Page 380 of 401 FirstFirst ... 280330370378379380381382390 ... LastLast
Results 3,791 to 3,800 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3791
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, J.Radhakrishnan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3792
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சி.. க.. சிவா ஜி

    Last edited by senthilvel; 19th July 2015 at 06:48 PM.

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #3793
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by senthilvel; 19th July 2015 at 04:25 PM.

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #3794
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #3795
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    முக நூலில் படித்தது

    கலையுலகத் தந்தை.. !
    நடிகர் திலகம்..சிவாஜி

    தந்தை வேடம் ஏற்பது வேறு தந்தையாகவே நடிப்பில் வாழ்ந்து காட்டுவது வேறு. திரையுலகில் தந்தை... என்ற பாத்திரப் படைப்பையே மையமாக வைத்து பல படங்கள் தமிழில் ஏராளம். மற்ற மொழிகளில் இந்த அளவிற்கு இருக்குமா ?.... சந்தேகமே. யோசித்துப் பார்த்தால்.. சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்புத் திறமை நம்பியே இவை எடுக்கப்பட்டிருக்குமோ. ..? என்று ஐயுற வேண்டியுள்ளது.

    என் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு படம்...பார் மகளே பார்... செல்வச் செருக்கையும் காண்பித்து ... பின்னர் பாசத்தில் துடிக்கும் அன்புத் தந்தையாக...எப்படி அப்படி ஒரு பரிமாணம் அவரால் காட்ட முடிந்தது.
    அடுத்து எங்க ஊர் ராஜா... பெற்ற பிள்ளைகள் தந்தையின் தன்மானத்தை மதிக்கத் தெரியாத போது...வைராக்கியம் மிகுந்த தகப்பனாய்... யாரை நம்பி நான் பிறந்தேன்.போங்கடா போங்க... அன்று அது எத்தனை பேர் வாழ்க்கையில் தாரக மந்திரம் ஆனது !
    மோட்டார சுந்தரம் பிள்ளை... இரு தாரம் கொண்ட மணவாழ்க்கையில் பிள்ளைகள் பிரச்சனைகள்.. நயமாக யதார்த்த வாழ்வு வாழ்ந்திருப்பார். வியட்னாம் வீடு...பிரஸ்டிஜ் பத்மனாபன்...பிள்ளைகளுக்காக...தன் கடமை ...என்றே உத்தியோகம் காத்து தனக்கென வாழ மறந்த வேதனை...பிள்ளைகள் தந்த ஏமாற்றங்கள்... மனிதர்கள் நிஜத்தில் சுதாரிக்க ஆரம்பித்தது உண்மை.

    தங்கப்பதக்கம்.... பொறுப்புள்ள கண்ணியமிக்க தந்தைக்கு மகன் அயோக்கியனாய் இருக்க கடைக்கும் பாசத்திற்கு ம் இடையே அற்புத போராட்டம் நடத்தியிருப்பார். ஞானஒளி... அவசர புத்தியில் ..மகள் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி...தப்பித்த குற்றவாளியாக...பாசத்தை வெளிக்காட்ட
    முடியாது தவித்து போராடும் நடிப்பு இவர ஒருவராலேயே முடிந்தது.

    கிராமத்துக் கதைகளில் கம்பீரம் காட்டி.. கல்தூண்.. பிள்ளைகளுடனே ரோஷம் காட்டி .. பண்பான மனத்தராய் நடிப்பு...எப்படி மறக்க முடியும் ? தேவர் மகன் ..வெகு இயல்பாக கிராமத்து கண்ணியம் , பொறுப்பு மிகுந்த தோரனை கள்.... தெய்வமகன்...வித்தியாசமான...மேற்செபெருமைக்குத் துணை போகும் செருக்குள்ள.. பின்னர் ..விட்டுக்கொடுக்காத தந்தை பாசம்....ம்ம்ம்ம் எல்லாம் இன்னும் நம் கண்முன்னே நிழலாடுகிறது.... உணர்வுகளின் நாயகன் அவரே.

    கோதைதனபாலன்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  11. Likes Russellmai liked this post
  12. #3796
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes ainefal, Russellmai liked this post
  14. #3797
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    சுந்தரராஜன்,
    அற்புதமான நிழற்படம், அபூர்வமானதும் கூட. நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் நல்லிதயங்களின் தொண்டு என்றைக்குமே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதற்கு சான்றாக விளங்குகிறது தங்கள் www.sivajiganesan.in இணைய தளத்தின் முகப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நடிகர் திலகத்தின் ஆசியுடன் தங்கள் முயற்சிகளில் மென்மேலும் வெற்றியடைய உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #3798
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செந்தில்வேல்
    தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ள சிகரங்களைக் கடந்த சிவாஜி தொடர் மிகவும் அபூர்வமானதாகும். இது மறு வெளியீடு கண்டாலும் கூட முழுமையாக வருமா என்பது நமக்குத் தெரியாது. இருந்தாலும் பல அபூர்வ தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. நான் வணங்கும் தெய்வம் படம் தான் கஷ்டப்பட்டு நடித்ததாக நடிகர் திலகம் கூறியிருப்பதாக அதில் நடிகர் திலகம் கூறியிருக்கிறார். இத்திரைப்படத்தைப் பற்றி, குறிப்பாக அந்த பியானோ காட்சியைப் பற்றி முன்னரே நான் எழுதியுிருக்கிறேன்.
    இந்நாளில் வெளிவந்த ஓர் பிரம்மாண்டமான படத்திற்கு மூலக் கரு இத்திரைப்படமாகவும் இருந்திருக்கலாம்.

    நினைவூட்டல் அளித்த பதிவிற்கு உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #3799
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. #3800
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்

    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


    கடந்த பதிவின் இறுதி பகுதி

    வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சி பார்த்த அனுபவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? ஒரு முறை 2007-ல் இங்கே சென்னை அபிராமியில் வசந்த மாளிகை பார்த்தபோது ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஆரவாரத்தை விவரித்தது நினைவிற்கு வருகிறது. அது போன்றே முதன் முதலில் பார்த்தபோதும் நிகழ்ந்தது.

    பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.

    ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல் புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.

    ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்துவது, ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் குறிப்பாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது,

    இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.

    படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.

    நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.

    அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் ம்தார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. பால்கனி வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

    (தொடரும்)

    அன்புடன்

  20. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •