Page 76 of 401 FirstFirst ... 2666747576777886126176 ... LastLast
Results 751 to 760 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #751
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கார்த்திக் சார்
    வாலி பதிவை மீள் பதிவு இட்டதற்கு அதில் இடம் பெற்று இருந்த வாலியின் விருப்ப பாடல்கள் மற்றும் விருப்ப படங்கள் தான் காரணம்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #752
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பிரார்த்தனை'யில் இன்னொரு பாடல் உண்டு

    'காதல் பிறந்தது ஆவல் எழுந்தது'

    சுசீலா மயக்கும் குரலில் பாடும் மோகப் பாடல்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #753
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks vaasu sir

    கவிஞ்ர் முத்துலிங்கம் அனைவரும் அறிந்த ஒரு திரைப்பட பாடல் ஆசிரியர் . அவர் பேட்டி ஒன்றில் இருந்து



    தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான். இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன். அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன். அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன். கவிஞர் சுரதா அவர்கள் "இலக்கியம்" என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும் போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.

    அப்போது கண்ணதாசன் தென்றல் என்றொரு பத்திரிகை நடாத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்
    "பறக்கும் நாவற்பழம் எது கூறுக?" என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.
    "பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது
    நான் எழுதினேன்,
    "திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
    பறக்கின்ற நாவற்பழம்"
    அப்படின்னு எழுதினேன்.
    இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.

    அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு நான் பத்திரிகைத் துறையில் தான் முதலில் பணியாற்றினேன் முரசொலி, அலையோசை ஆகியவற்றில் எல்லாம். அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன். கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். "பொண்ணுக்குத் தங்கமனசு என்ற திரைப்படத்தில் தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாடல்.



    அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது அவரிடம் உதவியாளரா இருந்தவர் ராஜா. முதலில் என்ன சொன்னாங்கன்னா கங்கை, காவிரி, வைகை இந்த நதிகள் எல்லாம் பாடுறது மாதிரி அவங்களுக்குள்ள போட்டி வந்து சண்டையிடுவதாகவும் உழவன் வந்து சமாதானம் செய்வதாகவும் ஒரு காட்சி இதை முதலில் எழுதிட்டு வாங்க அப்புறமா ட்யூன் போட்டுடுவோம் என்று கதாசிரியர் பாலமுருகன் சொன்னார். நான் எழுதிட்டுப் போனேன். பாட்டைப் பார்த்தார் ஜி.கே.வெங்கடேஷ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே நான்கு ஐந்து பேர் பாடுறதனால ராகமாலிகை மாதிரி அதாவது மாண்டேஜ் சாங் ஆ இருக்கணும். அப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும் நாம ட்யூன் போடுறோம் அதுக்கேத்த மாதிரி எழுதுங்கன்னார். ட்யூன் போட்டார் அந்த ட்யூன் டைரக்டர் மாதவனுக்குப் பிடிக்கல. அந்தப் படத்தில் அவர் இயக்குனர் இல்லை என்றாலும் அவரின் தயாரிப்பில் அவரின் உதவியாளர்கள் தேவராஜ் மோகன் டைரக்ட் பண்ற படம். இரண்டு நாள் இருந்து டியூன் போட்டார் வெங்கடேஷ் சரியா வரல. அப்புறமா ஜி.கே.வெங்கடேஷ் சொன்னார் "என்னுடைய அசிஸ்டெண்ட் பாடிக்காண்பிப்பாருய்யா அதை வச்சு எழுதுங்க"ன்னார். அப்போது இளையராஜா தத்தகாரத்தில் பாடிக் காண்பிக்க அந்த ட்யூன் நல்லா இருக்கே அதையே வச்சுக்கலாம் என்று அமைந்தது தான் அந்தப் பாட்டு. அதனால இளையராஜா இசையில் முதலில் பாட்டு எழுதியவன் என்ற பெருமை என்னைச் சாரும், அல்லது என்னுடைய பாட்டுக்குத் தான் இளையராஜா முதலில் இசையமைச்சார் என்று சொல்லலாம்.

    இதோ அந்த "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடுகின்றார்கள். இந்தப் பாடல் எண்பதுகளின் பிரபலக் குயில்களில் ஒன்றாக விளங்கிய பி.எஸ்.சசிரேகாவின் முதற்பாட்டு என்பதும் கொசுறுத் தகவல்

    பத்திரிகையாளர் ஒருவர் திரைப்பட பாடல் எழுதி வெற்றி பெறுகிறார் என்பதற்காக ஒரு பாராட்டு விழாவையே நடத்தினார் அலை ஓசை வேலூர் நாராயணன்



    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #754
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    குன்னக்குடி வித்தியாச பாடல்கள்.

    தோடி ராகம் படத்தில், குன்னக்குடி பாடி,இசையமைத்த ,அவரது மருமகன் ராம்கி எழுதிய பிரபல டப்பாங்குத்து அலம்பல் ஜாலி.



    ராஜ ராஜ சோழனின் இளைத்த கம்பீர ராஜாவாக சிவாஜி திருவுருவை தவிரவும் தேடினால் கிடைக்கும் ஒரே முத்து . இந்த பாட்டு. கண்டு கொள்ள படாமல் விடப்பட்டது குன்னக்குடிக்கு இழப்பு. ஈஸ்வரியின் மகாராஜா,மகாராணி , மெல்ல மெல்ல, க் கதை, சின்ன பெப் என்று கேட்டு மகிழவும். நல்ல வேலை வீடியோ இல்லாததால் ச..... பார்க்க தேவையில்லை.



    அதே நாகராஜன் படத்தில் (நவரத்தினம்) ஒரே கேட்கும் படியான குருவி கார பாடல். பாலமுரளியும் ஓரளவு சமாளித்திருப்பார்.குன்னக்குடி நன்றாகவே பண்ணியிருந்தார்.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #755
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரவின் மடியில் (ராகவேந்தர் இரவு போட்டி )

    சிறு வயதில் கேட்ட சுசிலாவின் இந்த தடி குரலில் எண்ணிப்பார் வாழ்வினிலே என்ற 1960 பாடல்.சவுக்கடி சந்திரகாந்தா என்ற படம்.டப்பிங் பாடலா தெரியாது. பல்லவி வித்தியாச கேட்ச் உடன், different pitching .இனிமை அல்ல. வேறானது.(Music-G.Ramanathan?)

    http://www.inbaminge.com/t/s/Savukkadi%20Chandrakantha/
    Last edited by Gopal.s; 21st August 2014 at 08:13 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #756
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    வித்யாசமான முயற்சி பாதை தெரியுது பார் என்ற நிமாய் கோஷ் பிலிம்(1960). பின்னால் நம்ம ஆஸ்தான திரிசூலம் இயக்குனர் நாயனாக அறிமுகம்,
    highlight எம்.பீ.ஸ்ரீனிவாசன் பாடல்கள்.

    இளம் எஸ்.ஜானகியின் இந்த வித்தியாச மாசில் வீணையும் ,அழகு.



    Epic Song ,பீ.பீ.எஸ்,ஜானகி இணைவில் அற்புதமான தென்னங்கீற்று.



    டி.எம்.எஸ் இன் சின்ன சின்ன மூக்குத்தியாம்.



    இதை தவிர உண்மை ஒரு நாள் வெளியாகும் என்ற லோகநாதன் பாட்டும் உண்டு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Russellmai liked this post
  10. #757
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரவின் மடியில்.

    பனித் திரை -1961 இல் வந்த படம். ஏதோ மனிதன் பிறந்து விட்டான், இருக்குமிடம் எங்கே சொல் என்ற பல பாடல்கள்.
    கே.வீ.மகாதேவன் இசையில் .

    ஒரே கேள்வி ஒரே கேள்வி .



    அந்த கால ரேடியோ வில் ஏப்ரல் 1 இல் தவறாமல் இடம் பெரும் ஜாலி பாடல்.ஏ.எல்.ஆர்,சுசீலா.



    மாமியாருக்கு ஒரு சேதி சொல்லும் சீர்காழி, லீலா.

    http://www.inbaminge.com/t/p/Panithirai/


    தப்பாக ஆயிரம் பெண்மை சேர்த்திருக்கிறார்கள். (படம்,Music Directors ரெண்டும் தப்பு).
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes Russellmai liked this post
  12. #758
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    ஒரு நாள் காலையில் சென்று விட்டு மாலை திரும்பி வந்து பார்ப்பதற்குள் எவ்வளவு விஷயங்கள்.. எவ்வளவு பக்கங்கள்..பொங்கும் பூம்புனலில் பங்கு கொண்டு பாராட்டளித்த ஒவ்வொரு உள்ளத்திற்கும் உள்ளம் கனிந்த நன்றி

    கோபால் சார் இரவின் மடியில் போட்டாலும் போட்டார்... சூப்பர் பாட்டு ஞாபகத்துக்கு வந்து மனதை துள்ள வைத்து விட்டது..

    மறக்க முடியாத பாடல்.. ஜாலியாக ஒரு பாடல்.. துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்...

    வேதா சாரின் இசையில் இரவின் மடியில் துள்ளல் பாட்டுக்கெல்லாம் முன்னோடி.. விதம் விதமான டான்ஸைப் பற்றிய அருமையான பாடல்..

    கன்னிப்பருவம் துள்ளுதுங்க.. காதல் பண்ண சொல்லுதுங்க..

    http://www.inbaminge.com/t/s/Sarasa%20B%20A/
    Last edited by RAGHAVENDRA; 21st August 2014 at 09:34 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #759
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    சின்ன வயசில் முதன் முதலில் கேட்ட போதே மனசுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வை உண்டாக்கிய பாடல்... இசையரசியின் குரலில் எவ்வளவு உணர்வுகளைக் கொண்டு வருகிறார்...
    பெண் பார்க்கும் படலத்தை ஒரு பெண்ணின் கோணத்தில் பார்க்கும் இந்த பாடலில் அந்த காலத்தில் பெண்கள் பட்ட மனப்போராட்டத்தை மிக அருமையாக சித்தரித்திருப்பார் கவிஞர்.. பாட்டின் பொருளுக்கேற்ற உணர்வுகளை பாடலில் வடித்திருப்பார் இசையரசி.

    இன்று கேட்டாலும் மனதில் அதே உணர்வை கொண்டு வரும் பாடல்..

    டி.ஆர். பாப்பாவின் சிறந்த பாடல்களுள் ஒன்று..

    விளக்கேற்றியவள் படத்திலிருந்து...

    வரிசையாய் மாப்பிள்ளை வருவாரு..

    http://www.inbaminge.com/t/v/Vilakketriyaval/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #760
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    விளக்கேற்றியவள் அந்தக் கால ரசிகர்கள் நெஞ்சில் பசுமையாய் நிலைகொண்டதற்கு முக்கிய காரணம் பாடகர் திலகமும் இசையரசியும் ஜீவனளித்த இப்பாடல்..

    இரவின் மடியில் என்றென்றும் உறங்கும் போது உடன்படுக்கை கொள்ளும் இசையின் ஒரு வடிவம்...

    விளக்கேற்றியவள் படத்திலிருந்து முத்தமா ஆசை மொத்தமா பாடல்...

    http://www.inbaminge.com/t/v/Vilakketriyaval/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •