Page 177 of 397 FirstFirst ... 77127167175176177178179187227277 ... LastLast
Results 1,761 to 1,770 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1761
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Thanks - maalaimalar

    கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம் (நவ.29- 1908)



    கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

    நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார்.

    அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936-களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.

    நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

    அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர். அண்ணல் காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர்.

    அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

    1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் கலைவாணர் மறைந்தார். தமிழ்நாடு அரசு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது.

    இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.

    gkrishna

  2. Likes rajeshkrv, kalnayak, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1762
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு

    Posted Date : 08:52 (29/11/2013)Last updated : 08:33 (29/11/2014)- ஆனந்த விகடன்

    நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...

    நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்
    டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

    நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

    திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே.

    இதே போன்று ஒரு காட்சி லிங்குசாமியின் ஆனந்தம் திரை படத்தில் 2000 களில் இடம் பெற்றது. மம்மூட்டி தன வீட்டுக்கு திருட வரும் திருடனை தனது பலசரக்கு கடையில் வேலைக்கு சேர்த்து கொள்வார் -இது கிருஷ்ணாவின் செருகல்

    இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

    சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று

    அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

    என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .

    என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்

    என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி

    "நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
    அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

    ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று

    சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

    பூ.கொ. சரவணன்

    gkrishna

  5. Likes kalnayak, Russellmai liked this post
  6. #1763
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு முரளி சார்,

    நன்றி! 'காற்றினிலே வரும் கீதம்' படத்தை நீங்கள் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டது சுவை. கவிதா 'அந்தமான் காதலி' படத்தில் நடிகர் திலகம் வளர்ப்பு மகளாக நன்றாகவே செய்திருப்பார்.


    கடலூர் பாடலி திரையரங்கும், அது செய்த அக்கிரமங்களும்



    26.1.1978 அன்று கடலூர் பாடலியில் 'அந்தமான் காதலி' ரிலீஸ். 10.11.1977 தீபாவளி அன்று 'அண்ணன் ஒரு கோவில்' நியூசினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது. கடலூர் பாடலி திரை அரங்கில் அதற்கு முன் 'டாக்டர் சிவா' (2.11.1975) வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 'அந்தமான் காதலி' தான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக பாடலியில் நடிகர் திலகம் படம் எதுவும் வெளியாகவில்லை. அதனால் பாடலி அரங்கு திருவிழாக் கோலம் பூண்டு விட்டது. வழக்கமான ஆர்ப்பாட்டங்களையும் மீறி இன்னும் இன்னும் அதம் பறந்து கொண்டிருந்தது. ரூபாய் 1.10 கவுண்ட்டரில் நீண்ட கியூ. ஒருத்தரையொருத்தர் முண்டியடித்துக் கொண்டு நிற்கிறோம். போலீஸ் வேறு. எனக்கோ மனதில் முக்தா படம்தானே என்று அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இல்லை. டைட்டில் வேறு தலைவரை சாராமல் நாயகியின் புகழ் பாடியதால் இன்னும் எரிச்சல். ஒருவழியாக நெருக்கி சட்டை கசங்கி போய் நண்பர்கள் நாங்கள் ஒரு முப்பது பேர் வரிசையாக இடம் பிடித்து உட்கார்ந்தோம். எடுத்தவுடனேயே படத்தைப் போட்டு விட்டார்கள். தினசரி 5 காட்சிகள். காலை 9 மணி காட்சி நாங்கள் பார்க்கிறோம். படம் ஆரம்பித்தவுடனே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அப்புறம் காட்சிக்கு காட்சி கைதட்டல் கிழிகிறது. எதிர்பார்த்ததை விடவும் திருப்தி. படத்தின் கதையும், தலைவருக்கு அல்வா சாப்பிடுவது போன்ற கேரக்டரும் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. சுஜாதா வேறு நெஞ்சில் நிலைத்து விட்டார். அப்போதெல்லாம் 'அந்தமான் காதலி' அஞ்சலிதேவி தலைவரை வைத்து முன்னால் எடுத்த 'பரதேசி' படத்தின் மூலம் என்றெல்லாம் தெரியாது.

    சுஜாதாவிடம் தலைவர் செய்யும் காதல் குறும்புகள், பணத்தை மையமாக வைத்து நடிகர் திலகம் பேசும் வசனங்கள், சுஜாதாவிடம் சவால், அத்தனைப் பாடல் காட்சிகள் குறிப்பாக தலைவர் புகுந்து விளையாடிய 'பணம் என்னடா பணம் பணம்' நடிப்பு விளையாட்டுக்கள். 'ஹா' எனும் போது தியேட்டர் ரெண்டுபட்டது. (இப்பாடலின் இடையில் ஒரு காட்சியில் கால்களை வலி பொறுத்துக் கொண்டு மிகவும் தாங்கி தாங்கி கையில் ஸ்டிக் கொண்டு சமாளித்து ந(டி)டப்பார். ரொம்ப பாவமாக இருக்கும்.) என்று படம் நெடுக ஒரே ஆரவாரக் கூச்சல்கள்தான்.

    திலகத்தின் சூப்பர் விளக்கக் காட்சி



    ('நினைவாலே சிலை செய்து' பாடலில் யானைகள் பெரிய மரத் துண்டுகளை தும்பிக்கைகளில் சுமந்து போகும். அப்போது சுஜாதாவிடம் தலைவர் அதை காண்பிப்பார். அப்போது அந்த யானைகள் தும்பிக்கையால் மரக் கட்டைகளை மேலே தள்ளி உருட்டுவது போலவே ஒரு அருமையான பாவத்தை அப்படியே நடிகர் திலகம் ஒரு செகண்ட் சுஜாதாவிடம் செய்து காண்பிப்பார் பாருங்கள். அடடா! காணக் கண் கோடி வேண்டும். இந்தக் காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும்) படம் இடைவேளையின் போதே மாபெரும் வெற்றி என்று தெரிந்து விட்டது. எல்லோரும் இடைவேளையில் டீ கூடக் குடிக்காமல் படத்தைப் பற்றியும், நடிகர் திலகத்தைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் ஒரு சிறு ஏமாற்றம். 'அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி' பாடல் நடிகர் திலகத்திற்குத் தான் என படம் பார்க்கும் முன் நினைத்திருந்தோம். டி .எம் .எஸ். அவர்களும் கிட்டத்தட்ட தலைவருக்கு பாடியிருப்பது போலவே இந்தப் பாடலைப் பாடி வேறு இருந்ததால் மிகவும் எதிர்பார்த்தோம். அருமையான பாடல். ஆனால் பாடல் சந்திரமோகனுக்குப் போனது செம ஷாக். (அந்த ஆத்திரம் 'திரிசூலம்' படத்தில் 'என் ராஜாத்தி வாருங்கடி' பார்த்து தான் தணிந்தது)

    படம் முடிந்து ஆர்ப்பாட்டக் கூக்குரலிட்டபடியே நம் ரசிகர்கள் வெளியே ஓடி வந்து ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து அப்படியே 'அலாக்'காகத் தூக்கி சுற்றிக் கொண்டனர். ஒவ்வொருவர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம் குடிகொண்டது. அடுத்த காட்சி 12 மணிக்கு. பாடலி தியேட்டரே தெரியவில்லை. அந்த அளவிற்குக் கும்பல். கியூவில் நிற்கும் ரசிகர்கள் படம் பார்த்து விட்டு வரும் எங்களை 'படம் எப்படி'? என்று ரிசல்ட் கேட்க, நாங்கள் எல்லோரும் கட்டை விரலை உயர்த்தி 'ஓகோ' என்று சொல்ல அந்த ரசிகர்கள் மத்தியில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம். இன்னும் கும்பல் நெருக்க ஆரம்பித்தது. ஐந்தே நிமிடங்களில் 'ஹவுஸ்புல்' போர்ட். என்ன விசேஷம் தெரியுமா? தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அத்தனை காட்சிகளும் அதே போல மிக வேகமாக அரங்கு நிறைந்தன. தாய்மார்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. சில காட்சிகள் தாய்மார்களுக்கு என்றே டிக்கெட் முழுதுமாக ஒதுக்கப்பட்டது. தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட் இரண்டும் ஆண்களுக்குக் கிடையாது. பெண்களுக்கு மட்டுமே.

    முப்பத்து ஏழு நாட்கள் ஓடி அபார வெற்றி பெற்று அடுத்தடுத்து வந்த நடிகர் திலகம் படங்களில் பெரும்பாலானவற்றை பாடலி நிர்வாகமே திரையிட்டு வெற்றிக் களிப்பில் மிதந்தது. அதற்கு மீண்டும் அடித்தளமிட்டது 'அந்தமான் காதலி'. அதிலிருந்து பாருங்கள். 'அந்தமான் காதலி' கடைசி (3.3.1978) நாளில் கூட ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ ஃபுல் போர்ட் விழுகிறது. ஆனால் அடுத்த நாள் பாலாஜி 'தியாகத்'தை (அதாவது மார்ச் 4) வெளியிட்டு பாவத்தைக் கட்டி கொள்கிறார். இதே பாடலியில் 'தியாகம்' ரிலீஸ். 'அந்தமான் காதலி'அபார வெற்றி பெற்று நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் போது கூட படத்தைத் தூக்கி விட்டு பாடலி நிர்வாகம் 'தியாக'த்தைப் போட, அதுவும் பேய் வெற்றி அடைகிறது. இத்தனைக்கும் 19 ம் தேதி அதே மார்ச் 'என்னைப் போல் ஒருவன்' வேறு நியூசினிமாவில் ரிலீஸ். விட்டால் அதையும் பாடலி நிர்வாகம் பிடித்திருக்கும். நல்ல வேளை. 16 நாட்களே இடைவெளி என்பதால் நாங்கள் தப்பித்தோம்.

    50 நாட்கள் ஈஸியாகப் போய் இருக்க வேண்டிய 'அந்தமான் காதலி' தியாகத்தின் குறுக்கீட்டு வெளியீட்டால் 37 நாட்களே போக வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது. காலக் கொடுமை.

    அதே போல 'தியாகம்' வெகு இலகுவாக 50 நாட்களைத் தொட்டிருக்க வேண்டியது. அதையும் 'என்னைப் போல் ஒருவன்' வந்து கெடுக்கிறது. அதையும் மீறி 'தியாகம்' படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. அதே கூட்டம் 'என்னைப் போல் ஒருவனு'க்கும் போகிறது. கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருக்கும் போதே 'தியாகம்' இருபத்து எட்டு நாட்களில் எடுக்கப்படுகிறது. என்ன காரணம் என்றே இதுவரை தெரியவில்லை. தியேட்டர் சிப்பந்திகளைக் கேட்டால் 'தியாகம்' வசூலை வாரிக் குவித்து விட்டது... போதும் என்று எடுத்து விட்டார்கள்' என்று கூறி கடுப்பைக் கிளப்புகிறார்கள். இதே பாடலியில் அடுத்த படமான 'புண்ணிய பூமி' மே 12 அன்று ரிலீஸ். ஏமாற்றம் தந்தது.

    உடனே ஜூன் 16 இல் 'ஜெனரல் சக்கரவர்த்தி' மீண்டும் இதே பாடலியில். (இதிலும் நடிகர் திலகத்தின் மகளாக கவிதா. நடிகர் திலகம், கவிதா இணைந்தால் சூப்பர் ஹிட் என்று மீண்டும் நிரூபணம் ஆனது .) மறுபடி சரித்திரம் படைக்கிறது. சூப்பர் டூப்பர் ஹிட். எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றி. பம்பர் பரிசு. பாடலி நிர்வாகம் சலிக்காமல் 'எல்லா சிவாஜி படங்களும் எனக்கே' என்று போட்டி போட்டு கடலூரின் எந்தத் தியேட்டர்களை விடவும் அதிக விலை கொடுத்து நடிகர் திலகம் படங்களை வாங்கிக் குவித்து வசூலையும் குவிக்கிறது. ஆனால் அதே சமயத்தில் மிக நன்றாகப் படம் போய்க் கொண்டிருக்கும் போதே படத்தைத் தூக்கவும் செய்கிறது. ஒரு புறம் சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு புறம் ஆத்திரமாக வருகிறது.

    அடுத்த படமான 'தச்சோளி அம்பு' மலையாளம் கடலூரில் வெளியாகவில்லை. பின்னால் ஒருமுறை 1981 என்று நினைவு கடலூர் ஐ.டி.ஐ மாணவர்கள் நாங்கள் அனைவரும் சைக்கிளிலேயே பாண்டி சென்று பாலாஜியில் அதைப் பார்த்து விட்டு வந்தோம். இன்றும் என்னுடைய நண்பர்கள் அதைப் பற்றி போனில் பேசி மகிழ்ந்து, நினைவு கூறி உரையாடுவது உண்டு.

    1978 ன் தீபாவளி விருந்தான 'பைலட் பிரேம்நாத்' (28.10.1978) கடலூர் பாலாஜி திரையரங்கில் வெளியாகி கொட்டும் மழையில் வசூல் மழை பொழிந்து சாதனை சரித்திரம் படைக்கிறது. இந்தப் படத்தை வாங்க பாடலி நிர்வாகம் எவ்வளவோ போட்டி போட்டும் பாலாஜி நிர்வாகமே இறுதியில் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் பாலாஜி தியேட்டர்தான் அப்போது கடலூரில் ஏ.ஒன். பாடலி ரொம்ப சுமார்தான். அதே தீபாவளிக்கு வெளியான ஜெயசங்கரின் 'வண்டிக்காரன் மகன்' முத்தையாவில் சக்கை போடு போடுகிறது. 'பைலட்'டை பிடிக்க முடியாமல் திரும்புபவர்கள் எல்லாம் 'வண்டிக்கார'னைப் பிடிக்கிறார்கள்.

    அடுத்த நடிகர் திலகத்தின் படமான ஜஸ்டிஸ் கோபிநாத்தை (16.12.1978) நியூசினிமா போட்டி போட்டு வாங்கி வெளியிடுகிறது. ஆஹா என்றுமில்லை ஓஹோவென்றுமில்லை. கையைக் கடிக்கவும் இல்லை. சுமாரான வெற்றி. 4 வாரங்கள் போனது. 'விமானி'யை 'நீதிபதி' அந்த அளவிற்கு வெற்றி கொள்ள முடியவில்லை. பின்னால் வந்த பாலாஜியின் 'நீதிபதி' (26.01.1983) இரண்டையும் வென்று வெள்ளி விழாக் கொண்டாடினார் என்பது வேறு கதை

    இதையெல்லாம் பார்த்த பாடலி நிர்வாகம் அடுத்து வந்த எமப் படமான, நடிகர் திலகத்தின் 200 ஆவது படமான 'திரிசூல'த்தை விடுவதாவது என்று பலத்த போட்டிக்கிடையில் 'திரிசூல'த்தைப் பெற்று (26.01.1979) மீண்டும் பணத்தைக் கூடை கூடையாக கல்லாவில் ரொப்பிக் கொண்டது. (தன் திரையரங்கு வாழ்க்கையில் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையைத் தக்க வைத்தும் கொண்டது அதனுடைய வாழ்நாள் வரை. இன்று அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு விட்டது.)

    'திரிசூலம்' படத்தின் வெற்றி விவரத்தை இப்போது எழுதினால் என்னை அடிக்கக் கூட வந்து விடுவீர்கள். பூக்கடைக்கு எதற்கு விளம்பரம்? 'திரிசூலம்' பண்ணின களேபரத்திற்கு கண்டிப்பாக பாடலியில் நூறு நாட்கள் நிச்சயம் என்று முடிவு செய்து விட்டோம். ஒவ்வொரு நாளும் கூட்டம் ஜாஸ்தியாகிறதே தவிர குறைந்த பாடில்லை. நாங்கள் அங்கேயேதான் கிடக்கிறோம். திருவிழாதான். தினம் தினம் திருவிழாதான். பாடலி நிர்வாகமே பொது மக்கள் பார்வைக்கு தியேட்டரின் வெளியே தினம் தினம் வசூல் போர்டு வைக்கிறது. இந்த சாதனை இதுவரை வேறு எந்தப் படத்திற்கும் செய்யப்பட்டது இல்லை. 'படம் பெரிதாகையால் காட்சிகள் முன்னமே ஆரம்பிக்கப்படும் 'என்ற போர்ட் அகற்றப்படவே இல்லை படம் எடுக்கும் வரை.

    5.4.1979 அன்று 'திரிசூலம்' அத்தனை காட்சிகளும் ஃபுல். ஆனால் அடுத்த நாள் ஆறாம் தேதி இதே பாடலி நிர்வாகம் பேராசைப்பட்டு 'கவரிமான்' படத்திற்காக திரிசூலத்தை தூக்கிவிட்டது வழக்கம் போல். 'கவரிமான்' ஆறாம் தேதி ரிலீஸ் ஆகிறது. எங்கள் எல்லோருக்கும் கோபமான கோபம். அநியாயமாக 100 நாட்கள் போய் இருக்க வேண்டிய படத்தை இப்படி ஆக்கி விட்டார்களே என்று. சரியாக 70 நாட்களில் 'திரிசூலம்' எடுக்கப்பட்டு 'கவரிமான்' போடப்பட்டு விட்டது. இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்ல? பாடலி நிர்வாகம் அது நினைத்தது போலவே 'கவரிமான்' படத்திலும் நல்ல வசூல் பார்த்தது. ஆம். கடலூரில் அட்டகாசமாகப் போனது 'கவரிமான்'.


    முரளி சார்,

    வளர்ந்து கொண்டே போகிறது. பிறகு ஒருமுறை தொடர்கிறேன்.

    உங்கள் நினைவலைகளை நான் அந்த நாட்களுக்கே அழைத்துச் சென்றதாக தாங்கள் எழுதி இருந்தீர்கள். அதே குதூகலிக்கச் செய்யும் குற்றச்சாட்டை உங்கள் மீது வைக்கிறேன். நீங்கள் என்னை அந்த 1978, 1979 இரண்டு ஆண்டுகளுக்கே அழைத்து... இல்லை... இழுத்துச் சென்று விட்டீர்கள். எல்லாம் கண் முன்னே படமாக ஓடுகின்றன. அப்படியே அனைத்து கடலூர் தலைவர் பட நிகழ்வுகளையும் இப்போதுதான் பார்ப்பது போல் இருக்கிறது.

    என்ன மாதிரி நாட்கள்! என்ன இன்பம்! எத்தனை மகிழ்ச்சி! இப்போது என் கண்களில் ஏனோ ஒரு நீர்த்துளி.

    எப்படி 72 ஐ மறக்கமுடியாதோ அப்படியே 78 ஐயும் மறக்கவே முடியாது. அது 'சுனாமி' என்றால் இது 'தானே'

    இந்த வசூல் புயல்களுக்கெல்லாம் நிரந்தர சொந்தக்காரர் நம் இதயதெய்வம் அல்லவோ!

    நன்றி முரளி சார்.
    Last edited by vasudevan31355; 29th November 2014 at 02:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks Russellmai thanked for this post
    Likes sss, kalnayak, JamesFague, chinnakkannan liked this post
  8. #1764
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தீனா - மூனா - கானா - எங்கள் தீனா - மூனா - கானா அறிவினைப் பெருக்கிடும். உற வினை வளர்த்திடும் திருக்குறள் முன்னணிக் கழகம் (தீனா...)

    பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தவர் பெரியார்.

    வள்ளுவப் பெரியார்! தங்கைகளுக்கு ஒரு தமக்கையைப்போலே,

    தம்பியோருக்கொரு அண்ணாவைப் போலே

    சரியும், தவறும் இதுவெனக் காட்டும்

    தமிழன் பெருமைகளை நிலைநாட்டும்

    தீனா - மூனா - கானா

    ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த என் எஸ் கே அவர்களின் சூப்பர் பாடல்
    gkrishna

  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post
  10. #1765
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட் மார்னிங்க் ஆல்
    //நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த
    தமிழ்மாலை தனைச் சூடுவான்-----// ரவி. ஜி.. இது போல் நான் எப்போது பாடல் எழுதுவேன்.. தங்கள் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி.. அடுத்த பதிவில் வருத்தமும் பட்டிருந்தீர்கள்..அதுவும் நல்லதே.. வேறு எழுத யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.. எதிர்பார்க்கிறேன்/ றோம்..

    என்.எஸ்.கே நினைவலைகள் அருமை கிருஷ்ணா ஜி. அம்பிகாபதியா.. தேனே உந்தனை நான் தேடிவந்தேனே.. பாட்டு நினைவுக்கு வருகிறது..இன்னொரு படத்தில் புறா தோளில் இருக்க காம்பவுண்டின் அந்தப்புறம் ஹீரோயின்.. இவர் புறாவை மட்டும் பிடிப்பதற்கு அலைவது..மாடியிலிருந்து பார்க்கும் மனைவிக்கு (மதுரம்) இவர்கள் இருவரும்சேர்ந்து விளையாடுவது போல் தெரிய.. பின் தொடரும் நகைச்சுவை..(என்னபடம் மறந்து விட்டது)

    வாசு சார்.. ம்ம் பாடலி திரையரங்கின் நினைவலைகள் குட். எனக்கு அந்த அளவுக்கு புள்ளிவிவரம் தர இயலாது..அந்தமான் காதலி சினிப்ரியா பின் சாந்தியில் வந்ததாக நினைவு.. அப்போது பார்க்க முடியாமல் வெகு காலத்திற்குப் பின் வீடியோவில் பார்த்ததாய் நினைவு… நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடிவா மிகப் பிரபலம்..பலவித கெட் அப்கள் சிவாஜிக்காகப் போட்டுப் பார்த்து கடைசியில் மீசை இல்லாமல் அந்த கெட் அப் பொருந்திப்போனதாக ஒரு பத்திரிகையில் யாரோ கூறியிருந்த நினைவு.. யாரென்று மறந்து விட்டது.. மற்ற படங்கள் மதுரையில் வந்த தியேட்டர்கள் சொல்லலாம்.. தியாகம் சிந்தாமணி. கவரிமான் ஸ்ரீதேவி, ஜெனரல் சக்ரவர்த்தி அலங்கார், பைலட் ப்ரேம் நாத் சென் ட்ரல், ஜஸ்டிஸ் கோபி நாத் சினிப் ப்ரியாவோ மினிப்ப்ரியாவோ, திரிசூலம் சிந்தாமணி, அண்ணன் ஒருகோவில் நியூசினிமா, ம்ம்..

  11. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak liked this post
  12. #1766
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    நான் 1978-ன் ஆரம்பத்தை மட்டும்தான் குறிப்பிட்டேன். நீங்கள் மொத்த வருடத்தையும் அலசி விட்டீர்கள். அதுவும் அருமையான தகவல்களோடு.

    உண்மை. 1978-ம் நமக்கு மற்றொரு 1972 போலதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    இதே 1977 - 1978 பற்றி, அண்ணன் ஒரு கோவில் வெளியீட்டில் ஆரம்பித்து மே மாதம் வரை நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு பதிவும் பின் தியாகம் மதுரையில் ஓடிய 175 நாட்களைப் பற்றி நான் எழுதிய பதிவும் நினைவிற்கு வருகிறது.

    நீங்கள் சொன்னது போல் அனைத்தும் அற்புதமான தருணங்கள். அது போன்ற தருணங்களை உருவாக்கவும் முறியடிக்க முடியாத சாதனைகளை படைப்பதற்கும் நடிகர் திலகத்தால் மட்டும்தானே முடியும்!

    அன்புடன்

    கண்ணா,

    நீங்கள் போட்ட படங்களும் அவை வெளியான தியேட்டர் லிஸ்டும் சரியானவைதான். நான் மதுரைக் கல்லூரி இல்லை. அமெரிக்கன்!

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan liked this post
  14. #1767
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்கள் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் :

    கீழ் கண்ட படங்களின் பாடலாசிரியர்கள் யார் என்பதைத் தெரியப் படுத்த வேண்டுகிறேன்...

    இனிக்கும் இளமை - எம்.எ.காஜா மற்றும் ??? (http://spinningwax.ecrater.com/p/270...lamai-shankar#)
    பௌர்ணமி நிலவில்
    மாம்பத்து வண்டு
    கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

    எனது நண்பர் ஒருவர் இந்த காலத்து பாடல்களைத் தொகுத்து வருகிறார் , அவருக்கு தேவைப்படும் சமாசாரம்....
    நன்றி

  15. #1768
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு, உங்களுடைய 'அந்தமான் காதலி' அனுபவம் வழக்கம் போல் சுகம். நான் பின்னாளில் டீ.வி.யில்தான் பார்க்க முடிந்தது. தியாகம், மதுரை சிந்தாமணியில் அம்மா அழைத்துக்கொண்டு போய் பார்த்திருக்கிறேன். திரிசூலம் கடலூர் பாடலியில் அப்பாவோடு. பைலட்டை கடலூர் ரமேஷில் (பாலாஜி - இதுவும் இப்போது இல்லையெனத் தெரியும்) பார்த்தேன். எனக்கும் மிகப்பிடித்த திரையரங்கம். முதலில் பைலட்டிற்கு டிக்கட் கிடைக்காமல் ஓ.டி கமரில் சிவகுமாரின் 'கண்ணாமூச்சி' பார்த்தோம். அசோகன் பூதமாக நடித்திருப்பார். ஆமாம் இந்த படத்தோட பாடல்களை இங்கே அலசியாச்சா?
    சின்னக் கண்ணன் நீங்க இந்த படத்தை பாத்திருந்தா/தெரிஞ்சிருந்தா எங்கே சொல்லுங்க பார்ப்போம். மாட்டினீங்களா!!!
    விட்டால் இப்படியே என்னை எழுத வைச்சுடுவீங்க. நான் ரவியோட பதிவெல்லாம் படிச்சு லைக் போடணும். கோச்சுக்கறார்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  16. Likes rajeshkrv, chinnakkannan liked this post
  17. #1769
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    hi kalnayak sir. kanna moochi as usual it came in Madurai Sridevi. sivakumar heroine pEr maranthu pOche..ashokan bootham yes..oru pugaiyaa irukku.. ezhuthunga..Oy.. I think heroine is sangeetha isnt it. sorry my tamil font not working now..Oh American aa murali sir..good..

  18. #1770
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    நான் ரவியோட பதிவெல்லாம் படிச்சு லைக் போடணும். கோச்சுக்கறார்.
    கல்நாயக் : நான் என் பதிவுகளை படிச்சு லைக் போடணும் என்று உங்களை கேட்டுக்கொள்ளவில்லை - நீங்கள் லைக் பண்ணும் மாதிரி நான் பதிவுகள் போட வேண்டும் என்ற அர்த்தத்தில் எழுதி இருந்தேன் - பாருங்கள் - எவ்வளவு வித்தியாசம் , நான் சொல்ல வந்ததிற்கும் , நீங்கள் புரிந்து கொண்டதிர்க்கும் --- அது சரி உங்கள் நகைச்சுவை அரும்பிய பதிவுகள் இந்த திரியில் இடம் பெறாதா ??

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •