Page 86 of 401 FirstFirst ... 3676848586878896136186 ... LastLast
Results 851 to 860 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #851
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (59)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் இன்று 'ராஜா வீட்டுப் பிள்ளை' படப் பாடல். நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேட்டு இன்புற.



    மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், மேடம் ஜெயலலிதாவும் இணைந்து பாடும் டிபிகல் ஜெய் டூயட். இந்தப் பாட்டு அப்போதிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒன்றும் அதிசயம் இல்லைதான். ஆனால் பிடிக்கும். உங்களுக்கு கேட்கும் போது ஒரு உற்சாகம் பிறக்கும். வாலியின் வரிகளுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்து தூள் பரத்தியிருப்பார். பாடகர் திலகம் ஜெய் குரலில் அப்படியே த்தரூபம். சுசீலாவோ தெள்ளத் தெளிவான இளமை. ஜெயா மேடம் கொள்ளை அழகு. அதனால் ஜெய்க்கு உற்சாகம். இந்தப் படத்தில் நம்பியார், வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த், தேங்காய், புஷ்பலதா, ஜெயபாரதி மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இதுவும் ஒரு 'பாண்ட்' டைப் படம்தான்.




    இந்தப் பாடல் பின்னால் வந்த பல ஜெய், ஜெயலலிதா டூயட்களை ஞாபகப்படுத்தும். 'பொம்மலாட்டம்' ஞாபகத்திற்கு வரும். 'மெல்லிசை மாமணி' குமார் சில பாடல்களில் எஸ்.எம்.எஸ் ஸை பின்பற்றியிருப்பார். பாடலின் ஆரம்ப இசையைக் கேளுங்கள். தெரியும். இப்படத்தை இயக்கியவர் தாதாமிராஸி.

    இந்தப் படத்தில் இந்தப் பாட்டு மட்டுமல்ல.... எல்லாப் பாடல்களும் செமத்தியாக இருக்கும்.

    'ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும்'.... ராட்சஸி, டிக்.எம்.எஸ். கலக்கலில்



    'அரும்பாய் இருந்தது நேற்று'.... ராட்சஸி பூ விற்கும் அமர்க்களம்.

    'பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்'.... பாடகர் திலகத்தின் தத்துவம்.

    'அன்று நினைத்தோம்.... அதற்கு உழைத்தோம்'.... பாடகர் திலகமும், சுசீலாம்மாவும் ரகளை கிளப்பும் பாடல். இசை பிரம்மாண்டம். (இது இன்னொரு 'இன்றைய ஸ்பெஷலி'ல் கண்டிப்பாக வரும்)


    இனி பாடலின் வரிகள்

    ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
    உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா

    ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
    உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா

    ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
    ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா

    குங்குமச் சிவப்பு கன்னத்திலே
    ஒரு கோலம் வரையட்டுமா
    குங்குமச் சிவப்பு கன்னத்திலே
    ஒரு கோலம் வரையட்டுமா
    இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
    கோவில் எழுப்பட்டுமா
    இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
    கோவில் எழுப்பட்டுமா
    கோவில் எழுப்பட்டுமா

    அத்தை மகனுக்கு பள்ளி கொள்ள
    ஒரு மெத்தை விரிக்கட்டுமா
    அத்தை மகனுக்கு பள்ளி கொள்ள
    ஒரு மெத்தை விரிக்கட்டுமா
    அவன் சந்தன மேனி சொந்தம் கொண்டாட
    விட்டுக் கொடுக்கட்டுமா

    ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
    ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா

    பருவத்தின் பாட்டுக்கு முதல் முதலாக
    பல்லவி சொல்லட்டுமா

    அந்த பல்லவி சொன்ன நல்லவர் கையில்
    சரணம் ஆகட்டுமா

    பருவத்தின் பாட்டுக்கு முதல் முதலாக
    பல்லவி சொல்லட்டுமா

    அந்த பல்லவி சொன்ன நல்லவர் கையில்
    சரணம் ஆகட்டுமா

    தென்றல் காற்றே தென்னங் கீற்றே
    தென்றல் காற்றே தென்னங் கீற்றே
    இன்னும் ஏனடி அச்சம்
    அச்சம் என்பதை பெண்மை மறந்தால்
    என்ன இருக்கும் மிச்சம்

    ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
    உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா

    ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
    உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா


    Last edited by vasudevan31355; 22nd August 2014 at 06:50 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #852
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    சாமந்திப்பூ படத்தில் ஷோபா இறுதி காட்சியில் மரணமடைந்த பின்னர் வரும் இந்த வீடியோ


    அவரின் இறுதி ஊர்வலத்தை படத்தில் இணைத்து விட்டார்கள்.

  5. Likes gkrishna liked this post
  6. #853
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    நல்லெண்ணெய் சித்ராவுக்கும், யூகி சேது வுக்கும் திருமணம் நிச்சயம் ஆகி நின்று விட்டது தெரியும் தானே ...

  7. #854
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by sss View Post
    நல்லெண்ணெய் சித்ராவுக்கும், யூகி சேது வுக்கும் திருமணம் நிச்சயம் ஆகி நின்று விட்டது தெரியும் தானே ...
    அருமையான தகவல்
    குமுதம் விழுந்து விழுந்து எழுதிய தகவல் sss சார்
    நன்றி
    gkrishna

  8. #855
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by sss View Post
    சாமந்திப்பூ படத்தில் ஷோபா இறுதி காட்சியில் மரணமடைந்த பின்னர் வரும் இந்த வீடியோ

    அவரின் இறுதி ஊர்வலத்தை படத்தில் இணைத்து விட்டார்கள்.
    ஆமாம் sss சார்
    இந்த படம் பாதியில் தான் அவர் மரணம் அடைந்த செய்தி
    அந்நாட்களில் பிரபல திரைப்பட இயக்குனர் ஒளிபதிவாளர் மீது விசாரணை கூட நடந்த நிகழ்வு உண்டு
    gkrishna

  9. #856
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இன்றைய ஸ்பெஷல் (59)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் இன்று 'ராஜா வீட்டுப் பிள்ளை' படப் பாடல். நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேட்டு இன்புற.
    வாசு சார்
    அடிகடி சிலோன் வானொலியில் கேட்டு மகிழ்ந்து மறந்து இருந்த பாடலை நினைவு ஊட்டி உள்ளீர்கள்

    ஜெய் ஜெயா madem ஜோடி மிகவும் பொருத்தமான ஜோடி
    gkrishna

  10. #857
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    'ஞாயிறு ஒளி மழையில்' ஹிந்து வெளியிட்ட தகவல் கட்டுரைக்கு மிக்க நன்றி. இப்போதுதான் படித்து முடித்தேன்.

    பத்திரிகையில் படித்த செய்தி ஒரு வரி நினைவிருக்கிறது.



    'ஞாயிறு ஒளி மழையில்' பாடலை கமல் அவர்கள் லேசான பயம் கலந்த நடுக்கத்தில் ரிக்கார்டிங்கில் பாட ஆரம்பிக்க எல்லோரும் அது ஜேசுதாசின் குரல் போலவே இருப்பதாகக் கூறினார்களாம். கமலுக்கு பெருமையாய் இருந்ததாம். ஆனால் தன்கென்று ஒரு தனி பாணி வேண்டுமே என்று சிரமப்பட்டு வேறு விதமாகப் பாடி முடித்தாராம்.
    Last edited by vasudevan31355; 22nd August 2014 at 07:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks gkrishna thanked for this post
  12. #858
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இப்பாடலை வண்ணத்தில் போட்டாயிற்றா இல்லையா என்று தெரியவில்லை. போட்டிருந்தால் பொறுத்தருள்க.

    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai liked this post
  14. #859
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    வி.ஆர்.திலகம் பற்றி எல்லோரும் அருமையாக நினைவு கூர்ந்து அவரை பெருமைப் படுத்தியுள்ளீர்கள். நன்றி! இப்படி அபூர்வமான பல கலைஞர்களை மக்களுக்கு ஞாபகப்படுத்தும் திரியாக நமது திரி விளங்குவது மகிழ்ச்சி.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. #860
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    ராஜேஷ்ஜி, மதுஜி விளக்குவார்களாக.

    ஒரு சந்தேகம்.



    'கறுப்புப் பணம்' படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலான

    இசையரசி மற்றும் ராட்சஸியின்

    'அம்மம்மா... கேளடி தோழி'...

    பாடலில் கே.ஆர்.விஜயாவுடன் இணைந்து அப்பாடலைப் பாடுபவர் வி.ஆர். திலகம்தானே? ரொம்ப நாளாக சந்தேகம்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •