Page 110 of 401 FirstFirst ... 1060100108109110111112120160210 ... LastLast
Results 1,091 to 1,100 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1091
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    We wish all the best for the newly inaugurated MGR thread 15 by Thiru. C.S. Kumar today. We wish healthy interactions on behalf of NT thread

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1092
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்கமுடியாத வசனம், மறக்க முடியாத சிவாஜி - கலைஞர்!!....

    ...இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

    கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

    உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

    என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

  4. Likes eehaiupehazij liked this post
  5. #1093
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1094
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

    கால மாற்றங்கள் மனிதரிடையே எத்தகைய மனமாற்றங்களையும் தோற்றுவிக்கின்றன!!

    கல்வியறிவு பல்கிப் பெருகியிருக்கும் தற்போதைய சூழலில் தொழில் நுட்பங்கள் வானமே எல்லை என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் வேளையில்
    'பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரின் அண்ணனின் மாமாவின் பேரனுக்கு பிறந்தநாள் ஸ்வீட் எடு கொண்டாடு' என்று மனமுதிர்ச்சியுடன் வாழ்த்துக்கள் பரிமாறப்படும் பரந்த மனப்பான்மைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எதிர்கால மன்னர்களை நெறிப்படுத்தி வழி நடத்த வேண்டிய மூவேந்தர்களின் ரசிகர்களாகிய நாமோ இன்னும் 'சாட்டை எடு விளாசு' என்ற ரீதியில் கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி பின்னோக்கிச் சென்று தவிர்க்கத் தக்க சண்டைகளை இன்னும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். நடந்தவை மறப்பதற்கே!! நம்மை மகிழ்வித்தவர்களின் அமர ஆத்மாக்கள் சாந்தியடைய 'புரிதலும் விட்டுக்கொடுத்தலும்' அலை வரிசையில் பயணிப்போமே!! இது இந்த எளியவனின் தனிப்பட்ட கருத்தே!

    Whatever we see objectively in this world are three dimensional confined to X,Y and Z axes. I always consider NT as the X co-ordinate,MT as the Y co-ordinate and GG as the Z co-ordinate that are mutually orthogonal to each other. In my opinion, any actor after these trinity of tamil screen, have traits of their acting as an admixture derived from these three thespians, of course, with variations in their percentage influences,for instance, Jaishankar 40% MT, 30%NT and 30%GG, Ravi 60%MT, 30%NT and 10%GG, AVMRajan 70%GG, 20%NT and 10%MT...like that. Even though MT and NT had and have a mass following, GG could also withstand on his own to remain in the hearts of elite cine goers in the third direction. It is inevitable to compare any other actor in the standards set by the triumvirate GG,NT and MT


    பகுதி 1 : மழலைப் பட்டாளங்களை வழிநடத்தும் மூவேந்தர்கள்

    எதிர்காலமன்னர்களான மழலைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என்ற துடிப்பில் மன்னாதி மன்னர் மக்கள் திலகம் சுழற்றுகிறார் வாளை !



    பாச உணர்வுகள் நிறைந்து எல்லோரும் கடவுளின் குழந்தைகளே அனாதைகள் என்று யாருமில்லை என்பதை போதிக்கிறார் நடிப்பின் நாளந்தா பல்கலைக் கழகம் நடிகர்திலகம்!




    நெஞ்சங்களில் அன்பு நிறைந்து வாழ்வில் முன்னேற்ற ஆசைகள் குழந்தைகள் மனதில் பதிய பதியன் போடுகிறார் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் காதல் மன்னர்!



    As a stepping stone I just try this series with a view to imbibe mutual understanding between threads by way of forgetting our differences for upholding the name and fame of our icons!
    All are my personal opinions only. I dont know whether I am building castles in the air or my wishes (NT fans greeting MT movie release...MT fans greeting NT movie release....) just vanish like soap bubbles or I am trying to reinvent a white elephant?!
    Kindly guide me if I hurt any body by oversight.

    with regards, senthil
    Last edited by sivajisenthil; 16th April 2015 at 05:47 PM.

  7. Likes Russellmai, ifohadroziza liked this post
  8. #1095
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    தமிழில் பல படங்கள், பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வந்திருக்கின்றன. மத ஒற்றுமையை மன ஒற்றுமையை இத்தனை அழகாய் இத்தனை பாந்தமாய் எவர் மனதும் புண்படாமல் சொன்ன படம் இந்தப் படத்திற்கு முன்போ பின்போ வந்திருக்கிறதா என்று கேட்டால் பெரிய கேள்விக்குறிதான்!

    இந்துவாய் பிறந்து சூழ்நிலையால் இஸ்லாமியாராக வளர்ந்து அதே போன்று சூழலால் கிறிஸ்துவராக வாழும் பெண்ணை காதலித்து மணம் புரிந்த ரஹீம் என்ற அந்த ரோல் மாடல் இளைஞனாக, சமூகத்தின் இன்றைய தேவையை அன்றே வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு வரும் ஏப்ரல் 24-ந் தேதி முதல் மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது.

    முதன் முதலாக இதே மதுரை சென்ட்ரலில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி வெளியான பாவ மன்னிப்பு மீண்டும் அதே திரையரங்கில் (நடுவில் கணக்கில்லாத முறை பல்வேறு அரங்குகளில் மறு வெளியீடு கண்டிருந்தாலும்) 54 வருடங்களுக்கு பிறகு வெளியாகிறது என்பது விசேஷமான செய்தி.

    நடிகர் திலகத்தின் படங்களுக்கு எங்கள் மதுரை என்றுமே ஸ்பெஷல்தானே!

    அன்புடன்
    .

  9. Thanks Russellbpw, ifohadroziza thanked for this post
    Likes Russellbpw, Russellmai, ifohadroziza liked this post
  10. #1096
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை முறை திரையிட்டாலும் வசூலை வாரிகுவிக்கும் திரையுலக மன்மதனின் வசந்த மாளிகை வருகிற 24ம் தேதி முதல் திருச்சி கெயிட்டியில் வெற்றி விஜயம்



  11. Thanks eehaiupehazij thanked for this post
  12. #1097
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் மிக சிறந்த படைப்பான பாவமன்னிப்பு திரைப்படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 24/4/2015 முதல் தினசரி 4 காட்சிகளாக பவணி வரபோகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

  13. Thanks Russellbpw, eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw liked this post
  14. #1098
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 24/4/2015 முதல் பாவமன்னிப்பு திரைப்படம்
    மத நல்லிணக்கத்தையும் ஒருமைபாட்டை வலியுறித்தி மனிதநேயமே மத நேயத்தை விட என்றும் சிறந்தது என்ற மிக உயர்ந்த கருத்துடன் திரு பீம்சிங் இயக்கத்தில் நமது தேசிய தெய்வீக நாயகர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிகண்டு வெள்ளி விழா கொண்டாடிய காவியம் பாவ மனிப்பு.
    1961 - நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்த 67வது காவியம் பாவமன்னிப்பு.
    டூரிங் டாகீசில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை, சாதனையை பாவமன்னிப்பு பெற்றது.
    தமிழகத்தில் 12 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும்
    கேரளாவில் திருவனந்தபுரத்தில் 103 நாட்களும்
    பெங்களூரில் ஸ்டேட் சினிமாவில் 154 நாட்களும்
    கொழும்பு கிங்க்ஸ்லியில் 106 நாட்களும் , ஆகமொத்தம் 15 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ...அந்த பதினைந்தில் ஒன்றில் 177 நாட்களும் ஓடிய 1961 வருடத்திய பிரம்மாண்ட வெற்றிபெற்ற முதல் காவியம் நம் சரித்திர சகாப்த நாயகரின் பாவமன்னிப்பு திரைப்படமாகும்.
    00 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
    1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
    2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
    3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
    4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
    5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
    6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
    7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
    8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
    9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
    10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
    11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
    12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
    13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
    14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
    15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
    இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது

  15. Thanks Russellbpw thanked for this post
  16. #1099
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பீம்சிங் இயக்கத்தில் நடிகர்திலகத்தின் பெருமையை வானுயரச் செய்த ப வரிசைப்படங்களின் வாரம் கொண்டாடப் படவேண்டும் vcs!

  17. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw, ifohadroziza liked this post
  18. #1100
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •