Page 252 of 401 FirstFirst ... 152202242250251252253254262302352 ... LastLast
Results 2,511 to 2,520 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2511
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சுந்தரராஜன்
    தங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் புகழ் தமிழ் உள்ளவரைக்கும், அதற்கு மேல் சினிமா உள்ள வரைக்கும், அதற்கும் மேல் கலை உள்ள வரைக்கும், அதற்கும் மேல் கடைசி கலையார்வலர் உள்ள வரைக்கும் வாழும். நமக்கெல்லாம் அந்த உன்னதமானவருக்கென உழைக்கவும் அவர் காலத்தில் வாழவும் வரம் கொடுத்த இறைவனுக்கு உளமார்ந்த நன்றி. இப்பணி மேலும் தொடர வேண்டுவதே என் விருப்பம். தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இருக்கும் போது அதற்கான உத்வேகம் சற்றும் குறையாது. வயது மட்டுமே மாறலாம், மனது மாறாது.. நடிகர் திலகத்தை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆயுள் கூடும்.

    எனவே தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இருக்கும் போது நூறு வயது என்ன ஆயிரம் வயது கூட வாழலாம்.

    தங்களுடைய சிறப்பான காணொளிக்கு என் உளமார்ந்த நன்றி.

    குறிப்பாக என் தமிழ் என் மக்கள், என மக்களைக் கொண்டாடிய மக்கள் தலைவரின் சிறப்பைப் பாடும் ஆரம்பிச்சு வெச்சவரு அண்ணன் தான், ஆயிரம் தான் சொல்லு அவர் மன்னன் தான் பாடலையெல்லாம் மறக்கவே முடியாது. என் மனதில் ஆழமாகக் குடி கொண்ட இப்பாடலை அளித்தமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

    தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2512
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார்
    பாலும் பழமும் அருந்திய ஆனந்தம்..
    நடிகர் திலகம் திரைப்படத்தினால் மட்டுமல்ல..
    தங்கள் எழுத்தினாலும் தான்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2513
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன் அம்மு
    நாளுக்கு நாள் இங்குள்ள ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் தங்களுக்கென தனியிடத்தைப் பெற்று வருகிறீர்கள். அவன் தான் மனிதன் நிழற்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2514
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Happy Birth day Raghavendran sir.



    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes kalnayak, Russellmai liked this post
  7. #2515
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Happy birthday raghavendra sir, many many happy returns of the day

  8. #2516
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வீயார் சார்...எல்லா நலமும் வல்லமையும் நடிகர் திலகம் உங்களுக்கு வழங்கட்டும்...


  9. #2517
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Wish you many more happy returns of the day Mr Raghavendra.

  10. #2518
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு. ராகவேந்திரன் சார்,

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள், பூரண உடல் ஆரோக்கியத்துடன்,, இதுபோல் மேலும் பல பிறந்தநாட்கள் கண்டு, நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    Last edited by KCSHEKAR; 28th May 2015 at 10:29 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2519
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முரளி சார்!

    அருமையான தகவல்களை அளித்து அசர வைத்து விட்டீர்கள். நீங்கள் 'பாலும் பழமும்' மட்டும் தரவில்லை. பழரசத்தையும் சேர்த்து பருக வைத்து விட்டீர்கள்.


    //அவர் எம்.ஆர். ராதாவை டீல் செய்யும் அழகே தனி.//

    உண்மை முரளி சார்,

    யாராக இருந்தாலும் விழுங்கி ஏப்பம் விடும் ராதாவையே தன் சொக்காய் பைக்குள் செருகி வைத்துக் கொள்வார். ("மாமா அவர்களே! ஒன்றே சாட்சி)

    'பாலும் பழமும்' படத்தில் மிக அழகாக நீங்கள் சொல்வது போல் ராதாவை தலைவர் டீல் செய்யும் ஒரு காட்சி.

    ராதா செய்யும் அட்டகாசமும் நம் வயிற்றை பதம் பார்க்கும்.

    "டாக்டரா இருக்குறவங்க நர்ஸைதான் கட்டிக்கணும்...

    இஞ்சினியர் வேலை பாக்குறவங்க சித்தாள் வேலை செய்யுற பொம்பளையதான் கட்டிக்கணும்...

    ஆபிஸ்ல வேலை செய்ற மேனேஜர் அங்க டைப் அடிக்கிற பொம்பளையதான் கட்டிக்கணும்...

    அப்பத்தான் தொழில் வளரும்"

    தியேட்டரே குலுங்கும்.

    அப்படிப்பட்டவரை மிக அழகாக சமாளித்து ஜெயிப்பார் திலகம்.

    "ஆமாம் உன் கல்யாணத்துக்கு அவுங்கல்லாம் ஒருத்தரும் வரலியே" என்று ராதா நைஸாக எகத்தாளம் விடும் போது நடிகர் திலகம் சற்றே குனிந்து மிக அடக்கத்துடன் அமர்ந்திருப்பார். ராதா சொல்வதிலும் நியாயம் இருப்பது போல அவருடைய உடல் மொழி அந்த சமயத்தில் இருக்கும். அதே சமயம் கல்யாணத்திற்கு அவர்கள் வரவில்லையே என்ற ஞாபகப்படுத்தலில் லேசான சோகம் கலந்த வருத்தம் மிளிர்வதையும் அந்த அமர்விலேயே காணலாம்.

    தேவாங்கு ராக்கெட் லேகியத்திற்கு ராதா இவரிடம் சர்டிபிகேட் கேட்கும் போது

    "லேகியத்தை எங்கிட்ட கொடுங்க.. நான் லேபுக்கு கொண்டு போய் டெஸ்ட் பண்றேன்"



    என்று கொஞ்சமும் அலட்டாமல் தலைவர் கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து சிரித்தபடியே (சிரிப்பை விட மாட்டார். இந்த மாதிரி சிரிப்பை வேறு எந்தப் படத்திலும் பார்க்க முடியாது) சொல்வார்.

    ராதா பேசப் பேச சிறு தலையாட்டல்களில் அதை கேட்டுக் கொண்டு ராதாவுக்கு கொஞ்சமும் பிடி கொடுக்காமல் "அப்புறம் வேற என்ன விஷயம்?" என்பாரே ராதா சொன்னதை காதில் வாங்காத மாதிரி. கிரேட்.

    ராதாவைப் பாருங்கள்.

    "வேற என்ன விஷயன்னா இதுல கையெழுத்து போட மாட்டேன்னு அர்த்தமா?"

    என்று 'டபக்'கென்று கற்பூரமாய் பாய்ன்ட்டை பிடிப்பார் மனுஷர்.

    'மாட்டேன்' என்று அழகாக, அதே சமயம் ஆணித்தரமாக தலைவர் கூறுவது டாப். மறுபடியும் ராதா 'மாட்டியா?' என்றவுடன் 'ஆங்' என்று மறுப்பது டாப்போ டாப்.

    எவ்வளவு அழகாக கொஞ்சமும் அலட்டாமல் ராதாவின் அலட்டலை எதிர் கொள்வார்! அதுவும் அதிகம் பேசாமலேயே. அமைதியும், அழுத்தமும், பின் கோபமும், கண்டிப்பும் வெகு அழகாக அவரிடமிருந்து வெளிப்படும்.

    அப்படியே இதே இருவரும் 'பலே பாண்டியா'வில் பண்ணும் கூத்துக்களை கண் முன்னே கொண்டு வந்து இப்போது நிறுத்திப் பாருங்கள். அது வேறு விதம். அது சரவெடி. இது ஒற்றை சரஸ்வதி வெடி.

    எப்படிப்பட்ட மாமேதை! இந்த மாமேதையுடன் கை கோரத்த பிற மேதை நடிகர்கள் பூமாலையில் சேர்ந்த பூக்களாக இவருடன் சேர்ந்து மணம் வீசினார்கள்.

    தானும் புகழ் பெற்று மற்றவர்களையும் புகழ் அடையச் செய்து பார்த்த தன்னிகரில்லா தானைத் தலைவர் அல்லவோ அவர்.
    Last edited by vasudevan31355; 28th May 2015 at 10:52 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks RAGHAVENDRA thanked for this post
  13. #2520
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    பாலும் பழமும் - நன்றி டாக்டர் சாந்தாராம் அவர்கள் கொடுத்த சில துளிகள்... உங்கள் பார்வைக்கு...

    ‘பாகப் பிரிவினை, பாவ மன்னிப்பு, பாச மலர் அடுத்து...... " பாலும் பழமும் " !




    இந்த படத்திற்கும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பார்ப்பு ! " சரவணா பிலிம்ஸ் " ஜி வேலுமணி யின்

    இரண்டாவது தயாரிப்பு ! இந்த படம் தயாரிப்பில் இருந்த போதுபடத்திற்கு பெயரையே வைக்கப்பட வில்லை !


    கடைசி நேரத்தில் : " பாலும் பழமும் " என்கிற பெயர் வைக்கப்பட்டது .
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முற்றிலும் நூதனமான வேடம் ! " டாக்டர் ரவி " !

    புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செய்யும் டாக்டராக : மாறுபட்ட " விக்" மற்றும் உடையுடன் தோன்றினார் , நடிகர் திலகம்



    அவரது, சிறு அங்க அசைவுகளைக் கூட கவனித்து கைதட்டும் ரசிகர் குழாம் கால கட்டத்தில் உயர் மட்டத்து விஞ்ஞானி தோற்றத்தில்

    சிவாஜியின் அளவான நடிப்பைக்கண்டு பலர் மெய் மறந்து ரசித்தனர் !

    அதே சமயத்தில்...

    உயிருக்குயிராய் காதலிக்கும் தன் இலட்சிய மனைவியின் மேல் அவர் அன்பை வெளிப்படுத்தும் அன்பு கணவனாகவும் நடிகர் திலகம் ' வெளுத்துக்" கட்டினார் !

    சரோஜாதேவி : அழகுக்கு அழகு, நடிப்புக்கு நடிப்பு ! இரண்டிலும் சரோஜாதேவி , தன் திறமையைக் காட்டின படம் " பாலும் பழமும் " !
    அதிலும் 60 களில் கொடுமையான நோயாக விளங்கிய ' காச நோய் " பாதிக்கப்பட்ட நோயாளியாக சரோஜாதே அற்புதமாக நடித்தார் !
    இதற்காக அவர் பல நாட்கள் பட்டினி கிடந்து தன் முகப் பொலிவை இழந்தவராக , ' டி பி ' யில் வாடும் பெண்ணாக தன் முகத்தை மாற்றிக் கொண்டு அற்புதமாக சரோஜாதேவி நடித்தார்.

    எம் ஆர் ராதா.

    " டாக்டர் ஆக இருப்பவன் ஒரு நர்ஸ் ஐத் தான் கல்யாணம் கட்டிக்கணும் !
    ஒரு என் ஜினீயர், சித்தாளைத்தான் கட்டிக்கணும் !
    ஒரு ஆபிஸர் ஆக இருப்பவன் , ஒரு 'டைப்பிஸ்ட்' த்தான் கட்டிக்கணும் !
    அப்போத்தான் தொழில் வளரும் ! "

    என்கிற எம் ஆர் ராதாவின் 'ஜோக்' புகழ் பெற்றது !

    இன்னொரு கட்டத்தில் , படத்தில் ஒருவர் - நாகய்யாவோ அல்லது பாலய்யாவோ , எம் ஆர் ராதாவுக்கு :
    " ஆசிர்வாதம் " என்று சொல்லும்போது, எம் ஆர் ராதா ' டக் ' என்று " ஆசி " எனக்கு, " வாதம் " உனக்கு ! "
    என்று சொல்வது தமாஷ் !

    இப்படி ஒரு சில காட்சிகளே எம் ஆர் ராதா இந்த படத்தில் வந்தாலும் இவர் வரும் போது கலகலப்புக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம் !

    இயக்குனர் ஏ பீம்சிங் :

    மனித உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து படங்களை இயக்குவது / எடுப்பது இவருக்கு வழக்கம் !
    இவரது படங்களில் " மசாலா" இருக்காது ! சண்டைக் காட்சிகள் இருக்காது !
    " Muscle Dance " அல்லது " ஐட்டம் " நடனங்கள் இருக்காது !
    இவர் படம் எடுப்பதை இப்போது ' பீல்ட்' இல் உள்ள மக்களைக் கேட்டால்....." Sentimental Feelings " என்று அலட்சியமாக பேசுவர் !
    இந்த " Sentimental Touch " உடன் இவர் படங்களை இயக்கியதால்..... 53 வருடங்களுக்குப் பிறகும் இந்த படத்தைப் பற்றி இப்படி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் !

    " பாலும் பழமும் " ஏன் வெற்றி பெற்றது - கணவன் - மனைவி உறவு :

    'அண்ணன் -தங்கை உறவை " பாச மலர்' நல்ல முறையில் எடுத்துச் சொன்னதைப் போலவே....
    கணவன் - மனைவியின் உறவை - அன்பின் வெளிப்பாடு - பாசப்பிணைப்பு - மனைவியைப் பிரிந்தால் கணவன் படும் பாடு....
    கணவனைப் பிரிந்த மனைவி படும் வேதனை.......


    இதனை : சிவாஜி கணேசன், சரோஜா தேவி, மெல்லிசை மன்னர்கள்,டி எம் எஸ் - பி சுசீலா மற்றும் கவிஞர் கண்ணதாசன் இவர்களைக் கொண்டு இயக்குனர் பீம்சிங்.....

    மிகச் சிறந்த முறையில் படமாக்கியிருந்தார் !


    " வாழ்ந்தால் இலட்சிய தம்பதிகள் : டாக்டர் ரவி - நர்ஸ் சாந்தி போல் வாழவேண்டும் ! " என்று அந்த கால இளம் தம்பதியர்கள் உறுதி பூண்டனர் என்றே சொல்லலாம் !
    பொதுவாக நடிகர் - நடிகையர்களின் பெயர்களை தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு வைக்கும் இந்த நேரத்தில்...." பாலும் பழமும் " படம் வந்த போது நிறைய குழந்தைகளுக்கு " ரவி" , " சாந்தி " என்றே பெயர்களை வைத்து மகிழ்ந்தனர் !

    பாச மலர் " " சிவாஜி - சாவித்திரி " நிஜமான அண்ணன் -தங்கை !
    " பாலும் பழமும் " சிவாஜி - சரோஜாதேவி நிஜமான கணவன் மனைவி!
    இவர்கள் இப்படித்தான் நடித்தனர் !

    " கதையின் போக்கு அப்படித்தான் இருக்கிறது.....எனவே இவர்கள் இப்படி நடித்தது ஒன்றும் புதுமையா ? " என்று சிலர் கேட்கலாம் !
    கதை அப்படித்தான் இருக்கிறது....ஆனால் கதைக்கு ' உயிரோட்டம் " கொடுத்தது யார் ?
    இவர்களின் நடிப்பு / அர்ப்பணிப்பு!!!

    " பாலும் பழமும் " படமும் , அந்த படத்தின் வெற்றியும் அதன் விளைவுகளும் !

    " பாலும் பழமும் " படம் சென்னையிலும் மற்றும் பல இடங்களிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியது !
    ஆனால் , அந்த படம் நம் தமிழ் நாட்டு மக்களை எவ்வாறு பாதித்தது ?

    'பாலும் பழமும் ' சேலைகள்! அதென்னப்பா, " பாலும் பழமும் சேலைகள் ?
    " பாலும் பழமும் " படத்தில் சரோஜாதேவி அணிந்து வந்த சேலையா ? ................இல்லையா !
    அந்த காலத்தில் மக்களைக் கவர்ந்த பெயர்களில் " புடவை டிசைன்" களை புதிதாக அறிமுகப் படுத்தியதுண்டு !


    " பாலும் பழமும் " என்கிற பெயர் மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்ததால்...ஒரு புடவையின் டிசைன் ஐ " பாலும் பழமும் ' என்று வைத்தனர் !

    " பாலும் பழமும் " சேலைகள் எப்படி இருக்கும் ?



    " பாலும் பழமும் " படத்தில் சிவாஜி கணேசனுக்கு மேக் அப் போட்ட ஒப்பனையாளர், தன் கற்பனைத்திறனால் சிவாஜிக்கு மிக அழகான " கெட் அப் " இல் மேக் அப் போட்டார் ! இந்த கால கட்டத்தில் அவரின் துணையாருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது ! அந்த குழந்தையின் பெயர் : ரவி ! அவர் இப்போது ஒரு புகழ் பெற்ற டாக்டர்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •