Page 30 of 401 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #291
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 1st January 2015 at 07:45 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #292
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #293
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “அரசிளங்குமரி’ பற்றிய ஒரு சிறு தொகுப்பு :

    நம் புரட்சித்தலைவர் அவர்களுக்கு புத்தாண்டு தினம் என்றால் அது தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாள். அன்றுதான், அனைவரையும் அழைத்து அவர்களுடன் சிற்றுண்டி மற்றும் உணவருந்தி, அன்பளிப்புக்களையும் அளித்து மகிழ்வார்.

    எனவே அவரது காவியங்கள் பெரும்பாலும் தமிழர் திருநாளன்றுதான் வெளியாகும். இதில் சற்று வித்தியாசமாக, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று (01-01-1961) வெளியான, பொன்மனசெம்மலின் ஒரே காவியம் “ அரசிளங்குமரி ”.



    இதற்கு முன்பு வாள் சண்டைகளில் அபாரமாக நடித்திருந்தாலும், இந்த காவியத்தின் இறுதி கட்டத்தில் இடம் பேற்ற வாள் சண்டை காட்சி பிரசித்தம் பெற்றது. அது மட்டுமல்லாது, நம் எழில் வேந்தனுக்கு, “ வாள் வீச்சில் வல்லவர் “ என்ற பெயர் நிரந்தரமாக நிலைக்கச் செய்த காவியம்தான், அரசிளங்குமரி
    இந்த காவியத்தின் மற்றொரு சிறப்பு ... நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் இரு வேறு தோற்றங்களில் காட்சியளிப்பார். அறிவழகன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார் நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள்.


    கலைஞர் கருணாநிதி அவர்களின் சத்தான கதை வசனத்தில், முத்தான எட்டு பாடல்கள். இவைகளை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், கு. மா. பாலசுப்ரமணியம், முத்துக்கூத்தன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் முதலானோர் எழுதியிருக்கின்றனர்.

    இதில் பிண்ணனி பாடியிருப்பவர்கள் : வழக்கமான டி. எம். எஸ்., சீர்காழி, பி. சுசீலா, ஜானகி ஆகியோர் தவிர, எஸ்..சி. கிருஷ்ணன், சூலமங்கலம் ஜெயலட்சுமி, ஜமுனா ராணி, பி. லீலா போன்றோர்.

    ஜுபிடர் சோமு தயாரிப்பில், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் உருவான இக்காவியம், புரட்சித்தலைவரின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் மாணிக்கக் கல் !

    “அரசிளங்குமரி” காவியத்தில் இடம் பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
    பாடல் 1 : தில்லாலங்கடி : தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்
    (கவியரசு கண்ணதாசன்)

    பாடல் 2 : ஏற்றமுன்னா ஏற்றம் – இதிலேயிருக்குது முன்னேற்றம்
    (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

    பாடல் 3 அத்தானே, ஆசை அத்தானே – அன்பே உன்னை
    (கே. எஸ். கோபாலகிருஷ்ணன்)

    பாடல் 4 நந்தவனத்திலோர் ஆண்டி – அவன் வந்த இடத்திலோர்
    மங்கையை வேண்டி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

    பாடல் 5 கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா – கழுகு மலை, பழனி
    மழை கால்நடையாப் போக வேணும் (பட்டுக்கோட்டை
    கல்யாணசுந்தரம்)

    பாடல் 6 சின்னப்பயலே சினப்பயலே சேதி கேளடா
    (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)

    பாடல் 7 தூண்டியிலே மாட்டிக்கிட்டு துடிக்குது – மீனு
    துடிக்கிறதை பார்த்து கண்ணு ரசிக்குது
    (முத்துக்கூத்தன்)

    பாடல் 8 தாரா அவர் வருவாரா – கண்கள் தவிப்பதை தான்
    அறிவாரா (கு. மா. பலசுப்ரமனியம்)


    திரு.செல்வகுமார் சார்,

    உங்களின் அரசிளங்குமரி பதிவுகள் அற்புதம். தாங்கள் அளித்துள்ள புத்தாண்டு பரிசுக்கு நன்றி. இந்த மன்றத்திலேயே அதிகம் படித்தவர் நீங்கள். பேராசிரியர். ஆனாலும், அந்த செருக்கு இல்லாமல், அந்த பெருமையை ஒதுக்கிவிட்டு ‘தலைவரின் ரசிகன் என்பதுதான் எனக்கு பெருமை’ என்று ஏற்கனவே கூறியிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களை சகோதரராக பெற்றது எங்களுக்கெல்லாம் பெருமை. நன்றி.

    மக்கள் திலகம் திரியின் புதிய பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அன்புக்குரிய பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #294
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அரசிளங்குமரி... சில நினைவுகள்

    திரு.செல்வகுமார் சார் கூறியபடி, வாள் வீச்சில் வல்லவர் என்ற பெயரை தலைவருக்கு நிலையாக பெற்றுக் கொடுத்த படம் அரசிளங்குமரி. மற்ற படங்களை காட்டிலும் இதில் நம்பியாருடனான தலைவரின் வாள் வீச்சு மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்.

    அது எந்த அளவுக்கு ஆக்ரோஷம் என்றால், படப்பிடிப்பில் நம்பியாரால் தலைவருக்கு காயம் ஏற்படும் அளவுக்கு. சகோதரர்கள் அனைவருக்குமே இது தெரிந்திருக்கும். என்றாலும், இதை எல்லாரும் அறிந்து கொள்ளும் வண்ணம் திரியில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    தலைவரும் நம்பியாரும் வாள் சண்டையிடும்போது நம்பியாரின் வாள் தலைவரின் இடது கண்ணுக்கு மேலே புருவத்தில் ஆழமாக கிழித்து விட்டது. இந்த தழும்பு தலைவரின் இடது புருவத்தில் கடைசி வரை இருந்தது. குளோசப்பில் இருக்கும் சில புகைப்படங்களில் இந்தத் தழும்பை காணலாம்.

    தன்னால்தான் தலைவருக்கு இந்த காயம் ஏற்பட்டது என்பதை திரு.நம்பியார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதை எல்லாரும் படித்திருக்கலாம். அதோடு, திரு.நம்பியார் எப்போதுமே நகைச்சுவை உணர்வு கொண்டவர். புருவத்தில் தலைவருக்கு அடிபட்டவுடன் நடந்ததையும் நம்பியாரே விவரித்திருக்கிறார்.

    நம்பியாரைப் பார்த்து தலைவர், ‘என்னய்யா என் மேலே கோபம்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு நம்பியார், ‘‘தயாரிப்பாளர் குத்த சொன்ன இடம் வேறு’ என்று பதிலளித்துள்ளார்.

    அதற்கு தலைவர், ‘‘அவர் எங்கே குத்தச் சொன்னார்?’ என்று கேட்டதும் ‘மார்பில்’ என்று அதிரடியாக நம்பியார் கூறியதைக் கேட்டு தலைவரே வலியையும் மறந்து சிரித்தாராம். இதை தெரிவித்த நம்பியார், அந்த பேட்டியிலேயே ‘சர்வாதிகாரி’ படப்பிடிப்பில் வாள் சண்டையின்போது தலைவரின் கத்தி தனது கட்டை விரலில் இந்தப் பக்கம் புகுந்து அந்தப் பக்கம் வந்ததாகவும் கூறியிருந்தார். சகோதரர்களிடம் அந்தப் பேட்டியும், புருவத்தில் தழும்புடன் இருக்கும் தலைவரின் புகைப்படமும் இருந்தால் தயவு செய்து பதிவிடவும். ஆதாரபூர்வமாக இருக்கும்.

    திரு.சைலேஷ் பாசு அவர்கள், தலைவரின் நினைவு நாளன்று ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று பொறிக்கப்பட்ட வாசகத்துடன் தலைவரின் படத்தை பதிவிட்டிருந்தார். அந்தப் படத்தில் தலைவரின் இடது புருவத்தில் கூலிங் கிளாசுக்கு மேலே இந்த தழும்பு, வெட்டு இருப்பதை பார்க்க முடியும்.

    பாடல்களும், தலைவரின் நடிப்பு + சண்டைகளும் அற்புதமாக இருக்கும்.

    பல்வேறு பிரச்னைகள் காரணமாக நீண்ட தயாரிப்பில் (5 ஆண்டுகள்) இருந்த படம். ஒரு கட்டத்தில் தலைவரே படத்தை இயக்கியுள்ளார். இந்த தகவலும் கூட, தேவி வார இதழில் எம்.ஜி.ஆர்.கதை என்ற பெயரில் வந்த தொடரில் வெளியானது. அது பின்னர் புத்தகமாகவும் வந்தது.

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் ‘சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா...’ மிகவும் கருத்துள்ள பாடல்.

    மிகவும் நீண்ட தயாரிப்பில் இருந்து படம் தாமதமாக வெளியானதால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

    மேலும், முதல் முறை நான் படம் பார்த்தபோது, தெலுங்கு நடிகர் நாகேந்திர ராவிடம் வாள் சண்டையில் தலைவர் தோற்று, கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. நம் எல்லாருக்குமே அப்படித்தான் இருந்திருக்கும். படத்தின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும் தலைவருக்காகவே தவற விடக் கூடாத படம்.

    அரசிளங்குமரி படப்பிடிப்பில் தலைவருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக நம்பியாரின் பேட்டியில் இருந்து 4 விஷயங்கள் நமக்கு புலனாகின்றன.

    1. அட்டை கத்தி வீரர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் கேலி பேசப்பட்டாலும், தலைவர் உண்மையிலேயே வாள் சண்டை போட்டிருக்கிறார். தொழிலில் உண்மையாக உழைத்திருக்கிறார்.

    2. உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இடது புருவத்தை கிழித்த வாள் 2 அங்குலம் கீழே பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைத்தாலே பதறுகிறதே.

    3. நம்பியாருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு. தன்னால் காயம் பட்ட நேரத்திலும் தலைவரை கிண்டல் செய்யும் அளவுக்கு இருவருக்கும் இருந்த நெருக்கம்.

    4. நம்பியாரின் வாள் புருவத்தை கிழித்தாலும், அவர் மீது கோபமோ காழ்ப்புணர்ச்சியோ இல்லாத தலைவரின் பெருந்தன்மை குணம். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனையும் தாண்டி, அவசர போலீஸ் 100 ஆக வெளிவந்த அண்ணா நீ என் தெய்வத்திலும் நம்பியார் நடித்ததே மனிதப் புனிதராம் நம் தலைவரின் பெருந்தன்மைக்கு சான்று.

    நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



  6. Likes ainefal liked this post
  7. #295
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. Likes ainefal liked this post
  9. #296
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #297
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    REVIEW FROM THE HINDU -CINEMA PLUS
    ---------------------------------------------------------------------


  11. #298
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "அரசிளங்குமரி " வெளிவந்து 54 ஆண்டுகள்
    நிறைவு பெற்றது. புத்தாண்டில் (01/01/1961) வெளியான ஒரே படம்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


  12. #299
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  13. #300
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •