Page 153 of 400 FirstFirst ... 53103143151152153154155163203253 ... LastLast
Results 1,521 to 1,530 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #1521
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவி ஜெயலலிதா பிறந்த தினம்: பிப்.24 1948
    புரட்சித் தலைவி ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தாய் சந்தியாவும் திரைப்பட நடிகையாக இருந்ததால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.
    ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்தார்.
    எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த போது, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூராவளி பிரச்சாரம் செய்து அதிமுக ஆட்சி உருவாக பாடுபட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தார்.
    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ஆம் அண்டி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் 11-வது முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்றுக் கொண்டார்ர்.
    அதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் கலைமாமணி விருது, தங்க மங்கை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். தாயுள்ளம் கொண்டு ஏழைகளின் துயர் நீக்குவதால் ‘அம்மா’ என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி புரட்சித் தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால் இவரை புரட்சித் தலைவி என்று மக்கள் கூறி அழைக்கின்றனர்.

    source:maalaimalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1522
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. யூகேஷ் பாபு அவர்கள் பதிவிட்ட "மாலை மலர்" செய்தி குறிப்பில், செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார், என்பதில் ஒரு சிறு திருத்தம் :

    உண்மையில் அவர் 3 முறைதான் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் தொடர்ச்சியாக அல்லாமல், சற்று இடைவெளியில்.

    (1991)...... முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்ததின் எதிரொலியாக வீசிய அனுதாப அலையின் போது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சட்ட மன்ற தேர்தல்

    (2001)..... மூப்பனார் தலைமயிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து சந்தித்த சட்டமன்ற தேர்தல்.

    (2006)..... தி. மு. க. தலைவர் திரு. கருணாநிதி அவர்களுக்கு எதிரான அலை வீசிய போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்)


    செப்டம்பர் 2001 முதல் மார்ச் 2002 வரை, செல்வி ஜெயலலிதா அவர்கள், உச்ச நீதி மன்றம் அளித்த ஆணையின்படி, முதல்வர் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தது. எனவே, திரூ. பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால முதல்வராக பொறுப்பில் இருந்தார். மீண்டும், செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற காரணத்தால், அது மூன்றாவது முறை என்று கணக்கிட்டு, மொத்தம் 4 முறை என்று, "மாலைமலர்" செய்தியில் தெரிவித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

    மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பெருமை, சாதனை படைத்த சரித்திர நாயகனாம், நம் இதய தெய்வம், மக்கள் திலகம், பொன்மனசெம்மலுக்கு மட்டுமே உண்டு.
    Last edited by makkal thilagam mgr; 24th February 2015 at 01:29 PM.

  4. Likes ainefal liked this post
  5. #1523
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1524
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    செல்வி ஜெயலலிதாவின் 67வது பிறந்த நாளாகிய இன்று, அவரது தலைமையில் இயங்கும் அ தி. மு. க. கட்சியினை சார்ந்த, சுயநலமிக்க பல போலி அரசியல்வாதிகள், தங்கள் விசுவாசத்தை காட்ட, போட்டியிட்டுகொண்டு,

    1. பிரம்மண்டாமான அளவில், செல்வி ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்ற வண்ண சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது (அதில் எங்கோ ஒரு மூலையில், அ தி. மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை நிறுவிய புரட்சித்தலைவர் படமும், அவர் போற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் படமும் தபால் தலையளவில், ஒப்புக்கு பெயரளவில் காணப்படும் அவல நிலை)

    2. ஒலி பெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்புவது (இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் செல்வி ஜெயலலிதா இதர நடிகர்களுடன் இணைந்து நடித்த படப் பாடல்கள் இல்லாமல் இந்த பாடல்கள் அனைத்தும், நம் மக்கள் திலகம் அவர்கள்
    செல்வி ஜெயலலிதா உட்பட பிற நடிகைகளுடன் இணைந்து நடித்த படங்களில் இடம் பெற்றவை, இதற்கு மட்டும், மக்களால் இன்றும் ரசிக்கப்படும் நம் பொன்மனச்செம்மல் படப் பாடல்கள் தேவை).

    3. கோவில்களில் செல்வி ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்ய பூக்கூடைகளுடன், தேங்காய், பழம் வைத்து கொண்டு, திரிவது (பெற்ற தாய் தந்தையர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாட்களுக்கு அர்ச்சனை செய்கிறார்களோ இல்லையோ இதற்கு மட்டும் தனி அக்கறை கொண்டு செயல்படுவது, - காண்போர் மெச்சிக்கொள்ள, பதவி சுகம் காண).

    4. அமைச்சர்கள் பெயரில், பெரிய அளவிலான சுவரொட்டிகள், ஒட்டப்பட்டிருப்பது. (இங்கும் வழக்கம் போல் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் படமும், அவரின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் படமும், மிக மிக மிகச் சிறிய அளவில்.)


    இவர்கள் எல்லாம், உலகத்தமிழர்களின் உண்மைத் தலைவராம் நமது புரட்சித்தலைவரின் நினைவு நாளுக்கும், பிறந்த நாளுக்கும் சுவரொட்டிகள் அடிப்பது கிடையாது. ஒலி பெருக்கி மூலம் பாடல்களை ஒலி பரப்புவது கிடையாது. கோவில்களில், நமது மக்கள் திலகத்தின் பெயரில், அர்ச்சனை செய்வது கிடையாது.

    இந்த மாதிரியான ஜால்ரா அரசியல்வாதிகளை, உலகம் போற்றும் உத்தமத்தலைவராக இன்றும் விளங்கும், நம் பொன்மனசெம்மலை உளமார நேசிக்கும் உண்மையான விசுவாசிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும், ரசிகர்களும், பக்தர்களும், அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள், எக்காலத்திலும் ஊக்குவிக்கப்படக்கூடாது.

    மனம் குமுறிய ஒரு எம் ஜி. ஆர். பக்தனின் நியாயமான ஆதங்கம் !
    Last edited by makkal thilagam mgr; 24th February 2015 at 02:54 PM.

  7. Likes ainefal, Russelldvt liked this post
  8. #1525
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : FB


  9. #1526
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் புகழ் பாடுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு துவக்கப்பட்ட இந்த திரியினில், சபீப காலமாக, அவர் சம்பந்தப்படாத செய்திகளும், அவரில்லாத புகைப்படங்களும் இடம் பெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இனிவரும் காலங்களிலாவது,

    1. மக்கள் திலகம் குறித்த செய்திகளும், புகைப்படங்களும், மட்டுமே பதிவிடப்பட வேண்டும்,

    2. நம் பொன்மனசெம்மலைப் பற்றி, எதிர்மறையான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு நமது காட்டமான பதிலை தெரிவித்திட வேண்டும்.

    3. புரட்சித்தலைவரின் புகழை தாங்க முடியாமல், அவரது பெருமைகளை இருட்டடிப்பு செய்வோரை புறக்கணித்தல் வேண்டும்.

    4. தனி நபர் பற்றிய புகைப்படங்கள் பதிவிடுவதையும், அது குறித்து செய்திகளை பதிவிடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    நமது மக்கள் திலகம் திரிக்கென்று தனி மாண்பு உண்டு. அது, தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், நான் விடுக்கும் இந்த வேண்டுகோளுக்கு திரியின் பதிவாளர்களிடையே மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன்.

  10. #1527
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1528
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1529
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  13. #1530
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •