Page 100 of 401 FirstFirst ... 50909899100101102110150200 ... LastLast
Results 991 to 1,000 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #991
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    காலை வணக்கம், ராஜேஷ், கோபால்
    அனைவருக்கும் காலை வணக்கம்
    அருமை ராகவேந்தர் சார்

    வெளியில் தெரியாத ஆனால் ரசிக்க தகுந்த பாடல்களை தருகிறீர்கள்
    வல்லரயன் வந்திய தேவன் ராஜ பாட்டையில் புரவியை தட்டி விட்டது போல் பறந்து கொண்டு இருக்கீறீர்கள் . மிக்க மகிழ்ச்சி .

    இரண்டு தினங்கள் சிஸ்டம் problem . திரிக்குள் வர முடியவில்லை
    ஆனாலும் நல்ல பல தகவல்களையும் பாடல்களையும் கண்டு ரசித்தேன்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #992
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  4. Likes gkrishna liked this post
  5. #993
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    திருநெல்வேலி, சுண்டங்கோட்டை பாலையா என்ற அமரத்துவமற்ற திரைச்சிற்பி, நடிப்புச் செல்வர் டி .எஸ்.பாலையா அவர்களின் நூற்றாண்டு தினம் (22.08.2014). டி.எஸ்.பாலையா அவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர் அவரது வில்லத்தனமான நடிப்பையும் ரசித்ததுண்டு. குணச்சித்திர நடிப்பையும் ரசித்ததுண்டு]. இவ்விரண்டையும் விட எல்லோரும் அதிகமாக நேசித்தது அவரது நகைச்சுவை வேடங்களையே. நடிகர் சங்கம் டி.எஸ்.பாலையா அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருப்பதாக அறிவித்துள்ளது. (22.8.2014) அன்று சூரியன் தொலைக்காட்சியில் சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் டி .எஸ்.பாலையாவின் மகனும் கலை வாரிசுமான ஜூனியர் பாலையாவும் இயக்குநர் சித்ராலயா கோபு அவர்களும் டி .எஸ்.பாலையாவின் அருமை பெருமைகளை அள்ளி வழங்கினார்கள்.
    டி .எஸ்.பாலையா அவர்களின் பெருமைகளை தி இந்து தமிழ் நாளிதழில் இந்து டாக்கீஸ் பகுதியில் திரு.ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் விவரித்து டி .எஸ்.பாலையாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். திரு.ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களுக்கும் தி இந்து நாளிதழுக்கும் நன்றி . உலக சினிமா ரசிகர்கள் பெரும்பாலோனோர் டி .எஸ்.பாலையாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நன்னாளில் நமது வலைப்பூவும் இக்கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமை கொள்ள வேண்டும் என்பது எனது அவா

    வாழ்க பாலையா அவர்களின் புகழ்



    டி.எஸ். பாலையாவின் நேரடி கலை வாரிசாக அவரை அப்படியே நினைவுபடுத்தும் குணச்சித்திரமாகத் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் அவரது மகன் ஜூனியர் பாலையா. தனது அப்பா குறித்த நினைவுகளைத் தி இந்துவுக்காக அசைபோட்டதிலிருந்து...

    அப்பா ஒரு திரைப்பட நடிகர் என்பது எத்தனை வயதில் உங்களுக்குத் தெரியவந்தது?

    எனக்கு 7 வயதாக இருக்கும்போது ஒரு நாள் வீட்டிலிருந்தே மேக்-கப் போட்டுக்கொண்டு ஸ்டுடியோவுக்குக் கிளம்புவதைக் கவனித்தேன். அம்மாவிடம் கேட்டேன். பிறகு அப்பா படப்பிடிப்பிலிருந்து வந்ததும், நான் கேட்ட விஷயத்தை அம்மா அவரிடம் சொல்ல, அன்று பேசி நடித்த வசனத்தை எனக்கு முன்பாக நடித்துக் காட்டி, குற்றம் குறை இருந்தா சொல்லுங்க முதலாளி என்று கையைக் கட்டி கேட்டுவிட்டு என்னைத் தூக்கிக் கொஞ்சினார். அன்று இரவே மவுண்ட் ரோட்டில் இருந்த சித்ரா தியேட்டருக்கு இரண்டாவது காட்சி பாடம் பார்க்கக் குடும்பத்துடன் கூட்டிச் சென்றார். அந்தப் படம் பாகப் பிரிவினை.

    எனக்குப் பத்து வயதானபோது அப்பாவுக்கு எவ்வளவு ரசிகர்கள், எவ்வளவு செல்வாக்கு என்பதைப் புரிந்துகொண்டேன். காங்கிரஸ் மைதானத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது. அதற்கு அப்பாவை சிவாஜி அழைத்திருந்தார். அங்கே திரண்டிருந்த மக்கள் அப்பாவைப் பார்த்ததும் பாலையா பாலையா என்று கத்தினார்கள். எல்லோரும் ஏன் உங்களைக் கூப்பிடுறாங்க என்றேன். அவங்க என்னோட ரசிகர்கள். அவங்களாலதான் நமக்குச் சாப்பாடு கிடைக்குது. அவங்கதான் நமக்குக் கடவுள் என்று கூறிக்கொண்டே, அவங்க எப்போ நம்மள கூப்பிட்டாலும், நாம இப்படிக் கையெடுத்து கும்பிடணும், அவங்களோட கை குலுக்கணும் என்று தன்னை அழைத்த ரசிகர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். பிறகு 15 வயதில் அவருடன் படப்பிடிப்புக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஸ்டூடியோவில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போதுதான் அவரது தகுதி என்ன என்பதைப் புரிந்துகொண்டேன்.

    அப்பாவைப் பற்றி உங்களிடம் வியந்து கூறிய சமகாலக் கலைஞர் யார்?

    பலர். நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நாகேஷ் அண்ணன். அவர் என்னைவிடப் பல ஆண்டுகள் மூத்தவர் என்றாலும் என்னுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தவர். காதலிக்க நேரமில்லை' படத்தில் அப்பாவிடம் அவர் கதை சொல்லும் காட்சி படமாக்கப்பட்டபோது நடந்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் காட்சி எடுத்து முடித்ததும் செட்டில் இருந்த அத்தனை பேரும் கைதட்டியிருக்கிறார்கள். ஆனால் அப்பா மட்டும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். நாகேஷுக்கோ நமது நடிப்பைப் பார்த்து இவர் பொறாமைப்படுகிறாரோ என்று ஒரு எண்ணம். பிறகு படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவரது அருகில் போய், அண்ணே நான் எப்படி நடிச்சேன்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா, இன்னும் நல்லா பண்ணியிருக்கணும். கோட்டை விட்டுட்டே! என்று கூறியிருக்கிறார். சந்தேகமே வேண்டாம். இவருக்குக் கண்டிப்பாகப் பொறாமைதான் என்று நினைத்துக் கொண்டு போய்விட்டாராம். பிறகு படம் வெளியான அன்று ரசிகர்களின் ரசனை அறிந்து வருவதற்காக மாறு வேடத்தில் பல தியேட்டர்களுக்குப் போயிருக்கிறார் நாகேஷ். சொல்லி வைத்த மாதிரி எல்லாத் தியேட்டர்களிலும் ஒரு வசனமும் பேசாத உனது அப்பாவின் நடிப்பைத்தான் அத்தனை பேரும் ரசித்தார்கள். உனது அப்பாவின் ஆற்றல் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அதன் பிறகு உன் அப்பாவைச் சந்தித்து, அண்ணே உங்களைத் தப்பா நினைச்சுட்டேன் என்று சொன்னேன். அவர் கட்டிப்பிடித்து எனக்கு முத்தம் கொடுத்தார். அதுதான் நான் வாங்கிய தலை சிறந்த பாராட்டு. கடைசிவரை உனது அப்பாவை மட்டும் என்னால் நடிப்பில் வெல்ல முடியவில்லை என்றார். அதை என்னால் மறக்க முடியாது.

    அதேபோல 85 வயது முதியவராக எல்லீஸ் ஆர். டங்கன் சென்னை வந்திருந்தார். அவரைப் பார்க்க ஆவலோடு சென்றேன். பாலையாஸ் சன் ஹஸ் கம் என்றதும் அத்தனை வயதிலும் சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். யூ ஆர் லைக் யூவர் ஃபாதர் என்றார். எனது அப்பாவின் குரலும் நகைச்சுவை உணர்வும், அவரது உடல் மொழியும்கூட என்னிடம் அப்படியே இருக்கிறது என்றேன். இரண்டு நிமிடத்திற்குமேல் அனுமதியில்லை என்ற அவரது உறவினர்களிடம் இன்னும் ஒரு மணிநேரத்துக்கு எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று 40களுக்குப் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அப்பாவைக் குறித்து அவர் சொன்ன விஷயங்களைப் பற்றி தனிப் புத்தகமே போடலாம்.

    உங்களுக்கு எப்போது நடிப்பில் ஆர்வம் வந்தது?

    எட்டாம் வகுப்பு படிக்கும்போது மிமிக்ரி பண்ணிக் காட்டுவேன். அதில் அப்பாவின் குரலும் ஒன்று. இதைப் பார்த்த என் ஆசிரியர் காதலிக்க நேரமில்லை படத்தின் முக்கியமான காட்சிகளை நாடகமாகப் பள்ளி ஆண்டுவிழாவில் நடத்த முடிவுசெய்தார். நாகேஷ் கேரக்டரைச் சின்னம்மா பையன் செய்தார். சச்சு கேரக்டரை எனது தங்கை செய்தார். அப்பா கேரக்டரை நான் செய்தேன். பாராட்டென்றால் அப்படியொரு பாராட்டு. தலைமையாசிரியர் வீட்டுக்கு போன்செய்து எனது அப்பாவிடம், உங்களை அச்சு அசலாக அப்படியே உங்கள் பையன் நடித்துக் காட்டினான் என்று சொல்ல அப்பாவுக்குப் பெருமை தாங்கவில்லை.

    பிறகு, நம்ம வீட்டுத் தெய்வம் என்ற படத்தில் அப்பா நடித்தபோது அவரது நடிப்புத்திறனை அணுஅணுவாக ரசிக்க ஆரம்பித்தேன். நானே அவரது தீவிர விசிறியாகவும் மாறினேன். நான் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு ஜூனியர் பாலையா என்று பெயர் சூட்டியதும் அவர்தான்.

    அப்பாவுடன் இணைந்து நீங்கள் நடித்தமாதிரி தெரியவில்லையே?

    எம்.ஆர். ராதாவை நான் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவேன். அப்பாவின் கடைசி நாட்கள் வரை அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர்களில் அவர் மிக முக்கியமானவர். அவரது தயாரிப்பில் அப்பாவும் நானும் இணைந்து நடிப்பதாகத் திட்டமிடப்பட்டது. நானும் ஆவலோடு அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பே அப்பா காலமாகிவிட்டார். அந்த விஷயத்தில் நான் கொடுத்து வைக்காதவன்.

    இப்போது நீங்கள் நடிப்பதைக் குறைத்துக் கொண்டது ஏன்?

    நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான காரணம். பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் கதை நாயகி அல்லியின் சித்தப்பாவாக மாடன் என்ற கேரக்டரில் நடித்தேன். அதேபோலச் சாட்டை படத்திலும் அழுத்தமான கதாபாத்திரம்தான். 200 படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடிக்கவே அதிக வாய்ப்புகள் வந்தன. இதனால் பல வாய்ப்புகளை மறுத்தேன். தற்போது மீண்டும் முழுமூச்சாக நடிக்க வந்துவிட்டேன். விரைவில் பல படங்களில் என்னை நீங்கள் பார்க்கலாம். இப்போது என் மகன் ரோஹித் பாலையா நடிக்க வந்துவிட்டார்.

    இறப்பதற்கு முன் வறுமையில் வாடினார் என்று உங்கள் அப்பாவைப் பற்றி குறிப்பிடுகிறார்களே?

    அது சுத்த பேத்தல். சென்னை மடிப்பாக்கத்தில் அப்பாவுக்கு 350 ஏக்கர் நிலம் இருந்தது. இன்றும் பாலையா கார்டன் என்ற பகுதியாக இருக்கிறது. நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழுபேர். அங்கே எங்கள் ஒவ்வொருவர் பெயரிலும் தெருக்கள் இருக்கின்றன. இன்று கோடீஸ்வரர்களாக இல்லாவிட்டாலும், அப்பா எங்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை. எங்களுக்கு அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை.
    gkrishna

  6. #994
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai, gkrishna liked this post
  8. #995
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண். அங்கே பிரபலமாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்துவிடத் துடித்தவருக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி, பல இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பாலமோஹன சபாவில் இடம் கிடைத்தது.

    அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய சதி லீலாவதி(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.

    எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.

    அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் சதி லீலாவதி தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.

    பி.யூ.சின்னப்பா நடித்த ஆரிய மாலா (1941), ஜகதலப் பிரதாபன் (1944) போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர்தான் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது என்று நான் ஏன் பிறந்தேன்? சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.

    மீட்டுவந்த சுந்தரம்

    ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார் பாலையா. பாண்டிச்சேரிக்குப் பட வேலையாகச் சென்றிருந்த மாடர்ன் தியேட்டர் டி.ஆர். சுந்தரம் கண்ணில் பட்டிருக்கிறார். யார்டா அந்தச் சாமியார். பாலையா மாதிரி தெரியுதே என்று கண்டு அவரைப் பிடித்து அந்தக் கணமே அவரை வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சேலம் வந்து சேர்ந்து விட்டார். அடுத்தநாளே அங்கே படப்பிடிப்பு நடந்துவந்த பர்மா ராணி என்ற படத்திலும் நடிக்க வைத்து விட்டாராம்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் சித்ரா படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். ஒரு மலையாளப் படம் ப்ரசன்ன. லலிதா, பத்மினி நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பாலையா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார்.

    முன்னோடிக் கதாபாத்திரம்

    வேலைக்காரி (1949) படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் பாத்திரம்தான் பின்னாட்களில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். செய்த பகுத்தறிவுக் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார். இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி! என்றாலும் பகுத்தறிவு இயக்கத்தின் அபிமானியாகவும் இருந்தார். திரையில் பகுத்தறிவு பீரங்கியாக இருந்த நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் கடைசி நாட்கள் வரை இணை பிரியாத நண்பராக இருந்தார்.

    நகைச்சுவை வில்லன் முத்திரை

    1956-ல் மாமன் மகள் படத்தில் ஜெமினி,சாவித்திரி,சந்திரபாபு, டி.எஸ்.துரைராஜ் ஆகியோருடன் பாலையா நடித்தார். அதே வருடம் மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி இன்று என்ன கிழமை? என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் அடடா! இன்று விரதம் என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.

    அரசே! நாங்கள் பின் தொடர்ந்து போனோம்.ஆனால் அவர்கள் முன் தொடர்ந்து போய்விட்டார்கள்! என்பார்.

    புதுமைப்பித்தன் (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம் என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.

    வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.

    புதையல் படத்தில் அவர் இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும் என்ற வரிகளை இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும் என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.

    மாற்று இல்லாத குணச்சித்திரம்

    குணச்சித்திர நடிப்பிலும் ரங்காராவ் போல உச்சத்தைத் தொட்டவர் பாலையா. பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.

    பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. திருவிளையாடலில் (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ஒரு நாள் போதுமா? பாடல் காட்சியும், என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை? என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். பாட்டும் நானே, பாவமும் நானே பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.

    தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா தூக்கிடுச்சி!

    அடிமைப ்பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார். அந்தப் பாத்திரத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை. அசோகன்தான் அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.

    பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.

    எங்கிருந்தோ வந்தாள் படத்தில் ஹலோ மை டார்லிங்', வீட்டுக்கு வீடு படத்தில் மலர்களில் படுத்தவள் சகுந்தலை' போன்ற பாடல்கள் சாய்பாபா பாடியவைதான்.

    அப்பா வழியில் திரைக்கு நடிக்க வந்த அவரது மற்றொரு மகன் ஜூனியர் பாலையா. அப்படியே பாலையாவின் மற்றொரு நகலாக விளங்குகிறார்.

    ஏழு பிள்ளைகளின் தந்தையான பாலையா 1972-ல் மறைந்தபோது அவருக்கு வயது 60. ரங்காராவ் போல இவரும் முதுமையைப் பார்க்காமலே தான் மறைந்தார். நடிப்புலகில் அவரது முன்மாதிரி என்றும் மறையாது.


    பாலையாவுக்கு மாற்று இல்லை!

    காலத்தை வெல்லும் தமிழ்ப்படங்களின் வரிசையில் 50 ஆண்டுகளைக் கொண்டாடி முடித்திருக்கிறது காதலிக்க நேரமில்லை. ஒய்.ஜி.மகேந்திரனின் முன்முயற்சியில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற காதலிக்க நேரமில்லை பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மனோபாலா, இந்தப் படத்தின் மறுஆக்க உரிமையை வாங்கியும் அதைப் படமாக்க முடியவில்லை என்று அதற்கான காரணத்தைக் கூறியபோது, அரங்கமே அதிர்ந்தது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

    காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சந்தோஷத்துடன், அந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீதரை பார்க்கச் சென்றேன். எனக்கு வாழ்த்துகள் சொன்ன அவர் நட்சத்திரங்களை தேர்வு செய்துவிட்டாயா என்றார். நான் இன்று பிரபலமாக இருக்கும் இளம் நட்சத்திரங்களின் பெயர்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வந்தேன். உடனே என்னை இடைமறித்த அவர், எல்லாம் சரி.. பாலையா கேரக்டருக்கு யாரைப் போடப்போறே? என்றார். நானும் அவர் முன்னால் அமர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் பாலையாவுக்கு மாற்றாக எனக்கு யாருமே தோன்றவில்லை. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு மறுஆக்க உரிமையை அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு வந்தேன் என்றார்.
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #996
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    ராகவேந்தர் சார் பாடல்களுக்கு நன்றி

    எஸ்வி.சார்.. என்னாச்சு ..காலங்காத்தால விஜி., செம்மீன் ஷீலான்னு ஞாபகம் க்ருஷ்ணாஜி வெல்கம் பேக்.. நீங்க கொடுத்த பாலையா தகவல்கள் சுவை.. ம்ம் நீங்க பாலையா நினைவுபடுத்தறீங்க..

    பாலையா ஒரு மிகச் சிறந்த நடிகர்..பாவமன்னிப்பில் பாலிருக்கும் பழமிருக்கும் பாடலில் பார்த்து அவர் பதறும் ஒரு காட்சி போதும்..

  11. #997
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  12. #998
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  13. #999
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    க்ருஷ்ணா ஜி பத்து நாள்ல நூறு பக்கம்..ம்ம் கங்க்ராட்ஸ் டு ஆல்..

    மேஜர் சந்த்ரகாந்த் நல்ல படம்.. பாடல்கள் படஓட்டத்தைக் குறைக்கின்றன்வாம்..அந்தக்காலம்..இ காலப் பாட்டுல்லாம் கேட்டா என்ன எழுதியிருப்பாங்க..முத்துராமன், நாகேஷ், ஜெயலலிதா(அழகு, நளினம் கூட), ஏவி எம் ராஜன் என எல்லாருக்கும் இளமை துள்ளினாலும் கூட வயதான மேஜரும் இளமையாய்த் தான் தெரிவார்!

    செளண்ட் ஆஃப் மியூசிக்..ஒரே ஒரு தடவை தான் வெகுகாலம் முன் பார்த்திருக்கிறேன்.. அதன் தமிழ் உல்டா நேற்று ராஜ் டிவியில் போட்டார்கள் ( சாந்தி நிலையம் )

  14. #1000
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •