Page 210 of 400 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2091
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் பிறந்த மண் (1977)

    நடிகர்திலகத்தின் தேசிய ஈடுபாட்டை எடுத்துரைத்த எளிய படம். கமலஹாசன் வளர்ந்துவரும் பருவத்தில் நடிப்பின் சில நுட்பங்களை சிவாஜி/ஜெமினி கணேசன்களுடன் பூவுடன் சேர்ந்த நாராக இருந்து கற்றுக்கொண்ட படம்.

    ஒரு வகையில் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் திரைப்படத்தின் கதைக்கரு. பிரம்மாண்டமில்லாத காரணத்தால் மிதமான வெற்றியையே எட்டமுடிந்தது




    Last edited by sivajisenthil; 11th October 2014 at 05:19 AM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2092
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்ளலாம் நமக்கு.

    நடிப்பை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதவர்களைஎல்லாம் மிகை நடிப்பு, இயற்க்கை நடிப்பு, மித நடிப்பு என்று பேசுகிற அளவிற்காவது நடிப்பின் தரத்தை பிரித்து பார்க்கும் நிலைமைக்கு உயர்த்திய பெருமை நமது நடிகர் திலகத்தையே சாரும்.

    என்ன..... அப்படி எழுதுபவர்கள் அறிந்தாலும் அறியாதது போல, புரிந்தாலும் புரியாதது போல பாசாங்கு செய்வது ஒரு விஷயம்... அது என்னவென்றால், நடிகர் திலகம் மிகை நடிப்பு, மித நடிப்பு, இயற்க்கை நடிப்பு, ஆக்ரோஷ நடிப்பு, அமைதி நடிப்பு இப்படி இன்னும் இவர்கள் என்ன வகையை கண்டுபிடிக்கிறார்களோ அவை அத்தனையும் செய்து காட்டியவர் என்பதுதான் !

    ஆனால் பல இயற்க்கை நடிகர்கள் அந்த இயற்கையை விட்டால் ஒன்றும் தெரியாத காரணத்தால்தான் உலக மக்களிடையே நடிப்புக்கு பெயர் பெற்று விளங்க முடியவில்லை.

    ஒருவன் மற்றவர்களுக்கு இடையில் பாசாங்கு செய்தால் அதை மற்றவர் கண்டுபிடிக்கும்போது......ஏண்டா இப்புடி நடிக்கற ...மனசுல பெரிய சிவாஜின்னு நெனப்ப என்று பாமரன் கேட்கும் அளவுக்கு நடிப்பு என்றால் அது சிவாஜி ஒருவர் தான் என்பது என்றும் உள்ள உலக நியதி...!

    தமிழருவி மணியன் ஒன்றை உணரவேண்டும்...இவர் கூறிய படங்கள் மற்றவர் செய்தால் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள்...கதையில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கும். காஞ்சி தலைவன் நடிகர் திலகம் நடித்திருந்தால் emotional காட்சிகள் இன்னும் ஒரு படி கூட இருந்திருக்கும் நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு...போர்கள காட்சி மட்டுமே இருந்திருக்கும் ! அதே போல மதுரை வீரன் படத்திலும் நடிப்புக்கு scope இன்னும் அதிகபடுத்த பட்டிருக்கும் ! நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் பேசப்பட்டிருக்கும் ஒரு படத்தினை பற்றி பேச்சை விட ஒரு படி மேல் அந்த பேச்சு எழுந்திருக்கும்...

    ஆகவே...இவர் அதை செய்திருக்க முடியாது...அவர் இதை செய்திருக்க முடியாது என்பது ஒரு தவறான வாதம். நடிகர் திலகத்தால் சண்டைகாட்சியில் சோபிக்க முடியாது என்றொரு காலத்தில் கூறினார்.
    அவர் அதை பல படங்களில் அந்த எண்ணம் தவறு என்று நிரூபித்துள்ளார். உதாரணம் தங்கச்சுரங்கம், சிவந்த மண், ராஜா இன்னும் பல படங்கள்...அவை அனைத்தும் சிறந்த வெற்றிப்படங்களாக உலா வந்தன !

    நடிப்பு என்ற வட்டத்தில் மட்டும் நடிகர் திலகம் இருந்ததில்லை...! அனைத்து விஷயங்களையும் செய்துள்ளது பலர் இன்றும் மறைக்க பார்ப்பது தவறான ஒரு செய்கையாகும் !

    ஒரு பாடல்கூட இல்லாமல் ஒரு படத்தில் நடிப்பால் மட்டுமே வெற்றி பெற வைக்க முடியுமா நடிகர்களால் ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

    சண்டை காட்சிகள் இல்லாமல் நடிப்பை பிரதானமாக கொண்டு ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியுமா நடிகர்களால் ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

    கதா நாயகி மையம் கொண்ட கதைகளில் நடித்து, அதனை தன்னுடைய நடிப்பால் வெற்றி பெற வைக்க முடியுமா நடிகர்களால் ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

    பொழுது போக்கு அம்சம் துளி கூட இல்லாமல் ஒரு படத்தை நடிப்பால் மட்டும் தூக்கி நிறுத்தி வெற்றியடைய செய்ய முடியுமா ? - நடிகர் திலகம் செய்துகாட்டியுள்ளார் !

    தமிழருவி மணியன் இதையும் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம் !
    Last edited by RavikiranSurya; 11th October 2014 at 03:59 PM.

  5. Likes kalnayak, Russellmai liked this post
  6. #2093
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a recap from Saradha Madam old post

    "சுமதி என் சுந்தரி"

    (A MOVIE... FRAME BY FRAME FOR FANS)

    ** இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தபடம்.

    ** 1970ல் வந்த 'பாதுகாப்பு' படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இருதுருவம், தங்கைக்காக,அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசைகட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.

    ** சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றியபடம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் 'முதல் சாய்ஸாக' தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக்கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.

    ** 'நடிகர்திலகத்தின் படங்களைக் காணச்செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி பேசிய தறுக்கர்களின் முகத்தில் கரியைப்பூசிய படம்.

    ** கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத்துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்தபோதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம். ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.

    இளைஞர்களைக்கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் 'ஆலயமாகும் மங்கை மனது' பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. 'என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா?. அப்படீன்னா இந்தப்படத்திலும் நடிகர்திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?' என்று மனம் சோர்ந்துபோகும் நேரத்தில் தான், பாடிக்கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து 'ஸாரி' என்று சொல்லி விட்டு, மீண்டும் 'கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு' என்று தொடரும்போது, 'அடடே இது ஏதோ வேறே' என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் "கட்" என்று சொல்லி விட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, 'அடடே ஷூடிங்தான் நடந்ததா' என்று நாம் ஆசுவாசப்பட.... ("யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”). கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்...

    தேயிலை எஸ்டேட்டில், , கொழு கொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், 'பிங்க்'கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க்கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான 'நடிகர் திலகம்' அறிமுகம்.

    (ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர்திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, 'எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்' என்று கணக்குப்போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர்திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். 'கலாட்டா கல்யாணத்'தில் துவங்கினாய், 'சுமதி என் சுந்தரி'யில் அதை முழுமையாக்கினாய். 'ராஜா'விலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்).

    காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது (நடிகர்திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.

    ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு... இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.

  7. Likes Russellmai liked this post
  8. #2094
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    "சுமதி என் சுந்தரி" (part - 2)

    பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக்கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச்செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் 'டச்சப்' பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப் பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்..??) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க... ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.

    பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சுவாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப்பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் 'சு' வரையில் வந்துவிட்டு சட்டென்று 'சுந்தரி' என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை 'சு..சுந்தரி' என்று அழைப்பார்).

    பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்மசங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில்பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப்போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்து விட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க.... அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.

    ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைபோலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், 'ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்' என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப்பார்த்து, 'இவரைப்பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?' என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக்காட்ட, பயந்துபோன வி.கோ. 'அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்' என்று ச்மளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).

    ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச்செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக்காட்டி விவரத்தைச்சொல்ல..... மதுவின் தலையில் பேரிடி.

  9. Likes Russellmai liked this post
  10. #2095
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    சுமதி என் சுந்தரி" (part – 3)

    'இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?' என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் 'நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப்போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப்போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்துகொண்டு வாழப்போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக்கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப்போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) "மதூ...." என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப்பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடிவரும் சுமதியப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடிவர... படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த humming இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடிவரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக.... திரையில் 'வணக்கம்'.

    வரிசையாக நடிகர்திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப்புர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த 'சுமதி என் சுந்தரி'. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப்புத்தாண்டு) வெளியான 'பிராப்தம்' (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.

    அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்னத்தில்
    அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக்கவரும் எல்லா அம்சங்களும்.
    அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
    அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ 'ஆறிலிருந்து அறுபது வரை'.
    (நடிகர்திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப்பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).

    மெல்லிசை மன்னரின் மனதைக்கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல்காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் "ஆலயமாகும் மங்கை மனது" பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் 'ஷெனாய்' கொஞ்சும்.

    படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் "எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும்.. வருவது என்ன வழியோ" ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)

    எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டி.எம்.எஸ்., ஈஸ்வரி பாடும் "ஏ புள்ளே சஜ்ஜாயி" பாடலில் நடிகர்திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக்கொள்ள... நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த ladies chorus humming)

  11. Likes Russellmai liked this post
  12. #2096
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    சுமதி என் சுந்தரி" (part – 4)

    எஸ்டேட்டை சுற்றிப்பர்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றிபாடும் "ஓராயிரம் பாவனை காட்டினாள்" பாடலில் துவக்கத்தில் வரும் சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித்த்ள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ன அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப்படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ். காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).

    வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர்திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச்செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத்தனிமை பாடலுக்கு என்ன குறை?. "ஒருதரம் ஒரேதரம்... உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்" பல டூய்ட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டி.எம்.எஸ்., சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.

    கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு "கல்யானச்சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது" சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் "ஆயிரம் நிலவே வா"வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர்திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது "பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ" என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 'டாப் டென்' பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர்திலகம் மற்றும் அழகான கலைச்செல்வி.... மொத்தத்தில் அழகு.

    இப்பாடலில் நடிகர்திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். (இந்த த்ரெட்டில் கூட, அன்றைய இளைஞர்களான முரளி, பாலாஜி போன்றோர் தங்கள் அனுபவத்தைச் சொல்லியிருந்தனர்). அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச்சுட்டிக்காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.

    பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், (humming) என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்.

    தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. ('தரையோடு வானம் விளையாடும் நேரம்' என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)

    இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப்பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் 'சிவாஜி ரசிகர்களின் டார்லிங்'. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.

    உண்மையில் இந்தக்கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக்காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர். 'சுமதி என் சுந்தரி' படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

  13. Likes Russellmai liked this post
  14. #2097
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்ளலாம் நமக்கு.

    நடிப்பை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதவர்களைஎல்லாம் மிகை நடிப்பு, இயற்க்கை நடிப்பு, மித நடிப்பு என்று பேசுகிற அளவிற்காவது நடிப்பின் தரத்தை பிரித்து பார்க்கும் நிலைமைக்கு உயர்த்திய பெருமை நமது நடிகர் திலகத்தையே சாரும்.

    என்ன..... அப்படி எழுதுபவர்கள் அறிந்தாலும் அறியாதது போல, புரிந்தாலும் புரியாதது போல பாசாங்கு செய்வது ஒரு விஷயம்... அது என்னவென்றால், நடிகர் திலகம் மிகை நடிப்பு, மித நடிப்பு, இயற்க்கை நடிப்பு, ஆக்ரோஷ நடிப்பு, அமைதி நடிப்பு இப்படி இன்னும் இவர்கள் என்ன வகையை கண்டுபிடிக்கிறார்களோ அவை அத்தனையும் செய்து காட்டியவர் என்பதுதான் !

    ஆனால் பல இயற்க்கை நடிகர்கள் அந்த இயற்கையை விட்டால் ஒன்றும் தெரியாத காரணத்தால்தான் உலக மக்களிடையே நடிப்புக்கு பெயர் பெற்று விளங்க முடியவில்லை.

    ஒருவன் மற்றவர்களுக்கு இடையில் பாசாங்கு செய்தால் அதை மற்றவர் கண்டுபிடிக்கும்போது......ஏண்டா இப்புடி நடிக்கற ...மனசுல பெரிய சிவாஜின்னு நெனப்ப என்று பாமரன் கேட்கும் அளவுக்கு நடிப்பு என்றால் அது சிவாஜி ஒருவர் தான் என்பது என்றும் உள்ள உலக நியதி...!

    தமிழருவி மணியன் ஒன்றை உணரவேண்டும்...இவர் கூறிய படங்கள் மற்றவர் செய்தால் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள்...கதையில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கும். காஞ்சி தலைவன் நடிகர் திலகம் நடித்திருந்தால் emotional காட்சிகள் இன்னும் ஒரு படி கூட இருந்திருக்கும் நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு...போர்கள காட்சி மட்டுமே இருந்திருக்கும் ! அதே போல மதுரை வீரன் படத்திலும் நடிப்புக்கு scope இன்னும் அதிகபடுத்த பட்டிருக்கும் ! நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் பேசப்பட்டிருக்கும் ஒரு படத்தினை பற்றி பேச்சை விட ஒரு படி மேல் அந்த பேச்சு எழுந்திருக்கும்...

    ஆகவே...இவர் அதை செய்திருக்க முடியாது...அவர் இதை செய்திருக்க முடியாது என்பது ஒரு தவறான வாதம். நடிகர் திலகத்தால் சண்டைகாட்சியில் சோபிக்க முடியாது என்றொரு காலத்தில் கூறினார்.
    அவர் அதை பல படங்களில் அந்த எண்ணம் தவறு என்று நிரூபித்துள்ளார். உதாரணம் தங்கச்சுரங்கம், சிவந்த மண், ராஜா இன்னும் பல படங்கள்...அவை அனைத்தும் சிறந்த வெற்றிப்படங்களாக உலா வந்தன !

    நடிப்பு என்ற வட்டத்தில் மட்டும் நடிகர் திலகம் இருந்ததில்லை...! அனைத்து விஷயங்களையும் செய்துள்ளது பலர் இன்றும் மறைக்க பார்ப்பது தவறான ஒரு செய்கையாகும் !

    தமிழருவி மணியன் இதையும் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம் !
    அன்பு ரவி கிரண் சார்

    தமிழ் அருவி மணியன் என்ன சொன்னார் என்பதையும் quote இல் கொடுத்து இருக்கலாமே . கொடுத்து இருந்தால் உங்கள் பதில் உடன் சேர்த்து படிக்கும் போது இன்னும் சுவையாக இருந்து இருக்குமே என்பதால் தான்
    gkrishna

  15. #2098
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நாளை 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில்
    நடிகர் திலகத்தின் 99வது திரைக்காவியம் ...

    முரடன் முத்து

    திரையிடப்படுகிறது.



    இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று VENTRILOQUISM எனப்படும் பொம்மைக் குரல் வித்தை நிகழ்ச்சி. குழந்தைகளுக்காக இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்ட சிறப்பம்சமாகும். இதை இங்கு குறிப்பிடக் காரணம், பின்னாளில் வெளிவந்த படத்தில் தான் இது முதலில் இடம் பெற்றதாக ஒரு செய்தி பரவியிருப்பதால். எதிலும் முதல்வர் நடிகர் திலகம் மற்றும் அவருடைய படங்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

    முரடன் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற Ventriloquism நிகழ்ச்சியின் நிழற்படம்

    Last edited by RAGHAVENDRA; 11th October 2014 at 06:28 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks sss thanked for this post
    Likes sss liked this post
  17. #2099
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ... நாஞ்சில் இன்பா அவர்களுடைய முகநூல் பக்கத்திலிருந்து...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. #2100
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள் - என்
    மன்னவர்க்கோ தினமும் திருநாள்...


    - ஆம்.. கதிரவன் தோன்றி மறையும் ஒவ்வொரு நாளும் உலகெங்கும் தமிழ் மக்கள் பார்த்து ரசிக்கும் முகம்.. தொலைக்காட்சிகளில் அன்றாடம் இடம் பெறும் புன்னகை தவழும் மதிமுகம்..

    தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது..

    சன்லைஃப் தொலைக்காட்சியில் ... பரீட்சைக்கு நேரமாச்சு
    முரசு தொலைக்காட்சியில்... தீர்ப்பு

    அந்த மதிமுகத்தின் மற்றோர் வெற்றித் திரைக்காவியம்..


    அறிவாளி...
    நாளை 12.10.2014 ஞாயிறு காலை 11.00 மணிக்கு சன் லைஃப் தொலைக்காட்சியில்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •