Page 250 of 400 FirstFirst ... 150200240248249250251252260300350 ... LastLast
Results 2,491 to 2,500 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2491
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi View Post
    Rajkumar memorial to be open on 29th of Nov. Govt. of Kar. inviting Tamil SS also for this function. But these SS earning and living in TN never raised any voice on NT Memorial. If their movie face any problems for release only they raise their voices. RK memorial come within a period of 8 years not only the support of their family but also from Kannada Film Ind., and fans of Rajkumar and more over Kar. Politicians (though he was not supported any political parties in Kar.) In case of vishu memorail, only 3 years.

    But in TN, only Sivaji Pervai and some Nt fans are fighting for NT Memorial. When will our Dream comes true ?

    Dear Sir,

    As long as the ADMK Office bearers are holding positions in Nadigar Sangam, this will not happen. Atleast in this government it will never ever happen even if the EX-CM wants to build one as she knew his talents as a co-star !

    We know the reasons ....the other guys are always Jealous to the core when it comes to the talents and achievements of Nadigar Thilagam in his DRAMA & FILM CAREER both in India and Abroad...!

    Regards
    RKS

  2. Likes ifohadroziza liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2492
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a recap from Mr Murali Srinivas Old Post

    கர்ணன் படப் பாடல்களைப் பார்த்தேன் என்று சொன்னேன். அதில் தோன்றிய சில எண்ணங்கள். மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தின் பாடல்களை ஹிந்துஸ்தானி ராகங்களில் அமைத்திருப்பதாக பலரும் சொல்லி கேள்வி. அந்த ராகங்களைப் பற்றியும் இந்த பாடல்களைப் பற்றியும் இசை மேதைகள் நிறைய சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். நாம் பாடல் காட்சிகளைப் பற்றி பேசலாம்.

    என்னுயிர் தோழி - முதல் பாடல். முத்தான பாடல். ராகம் - ஹமீர் கல்யாணி.

    எத்தனை பாடகியர் வந்தாலும் நாம் ஏன் சுசீலாவை அளவுக்கோலாக கொள்கிறோம் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதிலும் முதல் சரணத்தில் அரண்மனை அறிவான் அரியணை அறிவான் என்ற இடத்தில் நிறுத்தி ஒரு ஆலாபனை செய்வாரே, அது ஒன்று போதும். இனி காட்சிக்கு வருவோம்.

    இந்த பாடல் படமாக்கப்பட்டபோது சாவித்திரிக்கு இரண்டு அசௌகரியங்கள். ஒன்று உடல் எடை கூடி விட்டது. இரண்டு அவர் அப்போது அவரது மகனை வயிற்றில் சுமந்திருந்தார். ஆதலால் அவரை அவ்வளவாக ஆட, ஓட விடாமல் படமாக்கியிருப்பார்கள். பாடலின் இடையில் நடிகர் திலகமும் அசோகனும் உள்ளே நுழைய முயற்சித்து ஆடலைப் பார்த்து விட்டு மறைந்துக் கொள்வதாக காட்சி. நடிகர் திலகத்தின் அந்த இரண்டு க்ளோஸ் அப் காட்சிகளாகட்டும் இல்லை லாங் ஷாட் ஆகட்டும் [இத்தனைக்கும் காம்பிநேஷன் இல்லை, சஜ்ஜெஷன் ஷாட்தான்] அந்த முகத்தில்தான் எத்தனை உணர்வுகள் மின்னி மறையும்? இசைக் கருவிகளை வாசிக்கும் தோழியர், பாடும் சேடிப் பெண்கள், ஆடும் நடன மங்கையர் என்று எல்லாமே அழகான லயத்தில் அமைந்திருக்கும்.

    கண்கள் எங்கே - ராகம் - சுத்த தன்யாசி.

    சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. இந்த பாடலை மட்டுமே ஒரு காஸட்டின் ஒரு பகுதி முழுக்க பதிந்து வைத்திருந்த ஒரு நண்பர் இருந்தார். அவ்வளவு இனிமை. இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் வரமாட்டார். ஆனால் அந்த குறையை தேவிகா போக்கி விடுவார். சரணங்களின் இடையில் தேவிகாவின் ஒரு சில நடன ஸ்டெப்ஸ் நளினமாக இருக்கும். அந்த ஏக்கத்தையும் விரகத்தையும் குறிப்பாக குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன் என்ற வரிகளின் போது ரசனையோடு வெளிப்படுத்தியிருப்பார்.

    இரவும் நிலவும் வளரட்டுமே - ராகம் - சுத்த சாரங்கி

    பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் காட்சி. கர்நாடகாவில் உள்ள பேலூர் - ஹளபேடு கோவிலில் படமாக்கப்பட்ட காட்சி. சுசீலா ஆலாபனை ஆரம்பிக்கும் போதே தியேட்டர் களை கட்டி விடும். நடிகர் திலகத்தின் ராஜ நடை, காலை வளைத்து நிற்கும் போஸ், நாயக நாயகியரை மட்டும் போஃக்கஸ் செய்யாமல் அரண்மனையின் சிற்ப அழகையும், பிரமாண்டத்தையும் பார்வையாளன் உணரும் வண்ணம் அமைக்கப்பட்ட காமிரா கோணங்கள், நடிகர் திலகம் - தேவிகா இடையிலான கெமிஸ்ட்ரி இவை அனைத்தும் வெளிப்படும் ஒரு சிறந்த பாடல்.

    கண்ணுக்கு குலம் ஏது - ராகம் - பஹடி

    முதலிரவு பாடல். ஆனால் சோகத்தில் ஆரம்பித்து மகிழ்ச்சியில் முடியும். தன் குலத்தையும் பிறப்பையும் கேவலப்படுத்தி விட்ட கோவம் கர்ணனுக்கு. அது மட்டுமல்ல, மனைவியே தன்னை உதாசினப்படுத்திவிட்டாள் என்ற எண்ணம். மனைவி தவறு செய்யவில்லை என்றவுடன் சிறிது மகிழ்ச்சி அடைந்து பிறகு மனைவியின் பாடல் வரிகள் எப்படி மனதுக்கு சாந்தி அளிக்கின்றன என்பதை வெறும் முகபாவங்களிலேயே காட்டியிருக்கும் நேர்த்தி. குலத்தை விட குணமே சிறந்தது என்பதற்கு கண்ணதாசனின் வரிகள் மிக அழகாக விளக்கம் கொடுக்கும். இதில் குறிப்பிட தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் உள்ளே ஒரு மனப்போராட்டம் நடக்கும் போது வெளியே சேடிப் பெண்கள் ஆடிக் கொண்டிருப்பர். அதாவது உள்ளே நடப்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் உள்ளே ஒரு முதலிரவு கொண்டாட்டம் நடக்கிறது என்று நினைத்திருப்பர். இது ஒரு லாஜிக்கலான காட்சியமைப்பு.

    மேலும் பேசுவோம்.

  5. Thanks Russelldwp thanked for this post
  6. #2493
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    மழை கொடுக்கும் கொடையும் - ராகம் ஹிந்தோளம்

    கர்ணனின் அரசவையில் புலவர்கள் பாடும் பாடல் தொகுப்பில் இடம் பெறும் முதல் பாடல். சீர்காழியின் கம்பீர குரலில் ஒலிக்கும். நடிகர் திலகம் நடந்து வந்து அந்த சிம்மாசனத்தில் அமரும் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

    நாணி சிவந்தன மாதரார் கண்கள்

    திருச்சி லோகநாதனின் குரலில் பாடல் ஒலிக்க பெண்களையும் புலவர்களையும் ரிஷிகளையும் வரிகளுக்கேற்ப காட்டி விட்டு தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே என்ற வரிகளின் போது நடிகர் திலகத்தின் கரங்களை க்ளோஸ் அப்பில் காட்ட செவ்வரி ஓடியிருக்கும்.

    இந்த காட்சி முடிந்தவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் ஓடி வந்து பாடசாலையில் சேர்க்க மறுக்கிறார்கள் எனும் காட்சி. [உங்கள் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என்ற வசனத்தின் போது கைதட்டல் பறக்கும்].

    ஆயிரம் கரங்கள் நீட்டி

    தன் தந்தையான சூரியனை வழிப்பாடு செய்து கர்ணனும் குழுவினரும் பாடும் பாடல். சம்ஸ்கிருத மந்திரங்களை சொல்லும் வேத விற்பனர்களை தாங்கள் தங்கியிருந்த பெங்களூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்கள் பாடும் அதே ராகத்தில் கண்ணதாசன் வரிகள் எழுதி மெல்லிசை மன்னர்களால் இசை அமைக்கப்பட்டது என்று சொல்லுவார்கள். டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடும் இந்த பாடலில் தனியாக "அழைக்கும் ஓர் உயிர்களுகெல்லாம்" என்ற வரியின் போது டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட நடிகர் திலகத்தின் வாயைசைப்பு ஆஹா! [இத்தனைக்கும் லாங் ஷாட் அதுவும் பக்கவாட்டில் காமிரா மூவ்மென்ட்].

    என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் - ராகம் ஹம்சநந்தி

    தன் மகனான அர்சுனனுக்காக இந்திரன் வந்து கவச குண்டலங்களை யாசகம் கேட்கும் காட்சி. பி.பி.எஸ். உருக்கியிருப்பார். வந்திருப்பது யார் என்பதை சொல்லி எந்த காரணத்திற்காக வந்திருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டு சூரிய பகவான் எச்சரிக்க அதையும் மீறி கர்ணன் உடலோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்களை தானம் கொடுக்கும் காட்சி. இதில் கூட மனித வடிவிலே வந்திருக்கும் இந்திரனிடம் அவரது நோக்கத்தை குத்திக் காட்டும் கர்ணன்.[தள்ளாடும் தேகம் ஆனால் தள்ளாடாத நோக்கம்] வேடம் கலைந்த இந்திரன் தன் சுயரூபத்தில் காட்சி தர நொடி நேரத்தில் கை கூப்பி கால் மடக்கி தேவேந்திரா என வணங்கும் பணிவு. அவன்தான் நடிகன்.

    போய் வா மகளே - ராகம் ஆனந்த பைரவி.

    தாய் வீட்டிற்கு செல்லும் சுபாங்கியை துரியோதனன் மனைவி பானுமதி வழியனுப்பி வைப்பதாக வரும் பாடல். ஒரு மாறுதலுக்கு சூலமங்கலம் பாடியிருப்பார். மனைவி செல்வதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுங்கும் கர்ணன் - அந்த பாவங்கள் பாடலின் ஆரம்ப வரிகளில் அவர் முகத்தில் வெளிப்படும். பாடல் செல்ல செல்ல மனம் சிறுது சிறுதாய் மாறுவதை காண்பித்து பாடலின் இறுதியில் மாளிகையின் வாசலில் மனைவி தேர் ஏறும் காட்சியில் மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைப்பதை இவ்வளவு convincing ஆக வெளிப்படுத்த நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

    மஞ்சள் முகம் நிறம் மாறி - ராகம் பீலு

    தந்தையால் அவமானப்படுத்தப்படும் சுபாங்கியின் வளைக்காப்பு நிகழ்ச்சியை கர்ணனின் அரண்மனையில் கொண்டாடும் பாடல். நடுவில் வரும் சரணம் மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி என்பது மட்டும் ஆரபியில் வரும். இதிலும் உப்பரிக்கையில் நின்று பார்க்கும் நடிகர் திலகம். அதிலும் குறிப்பாக கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேகம் அல்லவா எதிர்காலத்தில் இந்த தேசத்தில் கருணை செய்வான் அல்லவா என்ற வரிகளின் போது அந்த முகம்! வாய்ப்பே கிடையாது. மகனை போர்களத்திலே பலி கொடுத்து உயிரற்ற அவனது அந்த உடலை சுமந்து கொண்டு வந்து தன் மாளிகையில் கிடத்தும் போது இதே வரிகள் பின்னணியில் ஒலிக்க அப்போது அதே முகம் எப்படி மாறும்!

    மேலும் பேசுவோம்.

  7. Thanks Russelldwp thanked for this post
  8. #2494
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    இனி படத்தின் உயிர்நாடியான பாடல்கள்.

    மரணத்தை எண்ணி - ராகம் நாட்டை.

    குருஷேத்ர யுத்த பூமியில் தன் சுற்றத்தார் அனைவரும் தன் எதிரணியில் நிற்பதை பார்த்து மனம் தளரும் அர்ஜுனன், அவர்களை எப்படி எதிர்த்து போராடுவது, அவர்களை எப்படி கொல்வது என்று மனம் பேதலித்து காண்டீபத்தை நழுவ விட, கிருஷ்ணா பரமாத்மா கீதோபதேசம் செய்யும் காட்சி. கீதை என்ற மாபெரும் தத்துவக் கடலை கண்ணதாசன் தனக்கே உரிய எளிய பாணியில் அழகாக விளக்கிட மெல்லிசை மன்னர்கள் இந்த வசன பாடலுக்கு பொருத்தமான இசையை கோர்த்திருக்க சீர்காழி கன கம்பீரமாய் முழங்கிய பாடல். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை கவியரசு

    மானிடர் ஆத்மா மரணம் இல்லாதது
    மறுபடி பிறந்திருக்கும்
    மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்

    என்று வெகு எளிமையாக புரிய வைத்திருப்பார்.

    ஆசாபாசங்களை கடந்த பெரியவர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தை சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து. அதாவது அனைத்தும் பகவான் கிருஷ்ணனையே சேரும். இதை அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க வண்ணம் கண்ணதாசன்

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே.
    கண்ணனே காட்டினான்
    கண்ணனே சாற்றினான்
    கண்ணனே கொலை செய்கின்றான்

    என சொல்லும் போது அதை உள்வாங்கும் மனிதர்கள் தியேட்டரில் முழங்கும் கைதட்டல் ஒலியை நேரில் கேட்க வேண்டும். இதை சரியான வாய் அசைப்போடு என்.டி.ஆர் செய்து விட்டு பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதும் போது மொத்த பார்வையாளர்களும் யுத்தத்திற்கு தயாராகி விடுவார்கள். அற்புதமான பாடல்.

    உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.

    படத்தின் உச்சகட்ட பாடல் மட்டுமல்ல படத்திலேயே உச்சமான பாடல் என்று பெரும்பாலோர் கருதும் பாடல். தேரோட்டி சல்லியன் கோபித்துக் கொண்டு இறங்கி போய் விட, சூழ்ச்சி வலையில் சிக்கிய கர்ணன் மண்ணில் புதைந்த ரதத்தின் சக்கரங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் போது அர்ஜுனன் அம்புகளை தொடுத்து அவனை வீழ்த்துகிறான். ஆயினும் தர்ம தேவதை அரணாக நின்று அந்த அம்புகளை மலர் மாலைகளாக்க, மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்யப் புறப்படுகிறான் கண்ணன். அப்போது ஒலிக்கும் இந்த பாடல்.

    இந்த பாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும். சிகரம் வைத்தார் போன்ற சில வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர் பழி ஏற்றாயடா; நானும்
    உன் பழி கொண்டேனடா

    செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா;
    வஞ்சகன் கண்ணனடா.

    பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது. என்.டி.ஆரையும் சும்மா சொல்லக் கூடாது. அருமையாக பண்ணியிருப்பார். அந்த விஸ்வரூப தரிசனம்! தியேட்டரில் பார்க்கும் போதே நிறைய பேர் உணர்ச்சி வசப்படுவார்கள். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி, பந்துலு, என்.டி.ஆர்., எல்லோருக்கும் மேலாக நடிகர் திலகம்.

    மெகா தொலைக்காட்சியின் அமுத கானம் நிகழ்ச்சியின் போது ஒரு முறை ஆதவன் அவர்கள் இதற்கு இணையான ஒரு பாடல் இனி தமிழ் படங்களில் வராது என்றார். பலரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.

    மீண்டும் பேசுவோம்.

  9. Thanks Russelldwp thanked for this post
  10. #2495
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தில் இடம் பெற்ற ஆனால் எழுத விட்டு போன பாடல்.

    மன்னவர் பொருள்களை கைக் கொண்டு நீட்டுவார்.

    அரசவையில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்று. கர்ணனின் வள்ளல் தன்மையை விளக்கும் பாடல். வழக்கம் போல் டி.எம்.எஸ். மெருகு படுத்தியிருப்பார். உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல்.

    படத்தில் இடம் பெறாமல் ஆனால் மக்கள் மனதில் இடம் பெற்ற பாடல்.

    மகாராஜன் உலகை ஆளலாம் - ராகம் கரகரப்ரியா

    படத்தில் இடம் பெறாமல் போனாலும் ஏராளமான மக்கள் மனதில் நிரந்தரமாக தங்கியுள்ள பாடல். இந்த பாடலை எப்படி விட்டார்கள் என்பது புரியாத புதிர். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பேன். அதிலும் நடிகர் திலகம் - தேவிகா ஜோடி எனும் போது பாடல் காட்சி மிக பிரமாதமாக வந்திருக்கும். நடிகர் திலகத்தின் ஸ்டைல்-க்கு இந்த பாடல் மிக பொருத்தமாக அமைந்திருக்கும். அதிலும் சில வரிகள்

    பாதத்தில் முகம் இருக்கும்
    பார்வை இறங்கி வரும்
    வேகத்தில் லயித்திருக்கும்
    வீரம் களைத்திருக்கும்

    வரும் போது நடிகர் திலகம் எப்படி ரியாக்ட் செய்திருப்பார் என்று யோசிக்க வைக்கும்.

    ஒரு சில படங்களில் பதிவு செய்யப்பட்ட நல்ல பாடல்கள் இடம் பெறாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம். உதாரணத்திற்கு இரத்த திலகம் படத்தில் தாழம்பூவே தங்க நிலாவே, வசந்த மாளிகையில் அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன போன்றவற்றை குறிப்பிடலாம். கலாட்டா கல்யாணம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு தரம் ஒரே தரம் பாடலாவது சுமதி என் சுந்தரியில் இடம் பெற்றது. மேற் சொன்ன பாடல்கள் வரவே இல்லை. அந்த வரிசையில் மகாராஜன் உலகை ஆளலாம் முதலிடத்தில் இருக்கிறது.

    ஒரு முறை எம்.எஸ்.வி அவர்களை பற்றி இளையராஜா சொல்லும் போது மகாராஜன் உலகை ஆளலாம் பாடல் ஒன்று போதும். தமிழ் திரை இசை இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும் என்றார். அதுதான் இந்த பாடலின் வெற்றி.

    அன்புடன்

  11. Thanks Russelldwp thanked for this post
  12. #2496
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பான கோரிக்கை கடந்த 13 ஆண்டுகளாக செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது .இந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும்வரை தமிழகத்தில் அது சாதியப்படாது என்றே தோன்றுகிறது .நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர் திரு ரங்கசாமி அவர்கள் ஆளும் புதுச்சேரியில் அந்த மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தால் நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார் என நான் நம்புகிறேன் .இது தொடர்பான தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு நமது திரி நண்பர்களை கேட்டுகொள்கிறேன்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  13. Thanks Russelldwp thanked for this post
    Likes Harrietlgy liked this post
  14. #2497
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Senthil,


    Certainly a good idea but TN is the apt place for a memorial to NT. But if the rulers are not operating then Pondy is the ideal place.


    Regards

  15. #2498
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பான கோரிக்கை கடந்த 13 ஆண்டுகளாக செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது .இந்த கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருக்கும்வரை தமிழகத்தில் அது சாதியப்படாது என்றே தோன்றுகிறது .நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர் திரு ரங்கசாமி அவர்கள் ஆளும் புதுச்சேரியில் அந்த மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தால் நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார் என நான் நம்புகிறேன் .இது தொடர்பான தங்களது மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு நமது திரி நண்பர்களை கேட்டுகொள்கிறேன்
    Dear Harish

    You are 100% correct since Mr.Rangasamy is the person can do this in his period No doubt

    C. Ramachandran
    .

  16. #2499
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    -------------------------------------------------------------------------------------------
    இன்று (அக்டோபர் 29) கவிஞர் வாலி அவர்களின் பிறந்தநாள். நடிகர்திலகத்திற்காக திரைப்படங்களில் பல சிறப்பான பாடல்களைத் தந்த கவிஞர் வாலி, நடிகர்திலகத்தின் மறைவிற்குப் பின் எழுதிய கவிதை.
    ---------------------------------------------------------------------------------------
    பள்ளியில் - அதிகம் பயிலாது போனான்
    பின்னாளில் - அந்தப் பெருமகன் -
    கால்முளைத்த
    கல்லூரி ஆனான்!
    அகில உலகத்தில்
    அதிக மொழிகள் - அறிந்தவை
    அவனது விழிகள்!
    கேமரா லென்சில் - கசியும் ஈரம் - அவன்
    அவலக் காட்சியில் நடிக்கையீல்:
    அநேக ஆண்டுகளாக....
    குடல் கழுவப் பெறாமல் - ஒருவகை
    மலச் சிக்கலலில்
    மாட்டிக்கொண்டு முழித்தது ....
    தமிழ் சினிமா; அவன்தான் -
    தந்தான் அதற்கு இனிமா;
    கட்டபொம்மனை;
    கப்பலோட்டிய தமிழனை;
    கர்ணனை; முண்டாசுக்
    கவிஞனை;
    சோழனை;
    சேக்கிழாரை;
    பரதனை;
    பசும்பொன் தேவரை;
    என,
    எத்துணையோ பேர்களை....
    உயிர் கொடுத்து
    உலவச் செய்தவன்;
    கல்லறையிலிருந்து - எழுப்பிக்
    காட்டிய பெருமகன்;
    எவராலும்
    எழுப்ப முடியாத படி -
    உறங்கிப் போனதால் -
    உலகு அழுதது; தன்னை
    ஒழுங்காய் உச்சரிக்க -
    ஒருவரும் இல்லையே என -
    ஒண்டமிழ் அழுதது!
    ஆயினும் -
    அவன் -
    நாமும் -
    நாடும் -
    அழுவதற்காகப் பிறந்தவனல்ல;
    தொழுவதற்காகப் பிறந்தவன்.
    ---------------------------------------------------------------------------------------------
    - காவியக் கவிஞர் வாலி
    (நன்றி: சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூல்)
    -------------------------------------------------------------------------------------------
    நடிகர்திலகத்திற்காக வாலி எழுதிய ஒரு SUPER HIT தேசபக்திப் பாடல்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  17. Likes Russellmai liked this post
  18. #2500
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    இனி படத்தின் உயிர்நாடியான பாடல்கள்.


    உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.

    படத்தின் உச்சகட்ட பாடல் மட்டுமல்ல படத்திலேயே உச்சமான பாடல் என்று பெரும்பாலோர் கருதும் பாடல். தேரோட்டி சல்லியன் கோபித்துக் கொண்டு இறங்கி போய் விட, சூழ்ச்சி வலையில் சிக்கிய கர்ணன் மண்ணில் புதைந்த ரதத்தின் சக்கரங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் போது அர்ஜுனன் அம்புகளை தொடுத்து அவனை வீழ்த்துகிறான். ஆயினும் தர்ம தேவதை அரணாக நின்று அந்த அம்புகளை மலர் மாலைகளாக்க, மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்யப் புறப்படுகிறான் கண்ணன். அப்போது ஒலிக்கும் இந்த பாடல்.

    இந்த பாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும். சிகரம் வைத்தார் போன்ற சில வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

    தாய்க்கு நீ மகனில்லை
    தம்பிக்கு அண்ணனில்லை
    ஊர் பழி ஏற்றாயடா; நானும்
    உன் பழி கொண்டேனடா

    செஞ்சோற்று கடன் தீர்க்க
    சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா;
    வஞ்சகன் கண்ணனடா.

    பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது. என்.டி.ஆரையும் சும்மா சொல்லக் கூடாது. அருமையாக பண்ணியிருப்பார். அந்த விஸ்வரூப தரிசனம்! தியேட்டரில் பார்க்கும் போதே நிறைய பேர் உணர்ச்சி வசப்படுவார்கள். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி, பந்துலு, என்.டி.ஆர்., எல்லோருக்கும் மேலாக நடிகர் திலகம்.

    மெகா தொலைக்காட்சியின் அமுத கானம் நிகழ்ச்சியின் போது ஒரு முறை ஆதவன் அவர்கள் இதற்கு இணையான ஒரு பாடல் இனி தமிழ் படங்களில் வராது என்றார். பலரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.

    மீண்டும் பேசுவோம்.
    இந்த அஹிர் பைரவ் ராகத்திற்கு இணையான ராகம் தமிழ் இல் சக்ரவாகம் .பாட்டும் பரதமும் திரைபடத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான நவரச நடிப்பில் வெளி வந்த 'கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன் ' இந்த சக்ரவாகத்தை அடிப்படையாக கொண்ட பாடல் .டி எம் எஸ் வெளுத்து கட்டி இருப்பார் பாடலை. பாடகர்களில் மாற்று (replacement ) கிடைக்காத சில பாடகர்களில் டி எம் எஸ் ஒருவர் .அதிலும் அந்த பாடலின் இறுதியில் ஸ்வர சங்கதிகளை மூச்சு விடாமல் பாடும் டி எம் எஸ் அவர்களையும் அதற்கு நம்மவரின் வாய் அசைப்பும் மறக்க முடியாத ஜுகல் பந்தி .

    சகோதரி சாரதா அவர்கள் இந்த பாட்டும் பரதமும் படத்தை பற்றியும் அதன் பாடல்கள் சிறப்பை பற்றியும் விலாவாரியாக புட்டு புட்டு வைத்து இருப்பார்கள் (ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது)

    இந்த அஹிர் பைரவ் என்ற சக்ரவாகம் பக்தி ,அனுதாபம் மேலும் இரக்கம் போன்ற உணர்வுகளை மனதில் ஏற்படுத்த கூடிய ராகம் . சம்பூர்ண ராகம். 7 ஸ்வரங்களும் இடம் பெற்று இருக்கும் ராகம் .

    கர்ணனுக்கு அந்தத் தெய்வம் இழைத்த கொடுமை பிறப்பிலிருந்தே தொடங்குகிறது. கன்னிப்பெண்ணுக்கு அந்த மகவைப் பிறக்க வைத்து, அவள் கையாலேயே ஆற்றில் மிதக்க வைத்து. தேரோட்டி மகனாக வளர வைத்து, தம்பியரையே இகழ வைத்து, அவனுக்கு இயற்கை தந்த காப்பை இந்திரனைக் கொண்டு தானம் பெற வைத்து, பெற்ற தாயே அவனது மரணத்தை உறுதி செய்ய வைத்து, அந்த ஆதிமூலம் இழைத்த தவறு ஒன்றல்ல இரண்டல்ல. பார்தனிட்ட கணை கர்ணன் உயிரைத் தொடவில்லை. அவன் புண்ணியம் காத்தது. அந்தப் புண்ணியத்தையும் தானே பெற்று அவன் வேதனை மிக்க வாழ்வுக்கெல்லாம் காரணமாய் இருந்த அந்தத் தெய்வத்தின் மனச் சான்று பேசும் பாடலாக இது.

    "தாய்க்கு நீ மகனில்லை... தம்பிக்கு அண்ணனில்லை..
    ஊர்பழி ஏற்றாயடா.. நானும் உன் பழி கொண்டேனடா.."

    இந்த வரிகள் மிக முக்கியமானவை. தாய் என்பவள் உலகில் எத்தனை தவறினும் ஏற்கக் கூடியவள். தன் மகவுக்காகப் பேசக் கூடியவள். அவளே இவனை வஞ்சித்தாள். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று ராமாயணத்தில் அந்த இன்னொரு கர்ணன்-கும்பகர்ணன் உரைப்பானே - அந்தச் சிறப்பு பெற்ற தம்பியும் இவனை வஞ்சித்தான். அமைச்சர் ஆக இருந்து அரசனால் குதிரை வாங்க பணிக்கப்பட்டு ஆனால் அந்த பணியை பிணி என ஈசனால் திருபெருந்துறையில் குருந்த மரத்தின் நிழலில் ஞானத்தை பெற்ற மாணிக்க வாசகரின் மிக அறிய வரிகளாம் தாயினும் சாலப் பரியும் அந்தத் தெய்வமும் இவனை வஞ்சிக்கிறது. அதனை ஒப்புக்கொண்டு

    "செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
    வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா"

    என்று அந்தப் பரம்பொருளே பேசக் கூடியவன் இந்தக் கர்ணன் என்று கவிப்பேரரசு நம்மக்கு உணர்த்துகிறார். இது வரலாற்றுச் சோகப் பதிவை . இந்தப் படைப்பின் வலுவை, கெளதம் என்ற சிறுவன் பாடும் போது, கர்நாடக இசை மேதைகளே உருகியதை விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கவனித்து இருக்கலாம் .

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அசகாய நடிப்பாலும், என்.டி.ஆர். கடவுளாக நடித்து, இல்லை இல்லை கடவுளாகவே மாறியும், கவியரசு கண்ணதாசனின் காலத்தால் அழிக்க முடியாத வரிகளாலும், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கல குரலாலும், மெல்லிசை மன்னர்களின் மனதை கொள்ளையடிக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் பாடல்,

    நண்பர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களின் எழுத்து தோற்றுவித்த தாக்கத்தின் பதிவே இது

    மீள் பதிவு செய்த நண்பர் திரு சித்தூர் வாசு சார் அவர்களுக்கும் நன்றி
    Last edited by gkrishna; 29th October 2014 at 08:01 PM.
    gkrishna

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •