Results 1 to 10 of 1238

Thread: மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை

Threaded View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை

    மறு வெளியீட்டிலும் மக்கள்திலகத்தின் மகத்தான சாதனை
    மக்கள் திலகத்தின் இனிய நண்பர்களே , பார்வையாளர்களே , பதிவாளர்களே

    உங்கள அனைவருக்கும் என் அன்பு வணக்கம் . உலகில் எந்த ஒரு மொழி படத்திற்கும் கிடைக்காத தனி சிறப்பு நம் தமிழ் படத்திற்கு கிடைத்துள்ளது சிறப்பு என்னவென்றால் ஒரு திரைப்படம் முதல் வெளியீட்டிற்கு பின்னர் மறு வெளியீடுகளில் திரைக்கு வந்து சாதனைகள் புரிந்து வெற்றிகளை குவிப்பது . இந்த பெருமைக்கு சொந்தக்காரார் நம்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பது மகிழ்ச்சியான செய்தி .

    மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் 1947- 1977 முப்பது ஆண்டுகள் -ஒரு பொற்காலம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 115 நேரிடை தமிழ் படங்களில் நடித்து பல பட்டங்கள் பெற்று அரிய பல சாதனைகள் புரிந்து திரை உலக சக்ரவர்த்தியகவும் ,வசூல் மன்னனாகவும் கொடி கட்டி வாழ்ந்தார்

    மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் 1977-1987 கால கட்டத்தில் அவருடைய 90 படங்கள் தொடர்ந்து தென்னாடெங்கும் திரை அரங்கில் வலம் வந்தது .பல சாதனைகள் எண்ணிலடங்கா . மக்கள் திலகம் தெய்வமாகிய பின்னர் 27 ஆண்டுகளாக அவருடைய படங்கள் தொடர்ந்து பவனி வருவது தெரிந்ததே .

    நண்பர்களே

    இந்த திரியில் 1977 முதல் இன்றுவரை 37 ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் மறு வெளியீடுகள் பற்றிய
    செய்திகள் - விளம்பரங்கள் - நிழற்படங்கள் - கட்டுரைகள் - விழாக்கள் பற்றிய தொகுப்பினை இங்கு பதிவிடுங்கள் .
    எனக்கு விவரம் தெரிந்த படங்கள் மறு வெளியீட்டில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடமுடியாது .

    நாடோடி மன்னன் - திருடாதே - தாய் சொல்லை தட்டாதே - வேட்டைக்காரன் - பாசம் - குடும்பத்தலைவன் - பணத்தோட்டம் -அரசகட்டளை - விவசாயி - காவல்காரன் - பெற்றால்தான் பிள்ளையா - நாடோடி
    அடிமை பெண் - புதுமைபித்தன் - மதுரை வீரன் - அலிபாபாவும் 40 திருடர்களும் - தாய்க்கு பின் தாரம்

    ஆயிரத்தில் ஒருவன்
    படகோட்டி
    எங்க வீட்டு பிள்ளை
    அன்பே வா
    ரகசிய போலீஸ் 115
    குடியிருந்த கோயில்
    ஒளிவிளக்கு
    நம்நாடு
    மாட்டுக்கார வேலன்
    என் அண்ணன்
    தேடிவந்த மாப்பிள்ளை
    எங்கள் தங்கம்
    குமரிகோட்டம்
    ரிக்ஷாக்காரன்
    நீரும் நெருப்பும்
    சங்கே முழங்கு
    நல்ல நேரம்
    இதய வீணை
    ராமன் தேடிய சீதை
    நேற்று இன்று நாளை
    உரிமைக்குரல்
    சிரித்து வாழ வேண்டும்
    நினைத்தை முடிப்பவன் - நாளை நமதே - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - உழைக்கும் கரங்கள் - மீனவநண்பன்(இன்னும் பல கருப்பு வெள்ளை படங்கள்) போன்ற படங்கள் பல முறை பல ஊர்களில் அன்றும் இன்றும் ஓடிகொண்டே இருக்கிறது .

    இனி நண்பர்கள் தொடர்ந்து தங்களுடைய மறு வெளியீடு பதிவுகளை தொடரலாம் .

    நன்றி

    Last edited by MGRRAAMAMOORTHI; 24th November 2014 at 09:30 PM. Reason: added

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •