Page 236 of 401 FirstFirst ... 136186226234235236237238246286336 ... LastLast
Results 2,351 to 2,360 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2351
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Neyveliar,


    Now we are eagerly awaiting your remaining series of NT one by one and it will be a treat for

    all of us.


    Regards

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2352
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    ஒரே மூச்சில் படித்து விட்டேன். இனி வீடியோதான் பார்க்க வேண்டும். ஆனால் நீங்கள்தான் காட்சியை கண் முன்னாள் நிறுத்தி விட்டீர்களே! தொடரட்டும் உங்கள் தொடர்கள்! தொடரட்டும் உங்கள் தொண்டு!.

    அன்புடன்

  5. Thanks vasudevan31355 thanked for this post
  6. #2353
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome Mr Krishnaji and do contribute as usual.

  7. #2354
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    Simply great... What a dedication, hard work, efforts you have put..
    தங்களுடைய கடின உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை. கடவுள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். நடிகர் திலகத்தின் புகழைப் பரப்பும் பணியில் யார் யார் எப்படி செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார். அதில் நம்பர் 1 நீங்கள். நடிகர் திலகத்தின் நடிப்புப் புதையலில் இது வரை பார்த்தறியாத புதிய பொக்கிஷத்தை எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
    ஒரு முழுமையான நடிகர் என்பதைத் தன் முதற்படத்திலேயே நிரூபித்தவரின் சிறப்பை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், என்றால் அவருடைய புகழைப் பரப்பும் தங்கள் பணியையும் அதே போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    உளமார்ந்த நன்றியும் பாராட்டும்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #2355
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    புலி வருது புலி வருது என்று நேற்று எதிர்பார்க்க ,இன்று எதிர்பார்க்கா நேரத்தில் வந்து உறுமுகிறது.

    புதையல் என்னை கவர்ந்த படம். இதற்கு என் நண்பர்கள் நால்வர் (வழக்கம் போல தரை to Backbench upgradation என் பங்கு), மாற்று ரசனை கொண்ட ஒரு நண்பன் (இப்போது குறைபாடு கொண்டவர்களை மாற்று
    என்று சொல்வதுதானே முறை)ஒருவனும் எங்களோடு. (படம் அவனுக்கு பிடித்தது)

    இதெல்லாம் ஒரு சண்டையா என கேலி பேச ,நான் பதிலுக்கு
    இதுதானேடா நிஜ சண்டை. டிஷ்யூம் டிஷ்யூம் என்று வருவதெல்லாம் இதற்கு ஈடாகுமா என்று பதில் கொடுத்தேன்.
    நன்றி வாசு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes KCSHEKAR, kalnayak, vasudevan31355 liked this post
  11. #2356
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு

    உங்கள் புதையல் சண்டை காட்சி பற்றிய பதிவு சூப்பர் .பிதாமகர் ராகவேந்தர் சொன்ன மாதிரி dedication என்பதற்கு மிக சிறந்த எடுத்துகாட்டு உங்கள் பதிவு இதை படித்த உடன் நெஞ்சில் நிழல் ஆடிய குங்குமம் வார இதழில் வெளி வந்த ஜூடோ ரத்தினம் சொல்லிய செய்தி தான் . காபி பேஸ்ட் ஆக இருந்தாலும் ஒரு சண்டை பயிற்ச்சி மாஸ்டர் நம்மவரை பாராட்டும் தகவல் பெருமிதம் கொள்ள தானே செய்யும்


    தயங்கிய சிவாஜியின் தடாலடி சண்டை!



    ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ ஷூட்டிங்கில் எடுத்த படம் இது. போட்டோவில் புன்னகை வீசும் சிவாஜி, இதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதற்றத்துடன் இருந்த விஷயம் பற்றித் தெரியுமா?’’ எனப் புதிர் போட்டு, அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஜூடோ ரத்னம்.

    ‘‘இப்போதும், ‘ரயில் சண்டைக் காட்சி எடுப்பதில் ரத்னம் மாஸ்டர் கெட்டிக்காரர்’ என்கிற பெயர் எனக்கு உண்டு. ஏவி.எம் முருகன் தயாரித்த, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ படத்தில் பிரபுவை வைத்து செங்கல்பட்டு ரயில் பாலத்தில் சண்டைக் காட்சியை எடுத்தபோது, அதில் இருந்த ரிஸ்க், யூனிட்டையே அலற வைத்தது. பிரபு ரிஸ்க் எடுத்து நடித்தார்.

    பிறகு ஒரு வாரம் கழித்து ஏவி.எம் ஸ்டுடியோவில் இன்னொரு காட்சியை எடுத்தோம். திடீரென ஸ்பாட்டுக்கு வந்த சிவாஜி அண்ணன், ‘மாஸ்டர் ஜி... ஃபைட் சீன்ல ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்கன்னு சொன்னாங்க. என் மகனை பத்திரமா பார்த்துக்குங்க’ என ஒரு தந்தைக்குரிய அக்கறையில் சொன்னார். அதன் பிறகு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்’’ என்றவர் சிவாஜிக்கு சண்டை சொல்லிக்கொடுத்த இன்னொரு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

    ‘‘சிவாஜி தன் படங்களுக்கு பர்சனலாக இரண்டு ஸ்டன்ட் மாஸ்டர்களைத்தான் பயன்படுத்தி வந்தார். ‘திருப்பம்’ படத்தில் சண்டைக் காட்சியை இயக்கித் தரும்படி சொன்ன கே.ஆர்.ஜி, சிவாஜியிடம் என்னை அறிமுகப்படுத்தி ‘ரொம்பப் பிரமாதமா சண்டைக் காட்சிகளை எடுப்பார்’ என்றார். ‘கேள்விப்பட்டிருக்கேன்’ என்று அரை மனசோடுதான் சம்மதித்தார் சிவாஜி. மறுநாள் சண்டைக் காட்சிக்காக 50 அடி நீளத்துக்கு டிராலி போடப்பட்டு இரண்டு கேமராக்கள் தயாராக இருந்தன.

    ‘எதிரிகள் உங்களை தாக்க வரும்போது அவர்களைப் பார்க்காமலேயே ஒவ்வொருவராக அடித்து விரட்டுகிறீர்கள்’ என்று சிவாஜியிடம் விளக்கியபோது, ‘அதெப்படி பார்க்காமலே அடிப்பது? எங்கே செஞ்சு காட்டுங்க...’ என்றார். நானும் ஸ்டன்ட் நடிகர்களை என்னைத் தாக்க வைத்து, அவர்களை அடித்துக் காட்டினேன்.

    சிவாஜி ஷாக்காகிவிட்டார். ‘உங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க. இப்போதான் உங்க திறமையை நேர்ல பார்க்கறேன்...’ என்று மரியாதை கலந்த பாராட்டை கொடுத்தார். ஆனாலும் அவருக்குத் தயக்கம். ‘நீங்க செய்யலாம். என்னால் இந்த மாதிரி செய்ய முடியுமா?’ என்றார். ‘அட, ‘மனோகரா’ படத்துல நீங்க சங்கிலியை அறுத்துக்கிட்டு கர்ஜிக்கிற சீன்ல, நிஜமான வீரத்தைப் பார்த்திருக்கோம். இதெல்லாம் உங்களுக்கு தூசுதான்’னு நான் சொல்ல, அடுத்த நிமிஷமே அசத்தலா நடித்து ஆச்சரியப்படுத்தினார்.’’

    - அமலன்
    gkrishna

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #2357
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதையல்.

    இளைமை துள்ளும் திராவிட மன்மதனின் அற்புதமான பொழுது போக்கு புதையல். எனக்கு மிக பிடித்தமான ஒரு படம். கதைக்குள் போகவில்லை.எல்லோருக்கும் தெரியும் என்று கொண்டு மேலே செல்கிறேன்.

    இன்று தில் என்ற படம் பொழுது போக்கு படங்களின் வேகத்தை top gear க்கு கொண்டு போனது என்று எல்லோரும் பிரஸ்தாபிக்கிறார்கள். மூடர்களே, புதையலை ஒரு முறை பாருங்கள். உங்களுக்கே புரியும் நீங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று.

    என் hot favourite திரைக்கதாசிரியர் கலைஞர் எழுதிய திரைகதை, வசனம் --ஆஹா ,என்ன வேகம்,என்ன விவேகம்!!!
    இன்று திரைப்பட இலக்கணங்களில் குறிப்பிட படும், even pacing of screen play ,engaging the audience ,nerrative surprise ,twist &turns ,jumping the nerration மற்றும் அற்புதமான காதல் காட்சிகள்,சண்டை காட்சிகள்,தரமான புத்திசாலித்தனமான நகைச்சுவை, sentiment ,காதல்,தியாகம்,பரபரப்பு,suspense ,அனைத்து தரப்பு பாமர ரசிகருக்கான ஜனரஞ்சகம் அனைத்தும் நிறைந்த total package .(பெண்ணின் ஆண் வேடம்,ஆணின் பெண் வேடம், investigative பாணியில் அமையாமலே ரசிகனையே investigator ஆக கருத வைக்கும் திரைப்பட யுத்தி என்று!!

    நான் மிக மிக வருந்தும் விஷயம்- புதையல்,செல்வம் இரு படங்களும் பெற்றிருக்க வேண்டிய வெற்றி இன்னும் இன்னும் அதிகம்.

    விண்ணோடும் முகிலோடும் பாட்டை பாருங்கள்.ecstacy என்ற இன்ப லாகிரியின் உச்சம் தொட்டிருப்பார் NT . துள்ளலோடு, ஒரு உன்மத்த நிலை.சடையை பிடித்து விளையாடுவதென்ன,கடலிலே காதலியை இழுத்து பாய்ந்து இன்ப ஆவேசம் காட்டுவதென்ன, குட்டி கரணம் அடித்து மடியிலே துள்ளி விழுவதென்ன--

    காட்சிக்கு காட்சி ஒரு சுவாரச்யம், திருப்பம், வசனம் சார்ந்த சித்து விளையாட்டு., மூலத்தோடு ஒட்டியே அசுர வேகத்தில் பயணிக்கும் திரைகதை
    என்று அதகளமான படம்.

    Last edited by Gopal.s; 23rd May 2015 at 12:35 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. #2358
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Excellent Vasu sir,

    Your write-up about the stunt scene in Pudhaiyal, breifly described with each and every frame.

    After that period, before 1967 (Thangai), we have another superb fight scene in "NICHAYA THAAMBOOLAM" between NT and M.N.Nambiar.

  15. Thanks vasudevan31355, Gopal.s thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  16. #2359
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பின் வாசுதேவன் சாரின் புதையல் பதிவின் ரசனை தொடர்ச்சியாக ....

    Gap filler 6 : Beach songs with NT!

    கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

    பகுதி 6 : புதையல்

    இக்கரைப் புதையல்!

    கடல் அலைகள் துள்ளி எழுந்து ஆர்ப்பரித்து அடங்குவதை கடற்கரையோரம் இளைப்பாறி ரசித்திருக்கிறோம்! காதல் சிலைகள் துள்ளிக் குதித்து ஓடி ஆடி பாடுவதை .....?! புதையல் ரகசியம்!!
    நடிகர்திலகமும் நாட்டியப் பேரொளியும் வெளிப்படுத்தும் இளமை ஆற்றல் வெளிப்பாடு....அன்னபூர்ணா காபி போல் சுவை மனதில் தங்கி விடுகிறதே!!


    அக்கரைப் பச்சை!!

    தண்டர்பால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஷான் கானரி கடற்கரையோர நாசாவு நகரில் வில்லி கும்பலின் துரத்தலில் தப்பித்து காலில் காயத்துடன் கிஸ் கிஸ் பேங் பேங் என்ற பீச் கிளப்புக்குள் நுழைந்து விடுவார். ஆனால் வில்லக் கும்பல் சுற்றி வளைத்து விடும்.

    ஜேம்ஸ் பாண்ட் தப்பித்து விடுவார் என்பது குழந்தை ரசிகனுக்கும் தெரிந்ததே !

    எப்படித் தப்பித்தார் ?.....இந்தக் காட்சிக் கரு நடிகர்திலகத்தின் தங்கசுரங்கம் படத்தில் இயக்குனர் 'தேவா'வான ராமண்ணாவால் சத்தி தன்னாடு
    பாடல் காட்சியில் புகுத்தப் பட்டிருக்கும் !!


    Last edited by sivajisenthil; 23rd May 2015 at 02:51 PM.

  17. Thanks vasudevan31355 thanked for this post
  18. #2360
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    [/QUOTE]
    புதையல்
    பட தலைப்பு
    மட்டுமல்ல
    உங்களின்
    இந்த எழுத்தும்
    தான்...

    நன்றி
    Last edited by senthilvel; 24th May 2015 at 08:56 AM.

  19. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •