Page 199 of 400 FirstFirst ... 99149189197198199200201209249299 ... LastLast
Results 1,981 to 1,990 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1981
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    KATHANAYAGANIN KATHAI BY NADIGAR THILAGAM Courtesy: Dinamalar Varamalar

    பதிவு செய்த நாள்
    05அக்
    2014
    00:00
    வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.

    விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்?
    கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில் எனக்கென்று தனியாக, ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு.
    ஊருக்குள் எங்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. அது, 'துஷ்டர்கள்!' ஆக, சின்ன வயதிலேயே எனக்கும், பட்டத்திற்கும் ஒரு தனிப்பிடிப்பு உண்டு.
    வீதியிலே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று ஏதேனும் ஒரு அழுகுரல் கேட்கும். 'யாரடிச்சா... பாவம் பையன் அழறானே...'என்று கேட்டால், 'கணேசன் அடிச்சிட்டான்...' என்று, பல குரல்கள் ஒலிக்கும். அந்த அளவுக்கு, அப்போது என் கை ஓங்கி, தவறு... நீண்டிருந்தது.
    அடி வாங்கிய சிறுவனின் தாயோ, அக்காவோ என் தாயாரிடம், என் வீரத்தை பற்றி புகார் சொல்வர்.
    என் தாயார் நான் வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கையில் வெங்காயத்துடன் ஆவலாக காத்திருப்பார்.
    வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, 'வாடா மகனே... ஏன்டா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே...' என்று அன்புடன் அழைத்து, கையில் மறைத்து வைத்திருந்த வெங்காயத்தை, என் தந்தையின் துணையுடன், கண்களில் பிழிந்து விடுவார்.
    துடிப்பேன்... கதறுவேன்... கண்ணீர் வடிப்பேன்.
    'இனிமே இப்படிச் செய்ய மாட்டியே... வீண் வம்புக்கு போக மாட்டியே...'என்று, முதுகிலும் அன்பளிப்பு வழங்குவார்.
    இவ்வளவு வாங்கியும், நான் திருந்தினேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
    மறுநாளே என் துஷ்டத்தனம் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்து விடும்.
    இதனாலேயே என் பெற்றோர் எங்காவது வெளியே செல்வதென்றால், என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டே செல்வர். சில சமயம், வெளிக்கதவை பூட்ட மறந்து, தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு போய் விடுவர். அதைத் தெரிந்து, நானும் கதவை சாமர்த்தியமாக ஆட்டி அசைத்து, தாழ்ப்பாளை விடுவித்து, மதில் சுவரை தாண்டி குதித்து வெளியேறி விடுவேன்.
    'கணேசன் வந்துட்டான் டோய்...' என்று என் சகாக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவர்; அதைக் கேட்கும் போது, பெருமையாக இருக்கும்.
    என் பெற்றோர் வீடு திரும்பியதும், நான் வீட்டில் இல்லாததைக் கண்டுபிடித்து விடுவர். இரவு வீட்டிற்கு வரும் போது, வழக்கம் போல வெங்காயம் காத்திருக்கும்.
    அந்த அளவுக்கு படு துஷ்டை நான்.
    ஒரு சமயம் என் அண்ணன் தங்கவேலுக்கும், எனக்கும் ஏதோ தகராறு வந்து விட்டது.
    'வாடா வா... இன்னிக்கு ராத்திரி உன்ன அடிச்சுக் கொன்னுடறேன் பாரு...' என்று ஒரு தடியை துாக்கி வைத்துக் கொண்டேன்.
    பயந்து போய் அம்மாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என் அண்ணன்.
    'பாவிப்பய, உதவாக்கரை... செஞ்சாலும் செஞ்சுப்புடுவான்...' என்று, அன்றிரவு முழுவதும் துாங்காமல், என் அண்ணன் பக்கத்திலேயே படுத்திருந்தார் அம்மா.
    ஆனால், நானோ தடியை பக்கத்தில் வைத்துக் கொண்டே நிம்மதியாக துாங்கி விட்டேன்.
    அப்போது, ஊர்க்காவல் என்று ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருடர்கள் வராமல் தடுக்க, நான்கு வீட்டுக்கு ஒருவராக சிலர் சேர்ந்து, இரவு நேரத்தில் தெருவில் ரோந்து வருவது வழக்கம்.
    திருடனை சமாளிக்க வேண்டுமென்றால், முரட்டுத்தனம் உள்ளவர்கள் தானே வேண்டும்? என்னிடம் அப்போது அது தாராளமாக இருந்ததால், இந்த ரோந்து காவல் குழுவில் நானும், என் வீட்டின் சார்பில் கலந்து கொண்டேன்.
    எங்களுக்கு சின்ன வயதாக இருக்கலாம்; ஆனால் முரட்டுத்தனமும், பிடிவாதமும் எக்கச்சக்கமாக இருந்தன.
    ஏதாவது பாட்டு பாடியோ, கோஷமிட்டபடியோ வீதியை சுற்றி வருவோம்.
    சில சமயங்களில் விளையாடவும் செய்வோம்.
    'பச்சை இலை கொண்டு வருவது' என்று ஒரு விளையாட்டு; 'கண்ணாமூச்சி' விளையாட்டைப் போன்றது.
    'இன்ன இடத்தில், இன்ன மரத்தில் இருந்து, பத்து இலை பறித்து வா...' என்று ஒருவனிடம் சொல்வர். அவன் போவான்; அவன் கூடவே மற்றவர்களும் போவர். அவன் மரத்தில் ஏறி இலை பறிக்கும் நேரத்தில், மற்றவர்கள் ஓடிப் போய் ஒளிந்து கொள்வர். சொன்னபடி இலையை பறித்து திரும்பும் அவன், யாரை முதலில் பார்த்து பிடித்து விடுகிறானோ, அவன் தோற்றவனாகி விடுவான். தோற்றவன் இலை பறிக்க வேண்டும்.
    இந்த விளையாட்டின் போது, சில சமயம் வேண்டுமென்றே, 'சுடுகாட்டு பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து இலை பறித்து வா...' என்று சொல்வர். ஒருசமயம் நானே இம்மாதிரி போய் பறித்து வந்திருக்கிறேன்.
    இம்மாதிரியான விளையாட்டுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் முடியும்!
    ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த போது, ராஜு என்ற நண்பன், ஏதோ ஆத்திரத்தில் பேனாக் கத்தியால், என் முதுகில் குத்தி விட்டான். அந்தத் தழும்பு, இப்போதும் என் முதுகில் இருக்கிறது.
    என் தாயார் என்னை கண்டிக்கும் போது, சில நேரம் எனக்கு கோபம் வந்து விடும்.
    'வீட்டை விட்டு போய் விடுகிறேன்...' என்று சொல்லி, ஆத்திரத்துடன் வெளியே கிளம்பி விடுவேன்.
    எங்கே போவேன் என்று நினைக்கிறீர்கள்... மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன் அல்லது வேறு எங்காவது மரத்தடிக்கு போய் விடுவேன்.
    மாலை வரும்; என் வீராப்பை விட்டு, 'ஜம்'மென்று வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்.
    என் தாயார் என்னைப் பார்த்ததும், பார்க்காதது போல நடிப்பார்.
    எந்தப் பெற்றோருக்கும், தன் மகன் நன்றாக படித்து பெரிய உத்தியோகத்தில், சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை.
    என் பெற்றோருக்கும், அந்த ஆவல் இருந்தது.
    திருச்சியில், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர். அப்போதெல்லாம், நான் அருமையாகப் பாடுவேன். 'ஞான சங்கீதப்பன் மணி மண்டபம்...' என்று, நான் பாட ஆரம்பித்து விட்டால், அதைக்கேட்டு ரசிக்க, என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். பள்ளியில் படிக்கும் போதும், எனக்கு பாட்டில்தான் நிறைய மதிப்பெண் கிடைக்கும். அதில் தான், முதலில் வருவேன்; மற்றவற்றில் சுமாரான மதிப்பெண்கள் தான் கிடைக்கும். கணக்கிலோ பெரிய பூஜ்யம்!
    'காட் சேவ் தி கிங்' (கடவுள் அரசரைக் காக்கட்டும்) என்ற ஆங்கில பாட்டுத்தான், அப்போது பள்ளியில் கடவுள் வணக்கப்பாட்டு. என் குரலில் இனிமையைக் கண்ட ஆசிரியைகள், என்னையும் கடவுள் வணக்கம் பாடும் மாணவர்கள் கோஷ்டியில் சேர்த்து விட்டனர்.
    என் வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்த துாரமோ அல்லது நீண்ட துாரமோ அது எனக்கு தெரியாது. ஆனால், படிப்புக்கும், எனக்கும் வெகு துாரம் என்பது உடனே தெரிந்துவிட்டது.
    அந்த பதினைந்து மாத பள்ளி வாழ்க்கைக்கு பின், என்ன நடந்தது...
    — தொடரும்.
    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை - 26.

  2. Thanks sivaa, eehaiupehazij thanked for this post
    Likes sivaa, Russellmai, gkrishna liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1982
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. Thanks adiram, sivaa, JamesFague, eehaiupehazij thanked for this post
  6. #1983
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நல்லதொரு குடும்பம் (1979).

    வசந்தமாளிகைக்குப் பிறகு நடிகர்திலகம் வாணிஸ்ரீ இணைவில் பதமான நடிப்பில் மனதை இதமாக வருடிச்சென்ற மயிலிறகு! எந்த வயது முதிர்வடைந்து கொண்டிருக்கும் திரைக்கதாபாத்திரத்திற்கும் இவ்வையகத்தில் தனக்கு இணை எங்குமில்லை எதுவுமில்லை எவருமில்லை என்று வெகு இலகுவாக தன் வலிமையை மீண்டும் அவர் உணரவைத்த தென்றல்!!

    Last edited by sivajisenthil; 6th October 2014 at 06:07 PM.

  7. Thanks Russellmai thanked for this post
    Likes sivaa liked this post
  8. #1984
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a Recap of Mr Murali's old post


    Sivaji with KB,BR,Balu Mahendra and Mani ratnam ()
    One question that is often raised here is why NT didn't act in these director's movies or why he didn't choose new directors etc. I thought of replying to these questions later during the course of NT's political innings. Since that would take time, let me answer these "allegations".

    The names that are mentioned are KB, BR, BM, Mahendran & MR.
    Let us take one by one.

    KB: As everyone knows NT-KB combo came together for Ethiroli, but it didn't take off. This was during June 1970. I had explained earlier that period starting from 1967 was a transition period where the face of NT films changed from story oriented to entertainment oriented. More over the intense rivalry between NT and MGR at the film and political level that existed at that point of time was invariably getting reflected in movies of that period. So Ethiroli (a subtle yet superb performance from NT) went down.

    Again it is a well known secret that KB is a egoistic person(no offence meant, but to say that his stature mattered to him most than anything else) who had not even worked with his shishyas like Kamal and Rajini after certain period. The last he did with Rajini was Thillu Mullu which was in 1981. Therafter he said he cannot make films with Rajini anymore but used him in his Kavithalaya movies directed by others.

    Samething happened with Kamal and Unnal Mudiyum Thambi (1988)was the last one. If you check out he did only Punnagai Mannan and UMT after Ek duje in 1981.

    So with this back ground of KB you don't expect a Giant of NT's stature to go all out to woo him. But KB realised it later. When Duet was in the making, NT visited the sets and had a long chat with KB. Later on in a interview, KB confessed that it was his mistake to have made Ethiroli like that at that part of a time and given a chance, he would have corrected.

    BR: Of course NT- BR combo made history with MM. That was in 1985. But even before that BR expressed his desire to do a film with NT. That was in 1978, when NT presided over the Silver Jublie celebrations of Kizakke Pogum Rayil, the second movie of BR. He said in the stage itself that he is a big fan of NT and would love to direct him. But that could materialise only 7 years later.

    Here one thing needs to be stressed. Whoever be the Hero and whoever be the director, a good script needs to be there. That's why when MM became a Super Duper hit, the same combo's Pasumponn failed. The second one was a artificial script where NT was forcefully brought in.

    Balu Mahendra: The person who made his debut with Kokila (Kannada) in 1976 came to Tamil as a cinematographer thro' Mullum Malarum in 1978 and went on to do Ayiyatha Kolangal in 1979, Moodu Pani in 1980. [On the sidelines he was the cinematographer for the famous Sankarabharanam]. Then he did Moondram Pirai in 1982. Meanwhile he also did Olangal in Malayalam (Amol Palekar & Poornima ) and one more movie (don't remember the name) in Malayalam which had Y.G.Mahendra as hero. Again he did MP as Sadma in Hindi in 1983. At this point of time NT decided to do a movie with him and NT's brother VC Shanmugam contacted BM and he agreed to do a film for Sivaji Productions with NT. This was in 1984. BM met NT and they discussed some story threads. It was a preliminary discussion and BM was doing Neengal Kettavai at that time. So it was decided to start the film after NK.

    At this point of time, Sivaji Productions own venture Neethiyin Nizhal was on the floors with Ilaya Thilagam Prabhu and Radha. The movie launched in 1983 was directed by Bharathi-Vasu. But as Prabhu's career had a slump in 1984, NN got stuck. The distributors were a bit hesitant and after much delibrations Sivaji Productions agreed to bring in NT into the film as a Spl appearance. So NT and SriVidya were drafted in as parents of Prabhu. Because of this sudden development, the dates of NT that were kept for BM's movie were utilised for NN and it was agreed with BM that his movie would start after sometime. In the meantime BM started doing Un Kannil Neer Vazhindhal with Rajini. During that shooting, for reasons best known to the establishment of TN at that point of time, BM was arrested on the charges of passport forgery case and he was physically assaulted by police it was alleged. BM was so cut off with the treatment meted out to him,he made the police high handedness as a background for his next film in 1985 which he made in Malayalam as Yatra ( A Superb film where Mammootty gave out a standout performance.The same was remade by BM after 20 years as Athu oru Kana Kalam with Dhanush). So the NT-BM project got delayed and BM went on to do Veedu, Sandhya Raagam and Rettaival Kuthirai and NT was busy with his own projects. So the project never took off.

    Mahendran: He was the one who wrote Thanga Pathakkam and later when he became a director he did good movies like Mullum Malarum[1978] and Uthiri Pookal [1979]. But the continuous failures of his films like Pootatha Pootukkal, Johny (1980), Nandu and Metti in the early 80's forced him into hibernation, though he wrote story dialogue for Rishimoolam in 1980. So the NT- Mahendran combo was never even concieved.

    MR: The second son of Venus Gopalarathinam (better known as Venus Rathinam Iyer) whose original name was Subramanian and who did a MBA, choose films as a career and his debut was again in Kannada (" Pallavi Anupallavi") and rechristened himself as Mani Rathinam. Then he did "Unaru" in Malayalam in 1984. Venus Films had two partners Govindarajan and Rathinam (earlier Sridhar also had a stake) and Govindarajan's sons are G.Thiagarajan & G.Saravanan who launched Sathya Jothi Movies. So they gave the first break to MR thro' Pagal Nilavu in 1985 and Kovai Thambi's Idhya Kovil followed in the same year. Mouna Ragam in 1986 gave the big break and Nayagan in 1987 made it big for him.

    NT having known the Venus family from the early 50's [ Amara Dheepam and Uthama Puthiran were produced by Venus] saw Nayagan and he expressed his desire to do a film with MR. Nayagan was released for 1987 Deepavali (October) and MR was already shooting for Agni Natchathiram. So after that, it was decided. But came Dec 24, 1987,TN's political situation turned topsy turvy and NT took the political plunge and his filmy commitments were reduced. After all the political storm, when he again showed interest in acting, GV films booked him. It was announced that MR would direct Thalapathy and Suhasini would direct NT movie which also had Mammootty. MR was telling Suhasini to leave the project to him.

    At that point of time NT went to attend Singapore show where he was to be felicitated. But alas, he swooned on the dias and he was rushed to hospital where he was diagonised with enlarged Heart problems. The Doctors advised fixing of pacemaker in his heart and that was done. The after effects of that prevented NT from active cinema for some time and MR in the meantime had gone to Bollywood range with the release of Roja. So again the spirit was there for NT but body was not willing.

    These are the facts and hope NT's stand is clear now.

    As for as he not selecting good movies or stories, let me come back to it after some time.

    Regards

  9. Likes KCSHEKAR, sivaa liked this post
  10. #1985
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ரிஷிமூலம்?! (1980) : நதி (டிகர் திலகம்) மூலம் தேவைப்படும் போது!

    முதுமை நெருங்க நெருங்க வாழ்வின் கடமைகள் நிறைவுற்ற நிலையில் கணவன் மனைவியிடையே அரும்பும் கனிந்த காதல் என்பது திருமண வாழ்வு தந்திட்ட அன்பு மட்டுமே சார்ந்திட்ட ஆசைக்கு வித்திடும் பந்தம். ஐம்பதிலும் வரும் ஆசையை என்னவொரு பாந்தமாக வெளிப்படுத்துகிறார் நடிகர்திலகம்!



    Last edited by sivajisenthil; 6th October 2014 at 06:26 PM.

  11. Likes KCSHEKAR, Russellmai, sivaa liked this post
  12. #1986
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Mr Siva


    Thanks for the initiative taken by you in uploading the Kungumam article on NT. I have requested last week itself if anyone have the facility can upload the same.

    Once again thanks for your support.


    Regards
    அன்பின் வாசு சார்

    தங்களது வேண்டுகோள் பதிவை கண்டதனால்தான்
    இதனை தேடி எடுத்து பதிவுசெய்ய முடிந்தது
    நன்றி உங்களுக்கு

  13. #1987
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    என் தம்பி படத்தில் நடிகர் திலகம்

    இந்த திரியில் நான் பார்த்ததில் பிடித்தது என்ற ஒரு series தான் அதிகமாக எழுதி உள்ளேன் . வெகு நாட்களுக்கு பிறகு எழுதுவதினால் என் routine ல் இருந்து ஒரு சின்ன deviation


    இனி என் தம்பியில் நம் நடிகர் திலகத்தின் நடிப்பு விஸ்வரூப தரிசனம்

    1968 ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் படம் , இந்த படம் வந்த நேரத்தில் பல படங்களில் பல வேடங்களில் நடித்து கொண்டு புது புது அவதாரங்கள் எடுத்து கொண்டு இருந்தார் , நம் நடிகர் திலகம்

    நடிகர் பாலாஜி என்றால் ரீமேக் படங்கள் தான் , அந்த நேரத்தில் எந்த மொழி படம் ஹிட் என்று பேசபடுகிறதோ அதை சுட சுட ரீமேக் செய்து விடுவார் , இந்த படமும் அது போல வந்த ஒரு தெலுங்கு ரீமேக் தான்

    ஒரு commercial படத்தில் logic always goes for an toss . அதை நம்பும் படி சொல்வதில் தான் இருக்கிறது சவால்

    இந்த படத்தில் நம்மவர் ஏற்று கொண்டு இருக்கும் பாத்திரத்தின் பெயர் கண்ணன் , அது என்னமோ தெரியவில்லை கண்ணன் என்ற பாத்திரத்துக்கும் நம்மவருக்கும் அப்படி ஒரு நெருக்கம் , Melo dramatic shade அதிகமாக தாய் பாசத்துக்கு ஏங்கும் கண்ணனாக நம்மை தெய்வமகன் ல் உருக வைத்தார் என்றால் இதில் எழில் கொஞ்சும் கண்ணனாக , அழகில் , நேர் வழில் செல்லும் பொது தன் சொந்த தம்பியின் சூழ்ச்சியால் வஞ்சிக்க படுவதால் , பகவான் கண்ணனின் அம்சமான சமயோஜித்த புத்தியினால் ஆள் மாறாட்டம் செய்து தர்மத்தை நிலை நாட்டுகிறார்.

    இந்த படத்தில் நடிகர் திலகத்துக்கு பல முகங்கள்.

    ஒரு மிக பெரிய ஜமீன் அதை நிர்வகிக்க சின்ன வயதில் இருந்தே பயிற்சி எடுத்து qualify ஆகிறார் . அதை அவர் கையாளும் அணைத்து விஷயங்களில் பார்க்க முடிகிறது . உதவி கேட்டு வரும் வேலைகாரனிடம் கனிவு , எஸ்டேட் ல் வேலைசெய்யும் நபர் தவறு செய்த நபரிடம் ரௌத்திரம் என்று ஒரே காட்சியில் இரண்டு முக பாவனை .

    நிறை குடம் தளும்பாது ,அதை போல் அதிகம் படித்து , அமைதின் ரூபமாய் இருக்கும் கண்ணனின் முகத்தில் தான் எத்தனை சாந்தம் , கருணை , அதுவும் கோவிலில் அவர் பேசும் வசனமும் , அந்த காட்சி வேறு ஒரு தளத்துக்கு நம்மை அழைத்து செளுகிறது .

  14. Likes kalnayak, Russellmai, eehaiupehazij liked this post
  15. #1988
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு ஆண் பாசத்தில் அதுவும் தாய் பாசத்தில் மிஞ்ச முடியுமா , முடியாது என்று தான் நானும் நினைத்து கொண்டு இருந்தேன் , இந்த படத்தில் கண்ணனை பார்க்கும் வரையில்

    பாசத்தை பிரதிபலிக்க நம்மவருக்கு சொல்லிய தர வேண்டும் , நிஜ வாழ்வில் பாசமிக்க கணவராக , அண்ணனாக , மகனாக இருபவருக்கு , தங்கையிடம் பாசம் காட்ட சொல்லி தரவா வேண்டும் . தன் தங்கைக்கு சாப்பாடு ஊட்டும் காட்சி , தங்கையிடம் அன்பை பொழியும் காட்சி பாசமலர் போல் melo dramatic ல இல்லமல் கொஞ்சம் அதை அளவாக காட்டி உடனே அடுத்த காட்சிக்கு நம்மை அழைத்து செல்வது நல்ல உக்தி
    எனக்கு தெரிந்து இந்த ஒரு நடிகர் தான் ஒரே காட்சி கொடுத்தாலும் அதை தன் நடிப்பு ஆற்றலினால் each and every time வேறு படுத்தி நடித்து நம்மை திக்கு முக்கு அட செய்யும் மாய கள்வன் .
    முத்து நகையே என்ற பாடலில் தன் தங்கையை வைத்து கொண்டு அவர் பாடும் பொது அவர் முகத்தில் தவழும் ஒரு வித DIVINE SMILE க்கு ஈடு இணை இல்லை , எப்படி ,பிறந்த குழந்தையின் சிரிப்பில் , மழை துளியில் , பனி கட்டியில் கலப்படம் இருக்காதோ , அதை போன்றது தான் இந்த காட்சியில் அவர் தன் தங்கையை கை ஆளும் பொது அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு
    ஊனம் உற்ற குழந்தைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்து கொள்ள வேண்டும் . அதே சமயம் SPECIAL TREATMENT காட்ட கூடாது . இதை புரிந்து கொண்டு சாப்பிடும் பொது விளையாடுவது ஆகட்டும் , அந்த குழந்தையை உடன் உரையாடும் போதும் இந்த உணர்வை பிரதிபலித்து கொண்டே இருப்பார்

    ஒரு நடிகர் நடித்தால் மட்டுமே போதாது , அவர் நடிப்புக்கு வலு சேர்க்க அவர் அணியும் உடைகள் , அவர் அச்செச்சொரீஸ் அவருக்கு complementary ஆக இருக்க வேண்டும் , aristocrat கண்ணனாக அவர் அணியும் உடை நேர்த்தி . அதுவும் அவர் தம்பி வரும் பொது அவர் வெள்ளை உடை , சூ , அணிந்து கொண்டு , கையில் புத்தகத்துடன் , நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் தம்பி வருவதை பார்க்கும் காட்சி , signature pose for posters

    இப்படி ஒரு பக்கம் பாசத்தை பொழியும் கண்ணன் , வள்ளலாக அறிய படும் கண்ணன் , வீரத்தின் விளைநிலமாக அறிய படும் கண்ணன் காதல் வைய பட்டால் ? எப்படி இருக்கும் . பொதுவாக பாசம் அதிகமாக வைத்து இருக்கும் ஆண்மகன் தன் காதலி , அல்லது மனைவியை அணுகும் விதம் , பேசும் விதம் அனைத்துலும் ஒரு வித ஆண்மை கலந்த பெண்மை + மேன்மை இருக்கும் . இந்த படத்தில் காதல் காட்சிகள் கம்மி என்றாலும் கிடைத்த காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்து இருப்பார் நம்மவர் அதுவும் அடியே நேற்று பிறந்தவள் நீயே பாடலில் இவர் கொடுக்கும் expressions ஆகட்டும் , தட்டட்டும் கை தழுவட்டும் பாடலில் சரோஜாதேவியின் கூந்தலில் உள்ள பூவைப் சாட்டையின் மூலமாக பறிக்கச் சொல்லும் பரிட்சையின் போது வரும் பொது அவர் காடும் ஒரு வித அதிர்ச்சி கலந்த முக பாவம் top
    பணம் , மரியாதை , படிப்பு , தங்கை பாசம் , உளம் கவர்ந்த காதலி அனைத்தும் இருக்கிறது கண்ணனிடம் , எல்லாம் ஒரு மனிதருக்கு கிடைப்பது இல்லை , அப்படி கண்ணனிடம் எது இல்லை , தம்பி பாசம்

    தன் தம்பியிடம் அளவில்லா பாசம் காட்டும் கண்ணனுக்கு அது ஒரு one way டிராபிக் ஆகவே இருக்கிறது , தன் தம்பியை எப்பாடு பட்டு திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தோல்வியை சந்திக்கும் கண்ணன் , தன் தம்பி திருந்தி விட்டேன் என்று சொல்லும் பொது , அது வரை மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் கண்ணன் பாசத்தினால் அறிவு கண் குருடு ஆகி பிரச்சனையில் சிக்கி கொள்ளுகிறார் .

  16. #1989
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கந்தப்பா

    ஜமிந்தார் பாத்திரத்தில் இருக்கும் பொது ஒரு வித வட்டத்துக்குள் இருக்கும் சிவாஜி சாரின் நடிப்பு , கந்தப்பா பாத்திரத்துக்கு கூடு விட்டு கூடு பாயும் பொது அணைத்து inhibitions யையும் சற்று தள்ளி வைத்து break free zone க்கு வரும் பொது , the actor takes us for an enjoyable ride. தெற்கத்தி கள்ளனடா என்ற தெரு கூத்து பாடல் , அந்த காலத்தில் தெருக்கு தெரு கலக்கி இருக்கும் , இதற்க்கு முன் நான் பார்த்த இரண்டு தெரு கூத்து பாடல் ஒன்று நவராத்திரி படத்தில் வரும் , மற்றுஒன்று தில்லானாவில் மனோரமா ஆடும் பாடல் . இதில் நவராத்திரியில் வரும் பாடலும் , இதற்கும் ஒரே நடிகர் , ஒரே சூழ்நிலை , நடிப்பில் complete வேற்றுமை. இந்த ஒரு பாடல் போதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பெருமையை பறைசாற்ற . இந்த ஒரே பாடலில் அவர் ஹீரோக்கு என்று இருக்கும் அணைத்து இலகனங்களை உடைத்து , எந்த வித limitations இல்லாமல் ஆடி அதுவும் கன்வின்சிங் ஆக ஆடி இருப்பார் , அதுவும் , மீசையை முறுக்கி ஆடும் பொது 1969 ல் தியேட்டர் எப்படி இருந்து இருக்கும் , நினைத்து பார்த்தாலே சுகமாக இருக்கிறது
    கந்தப்பா transform ஆகும் காட்சிகள் நம் சிரிப்புக்கு உத்தரவாதம் , (இந்த காட்சிகளின் சாயல்களை பிற்காலத்தில் வரும் பல படங்களில் பார்க்க முடியும் , பில்லா படத்தில் டானாக ரஜினியை மாற்றும் காட்சி , பட் , புட் என்ற வார்த்தை விளையாட்டை , நல்லவனுக்கு நல்லவன் படத்திலும் பார்க்க முடியும்)

    இந்த காட்சியில் அவர் செய்யும் சேஷ்டைகளை பார்க்கும் பொது , நாகேஷ் என்ற நகைச்சுவை நடிகரை JUST LIKE THAT கடந்து இருப்பார்
    நாகேஷ் அவரிடம் மாட்டி கொண்டு முழிக்கும் போதும் , அவர் முதல் முறையாக கோட் சூட் அணிந்து , நாடக நடிகருக்கு உரித்தான , கம்பீரத்துக்கு அடையாளமாக நடித்து நடித்து , தோளை உயர்த்தி நடக்கும் பொது சிரிக்காமல் இருக்க முடியாது . நாகேஷ் வீட்டை பற்றி சொல்லுவதும் , இவர் தூங்கி விடுவதும் அனைத்தும் படத்தில் காமெடி இல்லை என்ற குறையை , அதுவரை குடும்ப படமாக இருந்த படத்தின் genre யை மாற்றி விடும்


    கண்ணன் கந்தபாவாக உருமாறி மீண்டும் கண்ணனாக வரும் பொது முதலில் குடும்ப படமாக இருந்த படம் பிறகு action படமாக மாறுகிறது ,
    அவர் பங்களா வுக்குள் நுழையும் பொது தங்க நிறத்தில் ஷு அணிந்து இருப்பார் , தங்கம் கிழே இருக்கிறது , பரிசுத்தமான வஸ்து கிழே இருக்கிறது என்று சொல்லுவது போல் இருந்தது என்னக்கு .

    என்ன தான் ஒருவன் அணைத்து அமசங்களையும் சொல்லி கொடுத்தாலும் ஒரு நாடக நடிகன் மாளிகையில் தடுமாற தான் செய்வான் , அதை மிகவும் எதார்த்தமாக பிரதிபலித்து இருப்பார் , சிநேமடிசாக எடுக்க நல்ல ச்கோபே இருக்கும் காட்சிகள் இவை , இருந்தும் சற்று under play செய்து இருப்பார் so that scene does get a natural effect and does not go overboard . உதரணத்துக்கு தங்கையுடன் உணவு அருந்தும் காட்சி .


    குடும்ப படத்தில் action block பெரிதாக எதிர்ப்பாக முடியாது, அதை குறையை சரி செய்து விடுகிறது கத்தி சண்டை
    கத்தி சண்டை என்பது cliched ஆக இருக்காது , கத்தியை முதலில் வாங்கும் பொது ஒரு வித பட்டதம் , பிறகு துணிவு , பிறகு கோபம் , வெல்ல வேண்டும் என்ற வெறி என்று அனைத்தும் காட்டும் அவர் முகம் , அதுவும் துள்ளி குடித்து , தாவி , அதே சமயம் கத்தியையும் லாவகமாக கை ஆளுவதை பார்க்கும் பொது ,கத்தி சண்டையில் சில நடிகர்கள் தான் தேர்ந்தவர் என்று சொல்லும் பொது OMG என்ன வென்று சொல்வதம்மா என்று கேட்க தான் தோன்றுகிறது . அவர் கத்தியை வைத்து கொண்டு நிற்கும் காட்சி , signature ஸ்டைல்

    மொத்தத்தில் கண்ணனாக வந்து , கந்தபாவாக சிரிக்க வைத்து , மீண்டும் கண்ணனாக வந்து ஆக்ரோஷமாக மெய் சிலிர்க்க வைக்கும் சிவாஜி சாரின் நடிப்பை போற்றுவோம்

  17. #1990
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasudevan Sir,

    The above post is for you, You have asked about En thambi some time back , I hope you remember and hope I would have fulfilled atleast 5 % of your expectation

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •