Page 349 of 400 FirstFirst ... 249299339347348349350351359399 ... LastLast
Results 3,481 to 3,490 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3481
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3482
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று (03-01-2015).

    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் - நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல் எனலாம். அதுபற்றிய செய்திகள், ஆய்வுகள் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் அலுப்பதில்லை என்று சொல்வதைவிட அதனை மீண்டும் மீண்டும் படிப்பதில் ஒரு சந்தோஷமும் இருக்கிறது.

    வருங்காலத் தலைமுறையினருக்கு கட்டபொம்மன் என்றால் இவர்தான் என்று அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்.

    நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் நடித்ததோடு நின்றுவிடவில்லை. 1971-ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலம் வாங்கி, அதில், கட்டபொம்மன் சிலையை நிறுவி, நீண்ட காலம் தன சொந்த செலவிலேயே பராமரித்து வந்து, பின்னன் அவ்விடத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

    வெள்ளையரின் ஆதிக்கத்தை வேரோடு சாய்க்க புலியெனப் புறப்பட்டு வீரமரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மனையும், மறைந்து 200 ஆண்டுகளுக்கு மேலான பின்னரும் நம் மனதில் கட்டபொம்மனை வாழவைத்த நடிகர்திலகத்தைய்ம் இந்நாளில் நினைவு கூர்வோம்.






    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #3483
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Bangaloril Thangapathakam:
    பெங்களுரில் தங்கப்பதக்கம் ...

    கர்நாடக ரசிகர்களின் உற்சாகம்

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA, kalnayak liked this post
  6. #3484
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில்,குலமா குணமா?
    பழைய படத்தில்,ஒரு காட்சி..!
    சிவாஜி-ஜெய் பாசக்கார அண்ணன் தம்பிகள்.
    வில்லனின் சூழ்ச்சியால்,தம்பி ஜெய் சொத்தைப் பிரித்துக்கேட்பார்.
    சொத்து பத்திரம்,நகை நட்டு,பாத்திர பண்டங்கள் என அனைத்தையும்,ஒரு இடத்தில் வைத்துவிட்டு..ஒரு ஓரமா நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார் அண்ணன் சிவாஜி..!சொத்தைப் பிரித்துக்கொடுக்கச் சொன்னால்,
    இவரென்ன அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறாரே..
    இவர் என்ன,லூசா என்பார்கள்..ஜெய் உட்பட!
    ஜெய் மனைவி வாணிஸ்ரீ மட்டும் புரிந்து கொண்டு,
    சிவாஜி அத்தான்..நிஜமாகவே ரெண்டாகத்தான் பிரித்துவைத்திருக்கிறார். ஒன்று சொத்து..இன்னொன்று அவர்!
    உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்,என்பார்..!
    தம்பி ஜெய் மனம் நெகிழ்ந்து...அண்ணன்தான் வேணும் என்பார்..!



    Facebook : Michael Amalraj
    https://www.facebook.com/amalrajmichael?fref=nf
    Last edited by sss; 3rd January 2015 at 09:26 PM.

  7. #3485
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes kalnayak, Russellmai, eehaiupehazij, sss liked this post
  9. #3486
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மையம் இணையதள நடிகர் திலகம் பக்தர்களுக்கும் நடிகர் திலகம் திரியில் சஹோதரத்துவத்துடன் பங்களித்துவரும் திரு எஸ்வி மற்றும் திரு யுகேஷ்பாபு அவர்களுக்கும் மற்றும் இதர மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கும், புதிதாக வந்திருக்கும் பெங்களூரை சேர்ந்த திரு c s குமார் அவர்களுக்கும் சிறிது தாமதமான என்றாலும் என்னுடைய உளமார்ந்த புது வருட வாழ்த்துதலை தெரிவித்துகொள்கிறேன் !

    அனைவரும் அனைத்து நலமும் வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவனையும், இறைவனாக நம்மை வழிநடத்தும் ஆன்றோர் சான்றோரையும், தமிழகத்தின் பெருமையாம் உலக அதிசய நடிகராம் நம் நடிக சக்ரவர்த்தி நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் நேர்மையின் பிறப்பிடம், உறைவிடம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் ஆன்மாவையும், ஏழைகளின் இதயதெய்வம் மக்கள் திலகம் திரு m g r அவர்கள் ஆன்மாவையும் வேண்டிகொள்கிறேன்.

    அன்புடன்
    rks

  10. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  11. #3487
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த திரியில் தொடர்ந்து பங்களிக்க வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

    அவ்வப்போது எட்டி பார்த்து நடக்கும் சம்பவங்களை படித்து மகிழ்ந்தேன். திரு சிவாஜி செந்தில் அவர்களின் அயராத உழைப்பு மெய்சிலிர்க்கும் விஷயம். மேலும் நம்மை ஆரம்பகாலதிலிரிந்து ஊக்குவிக்கும் திரு ராகவேந்தர் சார் அவர்களின் ஸ்டைல் பங்களிப்பு ஒரு வித்தியாசமான கோணத்தில் வருவதை பார்த்து பேரானந்தம் கொண்டேன். காரணம் பல காரணங்களுக்காக திரிக்கு "கா" விட்டிருந்த ராகவேந்தர் சார் மீண்டும் இதுபோல பதிவுகளை புத்துணர்ச்சியுடன் எழுதுவது அவரது பரந்த மனதையும் நம் அனைவர் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் எடுத்துகாட்டுகிறது. மிக்க நன்றி சார் !

    அதே போல திரு நெய்வேலி வாசு சார் அவர்களும் நம் திரிக்கு இந்த ஆண்டு முதல் வந்து தன்னுடைய அதிரடி ஆனந்த பங்களிப்பை தருவாராகின் நம்மை விட புண்ணியமும் சந்தோஷமும் அடையப்போகும் நண்பர்கள் யார் உள்ளார்கள். நெய்வேலி வாசு சார் ..2015..வந்துவிட்டது..புதிய விடியலுடன்...நீங்களும் வாருங்களேன்...போகியில் பழைய விஷயங்களை களைந்து...புதியன புகுதலாக நீங்கள் வரும்போது எங்கள் அனைவருக்குமே மிகபெரிய புத்துணர்ச்சி பாய்ச்சியதுபோல இருக்கும்...! என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று நீங்கள் நம் திரிக்கு தொடர்ந்து வருகை தந்து தங்களுடைய பொன்னான பங்களிப்பை தந்தருளவேண்டும் சார் !

    Rks

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij, sss liked this post
  13. #3488
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை : மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளக்காரத் துரை படம் கூடுதலாக 100 திரையரங்குகளில் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.
    1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வெள்ளக்கார துரை.

    விக்ரம் பிரபு முதன்முறையாக காமெடி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக திவ்யா நடித்துள்ளார்.எழிலின் சிறந்த திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்த இப்படம் வெற்றி பெற்றது. எனவே தற்போது கூடுதலாக 100 திரையரங்குகளில் அப்படம் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.
    தனது முதல் படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக மீண்டும் நிறைய படங்களை தயாரிக்க இருப்பதாக அன்புசெழியன் தெரிவித்துள்ளார்.

  14. Likes Russellmai liked this post
  15. #3489
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    CHENNAI BOOK FAIR

    OPENS ON 9TH JANUARY 2015 AND GOES ON UPTO 21ST JANUARY 2015

    VENUE: Y M C A College, Grounds, Nandanam, Chennai-35.

    Last edited by RAGHAVENDRA; 4th January 2015 at 02:17 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #3490
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 53
    From Mr.Sudhangan's FB page

    `பாசமலர்’ போன்ற படங்களை அப்படியே பார்த்துவிட்டு நகர்ந்து போகிறவர்கள் தன்னறிவைப் புரிந்து கொள்ளாதவர்கள்!
    அதில் பல்வேறு விதமான நம் வாழ்க்கை அத்தியாயங்களும் அடங்கி இருக்கிறது!
    ஊன்று கவனித்தால், நம் ரசனைகளை மேம்படுத்தும் ரசாயன மாற்றங்கள் அதனால் நிகழக்கூடும்!
    படைப்பாளிகளும்,கலைஞர்களும் ஒன்று பட்டு செயல்பட்டால், எத்தனை நல்ல விஷயங்கள் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படத்தில் பல உதாரணங்கள் உண்டு!
    சென்ற வாரம் அந்த பாடல் வரிகளைச் சொல்வதாகச் சொல்லியிருந்தேன்!
    தங்கை தூங்கும் போது அவள் எதிர்காலம் குறித்து அண்ணன் கனவு காணுவதான பாடல்தான் ` மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்கிற பாடல்!
    காட்சியாக பார்க்கும்போது, அதில் சிவாஜியும், சாவித்திரியும் தான் நம் கண்களுக்குத் தெரிவார்கள்!
    ஆனால் காற்றில் வரும் கானமாக அதைக் கேட்கும் போது, அங்கே கண்ணதாசனும், விஸ்வநாதன் – ராமமூர்த்தியும் கூடவே வருவார்கள்!
    அண்ணனின் கற்பனையில் தங்கைக்கு திருமணமாகிறாது இந்தப் பாடலின் மூலமாக!
    `ஆசையின் பாதையில் ஒடிய பெண்மயில்!
    அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்!
    வாழியக் கண்மணி வாழிய என்றான்!
    வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்!
    இந்த கடைசி வரியில் கண்ணதாசன் ஜொலிக்கிறார்!
    தங்கையை பிரியப்போகிற அண்ணனின் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது!
    அந்த கண்ணீர் என்ன லேசாகவா வருகிறது!
    வான்மழைபோல் கண்கள் நீரில் ஆடக் கண்டானாம்!
    இந்த வரிகளை எழுதும்போது சிவாஜி என்கிற அண்ணனாக கவிஞர் மாறியிருந்தாலொழிய இந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்க முடியுமா ?
    அந்த பாத்திரத்திற்கு பாடல் எழுதும்போது, கவிஞரும் அந்த பாத்திரமாகவே மாறிவிடுவதுதான் சிறப்பு!
    அப்படி அந்த கவிஞர் அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டுமானால், படத்தின் கதை அந்த கவிஞனின் மனதில் போய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்துவிட்டது!
    திருமணமான தங்கையின் அடுத்த கட்டம் இது! அவளுக்கு குழந்தை பிறந்துவிட்டது!
    இந்த சம்பவத்தை இதைவிட சிறப்பாக, சுருக்கமாக சொல்லிவிடமுடியுமா?
    பிள்ளைப் பெற்ற எல்லாப் பெண்களுமே இதை உணர்ந்திருப்பார்கள்!
    `பூமணம் கொண்டவள் பால் மணம் கண்டாள்!
    பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்!
    ஒரு பெண் தாயாகிவிட்டதை ` பூமணம் கண்டவள் பால் மணம் கண்டாள் என்று எத்தனை யதார்த்தமாக, ஆழமாக, அந்த புதுத்தாயின் இயல்பினை இதை விட அழகாக சொல்லிவிட முடியுமா ?
    ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வதை இதைவிட எளிமையாக சொல்லிவிட முடியுமா? என்று பலமுறை யோசித்திருக்கிறேன்!
    அடுத்து தங்கையின் காதல்!
    அந்தக் காதலனோ அண்ணனோடு மோதியவன் !
    இந்த மோதல் காட்சியில் சிவாஜி- ஜெமினியின் நடிப்பு காட்சியில் மேலோங்கி நிற்கும்!
    அந்த நாட்களில் இந்த படத்தின் இசைத்தட்டுக்கள் வரும் போது அங்கே வசனகர்த்தா ஆரூர்தாஸ் விசுவரூபமெடுத்து நிற்பார்!
    அண்ணன் ராஜீவான சிவாஜி இப்போது மில் முதலாளி!
    தங்கையின் காதலன் ஜெமினியோ தொழிற்சங்க தலைவன்!
    அதற்கு முன்பு நடந்த தகராறினால், ஜெமினியில் நண்பர்களாக பார்த்து முதலாளி சிவாஜி வேலை நீக்கம் செய்திருப்பார்!
    இப்போது தொழிற்சங்கத் தலைவன் ஜெமினி முதலாளி சிவாஜியின் அறைக்குள் சில தொழிலாளர்களுடன் வருவார்!
    ராஜீ: என்ன ?
    ஆனந்தன்: இவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டாயாமே!
    ராஜீ: ம்
    ஆன: எதற்காக ?
    ராஜீ: அதை கேட்க நீ யார் ?
    ஆன: நான் ஒரு தொழிலாளி: நாங்களெல்லாம் ஒரே சமுதாயம். இதில் ஒருவன் பாதிக்கப்பட்டால் அதைப் பற்றி கேட்க மற்றவனுக்கு உருமை உண்டு! அந்த உரிமையின் பெயரால் கேட்கிறேன்! இவர்கள் நிறுத்தப்பட்டதற்கு நீ சரியான காரணம் சொல்ல வேண்டும்.
    ராஜீ: அவசியம் சொல்லத்தான் வேண்டுமா ?
    ஆன: ஆம்! எதற்குமே காரணம் சொல்ல வேண்டிய காலம் !
    ராஜு: அதிகம் வேலையில்லாத காரணத்தால் ஆள் குறைப்பு செய்ய அவசியம் ஏற்பட்டது!
    ஆன: அந்த அவசியத்திற்கு குறிப்பிட்ட இவர்களை மட்டும் தான் பலி கொடுக்க வேண்டுமா ?
    ராஜு: இதில் எந்த விதமான குறிப்புமில்லை! கணக்குப்படி வேலை செய்யாமல் கெளரவ சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும் தற்காலிகமாக
    ஆன: எனக்காகச் சொல்லும் நொண்டிச் சமாதானம் . இதை நான் நம்புவதற்கில்லை
    ராஜு: ஐ டோண்ட் கேர்
    ஆன : ம்.. எனக்குத் தெரியும். இது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு.சொந்த விரோதத்தை வைத்துக்கொண்டு எனக்கு நண்பர்களாயிருக்கிர நலிந்தோரையும், மெலிந்தோரையும், உன் காலடியில் போட்டு நசுக்கப் பார்க்கிறாய்.. முறைப்படி உன் பலத்தை காட்ட வேண்டியது என்னிடம்தானே தவிர,முதுகெலும்பற்ற இந்த பேசும் பிரதேங்கள் மீதல்ல!
    ராஜு: ம்… சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காக , இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு என் மீது படையெடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். உங்களுக்காக பரிந்து பேச வந்திருக்கிறான் என்று நினைக்காதீர்கள்
    ஆன: இல்லை.. இவர்களுக்காகத்தான் பரிந்து பேச வந்திருக்கிறேன். அன்றொரு நாள் உன் தங்கையைப் பார்க்கச் சென்றதற்காக நீ வெளியிலிருந்து விலக்கப்பட்டபோது இதே இடத்தில் உனக்காகவும் நான் பரிந்து பேசி இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!
    ராஜு: அதெல்லாம் பழங்கதை
    ஆன: இடைக் காலத்தில் கிடைத்த இந்த நாற்காலிக்கு மதிப்பு கொடுப்பதற்காக இவர்களின் நட்பை இழுந்து விடாதே
    ராஜு: வஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கெளரவத்தை இழப்பதைவிட, உன் கூட்டத்தை இழப்பதே மேல்
    ஆன: சொந்த விஷயத்திற்கு போகாதே! நான் வந்தது நம்மைப் பற்றி பேசதற்காக அல்ல! நாளெல்லாம் பாடுபட்டு நீ இந்த நிலையில் இருப்பதற்குக் காரணமான இவர்களைப் பற்றித்தான் பேச வந்திருக்கிறேன்!
    ராஜு: உன்னைப் போன்ற சுயநலவாதிகளின் பேச்சைக் கேட்டு, பாவம், ஒன்றும் அறியாத இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய இன்பத்தை எல்லாம் இழுப்பதைக் கண்டு உண்மையிலேயே நான் அனுதாபப்படுகிறேன்.
    ஆன: யார் சுயநலவாதி? ஒருவனுடைய சுகத்திற்காக பலர் பாடுபட வேண்டுமென்ற ஏகாதிபத்ய மனப்பான்மை கொண்ட நீ சுயநலவாதியா ? அல்லது பலருடைய நன்மைக்காக ஒருவன் வாழவேண்டுமென்கிற பொதுநலப் பித்தனான நான் சுயநலவாதியா ?
    ராஜு : பொது நலம் பொறியில் பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா ? புத்துக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாதத்தால் நாகத்தை குளிர வைக்கவா ?
    இந்தக் காட்சியின் வசனங்கள் இன்னும் வரும்!
    இந்த வசனத்தை அடுத்து இன்னும் அவர் பேசும் போது !
    ( இன்னும் வரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, Russellmai, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •