Page 304 of 400 FirstFirst ... 204254294302303304305306314354 ... LastLast
Results 3,031 to 3,040 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3031
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan


    என் தெய்வம் வழங்கிய

    'ஞான ஒளி'



    முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)

    முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)






    ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.

    இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)





    தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..

    படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.



    பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.

    அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.

    போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.

    பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.

    தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.

    இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)



    தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.

    இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.



    அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.

    மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.

    சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.

    அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.



    தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.

    அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.

    தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!

    பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.

    'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.

    ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்

    அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.

    இந்த விதி மாற்ற முடியாதது.

    இனி....

    'ஞான ஒளி' யில்

    'நம் ஆண்டவனின் அரசாட்சி'

    விரைவில் தொடரும்.

    ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்

    வாசுதேவன்..

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3032
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan


    'சவாலே சமாளி' (கிணற்று சீன்)

    'சவாலே சமாளி' யின் அந்த பாப்புலரான கிணற்று சீன் பலநாள் என் தூக்கத்தைக் கெடுத்த பெருமை உடையது. ஜெயலலிதா உயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் அந்த இடம்தான் படத்தின் உயிர்நாடியே! நடிப்பின் உயிர்நாடியும் கூட. ஜீவனுள்ள இக்காட்சி ஜீவன் உள்ளவரை மறக்காது.

    தேர்தல் பந்தயத்தில் பண்ணையாரிடம் ஜெயிக்கும் மாணிக்கம் பந்தய பொருளாக அவர் மகள் சகுந்தலாவை பெற்று ஊரார் முன்னிலையில் தாலி கட்டி விடுகிறான் அவள் விருப்பமில்லாமலேயே. பணக்கார சகுந்தலாவுக்கும், ஏழை விவசாயி மாணிக்கத்திற்கும் பொருத்தமே இல்லாத திருமணம். பணக்காரத் திமிர் கொண்ட மனைவியை ஏழை மாணிக்கம் அடக்கி ஒடுக்க நினைக்கிறான் அவள் தனக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்று எண்ணி. தன் நிலத்து வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவளைச் செய்யச் சொல்லி ஆணையிடுகிறான். முதலிரவில் கூட தொட அனுமதிக்காத சகுந்தலா கணவன் (இல்லை அவளைப் பொருத்தவரை அவன் கயவன்) இடும் பழக்கமில்லாத வேலைகளில் மனம் நொந்து போகிறாள். ஆனால் மாணிக்கத்திற்கோ உள்ளுக்குள் அவள் மீது உயிர். அவன் வெளிக்காட்ட மாட்டான். அவளுக்கோ அவன் ஒரு வஞ்சகன், பழி உணர்ச்சி கொண்டவன். அவனைப் பழிவாங்கவோ அல்லது தன மனதிற்குப் பிடிக்காதவனோடு வாழப் பிடிக்காமலோ அவள் தன் உயிரை தோட்டத்துப் பக்கம் உள்ள கிணற்றில் குதித்து மாய்த்துக் கொள்ள முற்படுகிறாள். மனைவியைப் பற்றி நன்கறிந்த மாணிக்கம் கண்கொத்திப் பாம்பாக அவளைக் கவனித்து அவளை காப்பாற்றுகிறான். தன்னவள் தன்னைப் பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாமலேயே உயிரை விட எத்தனித்து விட்டாளே... நமக்கு பழிபாவத்தைச் சேர்க்க இருந்தாளே என்று மனம் வெதும்பி அவளுக்குத் தன் நிலையை விளக்குகிறான். மனம் விட்டு தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை அருவியாய் வார்த்தைகளில் அவளிடம் கொட்டித் தீர்க்கிறான். தான் குற்றமற்றவன்...அவள் மேல் தீராத அன்பு கொண்டவன் என்பதை அவளுக்குத் தன்னாலான மட்டில் புரிய வைக்க முயல்கிறான்.

    இதுதான் சிச்சுவேஷன். மாணிக்கமாக மாசில்லாத நம் நடிப்புலக மாணிக்கம். மனைவி சகுந்தலாவாக ஜெயா மேடம்.

    ஆஹா! எப்பேர்பட்ட பங்களிப்பு நடிகர் திலகத்துடையது.! கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் கயிற்றால் ஜெயலலிதாவை பிடித்து இழுத்துக் காப்பாற்றப் போகும் போது நடத்த ஆரம்பிக்கும் நடிப்பு சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து எல்லைகளின்றிப் பரவி ஆக்கிரமிக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்ல!

    கயிற்றால் ஜெயலலிதாவை கட்டி இழுத்துக் காப்பாற்றும் போது அவரது கண்களில் தெரியும் ஆழம் அளவுகோல் இல்லாதது. (எனக்குத் தெரியாம நீ எதுவும் செஞ்சுடுவியா...செய்யத்தான் விட்டுடுவேனா? உன் இஷ்டத்திற்கு நீ ஆட்டம் போடுவே! நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணும்! ம்.... )

    கயிற்றால் ஜெயா இவரை அடிக்க அடிக்க கயிற்றின் ஒவ்வொரு பகுதியாக பிடித்தபடி சிரிக்கும் சிரிப்பு. (பார்த்தியா! இங்கேயும் ஜெயிச்சது நான்தான்)

    ஜெயலலிதா இவரை திட்டித் தீர்த்தவுடன் (ஒரு பெண்ணுங்கிற இரக்கம் கூட இல்லாம இப்படி அரக்கத்தனமா நடந்துக்குற நீங்க மனுஷனே இல்ல!) என்று குமுறி அழும் போது

    "அழு... நல்லா அழு... வாய்விட்டுக் கதறு.... அப்பத்தான் உன் வெறி அடங்கும்...உன் சந்தோஷத்தையெல்லாம் குழி தோண்டிப் பொதச்சவன் நான். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது உனக்குக் கிடைக்காது... அதுதானே உன் குற்றச்சாட்டு.... சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.

    ஒன்று இரண்டு மூன்று எண்ணி பத்தைத் தொடும் போது கைகள் இவரைத் கிணற்றில் தள்ளத் தயார் நிலையில் இருந்தும் மனம் மறுத்த காரணத்தால் ஜெயலலிதா தோற்றுவிட நடிகர் திலகம் கீழே இறங்கி

    "உனக்கு அந்த துணிச்சல் இல்ல. உன் மனசுல பலவீனம்தான் மண்டிக் கிடக்குது அதனாலதான் சாகத் துணிஞ்ச"..... என்று பேசிக் கொண்டே வருவார்.

    "நீ என்கூட வாழ்ந்துதான் தீரணும்னு உன்னை நிர்ப்பந்தப்படுத்துறது உன் கழுத்துல கிடக்கிற இந்த மஞ்சக் கயிறுதானே! நான்தானே அதை உன் கழுத்தில கட்டினேன். இப்ப ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம் உன்னைத் தொடரத்துக்கு அனுமதி கொடுத்தீனா நானே அந்தக் கயித்த அறுத்து எறிஞ்சிட்டுப் போறேன். அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி எப்பிடி வேணும்னாலும் வாழலாம்...என்று சொல்லி திரும்பவும்

    'எப்பிடி வேணும்னாலும்'

    என்று இரண்டாம் முறை அழுத்தம் கொடுப்பார். தான் அப்படி வழங்க இருக்கும் அனுமதியை ஆணித்தரமாக கூறுவதாக அர்த்தம் தொனிக்கும்படி வசங்களை டெலிவிரி செய்வார்.

    "நீ எனக்கேத்த மனைவியாய் வாழணும்ங்கிற ஆசையினால உனக்குப் பழக்கமிலாத வேலைகளை செய்யச் சொல்லி உன்னைக் கட்டாயாப் படுத்தினேன். அது உனக்குக் கொடுமையாப் பட்டுது. நீ நெஞ்சு வெடிச்சு கதறி அழுகிறத பார்க்கும் போது உன்னைப் போலவே எனக்கும் கதறி அழுகணும் போல தோணுது... என்ன செய்யிறது? நான் ஆம்பிளயாச்சே! அதனாலதான் மனசுல இருக்கிற வேதனைகளையெல்லாம் வெளியே சொல்ல முடியாமே அப்படியே வாய்க்குள்ளேயே போட்டு மென்னு முழுங்கிக்கிறேன்.... முழுங்கிக்கிறேன்" என்று மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பார்.

    இந்தக் காட்சியில் வசனங்கள் மிகப் பெரிய பலம். வசனங்களைச் சொல்லாமல் இந்தக் காட்சியை விவரிக்க இயலாது.

    "உன்னதான் தொட முடியல்ல...உன் மனசையாவது தொடலாம்னு பாக்குறேன்". சொல்லி நிறுத்துவார். முடியல்ல என்பதை கைகளைக் கொட்டி உணர வைப்பார். ஒரு விசும்பு விசும்புவார்.

    "நீ உன் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்த மாதிரி நானும் என் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்துட்டேன். ஒருவேளை உன்னை என்னால காப்பாத்த முடியாம போய் இருந்தா நான் உன்னப் பத்தி என் மனசுல நினச்சுக்கிறதெல்லாம் உன்கிட்ட விளங்க வைக்க முடியாமலேயே போயிருக்கும்". (உதடுகளை அவ்வளவு அழகாகக் குவித்து சோகத்தையும், துயரத்தையும் கண்களில் தேக்கிக் காண்பிப்பார்)

    ஜெயலலிதாவிடம் முழுவதுமாகத் தன் நிலையை விளக்கிவிட்டு புயல் அடித்து ஓய்ந்து போன சூழ்நிலையைக் காண்பிப்பார். பேசி முடித்த பின் கிணற்றின் மேல் கால்களுக்கிடையில் கைகளை கொடுத்து அப்படியே ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருப்பார். ("இதுக்கு மேலே உனக்கு விளக்க என்னாலாகாது தாயே! புரிஞ்சா புரிஞ்சுக்கோ! இல்லைன்னா உன் இஷ்டம்" என்பது போல.)

    போகும் போது,

    " நீ செஞ்ச இந்த பைத்தியக்கரத்தனமான காரியத்தை நான் யாருகிட்டேயும் சொல்லல.... நான் வீட்டுக்குப் போறேன்...நீ வரற்தா இருந்தா வரலாம்" (இடது கை காது மடல்களை பிடித்து திருவியபடி ஒரு அற்புதமான மானரிசத்தைக் காட்டுவார்)

    என்று சொல்லி விட்டு விரக்தியுடன் செல்லுவார்.

    வாவ். என்ன ஒரு காட்சி. ஜெயலலிதாவிடம் கோபமாக வாதம் தொடக்கி, பின் ஜெயாவை பேச முடியாதபடி வாயடைக்கச் செய்து, கோப வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி. மனைவி மேல் கொண்ட உண்மையான அன்பை கனிவான வார்த்தைகளில் கொட்டி. அவள் புரிந்து கொள்ளாத நிலையை குரல்கள் உடைந்து நா தழுதழுக்க விளக்கி, அதுவரை அழாதவர் அதிகமாக அழுது புரளாமல் தேவையான அழுகையை மட்டுமே சிந்தி, அவ்வளவுதான் நம் விதி என்ற விரக்தியோடு இறுதியான ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு நம்பிக்கையில் 'அவள் திருந்தி வந்தால் வரட்டும்... இல்லையென்றால் அவள் இஷ்டம்' என்ற வெறுப்பு கலந்த விரக்தி சூழ்நிலையைக் காட்ட நம் நடிக தெய்வத்தைத் தவிர எவரால் முடியும்?

    ஒரு நடிகன் என்பவன் நடித்து விட்டு சென்று விடுவான்.. அந்த நேரம் நாம் அவனைப் பார்ப்போம். அத்தோடு மறந்து விடுவோம். ஆனால் இந்த நடிகன் அப்படியா?

    பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவனே மகாநடிகன்.

    அந்த பாத்திரத்தின் தன்மையை பார்க்கிறவர்களுக்குப் புரிய வைக்கும் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறானே... அவன் உலக மகா நடிகன்.

    அது மட்டுமல்ல. அந்த உணர்வை உயிருள்ள வரையில் நம் தசை நாளங்களில் பரவச் செய்து நம்மை உணர்வுகளின் சங்கமம் என்ற கயிற்றில் பின்னிப் பினைக்கிறானே... அவன்... அவனை என்னவென்று சொல்வது?!

    அவரைத்தான்

    நடிகர் திலகம் என்ற நடிப்பு மகான் என்கிறோம்.

  5. Thanks kalnayak thanked for this post
    Likes rajeshkrv, Russellmai, AREGU liked this post
  6. #3033
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    காட்சி குறித்த நல்ல கருத்துரை.. பாராட்டுகள்..

    காட்சிப்புலத்தில், உரையாடல், ஜெயாவின் ரீ-ஆக்*ஷன் ( நடிகர்திலகத்தின் படங்களில் மட்டும் தன் உச்ச திறமையை வெளிப்படுத்துவது ஜெயாவின் சிறப்பம்சங்களில் ஒன்று ) ஒளிப்பதிவு மற்றும் கவனமாகத் தேர்வுசெய்யப்பட்ட கேமரா கோணங்கள், நெறியாள்கை உள்ளிட்ட பிறவும் நடிகர் திலகத்தின் நடிப்புத்திறனுக்கு ஈடுகொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  7. #3034
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    'கல்நாயக்'- பெயருக்கு முன்னாடி ஒரு பட்டமும் வேணாஞ்சாமி!!! வா...வா...ம்பாரு ஒருத்தரு. போனா 'நேருக்கு நேராய் வரட்டும்'-னவரு 'இது எங்க ஏரியா. இன்னாத்துக்கு இங்க வரீக?'-ம்பாரு. அப்புறம் எங்கேயும் கிடைக்காத 'பின்'னை நாமதான் வாங்கிட்டோம். வாங்கிட்டோம்பாங்க. நமக்குத் தேவையா?
    Last edited by kalnayak; 26th November 2014 at 02:21 PM.
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  8. #3035
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Playback Singers who graced NT's movies, though not singing for NT!

    திலக குரல்3.

    தனது கந்தர்வக்குரலால் நடிகர்திலகத்தின் திரைப்பட பங்களிப்பில் நம்மைக் கட்டிப்போட்ட 'செந்தமிழ் தேன்மொழியாளர்...' T.R. மகாலிங்கம் அவர்கள்.!

    Our fond remembrance with gratitude of participatory support in NT's movies!





    Last edited by sivajisenthil; 27th November 2014 at 05:52 AM.

  9. Likes kalnayak liked this post
  10. #3036
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Playback Singers who graced NT's movies, though not singing for NT!

    திலக குரல் 4. Dr. Balamurali Krishnaa sir.

    பாட்டும் நானே (நவரச நடிப்பின்) பாவமும் நானே என்று நடிகர்திலகம் கோலோச்சியதிருவிளையாடலில் பாட்டும் தானே பாவமும் தானே என்று 'மதுரைக்கு வந்த சோதனை'யான அகந்தைப் பாடகரைக் கண்முன்னே நிறுத்திப் பெருமை சேர்த்த பாலையா அவர்களின் பொருத்தமான குரலாய் பெருமை பெற்ற பாடக வால்நட்சத்திரம் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு எமது நன்றியும் வணக்கமும் !

    Our heartfelt thanks for rocking Thiruvilayadal movie with this inimitable song,



    His best remembered off screen rendition

    Last edited by sivajisenthil; 27th November 2014 at 03:42 PM.

  11. Likes kalnayak liked this post
  12. #3037
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    திலக குரல் 5. A.M.ராஜா

    சிம்மக் குரலையும் மென்மைப் படுத்திய மேன்மைப் பாடகர் 'ஜெமினியின் எதிரொலி ' A.M.ராஜா !

    இனிய குரலோட்டம்,,,,,,, ஆனால் கணேசன்தான் மாறிவிட்டார் ஜெமினியிலி ருந்து சிவாஜிக்கு !

    Evergreen softie A.M. Raja's Gemini voice for NT! NT justified ..but when you hear this song closing your eyes .. GG only pops up!! Our thanks to AMR for his trial to befit NT's voice





    திலக குரல் 6. திருச்சி லோகநாதன்

    கல்யாண சமையல் சாதம்...காய்கறிகளும் பிரமாதம்.....ஆனால்....நடிகர்திலகம் தான் சாப்பிடாது ரசிகர்களுக்குப் பரிமாறவே முடிந்தது

    Trichy Loganathan famous for his 'varai nee vaarai..(Manthiri kumari)' and 'Kalyaana samaiyal saadham (Maaya Bazaar) honoured Karnan to honor himself! Thanks to this soul stirring song voiced by him!

    Last edited by sivajisenthil; 27th November 2014 at 06:22 AM.

  13. Likes kalnayak liked this post
  14. #3038
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஈங்கிவரை நடிகர்திலகமாக நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் என்று தமிழ்த் திரையுலகின் சாதனைக் காவியம் கர்ணனின் உயிரோட்டப் பாடலுக்கு உயிர் கொடுத்த உன்னதமான உயரழுத்த மின்காந்தக் குரல் !

    திலக குரல் 7.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்

    Our heartfelt thanks to Seergaali Sir for this signature song that got immortalized by the screen presence and the best of NT's absorbing portrayals in his life time with his silent but powerful depictions of death pains before the Lord !

    Seergaazhi Govindarajan's Song of this Century that blessed and graced NT's Karnan character to linger!



    Seerghazhi Govindharajan also made an impressive value addition to Padikkadha Medhai Sivaji's role by his mind voice song 'Engirundho vandhaan ...' through Rangarao!





    Last edited by sivajisenthil; 27th November 2014 at 06:34 AM.

  15. Likes kalnayak liked this post
  16. #3039
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    எட்டாவது அதிசியம் அல்ல,
    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  17. Thanks eehaiupehazij thanked for this post
  18. #3040
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    திலக குரல் 8. P.B. ஸ்ரீனிவாஸ் :

    P.B. Srinivas aka PBS (aka Play Back Singer)!

    Another softie whose voice could never match NT's simmakkural! However, in combination with TMS, he could make memorable contributions and value additions to NT movies like Paar Magale Paar, Pandha Paasam, Paavamannippu, Paasamalar....with his co-stars like GG or Muthuraman ....Hats off to PBS for gracing our NT's movies!







    Last edited by sivajisenthil; 27th November 2014 at 06:38 AM.

  19. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •