Page 274 of 400 FirstFirst ... 174224264272273274275276284324374 ... LastLast
Results 2,731 to 2,740 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #2731
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post

    நல்ல ரசிகர் - நல்ல விமர்சகர் என்ற முறையில் உங்கள் ''மாட்டுக்கார வேலன் '' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோபால் .
    -------------------------------
    எனக்கு ஒன்றும் தடையில்லை எஸ்.வீ.




    எனக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள். சர்வாதிகாரி,மலைக்கள்ளன்,நாடோடி மன்னன்,பாசம்,கலையரசி,பெரிய இடத்து பெண் படகோட்டி,எங்க வீட்டு பிள்ளை,ஆசை முகம்,ஆயிரத்தில் ஒருவன்,அன்பே வா,பறக்கும் பாவை,குடியிருந்த கோயில் ,அடிமை பெண்,மாட்டுகார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை..

    அவர் நடிப்பில் என்னை கவர்ந்தவை. மலை கள்ளன்,கொடுத்து வைத்தவள்,எங்க வீட்டு பிள்ளை,அன்பே வா,பெற்றால்தான் பிள்ளையா,குடியிருந்த கோயில்,நீரும் நெருப்பும்.

    ---------------
    ஹைய்யோ..... ஹைய்யோ...

    நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு,

    பாரத் பட்டம் பற்றி எல்லாம் இப்போது தேவையில்லாமல் கருத்து கூறியுள்ளீர்கள். அதற்கு தலைவரே பதிலளித்துள்ளார். தனக்கு கிடைத்த பட்டத்தை கலையுலகுக்கு வழங்கிய வள்ளல் அவர் என்பதோடு, உங்களைப் போன்றவர்கள் சர்ச்சை கிளப்பியபோது அதை தூக்கி எறிந்தார்.

    கண்ணுக்கும் காதுக்கும் மனதுக்கும் சிரமம் தராமல் நடிப்பது பற்றி குறிப்பிடுகிறீர்கள். ஓஹோ... புரிந்தே விட்டது. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, சந்திப்பு, எமனுக்கு எமன் படங்கள் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் படங்களையும் அதில் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பையும் விமர்சிக்கத் தயங்காதவராயிற்றே நீங்கள்.

    எங்கள் பக்கம் இருந்து indirect dig இருப்பதாகவும் முதலில் அதை பாருங்கள் என்றும் திரு.எஸ்.வி.க்கு கூறுகிறீர்கள். நாங்களும் அதையேதான் உங்களுக்கு கூறுகிறோம். நான் காஞ்சித் தலைவன் படத்தில் தலைவரின் மல்யுத்த சண்டைக் காட்சியைப் பாராட்டி எழுதினால் பதிலுக்கு இதுதான் ஒரிஜினல் மல்யுத்தம் என்றும் 3 அடி அடிக்கும் சலுகை மட்டுமே வில்லனுக்கு உண்டு என்றும், 1964 தீபாவளிக்கு காணாமல் போன காஸ்ட்லி கலர் படங்கள் என்றும், தங்கள் பக்கத்தில் indirect digs மட்டுமல்ல, நேற்று கூட ‘யாரை எப்போது எப்படி தனக்கு உதவிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர்.’ என்று direct dig (அது பழைய பதிவு என்றாலும் கூட) இடம் பெறுகிறதே. முதலில் அதைப் பாருங்கள். தலைவர் எப்போதும் யாரையும் பயன்படுத்திக் கொண்டதில்லை. அவர்தான் மற்றவர்களுக்கு பயன்பட்டும் உதவியும் இருக்கிறார். திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு கூட அவர் கோரிக்கை வைக்காமலே உதவியிருக்கிறார்.

    நாகப்பட்டிணத்தில் அவரது மகள் வீட்டில் குடியிருந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்தும் அதனால் படப்பிடிப்பில் சோகமாக இருந்த திரு.சிவாஜி கணேசன் அவர்களிடம் திரு.விஜயகுமார் விசாரிக்க, அவர் விஷயத்தை சொன்னதும் உடனே விஜயகுமார் முதல்வராக இருந்த தலைவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். ‘இதை தம்பி (சிவாஜி கணேசன்) ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று கூறிய தலைவர், உடனடியாக நாகப்பட்டிணம் போலீசாரிடம் பேசி அடுத்த 20 நிமிடத்தில் வீட்டை மீட்டுக் கொடுத்ததை தினத்தந்தி நாளிதழில் திரையுலக வரலாறு தொடராக வந்தபோது திரு.விஜயகுமார் தெரிவித்திருந்தாரே?

    திரு.சிவாஜி கணேசன் அவர்களை நாங்கள் போட்டியாளராகவே கருதவில்லை. அவர் பாணி வேறு. தலைவரின் பாணியே வேறு. ஒரு காலத்தில் போட்டி இருந்திருக்கலாம். 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எங்கள் போட்டியாளராக திரு.கருணாநிதியைத் தான் பார்க்கிறோம்.

    உங்கள் திரியில் எழுத்து வன்மையும் விஷய ஞானமும் உடையவர்கள் என்று என் மனதில் ஒரு பட்டியல் உண்டு. அதில் உங்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், சமயத்தில் நீங்கள் இப்படி காமெடி செய்வது வேடிக்கை.

    சரி.. போகட்டும். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவரின் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்பதிலும் எங்கள் ரசனையோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்பதிலும் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்களே மேலே குறிப்பிட்டது போல உங்களுக்குப் பிடித்த மாட்டுக்கார வேலன் திரைப்பட விமர்சனத்தை எப்போது எழுதப் போகிறீர்கள்? நவம்பர் 7ல் பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள். அந்தப் பிறந்த நாளில் உங்கள் எழுத்துக்களால் தலைவருக்கு புகழ்மாலை சூட்டினால் பெருமகிழ்ச்சி அடைவோம்.

    சரி... கிட்டே வாருங்கள்... இன்னும் கொஞ்சம்.. அட.. பயப்படாதீர்கள்... ஒன்றும் செய்துவிட மாட்டேன். ..எங்கே? காதைக் கொடுங்கள்... (உங்களுக்கு தலைவரை உள்ளூர பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அது வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே தலைவரைப் பாராட்டும் உங்கள் நண்பர்களை திட்டுவது போல நடிக்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்கள் இரண்டாவது மகனுக்கு தெய்வமகன் பட பாதிப்பால் விஜய் என்று பெயர் வைத்ததாக நீங்கள் கூறிக் கொண்டாலும் ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் தலைவரின் பெயர் விஜய் என்பதால் அந்தப் பெயரை வைத்தீர்களோ? என்று கூட எங்களுக்கு சந்தேகம் உண்டு. நீங்கள் மட்டும் என்ன சும்மாவா? குமரிக் கோட்டத்தில் தலைவரின் பெயர்தானே உங்கள் பெயர். இதற்காகவே உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தலைவரின் ஆசிகள் உண்டு. தலைவரின் ரசிகர்கள், ஆதரவாளர்கள், அதையும் தாண்டிய விசுவாசிகள் எல்லா தளங்களிலும் உண்டு. அவர்கள் எங்கே, எப்படி, எந்த ரூபத்தில் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் அந்தப் பக்கம் இருக்கிறீர்கள். ம்.. ஜமாயுங்கள்...) இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும். ஹைய்யோ.. ஹைய்யோ.... நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Thanks ainefal thanked for this post
    Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2732
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் கலை வேந்தன் சார்

    நவரசம் ததும்பும் உங்கள் பதிவு அருமை . நண்பர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .இனி நல்லதே நினைத்து நல்லதே பதிவிடட்டும் . வாழ்த்துக்கள் .

  5. #2733
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


  6. Likes orodizli liked this post
  7. #2734
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன்



  8. Likes orodizli liked this post
  9. #2735
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes orodizli liked this post
  11. #2736
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    FROM FRIDAY ONWARDS -MADURAI - MURUGA A/C DTs - Grand Gala Opening - FB


  12. Thanks orodizli thanked for this post
  13. #2737
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  14. #2738
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    நான் காஞ்சித் தலைவன் படத்தில் தலைவரின் மல்யுத்த சண்டைக் காட்சியைப் பாராட்டி எழுதினால் பதிலுக்கு இதுதான் ஒரிஜினல் மல்யுத்தம் என்றும் 3 அடி அடிக்கும் சலுகை மட்டுமே வில்லனுக்கு உண்டு என்றும்,

    அவர்தான் மற்றவர்களுக்கு பயன்பட்டும் உதவியும் இருக்கிறார். திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு கூட அவர் கோரிக்கை வைக்காமலே உதவியிருக்கிறார்.

    நாகப்பட்டிணத்தில் அவரது மகள் வீட்டில் குடியிருந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்தும் அதனால் படப்பிடிப்பில் சோகமாக இருந்த திரு.சிவாஜி கணேசன் அவர்களிடம் திரு.விஜயகுமார் விசாரிக்க, அவர் விஷயத்தை சொன்னதும் உடனே விஜயகுமார் முதல்வராக இருந்த தலைவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். ‘இதை தம்பி (சிவாஜி கணேசன்) ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று கூறிய தலைவர், உடனடியாக நாகப்பட்டிணம் போலீசாரிடம் பேசி அடுத்த 20 நிமிடத்தில் வீட்டை மீட்டுக் கொடுத்ததை தினத்தந்தி நாளிதழில் திரையுலக வரலாறு தொடராக வந்தபோது திரு.விஜயகுமார் தெரிவித்திருந்தாரே?


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/COLOR]
    திரு கலைவேந்தன் சார்

    வணக்கங்கள் !

    என் பெயரை குறிப்பிட்டே நீங்கள் எழுதலாம். மல்யுதம் பற்றி நான் எழுதியதை ஒத்துகொள்வதில் எனக்கு தயக்கமே இல்லை. காரணம் நான் உண்மையை தான் எழுதினேன்.

    என்னுடைய பதிவுகள் என்றுமே பதில் பதிவுகளாகவே என்றும் இருந்துள்ளது. எந்த CONTROVERSY பதிவும் நான் துவக்கியதில்லை.

    காஞ்சி தலைவன் காட்சி பற்றி நீங்களோ மற்ற நண்பர்களோ "வேறு எவரும் " அல்லது "வேறு எந்த நடிகரும் " என்பதை குறிக்கும் வகையில் எழுதியிருகாத பட்சத்தில் நானும் அந்த காட்சியை பற்றி எழுதியிருக்க மாட்டேன்.

    நீங்கள் எப்படி எழுதுகிறீர்களோ அதே முறையில் தான் நான் பதில் பதிவு செய்தேன் VIDEO காட்சியுடன். காட்சியை விவரித்தது பொதுவாகதான் யாரையும் குறிப்பிட்டு அல்ல. ஆகையால் தான் அந்த பதிவில் " இப்படி இயற்கையாக சண்டை காட்சி இருந்தும் நடிகர் திலகம் அவர்கள் ஒரு ACTION ஹீரோவாக அங்கீகாரம் பெறவில்லை மாறாக ACTING HERO வாக அங்கீகாரம் " என்று எழுதியிருந்தேன்.

    உங்களுக்கு அல்லது மற்றவர்க்கு அது மனவருத்தத்தை அளித்திருக்குமேயானால் AM EXTREMELY SORRY !

    மேலும் நடிகர் VIJAYAKUMAR அவிழ்த்து விட்டுள்ள (அப்படி அவர் அவிழ்த்து விட்டிருந்தால் ) அந்த கதை நீங்கள் அனைவரும் வேண்டுமானால் நம்பலாம் ...பெருமை படலாம்...ஆனால் நடிகர் திலகம் அவர்களை நன்கு அறிந்தவர் எவரும் இதை நம்ப மாட்டார்கள். காரணம் ...

    நடிகர் திலகம் அவர்களின் தாயார் மறைந்து சில நாட்களே ஆகியிருந்தும் வசந்த மாளிகை படபிடிப்பில் கலந்துகொண்டவர் நடிகர் திலகம். நடித்தது காதல் காட்சி..அதில் துளி கூட தன்னுடைய விலைமதிக்கமுடியாத இழப்பை அந்த சோகத்தை தனது தாய் இறந்த துக்கத்தை காட்டாமல், அதன் சாயல் கூட தெரியாமல் நடித்திருப்பார்..மயக்கமென்ன இந்த மௌனமென்ன பாடல் காட்சியில் !!

    அப்படி பட்ட நடிகர் திலகம் ...ஒரு சாதாரண நிலஆக்கிரமிப்பு விஷயத்துக்காக ஷூட்டிங் SPOT இல் சோகமாக இருந்தாராம் ...அவருடைய சோக முகத்தை பார்த்து விஜயகுமார் கேட்டாராம் ...அவர் சொன்னாராம் ..உடனே முதல்வருக்கு இவர் போன் போட்டாராம்...20 நிமிடத்தில் எல்லாம் மங்களம் ...என்று எழுதினால் அதை விட பொய்மையின் உச்சம் இருக்கவே முடியாது திரு கலைவேந்தன்.

    காரணம்...

    1)நடிகர் திலகம் அவர்களுக்கு MGR அவர்களை நன்றாக தெரியுமா அல்லது விஜயகுமாருக்கு MGR அவர்களை நன்றாக தெரியுமா?

    2) நடிகர் திலகம் அவர்களுக்கு புதுடில்லி வரை மிக பெரிய செல்வாக்கு மற்ற எவரை காட்டிலும் 1956 முதலே இருந்துள்ளது. அதற்க்கு சிறு உதாரணம் : மக்கள் திலகம் அவர்கள் உடல் நிலை சரியில்லாதபொது பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் திரு MGR அவர்களை வந்து சந்தித்தே ஆகவேண்டும் என்று அவரது காரியதரசிக்கு COMMAND செய்தவர் நடிகர் திலகம்.

    நடிகர் திலகம் கூறுவதன் SERIOUSNESS புரிந்து பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் சென்னை வந்து திரு MGR அவர்களை சந்தித்து அவர் உடல் நிலை தேற ஆவன செய்வதாக வாக்குறிதி கொடுத்து சென்றார் என்றால் நடிகர் திலகத்தின் செல்வாக்கு பற்றி நான் சொல்லத்தேவை இல்லை.

    அப்படி ஒரு செல்வாக்கு இருந்தும், அவர் இறக்கும் வரையில் தன்னுடைய செல்வாக்கை எந்த ஒரு சுய லாபத்திற்கும் அதை USE ஒ MIS USE ஒ செய்ததில்லை !

    ஆகவே இந்த ஆக்கிரமிப்பு வழக்கெல்லாம் ஒரு விஷயமே அல்ல. It is just a petty case. மேலும் நடிகர் திலகம் தரப்பில் இருந்து ஒரு கம்ப்ளைன்ட் கூடவா கொடுத்திருக்க மாட்டார்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ?

    NOT EVEN INSPECTOR...EVEN ஒரு CONSTABLE நினைத்தால் கம்ப்ளைன்ட் கொடுத்தவர் சார்பில் பிரச்சனையை சரிகட்டிவிடுவார்.

    இதற்க்கு நாட்டின் நலம் காத்துகொண்டிருக்கும், அலுவல் நிறைந்த ஒரு முதலமைச்சர் தலையிட வேண்டிய அவசியம் துளியும் இல்லை.

    ஆகவே..விஜயகுமார்...போன்றவர்கள்..யார்...யாரை சேர்ந்தவர் என்பதெல்லாம் உலகம் அறிந்ததே...அவர் கதை விட்டதை (அப்படி விட்டிருந்தால்) எந்த ANGLE கொண்டு பார்த்தாலும் உலக மகா பொய் என்று அனைவரும் ஒத்த குரலில் உரக்க உரைப்பர் கலைவேந்தன் சார் !

    இது போல பல கதைகளை அவிழ்த்துவிடும் ஆட்கள் நடிகர் திலகம் உயிருடன் இருக்கும் வரை ஏன் அதை செய்யாமல் இருந்தார்கள் ? இல்லாதபோது இப்படி கூறுவது ஏன்..? ஏநென்ன்றால் நடிகர் திலகத்திடமோ அல்லது மக்கள் திலகத்திடமோ யாரும் இப்போது சென்று "அய்யா இப்படி ஒரு விஷயம் கேள்விபட்டேனே...அது உண்மையா என்று கேட்கமுடியாது என்ற தைரியம் & CONFIDENCE தான் !

    RKS
    Last edited by RavikiranSurya; 6th November 2014 at 01:18 AM.

  15. Likes kalnayak liked this post
  16. #2739
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த பார்வை பட்டாலே சகாரா பாலைவனம் கூட பிருந்தாவனமாக மாறும்


  17. #2740
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •