”தேவர்மகனில் சிவாஜி நடிக்காமல் இருந்திருந்தால் அது வெறும் “மகன்” அவரால் தான் அந்தப்படம் அந்தளவு உயர்ந்தது!”

சொன்னது யாரு? “2000 வருஷமா வேல்கம்பும் வீச்சருவாளும்” ”அவன் மெதுவாத்தேன் வருவான்” “இதெல்லாம் பெருமையா, கடமை, ஒவ்வொருத்தனோட கடமை” போன்ற காலத்தால் அழியாத வசங்களை எழுதியவரே! ஆனா அதே சமயம், தேவர் மகன் என்ற படத்தை பாத்த பின், அந்த வசனமெல்லாம் சிவாஜியே சொந்தமா பேசினதுமாரி ஆகிவிட்டது! சரித்திரத்தில் பதிந்துவிட்டது! அதுதான் நடிகர்திலகம்! மிக உயர்வான வசங்கள் தான்! ஆனால் அதை சரித்திரத்தில் ஏற்றும் வல்லமை சிவாஜிக்கே என்பது கமலுக்கே தெரிந்துதான் அந்த பாத்திரத்தை, வயசானதால் அவரால் முடியலை என 2 முறை மறுத்தும் விடாப்பிடியா அடம் பிடிச்சி கமல் நடிக்கவைத்தார்!

அதையெல்லாம் பார்த்தபின்பும் சிவாஜி தவிர வேற யார் நடிச்சாலும் ஓடியிருக்கும்னு சொல்றதெல்லாம், வேஸ்ட் ஆஃப் டைம், வேஸ்ட் ஆஃப் எனர்ஜி வேஸ்ட் ஆஃப் everything!