Page 209 of 400 FirstFirst ... 109159199207208209210211219259309 ... LastLast
Results 2,081 to 2,090 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2081
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கிருந்தோ வந்தாள் - 2

    எந்த சண்டாளன் சேகரிடமிருந்து கவிதாவைப் பிரித்தானோ, அதே சுகுமார் சேகரின் தங்கையையும் (எம்.பானுமதி) தன் வலையில் வீழ்த்தி, அவளை இழுத்துக்கொண்டு ஓடப்போகும் சமயம், அதைப்பார்த்த ராதா, சேகரை உசுப்பிவிட, அவர் பைத்திய நிலையிலேயே சுகுமாரை அடித்து, நொறுக்கி, கடித்து துன்புறுத்த (இந்த கட்டத்தில் ஒரு அசல் பைத்தியக்காரன் சண்டை போட்டால் எப்படி போடுவான் என்பதை கண்முன்னே கொண்டு வருவார் நடிகர் திலகம்) அவரிடமிருந்து தப்பிக்க, தவறுதலாக மாடியின் கைப்பிடி சுவரில் ஏறும் சுகுமார், பேலன்ஸ் இல்லாமல் நிலை தடுமாறி மாடியில் இருந்து விழுந்து இறக்க, மாடியில் இருந்து எட்டிப்பார்க்கும் சேகருக்கு (அதே பழைய காட்சியைக் கண்டு விட்ட நிலையில்) பாதிக்கப்பட்ட மனநிலை சீராகி பைத்தியம் தெளிய... சரி அப்புறம்?.

    அப்புறம்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் விஸ்வரூபம்...

    "பார்த்தீங்களா..? உங்க பிள்ளைக்கு குணமாயிடுச்சு, என்னங்க... இதோ பார்த்தீங்களா உங்க தம்பிக்கு குண்மாயிடுச்சு" என்று மேஜர், பாலாஜி போன்றோரிடம் ஒவ்வொருவராக அழைத்துச்சென்று காண்பிக்கும்போது அவர் காட்டும் முக மலர்ச்சி என்ன?. ஒவ்வொருவராகப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டு வரும் சிவாஜி, கடைசியில் அண்ணி தேவிகாவிடம் "அண்ணி யார் இந்தப்பொண்ணு?" என்று கேட்கும்போது, அதிர்ச்சியில் அப்படியே முகம் மாறும் பாவனை என்ன?. (அப்போது மெல்லிசை மன்னர் டிரம்ஸ் அதிர கொடுக்கும் அந்த 'பாங்' சவுண்ட்).

    நடிகர் திலகத்தை ஒவ்வொரு இடமாக கூட்டிக்கொண்டு போய் "என்னங்க இது நினைவு இருக்கிறதா? அது நினைவு இருக்கிறதா?" என்று கேட்க "ஓ... நான் பைத்தியமாக இருக்கும்போது உங்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுத்தேனா?" என்று கேட்க, அதற்கு ஜெ. "ஆங்... இப்ப நினைவு வருதுல்ல?" என்று ஒரு குழந்தையின் முகமலர்ச்சியுடன் கேட்க, அதற்கு நடிகர் திலகம் இல்லை என்பது போல கையை விரிக்க, அப்படியே முகம் மாறி "ஒண்ணுமே நினைவில்லையா...ஐயோ" என்று தலையில் கைவைத்து நிற்கும் இடம்... அம்மாடியோ. (பாவி மகளே... அஞ்சு வருஷமா இந்த நடிப்பையெல்லாம் எங்கேம்மா ஒளிச்சு வச்சிருந்தே). அதற்கு முன் ஜெயலலிதாவுக்கு தியேட்டரில் இவ்வளவு பலத்த கைதட்டல் விழுந்து பார்த்திருக்க முடியாது.

    (இந்த இடத்தில் சேகரின் இடத்தில் 'விஜி'யையும், ராதாவின் இடத்தில் 'சீனு'வையும் வைத்துப்பாருங்கள். மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் வந்டு விடும்)

    தான் பைத்தியமாக இருக்கும்போது என்ன நடந்தது என்று நினைவில்லாவிட்டாலும், என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொண்ட சிவாஜி, தான் குணமாக உறுதுணையாக இருந்த ஜெ.வை மேஜரும் பாலாஜியும் பணம் கொடுத்து செட்டில் பண்ணி விரட்ட துணியும் நேரத்தில், அவருக்காக உதவிக்கு வருவது அருமையான திருப்பம். (ஆனால் அதைத்தொடர்ந்து, முத்துராமன், பக்கத்து வீட்டு சுகுமாருக்கும் எம்.பானுமதிக்கும் என்ன உறவு, சச்சுவுடன் பாலாஜியின் லீலைகள், நாகையாவுக்கும் ஜெ.வுக்கும் என்ன உறவு என்று ஒவ்வொரு குழப்பமாக தீர்த்து வைப்பது சுத்த சினிமாத்தனம்). எல்லாம் முடிந்து அனைவரும் ராதாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள... முடிவு சுபம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2082
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கிருந்தோ வந்தாள் - 3

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அருமையாக இசை வடிவம் கொடுத்திருந்தார். முதல் பாடல் ஜெயலலிதா அறிமுகக்காட்சி. ஐதராபாத் நாட்டியக்காரியாக வரும் ஜெயலலிதாவுக்காக எஸ்.ஜானகி பாடிய "வந்தவர்கள் வாழ்க.. மற்றவர்கள் வருக" பாடலில் ஆர்மோனியம், சாரங்கி, தபேலா அனைத்தும் துள்ளி விளையாடும்.

    ஃப்ளாஷ்பேக் காட்சியில் சிவாஜி பாடுவதாக வரும். "ஒரே பாடல் உன்னை அழைக்கும்... உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்" பாடலில், இதுவரை பார்க்காத ஜெய்குமாரி. ஆம்.. புடவையை இழுத்து போர்த்திக்கொண்டு கண்களில் கண்ணீர் வழிய, சோக பாவம் காட்டும் ஜெய்குமாரி நமக்கு புதுசு. 'எந்த ரோல் கொடுத்தாலும் பின்னியெடுப்போம். ஆனால் எங்களை வெறும் கவர்ச்சிப்பாவைகளாகவே காட்டி வந்து விட்டீர்களே பாவிகளா' என்று இரண்டு 'ஜெ' க்களும் திரையுலகினரைப் பார்த்து கேட்பது போலிருக்கும் இப்படத்தில்.

    ஜெயலலிதா, சிவாஜியை மனமாற்றத்துக்காக அழைத்துச்செல்லும் பிருந்தாவனம் பூங்காவில் (டி.எம்.எஸ்., சுசீலா இருவரும்) பாடும் "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே... பிறக்கும் சங்கீதமே" பாடலில், சுசீலாவின் சிரிப்புக்கு மெல்லிசை மன்னர் சந்தம் அமைத்திருப்பது அருமை மட்டுமல்ல புதுமையும் கூட.

    தன் மீது கோபம் கொண்டு வீட்டை விட்டு போகும் ஜெயலலிதாவை திரும்ப அழைக்க சிவாஜி பாடும் "நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்" பாடல், மெல்லிசை மன்னரின் 'ஷெனாய் ஸ்பெஷல்' என்றால் அது மிகையல்ல. ஷெனாய் பேசும், பாடும், நம் மனதை கிறங்கடிக்கும். கண்ணதாசன் மட்டும் என்ன சாமானியப்பட்டவரா...

    'என்ன தவறு செய்து விட்டேன் அதுதான் எனக்கும் தெரியவில்லை
    வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழ தெரியவில்லை'

    அதே போல அடுத்த சரனத்தில்....

    'என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்னை திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணையில்லை'

    கவியரசர், மெல்லிசை மன்னர், குரல் வித்தகர், நடிகர் திலகம் ஆகியோர் சேர்ந்து செதுக்கிய நேர்த்தியான சிற்பம் இப்பாடல். அதிலும் 'நா.............ன்' என்று இரண்டெழுத்து வார்த்தையை, ராகா ஆலபனையோடு இவ்வளவு அழகாக இழுத்துப் பாட டி.எம்.எஸ்.ஸை விட்டால் வேறுயார்.

    சேகருக்கு ராதா 'சாகுந்தலம்' படித்துக்காட்டும் காட்சியில் கற்பனையில் உருவாகும் "காளிதாச மகாகவி காவியம்" பாடல், கணீர் குரல் மன்னன் சீர்காழியும், (ரொம்ப நாளைக்குப் பிறகு) பி.லீலாவும் பாடியிருப்பார்கள். துஷ்யந்தனாக நடிகர் திலகம் தோன்றும் காட்சியில் பலத்த கைதட்டல். ஜெயலலிதாவின் 'சகுந்தலை' பாத்திரம் நம் மனதில் ரொம்பவே இரக்கத்தை ஏற்படுத்தும்.

    கூடவே இடைச்செருகலாக நாகேஷ் - சச்சு பாடும் 'அலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு' பாடலை சாய்பாபா மற்றும் ஈஸ்வரி பாடிருந்தனர்.

    தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில், கே.பாலாஜி தயாரித்து ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இப்படம் 1970 தீபாவளி திருநாளில் வெளியாகி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றியைக் குவித்தது.

    'எங்கிருந்தோ வந்தாள்' பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்

  5. Likes Russellmai liked this post
  6. #2083
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    'இளைய தலைமுறை' - 2

    மல்லியம் ராஜகோபால் கதை வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். வசனம் அருமை. குறிப்பாக, மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் இடத்தில், அந்த ஸ்ட்ரைக்கை கண்டித்து நடிகர்திலகம் பேசும் வசனம் சூப்பர். (அதில் ஒரு துளி... "ஊரில் உங்க அப்பா சாகக்கிடக்கிறார். நீ உடனே போக வேன்டிய கட்டாயம். ஆனால் ஸ்ட்ரைக் நடக்கிறது. வண்டிகள் ஓடவில்லை. உன்னால் போக முடியவில்லை. உன் தந்தையின் முகத்தைக்கூட நீ கடைசியாக பார்க்க முடியாமல் செய்கிறது இந்த ஸ்ட்ரைக். இது ஏன் உங்க மூளையில் ஸ்ட்ரைக் ஆகலை?")

    கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு, 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 'இளைய தலைமுறை... இனிய தலைமுறை' பாடலை மட்டும் மல்லியம் ராஜகோபால் எழுதியிருந்தார். (பட்டிக்காடா பட்டணமா போல) டைட்டில் ஓடும்போது எம்.எஸ்.வியும், படம் துவங்கியதும் (நடிகர் திலகத்துக்காக) டி.எம்.எஸ்ஸும் பாடியிருப்பார்கள். நல்ல பொருள் பொதிந்த பாடல். பட்டம் வாங்கியதும் நடிகர் திலகம் மற்ற சக மாணவர்களுடன் (கல்விக்கண் திறந்த) காமராஜரின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதாக காட்டியிருப்பது அருமை.

    நடிகர்திலகம், வாணிஷ்ரீ பாடும் டூயட் பாடலான 'யார் என்ன சொன்னார்.. ஏனிந்த கோபம்', மற்றும் வாணிஷ்ரீ கிளப்பில் பாடும் 'ஒரு நாள் இரவு தனிமையில் இருந்தேன்' பாடலும் நன்றாக அமைந்திருக்கும். அடையாறு ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகளுக்குள் கேமரா நுழைந்து நுழைந்து படமாக்கியிருக்கும் டூயட் பாடல் கண்ணுக்கு விருந்து (இப்போது அந்த ஆலமரம் இல்லை)

    இருவருக்கும் காதல் அரும்பும் முன்னர், குட்டை பாவாடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் தெருவில் செல்லும் வாணியை கிண்டல் செய்து, நடிகர் திலகம் பாடும்
    "சிங்கார தேர்கூட திரைமூடி போகும்
    அதுகூட உனக்கில்லையே
    செவ்வானம் தனைக்கூட மேகங்கள் மூடும்
    மூடாத வெண்முல்லையே"
    என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் அருமை. குடகு மலை மெர்க்காராவில் படமாக்கப்பட்டிருக்கும். (முதலில், இந்தக்காட்சிக்காக 'பொம்பளையா லட்சணமா பொடவையைக் கட்டு' என்ற பாடல் ஒலிப்பதிவாகி அது இசைத்தட்டில் கூட வந்ததாம்).

    படத்தில் ஏராளமான நட்சத்திரக்கூட்டம்... நடிகர்திலகம், வாணிஷ்ரீ, சங்கீதா (பொம்மை), கே.விஜயன், வி.கே ராமசாமி, எம்.என்.ராஜம், எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஷ்ரீகாந்த், விஜயகுமார், ஜூ.பாலையா, மகேந்திரன், ஜெயச்சந்திரன், பிரேம் ஆனந்த் என்று ஏகப்பட்ட முகங்கள்.

    படம் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பார்க்க வேண்டிய நல்ல படம் என்று உறுதியாக சொல்லலாம். அப்போது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகர் திலகத்தின் சில படங்கள் நீண்ட கால தயாரிப்பில் இருந்தன. வைர நெஞ்சம் (Hero-72), ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை, சித்ரா பௌர்ணமி, என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி இப்படி சில படங்கள். (ஆனால் எந்தப் படத்தின் தாமதத்துக்கும் நடிகர் திலகம் காரணமல்ல. தயாரிப்பாளர்களின் ஃபைனான்ஸ் பிரச்சினையே முக்கிய காரணம்). இவற்றில் பல படங்கள் வெற்றிப் படத்துக்குரிய சிறப்புகளைப் பெற்றிருந்தும், தாமதமான வெளியீடு வெற்றியை பாதித்தது.

    'இளைய தலைமுறை' படத்தைப்பற்றிய எனது கருத்துக்களைப் படித்த நல்ல இதயங்களுக்கு என் நன்றி.
    THIS FILM IS LATER REMADE BY Mr. KAMALAHASSAN as "NAMMAVAR" with some minor change!

    NAMMAVAR = ILAYA THALAIMURAI DISCOUNT FAMILY SEQUENCE OF NADIGAR THILAGAM.

    Ilaya Thalaimurai - NT is Hostel Warden
    Nammavar - KH is Professor

    Srikanth Character - Played by KARAN in Nammavar

    Nagesh Daughter Character - male Character in Illaya Thalaimurai.

    Vanisree Character - Gowthami but she is also a Professor.


    REgards
    RKS

  7. #2084
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Suthi Suthi vanthalum kadaisiyil Ganesaridam vanthu than aga vendum. In all aspects NT movies will be modified by all the leading actors.

    Pazhani = Vanathai Poola

    Naam Pirandha Mann = Indian

    Sabhash Meena = Ullathai Alli Thaa

    Iru Malargal = Sillunu Oru Kadhal

    Regards

  8. #2085
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    dinamani kathir 05/10/14

    எந்தவொரு கதாநாயகனையும் மனதில் வைத்து கதை எழுதும் பழக்கம் பாரதிராஜாவுக்கு இருந்ததில்லை. ஆனால் "முதல் மரியாதை' சிவாஜிக்காக எழுதப்பட்ட கதை. கதாசிரியர் செல்வராஜுடன் இணைந்து திரைக்கதை அமைத்து முடித்ததும், நேராக "அன்னை இல்லம்' சென்று சிவாஜியை சந்தித்தார் பாரதிராஜா. ""அண்ணே, உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது. மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்க கூட வேணாம். நான் சொல்றபடி இங்கிட்டும் அங்கிட்டும் நடங்க, உட்காருங்க, எந்திரிங்க. நான் சொல்ற டயலாக் மட்டும் பேசுங்க... அது போதும்'' என பாரதிராஜா சொல்ல குறுகுறுவென பார்த்தார் சிவாஜி. படப்பிடிப்பு தொடங்கியது. ""உனக்கு என்ன வேணுமோ, எடுத்து கொள்'' என்று மட்டும் சொல்லி இயக்குநருக்கு தேவையானதை கொடுத்தார் சிவாஜி. ""ஏன்டா காட்டு பயலே. எப்படிடா இப்படிப் படம் எடுத்த? இப்பதான்டா தெரியுது. ஷூட்டிங்கில் நீ என்னை அங்கே, இங்கே அடிக்கடி திரும்பச் சொன்ன சூட்சுமம். இது சாதாரணப் படம் இல்லடா... இண்டர்நேஷனல் கிளாக்ஸிக்டா'' படத்தின் பிரிவ்யூ ஷோ அன்று பாரதிராஜாவை இறுக்க கட்டிப்பிடித்து சிவாஜி சொன்ன வார்த்தைகள் இவை.
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #2086
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nobel Prize for Peace (2014) goes to .....
    Noble prize always goes to NT!
    NT's fans are peace loving people


    http://mlife.mtsindia.in/news_details.jsp?pid=24497

    60 years 'old is gold' Kailash Sathyaarthi of India and 17 years old and bold Malala of Pakistan share Nobel Prize for Peace! On behalf of our thread let us congratulate them and wish them continue their dedicated service! We join with NT dedicating a flower shower!

    திறமை உள்ளவர் எங்கிருந்தாலும் தேசம் அவரிடம் ஓடும்........................ ஒருவர் புகழை ஒருவர் மறைத்து உயரும் வரலாறில்லை!



    The song is so mellifluous but the Muthuraman-? love (?!)scene is a visual irritant and also mars the pleasant environ with NT!
    Last edited by sivajisenthil; 11th October 2014 at 04:23 AM.

  11. Likes Russellmai, gkrishna liked this post
  12. #2087
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Enchanting Kavariman song! (in two different moods)

    விதியின் சதி நதி (நடிகர்திலகம்)யின் மதி மறைத்த அவலம்! A totally different and challenging role to NT, that was portrayed brilliantly and effortlessly by the thespian!

    எம் உயிரின் ஒளி நீயே!



    திரிசூலம் கெலிப்புப் பிரளயத்தின் மின்னல் ஒளிக்கீற்றில் மங்கியது இவ்வைரத்தின் ஜொலிப்பு!
    Last edited by sivajisenthil; 10th October 2014 at 10:33 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #2088
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Another song sequence with a child artiste in film 'Imayam' similar to the one in Kavariman!

    நடிப்பின் இமயம் பாலகனிடம் பாசத்தில் மயங்கும் சமயம்!

    Last edited by sivajisenthil; 10th October 2014 at 10:15 PM.

  15. Likes Russellmai liked this post
  16. #2089
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கலைக்கோயிலின் காவல் தெய்வமே!

    காவல் அதிகாரியாக வரும் சுப்பையாவின் காவல் தெய்வம் நடிகர்திலகம். ஊதியம் எதுவும் பெறாது நடிப்புக்கொடை நல்கி சுப்பையாவின் வாழ்க்கைப்படகு
    கடன் கடலில் மூழ்கிவிடாமல் காத்திட்ட கர்ணன்!

    உரமேற்றிய கரங்களுடன் மரமேறும் சாமுண்டி திரையுலகின் வரமே!




    Last edited by sivajisenthil; 11th October 2014 at 04:25 AM.

  17. Likes Russellmai liked this post
  18. #2090
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    எமனுக்கு எமன் (1980)

    நிறைய தெலுங்கு சாராம்சங்களுடன் வந்த பொழுதுபோக்குப் படம் எமதர்மனின் கம்பீரம் ...அவருடன் மல்லுக்கு நிற்கும் இளைஞனின் குறும்புகள்....சக்கரவர்த்யின் இசையில் தெவிட்டாத தேனிசைக்கரும்பு!







    Last edited by sivajisenthil; 11th October 2014 at 04:40 AM.

  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •