Page 104 of 401 FirstFirst ... 45494102103104105106114154204 ... LastLast
Results 1,031 to 1,040 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1031
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    செல்வகுமார் சார்,

    சத்தியமாக இப்படி ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நட்பான முறையில்தான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தேன். கோபாலுக்கு வக்காலத்து வாங்கி எழுப்பட்ட கேள்விகள் அல்ல அது. பல நாட்களாக உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததுதான். கோபாலுக்கு நீங்கள் போட்ட பதில் அதற்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன்தான் அதில் தெறிக்கும் கோபத்தை பார்த்தவுடன்தான் என் தவறு எனக்கு புரிந்தது. உங்களை கேள்வி கேட்க கூடாது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் நடந்த தவறை மன்னிக்கவும்.

    என் செய்கைக்கு ஒரு உள்நோக்கமும் கற்பித்திருக்கிறீர்கள். சிவாஜியை திட்டினாலும் பரவாயில்லை. எம்ஜிஆரை குறை கூறுவதால் கோபாலை ஆதரிக்கிறேன் என்று. நான் யாரையும் என்றுமே திட்டியதில்லை. இந்த இணையதளத்தில் 9 வருடங்களாக பயணிக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நான் நேரிடையாகவே சொல்லி விடுவேன் எனக்கு வேறு யார் துணையும் தேவையில்லை. இங்கே தொடர்ந்து வருபவர்களுக்கு நான் சொலவது புரியும்.

    இனி நீங்களும் சரி கலைவேந்தனும் சரி சென்ற வாரம் கோபால் எழுதிய சில பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடப்பது ஏப்ரல் 3 வெள்ளியன்று. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தேன். சென்ற இடத்தில கணினி இல்லை. என்னிடம் laptop மற்றும் mobile-ல் படிக்கும் வசதிகளும் இல்லாததால் என்னால் மய்யம் இணையதளத்தை பார்க்க முடியவில்லை. சென்ற இடத்தில அலைபேசி சிக்னலும் இல்லை என்பதால் நான் எவருடனும் அல்லது மற்றவர்கள் என்னிடமோ தொடர்பு கொள்ள இயலாத சூழல். இரவு 10 மணிக்கு மேல் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியில் வந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் திரியில் பதியப்பட்ட சில விரும்பத்தகாத பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டார், என்னால் access பண்ண முடியாத காரணத்தினால் உடனே மலேசியாவில் வசிக்கும் ஹப் அட்மினை (hub admin ) சார்ந்த சீனியர் மாடரேட்டரான nov அவர்களை தொடர்பு கொண்டு (மலேசியாவில் அப்போது நள்ளிரவு) விஷயத்தை விளக்கி பதிவுகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் நமது இந்திய நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலை சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டார். நான் ஞாயிறு நள்ளிரவுதான் சென்னை வந்தேன். என்னால் திங்கள் மாலைதான் ஹப் பர்ர்க்க முடிந்தது. பதிவுகள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தினங்கள் ஆன நிலையில் மீண்டும் நடந்தவற்றைப் பற்றி பகிரங்கமாக குத்தி கிளற விரும்பவில்லை. இவை அனைத்தும் ராகவேந்தர் சாருக்கு தெரியும். மற்ற பல ஹாப் உறுப்பினர்களுக்கும் தெரியும்.

    இப்போதும் கூட இவற்றையெல்லாம் சொல்லித்தான் என் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த விவரங்களெல்லாம் தெரியாத திரியின் வாசகர்கள் ஒரு சிலருக்கேனும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்குமானால் அவர்களுக்காகவே இந்த விளக்கம்.

    நான் மாடரேட்டர் ஆன பிறகு மிக அதிகமாக எடிட் செய்தது கோபாலின் பதிவுகளைத்தான். அதையும் நான் திரியில் பதிவு செய்திருக்கிறேன். ஆக கோபாலுக்கு சலுகை என்பதெல்லாம் அவரவர் கற்பனையே தவிர வேறொன்றில்லை

    current affairs section பற்றி சொன்னது உங்களை அங்கே போய் எழுத் சொல்லவில்லை. அரசியல் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் இடம் என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.

    அதே போல் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் வந்தால் எதிர்ப்போம். ஆனால் கருணாநிதி பற்றி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்துக் கொண்டேன்.

    அதே போல் இந்த திரியில் காங்கிரஸ்காரர்கள் யாருமில்லை. ஆகவே இன்றைய தமிழக காங்கிரஸில் நடைபெறும் விஷயங்களை நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளார்களோடு தொடர்புபடுத்துவதை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன். அதற்கும் நீங்கள் தொடர்பேயில்லாமல் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.

    இறுதியில் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த திரியின் நடுநிலை பற்றி. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இந்த நடிகர் திலகம் திரிதான். நீங்கள் கலைவேந்தன் இளைய சகோதரர் யுகேஷ் பாபு போன்றவர்கள் பலமுறை கடுமையான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் இன்னமும் அதே போல்தான் இருக்கிறது. இவ்வளவு ஏன், நண்பர் கலைவேந்தனின் பதிவுகளில் இருந்த ஒரு சில முரண்களை நான் சுட்டிக் காட்டியபோது என் மீது கோவம் கொண்டு என்னை வரலாறு தெரியாதவன் என்று எழுதினார். அதைகூட நீக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறோம். நடிகர் திலகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட நாங்கள் நீக்கியதில்லை.

    என்னால் இனி உங்களுக்கு தொந்தரவு இருக்காது. வருகை தந்து பதில் சொன்னதற்கு நன்றி!

    அன்புடன்
    அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :

    முதலில் உங்களுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    தங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் பதிவை எதிர்பார்க்கவில்லை.
    எங்கள் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மலைப் பற்றிய , நண்பர் திரு.கோபால் அவர்களின் சமீபத்திய பதிவு குறித்து அவரை நீங்கள் கேட்க மாட்டேன் என்கிறீர்களே என்று நானும் பல நாட்களாகவே உங்களிடம் கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன்...... சகோதரர் கலைவேந்தன் கூறியது போல கடந்த வார பதிவை நான் மேற்கோள் காட்டியது ஒரு உதாரணம்தான். சிற்சில சமயங்களில், அவ்வாறு சுட்டி காட்டப்படும் உதாரணங்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதான் உண்மை.

    ஒரு MODERATOR ஆக தாங்கள் திகழ்ந்து, சில பதிவுகளில் சில தேவையற்ற வார்த்தைகளை நீக்கியதற்கு நன்றி கூறும் இந்த வேளையில், நடிகர் திலகம் திரி நண்பர்கள் சிலர் எங்கள் மக்கள் திலகம் திரியினில் வந்து பதிவிடுவது திரு.கோபால் அவர்களுக்கு பிடிக்காமல் அவர்களை குறை கூறி எழுதுயதை நீங்கள் கண்டிக்கவில்லை என்றுதான் வருத்தம் கொள்ளச் செய்கிறது. ஒரு சமீபத்திய உதாரணம் : ஐதராபாத் திரு. ரவி அவர்கள் எங்கள் திரிக்கு வந்து நற்கருத்துக்களை கூறுகிறார் என்பதற்காக அவரை, ‘’ரவி’க்கை அணிந்து சரணாகதி அடைந்து விட்டார்’ என்று திரு.கோபால் தனக்கே உரிய நையாண்டியுடன் கிண்டல் செய்தார். அதை நீங்கள் இது வரை கண்டிக்காதது மட்டுமல்ல, அந்த பதிவையும் நீக்கவில்லை.

    அனைவருக்கும், திரி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்த தாங்கள், திரு. கோபால் அவர்களுக்கு அறிவுரை கூற வில்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு மேலோங்கி நிற்கிறது. இது ஒரு தலை பட்சமாகவே என் கண்ணுக்கு புலப்படுகிறது.

    எந்த காலத்திலும், சுயமரியாதை காத்து வரும், திராவிட இயக்கத்தை சார்ந்த நாங்கள், மற்றவர்களின் சுயமரியாதையை வெகுவாகவே மதித்து வருகிறோம். எனவே மன்னிப்பு என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. மன்னிப்பு கோரும் அளவுக்கு தாங்கள் எந்த தவறும் செய்ய வில்லையே !

    சகோதரர் கலைவேந்தன் ‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக..’ என்று பதிவு போட்டால் அதை புரட்சித் தலைவர் நீக்கச் சொன்னார் என்றும் திரு. கண்ணதாசன்தான் பிடிவாதமாக அந்த வரியை சேர்த்தார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகிறார் திரு. கோபால். “தன் நெஞ்சறிவது பொய்யற்க ... பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது. தாயை தெய்வமாக மதிப்பவர் எட்டாவது வள்ளல், எங்கள் புரட்சித் தலைவர். இது உலகறிந்த உண்மை. அப்படிப்பட்ட எங்கள் பொன்மனச் செம்மல், அந்த வரியை நீக்க சொல்வாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

    கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களைப் பற்றி மக்கள் திலகம் திரியில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று நான் கூறியதாக சொல்லியுள்ளீர்கள். நான் அப்படி கூறவேயில்லை. இது அபாண்டமான பழி. கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றிய தவறான தகவல்கள், மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டால், அதற்கு ஆதாரப்பூர்வமான மறுப்பினை தாரளமாக தெரிவிக்கலாம் என்றுதான் கூறினேன். மேலும், கலைஞர் திரு. கருணாநிதி அவர்களைப்பற்றிய பதிவுகளை நான் கண்டிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அண்ணாவின் தம்பிகளில் ஒருவர், புரட்சித் தலைவரின் நண்பர், திராவிட இயக்க தளபதிகளில் ஒருவர் என்ற வகையிலும், எங்கள் பொன்மனச்செம்மல் ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட தலைவர் என்ற காரணத்தாலும், சட்ட சபையில் அவை நாகரீகம் காத்து, எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது ஒரு முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தவன் என்ற காரணத்தாலும், கலைஞர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. நான் அவரை கலைஞர் கருணாநிதி என்றே எப்போதும் மரியாதையாக கூறுவேன். என்னுடைய கடந்த கால பதிவுகளில் இதனை உறுதி செய்து கொள்ளலாம். இங்கே நான் புரட்சித்தலைவரின் தீவிர அபிமானி, பக்தன் என்பதால், கலைஞர் கருணாநிதி அவர்களை எதிர்ப்பவன் என்று நீங்களாகவே அர்த்தம் கற்பித்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?

    என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் கூறவில்லை. தாராளமாக நீங்கள் கேட்க உரிமை உண்டு. அதற்கு தக்க ஆதாரத்துடன் விளக்கமளிப்பது என் கடமை. அதேசமயத்தில், நாங்கள் உங்களை கேட்டால் இப்படி பதிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள்.

    சகோதரர் கலைவேந்தனின் பதிவை ஏன் நீக்கவில்லை என்று கேட்கிறீர்கள். நாங்கள் அனாவசியமாக நடிகர்திலகம் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிப்பதில்லை.

    நான் கூட, மிருதங்கச் சக்கரவர்த்தி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களை புரட்சித் தலைவர் பார்த்துவிட்டு மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டினார் என்று நடிகர்திலகம் திரிக்கு வந்து சமீபத்தில் பதிவிட்டேன். அதை நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட பாராட்டினார்.

    நான் சகோதரர் கலைவேந்தன் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்தவன். அவர் யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். நீங்கள் குறிப்பிட்டபடி, ‘வரலாறு தெரியாதவன்’ என்ற வார்த்தையை உங்களைப் பார்த்து அவர் பயன்படுத்தவில்லை.

    ஒருவர் தன் தாய்க்கு சிலை வைத்து அதை திறப்பதற்கு தகுதியான ஆள்

    யார் என்று பார்த்துதான் தேர்ந்தேடுப்பார். நீங்கள் போற்றும் நடிகர் திலகம். பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வேண்டியப்பட்டவராக இருந்த போதிலும், எங்கள் மக்கள் திலகத்தை வைத்து தான் தனது தாயின் சிலை திறப்பு விழாவை நடத்தினார். ஒரு குழந்த பிறந்தால் அது அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் போல்தான் வாழ்ந்து புகழ் பெற வேண்டும், என்று எங்கள் புரட்சித்தலைவரின் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த உங்கள் அபிமான நடிகர் போற்றிய எங்கள் பொன்மனச் செம்மலைப் பற்றி இங்கே, இந்த நடிகர் திலகம் திரியினில், எவ்வளவு மோசமான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதனையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதையெல்லாம் நீங்கள் நீக்கத் தயாரா ?.

    நேற்று கூட, “ சாந்தி” திரைப்படத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களான எனது நண்பர்கள் சிலர், விழாவில் திரு. ஜி. .உமாபதி அவர்களின் மைந்தர், ‘தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்கள் எனக்குத் தெரிந்து மக்கள் திலகமும் நடிகர் திலகமும்’ தான், என பேசியதாக சொன்னார்கள். அப்படி புகழ் பெற்று விளங்கும் இரு திலகங்கள் புகழை மட்டும் கூறுவோம்.

    நாங்கள் எல்லாருமே நட்புணர்வோடு இருக்கவே விரும்புகிறோம். மறுபடியும், கூறுகிறேன் : நீங்கள் தாராளமாக என்னை கேள்வி கேட்கலாம். அதேபோல, எட்டாவது வள்ளல், பொன்மனச் செம்மலைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், விளக்கம் அளிப்போம். அதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    மீண்டும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


    Last edited by makkal thilagam mgr; 15th April 2015 at 01:45 PM.

  2. Thanks Subramaniam Ramajayam, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1032
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சிங்க நாதம் 1 : வீரபாண்டிய கட்டபொம்மன் புகழாரம்



    இன்று மாலை ராஜ் டிவியில் ஒளிபரப்பான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் மீள் வெளியீட்டு டிரைலர் விழாவில் பங்கெடுத்த அனைவரும் நடிகர்திலகத்தின்
    புகழை மேம்பட உரைத்தனர். தமிழ் திரையுலகின் திலகப் படமான கட்டபொம்மன் சிறப்பான மறு வெளியீட்டு வசூல் சாதனை படைத்திட விழைகிறேன்.
    கருத்துவேறுபாடுகளின்றி நடிகர்திலகத்தின் புகழை நிலைநிறுத்துவோம்

    Braveheart surrendering to Sweetheart?!


    இரும்பு நெஞ்சுக்குள்ளும் இளக்கம் உண்டே ! இமை மூடித் தூங்க வேண்டுமே !!

    NT the soft centered steel ! The Sleeping Volcano!! A Blazing Magnum!!! The dormant Geyser !!!

    But....What a hands up surrender by the braveheart roaring lion to this sweetheart child warrior !

    Last edited by sivajisenthil; 15th April 2015 at 12:13 PM.

  5. Thanks Georgeqlj, Subramaniam Ramajayam thanked for this post
  6. #1033
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    ராணி லலிதாங்கி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #1034
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    ராணி லலிதாங்கி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw liked this post
  10. #1035
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    நண்பர்கள் திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.முரளி, திரு.ஆர்.கே.எஸ்., திரு.கல்நாயக், திரு.சின்னக்கண்ணன், திரு.கோபு, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.சிவா, திரு.சிவாஜி செந்தில், திரு.செந்தில்வேல் சிவராஜ், திரு.ஜோ, திரு.டிசிஎஸ், திரு.டிஏசினிமா, திரு.சதீஷ், திரு.சுந்தராஜன், திரு.சந்திரசேகர், திரு.ஹரீஷ், (நினைவுக்கு வந்தவரை கூறியிருக்கிறேன். பெயர்கள் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


    வாழ்த்துக்கு நன்றி திரு கலைவேந்தன்
    தங்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Likes Subramaniam Ramajayam liked this post
  12. #1036
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :


    ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?

    பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.


    அன்பிற்கினிய பேராசிரியர் அவர்களுக்கு

    திராவிட இயக்கங்கள் பற்றி மோசமான விமர்சனம் என்று ஒரு வாக்கியம் படித்ததால் விமர்சித்தது நான் ஒருவனும் கூட என்கிற காரணத்தால் இதற்க்கு பதில் கூற கடமைபட்டுள்ளேன்.

    நடிகர் திலகம் அவர்களை தவறாக விமர்சித்து திராவிட இயக்கத்தை தூக்கி பிட்ப்பவர்களுக்கு என்னுடைய விமர்சனம் காட்டமாக தான் தெரியும். காரணம் அது குற்ற உணர்ச்சி. வேறு ஒன்றும் இல்லை.

    தெருத்தெருவாக சென்று இவர்களின் நாடகங்களின் வசனம் பேசி வசூல் செய்து கட்சி நிதி கொடுக்க, சம்பாதித்ததில் ஒரு பங்கு, நாடகம் நடித்து அதில் ஒரு பங்கு, தெருத்தெருவாக வசனம் பேசி அதன் முழுபங்கு, இப்படி காசுக்கு மட்டும் கணேசன் தேவைப்பட்டார் ஒரு காலத்தில் திராவிட தலைவர்களுக்கும் திராவிட கட்சிகளுக்கும்.

    புகழின் உச்சியில் எவரைகாட்டிலும் அதிவேகமாக பயணித்து மக்கள் அன்பிற்கு அதிக அளவில் பாத்திரமாகி..திரும்பும் திக்கெல்லாம் கணேசன்..கணேசன்...என்ற ஒரு நாமம். எங்கே கட்சி இவன் வசமாகிவிடுமோ என்ற ஒரு பயத்தில் குழிதோண்டி அவமானபடுத்தி அவரே கட்சியை விட்டு வெளியேறும் அளவிற்கு ஒரு குடைச்சல் கொடுக்கல் !

    சரி...கட்சியில் இருந்து போயாகிவிட்டது ...அதற்க்கு பிறகு சும்மா விட்டார்களா...துரத்தி ..துரத்தி...character assassination வேறு...! சிவாஜி காசு குடுக்கமாட்டார்...அவர் கருமி...இத்தியாதி..இத்தியாதி...இந்த பல்லவி ....நடிகர் திலகத்திடம் வாங்கிய பணம்...அவரால் கட்சிக்கு அதுவரை வசூலித்து கொடுக்கப்பட்ட அதிக அளவு நிதி.....இதெல்லாம் திமுக விற்கு வேறு யார் செய்து கொடுத்தது நடிகர் திலகம் அல்லாமல் ? சினிமாவிற்குள் அரசியல் புகுத்தியது திராவிட கலாசாரம் ..! கலையை கிண்டல் அடிப்பார்கள்...ஆனால் காசு மட்டும் கலைத்துறை கொட்டி கொடுக்கவேண்டும்...இது திராவிட நியதி !

    இப்படி...ஒவ்வொரு தருணத்திலும் நடிகர் திலகத்தை மற்ற எவரை காட்டிலும் அதிக பிஸியாக 20 மணி நேரம்...மூன்று ஷிப்ட் தேமேன வேலை செய்துகொண்டிருப்பவரை, வேண்டுமென்றே வம்புக்கிழுத்து வீம்பளன்தது இதே திராவிட இயக்கம் அதன் தலைகள் தான் !

    பேரறிஞரை நான் ஒரு போதும் குறை கூறமாட்டேன்...காரணம், அவர் ஒரு அப்ரானியாக இருந்தார் ஒரு வட்டத்திற்குள். எல்லாம் தெரிந்தும் எடுக்கவேண்டிய முடிவுகளை அவர் தலைவராக நிச்சயம் எடுக்கவில்லை. அப்படி அவர் எடுத்திருந்தால் நடிகர் திலகம் அவர்களுக்கு பதிலாக முதல் முதலில் மேடையில் அறிமுகபடுத்தப்படும் மக்கள் திலகம் அவர்கள் வரவேற்றுவிட்டு...அதிக நிதி வசூல் செய்து கொடுத்தது சிவாஜி கணேசன் என்ற உண்மையை அவர் கூறியிருக்கவேண்டும் ! அதை அவர் செய்யவில்லை...!

    நடிகர் திலகம் அவர்கள் உலகபுகழ் அடைந்தபோதுகூட, நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு வழி அனுப்ப யாரும் இல்லை...அவரை மரியாதை செய்து வழி அனுப்பியது ஹிந்தி திரை உலகம் ! இதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை....இதன் வெளிப்பாடாக நடிகர் திலகம் திரும்பி வரும்போது வேறு வழியில்லாமல் அவரை வரவேற்க இசைந்தனர் ! இதுதானே உண்மை ? காலையில் அரசியல் புகுத்தியது யார்...? மக்கள் திலகமா ? இல்லையே ! திராவிட தலைவர்கள் தானே ?

    அமெரிக்க அதிபராம் john f kennedy தமிழகத்தில் உள்ள ஒரு நடிகனை பற்றி விசாரித்து தகுதி அறிந்து அவரை இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக அழைக்கிறார்...அதுவும் இந்திய நடிகர்களில் அதுவரை எவரையும் இதுபோல மரியாதை செய்ததில்லை. அப்படி ஒரு புகழ் ஒரு அமெரிக்க அதிபர் கொடுக்கும்போது...வாழ்த்தி வழியனுப்பாமல் அரசியல் காழ்புணர்ச்சி காட்டியது...திராவிட பாரம்பர்யம்...!

    இது போல எவ்வளவோ சம்பவங்கள் சார் ...! இதனால் நான் விமர்சனம் செய்யவில்லை.

    உண்மை இப்படி இருக்க...நடிகர் திலகம் அவர்களை அவதூறு பேசி...தமிழ்....தமிழன்....திராவிடம்..திராவிடம ் என்று கூறுபவர்கள் ஒரு தமிழனை ...இவர்களை விட ஒருபடி மேலான agmark தமிழ் வித்தை கிண்டல் செய்யும் போதும் கேவலபடுத்தும்போதும் திராவிட மூட கொள்கைகளை ஞ்யயபடுத்தும்போது நான் விமர்சனம் செய்துள்ளேன். கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். இல்லை என்று கூறவில்லை. இதுபோல செயல்கள் தொடரும் பட்சத்தில் இனியும் தங்களை போல நானும் மனசாட்சிபடி பதில் பதிவிடும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறேன்

    இதுதான் இதுவரை நடந்துகொண்டிருந்தது..! நான் விமர்சனம் செய்த காரணம் இதுவே !

    Rks

  13. Likes Subramaniam Ramajayam liked this post
  14. #1037
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    முதன் முறையாக நடிகர் திலகத்தின் திரிக்கு வந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்த திரு சி.எஸ். குமார் அவர்களே உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    அன்புடன்

  15. #1038
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஆர்கேஎஸ்,

    மீண்டும் ஒரு மோதல் தொனியில் பதிவுகள் இட வேண்டாமே! நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று நீங்கள் சொல்லும்போது மொத்த திராவிட இயக்கத்தையும் பழிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள். அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை குறிப்பிடுங்கள் என்கிறார்கள்.

    நான் நேற்றே சொன்னதுபோல் அரசியல் தவிர்த்து (அது தேவைப்படும் நேரத்தில் மட்டும் பேசலாமே) நடிகர் திலகத்தின் கலைப் பயணம் பற்றி பேசலாம்.

    அன்புடன்

  16. #1039
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் கலைவேந்தன் அவர்களே,

    உங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    எனக்கு தெரிந்து நமக்குள் நடக்கும் விவாதம் முடிவடையாமல் நீண்டு கொண்டே போகும். நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதற்கு ஒரு வேளை நான் நேற்று குறிப்பிட்டது போல் உங்கள் அளவிற்கு எழுத்து திறமை என்னிடம் இல்லாமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆகவே நாம் மாறி மாறி இதைப் பற்றி விவாதம் செய்து திரியின் வாசகர்களை சோதிக்க வேண்டாம்.

    நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொண்டால் விஷயம் முடிந்து விடும் அல்லவா? ஆகவே தவறு என்னுடையதாகவே இருக்கட்டும். இதை நான் விட்டுக் கொடுப்பதாக நினைத்து சொல்லவில்லை. நான் நேற்றே குறிப்பிட்டது போல் நான் சொல்லுகின்ற கோணம் உங்களுக்கு தவறாக எதிர்மறையாக தோன்றுகின்ற வாய்ப்பு இருப்பதனால் சொல்கிறேன்.

    ஒரே ஒரு சிறு விளக்கம் மட்டும். உங்கள் முரணை நான் சுட்டிக் காட்டினேன் என்பதும் அதன் காரணமாக நீங்கள் ஒரு வாசகத்தை பயன்படுத்தினீர்கள் என்பதும் உண்மை.

    நான் சுட்டிக் காட்டிய முரண்

    நீங்கள் ஒரு முறை கண்ணியம் பற்றி கோபாலுக்கு அறிவுரை சொன்னீர்கள். அதற்கு நான் சொன்னேன் ராஜ ராஜ சோழன் சென்னை ராம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்று நீங்கள் (கலைவேந்தன்) சொன்னீர்கள். அது தவறு, ராஜ ராஜ சோழன் ராம் திரையரங்கிலே வெளியாகவேயில்லை என்று பத்திரிக்கை விளம்பரம் மூலம் நிரூபித்த பிறகும் தவறான தகவலை தந்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளும் கண்ணியம் உங்களுக்கு இல்லையே என்று நான் குறிப்பிட்டிருந்தேன். உடனே அடுத்த நாளே நீங்கள் சிவாஜி, எம்ஜிஆர் திரிகளிலும் ஒரே போன்ற பதிலை பதிவு செய்தீர்கள். அதில் என்ன சொல்லியிருந்தீர்கள் "சித்ரா கிருஷ்ணசுவாமிக்கும் சக்தி கிருஷ்ணசுவாமிக்கும் வித்தியாசம் தெரியாத உங்களைப் (அதாவது என்னை சொல்கிறீர்கள்) போய் உங்கள் நண்பர்கள் வரலாற்று களஞ்சியம் என்று சொல்கிறார்கள்" என்று எழுதினீர்கள்.

    அதற்கு நான் கூட " என்னை நான் அப்படி நினைத்துக் கொளவதில்லை. அன்பின்பால் நண்பர்கள் அப்படி சொன்னாலும் அதை தலையில் ஏற்றிக் கொளவதில்லை. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி" என்று பதில் சொல்லியிருந்தேன். இந்த விஷயத்தைதான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். உங்கள் அளவிற்கு நினைவாற்றல் இல்லையென்றாலும் கூட ஏதோ ஒரளவிற்கு ஞாபக சக்தி இருக்கிறது சார்.

    முதல் பாராவில் குறிப்பிட்டிருந்தது போல் எதையும் மீண்டும் விளக்கமளித்து விவாதம் செய்ய வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் திரியின் வாசகர்கள் நீங்கள் சொல்வது போல் நான் ஏதோ பொய்யுரைத்தேன் என்று நினைத்து விடக் கூடாதே என்பதற்காகவே இந்த விளக்கம் மட்டும் அளித்தேன்.

    நான் முதலில் குறிப்பிட்டது போல் தவறுகள் என்னுடையதாகவே இருக்கட்டும். நாம் விவாதத்தை விட்டு விட்டு நண்பர்களாக தொடர்வோம்.

    அன்புடன்

  17. Likes Subramaniam Ramajayam liked this post
  18. #1040
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    செல்வகுமார் சார்,

    உங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு சொன்னது போல் ஏதோ ஒரு communication gap நமக்குள் அதாவது திரிகளுக்குள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே நாம் விவாதம் முடிவடையாமல் நீண்டுக் கொண்டே போகிறது. அவரிடம் சொன்னது போல் விவாதங்களை வளர்க்காமல் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில அடிப்படையான குற்றசாட்டுகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கமளிக்க விரும்புகிறேன்.

    கோபால் பற்றிய குற்றசாட்டு. நான் நேற்றே சொன்னது போல் மிக அதிகமாக எடிட் செய்ததும் கோபாலின் பதிவுகளைத்தான். அதிகமாக அறிவுரை சொன்னதும் அல்லது கண்டிப்பு வார்த்தைகளை பயன்படுத்தியதும் கோபாலிடம்தான். இதற்கும் மேலாக நேற்று கண்டிக்கவில்லையே அதற்கு முதல் நாள் கண்டிக்கவில்லையே என்று சொன்னால் என்ன சொல்வது. ஒன்றை மட்டும் சொல்கிறேன் இனி மேல் நீங்கள் சுட்டிக் காட்டும்படியான யார் மனதையும் புண்படுத்தும் பதிவுகள் எதுவும் கோபால் தரப்பிலிருந்து வராது.

    திரு ரவி அவர்கள் பற்றி கோபால் எழுதிய பதிவை குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்னுடைய ஞாபகம் சரியாக இருக்குமென்றால் அந்த வரிகள்/வார்த்தைகள நீக்கப்பட்டு விட்டன. இல்லை அது நீக்கப்படாமல் இன்னும் இருக்கிறது என்று சொன்னால் அதை தேடித் பிடித்து நீக்கி விடுகிறேன். இதில் எந்த பாகுபாடும் இல்லை. காரணம் எந்த பதிவாவது எவரையேனும் காயப்படுத்தும் விதம் இருந்தால் அதை நீக்குவதற்கும் அதை பதிவிட்டவரை அப்படி செய்யாதீர்கள் என சொல்வதற்கும் நான் தயங்கியதேயில்லை.

    உதாரணமாக இதே திரு ரவி அவர்கள் முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவுகள் செய்தபோது கர்ணன் படத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு பதிவை போட்டபோது அதை படித்துவிட்டு நீங்களும் இளைய சகோதரர் யுகேஷ் பாபு அவர்களும் நடிகர் திலகம் திரிக்கு வந்து அவருக்கு கண்டனம் தெரிவித்தபோது உங்களை ஆதரித்து ரவி அவர்கள் எழுதியது தவறுதான் என்று சொன்னவனும் நான்தான் என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.

    இரண்டாவது விளக்கம் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கடுமையான விமர்சனம். திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்வதில்லை. நடிகர் திலகம் கடந்து வந்த கலையுலக அரசியல் பாதைகளைப் பற்றி பேசும்போது அந்த நேரத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று வரும்போது அதற்கு காரணமாக இருந்த மனிதர்கள் மற்றும் சூழல்கள் பற்றி பேசும்போது இந்த விமர்சனம் தவிர்க்க முடியாததாகிறது.

    தவிரவும் எப்படி திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு நன்மை செய்தன என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதே போன்று அவை தமிழகத்திற்கு தீமையே செய்தன என்று நாங்கள் நினைப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படி நினைக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா! அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கப்பட்டால் அது தவறாக் இருந்தால் சுட்டிக் காட்டலாம். அல்லது விமர்சகரின் வாதம் சரியானது அல்ல என்பதை நிறுவலாம். நான் முன்பே சொன்னது போல் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.

    உங்கள் பதிலுக்கு நன்றி!

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 15th April 2015 at 02:02 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •