet of good will but I wish you don't receive a brickbat of ill will for your remarks on the hero's repeated mannerism to distinguish a double role characterization! Good luck!!

  9. #1126
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நமக்குள் பகை வளர்ப்பது எந்த விதத்திலும் பயன் தராது. நாம் ஒருவரையொருவர் குறைத்து பேசுவது, எந்த விதத்திலும் நமது லட்சிய புருஷர்களுக்கு பெருமை சேர்க்காது. ஏனென்றால் ஒவ்வொரு துர்ப்ரசாரமும் ,பொய்யுரையும், இன்னொரு எதிர்விளைவை கொடுத்து டொமினோ சுழற்சியையே கொடுக்கும்.



    ஒரு நல்லெண்ணத்தின் விளைவாக நானே ஆரம்பிக்கிறேன். இது மாற்று திரியிலும் தொடருமானால் நன்மைக்கே.



    இன்று இந்த வாரம் பிறந்த நாள் காணும் நாடோடி மன்னனுக்கு வாழ்த்துக்கள்.



    ஒரு கலவையான மூன்று படங்களுக்கு ,சுவை குன்றாத திரைக் கதை அமைத்து நீளத்தை உணராத அளவு செய்த திரைகதை குழுவுக்கு முதல் வாழ்த்து.



    சுருக்கமான ,பொருள் பொதிந்த ஆனால் சுவாரஸ்யமான வசனங்கள்.கண்ணதாசன்-ரவீந்திரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.



    ஜி.ராமநாதன் போல ,மேல்தட்டு ,உயர் ரக இசையை போல இல்லாமல்,எளிய கருத்துக்களுக்கு ஏற்ற எளிய,ஜனரஞ்சக,ஈர்ப்பான இசை தந்த சுப்பையாவிற்கு வாழ்த்துக்கள்.



    இதன் இயக்குனர் பன் முக திறமை கொண்டவர்(Editing sense ,Camera sense, Direction). ஒரு அணியை circus ring master போல வேலை வாங்கி தன் பணியை செய்திருப்பார். பல காட்சிகளை நன்கு technical ஆக conceptualise செய்து நேர்த்தியாக execute செய்த திறமைக்கு வாழ்த்துக்கள்.



    சொந்த படத்தில் ,இருந்ததையெல்லாம் கொட்டி ,இழப்பதற்கு எதுவுமில்லை என்ற வகையில் , இவ்வளவு ஆடம்பர செலவு செய்து எடுத்த துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.



    முதல் முதலில் கருத்துக்கள்,எண்ணங்கள்,பொழுது போக்கு,ஜனரஞ்சகம் எல்லாம் சரி விகிதமாக கலந்த வெற்றி படம்.



    நடிப்பு ,இந்த மாதிரி படங்களுக்கு எது குறைந்த பட்ச தேவையோ அது வழங்க பட்டது.(என்ன ,இருவர் தோன்றும் ஐந்து நிமிட காட்சியில் 17 முறை மூக்கு தேய்ப்பதை இயக்குனர் தடுத்திருக்கலாம்). ஆனால் சுவாரஸ்யமான விறுவிறுப்பான சண்டை காட்சிகள்.

    நல்ல உச்ச காட்சி.



    சரோஜாதேவி ஆஹா... வண்ண காட்சிகள் நல்ல படமாக்கம்.



    சுவாரஸ்ய படம் .


    GREAT GOPAL SIR.

    A GOOD START AND INDICATION FOR CORDIAL RELATIONS. I WELCOME THIS PROPOSAL. TO MY PART, I WILL ALSO CONTRIBUTE SOMETHING (UPTO MY KNOWLEDGE) IN THIS THREAD.

    IN FACT, WHEN IT WAS MENTIONED ABOUT THE MOVIE "NEELA VAANAM" in the Thread, I LIKE THE SONG "OHO OHO - ODUM ENNANGALE" AND THE RELATED SCENE IN WHICH NADIGAR THILAGAM SIVAJI GANESAN APPEARS WITH CAP AND POSING WITH LOVELY STYLE.

    SIMILARLY I ENJOY WATCHING THE SONG "ANGE MAALAI MAYAKKAM YAARUKKAGA" (showing frequently, especially in Sun-life TV) FROM THE MOVIE ' OOTTY VARAI URAVU' WHEREIN NADIGAR THILAGAM SIVAJI GANESAN ESTABLISH HIS STYLE IN A DIFFERENT MANNER.

    WITH HIS STYLE IN ANOTHER SONG OF 'VELLI KINNAM THAAN' FROM THE FILM "UYARNTHA MANITHAN" IS BEING LIKED BY ME ALWAYS.

    LIKE THIS, ONE MORE SONG OF 'ENATHU RAAJA SABAIYILE ORE KONDATTAM' FROM THE MOVIE "KALYAANIYIN KANAVAN' and SO ON.

    MORE POSTINGS WILL BE MADE AT THE APPROPRIATE TIME.

    THANKS A LOT AND APPRECIATING YOUR COMING FORWARD TO WRITE DIFFERENTLY. ASSURING OF MY CO-OPERATION, AT ALL TIMES, FOR THE GOOD CAUSE.


    S. Selvakumar

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்


    Note : When our beloved God M.G.R. is not criticised we also maintain the Decorum and keep our relations harmoniously.


    I also expect one more write-up from you about the movie 'ITHAYAKKANI' released exactly 39 years back (i.e. on 22-08-1975)
    Last edited by makkal thilagam mgr; 22nd August 2014 at 04:56 PM.

  10. Thanks Gopal.s thanked for this post
    Likes Russellbpw liked this post
  11. #1127
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    One more request to Gopal Sir,

    People will be there to discourage you for your new attempt. Please ignore such DISSUASION and you carry on with your postings continuously.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 22nd August 2014 at 05:07 PM.

  12. #1128
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபாலின் முயற்சிக்கு ஆதரவு கொடுத்த நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி! மேலும் உங்களுக்கு பிடித்த நடிகர் திலகத்தின் ஸ்டைலான பாடல் காட்சிகளை நினைவு கூர்ந்து பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி!

    அன்புடன்

  13. Likes Russellbpw liked this post
  14. #1129
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகமும் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபையும்- சுவையான வரலாறு

    ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார் இப்போது இல்லை. காலமாகி விட்டார். அவர் இருக்கும் போதே சினிமா தயாரிப்பிலிருந்து விலகி விட்ட அவரது நிறுவனம விநியோக துறையில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவரது புதல்வர்களில் இளையவர் திரு கண்ணன் என்பவர்தான் இப்போது அவர்கள் தயாரித்த படங்களின் விநியோக உரிமை விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா ரோட்டில் வசித்து வரும் அவரை சினிமா சம்பந்தமில்லாத வேறு ஒரு விஷயத்திற்காக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது. நாங்கள் சென்ற விஷயத்தை பற்றி பேசி விட்டு அதன் பிறகு சிவகாமியின் செல்வன் படத்தை பற்றி பேசினோம். சிவாஜி ரசிகர் என்பதை வெளிப்படுத்தி அதனால்தான் இந்த படத்தைப் பற்றி கேட்கிறோம் என்று சொன்னோம். உடனே அவர் தங்கள் நிறுவனத்தின் வரலாற்றை சொல்ல தொடங்கினார்.

    1969-ல் மாட்டுக்கார வேலன் படத்தை தயாரித்து 1970 பொங்கலுக்கு வெளியிட்ட நிறுவனம் மீண்டும் எம்ஜிஆர் அவர்களை வைத்து ராமன் தேடிய சீதை படத்தை தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 1970 ஜூலை வெளியீடாக கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்ட படம் தள்ளிக் கொண்டே போய் இறுதியில் 1972 ஏப்ரல் 14-ந் தேதி வெளியானது. அடுத்து அவர்கள் எடுத்த படம் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த அன்பு சகோதரர்கள். அது 1973 ஏப்ரல் or மே மாதம் வெளியானது. இதன் பிறகு நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் கனகசபை அவர்களுக்கு தோன்றவே நடிகர் திலகத்தை சென்று சந்தித்திருக்கிறார். சரி என்று ஒப்புக் கொண்ட நடிகர் திலகம் கதையை பற்றி கேட்க ஏற்கனவே ஜிக்ரி தோஸ்த் படத்தை மாட்டுக்கார வேலனாக்கியது, தலாஷ் படத்தின் ரீமேக்காக ராமன் தேடிய சீதை படத்தை எடுத்திருந்தது போன்ற அனுபவங்களில் மெகா ஹிட் ஆராதனா படத்தின் தமிழ் உரிமையை வாங்கியிருந்த கனகசபை அதை பற்றி நடிகர் திலகத்திடம் சொல்ல தமிழ் நாட்டிலும் பிரமாதமாக ஓடிய படமாயிற்றே என்று சிவாஜி சுட்டிக் காட்ட அது நமது படத்தை பாதிக்காது என்று கனகசபை சொல்லியிருகிறார். கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். அன்றைய நாட்களில் நடிகர் திலகம் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அந்த காலகட்டத்தில் நடிகர் திலகம் நடிக்கும் ஒரு புதிய படம் என்றால் 3,4 schedules-களாகத்தான் படப்பிடிப்பு நடக்கும். அப்படியில்லாமல் தனக்கு மொத்தமாக கால்ஷீட் வேண்டும் என்று கனகசபை கேட்க உடனே சிவாஜி சண்முகத்தை பார்க்க சொல்லிருக்கிறார். இவர்கள் கேட்டதை ஒப்புக் கொண்டு சண்முகம் தொடர்ந்தாற் போன்று 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

    படப்பிடிப்புக்கு சென்றிருந்த கண்ணன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் எப்படி ஒரு அலுவலகத்தில் வேலை நடப்பது போல் professional ஆக நடந்தது என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் நினைவு கூர்கிறார். திட்டமிட்டபடி வேலை நடக்க 42 நாட்களிலேயே படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லோரும் மிகுந்த சந்தோசம் அடைய படப்பிடிப்பு ஆரம்பித்த போது கமிட் பண்ண 1974 ஜனவரி 26 அன்றே படம் வெளியாகியது. படத்தை தயாரித்த ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனமும் சரீ வாங்கிய விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஹாப்பி. அவர் சொன்ன விஷயம் இது. அவர் சொல்லாமல் விட்டதைப் பற்றி நாம் பார்ப்போம்.

    40 ஆண்டுகள் பின்னோக்கி சென்று 1974-ற்கு செல்வோம். செட்டி நாட்டை சேர்ந்த கனகசபை தயாரிப்பை தவிர மதுரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரைப்பட விநியோக துறையிலும் ஈடுபட்டிருந்தார். எனவே சிவகாமியின் செல்வன் படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு விநியோக உரிமையை ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொண்டது. மதுரை மாநகரில் ஸ்ரீதேவி திரையரங்கில் 104 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படம் [104 CHF). 69 நாட்களிலேயே அதே அரங்கில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனதிற்கு ரூபாய் 75,066/- விநியோகஸ்தர் பங்கு தொகையாக் பெற்று தந்தது. அதே 69 நாட்களில் மொத்த வசூல் ரூபாய் 2,43,434.45 p.

    அன்றைய நாட்களில் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் ஒரு திரைப்படம் குறைந்த பட்சமாக சுமார் 300 அரங்குகளில் திரையிடப்படும். [படம் வெளியாகும் நாளில் முந்நூறு அல்ல. படிப்படியாக எண்ணிக்கை உயரும்.]. அந்த 300 திரையரங்குகளிளெல்லாம் அந்த படம் வெளியாகும்போது விநியோகஸ்தர் பங்கு தொகையாய் மிக மிக குறைந்த பட்ச சராசரி வருவாய் ரூபாய் 1000 என்று வைத்துக் கொண்டால் கூட 300 அரங்குகளில் ரூபாய் மூன்று லட்சம் வரும். அதோடு இந்த 75,000/- சேர்த்தால் 3,75,000/-. இதுவே விநியோகஸ்தருக்கு லாபம் எனும்போது இதைவிட கூடுதல் தொகைதான் வரும்

    நான் குறிப்பிட்டிருப்பது மிக குறைந்த பட்ச தொகை. ஐந்து லட்சத்திற்கும் அதிகமாகவே வெளியிட்டாளருக்கு கிடைத்தது என்பதுதான் உண்மை, அன்றைய நாளில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு எப்படிப்பட்ட லாபம் வருமோ அதை 100 நாட்கள் என்ற இலக்கை எட்டாமலே பெற்ற படம் சிவகாமியின் செல்வன்.

    இனி மீண்டும் 2014-க்கு வருவோம். இரண்டாவது முறை திரு.கண்ணன் அவர்களை சென்ற மாதம் இதே நாளில் சந்திக்க சென்றிருந்தோம். நாங்கள் செல்லும்போது யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் அதனால் காத்திருக்கும்படியும் சொன்னார்கள். சிறுது நேரத்தில் கண்ணன் அவர்கள் வந்திருந்த நபரோடு வெளியில் வந்தார். அவரை சந்திக்க வந்த நபர் ஒரு விநியோகஸ்தர். பெரிய அளவில் அறிமுகம் இல்லையென்றாலும் கூட வினியோகஸ்த நண்பர் ஒருவர் மூலமாக தெரிந்தவர். எங்களைப் பார்த்து அவர் நலம் விசாரிக்க கண்ணன் அவர்கள் உங்களுக்கு தெரியுமா என்று எங்களை கேட்டார். அறிமுகம் உண்டு என்று சொன்னோம். அவர் விடை பெற்று சென்றதும் நாங்கள் கண்ணன் அவர்களின் அலுவலக அறைக்கு சென்று நாங்கள் பேச வேண்டியதை பேசி முடித்த பிறகு அவரிடம் என்ன படத்திற்காக அந்த விநியோகஸ்தர் வந்திருந்தார் என்று கேட்க அவர் சிரித்துக் கொண்டே உங்கள் சிவகாமியின் செல்வன் படத்திற்குதான் என்றார். அவர் எளிதாக அணுகும் முறை, சரளமாக பேசும் முறையின் அடிப்படையில் தவறாக நினைத்துக் கொள்ளவில்லைஎன்றால் சில விஷயங்கள் கேட்கலாமா என்று நாம் கேட்க தாராளமாக என்றார்.

    வந்திருந்தவர் சென்னை ஏரியாவிற்கு வாங்க வந்தாரா என்று கேட்க இல்லை, All over TN என்றார். பட விநியோகம் என்பது எப்படி நடக்கிறது என்பது பற்றி நமக்கு தெரியாது என்று நினைத்தாரோ என்னவோ (நாமும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை) அதை விளக்கினார். ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் விநியோக உரிமையை விற்பனை செய்வோம். சென்னை மதுரை கோவை என்று 7,8 ஏரியாக்கள் இருக்கின்றன. 5 வருடம் என்று சொல்லும்போது 1974 முதல் 2014 வரை 40 வருடங்களில் 8 முறை கொடுத்திருக்கிறோம். இப்போது படம் அனைத்து ஏரியாக்களிலும் open ஆக இருக்கிறது. முன்பெல்லாம் ஏரியா வாரியாக கொடுப்போம். ஆனால் அந்த முறையில் 7,8 விநியோகஸ்தர்களை track பண்ண வேண்டியிருக்கிறது. Period எப்போது முடிகிறது என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. காரணம் உரிமை கொடுத்திருக்கும் period முடிந்த பிறகும் சில விநியோகஸ்தர்கள் படத்தை திரையிடுகின்றனர். அதனால் இம்முறை தமிழக உரிமையை ஒரு ஆளுக்கே கொடுத்து விடலாம் so that எங்களுக்கும் tracking எளிதாக இருக்கும் என நினைக்கிறோம். மொத்த வியாபாரமாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். ஒரு ஆர்வ கோளாறாக என்ன விலைக்கு கொடுப்பீர்கள் என்று கேட்க அவர் சொன்ன தொகையை கேட்டு அசந்து விட்டேன். காரணம் மொத்த தொகை ஆயிரங்களில் இருக்கும் என நான் நினைத்திருக்க அவர் லட்சத்தில் சொன்னார். எத்தனை பிரிண்ட் கொடுப்பீர்கள் என கேட்க அடுத்த அதிர்ச்சி. எங்களிடம் பிரிண்ட் இல்லை. அப்படியென்றால் நெகட்டிவிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்க நெகட்டிவும் இல்லை ஸ்பாயில் ஆகி விட்டது என்றாரே பார்க்கலாம். பிரிண்டும் இல்லாமல் நெகட்டிவும் இல்லாமல் வாங்குகிறவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டால் அதை அவர்கள் மார்க்கெட்டிலிருந்து source செய்துக் கொள்ள வேண்டும் என்றார். சார் இப்படி எதுவும் கொடுக்காமல் rights மட்டும் எழுதிக் கொடுப்பது என்றால் அது உரிமையாளரான நீங்கள் கொடுத்தாலும் சம்பந்தமேயில்லாத நாங்கள் எழுதிக் கொடுத்தாலும் இரண்டுமே ஒரே மாதிரிதானே என்று நான் கேட்க லாஜிக்காக பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். அதே நேரத்தில் நெகட்டிவும் பிரிண்டும் இல்லை என்பதனால்தான் இந்த விலை. அது எங்களிடம் இருந்திருந்தால் இந்த படத்தின் ரேஞ்சே வேறு என்றார். வணிக ரீதியாக மிக பெரிய அளவில் போகும் படம் இது. எப்போதும் demand இருக்கும் படம் சிவகாமியின் செல்வன் என்றார்.

    படத்தை முதன் முதலாக தயாரித்து லாபம் பார்த்தவர்கள் அதை விநியோகம் செய்து தொடர்ந்து 40 வருடங்களாக லாபம் பார்த்தவர்கள் இன்று கனகசபை அவர்கள் மறைந்த பிறகும் கூட அவர்களின் வாரிசுகளுக்கு நடிகர் திலகம் தன் படத்தின் மூலமாக லட்சங்களை அள்ளிக் கொடுக்கிறார்.

    இனி கனகசபை அவர்கள் நடிகர் திலகம் மூலம் அடைந்த மற்றொரு பெரிய லாபத்தையும் இங்கே குறிப்பிடுவது உசிதமாக இருக்கும் என நினைக்கிறேன். சிவாஜி புரொடக்ஷன்ஸ் படமான வியட்நாம் வீடு படத்தை மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு M A distribitors என்ற நிறுவனம் விநியோகம் செய்ததாக நினைவு. பிறகு வந்த தங்கப்பதக்கம் மற்றும் அண்ணன் ஒரு கோவில் படங்களை MLM distribitors விநியோகம் செய்தார்கள். திரிசூலம் படத்தையும் அவர்கள்தான் விநியோகத்திற்கு வாங்குவார்கள் என்று அனைவரும் நினைத்திருக்க ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு திரிசூலம் படத்தின் விநியோக உரிமையை வாங்கி விட்டார்கள். அவர்கள் அடைந்த லாபம் எப்படிபட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மதுரை மாநகரில் சிந்தாமணி திரையரங்கில் மட்டும் வந்த வசூல் விவரங்களை பார்த்தால் போதும்.

    மொத்த நாட்கள் - 200

    மொத்த வசூல் - Rs 10,28,819.55 p

    வரி நீக்கி வசூல் - Rs 5,13,415.77 p

    விநியோகஸ்தர் பங்கு - Rs 2,67,687.18 p

    திரையரங்கின் பங்கு - Rs 2,45, 722. 59 p


    மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் திரிசூலம் வெளியான வேறு எந்த திரையரங்குகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மதுரை மாநகரில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டும் வந்த விநியோகஸ்தர் பங்கு தொகையை பாருங்கள். மதுரை மாநகரில் அதன் பிறகு ஷிப்டிங்கில் வெளியான அரங்குகளிலிருந்தே ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த பங்கு தொகை திரிசூலம் படத்திற்காக மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு அவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்களோ அதை விட பல மடங்கு அதிகம். அனைத்து ஊர்கள் திரையரங்குகள் என்று கணக்கு எடுத்தோமென்றால் எப்படிப்பட்ட ஜாக்பாட் அடித்தார் கனகசபை என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

    இப்படி கனகசபை தயாரித்த நடிகர் திலகம் படமானாலும் சரி அவர் விநியோகம் செய்த நடிகர் திலகம் படமானாலும் சரி எப்படிப்பட்ட லாபத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு இனியும் சான்றுகள் வேண்டுமா என்ன?

    அன்புடன்

  15. #1130
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    NT - Irundhalum Ayirum Ponn Irandhalum Ayirum Ponn.

    No Proof requires after seeing the post of Mr Murali who is ruling in the Box Office.

    Thanks a lot for the complete and authentic information once again Mr Murali Sir.


    Regards

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •