Page 102 of 401 FirstFirst ... 25292100101102103104112152202 ... LastLast
Results 1,011 to 1,020 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #1011
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1012
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes ainefal liked this post
  6. #1013
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes ainefal liked this post
  8. #1014
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes ainefal liked this post
  10. #1015
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இன தலைவர் நம் "புரட்சிதலைவர் எம்.ஜி .ஆர் "
    # தமிழ் நாட்டின் வாத்தியார் ....அவர் சிலருக்கு தமிழ் வாத்தியாரும் கூட ... ஒருமுறை சட்டப் பேரவையில் ... மக்கள் திலகத்தை பார்த்து
    " நீ பாவி " என்றார் கருணாநிதி
    அதற்கு மக்கள் திலகம் ... " ஆமாம் நான் பாவி தான் , பாவி என்றால் சாது என்றும் பொருள்" என்றார் ....
    எந்த அகராதியில் அப்படியுள்ளது என்று கருணாநிதி கேட்க .... யாழ் அகராதியில் பாவி என்றால் சாது என்று பொருள் உள்ளது எபதை மக்கள் திலகம் சுட்டிக் காண்பிக்க .... யாரை மலையாளி என்று விமர்சித்தாரோ அவரிடமே தமிழ் கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார் முத்தமிழையும் விற்றவர் ....
    அது தான் எங்கள் வாத்தியார்.

    அப்புறம் தலைவரே!

    Thanks to Boominathan Andavar, FB.

  11. Likes orodizli liked this post
  12. #1016
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    1937-38 ம் ஆண்டுகளில் எம்,ஜி,ஆர் கல்கத்தாவில் “மாயா? மச்சீந்திரா? ” படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம்.
    ஒருநாள் அவர் நண்பர்கள் சிலருடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போகிறார். ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த IF I WERE KING படம் அது….அதில் ஒரு காட்சியில் “நான் மன்னனானால்?” என்று தொடங்கி கதாநாயகன் வசனம் பேசுகிறான்.. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத எம்,ஜி,ஆரால் வசனங்கள் முழுவதையும் புரியமுடியாமல் போனாலும் வசனத்தின் சாரம்சத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்தக் கருத்து அவர் மனதில் ஆழப்பதிந்து அடிக்கடி ‘நான் மன்னனானால்?’ என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார். “நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே என் மனதில் தோன்றிவிட்டது” என்று பெருமையுடன் எம்.ஜி.ஆர். தன் புத்தகத்தில் எழுதுகிறார்.
    1894-ல் ஆண்டனி ஹோப் எழுதிய “THE PRISONER OF ZENDA” என்ற நாவல், 1901-ல் ஜஸ்டின் ஹண்ட்லி மேக்கர்த்தி யின் நாடகமான “IF I WERE KING” மற்றும் “VIVA ZAPATA” என்ற ஆங்கிலப்படம் இவை மூன்றின் ‘கிச்சடி’ கலவைதான் “நாடோடி மன்னன்” படக்கதை. நான் மேற்கூறிய நாவலும், நாடகமும் பிறகு படமாக வெளிவந்தன.
    எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் கதை இலாகாவில் பங்கு வகித்த ஆர்.எம்.வீரப்பன், வித்வான் கே.லக்*ஷ்மணன், எஸ்.கே.டி.சாமி இம்மூவரையும் எம்.ஜி.ஆர். இந்த மூன்று படங்களையும் பார்க்க வைக்கிறார். கதையின் போக்கு எப்படி வரவேண்டும் என்பதை எம்.ஜி.ஆரே கோடிட்டும் காட்டுகிறார். இம்மூவரும் இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை தமிழ் மண்ணுக்கு ஏற்றவகையில் உருவாக்குகின்றனர். தானே அதில் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டுகிறார். நாடோடி மன்னனின் படக்கதை இப்படியாகத்தான் உருபெற்றிருக்கிறது.
    - நன்றி : கவிஞர் நாகூர் அப்துல் கையூம் .

    Thanks to Sri. Chandran Veerasamy, FB.

  13. #1017
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    ஒரே ஆண்டில் ஒரே ஊரில் 4 முறை (அதிலும் ஒரே தியேட்டரில் 2 முறை) வெளியிடப்பட்டு 32 நாட்கள் படம் ஓடுகிறதென்றால் தலைவரின் படங்களைத் தவிர வேறு எந்த படங்கள் இந்த சாதனையை செய்ய முடியும்?

    கடந்த தீபாவளிக்கு கோவையில் தலைவரின் குடியிருந்த கோயில் அருகருகே அமைந்துள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து 17 நாட்கள் ஓடுகிறதென்றால் சாதனை சக்கரவர்த்தியின் கீர்த்தியை என்ன சொல்லி புகழ?

    கோவையில் கடந்த ஆண்டில் தலைவரின் படங்கள் வெளியீடு மற்றும் ஓடிய நாட்கள் பட்டியலை திறம்பட புள்ளி விவரத்துடன் பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  14. Thanks orodizli thanked for this post
    Likes ainefal, orodizli liked this post
  15. #1018
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மஹா பெரியவரைச் சந்தித்த எம்.ஜி.ஆர்…

    குமரேசன் – இவர் பாண்ட்ஸ் கம்பெனியில் சென்னையில் வேலை பார்த்தார் பின்னர் திண்டிவனம் மாற்றப்பட்டார். இவரது முக்கியமான வேலைகளில் ஒன்று, தினமும் இரவு வேலை முடிந்து காஞ்சிபுரம் திரும்பியதும், மடத்திற்கு வருவார். இரவு சுமார் எட்டு மணி ஒன்பது மணி ஆகும். பெரியவர் தூங்கும் முன் அவர் அறைக்குச் செல்வார். அன்று வந்திருக்கும் மாலை பேப்பர்களை பெரியவருக்கு படித்து காட்டுவார்.

    மாலை முரசு , மாலை மலர், மக்கள் குரல், முரசொலி சில நேரங்களில் விடுதலை கூட உண்டு. குமரேசனுடன் பிற்காலத்தில் நானும் ஒன்றாக வேலை செய்தேன் பாண்ட்ஸ்ல்.

    ஒருநாள் இரவு பெரியவர் “குமரேசன் வந்துட்டானா?” என்றார்.

    “வர்ற நேரம் தான் .” என்றார் உதவியாளர்.

    குமரேசன் வந்ததும் “அப்பா குமரேசா உன்ன பெரியவா தேடிண்டு இருக்கா போய் என்னனு பாரு.”

    அன்று வந்த செய்தித் தாள்களை படிக்கும் போதுதான் அந்த கேள்வியை பெரியவர் கேட்டார் .

    “குமரேசா எனக்கு M.G.R.-ஐ பாக்கணும் மாதிரி இருக்கு நீ போய் சொல்லிட்டு வர்றயா?”

    M.G.R. உடல் நலம் சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பிய நேரம் அது..
    (இடையில் ஒரு செய்தி.: பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும் , M.G.R. திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து வெளியே வர சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இதில் செய்தி என்ன வென்றால் அந்த நேரம் பெரியவர் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் அமர்ந்து ஒருமணி ஜபம் செய்து கொண்டிருந்தார்.இது தினமும் நடக்கும் பூஜை என்றாலும், அன்று அது விசேஷமாகப் பேசப்பட்டது.)

    “இந்த குடுமியோட போனேன்னா அங்க செக்யூரிட்டி கூட என்ன உள்ள விடமாட்டான்.நான் போய் எங்க சொல்லிட்டு வர்றது.” என்றார் குமரேசன்.

    “சரி போ அவரா எப்ப வர்றாரோ அப்ப வரட்டும்.ஒரு வேளை வந்தாக்க M.G.R. கார் பின் பக்கமா உள்ள வரட்டும். நான் கிணத்துக்கிட்டக்க உக்காந்துக்கறேன். மத்த ரெண்டு சுவாமிகளையும் அங்கேயே வரசொல்லிடலாம் M.G.R. ஆல ஜாஸ்தி நடக்க முடியாது நாங்க எல்லாம் ஒரே இடத்துலேயே இருக்கோம்.சரிதான ?”

    “M.G.R. வரும்போது பாத்துக்கலாம் ” என்றார் குமரேசன்.

    மறுநாள் ஞாயிற்றுக்கிழமை .காலையில் கூட்டம் அதிகம். நானும் பெரியவரின் அறை வாசலில் நின்று கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தேன்.

    அப்போது இதயம் பேசுகிறது மணியனும் , எழுத்தாளர் சுபாஷிணியும் அங்கு வந்தார்கள். அவர்களை கண்ணன் மாமா அழைத்து வந்திருந்தார்.

    பெரியவரிடம் வந்தவர்களைப் பற்றி கூறினார்.

    “மணியன் பெரியவா கிட்டக்க தனியா பேசணுமாம் ” என்றார் கண்ணன்.

    பெரியவர் சைகை காட்ட ” டேய் அம்பி எல்லாரையும் கொஞ்சம் போகச் சொல்லுடா அரை மணி கழிச்சி வரச் சொல்லு ” என்றார் கண்ணன் மாமா என்னிடம். நானும் மற்றவர்களை அனுப்பி விட்டு அங்கே வந்தேன்.

    மணியன் பேச தொடங்கினார்.

    ” பெரியவாள பாக்க M.G.R. ஆசை படறார் . உத்தரவு கொடுத்தா சாயந்திரம் வருவார் ..” என்றார் மணியன் .

    நான் வாய் அடைத்துப்போனேன் .சற்று நேரம் ஒன்றும் புரிய வில்லை .

    இது எப்படி சாத்தியம் நேற்று இரவுதான் பெரியவர் குமரேசனிடம் தனது ஆசையை கூறினார் இன்று M.G.R. தானே வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறாரே ! இதனை என்ன வென்று சொல்வது.

    சிறுவன் என்பதால் M.G.R. பார்க்கும் ஆசை மேலோங்கியது.கலக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் M.G.R. வருவது சொல்லப்பட்டது. மடத்திலும் ரகசியம் காக்கப்பட்டது. கூட்டம் அதிகரித்து விடும் என்பதால் மிக மிக ரகசியமாக வைத்தார்கள். வெளியில் வெளிநாட்டு அதிபர் வருவதாக கூறி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்கள்.

    நேரம் செல்ல செல்ல ஊரறிந்த ரகசியமாக ஆனது. மடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

    மதியம் சுமார் இரண்டு மணிக்கு எல்லாம் அங்கே தங்கி இருந்த என்னை போன்றவர்களை எல்லாம் வெளியே போகச் சொன்னார்கள். நான் ஓடிப் போய் பால பெரியவர் இருந்த மாடி அறைக்கு சென்று பால்கனியில் அமர்ந்து கொண்டு யாரும் பார்க்க வண்ணம் இருந்தேன்.

    பெரியவர் என்ன ஆசை பட்டாரோ அப்படியே மதியம் மூன்று மணிக்கு கார் பின்பக்கமாக வந்தது . அவர் ஆசைப்பட்டபடியே கிணத்தடியில் கம்பளம் விரித்து அதில் பலகையில் அமர்ந்திருந்தார்.மற்ற இரண்டு சுவாமிகளும் அங்கேயே வந்து அமர்ந்தனர்.

    தங்க நிறமாக M.G.R. , ஜானகி அம்மையாருடன் வந்தார். இருவரும் அமர்ந்தனர் . சுமார் பத்து நிமிடங்கள் ஒரே அமைதி பெரியவரும் தியானத்தில் இருந்தார். M.G.R. கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. ஜானகி அம்மையாரும் கண்களில் கண்ணீர் மல்க பெரியவரின் கால்களில் விழுந்தார். கண்ணன் மாமா அருகில் அமர்ந்திருந்தார். பொதுவாக அவர்தான் VIP க்கள் வரும்போது அருகில் இருப்பார். ஆங்கில மொழிபெயர்ப்பு இத்யாதிகள் செய்வார்.

    பத்து நிமிடங்களுக்கு பிறகு பெரியவர் கண்ணை திறந்து உடல் நலம் எப்படி உள்ளது என்று செய்கையில் கேட்க , M.G.R.-ம் தலையை ஆட்டி கைகளால் தனது நலத்தை பற்றி பதில் கூறினார்.

    தட்டுகளில் பழங்கள், பூக்கள் , என்று வரிசையாக பத்து பதினைந்து தட்டுகள் வந்தன . எல்லாம் பெரியவர் முன் வைக்கப்பட்டன. பெரியவர் அவற்றை ஆசையாக தொட்டு பார்த்தார். கண்ணன் மாமா எல்லா பொட்டலங்களையும் பிரிக்க ஒரு குறிப்பிட்ட தட்டு வந்தபோது பெரியவர் M.G.R. இருவருமே திறக்க வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கையை காட்டினார்.

    ஜானகி அம்மையாரிடம் அறுவை சிகிச்சை பற்றியும் தற்போது வழங்கப்படும் மருந்துகள் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
    “……. டிபார்ட்மென்ட்ல (ஒருவர் பெயரை குறிப்பிட்டு) அவர் இருந்தாரே அவர ஏன் வெளில அனுப்பின ? அவன் நல்லவனாச்சே ? என்றார் பெரியவர். (அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் பின்னாளில் வேறுவிதமாக கூறப்பட்டது.)

    M.G.R.-ம் தனது செயலாளரைப் பார்க்க அவர் ஒரு காரணத்தை சொன்னார்.

    பெரியவரும் அவரை மன்னித்து சேர்த்துக்கொள்ளச் சொன்னார்..

    M.G.R. தலை ஐ அசைத்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.
    ( மறுவாரம் அந்த ……… டிபார்ட்மென்ட மனிதர் தான் மீண்டும் வேலையில் சேர்ந்ததை பற்றி பெரியவரை தரிசிக்க வந்தபோது கூறினார் )

    பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்கள்.

    சுமார் அரை மணிநேரம் நீடித்தது இந்த சந்திப்பு.

    பின்னர் எல்லோரும் புறப்பட்டனர்.M.G.R.-ன் கார் உள்ளேயே வந்தது அதில் அவர் ஏறிக்கொள்ள கார் மெல்ல நகர்ந்தது.மடத்தின் வெளியே கட்டுக்கடங்கா கூட்டம். அதனை கண்ட M.G.R. உடல் நிலையை பொருட்படுத்தாமல் காரின் பேனட் மேல் ஏறி கை அசைக்க ஒரே விசில் சப்தம்.

    நான் மற்றும் சிலர் அங்கு வந்த பழங்கள் மற்றும் பொருட்களை மடத்தின் உக்ராண அறைக்கு எடுத்து சென்றோம்.

    மாலை சுமார் ஐந்து மணிக்கு மணியன் மீண்டும் அவசர அவசரமாக வந்தார்.

    ‘இங்க இருந்த தட்டு எல்லாம் எங்க ..?” என்றார் பதட்டத்துடன்.

    பாலு மாமா காதில் ரகசியமாக என்னமோ கூற அவரும் பெரியவரிடம் அதனை கூறினார்.

    பெரியவரும் அமைதியாக “எங்கயும் போகாது உக்ராணத்துல தேடச் சொல்லு ” என்றார் பெரியவர்.

    எல்லோரும் உக்ராண அறைக்கு ஓடிப் போனோம் . மணியன் காட்டிய தட்டைக் கண்டு பிடித்தோம் அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் பெரியவரிடமே வந்தோம். பெரியவர் அதனைத் தொட்டுப் பார்த்தார் சிரித்தார். பின்னர் பாலு மாமாவை விட்டுப் பிரிக்கச் சொன்னார். இதனைத்தான் முதலில் இருவரும் பிரிக்க வேண்டாம் என்று கண்ணன் மாமாவிடம் கூறினர்.

    அதில் இருந்தது ஒரு குறிப்பிட்ட தொகை பணம்.

    “இது காணாப் போயிருந்தா மடத்துக்குன்னா கெட்ட பேர் வந்திருக்கும் “என்றார் பாலு மாமா .

    “அது எனக்காக அவர் கொடுத்தது எதுவும் காணா போகாது.மடத்துக் கணக்குல சேக்கச் சொல்லு ” என்றார் பெரியவர்.

    courtesy - net

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 11th January 2015 at 04:50 PM.

  16. Thanks ainefal thanked for this post
    Likes ainefal liked this post
  17. #1019
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    ஒரே ஆண்டில் ஒரே ஊரில் 4 முறை (அதிலும் ஒரே தியேட்டரில் 2 முறை) வெளியிடப்பட்டு 32 நாட்கள் படம் ஓடுகிறதென்றால் தலைவரின் படங்களைத் தவிர வேறு எந்த படங்கள் இந்த சாதனையை செய்ய முடியும்?

    கடந்த தீபாவளிக்கு கோவையில் தலைவரின் குடியிருந்த கோயில் அருகருகே அமைந்துள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து 17 நாட்கள் ஓடுகிறதென்றால் சாதனை சக்கரவர்த்தியின் கீர்த்தியை என்ன சொல்லி புகழ?

    கோவையில் கடந்த ஆண்டில் தலைவரின் படங்கள் வெளியீடு மற்றும் ஓடிய நாட்கள் பட்டியலை திறம்பட புள்ளி விவரத்துடன் பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்



    மறுவெளியீட்டில் எம்.ஜி.ஆர். சாதனை திரியில் போடலாம் என்று காப்பி செய்து பதிவிட்டால் தவறிப்போய் நமது திரியிலேயே 2வது முறையாக பதிவாகி விட்டது. திரியின் தலைப்பை நான் சரியாக கவனிக்கவில்லை. அழித்து விடலாம் என்று நினைத்தேன். மனம் வரவில்லை. தலைவரின் சாதனையை எத்தனை முறை சொன்னால் என்ன?
    Last edited by KALAIVENTHAN; 11th January 2015 at 03:42 PM.

  18. #1020
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    FWD BY MR.KARUPPUSAMY, PALANI

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •