Page 257 of 400 FirstFirst ... 157207247255256257258259267307357 ... LastLast
Results 2,561 to 2,570 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2561
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Mr Neyveli Vasudevan old post

    சிவாஜியைப் பார்க்க ஆசைப்பட்ட காஞ்சிப் பெரியவர் — வி.என்.சிதம்பரம்

    ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிப் பெரியவர் தாம்பரம் தாண்டி நடந்து போயிருக்கார். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை எதேச்சையா பார்த்ததும் பெரியவாளுக்கு பயங்கர கோபம். தன்னோட உதவியாளர்களை கூப்பிட்டு “எனக்கு விளம்பரம் பண்றது பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே அப்புறம் எதுக்கு என்னோட படத்தை போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கேள்…” என்று கடுமையாக திட்டியிருக்கார். அப்போது “அந்த போஸ்டர்ல இருக்கறது நீங்க இல்லை… சினிமா நடிகர் சிவாஜி ‘திருவருட் செல்வர்‘ படத்துல சாட்சாத் உங்களை மாதிரியே மேக்கப் போட்டுண்டு நடிச்சார். அதைத்தான் நீங்க போஸ்டராக பார்த்து இருக்கேள்…” என்று சொல்ல… திகைத்துப்போன பெரியவாள், ‘நேக்கு சிவாஜியை பார்க்கணும்போல் இருக்கறது அவரை மடத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ…’ என்று தனது விருப்பத்தை தெரிவிச்சார். பெரியவாளை தரிசிக்க எத்தனையோ பேர் காத்துண்டு கிடந்தப்போ சிவாஜியை பார்க்க ஆசைப்பட்டது எவ்ளோ பெரிய புண்ணியம். பெரியவாள் கேட்டுக் கொண்டபடி காஞ்சீபுரம் போய் மடத்துல தங்கி பெரியவாகிட்டே ரொம்பநேரம் மனசுவிட்டு பேசிட்டு வந்தார், சிவாஜி.

    – வி.என்.சிதம்பரம் (நன்றி விகடன்)

  2. Thanks Russelldwp thanked for this post
    Likes ScottAlise liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #2562
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    காஞ்சி பரமாச்சாரியார் பற்றி நடிகர் திலகம்

    ‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார். ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார். ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

    அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

    “ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்“ என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”

    ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .

  5. Thanks Russelldwp thanked for this post
  6. #2563
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    என் உயிரில் கலந்த காட்சி.

    காவியம்: தெனாலிராமன்.

    பாமினி சுல்தானின் கைப்பாவை கிருஷ்ணாவின் (பானுமதி) சூழ்ச்சியான மோக வலையில் சிக்கி நாட்டைக் கவனியாமல் வீழ்ந்து கிடக்கிறார் விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயர் (என்.டி.ராமாராவ்). இதைக் கண்டு வெகுண்டெழுகிறான் ராயரின் அன்புக்கினிய தெனாலிராமன். ராஜாங்க விதூஷகனும் கூட. ராயரின் தவறை சுட்டிக் காட்டுகிறான் அவரிடமே. கிருஷ்ணாவின் மயக்கத்தில் இருக்கும் ராயர் தெனாலி ராமனின் அறிவுரையை அலட்சியப் படுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல் ராயர் ராமனுக்கு மரணதண்டனை அளிக்கவும் தயங்கவில்லை.

    தேசப்பற்று உடைய ராமன் மந்திரியின் (V.நாகையா) துணை கொண்டு கிருஷ்ணாவை நாட்டை விட்டு துரத்த எண்ணுகிறான். ஆனால் நடுவில் ராயர் இருக்கும் போது? ஒரு அருமையான சந்தர்ப்பம் ராமனுக்குக் கிட்டுகிறது. ராயரின் மனைவி (சந்தியா...சாட்சாத் அம்மாவின் அம்மாதான்) ராயரின் செய்கைகளினால் உடல்நலம் குன்றுகிறாள். இதைக் கேள்விப்பட்ட ராயர் தன் அன்பு மனைவியைக் காண விரைகிறார். இப்போது கிருஷ்ணா ராயரின் அந்தப்புரத்தில் தனியாக. வாட்டமான இந்த சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறான் ராமன்.

    நேராக கிருஷ்ணாவிடம் செல்கிறான் ராயர் தன்னைத் தவிர யாரும் அங்கு நுழையக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையையும் மீறி. கிருஷ்ணாவை நாட்டை விட்டுப் போய்விடும்படி எச்சரிக்கிறான். கிருஷ்ணா மசிவேனா என்கிறாள். முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராமன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோபமேறி கிருஷ்ணாவை, அவள் திட்டங்களை தவிடுபொடி ஆக்குகிறான்.

    தெனாலிராமன் படத்தில் வரும் ஒரு அற்புதக் காட்சியமைப்பின் கரு இது.

    இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம்.

    தெனாலி ராமனாக நடிகர் திலகம். கிருஷ்ணாவான பானுமதியின் அந்தப்புரத்தில் நுழைந்து பானுமதியை படிப்படியாய் எச்சரிக்கும் காட்சி.

    என்ன ஒரு அற்புதமான பங்களிப்பு! என்ன ஒரு தெனாவட்டான தொனி! கிருஷ்ணா ராயரில்லாமல் தனியாகத்தான் இருக்கிறாள் என்ற முழு சுதந்திரத்தில் என்ன ஒரு மிரட்டும் தோரணை! அவள் ஆள்மயக்கிதானே என்ற எகத்தாளமான கேலி! நையாண்டியும் கிண்டலும் கொண்ட 'நறுக் நறுக்' வார்த்தைப் பிரயோகம். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கும், மேனாமினுக்கித்தனத்திற்கும் தரும் பதிலடி. நடுவில் சிறிது கெஞ்சல் (உன் எடைக்கு எடை தங்கம் தருகிறோம்... ராயரை விட்டு விடு) இறுதியில் பலமான எச்சரிக்கை.

    அந்தப்புரத்தில் நுழைந்தவுடன் கிருஷ்ணா ராமனிடம் அது முறையற்ற செய்கை என்று கோபப்பட,

    அதற்கு இவர் படு நக்கலாக சிரித்துவிட்டு ,"ஏதோ...முறையான செய்கையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாமென்றுதான் வந்தேன்... ஒழுங்கான உலகத்திற்கு இலக்கணமே தாங்கள்தானே!"

    என்று நையாண்டி தர்பார் நடத்தும் விதம்.

    கிருஷ்ணா, "என்ன கேலியாய் செய்கிறாய்?" என்று வினவ,

    "சேச்சே! அந்தரி...சுந்தரி...நிரந்தரி என்று அரசர் போற்றிப் புகழும் இந்த அற்புத உருவத்தை நானா கேலி செய்வேன்?" என்று சிரித்தபடியே விடும் நக்கல்.

    "உன் புகழ் எனக்குத் தேவையில்லை" என்று பானுமதி கூறும்போது அதை ஏற்றுக் கொள்வது போல "ஆகட்டும்" என்ற தொனியில் ஒரு சிறு தலையாட்டலில் அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடுவார்.

    வாக்குவாதங்கள் தொடரும் போது கிருஷ்ணா தன் அழகில் மன்னர் மயக்கமாய் கிடப்பதற்கு விளக்கமளித்து ராமனிடம்," நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்க,

    அதற்கு நடிகர் திலகம்,"மயங்கிய மன்னரின் முகத்திலே தண்ணீரைத் தெளித்து "எழுந்திரு மன்னவா! என்ன வேண்டியிருக்கிறது காதல்? (இந்த இடத்தில் அவர் காட்டும் முகபாவத்தை எப்படி எழுதுவது?) சூழ்ந்திருக்கிறார்கள் பகைவர்கள்... தூளாக்கப் புறப்படுங்கள்... என்று வாளைக் கொடுத்து வழியனுப்பி வைத்திருப்பேன்" என்று விவேகத்துடன் வீரமுழக்கமிடுவது அட்டகாசம்.

    இறுதியில் "கிருஷ்ணா தேவியாரே! நீங்களாகப் போகிறீர்களா?...அல்லது உங்களைப் போக வைக்க வேண்டுமா?" என்று கைகளைக் கொட்டியபடியே விடும் எச்சரிக்கையில், அந்த சிறிய சிறிய தலைவெட்டுதல்களில் சிகரங்களையெல்லாம் தாண்டி பயணிப்பார். இறுதியில் கைகளால் "எச்சரிக்கை" என்று திரும்பியவாறே வேகமாக நடக்கத் துவங்கும் அழகே அழகு!

    என் உயிரில் கலந்த காட்சி இது...

  7. Thanks Russelldwp thanked for this post
  8. #2564

  9. Thanks Russelldwp thanked for this post
  10. #2565
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    "மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....

    அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....

    "மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....

    "தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...

    "சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...

    "யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,

    "அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி சடேலேன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!

    "கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர ஆனால் ஆழமான
    தேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு 'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)

    இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?

  11. Thanks Russelldwp thanked for this post
  12. #2566
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Mr Neyveli Vasudevan Old Post

    மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
    (வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

    தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?

    தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை

    அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.

    பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.

    நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.

    இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.

    உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .

    ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.

    ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.

    ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.

    ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.

    ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.

    ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்

    இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....

    'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!

    இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!

    அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!

    கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.

    உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!

    உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!

    கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.

    "இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"

    (பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)

  13. Thanks Russelldwp thanked for this post
  14. #2567
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ragulram,

    NT's magnus opus Navarathiri on 16.11.14 on behalf of NTFANS at Russian Centre, Kasturi Rangan Road,Chennai. If your are free make it convenient to attend the

    screening and enjoy with our starwarts.

    This invitation not only to Mr Ragulram but to all our hubbers so that they can plan their travel and watch the movie.

    Regards

  15. Thanks ScottAlise thanked for this post
  16. #2568
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நாய்வாலை நிமிர்த்தினால் கூட தினமலர் திருந்தியதாக சொல்லுவதை எப்போதும் நம்ப முடியாது.

  17. Likes KCSHEKAR liked this post
  18. #2569
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அது வெகு யதார்த்தமாக நிகழ்ந்தது. எவ்வித திட்டமிடலும் இல்லாமல் இது இப்படி வர வேண்டும் என்ற நோக்கில் செயல்படாமல் தானே அமைந்தது.

    அது 1964-ம் வருடம் ஜூன் ஜூலை மாதமாக இருக்கலாம். புதிய பறவை படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோ தளம். நடிகர் திலகத்துடன் விகேஆர் நடித்துக் கொண்டிருக்கிறார் படப்பிடிப்பின் நடு நடுவே ஒரு மனிதர் வந்து போவதை அந்த பிஸியிலும் நடிகர் திலகம் கவனித்து விடுகிறார். கூட நடிக்கும் நண்பரிடம் கேட்கிறார் " என்ன ராமு உன் பழைய பார்ட்னர் எதுக்கு வந்துட்டு வந்துட்டு போகிறான்?". அதற்கு விகேஆர் "என்னை பார்க்க வரலை உங்களைப் பார்க்கத்தான் வந்தாரு" என்று பதில் சொல்கிறார். என்னை பார்க்கவா? எதுக்கு? என்று நடிகர் திலகம் கேட்க உங்களை வைத்து ஒரு படம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் என்று விகேஆர் சொல்கிறார்.

    நடிகர் திலகம் அப்படி கேட்டதற்கு காரணம் இருக்கிறது. படப்பிடிப்பின் இடையே வந்தவர் அருட்செல்வர் ஏ பி நாகராஜன் அவர்கள். நடிகர் திலகத்திற்கும் ஏபிஎன் அவர்களுக்குமான நட்பு என்று சொன்னால் அது நாடக உலகத்திலேயே தொடங்கி விட்டது. நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் நாகராஜன். நடிகர் திலகத்தைப் போலவே அவரும் ஸ்திரீ பார்ட் வேடங்கள் போட்டவர். அப்போதைய பழக்கம் திரையுலகில் வந்த பிறகும் தொடர்ந்தது. நான் பெற்ற செல்வம் படத்திற்கு கதை வசனம் எழுதிய ஏபிஎன் அந்தப் படத்திலேயே பின்னாட்களில் திருவிளையாடல் படத்தில் வந்து புகழ் பெற்ற தருமி episode-ஐ ஒரு ஓரங்க நாடகமாக புகுத்தியிருப்பார். நக்கீரன் சிவபெருமான் என்ற இரண்டு வேடங்களையும் நடிகர் திலகமே ஏற்றிருப்பார். இயக்குனர் கே.சோமு அவர்களிடம் உதவியாளராக இருந்த ஏபிஎன், கே.சோமு இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த மக்களைப் பெற்ற மகராசி மற்றும் சம்பூர்ண ராமாயணம் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இணை இயக்குனராகவும் பொறுப்பேற்றார். விகேஆர் அவர்களுடன் பங்குதாரராக இணைந்து லட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் மக்களைப் பெற்ற மகராசி மற்றும் வடிவுக்கு வளைக்காப்பு ஆகிய படங்களையும் தயாரித்தார். அதில் வடிவுக்கு வளைக்காப்பு படம்தான் ஏபிஎன் முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய படம். அந்தப் படத்திற்கு பின் ஒரு சில கருத்து வேறுபாடுகளினால் விகேஆரும் ஏபிஎன்னும் பிரிந்தனர். அதன் பிறகு ஸ்பைடர் பிலிம்ஸ் சார்பில் குலமகள் ராதை என்ற நடிகர் திலகம் நடித்த படத்தை 1963-ல் இயக்கியிருந்தார்.

    விகேஆர் இப்படி சொன்னவுடன் நடிகர் திலகம் ஏபி நாகராஜனை சந்திக்கிறார். தான் புதியதாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப் போகும் படத்திற்கு கால்ஷீட் வேண்டும் என்று கேட்கிறார் ஏபிஎன். விகேஆரிடம் "ராமு, நாகராஜனுக்கு கால்ஷீட் கொடுப்பதில் உனக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா" என்று கேட்டு அதற்கு விகேஆர் இல்லை என்று சொன்னவுடன் தன் தம்பி வி சி சண்முகத்தை பார்க்குமாறு அனுப்புகிறார்.

    அன்றைய காலம் நடிகர் திலகம் ஏராளமான படங்களில் கமிட் ஆகியிருந்த நேரம். அப்போதுதான் ஏபிஎன் தன் மனதில் நினைத்திருந்த கதையை சொல்கிறார். புதுமையான கதைக்களம். இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒன்று. ஆனால் நடிகர் திலகத்தின் கால்ஷீட் சுத்தமாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது அதற்கு ஏபிஎன் அவர்களே ஒரு யோசனை சொல்கிறார். தான் எடுக்க நினைக்கும் படம் முழுமையாக இரவு நேரங்களில் நடைபெறுவதாக உள்ள கதையமைப்பை கொண்ட படம். ஆகவே night கால்ஷீட் கொடுத்தால் போதும். ஒரு சில நாட்கள் மட்டும் பகல் கால்ஷீட் கொடுத்தால் படத்தை எடுத்து விடலாம் என்ற ஏபிஎன் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன்படி படப்பிடிப்பு துவங்குகிறது.

    எழுத்தாளர் சுஜாதா பாணியில் சொல்லப் போனால் ஒரு ஸ்டாம்ப் பின்னல் எழுதிவிடக் கூடிய கதைதான். தான் காதலிக்கும் நபரைத்தான் தனக்கு மாப்பிளையாக முடிவு செய்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும் நாயகி வெளியில் தங்க நேரும் 8 இரவுகளில் 8 விதமான மனிதர்களை சந்திக்க அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சொன்ன படம். இறுதியில் 9 வது நாளன்று தன் காதலனோடு சேர்கிறாள்.

    நவரசம். அதில் ஒவ்வொன்றையும் நடிகர் திலகம் கையாண்ட முறை இருக்கிறதே, அற்புதம்!.அந்த அற்புதம் காண்பித்த அற்புதராஜ். scene capturing gesture ஆக அந்த தோள் குலுக்கும் ஸ்டைல்-ஐ சொன்னாலும் கூட அந்த பணக்கார கனவான் வேடத்தை கச்சிதமாக செய்திருக்கும் நேர்த்தி. மகள் துள்ளி குதித்து ஓட gently gently என்று விடுக்கும் எச்சரிக்கை கலந்த அக்கறை! முதல் ரோலே மனதில் பதிந்து விடும்.

    அடுத்து பயம். அந்த உணர்வை தன் உடல் மொழியிலே காட்டியிருப்பார். மனதில் இருக்கும் பயம் தெரியாமல் இருக்க மனைவியுடன் பேசினதை சத்தம் போட்டு சொல்லிக் காட்டும் நடிகர் திலகம் சைக்காலஜி பற்றிய பாடம் எதுவும் படிக்காமலே அதை காட்டியிருப்பார்.

    அடுத்து Dr.கருணாகரன் . இதைப் பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம். தாங்கள் தமிழ் பால் பற்று கொண்ட புலவரோ என்பதில் ஆரம்பித்து இறுதியில் மறந்து விட்ட ஸ்டத்தை எடுத்துக் கொண்டு நடக்கும் அந்த நடைக்கே காசு கொடுக்கலாம்.

    நான்தான் சுட்டேன் சும்மா சுட்டேன் என்ற கோபக்காரன், சாந்தமே உருவான அப்பாவி கிராமத்து இளைஞன், தான் நடிக்கும் தெருக்கூத்து எப்படி முடக்காமல் நடத்துவது என்பதில் கவனமாக இருக்கும் நாடகக்காரன், தனக்கு வந்திருக்கும் நோயினால் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி மற்றவர்களிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்கும் தொழு நோயாளி, மனதில் பட்டதை சத்தமாக வெளிப்படுத்தி வாழ்க்கையை ஒரு வீரமான ஆரவாரத்தோடு மற்றவர்களுக்கு கடத்தும் போலீஸ் ஆபிசர், நடுவில் கை நழுவி போன ஆனந்தத்தை இறுதியில் பெறும் நாயகன் ஆனந்த். இப்படி நவரசங்களையும் தனித்தன்மையோடு கையாண்ட நடிகன் உலகத்தில் வேறு உண்டா? 9 வேடங்களோடு கூத்து மேடையில் நடைபெறும் சத்தியவான் சாவித்திரி ரோலையும் சேர்த்தால் 50 வருடங்களுக்கு முன்பே தசாவதாரம் வந்து விட்டது.

    இது படப்பிடிப்பு நடக்கும்போது பிலிம் நியூஸ் ஆனந்தன் 100-வது படத்தைப் பற்றி சொல்லுவது, முரடன் முத்து நவராத்திரி படங்களுக்கு இடையே எது 100-வது படம் என்று நடந்த போட்டி ஆகியவை பற்றி நாம் பல முறை பேசியிருப்பதால் இப்போது இங்கே வேண்டாம்.

    தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு நடிகர் 100 படங்களை நிறைவு செய்கிறார். அதுவும் கதாநாயகனாகவே நடித்து அந்த பெருமைக்குரிய மைல் கல்லை கடக்கிறார். வரலாற்றில் பொன்னெழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 1964 நவம்பர் 3. அப்படிப்பட்ட பொன்னெழுத்து நாள் இன்றைய தினம் பொன் விழாவை பூர்த்தி செய்கிறது. அந்த பெருமைக்கும் விருதுக்கும் தகுதியான படம் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்கிறது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டு படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தனர்.

    சென்னையில் வெளியான 4 அரங்குகளிலும் மற்றும் மதுரை திருச்சி நகரங்களிலும் 100 நாட்களை கடந்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் அந்த 1964-ம் ஆண்டு வெளியான நடிகர் திலகத்தின் 7 படங்களில் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு காலண்டர் வருடத்தில் 5 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் என்ற பெருமையையும் பெற்றார் [பின் அவரே 1972-ல் அந்த காலண்டர் வருடத்தில் 6 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையையும் புரிந்து தனக்கு இணை தான் மட்டுமே என்று நிறுவினார்] அது மட்டுமா? அந்த 1964-ல் சென்னை மாநகரில் நடிகர் திலகத்தின் 5 படங்கள் [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை மற்றும் நவராத்திரி] 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சாதனையை இன்று வரை [அதாவது இந்த 50 வருடங்களில்] யாராலும் முறியடிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல அந்த 1964-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் 7 படங்கள் வெளியாகின. அவை சென்னை மாநகரில் 26 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அவற்றில் 25 திரையரங்குகளிலும் வெளியிடப்பட்ட படங்கள் 50 நாட்களையும் கடந்து ஓடியது. இந்த சாதனையும் முறியடிக்கப்படவில்லை.என்றுமே முறியடிக்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம்தானே!

    மற்றொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். 1964 பொங்கலுக்கு வந்த நமது கர்ணன் திரைப்படத்தைப் பற்றி வேண்டுமென்றே ஒரு பொய்யான தகவலை சொல்லிக் கொண்டிருப்பார்கள். போட்டியில் தோற்று விட்டது என்றெல்லாம் அள்ளி விடுவார்கள். 4 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து பெரு நகரங்களில் 75 நாட்களை கடந்து வெளியான திரையரங்குகளில் எல்லாம் 50 நாட்களை கடந்த கர்ணன் பற்றி தவறான தகவலை வாய் கூசாமல் பேசுவார்கள். ஆனால் அதே 1964 தீபாவளி படங்களைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். காஸ்ட்லி கலர் படங்களையெல்லாம் காணாமல் போக வைத்த கருப்பு வெள்ளை காவியம் நமது நவராத்திரி. இன்னும் சொல்லப் போனால் கோவை போன்ற மாநகரிலே சில படங்கள் 50 நாட்களை கூட எட்டி பிடிக்க முடியாதபோது [நவராத்திரியை விடுங்கள்] முரடன் முத்து ஓடிய நாட்கள் 80.

    தமிழ் தாயின் கலைத்தாயின் தலைமகன் நடிகர் திலகம் நடித்த 100-வது படமாம் நவராத்திரி இன்று பொன் விழா காண்கிறது. இந்த இனிய நாளில் அந்தப் படத்தை பற்றியும் அந்த படம் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ள முடிந்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும்!

    அன்புடன்

  19. Thanks Russelldwp, ifohadroziza, eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy, KCSHEKAR, ifohadroziza liked this post
  20. #2570
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.

    இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.

    உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .

    ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.

    ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.

    ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.

    ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.

    ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.

    ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்

    இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....

    'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!

    இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

    அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!

    அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!

    (நெய்வேலி வாசுதேவன்)

  21. Thanks Russelldwp, ifohadroziza thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •