Page 247 of 400 FirstFirst ... 147197237245246247248249257297347 ... LastLast
Results 2,461 to 2,470 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2461
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    The Hindu
    Blast from the past: Paavai Vilakku 1960

    RANDOR GUY

    Sivaji Ganesan, ‘Sowcar’ Janaki, M.N. Rajam, Pandari Bai, Sandhya, Asokan, K. Sarangapani, ‘Kumari’ Kamala, Lakshmi Prabha, C.K. Saraswathi, A. Karunanidhi, T.P. Ponnusami Pillai, V.K. Ramasami, C.T. Rajakantham, Mohan, K.R. Chellam, P.S. Sivabhagyam, Sayeeram, Sethupathi, Radhabai and ‘Baby’ Vijaya.

    Akilan (P.V. Akilandam, 1922-1988) was hailed as one of the greatest Tamil writers, whose fame spread across the globe. His works have been translated into many languages, including Czechoslovakian, Russian, French and Japanese. He has published 45 books on a variety of subjects, most of them rated as classics. He has won several awards for his novels, short stories and other writings. He gave up studies to join the Freedom Struggle and later the Railway Mail Service. Then he joined the All India Radio (AIR) where his creative talents began to blossom. Soon he became a top writer, producing an enormous body of work in varying genres, which won him international recognition.

    Kayalvizhi was a historical novel of his, which was made into a movie titled Maduraiyai Meetta Sundarapandian, directed by MGR who also played the lead in it. Paavai Vilakku is another immortal classic of Akilan, which was produced as a movie by editor T. Vijay and Coimbatore-based cinematographer V.K. Gopanna. The novel appeared at first as a successful serial in the Tamil magazine Kalki and attracted wide attention. It was scripted by noted writer, director, and Tamil cinema icon A.P. Nagarajan. The film was directed by K. Somu, who had worked with the American Tamil filmmaker Ellis. R. Dungan.

    Paavai Vilakku was produced at Film Centre and Vauhini Studios, both of which sadly do not exist today. The film has many songs, and dance numbers executed by the legendary Bharatanatyam dancer ‘Kumari’ Kamala who also plays a major role in the movie. The lyrics were by A. Marudhakasi, except one song by Subramania Bharathi. K.V. Mahadevan composed the music.

    Well-known singers C.S. Jayaraman, P. Susheela, Sulamangalam Rajalakshmi, and L. R. Easwari lent their voices. Interestingly, there was also a nagaswaram interlude by Karukurichi Arunachalam and his party.

    The highlight of the song ‘Vanna Thamizh penn oruthi en ethiril vandhaal....’ is that the opening line is uttered by Sivaji Ganesan, before playback singer C.S. Jayaraman takes over. This was a novel attempt in Tamil cinema then and the way Sivaji says the lines made the song a hit.

    The film has a novel beginning. Sivaji sits in a park with his friends, credited in the titles as guest artistes K. Balajee, Prem Nazir, Sriram and M.R. Santhanam. Holding a copy of the novel Paavai Vilakku in his hands, Sivaji talks about its greatness to his friends, and then begins to read it.

    Now the film cuts to the beginning of the story in which he plays the hero. The heroine is Sowcar Janaki, the woman he marries, and they have a child Kalyani. Kumari Kamala is a dancer to whom the hero is attracted, but for many reasons they do not marry because he already has a wife. Pandari Bai, a young widow, is also drawn to him, but she begins to treat him as her brother. M.N. Rajam is another young woman who stays with the married couple and brings up the child as her own. She too falls in love with the hero, but cannot marry him. An accident on the steps of the hero’s house ends in the death of the child. Rajam for obvious reasons is not informed of the child’s death. Later she too meets with a similar accident and when she comes to know the shocking secret about the child, she dies in the arms of her friend Janaki and the hero surrounded by all the relations…

    As the story was serialised in a weekly magazine, it had many twists and turns, and the movie is also not easy to narrate in detail.

    As usual, Sivaji came up with an excellent portrayal, well supported by Sowcar Janaki, Rajam, and Kumari Kamala.

    Despite the popularity of the novel, brilliant writing for the screen by A.P. Nagarajan and fine performances, the film did not do well at the box office.

    Remembered for: the pleasing music, songs, dance numbers by Kumari Kamala and excellent performances by veteran artistes.

    http://www.thehindu.com/features/cin...cle6533208.ece
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #2462
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Webdunia Tamil

    திருடனோ, போலீசோ அந்த கதாபாத்திரம் எந்த வகையான பிம்பத்தை உருவாக்குகிறது என்பதுதான் முக்கியம். இங்கே இரண்டுவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர்கள். சிவாஜி கணேசன் அப்படிதான் நடித்தார். திருடன் என்றால் அவர் திருடனாகதான் இருப்பார். போலீஸ் என்றால் போலீஸ்.

    ஆனால் இன்னொருவகை நடிகர்கள் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மாதிரி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவர்களைக் குறித்த சூப்பர் ஹீரோ இமேஜைதான் அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தும். திருடனாக இருந்தாலும், கலெக்டராக இருந்தாலும். நல்லவனாக இருக்கும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும், எதிரிகளை அழிக்கும், மக்களையும் நாட்டையும் காப்பாற்றும்.

    தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் இந்த சூப்பர் ஹீரோ இமேiஜ தாண்டி ஏதாவது கதாபாத்திரம் செய்திருக்கிறார்களா? திருடனாக இருந்தாலும் போலீசாக இருந்தாலும்? சிவாஜி கணேசன் மாதிரியான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவரை நடிகராக மட்டுமே பார்த்தனர். கட் அவுட் கலாச்சாரத்தைத் தாண்டி அரசியலுக்கு வந்த போது அவர் தோற்றுப் போக அதுதான் முக்கிய காரணம்.

  5. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #2463

  7. Thanks Russelldwp thanked for this post
  8. #2464
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    There is a nice photograph of NT with Kaml,Rajini and Prabhu at Vellore Vishnu Theatre in one of

    the refreshment stall. If anyone visits this theatre can see the photo.

  9. Thanks Russelldwp thanked for this post
  10. #2465
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamalar Vaara Malar

    பதிவு செய்த நாள்
    26அக்
    2014
    00:00
    என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு, ' பிரமோஷன்' கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; இரண்டு, 'பிரமோஷன்' கிடைத்தால், அது ஆண் வேடமாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ பெண் வேடம்; அதுவும் கொஞ்சம் பெரிய வேடம் என்பது தான் திகைப்புக்குக் காரணம்.
    பெரிய வேடம் என்றால், என்ன வேடம்?
    சீதையாக இருந்த நான், சூர்ப்பனகையாக்கப் பட்டேன்!
    ராமாயணத்தில் சீதையைவிட, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமல்ல சூர்ப்பனகையின் வேடம்!
    ஆனால், என்னைப் பொறுத்தவரை, சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். காரணம், அதுவரை, ராமாயணத்தில் நான் போட்டது, கன்னி மாடத்து சீதை; மூன்றே காட்சிகள்தான் வரும் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் திறமையைக் காட்டவோ, பார்வையாளர்களை கவரவோ அதிக சந்தர்ப்பம் இல்லை.
    ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி அல்ல, அழகு சுந்தரியாக அவள் வந்து, லட்சுமணனை மயக்க ஆடி, பாட வேண்டும்; அவனுடன் கொஞ்ச வேண்டும்; கடைசியில், லட்சுமணனிடம் மூக்கறுபட்டு, கோபத்துடன் செல்ல வேண்டும்; ஆடல், பாடல், காதல், கோபம் - இப்படி எல்லாம் நிறைந்த வேடம் அது!
    'நல்ல வேடம் எது?' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சீதையைவிட, சூர்ப்பனகை வேடமே பெரிது என்று தோன்றியது. அதனால் தான் சூர்ப்பனகையின் வேடத்தை எனக்கு தரப்போவதாக சொன்ன போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
    சாதாரணமாக, மூக்கும் முழியுமாக சிறிது லட்சணமாக இருக்கும் நடிகர்களுக்குத்தான் சூர்ப்பனகை வேடம் தரப்படும். எனவே, கம்பெனியின் பார்வையில், நானும் ஒரு அழகனாக கருதப்பட்டிருந்ததை எண்ணியபோது எனக்குப் பெருமையாகவே இருந்தது.
    நான் சூர்ப்பனகையாக நடித்த போது, லட்சுமணனாக துறையூர் நடராஜன் நடித்தார். அவருக்கு கண்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்; அதனால் அவரை, முண்டக்கண் நடராஜன் என்று அழைப்போம்.
    லட்சுமணனை மயக்குவதற்காக, கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து, பாட ஆரம்பித்தால் போதும்... அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே, 'அப்ளாசு'ம், 'ஆகா'வும் கொட்டகையில் எழும்!
    என் வாத்தியாருக்கு இதையெல்லாம் கண்டு ரொம்பவும் சந்தோஷம்; என் மீது கொஞ்சம் அதிகமாகவே பிரியம் வைக்க ஆரம்பித்தார்.
    அந்த பிரியத்தில் தான், 'அபிமன்யு சுந்தரி, பம்பாய் மெயில் மற்றும் வேதாள உலகம்' போன்ற நாடகங்களில் கதாநாயகியின் வேடம் கொடுத்து, அவற்றிற்கான பாடங்களை படிக்க வைத்து, அந்த வேடங்களை ஏற்று நடிக்க, எனக்கு சந்தர்ப்பம் தந்தார்.
    இந்தப் பாடங்களை எல்லாம் பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து விட்டேன்.
    பொதுவாகவே, நாடகக் கம்பெனிகளில் அப்போது ஒரு பழக்கம் உண்டு; முக்கிய நடிகர்கள் என்று சொல்லப்படுவோர் அனைவரும், அந்த நாடகக் கம்பெனி நடத்தும் நாடகங்களில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் வசனத்தையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திலாவது, வழக்கமாக ஒரு வேடத்தைச் செய்பவர், அதைச் செய்ய இயலாமல் போய்விட்டால், நாடகம் நின்றுவிடக் கூடாதல்லவா? உடனே, யாராவது ஒருவர், அந்த வேடத்தில் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னேற்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
    இந்த ஏற்பாட்டின்படி, நானும் எல்லா முக்கிய வேடங்களின் பாடங்களையும் படித்து, மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
    சுருங்கச் சொல்வதானால், பெரும்பாலான நடிகர்களுக்கு, ஒவ்வொரு நாடகமும் அப்படியே மனப்பாடம் ஆகி இருக்கும்.
    ஒவ்வொரு ஊராகச் சென்று முகாமிட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்கள் முதல் முக்கிய நடிகர்கள் வரை, முதல் வேலையாக அந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களை, பெரிய அதிகாரிகளை தெரிந்து, அவர்களது வீட்டிற்கு நேரில் போய் பார்ப்பர்.
    'நாங்கள் உங்கள் ஊருக்கு நாடகம் நடத்த வந்திருக்கிறோம்; உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து எங்களை ஊக்கப்படுத்தி, கலையை வளர்க்க வேண்டுகிறோம்...' என்று பெண் வீட்டார், சம்பந்திகளை அழைப்பது போல அழைப்பர். இதனால், ஒவ்வொரு ஊரிலும் முகாமிடும்போது, அவ்வூரிலுள்ள முக்கியமானவர்களுக்கும், கம்பெனிகளுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு விடும்.
    ஊர்ப்பெரியவர்களும், கம்பெனியில் உள்ளவர்களைக் கவுரவப்படுத்தும் வகையில், தங்கள் வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து, பரிசுகளும் கொடுத்து அனுப்புவர்.
    அந்த மாதிரி விருந்துகளுக்கு போவதென்றால், எங்களுக்குத் தனி, 'குஷி!'
    திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்த போது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
    திண்டுக்கல்லின் புகழை, தமிழ்நாடெங்கும் பரப்பியவர்களில், 'அங்கு விலாஸ்' புகையிலை நிறுவனரும் ஒருவர். அதன் உரிமையாளர் முத்தையா பிள்ளை, எங்கள் கம்பெனி நாடகங்களைப் பார்த்து, பெரிதும் மனமகிழ்ந்து, மேடைக்கு முன் தொங்க விடுவதற்காக, பெரிய திரைச் சீலை ஒன்றை பரிசளித்தார். வெள்ளிச் சரிகையும், ரங்கூன் டைமண்ட் கற்களும் கொண்டு, சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, கவர்ச்சியுடன் விளங்கிய அந்தப் படுதாவின் விலை, அப்போதே பல ஆயிரம் ரூபாய் இருக்கும்.
    அது மட்டுமல்ல, அவரது வீட்டுக்கு எங்கள் எல்லாரையும் அழைத்துச் சென்று, ஒரு பெரிய விருந்து அளித்தார். பின்னர் வேட்டி, பைஜாமா, ஜிப்பா என்று கம்பெனியிலிருந்த நடிகர்களுக்கு புது உடைகளையும் பரிசளித்தார்.
    கம்பெனி நடிகர்களில், அவர்களது அனுபவத்திற்கும், அவசியத்திற்கும் ஏற்ப விடுமுறை தரப்படும்.
    ஒரு சமயம் கம்பெனியில் இருந்த காக்கா ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு போய் வந்தார். திரும்பி வந்தபோது என்னை தனியே அழைத்து, என் அண்ணன் திருஞானசம்பந்தமூர்த்தி தவறி விட்ட சோகச் செய்தியைச் சொன்னார்.
    அவர் இறப்பதற்கு முன்தினம், அவர் பக்கத்திலேயே காக்கா ராதாகிருஷ்ணன் படுத்திருந்ததாகவும், என்னைப் பற்றியும், என் கம்பெனி வாழ்க்கையைப் பற்றியும், அக்கறையுடன் அவர் விசாரித்தாக கூறினார். இதைக் கேட்டதும் நான் இடிந்து போய், கண்ணீர் விட்டேன்.
    அன்று பூராவுமே, என் மனம் ஒரு நிலையிலும் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
    வீட்டிலுள்ளவர்களைப் பார்க்க வேண்டும்; அதுவும் உடனடியாகப் போய் என் தாயார், அண்ணன், தம்பி, ஏன் எல்லாரையும் கண்டு பேசிவிட்டு வர வேண்டும் என்ற ஒரு ஆசை, ஏக்கம் என் நெஞ்சில் பீறிட்டு எழுந்தது.
    பிரிவின் வேதனையை, என் மனம் மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
    ஆனால், எப்படி, எதைச் சொல்லி விடுமுறை வாங்குவது என நினைத்த போது, கூடவே அந்த பயமும் பிடித்துக் கொண்டது.
    — தொடரும்.
    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,

  11. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #2466

  13. Thanks Russelldwp thanked for this post
  14. #2467
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அந்த நாள்’ படத்தில் சிவாஜி நடித்ததன் பின்னணி

    வாசன் ‘ஞானசவுந்தரி’ படத்தை எரித்தது போன்றதொரு சம்பவம் ஏவி.எம்.மிலும் நிகழ இருந்தது. 1954–ல் கொல்கத்தாவில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை கதாநாயகனாக வைத்து, பாடல், நடனம் இரண்டும் இல்லாமல் முதன் முதலாக ஏவி.எம்.மில் எஸ்.பாலசந்தர் ஒரு படத்தை இயக்கினார். பாதி வரையில் வளர்ந்த நிலையில் அதைப்பார்த்த செட்டியார் திருப்தி இல்லாமல் சிவாஜிகணேசனை வைத்து மீண்டும் ‘ரீ ஷூட்’ பண்ண வேண்டும் என்று விரும்பினார்.

    டைரக்டர் மறுத்தார். உடனே செட்டியார், தயாரிப்பு நிர்வாகியான வாசுமேனனிடம் பாலச்சந்தருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிச் சம்பளப்பணத்தைக் கொடுத்துக் கணக்கை முடித்துவிட்டு அதுவரையில் எடுத்திருந்த மொத்த ரீல்களையும் கொண்டு வந்து தனக்கு எதிரே வைத்துக் கொளுத்திவிடும்படிக் கூறினார்.

    இதைக் கேட்ட எஸ். பாலசந்தர் வெலவெலத்துப்போய், ‘‘வேண்டாம், நான் எடுத்த படத்தை என் கண் முன்னே கொளுத்தவேண்டாம். உங்கள் விருப்பப்படியே சிவாஜிகணேசனை வைத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் மீண்டும் எடுக்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்ட£ர். இதன் பேரில் அந்த நெருப்பு நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டு மறுப்படப்பிடிப்பு நடைபெற்றது.

    அந்தப்படம்தான் சிவாஜிகணேசன் நடித்து ஜாவர்சீதாராமன் வசனம் எழுதி, எஸ்.பாலசந்தர் கதை எழுதி இயக்கி 1954 தமிழ்ப்புத்தாண்டு நாளில் (13.4.1954) வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட ‘‘அந்த நாள்!’’

  15. Likes Russellmai liked this post
  16. #2468
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Mr Raghavendra

    Dance Genius V.P. Dhananjayan on Nadigar Thilagam

    இரா. மகாதேவன் எழுதிய, செவாலியே சிவாஜிக்கு ஆஸ்காரும் வரும்
    என்ற நூலிற்கு நாட்டிய மேதை திரு. வி.பி. தனஞ்ஜெயன் அளித்துள்ள அணிந்துரையிலிருந்து-

    பாரத கலைகளுக்கெல்லாம் அடிப்படையாய்த் திகழ்வது "நாட்டிய சாஸ்திரம்".

    இந்த நாட்டிய சாஸ்திரத்தின் ஒரு முக்கிய பிரிவு பரத நாட்டியக் கலை!

    இந்த பரதக் கலையின் உயிர் மூச்சாய்த் திகழ்வது "அபிநயம்". பரதத்தின் அடிப்படையான, ஆதாரமான கலைநுட்பமாகத் திகழ்வது இந்த அபிநயம் தான். இதனையே பரதத்தின் உயிரோட்டம் என்றும் வர்ணிக்கலாம்.

    பரதக்கலைக்குத் தங்களைப் பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டுள்ள முழுநேர பரத நாட்டியக் கலைஞர்களுக்கே பரிபூரணமாய் வந்து கை கூடாத இறையருள் வித்தை இந்த அபிநயக் கலை!கதகளியில் நிகரற்றக் கலைஞராய் திகழ்ந்த கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஒருவர் மட்டுமே இந்த அபிநயக் கலையில் பூரண சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பரதக் கலைஞர்களுக்கே நிறைவாய்க் கை வராத இந்த அபிநயக் கலை, திரையுலகில் நடிகர் ஒருவரிடம் பரிபூரணமாய்க் குடி கொண்டிருக்கிறதென்றால் அது நடிகர் திலகம் சிவாஜியிடம் தான்!

    உலக அளவில் இது வரை தோன்றியுள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரிடம் தான் இந்த அபிநயக் கலை இத்தனை அற்புதமாய்க் கொலு வீற்றிருக்கிறது!

    முகத்தில் ஆயிரம் வகையான பாவங்களைக் காட்டுவது, விழிகளாலேயே ஓராயிரம் அர்த்தங்களை உணர்த்துவது, உடல் முழுவதும் பல நூறு அபிநயங்களை அங்கங்கள் சித்தரித்துக் காட்டுவது - இவையனைத்தும் சிவாஜி என்னும் நடிப்பு சமுத்திரத்தில் இன்று வரை நாம் கண்டு வந்திருக்கிற, ரசித்து வியந்திருக்கிற நிஜங்களாகும்!

    சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு ... "ஸாகரம் ... ஸாகரோபமம்" என்பார்கள். அதாவது சமுத்திரத்தை சமுத்திரத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பது இதன் பொருள்.

    நடிப்புக் கலையில் சிவாஜி ஒரு சமுத்திரம். உலகம் முழுவதும் இன்று வரை வந்துள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரே நடிப்பில் சமுத்திரம்! இந்தச் சமுத்திரத்தின் முன் பிற நடிகர்கள் எல்லோருமே சாதாரண நதிகள் தான்! ஆலிவுட் நடிகர்களுமே அப்படித்தான்.

    நதிகளை சமுத்திரத்திற்கு இணையாகப் பேச முடியாது!

    ஆலிவுட் நடிகர்களில் ரெக்ஸ் ஹேரிசன், சிவாஜியைப் போல், முகத்தில் பல்வேறு பாவங்களைக் காட்டக் கூடிய நடிகர். ஆனால் அவரும் சிவாஜி என்னும் நடிப்புச் சமுத்திரம் முன் சாதாரண நதிதான் ...

    எந்த வேடமேற்றாலும் அதனை மிகமிக நுணுக்கமாக, மிகமிக ஆழமாக, எந்தவொரு சிறு குணாம்சத்தையும் விட்டுவிடாமல், நிறைவாகச் செய்ய முடிந்தவர் உலகம் முழுமையிலும் சிவாஜிதான் ... IN THIS HE STANDS OUT FROM OTHERS ... இந்தத் தனித்திறமை சிவாஜி ஒருவருக்கே சொந்தம்.

    "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜி நாதஸ்வரம் இசைப்பார். வாசிக்கிற இசையின் சுரங்களுக்கு ஏற்ப அவரது கை விரல்கள், கச்சிதமாக களி நர்த்தனம் ஆடும். எந்த சுரத்துக்கு, எந்த விரல்களை இயக்க வேண்டும் என்பதை அற்புதமாகச் செய்து காட்டிய இசை ஞானம் அந்த வாசிப்பில் பளிச்சிட்டது.

    சிவாஜி போல் உலக மகா கலைஞன் நடிப்பில் யாருமே இல்லை. அவர் அவர்தான். HE IS HIMSELF ... ... A VERSATILE. GENIUS...

  17. Thanks Russelldwp thanked for this post
    Likes Harrietlgy liked this post
  18. #2469
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Mr Raghavendra

    [quote
    Joe வெள் பிப் 16, 2007 7:50 am

    இந்திய திரைப்பட வரலாற்றில் மிக அதிகமான புகழுரைகளையும், அதே அளவிற்கு கடுமையான விமர்சனங்களையும் எதிர் கொண்ட ஒரு நடிகர் உண்டென்றால் அது நமது செவாலியே சிவாஜி கணேசனாகத்தான் −ருக்கும். உலகமே வியந்து போற்றும் அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு, ஒரு முறை கூட தேசிய விருது அளிக்கப்பட்டதில்லை என்பதிலிருந்தே நமது தேர்வுக் குழுவினரின் அணுகுமுறை எத்தகையது என்பது விளங்கும்.

    சிவாஜி −யல்பாக நடிக்காமல், அளவுக்கதிகமாக உணர்ச்சிகளைக் கொட்டுவதாக அவர் மீது குற்றம் சாட்டுபவர்கள், தொன்மையான தமிழ் மொழியின் செறிவு, −இலக்கணம், அதன் கவித்துவ அடிப்படை மற்றும் பிரத்தியேகமான உச்சரிப்புத் தேவை குறித்து அறியாதவர்கள் என்பதில் ஐயமில்லை.

    பெரும்பான்மையினராக விளங்கும் வடக்கத்திய விமர்சகர்கள், மென்மையான உச்சரிப்பு மற்றும் 'கஜல்' பாணி பாடல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் என்பதால், சிவாஜியின் சிம்மக் குரலை அவர்களால் செவிமடுக்க −யலவில்லை என்பதே நிஜம். அதற்காக நமது சிங்கம் கீச்...கீச் என்றா முனக முடியும்?

    அவர் மட்டும் வேற்று மாநிலத்தில் பிறந்து வேற்று மொழியில் நடித்திருந்தால், −இந்தியத் திரையுலகின் ஈடு −இணையற்ற நடிகன் சிவாஜி கணேசன்தான் என்று ஒருமித்த குரலில் எல்லோரும் ஒப்புக் கொண்டிருப்பார்கள்.சிவாஜியின் துரதிர்ஷ்டம் அவர் ஒரு தமிழனாக, தமிழ் நடிகனாக, தமிழ்நாட்டில் 'நடிப்பைக்' கொட்ட வேண்டியிருந்தது.

    கலைக்கு மொழியில்லை என்று வாய் கிழிய கத்துபவர்கள், சிவாஜியின் விஷயத்தில் செவிகளைப் பொத்திக் கொண்டிருந்திருக்கலாம்!.

    நேரு ஒருமுறை எகிப்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். கெய்ரோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து ரசித்துப் புல்லரித்துப் போயிருந்த எகிப்து அதிபர் நாஸர், சிவாஜி குறித்து அன்போடு விசாரித்திருக்கிறார். ஐயகோ... என்ன துரதிர்ஷ்டம், நேரு அவர்களுக்கு சிவாஜி என்றொரு −இந்திய நடிகன்! −இருப்பது குறித்துத் தெரிந்திருக்கவில்லை.

    −இதற்குப் பிராயச்சித்தம் தேடுவது போல, எகிப்து அதிபரின் −இந்திய விஜயத்தின் போது அவரை வரவேற்று உபசரித்து உடன் தங்கியிருக்கும் கவுரவத்தை சிவாஜிக்கு அளித்தார் நேரு.

    சிவாஜிக்காக வாதாடி அவரது நடிப்புத் திறமைக்கு −இனிதான் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அவசியமில்லை. எனினும், தங்கள் திறமைகள் குறித்து பறைசாற்றிக் கொள்ள −இன்றைய கலைஞர்களுக்கு ஏராளமான ஊடகங்கள் மூலமாக வாய்ப்புள்ளதைப் போல், அக்காலத்தில் சிவாஜி போன்ற மகத்தான கலைஞர்களுக்கு −இருந்ததில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அதற்கெல்லாம் அவருக்கு ஏது நேரம்? விடிவதற்கு முன்பே ஒப்பனையை முடித்துக் கொண்டு, அரங்கத்தில் ஆஜராகி, பளீரிடும் விளக்கொளியில் நள்ளிரவு வரை நனைந்தபடி நடிப்பு வேள்வி நடத்தியவரல்லவா அவர்!

    தனது −இயல்பான ஞானம், கற்பனை, படைப்பாற்றல் ஆகியவற்றின் உதவியோடு தான் ஏற்ற கதாபாத்திரங்களை நம் கண்களின் முன்பாக உயிர்ப்போடு உலவ விட்ட உன்னதக் கலைஞரல்லவா அவர்! கன்னத்துத் தசைகள் முதல் காது மடல் வரை ஆயிரம் கதை சொல்லும் வகையில் அசைக்கத் தெரிந்த அவர் முன் நிற்க யாரால் முடியும்?

    விமர்சகர்கள் பலரும், சிவாஜியை 'ஸ்டைலான' நடிகனாக ஏற்றுக் கொண்டதேயில்லை. சிவாஜியும் என்றுமே இது குறித்தெல்லாம் அலட்டிக் கொண்டதேயில்லை. சிவாஜிக்கு அவரது வரம்பு நன்கு தெரியும். நடையில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளைக் காட்டி ரசிகர்களை வசீகரித்த அவரது 'ஸ்டைல்' வேறு எந்த நடிகனுக்கும் கால்வராது! என்று அடித்துச் சொல்லலாம்.

    'திருவிளையாடல்' - மிடுக்கான நடை, 'சரஸ்வதி சபதம்' - அதீத தன்னம்பிக்கை காட்டும் நடை, திருவருட்செல்வரின் பணிவான நடை, 'நவராத்திரி' கோடீஸ்வரரின் செருக்கான ஆணவ நடை , 'தங்கப்பதக்கத்தின்' தனி நடை! என்று சொல்லிக் கொண்டே போகலாம். பாலும் பழமும் படத்தில் 'போனால் போகட்டும் போடா...', உயர்ந்த மனிதனில் ' அந்த நாள் ஞாபகம்...' பாடல் காட்சிகளில் அவர் 'வாக்கிங் ஸ்டிக்கை' பிரயோகித்த லாவகம் வார்த்தைகளால் வர்ணிக்க −யலாதது.

    புகைப்பதில் கூட அவர் தனது தனித்தன்மையை நிரூபித்த படங்கள் ஏராளம். 'சாந்தி' திரைப்படத்தில் 'யார் அந்த நிலவு...' பாடலின் ஆக்கத்தின் போது −சையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கலக்கியிருந்தார்கள். பாடல் ஒலிப்பதிவின் போது எப்போதும் உடனிருக்கும் சிவாஜி, இந்த குறிப்பிட்ட பாடல் பதிவின் போது கலந்து கொள்ளவில்லை. பாடல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட சிவாஜி, படமாக்கத்தின் போது மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளும்படி இயக்குனர் கே.சங்கரை கேட்டுக் கொண்டார். சிவாஜி எப்படி அந்த பாடல்காட்சியில் நடிக்கப் போகிறார் என்று இசைக் கூட்டணி ஆவலோடு காத்திருந்தது.

    படம் வெளியாகி, அந்தப் பாடல் காட்சியைப் பார்த்த மூவரணி மூர்ச்சித்தது என்றால் அது மிகையல்ல. பாடல் முழுவதும் ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி வெகு அலட்சியமாக நடித்து ரசிக இதயங்களைக் கொள்ளை கொண்டார் சிவாஜி. மூவரணியும் தங்கள் தோல்வியை சந்தோஷமாக ஒப்புக் கொண்டது.

    புதியபறவை ('பார்த்த ஞாபகம் இல்லையோ...'), பார் மகளே பார், ஞான ஒளி, கவுரவம், பலே பாண்டியா திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளை சிவாஜி வெகு மிடுக்காகக் கையாண்டதை எப்படி மறக்க முடியும்? 'ஆண்டவன் கட்டளை'யில் பட்டாணி சாப்பிடும் காட்சி, 'அந்த நாள்' திரைப்படத்தின் விதம் விதமான சிரிப்புகள்! என்று சொல்லிக் கொண்டே போகலாம். தாம் கண்ட காட்சிகளை மனதில் பதிய வைத்து, தனது கற்பனை வளத்தால் அவற்றை மெருகேற்றி, தான் ஏற்ற கதாபாத்திரங்களில் அவற்றை வெகு சிறப்பாக வெளிப்படுத்தும் சிவாஜியின் மேதமை ஈடு இணையற்றது.

    ஆலயமணி, பார்த்தால் பசி தீரும், பாகப்பிரிவினை படங்களில் உடல் ஊனமுற்றவராக சிவாஜி வெளிப்படுத்திய நடிப்புத் திறம் நம்ப முடியாதது. பாகப்பிரிவினை படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட சிறிது நாட்களுக்கு சிவாஜியால் தனது இடது கையை கீழே இறக்க முடியவில்லை என்று பிரமிப்போடு பேசிக் கொள்வார்கள். சிவாஜியின் ஈடுபாடு அத்தகையதாக இருந்தது.

    இசைக் கருவிகளை மீட்டியபடி நடிப்பதில் சிவாஜியை வெல்ல யாரால் இயலும்? −தற்கெல்லாம் உதாரணங்கள் சொல்ல ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது! எம்.ஜி.ஆர் அளவுக்கு தொழில்நுட்ப ஞானம் சிவாஜியிடம் இல்லை என்பார்கள். ஆனால், தனது அனுபவத்தில் அவற்றையும் ஒரு கை பார்த்தவர்தான் சிவாஜி.

    நீ...ளமான வசனங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, காட்சிப்பதிவின் போது அப்படியே மடை திறந்த வெள்ளமென அவர் பேசுவதை 'வாய்பிளந்து' வியப்பார்களாம் சக கலைஞர்கள். இன்றைய டப்பிங் யுகத்தில், பல மாதங்களுக்கு முன்பாக தான் பேசிய வசனத்தை வரி பிசகாமல் அதே ஏற்ற இறக்கங்களோடு சிவாஜியால் திரும்பவும் பேச முடியும் என்பது ஓர் அதிசயமாகத்தான் தோன்றுகிறது. அவரோடு பணி புரிவதென்பதே சக கலைஞர்களுக்கு, குறிப்பாக இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள் போன்றவர்களுக்கு ஒரு பாக்கியமாகவும் சுகானுபவமாகவும் இருந்தது.

    புராண, இதிகாச, வரலாற்றுக் கதாபாத்திரங்களுக்கு சிவாஜியின் நடிப்பு உயிரூட்டியது. கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய பாரதி போன்றவர்களையெல்லாம் நமது கண் முன் உலவவிட்ட சிவாஜியை எப்படி மறக்க முடியும். வேறெந்த நடிகராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒப்பற்ற சாதனைச் சரித்திரங்கள் அல்லவா அவை?

    அவரது திரையுலக வரலாற்றில் பைலட் பிரேம்நாத், ஹிட்லர் உமாநாத், மிருதங்க சக்ரவர்த்தி, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு போன்ற திருஷ்டிப் பொட்டுகளும் உண்டு. அரசியல் சாக்கடையில் குதிக்காமல், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் சிவாஜி இன்னும் ஏராளமாய் சாதித்திருக்க முடியும். அரசியல் அவரை ஏமாற்றினாலும், மக்களின் இதய சிம்மாசனத்தில் அவருக்கு என்றுமே முதல்மரியாதைதான்.

    ஆயிரம் நடிகர்கள் வரலாம்...மறையலாம்; ஆனால், சிம்மக் குரலோன் அவன் ஒருவன்தான். உலகம் உள்ள வரை, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிவாஜியின் நினைவிருக்கும்.

    ராம்.என்.ராமகிருஷ்ணன்

    http://thendral.chennaionline.com/thendral/sivaji.asp[/quote]

    முத்தமிழ் மன்ற வலைப் பதிவில் நண்பர் ஜோ எழுதியது
    (Ref.:http://www.muthamilmantram.com/viewt...646d8f28808919)
    அன்புடன்
    ராகவேந்திரன்

  19. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai, sivaa, Harrietlgy liked this post
  20. #2470
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Mr Joe

    கேள்வி : சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?

    நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

    ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

    மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.

    அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.

  21. Likes sivaa, Harrietlgy, ScottAlise liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •