Page 11 of 400 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #101
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    RKS,

    Agreed with you. It is only a comical relief,from the mundane feel. that's it. Otherwise,I am your fan and appreciate your aggressive approach. I only object 500 posts coming with the same content and pretending that they are the saviours of this thread and its dignity. Proceed normally,no problem.I will never be an intrusion.Let me park my conversation here.(Do not charge parking fees)
    Dear Gopal Sir. There is no such thing as a 'saviour of thread' or one needs to 'pretend' as a saviour, inasmuch as we are all here for the cause of NT. Also, your 'objection' on posts...ok..no comments sir. 2300 posts from a contributor....each differing from one another! Amazing!!! ....Having seen many comments and criticisms in my life, and feeling like a seasoned wood, I am neither shaken nor stirred by your comments or the phrases you use!!
    Last edited by sivajisenthil; 11th July 2014 at 12:19 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    RECAP FOR CONTINUITY

    நடிகர் திலகம் திரை உலகிற்கு நடிக்க வருவதற்கு முன்பு மக்கள் மனதில் நன்கு பதிந்த நடிகர்கள்

    திரு mk தியாகராஜா பாகவதர்,
    திரு pu சின்னப்பா ,
    திரு நாகேஸ்வர ராவ்,
    திரு mk ராதா,
    திரு நாகையா,
    திரு ntr ,
    திரு mr ராதா,
    திரு திகுருசி சுகுமாரன் நாயர்,
    திரு சத்தியன்,
    திரு mg ராமசந்திரன்
    திரு mn நம்பியார்,
    திரு ரஞ்சன்,
    திரு kr ராமசாமி ,
    திரு tr மகாலிங்கம்,
    திரு tr இராமச்சந்திரன்,
    திரு. ஜகய்ய,
    திரு ஸ்ரீராம் ,
    திரு காளி n ரத்தினம் ,
    திரு பாலையா
    திரு mg சக்ரபாணி,
    திரு ஜெமினி கணேசன்
    திரு ராமசாமி,
    திரு s பாலச்சந்தர் (வீணை)
    திரு பந்துலு,

    மற்றும் பலரும் தமிழ் திரைப்படங்களில் அப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டும், கதாநாயகதன்மை கொண்ட கதாபத்திர வேடம் புனைந்துகொண்டும் கோலோசிகொண்டிருந்தார்கள்.

    இத்துனை நடிகர்கள் ஏற்கனவே உள்ளனர். இவர்களையும் மீறி நடிகர் திலகம் சாதித்து விட முடியுமா ?

    காத்திருப்போம் ..!
    Last edited by RavikiranSurya; 11th July 2014 at 11:31 AM.

  4. #103
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1949 இரெண்டாவது அரையாண்டு தொடங்கிய பின்னர் ...அப்போதைய திரைப்பட நிறுவனம் திரு avm அவர்களின் avm மற்றும் அவருடைய நண்பர் திரு பெருமாள் (பெருமாள் pictures ) அவர்களும் அந்த கதையில் நடிக்க யாரை அணுகலாம் என்ற பரிசீலனையில் இறங்கினர்.

    திரு மெய்யப்பன் அவர்கள் திரு MK ராதா..திரு kr ராமசாமி மற்றும் ஒரு சிலர் பெயர் முன்மொழிந்து அதில் தனது தேர்வு திரு krr அவர்கள் என்பது போல முடிவெடுக்க..திரு பெருமாள் அவர்கள் அந்த கதாபாத்திரம் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை பகுத்தறிவால் சாடும் பாத்திரம் என்பதால் அப்போதுள்ள நடிகர்களை விட ஒரு புதிய நடிகர் இதை செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அப்படி ஒருவர் தனக்கு தெரியும் என்றும் அந்த இளம் நடிகர் நாடகங்களில் பல கதாபாத்திரம் சர்வ சாதாரணமாக புனைந்து நல்ல பெயர் எடுத்து வருகிறார் என்றும் அவரே இதில் நடிப்பதற்கு தகுந்தவர் என்றும் கூற...திரு மெய்யப்பன் அவர்கள் அரை மனதுடன் சமதம் தெரிவிக்கிறார்.

    நமது நடிகர் திலகம் அவர்களை தேர்வு செய்து திருச்சியில் இருந்து அவரை விமானம் மூலம் MAKEUP டெஸ்ட் எடுக்க வரவழைக்க படுகிறார். முதல் முதலில் அந்த காலத்தில் ஒரு புதுமுக நாடக நடிகர் திரைப்படத்தில் நடிக்க MAKEUP TEST எடுக்க விமானத்தில் வரவழைக்கபடுவது இதுவே முதல் முறையாகும்.

    AVM நிறுவனமும் பெருமாள் Pictures தயாரிப்பில் புதிய திரைப்படத்திற்கு முதன் முதலில் விமானம் மூலம் ஒரு புதுமுகம் MAKE UP டெஸ்ட் செய்ய வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது காட்டு தீ போல பரவி ஒரு பெரும் நிகழ்ச்சியாக அப்போது திரை உலகில் பேசபடுகிறது !

    அப்போதுள்ள மற்ற நடிகர்களுக்கும்...யார் அந்த புதுமுக நடிகர் என்ற கேள்வி எழுகிறது...!

    இப்படி தொடங்கும்போதே, முதல் சாதனையின் முதல் நாயகனாக விமானத்தில் வந்திறங்குகிறார் விழுப்புரம் சின்னையா கணேசன் என்ற திரு"சிவாஜி" கணேசன் .

    ஒருவழியாக படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் இதர கலைஞர்களை தேர்வு செய்தாகிவிட்டது.

    இதற்க்கு முன்பு நடிகை திருமதி அஞ்சலி தேவி அவர்கள் தனது சொந்த படநிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து நமது நடிகர் திலகம் அவர்கள் அந்த திரைபடதிர்க்காக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    Last edited by RavikiranSurya; 11th July 2014 at 11:30 AM.

  5. Thanks kalnayak, eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  6. #104
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரெண்டாவது திரைப்படம் அதுவும் மிக பெரிய ஜாம்பவான்கள் தயாரிப்பில் ....இந்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும்..என்னதான் திறமை இருந்தாலும் திரை உலகில் ஏற்கனவே உள்ள அவ்வளவு கதாநாயகர் மத்தியில் நிற்கமுடியுமா, நின்றாலும் நிலைக்க முடியும்மா இப்படி பல கேள்விகள்..!

    சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற கேள்வி போய்...நிற்க முடியுமா ...நிலைக்கமுடியும்மா என்ற கேள்வி வருகிறது ..அடுத்த கட்டத்திற்கு போய் ஆயிற்று என்பதால் !

    இப்படி ஒரு வழியாக அனைத்தும் முடிவு செய்த பின்னர் பராசக்தி என்று பெயரிட்டு திரைப்படம்" தொடங்கபடுகிறது என்ற செய்தி பத்திரிகையில் வெளிவருகிறது !



    "பராசக்தி" படபிடிப்பு தொடக்கம் -

    மகிழ்ச்சி நிலைக்குமா ?

    சற்றே பொறுப்போம் !

  7. Thanks kalnayak, eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  8. #105
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    45. ''யாரை மறக்க முடியவில்லை?''
    ''சிவாஜியை. அவரை எரித்த தளத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில்தான் நான் குடியிருக் கிறேன். பழைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நினைவு வந்து வாட்டுகிறது!''

    --வைரமுத்து ஆனந்தவிகடனில்

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #106
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ''நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நெருக்கமாக இருந்தவர் நீங்கள். கடைசிக் காலத்தில் அவருடைய மனநிலை என்னவாக இருந்தது?''
    ''சினிமாவில் என் ஆதர்ஷக் காதலன், குரு எல்லாமே சிவாஜிதான். ஏழு வயசுல படம் பார்க்க ஆரம்பிச்சு, 14 வயசு வரை நான் பார்த்த மொத்தப் படங்கள் 14-தான். அதில் பாதிக்கும் மேலே 'பராசக்தி’, 'மனோகரா’, 'வணங்காமுடி’ 'உத்தமபுத்திரன்’னு சிவாஜி நடிச்ச படங்கள்தான். 'பராசக்தி’யைப் பார்த்த அடுத்த சில நாட்கள்லயே 'நீதிமன்றக் காட்சி’ வசனங்களை மனப்பாடம் பண்ணிட்டேன். அப்போல்லாம், நான் சாகுறதுக்குள்ள சிவாஜியை ஒரு தடவை சந்திச்சா போதும்கிறதுதான் என் லட்சியம். அது மெட்ராஸ் வந்ததும் நிறைவேறுச்சு. 'உத்தமபுத்திரன்’ பட கேரக்டரை வரைஞ்சு எடுத்துட்டுப் போய் சிவாஜியைப் பார்த்தேன். அப்புறம் சில வருஷங்கள்ல அந்த மகா கலைஞனோடு 'மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவர்கூட சேர்ந்து 16 படங்கள் நடிச்சேன். அவர் உச்சத்துல இருந்த காலம் முழுக்க அவர்கூடவே பயணிச்சேன்.
    பிறகு அவர் பையன் பிரபு நடிக்க வந்துட்டார். தேக்கடியில் 'உறுதிமொழி’ பட ஷூட்டிங். பிரபு ஹீரோ; நானும் அதுல நடிக்கிறேன். அப்ப சிவாஜி அங்கே வந்திருந்தார். என் தோள்ல கைபோட்டு பேசிட்டே வந்தவர் திடீர்னு, 'சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்டா’னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சுட்டார். எனக்கும் அழுகை வந்திடுச்சு. 'அண்ணே... என் தாய் மேல சத்தியம், நான் போடுற வேஷம் மேல சத்தியமா சொல்றேன், நீங்க சாப்பிட்டுப் போட்ட மிச்ச சோத்தைத்தான் நாங்க தின்னுட்டு இருக்கோம். இங்கே எந்தக் கொம்பன் நீங்க பேசின தமிழ் பேசி நடிக்க முடியும்?’ அப்படின்னு பேசி சமாதானப்படுத்தினேன்.

    sivakumar.jpg

    அப்புறம் சிங்கப்பூருக்கு, ஒரு நிகழ்ச்சிக்குப் போனவருக்கு அங்கே ரொம்ப சீரியஸ் ஆகிருச்சுனு சொன்னாங்க. 'திரும்ப இந்தியா வர்றது கஷ்டம்... அந்தளவுக்கு நிலைமை மோசமா இருக்கு’னு சொல்லிப் பதறவெச்சாங்க. ஆனா, 10 நாள் கழிச்சு ஃப்ரெஷ்ஷா திரும்பி வந்தார். வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். தரைல உக்காந்த என் தோள்ல கையைப்போட்டு தலையைத் தடவிக்கிட்டே மெதுவாப் பேசுறார்... 'நாமல்லாம் ஒன்ஸ்-அப்பான் எ டைம் ஆக்டர்’டா. உலகம் நம்மளை மறந்துடுச்சு. சிங்கப்பூர்ல 'ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே... அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே’னு பட்டுக்கோட்டையார் பாட்டு போட்டானுங்க. இன்னொரு பக்கம், 'கட்டபொம்மன் - ஜாக்சன் துரை’ காட்சிகளைப் போட்டு என்னைக் கொண்டாடிட்டானுங்க. வாட் எ ஃபைன் மொமென்ட்?! உங்க அண்ணன் ஏன்டா அங்கே சாகலை. ஒரு கலைஞனுக்கு அதைவிட சந்தோஷமான ஒரு தருணம் கிடைக்குமா? திரும்பி வந்துட்டேன்டா. எப்படிச் சாகப்போறேன்னு தெரியலை’னு கலங்கிப்போய் பேசிட்டு இருந்தார்.
    இப்பவும் திடீர் திடீர்னு அவர் ஞாபகம் வந்துடும். 'சிவாஜியை இனிமேல் பார்க்க முடியாதுல்ல. உண்மையில் அந்த மனுஷனை இனி பார்க்கவே முடியாதுல்ல’ அப்படினு தோணினா, தனியா உக்காந்து அரை மணி நேரம் அழுவேன். இன்னிக்கு அவரு நம்மகூட இல்லைன்னாலும் 'கட்டபொம்மன்’, 'கப்பலோட்டிய தமிழன்’, 'திருவிளையாடல்’, 'தில்லானா மோகனாம்பாள்’னு படங்கள் வழியா என்னைக்கும் நம்மகூட வாழ்ந்துட்டுத்தானே இருக்கார்!''

    -விகடன்
    Last edited by joe; 11th July 2014 at 02:59 PM.

  11. Thanks kalnayak, eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, KCSHEKAR liked this post
  12. #107
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear Joe Sir. I am just reminded of the movie "Uyarndha Manithan" in which Sivakumar co-starred with NT. In all the scenes and frames he shared with NT one can observe the fear in his eyes as a novice of acting. However, of all who have enacted the role of a screen 'son' to NT, Sivakumar stands out for his performance in UM as "SIVAji KUMARar" as some prominent magazines described in their reviews at that time. A song sequence for Sivakumar in TMS voice and extended portions to encourage his acting skills.....so also with Mr. Asokan's role as the doctor, allowed to steal the show in his death scene! The kind of generosity and gesture shown by NT for his co-stars remains his watermark in making genuine cinema without an egoist heroism to have all the limelight self centered!

    Joe Sir, Kindly bear with me. Have you reached your complacense with these more than 8000 postings/imprints in these prestigious NT threads? Happy to see your postings after a long time, I suppose.
    Last edited by sivajisenthil; 11th July 2014 at 03:36 PM.

  13. #108
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவிகிரண்

    வாழ்த்துக்கள்.

    கடுமையான வேலை நிமித்தம் திரியில் கலக்க இயலவில்லை.

    ரவி

    திரியை விறுவிறுப்பாக கொண்டு செல்வது ஆரம்பித்த உங்கள் பொறுப்பு.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Ramadoss,

    This is unacceptable behaviour. No individual in this hub has got the right to attack another individual. If you don't find somebody's post interesting, then you can very well skip it. Or you can send a PM but in a public forum, you need to maintain a certain dignity. This is the second time you are doing this. Please avoid such posts in future.

    Regards

    Murali

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Last edited by Murali Srinivas; 12th July 2014 at 11:21 PM.

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  15. #109
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by parthasarathy View Post
    Thank you very much Sir. However, I feel such info should be forwarded by you only, as you may know him well. Besides, such authentic data based info should be taken up by none other than our Murali himself.
    Regards,R. Parthasarathy
    Dear Sarathy Sir,
    Mr.Sudhangan's reply about your comments:
    அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? நான் வருட ரீதியாக சிவாஜியை எழுதவில்லை! மனோகராவை மறந்துவிட்டு நான் சிவாஜியை பற்றி எழுத முடியுமா என்ன ?
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  16. #110
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் திரை உலகில் எவரும் "பராசக்தி" வெளிவரும்வரை பல விஷயங்களை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் ..அவை யாதெனில்...

    1) இந்த நடிகர் இத்துனை நடிகர்கள் மத்தியில் வளருவார் என்று.

    2) அவரது வளர்ச்சி தடுக்கமுடியாத, அடைக்கமுடியாத, கட்டுகடங்காத காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் என்று !

    3) குறைந்த வருடங்களில் நிறைந்த திரைப்படங்கள் நடித்து திரை உலகில் உள்ள 90 சதவிகித தயாரிப்பாளர்கள் ஏக மனதாக மற்ற மொழி நடிகர்களை ஓரம்கட்டி மண்ணின் மைந்தன் சிவாஜியை வைத்து திரைப்படம் எடுக்கவே முடிவெடுப்பார்கள் என்று.

    4) இந்த நடிகர்தான் திரை உலகிலயே வரும் காலங்களில் எந்த நடிகரை காட்டிலும், எவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு இடையிலும் சர்வ சாதாரணமாக

    a) அதிக 50 நாட்கள் படங்கள்
    b) அதிக 75 நாட்கள் படங்கள்
    c) அதிக 100 நாட்கள் படங்கள்,
    d) அதிக 125 நாட்கள் படங்கள்,
    e) அதிக 150 நாட்கள் படங்கள்,
    f) அதிக 175 நாட்கள் படங்கள்,
    g) ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவந்து இரெண்டுமே 100 நாட்கள் ஓடும் படங்கள்,
    h) வெளிநாடுகளில் அதிக விருதுகள்,
    i) அண்டை நாடான இலங்கையில், மற்ற நாடுகளில் அதிக 100 மற்றும் 175 நாட்கள் படங்கள், 200 நாட்கள் படங்கள்,
    250 நாட்கள் வெற்றிப்படங்கள், வசூல் படங்கள்

    இப்படி பல முதல் சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் மட்டுமே என்றும் இருப்பார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !
    Last edited by RavikiranSurya; 11th July 2014 at 06:50 PM.

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
Page 11 of 400 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •