Page 55 of 401 FirstFirst ... 545535455565765105155 ... LastLast
Results 541 to 550 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #541
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Definition of Tamil cinema - 18


  2. Likes eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #542
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Definition of Tamil cinema - 19


  5. Likes eehaiupehazij liked this post
  6. #543
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Definition of Tamil cinema - 20


  7. Thanks rajeshkrv thanked for this post
  8. #544
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Definition of Tamil cinema - 21


  9. Likes J.Radhakrishnan liked this post
  10. #545
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முரளி சார் வணக்கம்

    அவர்கள் கேள்வி கேட்கின்றார்கள் பதில் சொல்லவேண்டிய நிலை

    நீங்கள் கேட்டதற்கு இணங்கி இவ்வளவுநாளும் பொறுமை காத்துவந்தேன்

    இனியும் அப்படி இருக்கமுடியாது

    பதிலுக்கு பதில் எழுதமுடிவு செய்துள்ளேன்
    தயவு செய்து கடிவாளம் போடாதீர்கள்

    நன்றி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. Thanks eehaiupehazij thanked for this post
  12. #546
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post

    goldstar அண்ணனின் அசத்தலான ஸ்டில்கள்
    பதிவிட்டுள்ளீர்கள் நன்றி தொடருங்கள்....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. #547
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Originally Posted by Yukesh Babu உலக சினிமா சரித்திரத்தில் சிங்கப்பூர் மலேசியா , கனடா நாடுகளில் திரை இடப்பட்ட ஒரே மறு வெளியிட்டு காவியம் தமிழகத்தை மூன்று முறை ஆண்ட ஒரே இந்திய நடிகர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் தான் .

    இந்த ஒரு சாதனை எந்த ஒரு நடிகருக்கு சாத்தியம் ?
    யுகேஸ் பாபு நீங்கள்

    சிங்கபுர் மலேசியா கனடா நாடுகளில்ஒரே மறவெனியீட்டு காவியம்
    ஆ ஒருவன் என்றும் எந்த ஒரு நடிகராலும் சாத்தியமா என்றும் கேட்கிறீர்கள்?


    நீஙகள் குறிப்பிட்ட 3 நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கவிலும் திரையிடப்பட்டது கர்ணன்
    இதனை முதல்முதலில் சாத்தியமாக்கியவரே எங்கள் திலகம்தான்
    அறிந்துகொள்ளுங்கள்
    27.7.12 முதல்

    அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கப்பூர் : கர்ணன்





    லண்டன் மாநகரில் உலகமே களமிறங்கி, புவியின் எடை ஒரே பக்கமாகச் சாய்வதால், எதிர்திசையில் எடையைச் சமன் செய்ய, விண்ணுலகில் இருந்து கலைக்கடவுள் வந்துள்ளார் "கர்ண"னாக..!

    ஏதேனும் ஒரு பெரிய மாநில-தேசிய-உலக நிகழ்வு குறுக்கிட்டாலே, தங்களது திரைப்படங்களை சற்று தள்ளி வெளியிட்டுக் கொள்ளலாம் என்கின்ற மனோபாவம்/சென்டிமென்ட் உள்ள திரையுலகில், அன்றும்-இன்றும்-என்றென்றும் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், தமது திரைப்படங்களை மிகமிக துணிச்சலுடன் வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டுகின்ற ராஜதைரியம் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே..!

    லண்டனில் 'ஒலிம்பிக்ஸ்' களைகட்ட அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கையில் "கர்ணன்" கொடி நாட்டுகிறார்.


    கனடாவில் உங்கள் ஆ.ஒருவன் 2 நாட்கள் ஓடுவதாக விளம்பரம் செய்தும்
    ஆட்கள் வராததால் தூக்கிவிட்டார்கள்


    கர்ணன் 3 வாரங்கள் ஓடி சாதனை செய்தது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes rajeshkrv liked this post
  15. #548
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இளைய சகோதரர் யுகேஷ் அவர்களே,

    இப்போதுதான் உங்கள் பதிவுகளை பார்த்தேன். என்னை மறைமுகமாக தாக்கி எழுதியதை இபோதுதான் படித்தேன். நான் நண்பர் கலைவேந்தன் அவர்களின் பதிவிற்கு ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி எதிர் வினையாற்றியிருந்தேன். அதில் படகோட்டி பற்றி சொல்லியிருந்தேன். என்ன சொல்லியிருந்தேன் என்பதை மீண்டும் படித்துப் பாருங்கள். படகோட்டி 100 நாள் ஓடியது என்பதற்கு சாட்சியாக விளங்கும் விளம்பரம் போலி என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். படம் ஓடவில்லை என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருக்கிறதா? அதுவும் எதனால் அதை சொல்லியிருக்கிறேன்? நண்பர் கலைவேந்தன் அந்த படம் ஓடியதற்கு ஆதாரம் இருக்கிறதா இந்தப் படம் ஓடியதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அதற்கு விளமபரம் இல்லை என்றால் படம் ஓடவில்லை என்று சொன்னால் உங்கள் படங்களும் ஓடவில்லை என்றுதானே அர்த்தம் என்று கேட்டு விட்டு படகோட்டி விளம்பரத்தை பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்.

    ஆகவே நான் பொய் உரைக்கவும் இல்லை. உண்மையான விளமபரம் வந்த போது நான் அச்சப்படவும் இல்லை. உணர்ச்சி வசப்படாமல் படித்தால் உண்மை உங்களுக்கே விளங்கும்.

    அன்புடன் .

  16. Likes adiram, RAGHAVENDRA liked this post
  17. #549
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

    இந்த விவாதத்தை நான் வளர்க்க விரும்பவில்லை. தவறான புரிதலை தடுக்க ஒரு சில விளக்கங்கள் மட்டும்.

    நண்பர் வினோத் வேண்டுமென்றே சொன்னார் என்பதை குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. நான் மீள் பதிவு செய்த சகோதரர் லோகநாதனின் பதிவு 2014 ஆகஸ்ட் 23 அன்றே எம்ஜிஆர் திரியின் பாகம் 10-ல் வந்து விட்டது. அதை பார்த்த பிறகும் எத்தனை நாட்கள் என்ற விவரம் அவருக்கு exact -ஆக தெரிந்தும் கூட இப்படி எழுதுகிறாரே என்ற எண்ணத்தைதான் வேதனையோடு குறிப்பிடுகிறோம் என்று சொல்லியிருந்தேன்.

    தினத்தந்தி விளம்பரம் பற்றி - பத்திரிக்கை விளமபரம் என்பது விநியோகஸ்தர் கொடுப்பது. அவர் அதை சரியாக கொடுத்தால் அது ஆவணமாக மாறுகிறது. தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அது சர்ச்சைக்குரிய ஒன்றாக போய்விடுகிறது. சத்யம் அரங்கில் 20.08.2014 புதன்கிழமையன்று ஆயிரத்தில் ஒருவன் கடைசி நாளாக திரையிடப்பட்டது. அதற்கு பிறகும் விளம்பரத்தில் அரங்கத்தின் பெயரை உள்படுத்துவது வெளியிட்டாளரின் மனசாட்சியை பொறுத்த விஷயம்.

    இது ஒரு குறிப்பிட்ட வெளியிட்டாளரின் குற்றமாக சொல்ல விரும்பவில்லை. சில வெளியிட்டாளர்கள் தாங்கள் திரையிட்ட படம் அரங்கிலிருந்து எடுக்கப்பட்ட பிறகும் விளம்பரங்களில் தொடர்ந்து அரங்குகளின் பெயரை உள்படுத்துவது என்பது நாம் கண்டு வருவதுதான். இரண்டு உதாரணங்களை சொல்லலாம். சென்ற வருட இறுதியில் திரையிடப்பட ஒரு படம் ஆல்பட் வளாகத்தில் ஓடுவதாக விளமபரம் வருகிறது. ஆனால் அரங்கிற்கு சென்றால் படம் இல்லை என்று சொல்கிறார்கள். அதே போன்று சென்ற வெள்ளி முதல் சங்கராபரணம் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு கண்டிருக்கிறது. விளமபரத்தில் சத்யம் அரங்கின் பெயர் இருக்கிறது. ஆனால் சத்யம் குழுமமே தினசரி பத்திரிக்கைகளில் கொடுக்கும் விளம்பரத்தில் சங்கராபரணம் இல்லை.

    மாலைமலர் இதழில் விழா பற்றி வந்த செய்தி- ஒரு பத்திரிக்கையில் ஒரு செய்தி எப்படி வருகிறது எப்படி வரவழைக்கலாம் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு தேர்ந்த ஊடக தொடர்பாளர் இருந்தால் அவர் பத்திரிக்கைகளுக்கு கொடுக்கும் ஒரே செய்தியை [அவை சரியா தவறா என்று கூட சரி பார்க்காமல்] அப்படியே பல ஊடகங்கள் வெளியிடுவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

    ஆகஸ்ட் 31 அன்று சத்யம் அரங்கின் ஸ்டேடஸ் பற்றி - விழா நடந்தது செப்டம்பர் 1 அன்று. அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலையில் ஒரு சிறப்புக் காட்சியாக படம் திரையிடப்பட்டது. அதன் ஆன் லைன் புக்கிங் ஸ்டேடஸ் [Online Booking Status ] பற்றிய பதிவைத்தான் நண்பர் ரூப்குமார் பதிவிட்டிருந்தார். அது ஒரு one day one off screening.

    இனி வியாழக்கிழமைகளில் சத்யம் அரங்கில் நடக்கும் blind date screening. போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக சத்யத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இதுதான் நிலைமை என்று ஒரு வரி எழுதிவிட்டு போகிறீர்கள். நீங்கள் எதை உத்தேசித்து இதை எழுதியிருக்கிறீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

    முதலில் Blind Date concept .பற்றி பேசி விடுவோம். முன்பே இதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால் அதை மீண்டும் எழுத காரணம் சத்யத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இது பாதகமாகும் என்று சொல்லி மறைமுகமாக கர்ணன் திரைப்படத்தையும் இப்படித்தான் என்று முத்திரை குத்தும் நடவடிக்கையை தடுக்கவே.

    Blind Date என்றால் டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கினுள் செல்லும் ரசிகனுக்கு படம் ஆரம்பிக்கும் வரை அது என்ன படம் என்பதே தெரியாது. வியாழக்கிழமைகளில் சத்யம் அரங்கில் நடக்கும் blind date ஸ்க்ரீனிங்ல் மாலைக் காட்சியில் மட்டும் மறுநாள் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் ஆங்கில படம் அல்லது சில நேரங்களில் ஹிந்தி படங்கள் திரையிடப்படுவது வழக்கம். இந்த முறையில் தமிழ் படம் திரையிடப்படாது.

    சத்யம் வளாகத்தில் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன. இதில் இருப்பதிலேயே பெரிய ஸ்க்ரீன்-லும் அதற்கடுத்த capacity உடைய ஸ்க்ரீன்-லும் இந்த Blind Date ஸ்க்ரீனிங் இடம் பெறாது. மீதமுள்ள capacity குறைந்த 4 அரங்குகளில் ஏதேனும் ஒன்றில் மாலைக் காட்சி மட்டும் இந்த திரையிடல் நடக்கும்.

    கர்ணன் படத்திற்கு ஏன் இந்த இடையூறு வரவில்லையென்றால் அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கர்ணன் படத்திற்கு நல்ல கூட்டம் இருந்தது. டிக்கெட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. இரண்டாவது காரணம் கர்ணன் மாலைக் காட்சியில் மட்டுமே ஓடவில்லை. ஒரு வாரம் மாலைக் காட்சி, அடுத்த வாரம் பகல் காட்சி, அதற்கடுத்த வாரம் நண்பகல் காட்சி பிறகு இரவுக் காட்சி என்று மாறி மாறி வந்தது. ஆனால் காட்சி நேரங்கள் எப்படி மாறினாலும் அனைத்துக் காட்சிகளுக்கும் கூட்டம் தானாக வந்தது.

    இதை சொல்லும்போது கர்ணன் ஓடும்போது நடந்த ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. என்னுடன் வேலை செய்பவர் ஒரு நாள் இரவு காட்சிக்கு தன் மனைவியுடன் சத்யம் வளாகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது வெளியாகியிருந்த ஒரு திரைப்படத்தை காண்பதற்காக ஸ்கூட்டரில் சென்ற அவர் வளாக வாசலில் தன் மனைவியை இறக்கி விட்டு படத்தின் பெயர் சொல்லி டிக்கெட் வாங்க சொல்லியிருக்கிறார். அருகில் நின்றிருந்த அரங்க ஊழியர் அந்தப் படம் எடுக்கப்பட்டு விட்டது என்பதை சொல்லியிருக்கிறார். எந்தப் படங்கள் ஓடுகிறது எதற்கு டிக்கெட் இருக்கிறது என்பதை டிக்கெட் கவுன்டரில் விசாரிக்கும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு நண்பர் ஸ்கூட்டரை நிறுத்த போயிருக்கிறார்.

    வண்டியை நிறுத்தி விட்டு கவுன்ட்டர் இருக்கும் இடத்திற்கு சென்ற அவரிடம் அவர் மனைவி கர்ணன் படத்தை தவிர மற்ற அனைத்துப் படங்களுக்கும் டிக்கெட் இருப்பதாக சொல்ல அலுவலக நண்பர் நீ தப்பாக கேட்டிருப்பாய். கர்ணன் படத்திற்கு மட்டும் டிக்கெட் available -ஆக இருக்கும் என்று கமன்ட் அடிக்க கவுன்டரில் இருந்த ஊழியர் இல்லே சார், அவங்க சொன்னதுதான் சரி. கர்ணன் ஹவுஸ் புல். மத்த படத்துக்கெல்லாம் டிக்கெட் இருக்கு என்று சொல்ல அசந்து விட்டார் நண்பர். அவர் அப்படி ஆச்சரியபடுவதற்கு மற்றொரு காரணம் அப்போது கர்ணன் 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருந்த நேரம். மறுநாள் காலை அலுவலகம் வந்தவுடன் முதல் வேலையாக என்னை கூப்பிட்டு இந்த செய்தியை பகிர்ந்துக் கொண்டார். .

    இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமென்றால் SPI Cinemas என்ற பெயரில் இயங்கும் சத்யம் குழுமம் வாராவாரம் தங்கள் அரங்குகளில் ஓடும் படங்கள பற்றிய விவரங்களை காட்சி நேரங்களை குறிப்பிட்டு அந்த தகவலை பெற விரும்பும் சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்புவது வழக்கம். எனக்கும் வரும். அதில் சென்ற ஆகஸ்ட் 22 வெள்ளி முதல் ஓடும் படங்களின் விவரங்கள் இருக்கின்றன. அதில் ஆயிரத்தில் ஒருவன் இடம் பெறவில்லை. அதை கூட நான் உங்களுக்கு அனுப்ப தயார்.

    நான் முதலில் சொன்னது போல் இந்த வாதத்தை நான் தொடர விரும்பவில்லை. நீங்கள் சில விஷயங்களை குறிப்பிட்டு எழுதியிருந்ததால் இந்த நீண்ட பதில். இனி நீங்கள் இதற்கு என்ன எதிர் வினையாற்றினாலும் நான் அமைதி காப்பேன்

    நன்றிகள் பல!

    அன்புடன்

  18. Thanks eehaiupehazij thanked for this post
  19. #550
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மன்னா... தங்களின் வருகையை எங்களை விட அதிகமாக மற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்...

    அதாவது...

    தங்கள் வருகையை நம்மை விட மற்றவர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்...

    அதாவது....

    தங்கள் வருகையை மற்றவர்களின் எதிர்பார்ப்பு நம்மை விட அதிகமாக உள்ளது...

    அதாவது...

    தங்களுக்கு முன்னால் வந்தாலும் பின்னால் வந்தாலும் தங்கள் கம்பீரத்தின் முன்னால் தாங்கள் எடுபடாமல் போய் விடுவோமோ என்று தயங்குகிறார்கள்...

    அதாவது...

    பழைய படங்கள், மறு வெளியீடு, நவீன மயமாக்கல் வெற்றி மேல் வெற்றி என்பதற்கெல்லாம் அர்த்தம் என்று ....

    அதாவது...

    நடிகர் திலகமாகிய தாங்கள் தான் என்று கட்டியம் கூறத் தயாராய் இருக்கிறார்கள் மன்னா...

    அதாவது...

    இன்னும் என்ன அதாவது... அது தான் எல்லாம் நீங்கள் தான் என்றாகி விட்டதே.. சரித்திரம், சாதனை எதாவதாக இருந்தாலும் தாங்கள் தானே..
    ஓர் மீள் பதிவு..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •