Page 49 of 90 FirstFirst ... 39474849505159 ... LastLast
Results 481 to 490 of 896

Thread: Endrendrum Thalaivar Superstar Rajinikanth - News & Updates

  1. #481
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by PARAMASHIVAN View Post
    Any one liked "Kai Kodukkum Kai" ?
    Not me!

    If I liked it, I should have been "some other" actor fan! Not Rajini fan!
    This is a very big world!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #482
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Rajini at RMV's birthday (90th) celebrations!

    Check out the photos!

    http://www.nikkilcinema.com/site/pho...rations-photos
    This is a very big world!

  4. #483
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    நக்கீரனில் வந்துள்ள புகைப்படங்கள் இங்கே!

    http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=150743
    This is a very big world!

  5. #484
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    கலங்காத மனம் படைத்தவர் ஆர்.எம்.வீரப்பன்: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்

    tamil.thehindu.com/cinema/tamil-cinema/கலங்காத-மனம்-படைத்தவர்-ஆர்எம்வீரப்பன்-நடிகர்-ரஜினிகாந்த்-புகழாரம்/article7635971.ece

    [முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் 90-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி இராமசுப்பையா நினைவு விருதை, இயக்குநர் எஸ்பி. முத்துராமனுக்கு வழங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த். உடன் ஏவி.எம்.சரவணன், எஸ்.ஜெகத்ரட்சகன், ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர். படம்: க.ஸ்ரீபரத்]

    அரசியல் துறையிலும் திரைத் துறையிலும் எந்த நிலையிலும் கலங்காத மனதுடன் விளங்கியவர் ஆர்.எம்.வீரப்பன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

    எம்ஜிஆர் நடித்து ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த திரைப்படங்களை சிறிய வயதில் திரையரங்குகளில் முதல்நாளே பார்த்து ரசித்தவன் நான். அப்படிப்பட்ட ஆர்.எம்.வீரப்பனின் தயாரிப்பிலேயே பின்னாளில் நானும் கதாநாயகனாக நடிப்பேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை.

    ஆர்.எம்.வீ.யின் தயாரிப்பில் வெளியான `பாட்ஷா’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது. அப்படத்தின் விழாவில் நான் பேசிய பேச்சு, பெரும் விவாதத்துக்குள்ளானது. அதன் விளைவாக ஆர்.எம்.வீ. பதவி இழந்தார். அவரிடம் எனது மன்னிப்பை கோருவதற்காகச் சென்றேன். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் `இது காலத்தின் கட்டாயம்’ என்றார். இதுபோன்ற எத்தனை சோதனைகள் வந்தாலும் அதைக் கண்டு கலங்காத மனிதராக திரைப்படத் துறையிலும் அரசியல் துறையிலும் சிறந்து விளங்கியவர் ஆர்.எம்.வீரப்பன்.

    இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

    விழாவில் முன்னாள் நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், கு.ரா.கோகுலகிருஷ்ணன், மோகன், தொழிலதிபர்கள் பழநி ஜி.பெரியசாமி, நல்லி குப்புசாமி, பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமனுக்கு ராமசுப்பையா நினைவு விருது வழங்கப்பட்டது.
    This is a very big world!

  6. #485
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது!- இந்து முன்னணி எதிர்ப்பு

    திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது என்று இந்தி முன்னணி தலைவர் ராம கோபாலன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.பிரபல கன்னடத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அசோக் கெனி, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை தனது கனவுப் படமாகத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதில் நடிக்க ரஜினிகாந்திடம் பேசப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த செய்தியை ஏற்கெனவே ஒன்இந்தியாவில் வெளியிட்டிருந்தோம்.advertisementஇன்னும் படம் குறித்து ரஜினியுடன் பேச்சுவார்த்தையே ஆரம்பிக்காத நிலையில், இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன் என்றும் அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது என்றும் ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், "அமரர் எம்ஜிஆர் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில், பொள்ளாச்சியில் வசித்து வந்த தமிழரான தனது மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும்தான். திப்பு சுல்தான் ஒரு இந்தி மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்," என்றார்.அக்கப்போரை ஆரம்பிச்சாச்சா?

  7. #486
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது!- இந்து முன்னணி எதிர்ப்பு

    திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது என்று இந்தி முன்னணி தலைவர் ராம கோபாலன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.பிரபல கன்னடத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அசோக் கெனி, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை தனது கனவுப் படமாகத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதில் நடிக்க ரஜினிகாந்திடம் பேசப் போவதாகவும் கூறியிருந்தார். இந்த செய்தியை ஏற்கெனவே ஒன்இந்தியாவில் வெளியிட்டிருந்தோம்.advertisementஇன்னும் படம் குறித்து ரஜினியுடன் பேச்சுவார்த்தையே ஆரம்பிக்காத நிலையில், இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன் என்றும் அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது என்றும் ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், "அமரர் எம்ஜிஆர் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் புத்தகத்தில், பொள்ளாச்சியில் வசித்து வந்த தமிழரான தனது மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும்தான். திப்பு சுல்தான் ஒரு இந்தி மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்," என்றார்.அக்கப்போரை ஆரம்பிச்சாச்சா?
    They started already! This is hilarious!
    This is a very big world!

  8. #487
    Senior Member Regular Hubber Poornima's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    108
    Post Thanks / Like
    many years ago, there was talk about a maniratnam film on Tipu with rajni.
    anyway, even then it was a long shot. now, with the kind of powers at the CENTRE, the project (if there was any truth in the reports) is practically impossible.
    “You know how you're always trying to get things to come out perfect in art because it's real difficult in life.”

  9. #488
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by Poornima View Post
    many years ago, there was talk about a maniratnam film on Tipu with rajni.
    anyway, even then it was a long shot. now, with the kind of powers at the CENTRE, the project (if there was any truth in the reports) is practically impossible.
    That guy just said, he wishes he could. That's all!
    This is a very big world!

  10. #489
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    ***Will Rajinikanth Play Tipu Sultan? Some People Don't Want Him to

    Reacting strongly to media reports that Rajinikanth may star in a biopic on Tipu Sultan, Hindu Munani leader Rama Gopalan has urged the superstar to not to take up the project.

    According to Mr Gopalan, Tipu Sultan was 'anti-Tamil' and hence no Tamil actors including Rajinikanth should star in the film. (Also Read: Rajinikanth to Play Chennai Mafia Don in His 159th Film)

    Bengaluru-based entrepreneur-producer Ashok Kheny reportedly wants to make a biopic of Tipu Sultan with the 64-year-old southern superstar.

    In his statement, Mr Gopalan said that the film will be an attempt to portray Tipu Sultan as a freedom fighter.***

    I did not know until today Tippu sultan was an anti-tamil!
    This is a very big world!

  11. #490
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    திப்புசுல்தான் சினிமாவில் ரஜினி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

    சென்னை: திப்புசுல்தான் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்துமுன்னணி ராமகோபாலனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இது போன்ற மிரட்டல் பேச்சுக்கு திரைத் துறையினர் செவிசாய்க்க கூடாது என்றும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    " இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் திரு. இராம கோபாலன் அவர்கள் 10.9.2015 அன்று பத்திரிகைகளுக்கு அளித்துள்ள அறிக்கையில் திப்புசுல்தான் ஒரு இந்து மத விரோதி; தமிழர் விரோதி. அவரைப் பற்றி எடுக்கும் கன்னட திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கக் கூடாது, தமிழ் திரைப்படைத்துறையினர் யாரும் அப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது, ஒருவேளை அப்படம் வேறு மாநிலத்தில் தயாரிக்கப்பட்டால் அதை தமிழகத்தில் திரையிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் தலைவர்களில் ஒருவரான திரு. இல. கணேசன் அவர்களும் இராமகோபாலனின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். படைப்பு சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயலும் இராமகோபலனின் அறிக்கை மற்றும் இல. கணேசன் கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியது.

    முற்றிலும் உண்மைக்கு புறம்பான வரலாற்றை புரட்டிப்போடுகிற, திரித்து சொல்லுகிற ஒரு வேலையை இராமகோபாலன் செய்திருக்கிறார். திப்புசுல்தான் என்றாலே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்தவர் என்பதும், மதநல்லிணக்கத்தை பேணியவர், இந்து கோயில்களை பாதுகாத்தவர் என்பதும் தான் அடையாளமாக இருக்கிறது. அதை சீர்குலைப்பதற்காகவே இராமகோபாலன் முயற்சித்துள்ளார்.

    ஆங்கிலேயர்களை எதிர்த்த போராட்டத்தில் திப்புசுல்தானின் பங்கு வரலாற்று ஆசிரியர்களாலும், ஆய்வாளர்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி 1799ம் ஆண்டு மே 4-ந் தேதி போர்க்களத்திலேயே இறந்தார்.

    திப்புசுல்தான் சிருங்கேரி சங்கராச்சரியார்களுக்கு இடையேயான 30 கடிதப்போக்குவரத்துக்கள் 1916ல் தொல்லியியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டன. மதநல்லிணக்கத்தை போற்றி பாதுகாத்த மன்னனாக திப்புசுல்தான் திகழ்ந்தார் என்பதற்கான சான்றுகளாக அவை திகழ்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் ஆலயம் உட்பட 150க்கும் மேற்பட்ட இந்து கோயில்களுக்கு திப்புசுல்தான் நிரந்தரமாக தன் கஜானாவிலிருந்து பொருளுதவி செய்து கொண்டிருந்தார் என்பதும் ஆய்வாளர்களால் ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒருவரை மதவெறியனாக, தமிழர் விரோதியாக சித்தரிக்கும் ராமகோபாலனின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தியாகமோ, துரோகமோ அதற்கு மதச்சாயம் பூசுவதை தேசபக்தர்களும், மக்கள் நலன் நாடும் அமைப்புகளும், மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்களும் ஏற்கமாட்டார்கள்.

    சேஷசமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் தேர் முற்றிலுமாக எரிக்கப்பட்டபோது இராமகோபாலனுக்கு கோபம் வரவில்லை. தலித்துகள் 7 பேரின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டபோது அதற்காக குரல்கொடுக்க இராமகோபாலனுக்கு நேரமில்லை. ஏனென்றால் அவர்களின் அகராதியில் தலித்துகளும் அவர்கள் வழிபடும் தெய்வங்களும் இந்துக்கள் பட்டியலில் சேராது. பற்றி எரியும் மக்கள் பிரச்சனைகளின் மீது வாய்மூடி மௌனம் காக்கும் இத்தகைய நபர்களும், அமைப்புக்களும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பொய்களையும், புனை சுருட்டுக்களையும் அள்ளி வீசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    எனவே தமிழக திரைப்படத் துறையினர் ராமகோபாலனின் மிரட்டல் பேச்சுக்கு செவிசாய்க்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. கருத்துச்சுதந்திரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும் என்று உறுதிபட தெரிவிக்கிறது.
    இராமகோபாலனின் வன்மம் கொண்ட மேற்கண்ட அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு ஜனநாயக, மதச்சார்பற்ற எண்ணம் கொண்டோர் அனைவரும் இந்துத்துவா அமைப்புகளின் இத்தகைய கருத்துக்களை கண்டனம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    http://www.vikatan.com/news/article.php?aid=52325
    This is a very big world!

Page 49 of 90 FirstFirst ... 39474849505159 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •