Page 85 of 401 FirstFirst ... 3575838485868795135185 ... LastLast
Results 841 to 850 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #841
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் kku முன் இந்த ஒரு கேள்விக்கு விடை வாசு சார்
    நீங்க தான் வாத்தியார் எங்க வாத்தியார்


    நமது நடிகர்திலகம் பிரேம் ஆனந்த்தும் இந்த ஒரு விரல் பிரேம் ஆனந்தம் ஒருவரா ?

    Remembered For the interesting storyline and impressive performances by ‘Thengai’ Srinivasan, ‘Oru Viral’ Krishna Rao, Kannan, Prem Anand, Pandarinath, Radhika and Thilakam, and the good background score.
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #842
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்,

    சண்டே சென்னை வரேன். அந்த kk நகர் ஐஸ் பார்லர் கடைக்கு கண்டிப்பா அழைச்சுகிட்டு போறீங்க. சரியா? இல்லன்னா உங்க பேச்சு 'டூ'
    கண்டிப்பா போறோம் சித்ராவின் மன்னிக்கணும் அவசரத்தில் எழுதி விட்டேன் (i மீன் கடையின் உள்ளே ) உள்ள ஐஸ் ai
    சாப்பிடுவோம்

    Last edited by gkrishna; 22nd August 2014 at 05:40 PM.
    gkrishna

  4. Likes chinnakkannan liked this post
  5. #843
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எங்கிட்டுருந்து தான் ஸ்டில்ஸ் கிடைக்குதுதோ..கடவுளே கடவுளே

    ஆமா ஏன்..இன்றைய ஸ்பெஷல் போடலை( நான்கேட்டுட்டேன்..) டி.ஆர்.ராஜகுமாரி பாட்டு தானே

  6. #844
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சி கே சார்
    நீங்கள் சொன்ன படி சென்சர் செய்ய பட்ட பதிவு
    இதுவும் சித்ரா போட்டோ தானே 50 ml
    Last edited by gkrishna; 22nd August 2014 at 07:27 PM.
    gkrishna

  7. Likes chinnakkannan liked this post
  8. #845
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ஸ்பரிசம் தலைப்பு மலையாள வாடையில் இருக்கும்
    1982 இல் வெளிவந்த படம்
    எஸ் வீ சேகர் ஸ்ரீலட்சுமி னு ஒரு நடிகை கதாநாயகி இவங்க வேறு எதாவது படத்தில் நடித்தார்களா என்று நினைவு இல்லை
    செய்தி வாசிப்பாளர் ஷோபனா அவர்களின் கணவர் ரவி இசை அமைத்து உள்ள படம்

    பாலாவின் ஒரு பாடல் நினைவில் உண்டு
    'ஊடல் சிறு மின்னல் ' - மெல்லிசை மன்னர் மாதிரி ஒரே பாட்டில் பல tune போட்டு இருப்பார் .

    விடியோ இருக்கா னு கேட்டா இதோ என்று சொல்ல எங்கள் மது அவர்கள் இருக்கிறார்களே ஹெல்ப் ப்ளீஸ் மது சார்

    http://www.inbaminge.com/t/s/Sparisam/
    கிருஷ்ணாஜி.. எல்லாப் பாட்டும் சிக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா..

    இது சிக்கிடிச்சி


  9. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #846
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    தமிழ் ஹிந்து இன்றைய ஸ்பெஷல்

    தமிழகத்தில் சக்திவாய்ந்த ஊடகமாகத் திகழும் தொலைக்காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை விஸ்தரித்தவர் பால கைலாசம். அவரது அகால மரணத்தை முன்னிட்டு அவருடைய பங்களிப்புகளையும் நினைவுகளையும் தொகுப்பது துரதிர்ஷ்டவசமானது. இயக்குநர் பாலச்சந்தரின் மகனான கைலாசத்தின் ஆளுமையில், அவரது பிரபல பின்னணி எந்தத் தாக்கத்தையும் செலுத்தியதில்லை. மிக எளிமையாகத் திரைக்குப் பின்னே மதிப்பு வாய்ந்த பல காரியங்களைச் செய்தவர் அவர். தனது நண்பர்களிடமும், தன்னிடம் வேலை பார்த்தவர்களிடமும் அவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அவரது மரணத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் எழுதப்பட்ட குறிப்புகள் காண்பிக்கின்றன.

    எண்பதுகளில் பத்திரிகைத் துறை சார்ந்து பல மாற்றங்களை உருவாக்கக் கனவு கண்ட இளைஞர்கள் சிலர் தொடங்கிய பத்திரிகை திசைகள். பின்னாளில் பிரபல எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் உருவான மாலன் இதற்கு ஆசிரியராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த பால கைலாசம், திசைகள் பத்திரிகையில் பகுதிநேர போட்டோ எடிட்டராகப் பணிபுரிந்தார். புகைப்படப் பணியின் மூலம்தான் தனது துறை காட்சி ஊடகம் என்பதைக் கண்டுகொண்டார்.

    அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் ஒலிபரப்புப் பிரிவில் பயிற்சி பெற்ற கைலாசம் தனது ஆய்வுப் படமாக தி ட்வைஸ் டிஸ்கிரிமினேடட்ஐ எடுத்தார். தமிழகத்தில் சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள், கிறிஸ்தவத்திற்குச் சென்ற பின்னும் பாதிக்கப்படுவதைப் பற்றிய படம் இது.

    1991-ல் அவர் எடுத்த வாஸ்து மரபுதான் அவருக்குச் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆவணப்படத் துறை இன்னும் உள்ளடக்கம் மற்றும் சந்தை சார்ந்து வளர்ச்சியடையாத நிலையில் வாஸ்து மரபு என்ற இப்படைப்பு தொழில்நுட்பம், உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாடு சார்ந்து, சிறந்த படைப்பாக விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. மறைந்த சிற்பி கணபதி ஸ்தபதியின் அபாரமான சிற்ப சாஸ்திரம் குறித்த பதிவு இது. கோவில்களையும், நாம் வணங்கும் கடவுள் சிற்பங்களையும் உருவாக்கும் ஒருவனின் மனம் சார்ந்த ரகசியங்களையும் இப்படம் திறக்கிறது. சிற்ப சாஸ்திரம் என்பது கணிதம், கலை, அறிவியல் அனைத்தும் கலக்கும் இடம். கல்லையும், உலோகத்தையும் செதுக்கும் சிற்பியின் மன ஆளுமை மீது கவனம் குவித்த அற்புதப் படைப்பு வாஸ்து மரபு ஆவணப்படம் என்கிறார் பால கைலாசத்தின் நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சொர்ணவேல்.

    ஒலி வடிவமைப்புத் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் பால கைலாசம். காட்சியழகு, கதை சொல்லல் ஆகியவற்றோடு பின்னணியில் ஒலிக்கும் சத்தங்களின் யதார்த்தமும் ஒரு படத்துக்கு மிக அவசியம் என்று கருதினார். ஒலியமைப்பின் மீதான அவரது ஈடுபாட்டுக்கு அவரும், ஆவணப்பட இயக்குநர் சசி காந்தும் சேர்ந்து காவிரி நதியை எடுத்த வெளி படம் உதாரணம்.

    2009-ல் அவர் எடுத்த நீருண்டு நிலமுண்டு, நீருக்கும் சுற்றுச்சூழல் நலத்துக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் படம். அதிகாரத்துவமும், மக்களின் மீதான அலட்சியமும் கொண்ட அரசு அதிகாரத்துவ அமைப்பிலேயே சில நல்ல அதிகாரிகளின் தொடர்ந்த முயற்சிகளின் மீது கவனம் குவிக்கும் ஆவணப்படம் இது. தனிநபர்களின் மனதில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் அமைப்பில் சிற்சில மாற்றங்களையாவது ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் படைப்பு அது.

    அமெரிக்காவில் திரைப்படக் கல்வியை முடித்துவிட்டு வந்தவுடன், சினிமாத் துறை சார்ந்த பெரும் கனவுகளுடன் இறங்கியவர் பால கைலாசம். கி.ராஜநாராயணனின் எழுத்துகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கி.ரா.வின் கதையை திரைப்படமாக இயக்க விரும்பினார். அவருக்காக உருவாக்கப்பட்ட கதைதான் கி.ராஜநாராயணனின் பிரபல நாவலான அந்தமான் நாயக்கர்.

    தமிழ் சினிமாவில் அன்று பெரிய பின்னணி உள்ளவர்கள்கூடக் குறைந்தபட்ச சோதனைகளைச் செய்ய முடியாத காலகட்டத்தில் கைலாசத்தின் சினிமா ஆசை நிறைவேறவில்லை.

    தொலைக்காட்சி ஊடகம் மீதான அரசின் பிடி விடுபட்ட நிலையில், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஊடக முயற்சிகள் மெதுவாக உருவாகத் தொடங்கிய காலம் அது. கே. பாலச்சந்தரின் பார்வையாளர்கள் தொலைக்காட்சியின் முன் வந்து அமர்ந்துவிட்ட நாள்கள் அவை.

    90-களின் தொடக்கத்தில் உயர்ரக தொழில்நுட்பத்துடன் அவர் மின் பிம்பங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று மெகா சீரியல்கள் எனச் சொல்லப்படும் கதைத்தொடர்கள், நகைச்சுவைத் தொடர்கள், த்ரில்லர்கள், செய்தி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து வடிவங்களும் அவரது சமையலறையில்தான் முழுமை பெற்றன.

    ரயில் சினேகம், கையளவு மனசு, மர்ம தேசம், கதையல்ல நிஜம், நையாண்டி தர்பார் என பல வகைகளில் அவர் தயாரித்த படைப்புகள் இன்றும் சிறந்த முன்மாதிரிகளாக உள்ளன.

    கி. ராஜநாராயணன் தொடங்கி பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், ம.வே. சிவகுமார், பா. ராகவன் வரை பல எழுத்தாளர்களைத் தனது வேலைகளில் ஈடுபடுத்தியவர் அவர். விரிவான வாசிப்பும், பிறரின் கருத்துகளையும் விமர்சனங்களையும் கூர்ந்து கேட்கும் நிதானமும் உடையவர்.

    தான் சம்பந்தப்படாத திரைப்பட முயற்சிகளிலும் தானே முன்வந்து தனது ஒலி வடிவமைப்புத் தொழில்நுட்பம் தொடர்பான அறிவையும், தன்னிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகளையும் பிறருக்கும் பகிர்ந்துகொள்பவராக இருந்துள்ளார்.

    பரபரப்பு, வன்முறை சார்ந்த இன்றைய தொலைக்காட்சி ஊடகத் துறையில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமே கவனம் கொள்ளாத ஆரோக்கியமான செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அறிவுபூர்வமான, உண்மைக்கு நெருக்கமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை உருவாக்குவது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. அது பெரிதாக நிறைவேறவில்லை.

    சிலருக்கு அவர்களின் பின்னணி அவர்கள் நினைத்ததை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றிக்கொள்ள உதவும். சிலருக்கு அந்தப் பின்னணியும் அந்தஸ்துமே அவர்களது கனவை அடையவிடாமல் தாமதப்படுத்திக்கொண்டிருக்கும். கைலாசத்தைப் பொருத்தவரை மரணம் முந்திவிட்டது.
    gkrishna

  11. Thanks chinnakkannan thanked for this post
  12. #847
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    கிருஷ்ணாஜி.. எல்லாப் பாட்டும் சிக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா..

    இது சிக்கிடிச்சி
    மது சார்
    உண்மையில் காலையில் இருந்து தேடி தேடி தேடி தேஞ்சு போச்சு

    நன்றி சொல்லவே என் மன்னவா வார்த்தை இல்லையே உனக்கு
    gkrishna

  13. #848
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுஜி,

    'மனிதன்' படத்தில் வரும் 'ஏதோ நடக்கிறது' பாடலைச் சொல்கிறீர்களா? அப்படியென்றால் தங்களுக்குத் தெரியாதது அல்ல. அப்பாடல் ஜேசுதாஸ், சித்ரா இணைந்து பாடியது.
    சாரிங்கோ.. அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிச்சுட்டேன்.. நான் சொல்ல வந்த பாடல் " மனதில் என்ன நினைவுகளோ?"

  14. #849
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி தமிழ் ஹிந்து



    சென்னையும் சினிமாவும்: குதிரைகள் தயவால் உருவான கோடம்பாக்கம்!

    மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட சென்னையை ஆட்சி செய்ய இங்கிலாந்து அரசால் கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மதராஸ் கவர்னராக இருந்தார். அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே, வெள்ளையர்களுக்கு உதவி வேலைகளைச் செய்ய அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி ஜார்ஜ் டவுனாக உருவானது. பிறகு கோல்கொண்டா சுல்தானின் நிர்வாகத்தில் இருந்த திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர் ஆகிய கிராமங்களை விலைக்கு வாங்கி நகரின் எல்லையை விரிவுபடுத்தினார் கவர்னர் யேல். கோட்டைக்குள் இருந்த குதிரை லாயத்தால் சுகாதாரப் பிரச்சினை எழுந்தது. இதனால் குதிரைகளை மேய்க்க பிளாக் டவுன் அதாவது கறுப்பர்கள் நகரம் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கே போதிய மேய்ச்சல் நிலம் இல்லை. மேய்ச்சல் நிலமும் நீர்வளம் நிறைந்த பகுதியைத் தேடியபோது, கண்களில் பட்டது ஆற்றுக்கரையில்(அடையாறு) இருந்த திருப்புலியூர். அதுதான் இன்றைய கோடம்பாக்கம்.

    ஆடு மாடுகளை நம்பி வாழும் இடையர்குடி மக்கள் இங்கே அதிகம் வாழ்ந்தனர். கர்நாடக நவாபுகளின் ஆதிக்கத்தில் இருந்த இந்தப் பகுதி, அவர்களது குதிரைப்படை லாயமாகவும் இருந்தது. நவாபுகளிடமிருந்து முதல்தரமான குதிரைகளை வாங்கிய யேல் நிர்வாகம், புலியூருக்குத் தனது குதிரைகளின் லாயத்தை மாற்றியது. நவாபுகள் தங்கள் குதிரைப்படை லாயத்தை உருது மொழியில் கோடா பாக் என்று அழைத்தனர்.

    கோடா பாக் என்பதற்குக் குதிரைகளின் தோட்டம் என்பது பொருள். கோடா பாக்கே காலப்போக்கில் கோடம்பாக்கம் என்று மருவியதாகச் சொல்கிறார்கள் சென்னை வரலாற்றை ஆய்வுசெய்தவர்கள். இப்படிப்பட்ட கோடம்பாக்கம் எப்படிக் கனவுகளை உற்பத்தி செய்யும் கோலிவுட்டாக மாறியது?

    புரசைவாக்கத்திலிருந்து முதல் கனவு

    அரிச்சந்திரா படத்தின் மூலம் பால்கே அடைந்த புகழைப் பார்த்து, மவுனப் படத்தயாரிப்பில் ஈடுபடச் செல்வந்தர்கள் பலர் முன்வந்தார்கள். அன்றைய மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆர்.நடராஜ முதலியாருக்கும் அப்படியொரு ஆசை உண்டானது. அமெரிக்காவில் தயாராகும் மோட்டார் கார்களையும் அவற்றுக்கான வாகன உதிரிப்பாகங்களையும் ரோமர் டான் & கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த இவர், தனது அலுவலகம் இயங்கிவந்த புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையை 1915-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார். அதையே ஸ்டூடியோவாக மாற்றி அமைத்தார். அதற்கு இந்தியா பிலிம் கம்பெனி என்று பெயரும் சூட்டினார். பிறகு சினிமா கேமரா வேண்டுமே? கேமரா வாங்க கல்கத்தா செல்லும் முன் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

    முதலியாரின் அதிர்ஷ்டமோ என்னவோ, அவர் நினைத்த நேரத்தில் கர்சன் பிரபுவைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்க மதராஸ் வந்திருந்தது இங்கிலாந்து படக்குழு ஒன்று. அந்தக் குழுவின் கேமராமேன் ஸ்டீவர்ட் ஸ்மீத்தை அழைத்து வந்து தனது ஸ்டூடியோவைக் காட்டினார் முதலியார். அவரது குழுவுக்கு ஆவணப்படமெடுக்க மூன்று கார்களையும் கொடுத்து உதவினார்.

    அன்று முதலியார் விற்றுவந்த ஒரு காரின் விலை பிரிட்டிஷ் இந்தியப் பணத்துக்கு வெறும் ஆயிரம் ரூபாய். முதலியாரின் உதவியில் நெகிழ்ந்த ஸ்டீவர்ட் அவருக்குச் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொடுத்தார். கூடவே மைக்கேல் ஓமலேவ் என்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    37 நாட்கள் 50 ஆயிரம் வசூல்

    கல்கத்தா சென்று கேமரா வாங்கி வந்த முதலியார், உடனடியாக கீசக வதம் என்ற மகாபாரதக் கிளைக் கதையைத் தேர்வுசெய்து, படத் தயாரிப்பில் இறங்கினார். கதை எழுதி, காட்சிகளை அமைத்து மட்டுமல்ல, நடிகர்களை இயக்கியது, கேமராவை இயக்கியது, எடிட் செய்தது, உட்பட மவுனப் படக் காலத் தமிழ்சினிமாவின் முதல் டி.ராஜேந்தர் அவர்தான். 37 நாட்களில் 6 ஆயிரம் அடிகள் படம் எடுத்து முடித்ததும், சும்மா பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருக்க ஒரு வெற்றிகரமான மோட்டார் வியாபாரியால் முடியுமா என்ன? மவுனப் படம் என்பதால் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனம் அப்போது டைட்டில்களாக எழுதப்பட்டு ஆப்டிகல் முறையில் சேர்க்கப்ப்டும்.

    கீசக வதம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வசன டைட்டில்களுடன் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்கான இந்தி டைட்டில்களை எழுதியவர் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி என்ற ஆச்சரியமான தகவலும் கிடைக்கிறது. இதைவிட ஆச்சரியம் கடல் கடந்து வெளிநாட்டு மார்க்கெட்டைச் சந்தித்தது தமிழின் முதல் மவுனப் படம். ஆமாம்! பர்மா, மலேயா, பினாங்கு ஆகிய இடங்களில் திரையிடப்பட்டது. 35 ஆயிரம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் முதலியாருக்கு 15 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. அதாவது கீசக வதத்தின் மொத்த வசூல் 50 ஆயிரம்.

    இதன் பிறகு வரிசையாகப் புராணக் கதைகளை படமாக எடுத்துக் குவித்தார் முதலியார். சினிமா தொழில் அவருக்குக் கொட்டிக்கொடுத்தது. ஆனால் எதிர்பாராமல் அவரது மில்லர்ஸ் சாலை ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் அவரது ஒரே மகன் அகால மரணமடைந்தார். இதனால் சினிமாவையே வெறுத்தார் தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான முதலியார் ஸ்டூடியோவை விற்றுவிட்டு அந்தத் தொழிலிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் சினிமாவுக்குத் திரும்பவே இல்லை.

    மதராஸைப் புரட்டிப்போட்ட பேசும்படம்

    மதராஸின் முதல் சினிமா தியேட்டர் எது என்பதில் இன்னும் சர்ச்சை இருந்தாலும், மவுனப் படங்களுக்கான முதல் திரையரங்கைக் கட்டியதாகச் சொல்லப்படும் வெங்கையா சினிமா தயாரிக்க முன்வந்தார். இதற்காகத் தனது மகன் பிரகாஷ் என்பவரை லண்டனுக்கு அனுப்பி கினிமட்டோகிராஃப் படித்துவரச் செய்தார். வந்தவேகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் தனது அப்பாவின் ஸ்டார் ஆப் தி ஈஸ்ட் பிலிம் கம்பெனிக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஸ்டூடியோ அமைத்தார். இந்த ஸ்டூடியோவின் பரப்பளவு 600 ஏக்கர். இங்கே பல வெற்றிப்படங்கள் தயாராகின.

    இந்தக் காலகட்டத்தில் மவுனப் படங்களின் யுகம் முடிந்து பேசும் படக் காலத்தைத் தொடங்கி வைத்த காளிதாஸ் திரைப்படம் இம்பீரியல் மூவி டோன் ஸ்டூடியோவில் தயாரானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் முதல் படம் காளிதாஸ்தான். படத்தை இயக்கியவர் எச்.எம். ரெட்டி.

    1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, இன்று முருகன் தியேட்டராக இருக்கும் சினிமா சென்ட்ரல் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துக்காகப் பொது இடங்களில் வைக்கப்பட்ட தட்டி விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் தமிழ் பேசும் படத்தைக் காண, ரசிகர்கள் வெளியூர்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வர, சினிமா சென்ட்ரலில் பிரிட்டிஷ் போலீசாரின் பாரா போடப்பட்டது. இந்தப் படத்தில் பூசாரியாக நடித்த எல்.வி.பிரசாத், பின்னாளில் கோடம்பாக்கத்தின் மிகப் பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டூடியோவைக் கட்டியவர்.

    பிறகு கோடம்பாக்கத்தின் பக்கத்து வீடாகிய கீழ்ப்பாக்கத்தில் 1934-ம் ஆண்டு ஸ்ரீனிவாசா சினிடோன் என்ற ஸ்டூடியோவைத் தொடங்கினார் நாராயணன். தமிழின் முதல் பேசும் படம் என்று கூறப்படும் னிவாச கல்யாணம் படமாக்கப்பட்டதும் இங்கேதான். இங்கே 100க்கும் அதிகமான தெலுங்கு, கன்னடம், மலையாளப் பேசும் படங்கள் படமாக்கப்பட்டன. இதனால் தென்னிந்தியாவில் அன்று பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் பலரும் மதராஸில் ஜாகை செய்தார்கள்.

    முதலில் காரைக்குடியில் இயங்கிவந்த தனது ஸ்டூடியோவை 1948-ல் வடபழனிக்கு மாற்றினார் ஏ.வி.எம் செட்டியார். பிறகு பி.என். ரெட்டி தொடங்கிய வாகினி ஸ்டூடியோவும் அருகிலேயே அமைய, எல்லீஸ்.ஆர். டங்கன் அதிகப் படங்களை இயக்கிய மூவிடோன் ஸ்டூடியோ கிண்டியில் அமைந்தது. இப்படிக் கோடம்பாக்கத்தைச் சுற்றி உருவான 28 ஸ்டுடியோக்களில் இன்று எஞ்சியிருப்பது ஏ.வி.எம்., பிரசாத் ஸ்டுடியோ உட்பட ஒரு சிலவற்றின் உள்ள சில தளங்கள் மட்டும்தான்.

    கோடம்பாக்கம் கனவுத் தொழிற்சாலை என்பதற்கு அடையாளமாக இன்று அங்கே ஒரு திரையரங்கு கூட இல்லை. கோடம்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான், ஜெயம் ரவி போன்ற பிரபலங்கள் குடியிருப்பதால் தனக்கும் திரைக்குமான உறவை இன்னும் இழக்காமால் இருக்கிறது குதிரைகளின் தயவால் உருவான கோடம்பாக்கம்.
    gkrishna

  15. #850
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சித்ராவின் படங்களில் இதயமே தெரிகிறது. அதாவது இதயம் நல்லெண்ணெய் விளமபரம் மனசுக்குள் ஓடுது... அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம். அதனால்...

    சாமந்திப்பூ ஷோபாவின் படம் இன்னொரு படத்தை நினைவு படுத்தி விட்டது. எண்பதுகளில் வெளிவந்த "பொன்னகரம்" படத்தில் ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    குரல்களில் "முத்துரதமோ முல்லைச்சரமோ" என்ற பாடல் நினைவுக்கு வந்தது. பாடலாசிரியர் பேர் சுல்தான்-னு போட்டிருக்கு.

    அதிலேயே ஜேசுதாஸ் கூட "வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி" என்று
    ஒரு பாட்டு பாடுவார்.

    வீடியோ கிடைக்கவில்லை. ( மொத்தப் படத்துக்கும் வீடியோ இருக்குது. முழுசா பார்க்க நேரம் ஏதுங்கோ ? )


  16. Thanks gkrishna thanked for this post
    Likes gkrishna liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •