Page 198 of 401 FirstFirst ... 98148188196197198199200208248298 ... LastLast
Results 1,971 to 1,980 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1971
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1972
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gapfiller Nostalgia and Reminiscence of NT's Golden Era!!

    ஏழு கடல் சீமைக்கு மட்டுமல்ல ஏழேழு ஜென்மங்களுக்கும் இந்த உலகத்தின் ராஜா நீங்களே !

    அக்காலத்தில் பதுமையுடன் துள்ளிக் குதிக்கும் இளமை அள்ளி மதிக்கும் முதுமை இக்காலத்தில் புதுமையே !

    Last edited by sivajisenthil; 13th May 2015 at 07:22 AM.

  5. Likes KCSHEKAR, Russellmai liked this post
  6. #1973
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரு திலகங்களின் இணைவு நமக்கு பொன்னாட்களின் சொச்ச நினைவு. இவர்களின் இணைவு படங்கள், திரை இசை திலகத்தின் எனது பழைய பதிவுகள் போட்டு விட்டு ,உங்களை தொடர்வேன் ராகவேந்தர்.



    நடிகர்திலகம்/திரை இசை திலகம் இணைவு.



    1)கூண்டுக் கிளி - 1954


    2)மக்களை பெற்ற மகராசி- 1957.



    3)பொம்மல பெள்ளி -1958.



    4)சம்பூர்ண ராமாயணம்- 1958.



    5)பொம்மை கல்யாணம் - 1958.



    6)படிக்காத மேதை- 1960.



    7)பாவை விளக்கு- 1960.



    8)எல்லாம் உனக்காக-1961.



    9)வளர்பிறை- 1962.



    10)வடிவுக்கு வளைகாப்பு-1962.



    11)இருவர் உள்ளம்- 1963.



    12)நான் வணங்கும் தெய்வம்-1963.



    13)குலமகள் ராதை- 1963.



    14)குங்குமம்- 1963.



    15)ரத்த திலகம்- 1963.



    16)அன்னை இல்லம்-1963.



    17)நவராத்திரி- 1964.



    18)திருவிளையாடல்-1965.



    19)மகாகவி காளிதாஸ் -1966.



    20)சரஸ்வதி சபதம்- 1966.



    21)செல்வம்- 1966.



    22)கந்தன் கருணை-1967.



    23)பேசும் தெய்வம்-1967.



    24)பாலாடை- 1967.



    25)திருவருட்செல்வர்-1967.



    26)திருமால் பெருமை-1968.



    27)ஹரி சந்திரா- 1968.



    28)தில்லானா மோகனாம்பாள்-1968.



    29)விளையாட்டு பிள்ளை-1970.



    30)வியட்நாம் வீடு- 1970.



    31)எதிரொலி- 1970.



    32)அருணோதயம்- 1971.



    33)குலமா குணமா- 1971.



    34)வசந்த மாளிகை- 1972.



    35)எங்கள் தங்க ராஜா -1973.



    36)வாணிராணி- 1974.



    37)சத்யம்- 1976.



    38)உத்தமன் - 1976.



    39)சிம்ம சொப்பனம்-1984.



    கிட்டத்தட்ட 20 படங்கள் நூறுநாள் கண்டவை .அவற்றில் இரண்டு வெள்ளிவிழா.
    Last edited by Murali Srinivas; 13th May 2015 at 09:52 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1974
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரை இசை திலகம் கே. வீ. மகாதேவன்-

    தமிழ்,தெலுங்கு இரண்டு film industries கொண்டாடும் நபர்.

    folk (மக்களை பெற்ற மகராசி ,குமுதம்) ,குத்து (வண்ணக்கிளி),classical based folk (முதலாளி), light classical (பாவை விளக்கு) ,ghazal(தொழிலாளி) ,classical (திருவிளையாடல்,சங்கராபரணம்) எல்லாவற்றிற்கும் trend -setter (50 களில் இருந்து).இவரை தன் குரு என்று சொல்லி கொண்டாடினார் மெல்லிசை மன்னர்(அவர் குரு என்று அழைதத மற்றையோர் ராம மூர்த்தி, சுப்பையா நாயுடு,நவஷாத்).

    தமிழ் திரையுலகை ஆண்ட இசை திலகம். ஐம்பதுகளின் நால்வர் அணி சுப்பராமன்-ஜி.ராமநாதன்-கே.வீ.மகாதேவன்-ஏ.எம்.ராஜா தமிழ் இசைக்கு புது பாதை போட்ட trend setters .இவர்களை முன்னோடியாக கொண்டே ரெட்டையர் பல புது வித சோதனை முயற்சிகளில் ஈடு பட்டு அற்புத பாடல்களை தந்தனர். திரை இசை திலகம் கே.வீ.மகாதேவன் ,folk -classic இணைவில் புது பாதை போட்டவர்.(ஆரபியின் ஏரி கரை)

    இவருடன் நடிகர் திலகம் பயணம் கூண்டு கிளி(1954 )யில் தொடங்கி, சிம்ம சொப்பனத்தில் (1984)முடிவுற்றது. இவர் மக்களை பெற்ற மகராசி, படிக்காத மேதை,பாவை விளக்கு,எல்லாம் உனக்காக,வளர்பிறை,வடிவுக்கு வளைகாப்பு,இருவர் உள்ளம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம,அன்னை இல்லம்,நவராத்திரி(100 வது NT படம்),செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தில்லானா மோகனாம்பாள்,விளையாட்டு பிள்ளை,வியட்நாம் வீடு,எதிரொலி,அருணோதயம்,குலமா குணமா,வசந்த மாளிகை,எங்கள் தங்க ராஜா,சத்தியம்,உத்தமன்,சிம்ம சொப்பனம் என்ற சமூக படங்களுக்கும் , சம்பூர்ண ராமாயணம்,திருவிளையாடல்,மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,ஹரி சந்திரா என்ற புராண படங்களுக்கும் நடிகர் திலகத்துக்காக கொடுத்துள்ளார்.

    1963 , 1966 இரண்டு ஆண்டுகளில் NT க்காக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.

    கே.வீ.மகாதேவன் சாரிடம் உள்ள சிறப்பம்சங்கள்-

    1) 95 % பாடல்களில், இந்திய பாரம்பரிய இசை கருவிகளை மட்டுமே உபயோக படுத்தி உள்ளார்.
    2)90 % பாடல்கள் பாட்டு எழுதி இசை அமைக்க பெற்றவை. கண்ணதாசன் வார்த்தைகளில், ஒரு கட்டுரை எழுதி கொடுத்தாலும் இசை அமைக்கும் வல்லமை கொண்டவர்.
    3) எடுத்து கொண்ட படத்துக்கு உரிய இசையை கொடுப்பார். இவரா அவரா என்றெல்லாம் பார்த்து இசையமைக்கும் வழக்கம் அறவே இல்லை.
    4) improvised மியூசிக் கொடுத்திருக்கிறாரே தவிர , assembled arrangements பாணியில் பண்ணியதே இல்லை.சில ஹிந்தி பாடல்களை உபயோக படுத்தி இருந்தாலும்,பெரும்பாலும் அசலானவை. ஸ்பானிஷில் கொஞ்சம்,arabian இல் கொஞ்சம் என்று உருவியதே கிடையாது.
    5) இவர் ஸ்டைல், இந்திய -வெஸ்டேர்ன் பாணி action படங்களுக்கு ஒத்து வராது. மற்ற படி எல்லா படங்களுக்கும் பொருந்துவார்.
    6) இவர் 69 இல் இருந்து 80 வரை தெலுங்கில் பிஸி ஆக இருந்ததால் தமிழில் ஆர்வம் காட்டவில்லை.

    என்னை கவர்ந்த பாடல்கள்-

    சமூக படங்களில்-

    சிட்டு குருவி சிட்டு குருவி, மணப்பாறை, போறவளே, ஆகா நம் ஆசை,ஏரி கரையின் மேலே , சீவி முடிச்சு,ஒரே ஒரு ஊரிலே,படித்ததினால்,ஆயிரம் கண் போதாது, வண்ண தமிழ்,காவியமா,ஆத்திலே தண்ணி வர,மாட்டுகார வேலா,வண்டி உருண்டோட,சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா,கல்யாணம்,கல்லிலே,என்னை விட்டு, மியாவ் மியாவ்,ஒருத்தி ஒருவனை,மெல்ல மெல்ல அருகில்,தட்டு தடுமாறி,கண்ணுக்குள்ளே,சிரித்து சிரித்து, ஹலோ ஹலோ,காட்டு ராணி, காட்டுக்குள்ளே,கட்டான,மலரும் கொடியும்,கங்கை கரை,கடவுள் மனிதனாக, யாரடி வந்தார்,காலம் என்னும் நதியினிலே, ராதே, இரவுக்கு ஆயிரம்,பகலிலே, உன்னை சொல்லி, கள்ள மலர், மயக்கம் எனது, தூங்காத கண்ணென்று(நிறைய பேர் லிஸ்டில் தமிழின் நம்பர் one ),பூந்தோட்ட, சின்னஞ்சிறிய,குங்குமம்,பறவைகள்,கண்ணெதிரே, இதய வீணை,கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி,நதிஎங்கே,அழகு சிரிக்கின்றது,ஏனழுதாய், பசுமை நிறைந்த, புத்தன் வந்த,தாழம் பூவே,பனி படர்ந்த,வாடை காற்றம்மா,மடி மீது,நடையா,எண்ணிரண்டு,மஞ்சள் முகமே,உன்னையறிந்தால்,சீட்டுக்கட்டு,வெள்ளிநிலா ,ஆண்ட வன், என்ன கொடுப்பாய்,கன்னத்தில் என்னடி, ஒரே முறைதான், நவராத்திரி, இரவினில், சொல்லவா,போட்டது,
    ராஜாதி ராஜ மகா,அவளா சொன்னால்,என்னடி,ஒன்றா இரண்டா,எனக்காகவா,பட்டாடை,எங்கே ஆஹா எங்கே,அழகு தெய்வம்,நான் அனுப்புவது,இதய ஊஞ்சல்,பத்து மாதம்,பிள்ளை செல்வமே,நலம்தானா,மறைந்திருந்து,பாண்டியன் நானிருக்க,மழை முத்து ,கேளம்மா,உனக்கும் எனக்கும்,என்றும்,நல்ல நல்ல,எவரிடத்தும்,காதல் எந்தன் ,என்னம்மா,எலந்த பயம், அலேக்,மெல்ல,,மாறியது,சந்திப்போமா,காலமிது,சிரி ப்பேன ்,ஒரு பக்கம்,பூ வைத்த,நெஞ்சம் உண்டு,கடவுள் ஏன்,நீல நிறம்,ஆசையிருக்கு,பாலக்காட்டு,உன்கண்ணில்,தொட் டால், டிக் டிக்,பதினாறு வயதினிலே,ஏன் ஏன் ஏன் ,குடிமகனே,மயக்கம் என்ன,இரண்டு மனம,யாருக்காக,கல்யாண ஆசை,இரவுக்கும் பகலுக்கும்.

    புராண,சரித்திர, படங்கள்-
    நான் சொல்லியா தெரிய வேண்டும்? திருவிளையாடல் முதல் ஆதி பராசக்தி வரை.
    Last edited by Gopal.s; 13th May 2015 at 08:17 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1975
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 20

    இருவர் உள்ளம்

    நடிகர் திலகம் திரை இசைத் திலகம் இணையில் வசந்த மாளிகைக்குப் பிறகு மிக அதிகமாக மக்களிடம் சென்றடைந்த காதல் பாடல்கள் இடம் பெற்றது இருவர் உள்ளம் திரைப்படம் என்றால் அது மிகையில்லை. வசந்த மாளிகை வரும் வரையில் இந்தப் படமே மிகவும் அதிகமாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அதுவரை இருந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் வேறோர் பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள். இயக்குநர்களுக்கான நடிகராக விளங்கிய நடிகர் திலகத்தின் நடிப்பில் பல்வேறு புதிய பரிமாணங்களைக் கொண்டு வரவேண்டியது அவர்கள் பொறுப்பு என்கின்ற வகையில் நடிப்பை அள்ளி அள்ளி வழங்கியவர் நடிகர் திலகம். இதில் Subtle Acting என்றால் என்ன வென்றும் அதில் எவ்வாறு வித்தியாசங்களைக் கொண்டு வர முடியும் என்றும் நிரூபித்தவர்.

    இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பிரசாத் அவர்கள் பூர்த்தி செய்யத் தவறவில்லை. இதற்கென்றே அழகு சிரிக்கின்றது பாடலை வைத்தார். குறிப்பாக பறவைகள் பலவிதம் ஒரு காதல் மன்னனாக அந்தப் பாத்திரத்தை சித்தரிக்க உதவியது என்றால் இந்தப் பாடல் ரசிகர்களின் ஆவலைத் தீர்ப்பதற்காகவே படமாக்கப்பட்டது எனலாம்.

    திரை இசைத்திலகத்தின் மிகச் சிறந்த புலமைக்கு எடுத்துக் காட்டு இப்பாடல். அருமையான அக்கார்டினுடன் துவங்கும் பாடலில் இசைக் கருவிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கோபால் சொன்னது போல் இந்த தீம் மியூஸிக் எனப்படும் இசையை இந்தப் பாடலில் சரணத்தில் சற்றே வித்தியாசமாக பயன்படுத்தி யிருப்பார். டி.எம்.எஸ். பி.சுசீலா இணையில் அவர்களின் மகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இப்பாடல்.

    கவியரசரின் வரிகள் காலத்தை வென்று நிற்பவை. இலக்கிய ரசம் சொட்டுபவை. ஆனாலும் என்ன அந்தக் கால தணிக்கை அதிகாரிகள் இலக்கியத்தை ரசிக்கும் மனநிலையில் இல்லையே.. என்ன தப்பு கண்டு பிடிக்கலாம் என காதிலும் விளக்கெண்ணெய் வைத்து துருவி துருவிப் பார்த்தார்கள்.

    அவர்களுக்கு ஆண்மை விழிக்கக் கூடாதாம். அள்ளி அணைக்கக் கூடாதாம். அந்தக் காலத் தணிக்கை அதிகாரிகளை இந்தக் காலப் பாடல்களைத் தணிக்கை செய்யச் சொன்னால்.. ஹ்ம்... ஒரு பாடலாவது மிஞ்சுமா... தெரியவில்லை.

    தணிக்கைக்கு முன் அழகு சிரிக்கின்றது பாடல்...

    http://gaana.com/album/iruvar-ullam

    தணிக்கையில் மாற்றப் பட்டு படத்தில் இடம் பெற்ற பாடல்..



    மக்கள் தலைவரின் ஸ்டைலைக் காணக் காணப் பரவசம்...

    இதில் ஒரு விசேஷம் குறிப்பிட வேண்டும்...

    நாயகி அமர்ந்திருக்க நாயகன் கை தூக்கி எழுப்பும் காட்சி... நடிகர் திலகம் எத்தனை படங்களில் இந்த மாதிரி காட்சிகளில் நடித்துள்ளார் என ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் அதிலும் ஏராளமான வித்தியாசங்களை சித்தரித்துள்ளார்.

    இந்தப் பாடலில் மிகவும் சற்றே குனிந்து எழுப்புகிறார். புதிய பறவையில் சிட்டுக்குருவி பாடல், எங்கள் தங்க ராஜாவில் இரவுக்கும் பகலும் பாடல், பார்த்தால் பசி தீரும் படத்தில் கொடியசைந்ததும் என ஏராளமான பாடல் காட்சிகள். ஒவ்வொன்றிலும் ஒரு விதம்.

    அதே போல் வண்டு வருகின்றது என்ற வரியின் போது மெதுவாக நாயகியிடம் செல்லும் உத்தி..

    ஆசை துடிக்கின்றது என அருவியின் பின்னணியில் நின்று கொண்டு தோளைச் சிலுப்பி புன்னகைக்கும் வசீகரம்...

    குளித்து வருகின்றது என்று நாயகி சொல்லும் போது அந்தக் கூந்தலை எடுத்து முகர்ந்து பார்க்கும் குசும்பு..

    அவள் பின்னால் செல்லும் நடையழகு..

    மஞ்சத்தில் அமரும் முன் ஒர் நடை... அமரும் போது பக்கவாட்டில் பார்க்கும் குறும்புப் பார்வை..

    இப்போது தான் அந்த வரிகள் ஆண்மை விழிக்கின்றது என நாயகன் கூற அள்ளி அணைக்கின்றது என நாயகி உரைக்கிறாள்.. இதை மாற்றி ஆர்வம் பிறக்கின்றது, அன்பே அழைக்கின்றது என படத்தில் மாற்றி விட்டனர்...

    ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் காட்சி...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai, uvausan, KCSHEKAR liked this post
  10. #1976
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆஹா.. என்ன பொருத்தம்... ஒரு மூன்று நிமிடம் கூட இடைவெளி இல்லை.. இருவரும் ஒரே சப்ஜெக்டைப் பற்றிய பதிவை இடுகிறோம்..

    Great Men Think Alike என்பார்கள்.. கோபால் மாதிரி சிந்தித்ததால் நானும் GREAT MAN ஆகி விட்டேனாக்கும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1977
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler on the perils of alcoholism taught by NT's inimitable depictions!!

    துள்ளாட்டமா தள்ளாட்டமா ....கள்ளாட்டமே!!....கொஞ்சம் 'ஜொள்'ளாட்டமும்தான்! வளமான வாழ்வுக்கு மது விலக்கு தேவை என்பதன் வெள்ளோட்டமும் கூட !!

    நெருப்பு சுடும் என்பதை சூடு வாங்காமலே உணர முடியும் குடி குடி கெடுக்கும் என்பதையும் குடிக்காமலே உணர முடியுமா ?
    குடியின் மதிமயக்கத் தள்ளாட்டம் ஒரு மனிதனின் நினைவுகளை மழுங்கடித்து எப்படியெல்லாம் நிலைகுலைய வைத்திடும் என்பதை நடிகர்திலகம் உருவகப் படுத்தியிருக்கும் குடிகார நடிப்புப் பாங்கின் சாரம்!!


    மதியூக மன்னவனும் சித்தம் கலங்கி சின்னவனாவது மதுவின் பித்தத்தாலேயே என்பதை ஒரு தள்ளாட்ட ஸ்டைலில் மங்கையின் துள்ளாட்டத்துடன் அசத்தும் நடிப்புச் சித்தர் !



    குடிமயக்கத்தில் எல்லோரும் மலை ஏறும் வீரர்களே மலை ஏறி முடித்து போதை இறங்கியதும் வீரன்கோழையாவதை எவ்வளவு நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் நடிப்பு சிற்பி!! ஒன்றைப் பார்த்தால் ஒன்பதாக தெரியுமோ?!



    சூழ்நிலையால் குடிக்க நேர்ந்தாலும் கண்ணியத்தை இழக்காத கனவானை கலைக்குரிசிலைத் தவிர வேறு யாரால் சித்தரிக்க முடியும் ?







    படித்தவரெல்லாம் 'பாரு'க்குப் போய் குடித்தவரானால் இந்த பார் தாங்கிடுமா!? காரிருளில் காரில் அமர்ந்து ஓட்டக் கூட இயலவில்லையே........NT teaches "drunken drive is dangerous"!



    சொந்தபந்தங்களால் குடி முழுகினாலும் மனிதன் குடியில் மூழ்கிடலாமா ? ' குடி' நச்(சு) சென்று வெளிப்படுத்தும் நடிப்பின் உச்சம்!!


    மிதமிஞ்சிய செல்வந்தரும் மதுவின் ஆளுமையில் மாதுவின் அடிமை ஆகிவிடுவரே !!





    குடிமயக்கம் பார்வையை மங்கச்செய்யுமே ! பாதையில் பார்த்துப் பயணிப்பது நலமே!!



    முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் ..கழுதை மட்டுமல்ல,,,குடிப்பழக்கமும்தான்!! ஒதுங்கி ஓரம் செல்வதே சாலவும் நன்று!!



    நாளை முதல் குடிக்கமாட்டேன்...வரவேற்கத் தகுந்த மனமாற்றமே!!
    Last edited by sivajisenthil; 13th May 2015 at 01:02 PM.

  12. Likes Russellmai, KCSHEKAR, kalnayak liked this post
  13. #1978
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்கிறது

    ஜெமினி சினிமா
    நடிகர்திலகத்தின் திரைப்பட பட்டியல்

    தமிழகத்தின் செல்வம்
    Last edited by senthilvel; 13th May 2015 at 08:55 PM.

  14. Likes Russellmai liked this post
  15. #1979
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இப்படத்தின் வெற்றி
    வீரபாகுவின் கருணை
    Last edited by senthilvel; 13th May 2015 at 08:59 PM.

  16. Likes Russellmai liked this post
  17. #1980
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெ.வ....
    உங்களின் நினைவிருக்கும்

    Last edited by senthilvel; 13th May 2015 at 08:56 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •