Page 158 of 400 FirstFirst ... 58108148156157158159160168208258 ... LastLast
Results 1,571 to 1,580 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1571
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Hello!
    senthilvel45 shared an album with you.


    View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
    முகத்தில் முகம் பார்க்கலாம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1572
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Hello!
    senthilvel45 shared an album with you.


    View Album, http://s1055.photobucket.com/user/se...bile%20Uploads

  4. #1573
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Recap of the posting of Mr Parthasarathy


    ராமன் எத்தனை ராமனடி - கடைசி இருபது நிமிடங்கள்

    இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தது. குறைந்தது முப்பது தடவையாவது (தியேட்டரில் மட்டும் இருபது!) பார்த்திருப்பேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. படத்தின் டைட்டில் காட்சி (அது மட்டும் தான்) எங்களது ஊரில் எடுத்தார்கள். இன்னொரு காரணம் - அவர் நடிகனான பின்னர் - முக்கியமாக - அவர் நம்பியார் வீட்டில் - செந்தாமரை (அவர் முதலில் நடிகர் திலகத்தின் கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து அழுதும் போது - நாங்கள் அலறிய அலறல்! - மற்றும் இன்னும் இரு நடிகர்கள் (அதில் ஒருவர் எப்போதும் எதிர் அணி படங்களில் வருவார் - மற்றவர் நடிகர் திலகத்தின் பல படங்களில் நடிப்பார் - திரு Joe அவர்கள் பதிவிறக்கம் செய்த வீர பாண்டிய கட்டபொம்மன் - நாடக ஸ்டில் - ஐ கவனித்தால் அவரது வலது பக்கம் ஓரமாக நிற்பவர் - அவர் தான் அவர்). நம்பியார் வீட்டில் அவர் செய்யும் ஸ்டைல் - கள் - அப்பப்பா. The way he takes on them with his inimitable style - சவுக்கை ஓங்குவார் - ஆனால் நம்பியாரை அடிக்க மாட்டார் - அவர் கோபம் மற்றும் லாகவத்துடன் - செய்யும் அந்த பாவனை - நூறு அடி அடித்ததற்கு சமம் - மற்ற கலைஞர்கள் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு காண்பிக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை - வெறும் முக பாவனைகளால் காண்பிப்பவராயிற்றே!.

    இப்பொழுது ராமன் எத்தனை ராமனடி படத்தின் கடைசி இருபது நிமிடங்களுக்கு வருவோம்.

    இந்த கடைசி இருபது நிமிடங்கள் ஒரு அற்புதமான கோர்வையுடன் ஓடும். அதாவது காட்சி அமைப்புகள் அந்த படத்தின் முடிவை அழகாக ஆனால் சரளமாக இழுத்து செல்லும். அவரது வளர்ப்புப் பெண் dinner பார்ட்டி ஒன்றில் எக்குத் தப்பாக ஒருவனிடம் மாடிக் கொண்டு கடைசி நேரத்தில் - நடிகர் திலகம் வந்து விடுவார். அப்போது ஆரம்பமாகும் இந்த கோர்வையான காட்சி அமைப்பு. நடிகர் திலகம் கோபத்துடன் அந்த வெறியனை அடித்து ஒரு நேரத்தில் காகா வலிப்பு வந்த பிறகு தன்னை அறியாமல் அவனை ஆணியில் அறைந்து - அவனைத் தொடுவார். தொட்டவுடன் அவன் பிணமாக விழுவான் - உடனே அவர் காட்டும் முக பாவம் - அதன் பின்னர் - அவர் காரில் வந்து அமர்ந்து சிறிது நேரம் வரையில் - ப்ரமை பிடிதார்ப் போல் இருப்பார். இங்கு ஒரு விஷயம் - எல்லோரும் வியக்கும் விஷயம் - அதாவது நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் கூறுகிறோமே - அது. ஒருவர் திடீரென்று ப்ரமை பிடித்து விட்டால் எப்படி ஆவானோ - மிகச் சரியாக அந்த பாவனையை - காண்பிப்பார். சிறிது நேரம் காரில் பயணம் செய்தவுடன் - கார் டிரைவர் - முத்துராமன் - அவரை "சார், நான் யார் என்று தெரிகிறதா?" மிக மிக லேசாக கண்ணை திறந்து பார்த்து "ம். " என்று சொல்லுவார். ஆனால் அவருக்கு தெரியும் முத்துராமன் தான் KR விஜயா - வின் கணவர் என்று. அவர் வீடு வரும். உள்ளே வந்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். இது தான் சரியான தருணம் - அனைவரும் (அவரைத் தவிர!) ஒன்று சேர்வதற்கு என்று. உடனே யாருக்கும் தெரியாமல் போலீஸ் - க்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு ஹால் - க்கு வந்து. பேச ஆரம்பிப்பார். திடீரென்று நினைவுக்கு வந்து முத்துராமன்- ஐ அழைப்பார். அப்போது அவரது குரலில் இருக்கும் ஒரு வகையான ஒரு இறுக்கம் நிறைந்த ஒரு குரல். உள்ளே வந்தவுடன் அவர் முத்துராமன்-ஐ எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு மற்றும் அந்த கம்பீரம் நிறைந்த லாகவம். உடனே போலீஸ் வந்து விடும் - இப்போழோது ஒவ்வொருவரிடமும் விடை பெறும் கட்டம். முதலில், கோபி (ஒரு மலையாள நடிகர்) அவரிடம் ஒரு வகையான நடிப்பு, அடுத்து முத்துராமன் - இப்பொழுது ஒரு கடமை உணர்வுடன் - அடுத்து ஆயா (ஆப்பக்கார ஆயா!........), அடுத்து KR விஜயா - "தேவகி ...." அவர் தேவகி என்ற பெயரை உச்சரிக்கும் விதம் - உணர்ந்து பாருங்கள்! ஆஹா! இப்பொழுது - மகள். இப்பொழுது இரண்டு கைகளை ஒரு மாதிரி தூக்கி - மெல்ல நெருங்கி - மகள் அழுவார் - இவர் - சைடு pose - இல் நமக்கு வலது பக்க முகம் தெரியும். அந்த வலது புருவத்தை - அவரது characteristic /inimitable ஸ்டைல்-இல். இந்த ஸ்டைல் அந்த இடத்துக்கு மெருகை மேலும் ஊட்டுமே தவிர சிதைக்காது. புருவத்தை உயற்றி - "போகட்டுமா" என்று கேட்பார். இப்பொழுது தந்தை மகளிடம் எப்படி பேசுவானோ - அதுவும் மிகவும் செல்லம் கொடுத்தபிறகு எப்படி பேசுவானோ - அப்படி - அதாவது ஒவ்வொரு கேரக்டர்-இடம் விடை பெறும் பொழுதும் அந்தந்த உறவுக்கு ஏற்றார்ப் போல் - நடிப்பு - பிரியாவிடைக்காக. கடைசியில் - யாரும் அழைக்க கூடாது - No cry - என்று அப்பொழுதும் தவறாக - ஆங்கில உச்சரிப்பு - அந்த characterisation - அந்த கடைசி காட்சியில் கூட - அதையும் maintain செய்து. ஒத். Don 't cry என்று சிரித்துக் கொண்டே அழுது நம் எல்லோரையும் - அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து - அவர் வாயில் இருந்து - வணக்கம் என்று வரும்.

    இந்தக் கடைசி இருபது நிமிடங்கள் நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும் மற்ற அனைத்து முக்கியப் பாத்திரங்களையும் சுற்றி நிகழும். ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லும். ஆனால், அந்த முடிவை நோக்கி நடிகர் திலகம் தான் இழுத்துச் செல்வார். அதுவும் எப்படி - சரளமாக மற்றும் ரொம்ப casual - ஆக ஆனால் மிக மிக அழகாக மற்றும் ஆழமாக.

    இப்போதெல்லாம், இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது மறக்காமல் அந்த இருபது நிமிட கிளைமாக்ஸ் - ஐ பார்த்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறேன்.

  5. Likes Russelldwp liked this post
  6. #1574
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Recap of the old posting of Mr Parthasarathy


    Nadigar Thilagamum Remake Padangalum

    நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்



    இதுவரையில் பலரும் நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றி அலசி வந்துள்ளதால், என்னால் உங்கள் அளவிற்குப் பெரிதாக அலச முடியுமா என்று தெரியவில்லை.

    இருந்தாலும், எனது எண்ணங்களை இங்கு பதிகிறேன்.



    பொதுவாக, 1967-இல் இருந்துதான், நடிகர் திலகம் சில ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1952-இல் துவங்கி, 1967-வரை, அநேகமாக, எல்லா கதாசிரியர்களும் / இயக்குனர்களும், அவரை கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் முழுவதுமாக அவருடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் வேடங்களைக் கொடுத்து, இனி மேல் அவர் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை மெதுவாக வந்திருக்கலாம். மெதுவாக, சிறந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்தது போக அவருக்கென்று கதை எழுத ஆரம்பித்து, கற்பனைப் பஞ்சம் மெதுவாக தலை காட்டவும் ஆரம்பிதிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னொன்று, எப்போதும் அவரது ரசிகர்கள் ஏங்குவது, அவர் வயுதுக்கேற்றார்ப் போல் (அப்போதைய வயது! 38 தானே!) அல்லாமல், எப்போதும் முதிர்ந்த அல்லது, கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்கிறாரே என்று. அதற்கேற்றார்ப் போல், 1966-இல் typhoid காய்ச்சல் வந்து அவர் ரொம்ப மேளிந்துவிடவும், மறுபடியும் (உத்தமபுத்திரனுக்குப் பிறகு), அவர் இளமையாக, முன்னைவிடவும், வசீகரமாக மறுபடியும் தோற்றமளிக்க ஆரம்பித்து விட்டார். உன்னிப்பாகப் பார்த்தோமேயானால், செல்வம் படத்தில் இருந்துதான் அவரது மேலும் இளமையான மற்றும் பொலிவான தோற்றம் ஆரம்பித்திருக்கும்.



    I. நடிகர் திலகம் நடித்த ரீமேக் படங்கள்



    நான் இங்கு எல்லா படங்களையும் தொடப் போவதில்லை. ஒரு பத்து படங்கள் மட்டும். எல்லோரும் பத்து பத்து என்கிறோமே. இதுவே பத்து என்றால், இது போல், இன்னும் எத்தனை பத்து? சொல்லப் போனால், அவரது அதனை படங்களையும் நாம் இனம் பிரிதி ஆய்வு செய்திட முடியும்.



    தங்கை:- இது தேவ் ஆனந்த் நடித்து 1951-இல் வந்து வெற்றி பெற்ற Baazi-என்ற படத்தின் தழுவல். எல்லோரும் அறிந்தார்ப் போல், நடிகர் திலகம் இன்னொரு புதிய பாட்டை / பாதையில் (ஒரிஜினல் பாதையை அவர் விடவே இல்லை அது வேறு விஷயம்) பயணம் செல்ல வித்திட்ட படம். Dev Aanand-ஐ விடவும், style-ஆக, ஆனால், ஒரு இடத்தில கூட, அவரைப் போல் அல்லாமல், முற்றிலும் வேறுவிதமாக நடித்தார். அதிலும், குறிப்பாக, அந்த முதல் சண்டை (ஒரு மாதிரி இரண்டு கைகளையும் தட்டுவது போல் சேர்த்து பின் ஸ்டைல்-ஆக தாக்க ஆரம்பிக்கும் அந்த தெனாவட்டான ஸ்டைல்), கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் காட்டும் அந்த முக பாவங்கள் மற்றும் ஸ்டைல் அதை விடவும் இனியது இனியது பாடல் (ஒவ்வொரு முறை இந்த பாடலை திரை அரங்கத்தில் பார்க்கும் பொழுதும் முதல் சரணத்தில் வரும் ஒரு வரி "ரசிகன் என்னும் நினைவோடு...." உடனே, நாங்கள் எல்லோரும் கோரசாக "நாங்க என்னிக்கும் சிவாஜி ரசிகர்கள்டா! என்று அலறுவோம்). ஒரு டிபிகல் மசாலா மற்றும் gangster படத்தை நடிகர் திலகம் முற்றிலும் வேறு விதமாக ஆனால், பொழுதுபோக்கு அம்சம் கொஞ்சமும் குறையாத வண்ணம் அணுகிய விதம், அன்று முளைக்க ஆரம்பித்த இளம் action நடிகர்களான ஜெய் ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றோரையே திகைக்க வைத்தது எனலாம்.



    என் தம்பி:- இது, A. நாகேஸ்வர ராவும் (ANR), ஜக்கையா-வும் நடித்து VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1967-இல் வெளி வந்து வெற்றி பெற்ற “ஆஸ்தி பருவுலு” என்ற தெலுங்கு படம். (ஒன்று தெரியுமா, இந்த ஜக்கைய்யா தான், நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் seyyap பட்ட பெரும்பான்மையான படங்களுக்கு, டப்பிங் குரல் தெலுங்கில் கொடுத்தவர் – ஏனென்றால், அவரது குரலும் கெட்டியாக, நம் நடிகர் திலகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு, சிம்ம கர்ஜனை போலிருக்கும். அவர் All India Radio-விலும் அறிவிப்பாளராக வேறு பணியாற்றி வந்தவர்). இந்தப் படத்தின் original-ஐயும் நான் பார்த்தேன். ANR-உம் முதல் பாதியில், அந்த அமைதியான பாத்திரத்தில் நன்றாகத் தான் செய்திருந்தார். இண்டர்வலுக்கு அப்புறம்தான், அவரை, பல லட்சம் படிகள் பெட்டராக நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும், “தட்டட்டும் … கை தழுவட்டும்” பாடலில் ஆரம்பித்து, கத்தி சண்டை முடியும் வரை (அதிலும், சண்டை தொடங்குவதற்கு முன் அந்தக் கதியை ஸ்டைல்-ஆக வளைத்து நிற்கும் விதம் ... ஆஹா!”), அரங்கம் திருவிழாக் கோலத்தில் இருக்கும். நூல் முனை கிடைத்தால் நூல் கண்டே பண்ணி விடுபவர் ஆயிற்றே!



    திருடன் – ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் பெரிதாக எழுதவில்லை. இருந்தாலும், இதிலும், எப்படியும், நூறு சதவிகிதம் வேறு மாதிரி தான் செய்திருப்பார். இந்தப் படத்தில், எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்தது, ஓபனிங் ஷாட் கருப்பு சட்டையும் கருப்பு பான்ட்-உம் போட்டுக்கொண்டு ஜெயில்-இல் கம்பிகளுக்கு மேல் நடந்து வரும் காட்சி, அவர் train-இல் முதலில் போடும் சண்டை, அப்புறம், ஒவ்வொரு முறை பாலாஜி-யை சந்திக்கும் போதும், சிகரெட்டை அவர் வாயில் இருந்து எடுத்து, பாலாஜி ஏதோ கேட்டவுடன் “டன்” என்று சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே சொல்லும் அந்த அழகு மற்றும் ஸ்டைல். அதிலும், அந்த, வெள்ளை கலர் சட்டை, முழங்கை வரைதான் இருக்கும். அது ஒரு வகையான ஸ்டைல். அவருக்கு மட்டும் அவ்வளவு அழகாக செட்டாகும். அந்த கெட்டப்புடன் ரிவால்வரை கையில் வைத்து ஒவ்வொரு இலக்கையும் சுடும் அந்த ஸ்டைல். இதுவும் அந்தக் கால இளம் நடிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் விமர்சனம் "இந்த திருடன் ஏராளமான பணத்தைத் திருடி திரு பாலாஜி அவர்களுக்குக் கொடுத்து விட்டான்." அந்த அளவிற்கு வசூல் செய்த படம். என் தந்தை சொன்னார் - இந்த படம் வந்தவுடன் அன்றிருந்த அத்தனை action நடிகர்கள் பயப்பட ஆரம்பித்தனர் என்று.



    எங்க மாமா:- இது எல்லோரும் அறிந்தது தான். ஷம்மி கபூரும் ராஜஸ்ரீ (ஹிந்தி நடிகை) மற்றும் ப்ரானும் நடித்து 1967-இல் வெளிவந்து வெற்றி அடைந்த பிரம்மச்சாரி படம். என்னவென்று சொல்வது, எனக்குத் தெரிந்து, இந்தப் படத்தில் தான், அவர் ரொம்ப ரொம்ப அழகாகவும், ஸ்டைல்-ஆகவும், இளமையாகவும் இருப்பார். அதாவது, ரொம்ப. அவருடைய உடை அலங்காரமும் இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும் (கலர் படம் வேறு!). ஒரிஜினல்-இல் இரண்டு மிகப் பெரிய பாப்புலர் பாடல்கள் “Aaj kal their meri pyaari …..” தமிழில், “சொர்க்கம் பக்கத்தில்” மற்றும் “Dhil ke jaroke mein…” தமிழில், “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்”. முதல் பாடலின் போது, அவரது தோற்றம், டான்ஸ் மூவ்மெண்டுகள் மற்றும் ஸ்டைல் அரங்கை அதிர வைத்தது (இப்போதும் தான்) என்றால், இரண்டாவது பாடல், அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரையும், மௌனமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் – அதாவது – பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே. அரங்கில் உள்ள அனைவரையும் வழக்கம்போல் கட்டிப்போட்டு விடுவார். மறுபடியும், முற்றிலும் வேறு விதமான நடிப்பு.



    எங்கிருந்தோ வந்தாள்:- சஞ்சீவ் குமார் நடித்து வெற்றி பெற்ற “கிலோனா”. இதுவும் 1970-இல் தான் வந்தது. சூட்டோடு சூடாக, பாலாஜி அவர்கள் ரீமேக் செய்தார். இந்தப் படத்திலும், ஒரிஜினலை விட அற்புதமாக வித்தியாசமாக செய்திருப்பார். "ஏற்றி வாய்த்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்ததென்று பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ") நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றி அலசியதால், நான் சொல்வது “ஒரே பாடல்” பாடலைப் பற்றி. இந்தப் பாடலை அவர் சோகமாக இருக்கும்பொழுது (ஆம் அவரது காதலியின் மணவிழாப் பாடல் (காதலி மற்றொருவருக்கு மனைவியானால், பின் எப்படி சோகம் இல்லாமல்?) பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். முதலில் முடியாது என்பவர், கடைசியில், வேறு வழியில்லாமல் ஆரம்பிப்பார். எப்படி?, ... ஆ ஆ. . என்று ஆலாபனை செய்து கொண்டே – சரி சரி பாடுகிறேன் என்று – அந்த ஆலாபனையும் அவர் சரி சரி என்பதும் அவ்வளவு அழகாக இழைந்து வரும். அதுவும் அந்த இரண்டாவது சரணம் தான் ரொம்பவே எல்லோரையும் உருக்கி விடும். இந்தப் பாடலைப் பாடித் தான் நான் 1992-இல் எனது அலுவலகத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.



    வசந்த மாளிகை:- A. நாகேஸ்வர ராவ் (ANR) நடித்து தெலுங்கில் 1971-இல் வந்து பெரும் வெற்றி பெற்ற “பிரேம நகர்” ஆம் தெலுங்கில் ப்ரேம என்றுதான் உச்சரிக்க வேண்டும். நம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு முழுமையாக ஆக்கிரமித்த படம். இதன் ஒரிஜினலையும் நான் பார்த்தேன். ஒன்று, நடிகர் திலகம் ஒவ்வொரு காட்சியையும் வேறு விதமாக செய்தது. மற்றொன்று அவர் காட்டிய அந்த grace மற்றும் ஸ்டைல். படம் முழுவதும் ஒரு விதமாக சன்னமான தொனியில்தான் பேசியிருப்பார் (பெண்களின் மனது எப்போதும் ஆண்களின் பலத்தை எடை போட்டபடிதான் இருக்குமா அதன் பெயர்தான் பெண்மையா? போன்ற பல வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம்! – வசந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று அவர் பேசும் அந்த மெய் சிலிர்க்க வாய்த்த வசனங்களையும் சேர்த்து. ஒரிஜினலில் ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாட்டு வரும். தமிழில், பாடலை பதிந்து மட்டும் விட்டிருந்தனர் “அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன?” என்று துவங்கும். தெலுங்கில், கதாநாயகன் அவரது பண்ணைக்குப் போயிருக்கும் போது, அங்குள்ள, பெண்கள் நாற்று நட்டுக்கொண்டும் தலையில் சுமையை சுமந்துகொண்டும் போவதைப் பார்த்து, கதாநாயகனுக்கு கனவில் இந்தப் பாடல் வருவதாக வரும். தெலுங்கில், ANR நடித்தால், ஒரு பாட்டாவது, அவரது பிரத்யேக டான்ஸ் மூவ்மெண்டுகளுடன் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அங்கு அவரது செல்லப் பெயர் “நட சாம்ராட்” அங்கு நட என்றால் நடனம், நடை அல்ல. தமிழில், நடிகர் திலகம் இந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கதாபாத்திரம், முதலில் இருந்தே ஒரு விதமான graceful நடை, உடை, பாவனையுடன் விளங்கும். (ஏன் ஏன் பாடல் உட்பட..). இது கிராமத்து மெட்டில் அமைந்த … ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாடல் வேறு… இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடும் என்பதால்தான் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது போயிருக்கும். அதற்கு பதிலாகத்தான், அந்த நாடோடிக் கூட்டத்தினருடன் அவரும் வாணிஸ்ரீ -யும் சேர்ந்து ஆடுவதுடன் வரும் அந்த கட்டம் வரும் (இதற்கு ஹிந்தியில் பாடலும், இதற்குப் பின் வரும் அந்த குடிசையில் வரும் காட்சி தெலுங்கில் பாடலாகவும் வரும். இதிலும், தமிழில் வித்தியாசமாகதான் செய்திருப்பார் நம் நடிகர் திலகம். இதில், ஒரு நடை piece ஒன்று – NT- ரசிகர்களுக்காகவே இருக்கும். அதிலும், அந்த grace-ஐ maintain பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக, அவரது டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.

  7. Thanks kalnayak thanked for this post
    Likes Russelldwp, Russellmai liked this post
  8. #1575
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Continuation of the recap of the posting of Mr Parthasarathy

    நடிகர் திலகமும் ரீமேக் படங்களும் (தொடர்ச்சி):-

    நீதி:- இது ராஜேஷ் கன்னா நடித்து வெற்றியடைந்த துஷ்மன் என்ற இந்தி படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதலில் இருந்து கடைசி வரையிலும் (ஒரு சில காட்சிகளைத் தவிர) ஒரே உடையை (ஒரு மாதிரியான மிலிடரி கிரீன் கலர்) அணிந்து கொண்டு ஒரு நிஜ லாரி டிரைவராய் வாழ்ந்து காட்டிய படம். இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும், ஒவ்வொரு முறையும், அவரை மற்றவர்கள் (சௌகார் வீட்டில் இருப்பவர்கள்) ஒதுக்கும்போதும், எப்போது தான் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்று மனம் கிடந்து எங்கும். குறிப்பாக, சௌகார் அவரை கடைசி காட்சிக்கு முன் வரை, அவரை அந்த அளவிற்கு வெறுப்பார் (என்ன இருந்தாலும், அவரது கணவரையல்லவா நடிகர் திலகம் தவறுதலாக லாரியால் கொன்றிருப்பார்). கடைசியில், மனோகரை அடித்து நொறுக்கியவுடன், சௌகார் அவரை தம்பி! என்று அழைத்தவுடன், நடிகர் திலத்தின் reaction அனைவரையும் அழ வைத்து விடும். மேலும், "எங்களது பூமி காக்க வந்த சாமி" பாடலில், கடைசியில், கோவை சௌந்தரராஜன் குரலில், " பல்லாண்டு பாடுகின்ற ..." என்று ஆரம்பித்து பாடும் போது அவர் காட்டுகின்ற subtle முக பாவங்கள், ஜெய கௌசல்யா திருமணம் முடிந்து அவரை வழியனுப்பும்போது கூடவே குழந்தை போல் ஓடிக்கொண்டே பாசத்துடன் அவரிடம் பேசும் பேச்சுக்கள்.... இந்தப் படத்திற்கும், நீலவானம் மற்றும் பாபு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களிலும், அவரது கதாபாத்திரம் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வந்து இணைந்து கொள்ளும். ஆனால், போகப்போக, அந்த கதாபாத்திரம் அந்த வீட்டின் சூழலோடு இணைந்து / இழைந்து கொண்டு கடைசியில், அந்த கதாபாத்திரம், அந்த வீட்டிலே ஒருவராக தன்னை ஐக்கியப்படுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள இன்றியமையாத உறுப்பினராகவே மாறிவிடும். ஆம். இந்த மூன்று படங்களிலும் (இவைகளில் மட்டும் தானா?), அவர் அந்த கதாபாத்திரமாகவே மிக மிக இயல்பாக மாறி விட்டிருப்பார். இவைதானே இயல்பான நடிப்பு!



    எங்கள் தங்க ராஜா:- இது VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் சோபன் பாபு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்த “மானவுடு தானவுடு" என்ற படம். சோபன் பாபு பெரும்பாலும், அமைதியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இந்தப் படமும் சோக்காடு என்ற மற்றொரு படமும் அவரை வித்தியாசமான நிறைய வேடங்களை ஏற்க வழி வகுத்தது என்று என் கசின் (பெரியம்மா மகன் - அவர்களது குடும்பம் நெல்லூரில் இருக்கிறது) சொல்லுவான். இந்தப் படத்திலும், நடிகர் திலகம் வித்தியாசமான இரண்டு கெட்-அப் மற்றும் கதாபாத்திரங்களில் கலக்கினார். அநேகமாக அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி அலசோ அலசு என்று அலசிவிட்டதால், என்னால் முடிந்த சிறு துளிகள். "இரவுக்கும் பகலுக்கும்" பாடலில், நடிகர் திலகத்தின் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் சின்ன சின்ன நடை piece -களும், அரங்கை அதிரவைத்தது. இந்த டாக்டர் கதாபாத்திரத்தில், அவருக்கு பெரிதாக ஸ்டைலாக நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனாலும், இந்தப் பாடலை முழுவதுமாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், மெலிதான ஒரு ஸ்டைலையும் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் கொடுத்திருப்பார்.



    அவன் தான் மனிதன்:- இது Dr. ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற கஸ்தூரி நிவாசா என்ற படம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ராஜ்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகரும் கூட. எனக்குத் தெரிந்து, 1975/76-க்கு பிறகு, அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு, அவரே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, திரு P B ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான் அவருக்கு பாடி வந்தார். எனது இன்னொரு கசின், ராஜ்குமார் அவர்களின் சொந்த production கம்பெனி-இல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பட நிறுவனம், ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து ராஜ்குமார் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தது. என்னுடைய இந்தக் கசினும் நடிகர் திலகம் ரசிகன்தான். இந்தப் படத்தின் ஒரிஜினல்-இல் ராஜ்குமார் மிக அற்புதமாக செய்திருந்தார். மேலும், இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வெற்றியடைந்த படம் என்பதால், (எனது நண்பர் (எதிர் வீடு வேறு) கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும், இவரது இரு அண்ணன்களும் - மூவரும் நடிகர் திலகம் ரசிகர்கள். இவருக்கு ராஜ்குமாரையும் மிகவும் பிடிக்கும். அவர் கூறிய தகவலையும் வைத்து இந்த கன்னடப் பட தகவலை சொல்கிறேன்). இந்த கன்னட படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகத்திற்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. (உயர்ந்த மனிதன் மற்றும் தெய்வ மகன் ஆகிய படங்களும் ரீமேக் செய்யப்பட படங்கள் மற்றும் அந்த படங்களும் நடிகர் திலகத்துக்கு சவாலாக அமைந்தவைதான் எனினும் அந்தப் படங்களின் ஒரிஜினல் அந்த அளவிற்கு நாடு முழுவதும் புகழ் அடைந்தவை என்று கூற இயலாது. அதனால் இந்த படங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்த பத்து படங்களும் ஓரளவிற்கு எல்லா விதமான மக்களும் பார்த்து விட்ட படங்கள் ஆதலால், ரீமேக் செய்யப்படும்போது ஒரிஜினலை நிறைய பேர் compare செய்து பார்ப்பார்கள் அதனால், நடிகர் திலகம் எப்படியும் ஒரிஜினலை விட நன்றாக செய்ய வேண்டும் என்று முனைவார். எல்லா படங்களுக்கும் அவருடைய முனைப்பு இருக்கும் என்றாலும், இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.) இருந்தாலும், இந்த சவாலையும் ஏற்று, நடிகர் திலகம் தன் தனித்தன்மையை நிரூபித்தார் - அதுவும், அந்த சோக உணர்வை விழிகளாலேயே காண்பித்து அனைவரையும் நெக்குருக வைத்தார். சோகத்தை எந்த விதமான அதிகபட்ச சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், இரு விழிகளாலேயே வெளிப்படுத்தும் கலை அவருக்கு மட்டுமே சாத்தியம். (மேஜர் ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது "சிவாஜி ஒருவர்தான் கண்களில் பெருகும் கண்ணீரை கண்களுக்குள்ளேயே, தேக்கி வைத்து கேமராவை நோக்கி பார்த்து, கண்ணீர் கீழே சிந்தி விடாமல், அந்த கண்ணீரை மக்களுக்கு காண்பித்து நடிப்பவர்" என்றார்). உடலை பெரிதாக வருத்திக் கொள்வாரே தவிர பட்டினி கிடந்து தோற்றத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். நடிப்பினாலேயே அத்தனை உணர்வுகளையும் காட்டத்தான் தலைப்படுவார். (அப்பர் ஒரு சிறந்த உதாரணம்). இந்தப் படத்தின் flashback காட்சிகள்தான், நம் அனைவரையும் நிறைய கவர்ந்தது. குறிப்பாக, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி பாடல் (முரளி சார் கூறிய அந்த கடைசி சரணத்தில் நடிகர் திலகம் அந்த புல்மேட்டின் மேலிருந்து கீழே இருக்கும் மஞ்சுளாவைப் பார்த்து, ஒரு மாதிரி நடை நடந்து பின் மறுபடியும் பாடும் அந்த ஸ்டைல் அரங்கத்தை எப்போதும் அதிர வைக்கும்). அன்பு நடமாடும் பாடலும், மிகச் சிறப்பாக இருக்கும். மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு கேட்கவே வேண்டாம். இந்தப் படத்தில் நடிகர் திலகம் வைத்திருந்த ஹேர் ஸ்டைலைதான் நான் சிறிது காலம் வரை வைத்திருந்தேன். இப்போது இல்லை. முடி சிறிது கொட்டி விட்டது. அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்த படம். Grouch-070 இந்தப் படத்தை விரிவாக மிக அற்புதமாக அலசி இருந்தார்.



    பாபு:- ஆஹா! இந்தப் படத்தைப் பற்றி பேச, பகிர்ந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா - தெரியவில்லை. ஓடையில் நின்னு - சத்யன் என்கிற அற்புதமான நடிகர் நடித்த மிகச் சிறந்த மலையாளத் திரைப்படம் ஆயிற்றே இது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சத்யனும், இதே படத்தின் ஹிந்திப் பதிப்பான “Aashirvaad” படத்திற்கு அசோக் குமாரும் அடுத்தடுத்த வருடங்களில் பாரத் அவார்ட் வாங்கினர். தமிழிலும், நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டியது - கை நழுவிப் போன கதை ஏற்கனவே அலசப் பட்டு விட்டது. இந்தப் படத்தில், எப்போதும் எல்லோர் மனதிலும் நிழலாடும் காட்சி - அவர் பாலாஜி வீட்டில் உணவு உண்ணும் காட்சி. பாலாஜியும், அவரது மனைவி சௌகாரும், குழந்தை ஸ்ரீதேவியும் அவர்களது கார் வழியில் நின்றுவிடுவதால், சாலையில் நின்று கொண்டிருக்கும்போது, வழியில் போகும் நடிகர் திலகம் அவர்களை தனது கை ரிக்க்ஷா மூலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு விடுவார். பாலாஜி, நடிகர் திலகத்திற்கு பணம் கொடுப்பதோடு நின்று விடாமல், மழையில் நனைந்து விட்ட அவருக்கு, துண்டைக் கொடுத்து மேலும், ஒரு சட்டையும் கொடுப்பார். இது போதாதென்று, அவரை வீட்டிற்குள் அழைத்து, சாப்பாடும் போடுவார். பாலாஜியும், சௌகாரும் ஸ்ரீதேவியும் அவரை பந்தா இல்லாமல் கனிவோடும், அன்போடும் நடத்தும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும். நடிகர் திலகம் கீழே உட்கார்ந்து இருப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஸ்ரீதேவி கீழே போய் அவர் அருகே உட்கார்வதோடு மட்டுமின்றி, அவரது இலையில் இருந்து ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போவார். நடிகர் திலகம் பதறிப் போய், ஸ்ரீதேவி கையைப் பிடித்து, சௌகாரையும் பாலாஜியையும் பார்த்து, "குழந்தையை ஒன்றும் சொல்லாதீர்கள். தெரியாமல், என் இலையில் இருந்து எடுத்து விடடாள்" என சொல்வார். ஆனால், அதற்கு மாறாக, பாலாஜியோ சௌகாரை பார்த்து "பரவாயில்லையே. இவள் கத்தரிக்காய் சாப்பிடுகிறாள். குட்" என்று சொல்லவும், சௌகார் அதையே ஆமோதிப்பார். உடனே, நடிகர் திலகம் காட்டும் மின்னலென வெட்டிச் செல்லும் அந்த உணர்வுகள் - ஆம் - ஒன்றல்ல - ஆச்சரியம், ஆனந்தம், மகிழ்ச்சி கலந்த அந்த கண்ணீர் மற்றும் நன்றிப்பெருக்கு - அப்பப்பா - எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் அனைவரையும் ஒருசேர கலங்கவைத்து விடும். Of course, பாலாஜி, சௌகார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்தக் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். இதுபோல், இன்னும் எத்தனையோ காட்சிகள். இந்தப் படத்தின் ஒரிஜினலில், சத்யன் அவர்கள் கதாபாத்திரம் ஒரு மாதிரியான முரட்டுத்தன்மை உடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். தமிழில், அதனை இலேசாக, மாற்றி, படம் முழுவதும், கனிவு, நன்றிப் பெருக்கு மற்றும் எளிமை மூலம் மிக மிக வேறுமாதிரியான கதாபாத்திரமாக மாற்றி இருந்தார் நமது நடிகர் திலகம்.


    அது எப்படி, நடிகர் திலகம் மட்டும், எப்போதும் ஒரிஜினலை விட நன்றாக செய்கிறார். அதே சமயம், அவரது படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப் படும் போது இவர் நடித்த அளவுக்கு மற்றவர்களால் நடிக்க முடிவதில்லை - அந்த கதாபாதிரங்களுக்கு உயிர் ஊட்ட முடிவதில்லை? (இந்த ஆய்வு - அதாவது நடிகர் திலகத்தின் படங்கள் மற்ற மொழியில் - இந்த ஆய்வு முடிந்த பிறகு துவங்குகிறது). ஏற்கனவே கூறியது போல் - அதாவது – நடிகர் திலகம் மேஜர் அவர்களிடம் கூறியது போல் - ஒவ்வொரு ஒரிஜினலையும், குறைந்தது பத்து தடவையாவது பார்த்து ஆழமாக study செய்து முழுக்க முழுக்க வேறு மாதிரி - சிறிதளவு சாயல் கூட ஒரிஜினலில் இருந்து வந்து விடக் கூடாது - என்று நடிகர் திலகம் எடுக்கும் அந்த கர்ம சிரத்தை - மற்றும் அந்த தணியாத தாகம் மற்றும் வெறி.



    நான் மேற்கூறிய படங்கள் அல்லாமல், இன்னும் பல நல்ல பத்து படங்கள் ரீமேக் வரிசையில் உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், (ஏன் இதில் சேர்க்க வில்லை என மேலே கூறியிருக்கிறேன்), தியாகம், அண்ணன் ஒரு கோவில் உள்பட



    நிலைமை இப்படி இருக்க, எப்படி நடிகர் திலகத்தின் சாதனைகளை ஒரு பத்து படங்களுக்குள் அடக்கி விட முடியும்?

  9. Likes kalnayak, Russelldwp, Russellmai liked this post
  10. #1576
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று ஞாயீறு மாலைக்காட்சியில் ரம்பா தியேட்டரில் திருச்சி JJ COLLEGE மற்றும் JAMAL MOHAMMAD COLLEGE மானவர்கள் மொத்தமாக 150 மாணவர்கள் படம் பார்க்கிறார்கள்

  11. Likes Russellmai liked this post
  12. #1577
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    உதாரண புருஷர்


    அது 1993-ம் வருடம்! நமது குழும நாளேடான "தினமணி'யின் வைர விழாவை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே விழா நடத்திக் கொண்டாடினோம். அந்த வரிசையில் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவானது.

    அந்நிகழ்ச்சியில் நடிகர் திலகம் கலந்துகொண்டு சிறப்பித்தால் நமக்குப் பெருமையாக இருக்குமெனத் தீர்மானித்தோம். விழாவுக்கு அழைப்பதற்காக "அன்னை இல்லம்' குறிப்பிட்ட நாளில் அங்குச் சென்றோம்.

    அன்று காலை பத்து மணிக்கு நடிகர் திலகத்தை அவரது இல்லத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. மிகச் சரியாக 9.59-க்கு வரவேற்பறையில் பிரவேசித்தார் சிவாஜிகணேசன். எங்கள் அனைவரோடும் மகிழ்ச்சி பொங்க அளவளாவிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தந்தார்.

    தஞ்சையில் விழா ஏற்பாடுகள் கோலகலமாய் நடந்தன. நிகழ்ச்சிக்கு முதல் நாளே சூரக்கோட்டையில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நடிகர் திலகத்தை மீண்டும் சந்திக்க விரும்பினோம். உடனே நேரம் ஒதுக்கித் தந்தார். காலை பதினோரு மணி!

    நாங்கள் அவரது தோட்ட இல்லத்தின் உள்ளே நுழையும்போது எதிரே நின்று வரவேற்றார் நடிகர் திலகம். ஒரு நிமிடத் தாமதம் கூட இல்லை.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாடிய பின், ""நாளை எத்தனை மணிக்கு விழாவைத் தொடங்குவீர்கள்? துல்லியமாகச் சொல்லுங்கள்'' என்றார். ""மிகச் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டுவிடும்'' என்றோம்.

    ""சரி! 9.59க்கு நான் அங்கே இருப்பேன்! இல்லையென்றால் என் தலை இருக்கும்'' என்று கம்பீரமாகச் சொன்னார் அக்கலையுலக மேதை.

    மறுநாள் சொல்லி வைத்தது போலவே 9.59க்கு விழா நடக்கும் அரங்கில் சிம்ம நடை போட்டு வந்தார்.

    ஒரு மூத்த கலைஞர், நேரம் தவறாமையில் தொடர்ந்து காட்டிய பொறுப்புணர்வு எங்களை நெகிழ வைத்தது. எத்தனையோ கலைஞர்கள் இதுபற்றி நம்மிடம் சொல்லியிருந்தாலும் நாமே அதை அனுபவிக்கும்போது அது ஆனந்தமாக இருந்தது.

    இதுபற்றி விழா முடிந்ததும் அவரிடம் பேசியபோது, ""நேரம் தவறாமை என்பது மிக முக்கியமான பண்பாடு. நாம் காலம் தாழ்த்துவதால் சுற்றியுள்ள பலருக்கு பற்பல நெருக்கடிகள் ஏற்படுவதை அனைவரும் உணர வேண்டும்'' என்றார்.

    சென்ற வாரம்... மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலை விழாவுக்காகச் சென்ற பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், பேட்டிக்காக வந்த மலேசிய பத்திரிகையாளர்களையும் தொலைக்காட்சி நிருபர்களையும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காக்க வைத்துள்ளனர். அதற்குப் பின்னரும் அலட்சியமாகவே நடந்துள்ளனர். இதனால் மலேசிய பத்திரிகைகள் தங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

    நமது நட்சத்திரங்கள், இவை போன்ற செயல்களால் நமது தேசத்தின் புகழையும் குலைக்கின்றோம் என்பதனை உணர வேண்டும்.

    பத்மஸ்ரீ டாக்டர் சிவாஜி கணேசனை நடிப்புக்கு மட்டுமின்றி, நேரம் தவறாமைக்கும் நமது கலைஞர்கள் உதாரண புருஷராகக் கொள்ள வேண்டியது அவசியம்.

    நன்றி: சினிமாஎக்ஸ்பிரஸ்


    Thanks to Mr Joe

  13. #1578
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like

  14. #1579
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Review of Bale Pandiya by Mr Murali Srinivas - a recap

    பலே பாண்டியா

    தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

    இயக்கம்: பந்துலு

    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

    வெளியான தேதி : 26.05.1962

    கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் படங்களுக்கு பிறகு பந்துலு எடுத்த ஒரு லைட் என்டர்டைனர். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம்.
    (நடிகர் திலகத்தின் கமெண்ட் " நான் அமெரிக்காவிற்கு போவதற்கு முன் நடித்து முடித்து நான் அமெரிக்கா போய் விட்டு வந்த பின் வெளியான படம்."). நடிகர் திலகம் மூன்று வேடங்களிலும் நடிகவேள் இரண்டு வேடங்களிலும் நடித்த படம். "ப" என்று பெயர் ஆரம்பித்தாலும் பீம்சிங் டைரக்ட் செய்யாத படம். கதை,திரைக்கதையை பொறுத்தவரை லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம்.

    கதாநாயகனான பாண்டியன் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்க முற்படுவதோடு படம் ஆரம்பம். பாண்டியனை பார்க்கும் கபாலி (ஒரு திருட்டு கும்பலின் தலைவன்) அவனை காப்பாற்றுகிறான். கிழே நிற்கும் கூட்டத்தில் காரில் வந்து இறங்கும் கீதாவும் அவரது தந்தை அமிர்தலிங்கம் பிள்ளையும் அடக்கம். மேலே இருந்து கீதாவை பார்க்கும் பாண்டியனுக்கு அவளை பிடித்து போய் விடுகிறது. ஒரு திருடன் அப்போது கீதாவின் கை பையைஅறுத்துக்கொண்டு ஓடுவதையும் பாண்டியன் கவனித்து விடுகிறான். கிழே வந்து அந்த திருடனை பிடித்து பையை வாங்கும் பாண்டியன் ஆனால் அதை கீதாவிடம் கொடுப்பதற்குள் அவள் போய் விடுகிறாள். கபாலியுடன் அவன் வீட்டுக்கு செல்கிறான். அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் பாண்டியன் கண்ணில் யாரும் தென்படுவதில்லை. கபாலியிடம் அடியாளாக வேலை செய்யும் மருது பாண்டியனை போலவே இருக்கிறான். பாண்டியனை ஒரு மாதம் தன்னுடன் இருக்க சொல்கிறான் கபாலி. அவன் திட்டம் என்னவென்றால் ஒரு மாதம் கழித்து பாண்டியனை கொன்று விட்டு மருது இறந்து விட்டதாக செய்தியை பரப்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடைவது. (இது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை). இதற்கிடையில் கீதாவை தேடி போகும் பாண்டியனை முதலில் விரட்டும் அவள் பிறகு தன் சம்மதத்தை சொல்கிறாள். கீதாவின் அத்தை மகன் ரவி, கீதாவின் வீட்டிலேயே இருக்கிறான். இதற்கிடையில் ஒரு மாதம் முடிந்து விடுகிறது.

    தன் திட்டப்படி பாண்டியனை கொல்ல கபாலி முற்படுகிறான். அவனிடமிருந்து தப்பித்து வரும் பாண்டியனுக்கு காரை ஒட்டி கொண்டு வரும் ஒரு பெண் லிப்ட் கொடுக்கிறாள். சிறிது தூரம் சென்றபிறகு தான் அந்த பெண்ணிற்கு கார் ஓட்ட தெரியாது என்றும் மனோ நிலை பாதிக்கப்பட்டவள் என்றும் புரிகிறது. ஆனால் அதற்குள் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துகுள்ளாகிவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த பெண் விபத்தில் பட்ட அடியால் இயல்பான நிலைக்கு திரும்புகிறாள். அவளின் தந்தை ஒரு பெரிய எஸ்டேட் முதலாளி. பாண்டியன் யாருமற்ற ஆள் என்று தெரிந்ததும் அவனை தன் மகனாக ஏற்றுகொள்கிறார். எஸ்டேட் செல்லும் பாண்டியனால் கீதாவை சந்திக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து செல்லும் பாண்டியனை தன் தந்தையை வந்து சந்திக்க சொல்கிறாள் கீதா. தந்தையிடமும் அனுமதி வாங்குகிறாள்.

    பாண்டியனை கொல்ல முயன்று தோல்வியுற்ற கபாலி அவனை தேடிக்கொண்டிருக்கிறான். கீதாவை சந்திக்க வரும் பாண்டியனை பார்த்து விடும் கபாலி அவனை சிக்க வைக்க போலீஸ் கண் முன்னால் ஒரு திருட்டை மருது மூலமாக நடத்துகிறான். பாண்டியன் சிக்கி கொள்ள அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சொன்ன நாளில் வராததால் கீதாவின் தந்தை பாண்டியன் மேல் கோபமாக இருக்கிறார். சிறையிலிருந்து வெளி வரும் பாண்டியன் ரவியை சந்தித்து அவனோடு கீதாவின் வீட்டிற்க்கு செல்கிறான். அங்கே கீதாவின் தந்தையும் கபாலி போல் இருக்க கடுமையாக பேசி விட்டு வெளியே வர அங்கே வாசலில் கபாலி. உண்மை புரிந்து கபாலியிட்மிருந்து தப்பித்து எஸ்டேட் வந்து சேருகிறான். அங்கே வளர்ப்பு தந்தை இறந்து போன விவரம் தெரிகிறது. இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்ற வசந்தியின் (எஸ்டேட் முதலாளியின் மகள்) கேள்வியிலிருந்து தப்பிக்க, இல்லாத ஒரு அத்தை மகனை பற்றி கதை அடிக்க அது வசந்தியின் மனதில் ஒரு உறவிற்கு அச்சராமிடுகிறது. மீண்டும் கல்யாண விஷயமாக ரவியை சந்திக்கும் பாண்டியனின் கையில் இருக்கும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்து விட்டு யார் என்று கேட்க, எல்லாவற்றையும் பாண்டியன் சொல்லி விடுகிறான். பாண்டியன் ஊருக்கு செல்வதற்கு முன் ரவி சென்று வசந்தியிடம் தன்னை அத்தை மகனாக அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.

    ஊருக்கு திரும்பி வரும் பாண்டியன் மூலம் உண்மை தெரிந்தும் கூட வசந்தி தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதே நேரம் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் தந்தையிடம் சண்டை போட்டு பாண்டியனை தேடி கீதா வந்து விட, இரு ஜோடிகளும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்து கொண்டு விடும் கபாலி, அமிர்தலிங்கம் பிள்ளையாக கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்கிறான். இரவு பாண்டியனை கடத்த திட்டம் போடுகிறான். இதற்குள் மனது மாறி அமிர்தலிங்கம் பிள்ளை மகளை தேடி வர குழப்பம் உருவாகிறது. விளக்கை அனைத்து விட்டு பாண்டியனை கடத்தி கொண்டு போய் விடுகிறான். அப்போது கேட்கும் கூக்குரலில் கீதா இறந்து விட்டதாக பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறான். தனி அறையில் அடைத்து வைக்கப்படும் பாண்டியன் எஸ்டேட் வக்கீலிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன் பங்கிற்கு உள்ள சொத்தை நிர்வகித்து அதில் வரும் வருமானம் தன்னை வளர்த்த அண்ணனுக்கு மாதா மாதம் கொடுக்க வேண்டும் என்றும் தான் உயிரோடு திரும்பி வந்தால் இதை மாற்றி கொள்ளலாம் என்றும் அதில் எழுதி வைத்து விடுகிறான்.

    பாண்டியனை நடுக்கடலிலே கொண்டு போய் போட்டு விடுகிறார்கள். ஆனால் வேறொரு படகில் இருக்கும் மீனவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள். கபாலியும் மருதும் போலீஸ் கண்ணில் இருந்து தப்பிபதற்காக வேறொரு ஊருக்கு செல்ல அங்கே பாண்டியனை போல் இருக்கும் சங்கர் என்ற வயதானவரை பார்க்கிறார்கள். (இவர்தான் பாண்டியனின் அண்ணன்). அவரை பின் தொடர்ந்து செல்ல அவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதும் தன் ஆராய்ச்சிக்காக நிறைய கடன் வாங்கி இருப்பதும் கடன்காரர்களின் தொல்லையில் அவதிப்படுவதும் தெரிகிறது. ஒரு வேலைகாரனாக அந்த வீட்டில் சேர்கிறான் கபாலி. அந்த நேரத்தில் எஸ்டேட் வக்கீல் வந்து பாண்டியன் லெட்டர் விவகாரத்தை சொல்கிறார். பாண்டியனாக எஸ்டேட் சென்றால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டம் போடும் சங்கரின் மனைவி தன் கணவனை பாண்டியனாக மாறும்படி வலியுறுத்துகிறாள். மனைவி சொல்லை தட்டாத சங்கர் அதற்கு ஒப்பு கொள்கிறார். வக்கீல் சொல்வதை ஒட்டு கேட்ட கபாலி மருதுவை பாண்டியனாக்கி அனுப்ப முடிவு செய்கிறான். இதற்கிடையில் சங்கர் வீட்டிற்க்கு வரும் கீதா, வசந்தி, ரவி எல்லோரும் வேஷம் மாறி நிற்கும் சங்கரை பாண்டியன் என்று நினைத்து கொள்கிறார்கள். கீதா தன் கணவன் என்று நெருங்கி பழக சங்கருக்கு தர்ம சங்கடம் என்றால் அவரது மனைவிக்கு அளவிட முடியாத ஆத்திரம்.

    மீனவர்களால் காப்பாற்ற படும் பாண்டியன் வக்கீலை வந்து சந்திக்க கீதா உயிருடன் இருப்பது தெரிந்து அவளை சந்திக்க தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்ல அங்கே உச்ச கட்ட குழப்பம். பாண்டியனை சுடும் கபாலியின் துப்பாக்கி குண்டிற்கு மருது இரையாக, அதை பார்த்து கபாலி தன்னை தானே சுட்டுக்கொண்டு சாக, சங்கர் பாண்டியன் குடும்பங்கள் ஒன்றாகின்றன.

    (தொடரும்)

  15. #1580
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    பலே பாண்டியா - Part II


    பலே பாண்டியாவை பொறுத்தவரை நடிகர்திலகம் மற்றும் ராதா இருவரின் வேடங்களுக்கு பொருத்தமாக ஒரு திரைக்கதை உருவாக்கபட்டது என்றே சொல்ல வேண்டும். நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன்னால் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் திரைக்கதை எழுதப்பட்டது.. ஒரே உருவமுடைய இரண்டு பேர் இடம் மாறும் போது ஏற்படும் குழப்பங்களை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இது ஆள் மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஒருவனது கதையை சொல்லியது.

    நடிப்பை பொறுத்தவரை முதல் மார்க் பாண்டியனுக்குதான். அந்த வெகுளியான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருப்பார். முதல் காட்சியில் தன்னை காப்பாற்ற வரும் கபாலியிடமிருந்து பேசுவதில் ஆரம்பித்து (" Binocular சார் ") கடைசி வரை அதே momentum maintain ஆகும் கபாலியின் வீட்டை பார்த்து மலைத்து போய் கமெண்ட் அடிப்பது( இது வீடா சார்? அரண்மனை. ஆனால் அநியாயம் சார். அவனவன் இருக்க இடம் இல்லாம இருக்கிறான். இங்கே நூறு பேர் தாராளமாக இருக்க கூடிய இடத்திலே நீங்க தனி ஆளா இருக்கீங்க.") . தேவிகாவின் வீட்டுக்கு போய் பாண்ட் ஷர்ட் போட்டிருக்கும் அவரை ஆண் என்று நினைத்து பேசுவது.( "நீங்க நல்ல பேசுறீங்க. உங்க தங்கச்சி தான் எரிஞ்சு விழறாங்க") , உண்மை தெரிந்தவுடன் அசடு வழிவது எல்லாமே அக்மார்க் NT முத்திரை. அது போல் கபாலியின் சுய ரூபம் தெரியாமல் அன்பாக இருப்பது, வளர்ப்பு தங்கை மேல் வைக்கும் பாசம், அவள் ரவியைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது கெஞ்சாத குறையாக பேசுவது( "வசந்தி, இவனை நீ உண்மையிலே விரும்பிறியா ?" அதற்கு ஆமாம் என்று வசந்தி சொல்ல " கெடுத்துட்டான் கெடுத்துட்டான் " என்று புலம்புவது, மறுபடியும் "அம்மாடி! உண்மையிலே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறியா" அதற்கும் ஆமாம் என்று பதில் வர "ரொம்ப கெடுத்துட்டான்" என்று முனுமுனுப்பது) இவை எல்லாமே கிளாஸ். இந்த படத்தில் உணர்ச்சிவசப்படும் கட்டங்கள் குறைவு என்றாலும் வளர்ப்பு தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் வசனங்கள் இல்லாமல் சட்டென்று மாறும் முக பாவம்,அவரால் மட்டுமே முடியும்.

    பாண்டியன் characterodu ஒப்பிடும் போது மருதுவிற்கு சின்ன ரோல்தான். ஆனால் அந்த லுங்கி கட்டிக்கொண்டு பீடியை உதட்டில் அப்படியும் இப்படியும் உருட்டிக்கொண்டு (45 வருடங்களுக்கு முன்பே) வருவது அவரது ஸ்டைல் முத்திரை. ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு நடிப்பவர் நடிகர் திலகம் என்பதற்கு ஒரு உதாரணம் மருது, பாண்டியனாக வேஷமிடும் போதும் அணிந்திருக்கும் பாண்டை லுங்கி போல மடக்க முயற்சிப்பது. வசனங்கள் குறைவு என்கின்றபோதும் மருது வரும் காட்சிகளில் எல்லாம் நடையிலும் உடல் அசைவிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.

    கடைசி அரை மணி நேரம் மட்டுமே வரும் கேரக்டர் ஷங்கர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்படும் அந்த Hen pecked கேரக்டர்-ஐ வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு முறை சொல்வது( நடிக்க சொல்லும் மனைவியிடம் "It is not correct"),மனைவியின் முகத்தை பார்த்து விட்டு உடனே " நீ சொல்லி நான் எதை செய்யாமல் இருந்திருக்கேன்?" என்று அடங்கி போவது, தம்பி மனைவி தன்னை தம்பி என்று நினைத்து கொண்டு நெருங்கி வரும் போது ஒரு பக்கம் தர்ம சங்கடம் மறு பக்கம் தன் மனைவியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தை பார்த்து விட்டு நான் என்ன செய்வது என்பது போல் முகத்தை வைத்து கொள்வது, இப்படி சின்ன வாய்ப்பிலும் சிக்ஸர் அடிப்பார். ஒரே ஆள் எப்படி மூன்று வேடங்களையும் வித்யாசமாக செய்ய முடியும் என்பதற்கு காட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

    நடிகவேளின் திரைப்பட வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இரண்டு வேடங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.. கபாலி அவருக்கே உரித்தான நக்கல் கேலி நையாண்டி கேரக்டர். ( வீட்டை பற்றி பேசும் பாண்டியனிடம் " பங்களவிற்கு வந்து politics பேச கூடாது" ). சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் ஸ்டைல் வெளிப்படுத்த தயங்க மாட்டார்.. அமிர்தலிங்கம் பிள்ளையாக அடக்கி வாசித்திருப்பார். இரண்டு ராதாக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சுவையாக இருக்கும். (நிலை கண்ணாடிக்கு பதிலாக இன்னொரு ராதாவே நிற்பது).

    கீதாவாக தேவிகா அழகு என்றால் ரவியாக பாலாஜி smart and handsome. வசந்தியாக மாலினி, ஷங்கரின் மனைவியாக (குமுதம்?) சந்தியா (JJ -வின் தாய்) கொடுத்ததை நன்றாக செய்திருப்பார்கள்.

    பந்துலுவை பொறுத்தவரை பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் குழப்பமில்லாமல் கொண்டு போயிருப்பார். மா.ரா வின் வசனங்களும் Down to Earth.. படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் மெல்லிசை மன்னர்கள் - கவியரசு கூட்டணியில் வந்த பாடல்கள்.

    1. வாழ நினைத்தால் வாழலாம் - ஆரம்பத்தில் வரும் இந்த பாடல் climax-irkku முன்பும் வரும். அப்போது பாடலின் பின்னணி இசை சிறிது வேறுபடும்.

    2. நான் என்ன சொல்லிவிட்டேன் – TMS பாடல். NT - தேவிகா நடிக்க அழகாக எடுத்திருப்பார்கள்.

    3. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே - NT சிறையில் இருக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் பின்னணிக்கு ஒரு சம்பவத்தை சொல்வார்கள். இந்த படம் வெளி வந்த காலத்தில் (1962) தமிழகத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார். இதற்கு முன்னரே திமுகவை விட்டு வெளியேறிய கண்ணதாசன் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை நிறுவி இருந்த போதிலும், அண்ணாதுரையின் தோல்வி அவரை பாதித்ததாகவும் அதனால் இந்த பாடல் எழுதினார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.[இதை போலவே தெய்வ மகன் படத்தில் வரும் தெய்வமே பாடலின் போது "முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்! அட என் ராச என் தம்பி வாடா" என்று TMS குரலில் பாடி விட்டு திடீரென்று NT தன் குரலில் அண்ணா! அண்ணா! என்று மூன்று தடவை சொல்லுவார். Top Angle Shot-aga எடுத்திருப்பார்கள். அது வெளி வந்த போது (1969 செப்டம்பர்) அண்ணாதுரை இறந்து விட்டார். (1969 Feb). NT- அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியதாக சொல்லுவார்கள். இதுவும் உறுதி செய்யப்படாத தகவல்]

    4. நீயே என்றும் உனக்கு நிகரானவன் - ரொம்ப பிரபலமான பாடல். மாமா மாபிள்ளை பாடல் என்றும் சொல்லுவார்கள்.

    5. ஆதி மனிதன் காதலுக்கு பின் - PBS, ஜமுனா ராணி - பாலாஜி, மாலினி ஜோடி பாடல்.

    6. அத்திக்காய் காய் காய் – TMS, PS, PBS, ஜமுனா ராணி.

    இந்த பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். என்றும் பசுமையாக இருக்கும் பாடல்.

    மொத்தத்தில் சிரித்து ரசிக்க ஒரு படம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •