Page 274 of 401 FirstFirst ... 174224264272273274275276284324374 ... LastLast
Results 2,731 to 2,740 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2731
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவேந்தன்,



    முரளியின் அரசியல் எழுத்துக்கள் நூல் பிடித்தாற் போல உண்மை பேசும். தாங்களோ சப்பை கட்டு கட்டி, உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பாக எழுதுவதில் கோயபல்ஸ் அவர்களை தூக்கி பிடிக்கிறீர்கள். இந்திராகாந்தி உண்மையை புரிந்து கொண்டு சமாதானமாகியிருந்தால் , மணியனுடன் சந்திப்புக்கு போன போது ,இந்திரா அவர்களை நடத்திய விதம் பற்றி வார தொடரில் எழுதினாரே? அதை தாங்கள் படித்ததில்லையா? ஜனதா அரசின் வற்புறத்தல், இந்த பின் வாங்கலில் உண்டு என்று ,அப்போதைய ஆதரவாளர்களே எழுதியிருந்தனர்.



    உங்களின் எழுத்துக்களில் உண்மை தன்மை குறைந்து வருவது வருந்த தக்கது.எனக்கு கை வராத ஒன்று. முரளிக்கு அறவே வராத ஒன்று.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes kalnayak, KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2732
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes kalnayak, Russellmai, Georgeqlj liked this post
  6. #2733
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    செந்தில்வேல் சார்,

    உங்கள் அபார உழைப்பு மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள். ஒவ்வொரு பிரேமுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நடிகர்திலகத்தின் நிழற்படங்கள் அட்டகாசம். குறிப்பாக துப்பாக்கி சுடும் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஆக்ரோஷமான முக பாவங்கள் அற்புதம்.

    இருப்பினும் நமது முரளி சார் சொன்னதுபோல, பதிவுகளுக்கிடையே இடைவெளி தேவை. இவ்வளவு வேகமோ, அவசரமோ தேவையில்லை. உங்கள் ஒவ்வொரு படத்தையும் ரசிக்க மக்களுக்கு அவகாசம் தேவை. (அருமையான படங்களை தயாரித்து, போதிய இடைவெளி விடாமல் வெளியிட்டு அனுபவப்பட்ட அணி நம்முடையது). அந்த அவசரம் நம் பதிவுகளில் வேண்டாம்.

    தொடருங்கள்..... நிதானமாக.

    தங்களின் அரிமா நிறுவனம் கோவையின் சிறந்த வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக திகழ வாழ்த்துக்கள்.

  7. Thanks Georgeqlj thanked for this post
    Likes kalnayak liked this post
  8. #2734
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலக சங்கமம் & Sivaji Ganesan Definition of Style 24

    குங்குமம்

    வணங்காமுடி மிக உயரமான கட்அவுட்டின் மூலம் தமிழ் சினிமா விளம்பர வரலாற்றிலும் சிவாஜி ரசிகர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் மோகன் ஆர்ட்ஸ் மோகன். நடிகர் திலகத்தின் மேல் உயிரையே வைத்திருந்தார். அது இன்னும் அவருடயை குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வரையிலும் தொடர்வது சிறப்பு.

    அவருடைய சொந்த பேனரான ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த பாசமலர் உலகப் புகழ்பெற்று வரலாற்றில் இடம் பெற்றது. அதனுடைய பிரம்மாண்டமான வெற்றி அந்நாட்களில் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

    அதனுடைய தொடர்ச்சியாக நடிகர் திலகத்தை வைத்து அடுத்த படம் தயாரிக்கத் திட்டமிட்டார் மோகன். இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்க, விறுவிறுப்பான மர்ம நாவலாக அமைந்த கதை படமாக்கப்பட்டு குங்குமம் என்று பெயரிட்டு வெளிவந்த்து. படத்தில் பல சிறப்புகள் அமைந்தன.

    1962ம் ஆண்டில் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று நடிகர் திலகம் அமெரிக்க விஜயம் மேற்கொண்டபோது அங்கு பல இடங்களுக்கு சென்று திரையுலக, நாடக மற்றும் வானொலி அறிவியல்களைப் பற்றி கண்டும் கேட்டும் அறிந்து கொண்டார். அவ்வாறு அங்கு அவர் சென்ற பல இடங்களில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அணிவகுக்க குங்குமம் படத்தின் டைட்டில் காட்சிக்காகவே மக்கள் திரையரங்கைப் படமெடுத்தனர். அது மட்டுமின்றி சென்டிமென்டாக குங்குமம் பாடலும் மக்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்று சொல்வது போல், நடிகர் திலகம் பெண் வேடமிட்டு நடித்ததும் இப்படத்தில் தான். இதுவும் இன்று வரை ரசிகர்களால் சிலாகிக்கப் படும் காட்சியாக உள்ளது.



    குங்குமம் திரைப்படத்தின் கதைச் சுருக்கம், ஆங்கிலத்தில் -
    விக்கிபீடியா இணையதளத்தில் - http://en.wikipedia.org/wiki/Kungumam_(film)

    குங்குமம் திரைப்படத்தைப் பற்றி NOV அவர்களின் அருமையான கருத்துரை -

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1134167

    இப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறிப்பாக ஸ்டைல் மிகவும் பிரசித்தி பெற்றது. பூந்தோட்டக் காவல்காரா பாடல் காட்சியில் அவர் இரு கைகளையும் சொடுக்குப் போட்டவாறே நடந்து வரும் காட்சி ரசிகர்களின் பேராதரவை எப்போதும் பெறும், பலத்த கரகோஷம் விண்ணை முட்டும்.

    விஜயகுமாரி நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்தாலும் புதுமுகம் சாரதாவின் இளமைத் தோற்றமும் ஈடு கொடுத்து நடித்த சிறப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

    இவ்வாறு பல சிறப்புகளைத் தன்னுள் அடக்கியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது அந்த நடிப்புக் கடவுளின் வித்தியாசமான நடிப்பும் மேனரிஸமும்.


    பாடல்களைப் பொறுத்தவரையில் ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியவை.

    ஒரே ஒரு பாடல் ... கே.வி.எம். என்ற பெயர் இருக்கும் வரை பாடப்படும் பாடல்... எஸ்.ஜானகி அவர்களுக்கு, சிங்கார வேலனே பாடலுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் புகழ் தேடித்தந்த பாடல்.. தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் பாடல்.. தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்களால் தவறாமல் பாடக்கூடிய பாடல்.. இப்படி பல சிறப்புப் பெற்ற பாடல் ... சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ... இப்பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

    சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இன்று நாம் காண இருக்கும் இப்பாடல் காட்சி.



    பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி சுசீலா இவர்கள் இணைந்து பாடி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் காலத்தை வென்று நிற்கும் அட்டகாசமான பாடல் தூங்காத கண்ணென்று ஒன்று. இந்தப் பாடலின பாதிப்பில் ஒரு படத்திற்கு தலைப்பாகவே இப்பல்லவி பயன்பட்டதிலிருந்தே இதனுடைய சிறப்பை உணரலாம்.

    வித்தியாசமான ஒலியில் இனிமையாக ஒலிக்கும் வீணையுடன் தொடங்குகிறது பாடல். பின் வயலின் தொடரும் போது மாருதி ராவின் கேமிரா மெல்ல நாயகியை நோக்கிச் செல்கிறது. இயக்குநர்களின் இசை ரசனை இப்பாடல் முழுதும் தெரிகிறது. அதற்கு உதாரணமாக, கிடாரின் தாள லயத்திற்கேற்ப நாயகி ஊஞ்சலாடுவதாக அமைத்திருக்கிறார்கள். நாயகி பல்லவியைப் பாடுகிறாள், தூங்காத கண்ணென்று ஒன்று. நாயகியின் பல்லவி முடிகிறது. ரசிகர்களின் ஆரவாரம் ஆரம்பிக்கிறது.
    பக்கவாட்டில் பார்த்தவாறு பாடத்துவங்குகிறார் நடிகர் திலகம். பாடியவாறே மிகவும் நளினமாக மெதுவாக முகத்தை இடப்புறம் திருப்பி நேர் பார்வையில் பாடுகிறார். கைகள் கட்டிக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். தான் மாறுவேடத்தில் நடிப்பதற்காக ஏற்றிருக்கும் அந்த ஆசிரியர் வேடத்திற்குரிய மரியாதையை அந்த கைகட்டுதலில் கொண்டு வருகிறார். தந்தாயே நீ என்னைக் கண்டு என்ற வரிகளின் போது காலைக் கீழிறக்கி மீண்டும் இடப்புறம் திரும்பும் ஒய்யாரம். கை கட்டுதல் அப்படியே உள்ளது. இப்போது நாயகி பாட, இவர் பார்வையாளர் திசையில் நம்மைப் பார்த்த கோணத்தில் நடந்து வரும் கம்பீரம்... ஆஹா... உடனே உதட்டைப் பிரிக்காமல் ஒரு புன்முறுவல்.. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... வினாடி 1.04. ல் இந்த வசீகரம் ... இடம் பெறுகிறது. இப்போது அவர் முன்னால் அதே கம்பீரத்துடன் நடக்க, காமிரா பின் தொடர்கிறது, நாமும் தான். கதவைத் திறக்கிறார். ... கட்...

    இப்போது இந்த 1.11 விநாடியில் அந்த ராட்சஸ ஸ்டைல் களேபரம் துவங்குகிறது.. கதவைத் திறக்கிறார்.. முற்றாத இரவொன்றில் நான் வாட என்ற வரிகளைப் பாடும் போது அந்த உடம்பை ஸ்டைலாக ஆட்டியவாறு நடந்து வரும் அழகு, முடியாத கதையொன்றை நீ பேச,, இந்த வரிகளின் போது குனிந்து கைகளை கட்டை மேல் வைத்து அவளைப் பார்க்க முற்படும் போது ,, எதற்கு தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக கொள்கிறாய், விட்டு விடு எனச் சொல்லும் பொருளில் தன் பார்வையை வீசுவது, ஸ்டைலின் உச்சகட்டமாய் இடது கையை முகவாய்க்கட்டை அருகில் கொண்டு செல்லும் அழகு, பூவோடு சேர்ந்து மணக்கும் நாரைப் போல், புதுமுகம் என்ற பதட்டம் சிறிதும் இன்றி நாயகி சாரதா அதே ஸ்டைலில் அட்டகாசமாக தன் உணர்வை இசையரசியின் ஜீவனுள்ள குரலில் வெளிப்படுத்துகிறார். அடுத்த பல்லவி தொடங்க, நாயகிக்கு பதிலாக இவர் பாடுகிறார், தீராத விளையாட்டு திரைபோட்டு விளையாடி நாம் காணும் உலகிங்கு ஒன்று இந்த வரிகளில் உள்ள உள்ளர்த்தத்தைக் கூட தன் விழிகளிலேயே அதுவும் அந்தக் கண்ணாடியைத் தாண்டி நமக்கு உணர்த்தும் உச்சகட்ட நடிப்பினை அளிக்க இவர் ஒருவரால் தான் முடியும். ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களுக்கு இந்த இடத்தில் சிறப்பு சபாஷ்.

    இப்பாடலில் திரை இசைத் திலகத்தின் உத்தி மிகவும் பாராட்டுக்குரியது, புதுமையானதும் கூட, பாடலின் இனிமை, பாடல் வரிகளில் உள்ள ஆழம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரணத்திற்கும் பல்லவிக்கும் இடையே மிகச் சிறிய நேரமே , சில வினாடிகளே, இடையிசை இடம் பெறுகிறது, அதுவும் பெரும்பாலும் வீணை வயலின் புல்லாங்குழல் மட்டுமே...

    அடுத்து.. சூப்பரோ சூப்பர்..
    வெகுதூரம் நீ சென்று நின்றாலும் விழி மட்டும் தனியாக வந்தாலும் என்று முதன் முறை பாடும் போது ஸ்டைலாக நடந்து வந்து அமர்வது, கண்ணாடியைக் கழட்டுவது, கண்ணைத் துடைப்பது, இரண்டாம் முறை பாடும் போது அதே உணர்வு, வேகத்துடன் அப்படியே ஒருக்களித்து சாய்வது, வலது கை படுக்கையில் ஊன்றிக் கொள்ள, இடது கை ஒரு ஃப்ரேமை மட்டும் பிடித்துக் கொள்கிறது. இதைத் தொடர்வது இன்னும் அட்டகாசம். ஒரு கையில் அந்த ஒரு ஃபிரேமைப் பிடித்து ஸ்டைலாக ஆட்டியவாறு, ஒய்யாரமாக படுத்திருக்கும் அந்த போஸில் அவர் பாடும் போது நாம் எங்கோ போய் விடுகிறோம். அதுவும் அந்த விழிமட்டும் தனியாக வந்தாலும் என்கிற வரியைப் பாடும் போது கண்ணாடி இப்படியும் அப்படியும் அசையும் போது, அந்தக் கண்ணாடியைக் கூட ரசிக்க வைத்து விடுகிறார் மனிதர். கண்ணாடிக்கும் உயிர் கொடுக்கும் மனிதர் இவர் மட்டும் தான்.. தொடர்ந்து நாயகி சரணத்தை முடித்து வைக்க, இறுதியாக பல்லவி தொடங்குகிறது. ஒருக்களிப்பில் இருந்து எழுகிறார்.. மேஜைக்கருகில் செல்கிறார். விக்கைக் கழட்டுகிறார்.
    விக்கைக் கழட்டினால் பார்க்க சகிக்காது என்பார்கள். .. ஆனால் இவரோ ... விக்கைக் கழட்டிய பிறகு இன்னும் அழகாக அல்லவோ காட்சியளிக்கிறார்.

    பாடல் முடிகிறது.. ஆனால் நாம் .. இன்னும் அதிலிருந்து மீளவில்லையே..
    கை தானாக இந்தப் பாடல் காட்சியை REPLAY செய்யும் வகையில் க்ளிக் செய்கிறதே...
    Last edited by RAGHAVENDRA; 4th June 2015 at 02:46 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2735
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Delete
    Last edited by senthilvel; 4th June 2015 at 10:43 PM.

  10. #2736
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாராட்டிய திரி நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.ரசிகர்மன்ற ப்ளக்ஸ் வைப்பவர்களுக்குஇது போன்ற வித்தியாசமான டிசைன் தேவைப்பட்டால் சுலபமாக எடுத்துக்கொள்ளவும் இதிலிருந்து வேறு டிசைன்களை உருவாக்க ஐடியா கிடைக்கலாம் என்பதாலும்
    அப்போது ஒவ்வொரு பக்கமாக தேடுவது சில சிரமங்களை கொடுக்கும் என்பதாலும் ஒரே சீராக பதிவிட்டேன்.இந்த பக்கத்தை குறித்து வைத்துக்கொண்டால் அப்போது தேடுவது சுலபமாக இருக்கும்.

    வித்தியாசமான ப்ளக்ஸ் போர்டுகள் தயார் செய்து அதிலும்முன்னோடிகளாக நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பெயர் வாங்கவேண்டும் என்பதே என் விருப்பம்.


  11. Likes sss, kalnayak, KCSHEKAR, Russellmai liked this post
  12. #2737
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிக வேந்தரின் அதிரடி அறிமுகக் காட்சிகள் NT's Intro Scenes!
    உலகதிரைப்படங்களில் கதாநாயகனின் அறிமுகம் பரபரப்பாக பேசப்படுவது இரண்டே இரண்டு படங்கள்தான் !
    1952ல் வெளியான பராசக்தியில் நடிகர்திலகம் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது ஒரு எதிர்கால நடிப்பின் சிம்மம் தனது சிம்ம சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்ததற்கு ஒப்பானதே !

    அதன்பின் 1962ல் டாக்டர்நோ திரைப்படத்தில் ஷான்கானரியின் மறக்க முடியாத பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட் அறிமுகம்!!

    பெரும்பாலான நடிகர்திலகத்தின் காவியங்களில் அவர் தோன்றும் முதல் காட்சி அதிரடியாகவும் பரபரப்பாகவும் இருக்கும்படி இயக்குனர்கள் காட்சிகளை அமைத்திட்ட மெனக்கெடல் உழைப்பு நமக்கு பரவசம் ஏற்படுத்தும் !
    இத்தகைய காட்சிகளின் மாட்சியின் சிறு தொகுப்பு

    1 : கௌரவம்
    பாரிஸ்டராக பட்டையை கிளப்பிய காவியத்தில் அவரை அங்குலம் அங்குலமாக பாதத்திலிருந்து காட்டி DrNo பரபரப்பை ஏற்படுத்திவிட்டு அமைதியான கண்ணன் சிவாஜியை முதலில் அறிமுகப்படுத்துவார்கள்!
    அதன் பின்னரே பாரிஸ்டர் குணாதிசயத்தை பட்டென்று புரியும் வண்ணம் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப் படுவார் நடிகர்திலகம் !!

    I am Rajanikanth....Baristar Rajanikanth..NT's intro...



    The Name is Bond....James Bond...Intro of Connery/Bond!!
    The way Connery majestically walks to the tune of the Bond theme music reminds us the walking style of NT in many movies like Uththama Puththiran, VPKB, Pasamalar.... even before the release of DrNO in 1962!!

    Last edited by sivajisenthil; 4th June 2015 at 07:13 PM.

  13. Likes Georgeqlj, KCSHEKAR, Russellmai liked this post
  14. #2738
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  15. #2739
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் கலை,

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சின்ன விஷயம் அதை ஏதோ மிகப் பெரிய குற்றசாட்டை நாங்கள் சொன்னது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி உங்கள் நண்பரையும் உங்கள் அபிமானத்துக்குரியவரையும் நீங்கள்தான் பாதுகாப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.

    நண்பர் குமார் ஒரு தகவலை சொல்கிறார். அதில் ஒரு பிழை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அதை அவருமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லை [என்றே நினைக்கிறேன்]. அதோடு அது முடிந்து விட்டது. அதன் பிறகு நீங்கள் உள்ளே நுழைந்து கொடுத்த விளக்கம் தேவையற்றது. காரணம் நான் ஏதேனும் உள்நோக்கம் கற்பித்தோ அல்லது குற்றம் சாட்டும் தொனியில் சொல்லியிருந்தாலோ நீங்கள் பதில் சொல்லலாம். அப்படி எதுவும் இல்லாதபோது எதற்கு ஒரு விளக்கம்? என்னுடைய பதிவை எவர் படித்தாலும் அதில் எந்த விமர்சனமும் இல்லை என்பதை உணர்வார்கள்.

    அது போல் 1977 அக்டோபர் முதல் 1978 நவம்பர் வரை நடந்த நிகழ்வுகளை நான் என்னவோ நடக்கவேயில்லை என்று சொன்னது போல் எழுதியிருப்பதும் உண்மைக்கு மாறான ஒன்றாகும். நண்பரே, நீங்கள் 2015 ஜூனில் பதிவிடும் இந்த நிகழ்வுகளை பல வருடங்களுக்கு முன்பே இந்த ஹப்பில் பதிவு செய்தவன் நான்.

    நான் எதாவது எழுதினாலே உங்களுக்கு பிரச்சனை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. என் பதிவில் தவறு இருந்தால் சொல்லுங்கள். அதை விடுத்து நீங்கள் என்ன எழுதினாலும் நான் தலையிடுவேன் என்று சொன்னால் பிறகு உங்கள் விருப்பம். இதற்கு மேல் என்னிடமிருந்து இந்த விஷயத்தில் எந்த எதிர் வினையும் வராது.

    அன்புடன்

  16. Likes Georgeqlj, kalnayak, KCSHEKAR liked this post
  17. #2740
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    சென்ற மாதம் திருச்சி கெய்டியில் வரலாற்று சாதனை படைத்த சின்ன ஜமீன் திரையுலக மன்மதன் ஜொலிக்கும் வசந்த மாளிகை ஸ்ரீரங்கம் ரெங்கராஜா தியேட்டரில் நாளை வெள்ளி முதல் qube சிஸ்டம்ல் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது.




  18. Likes Georgeqlj, kalnayak, KCSHEKAR, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •