Page 223 of 400 FirstFirst ... 123173213221222223224225233273323 ... LastLast
Results 2,221 to 2,230 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2221
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ. எம்.ஆர்.ராதாவும் ந.தியும் மோதும் படியான நகைச்சுவைப் பாடல் பலே பாண்டியா - அதே போல் நடிகவேள் பங்கேற்ற மற்ற பாடல் எதுவும் தற்போது நினைவுக்குவரவில்லை

    வந்த்து பூர்ணம் விஸ்வனாதன் + முகம் மறந்து போன ஒரு ஹீரோ

    படம் கெளரி மனோஹரி (எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்)

    கதை நடப்பது முழுக்க திருவையாறும் அதன் சார்ந்த பகுதிகளும். ஹீரோயின் -இரண்டு கப்பல்கள் செல்லும் அளவுக்கு ஆழமான கண்கள் கொண்டவர்..அது மட்டும் நினைவில்

    கதைப்படி பூர்ணத்திற்கும் அந்த ஹீரோவிற்கும் போட்டி போல பாடல் மாறி மாறி பாடுவார்கள்.. நல்ல பாடல் பட த்தோட வீடியோ கிடைக்கவில்லை..
    (முன்பு ராகதேவன் பாடல் இட்டிருந்தார் அதை அப்படியே புத்தம் புதிய காப்பி அடித்து....

    Movie : Gowri Manohari

    Composer : Iniyavan

    Singers: K. J. Yesudas & S. P. Balasubramaniyam

    ஆஆ..ஆஆ...ஆஆ..
    ஆஆ..ஆஆ...ஆஆ..
    ஆஆ..ஆஆ...ஆஆ..

    அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
    குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
    அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
    இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
    லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
    அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

    பா மா பா நி
    நி சா கா சா நி பா மா
    மா பா நி பா மா கா சா
    சா கா மா
    கா மா பா
    மா பா நி
    பா பா மா கா சா நி பா நி
    நி சா கா மா கா சாநி
    கா சா நி பா சா நி பா மா

    உயிர் பிறந்திடும் முன்னே ஒலியும் பிறந்தது
    அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது
    சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு மனிதா
    சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா
    எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
    எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
    எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
    எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ

    அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

    நி சா கா சா நி நி சா சா சா
    நி சா கா சா நி நி சா சா சா
    நி சா நி சா கா கா
    சா கா சா கா மா மா
    கா மா கா மா பா நி
    பா பா பா

    மொழியும் இசையும் அடங்காது
    முதலும் முடிவும் அதற்கேது
    சுதியில் விலகி லயத்தில் நழுவி
    உலகில் எதுவும் கிடையாது

    பா நி சா கா சா நி
    பா நி சா கா சா நி
    பா நி சா கா சா நி
    சா சா சா
    நி சா கா மா கா சா
    நி சா கா மா கா சா
    நி சா கா மா கா சா
    சா சா

    அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
    அவன் அவன் சொல்லி ஒயாது
    இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
    இசை லயம் ஒன்றும் மாறாது

    கா கா பா பா
    மா மா நி நி
    பா பா சா சா
    நி நி கா கா

    ஓசை இன்றி நாதம் இல்லை
    நாதம் இன்றி ஏதும் இலை
    கேள்வி இன்றி ஞானம் இல்லை
    கீதம் இன்றி நானும் இல்லை

    ஆஆஆஆ... ஆஆஆஆ...

    அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
    குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
    அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
    இசை ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ...
    லயம் ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ..


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2222
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " இராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும் . ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது !!"

    இன்று ஒரு வினோதமான நாள் . - இரண்டு உடல்கள் மண்ணுக்குள் செல்லும் நாள் . இந்த இரண்டு ஆத்மாக்குள்த்தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் , முரண்பாடுகள் .....

    ஒற்றுமை

    இரண்டு ஆத்மாக்களும் மிகவும் பிரபலமானவை - உலகமே திரும்பி பார்க்க வாய்த்தவைகள் . Both were involved with missiles !!

    முரண்பாடுகள் / வேற்றுமைகள்

    1. ஒரு ஆத்மா உலக அரங்கில் நம் பெருமையை உயர்த்தியது . எழுச்சி உள்ள இந்தியாவாக வர கனவு காணுங்கள் என்று வலியுறுத்தியது - கனவுகள் கண்டால் தான் உங்கள் கனவுகள் நிஜமாகும் என்று இளய தலைமுறையைத்தட்டி எழுப்பியது . மனிதன் என்ற போர்வையில் வலம் வந்தது அந்த தெய்வம் .

    2.உலக அளவில் எல்லோரையும் வெட்கி தலை குனிய வைத்தது இன்னொரு ஆத்மா . அது கனவு கண்டவர்களை சுட்டு வீழ்த்தியது .- பலரின் கனவுகள் மலராமல் மண்ணில் புதைந்தன . மனிதன் என்ற போர்வையில் திரிந்து கொண்டிருந்தது அந்த மிருகம் .

    3. புனிதமான குறிக்கோள் - தளராத உழைப்பு --- ஒரு ஆத்மாவிற்கு
    தவறான பாதை , தவறிய குறிக்கோள் , வீணாகி விட்ட வாழ்க்கை - இன்னொரு ஆத்மாவிற்கு .

    4. இலட்சம் , இலட்சம் மக்கள் கடைசி மரியாதை செய்ய விரும்பினர் - போக்குவரத்து ஸ்தம்பித்தது ஒரு ஆத்மாவின் பூத உடலை கடைசி முறை தரிசிக்க

    5. இலட்சம் , இலட்சம் மக்கள் வேண்டினர் இன்னொரு ஆத்மாவின் உடல் சீக்கிரம் மண்ணில் விழ ....

    6. இரு ஆத்மாக்களில் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து அந்த இடத்திற்கு பெருமையை சேர்த்தவர் . அவருக்கு இளாயதலை முறையின் மீது நம்பிக்கை இருந்தது இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அவர்கள் சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று .

    7. இன்னொரு ஆத்மாவிற்கு கடைசி வரை நம்பிக்கை இருந்தது இந்த நாட்டின் ஜனாதிபதியின் மீது - தனக்கு கருணை புரிவார் என்று .

    8.இறந்தும் நம்மிடையே வாழப்போவது ஒரு ஆத்மா ! வாழும்போதே நம்மிடையே இறந்துபோனது இன்னொரு ஆத்மா . விதியின் விளையாட்டு - இரு உடல்களும் இதே மண்ணுக்குள் இன்று உறங்க செல்கின்றன !!!!

  4. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Gopal.s, Russellmai liked this post
  5. #2223
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் பெற்ற செல்வம் நடிகர் திலகம் .... ஒரு நினைவு கூறல்!

    நடிகர்திலகத்தின் பாந்தமான ஜோடிகளில் ஜி வரலக்ஷ்மியும் முக்கியமானவர்
    நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் சற்றே தனது பேரர் விக்ரம் பிரபுவை நினைவு படுத்தும் தோற்றப் பொலிவில் குடும்பப் பாங்கான வரலக்ஷ்மியுடன் மனதை ஈர்த்த பாடல் காட்சியமைப்பு !!(இதற்கப்புறம் ஹரிச்சந்திராவில் இணைந்ததாக ஞாபகம்!)




    குளோசப் காட்சிகளில் நவரச பாவங்காளையும் சீராக வெளிப்படுத்துவதில் உலக நம்பர் ஒன் நடிகர்திலகமே !
    பாடல் காட்சி முழுவதும் குளோசப் ...நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே வேறு எந்த நடிகராலும்......!




    பின்னாளில் இதே பாணியில் பாலிவுட்டின் ஷோமேன் ராஜ்கபூரும் தனது சங்கம் படத்தில் ஒரு பாடல் காட்சியை வைத்திருந்தார் !!

    Last edited by sivajisenthil; 30th July 2015 at 10:23 PM.

  6. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Gopal.s, vasudevan31355, Russellmai liked this post
  7. #2224
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஊடல் கூடல் ஆடல் பாடல் மூடல் வாடல்
    நாடல் சாடல் தேடல் ஓடல் !! குறுந்தொடர்
    பகுதி 1 ஆடல் கிளப் பாடகர் காதலன் Vs ஊடல் ஓடல் காதலி
    ஒரு காலகட்டத்தில் இந்திய கதாநாயகர்கள் பெரும்பாலும் கிளப்புகளில் ஆடிப் பாடிப் பிழைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலை வெட்டியில்லாமல் தோழிகளுடன் ஊர் சுற்றும் கதாநாயகிகள் இம்மாதிரி கிளப்புகளுக்கும் பொழுது போக்க வருவார்கள் !!

    புடிச்சாலும் புளியங்கொம்பாப் புடிக்கணுமே என்று மனசுக்குள் ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கும் நாயகன் எப்படியோ ஒரு பூங்கொடியை ஆடிப் பாடி குட்டிக்கரணம் போட்டு மயக்கி வைத்திருப்பார்! ஆனாலும் அந்த லூசுப் பொண்ணு அப்பப்ப பாடக காதலன் மேல் சந்தேகப் பட்டு ஊடல் கொண்டு முக வாடலுடன் மன மூடல் பண்ணி நாயகனை ஓடல் தேடல் பண்ண வைத்து இந்தக் கூத்து கூடலில் முடியும்!!
    இந்த கான்செப்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஷம்மி கபூர் ...சைனா டவுன் மூலமாக!!

    பாரு பாரு தேக்கோ திரும்ப திரும்ப பாரு ! ஹசாறு பாரு தேக்கோ ஆயிரம் முறை பாரு !!
    Shakila / முகமது ரபிதான் ஷம்மிகபூரின் குரல்...ஜெமினிக்கு ஏ எம் ராஜா போல!!

    அப்புறம் வரிசையாக இதே பாணி பாடல்கள் சரம் சரமாக.....
    பலே தம்முடு என் டி ராமாராவ்காருவின் ஸ்டெப்புலு ! கே ஆர் விஜயா / முகமது ரபியே பாடியிருக்கிறார்!! !!

    குடியிருந்த கோயில் மக்கள் திலகம்!!ஜெயலலிதா / டிஎம் எஸ் /MSV

    தெய்வ மகன் நடிகர்திலகம்!ஜெயலலிதா / டிஎம் எஸ் /MSV
    நடிகர்திலகத்தின் இளமைத் துள்ளலில்

    அதே கண்கள் ரவிசந்திரன் !காஞ்ச்... சி க... காஞ்ச் !!/டிஎம் எஸ்/ TR Paappaa?!
    இன்னுமொரு சமயம் இளமை வராது ...இந்த சுகம் எதையும் முதுமை தராது....
    கலர் கதாநாயகி காஞ்சனாவுடன் கலர்புல் கலக்கல் டான்ஸ் ஸ்டெபபுகளில் பின்னுகிறார் ரவிச்சந்திரன் !!

    வல்லவனுக்கு வல்லவன் அசோகன் டிஎம் எஸ்/ TR Paappaa?! Vedhaa?


    ....அப்பாடா...வாசு/சிக..சார் ஏதேனும் மிஸ்ஸிங்கா!!
    Last edited by sivajisenthil; 31st July 2015 at 08:13 AM.

  8. Thanks vasudevan31355 thanked for this post
  9. #2225
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

    குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்
    Raghavendhar Sir
    நான் பெற்ற செல்வம் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை வரிசையில் நடிகர்திலகத்தின் மிக மிக இயல்பான இதமான அதே சமயம் அழுத்தமான நடிப்பினை பதிவு செய்த காவியம்.

    படத்தின் தலைப்பிலேயே வரும் பாடலில் அன்பு மனைவியின் இழப்புக்குப் பின் குழந்தையை சிரமங்களுக்கு இடையே வளர்த்திடும் சோகச் சுமையை அதியற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் !



    சிறுவர்கள் ஒன்றுகூடி பாடும் மாதாபிதா குரு தெய்வம் ( குழந்தைகளை நேசித்த அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவரஞ்சலியான பாடல்) பாடல் காட்சியிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தாது(கடவுளை நம்பு என்ற வாசகங்கள் கொண்ட ஒரே ஒரு பிரேமில் வருவார்! என்றும் எங்கள் நடிப்புக் கடவுளை நாங்கள் நம்புகிறோம் என்பதே எதார்த்தம்!) ஓரமாக நின்று ரசிக்கும் அவரது முக பாவங்கள் ஒப்பிட முடியாதவையே!

    Last edited by sivajisenthil; 31st July 2015 at 02:49 AM.

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  11. #2226
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post



    இந்த கான்செப்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஷம்மி கபூர் ...சைனா டவுன் மூலமாக!!

    பாரு பாரு தேக்கோ திரும்ப திரும்ப பாரு ! ஹசாறு பாரு தேக்கோ ஆயிரம் முறை பாரு !!
    கிரிஜா / முகமது ரபிதான் ஷம்மிகபூரின் குரல்...ஜெமினிக்கு ஏ எம் ராஜா போல!!
    சிவாஜிசெந்தில் சார்... அந்த ஹீரோயின் பேரு ஷகீலா இல்லையோ ?

    சிக்கா ... உடனே ஓடி வந்திடுவீங்களே...இது வேற ஷகீலா ? :கிக்கிக்கி:

  12. Likes vasudevan31355, chinnakkannan liked this post
  13. #2227
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாடல், ஊட்டி வரை உறவிற்காக பதிவு செய்ய பட்டு ,ஏதோ காரணங்களால் இடம் பெறாத யாரோடும் பேச கூடாது ,ஆகட்டும் (பீ.பீ.எஸ்-எல்.ஆர்.ஈ )பாடலின் சாயலை கொண்டது.



    வாசு, உனது சிவராமன் மாமா பற்றிய பதிவை படித்து பிரமித்து விட்டேன். உன் அன்னையுடன் பழகியதாலோ என்னவோ ஒரு கூடுதல் ஒட்டுதல் இந்த பதிவில். நீ உடனே இமயத்தின் கோவேறு கழுதைகள் படித்து விடு.



    குழந்தை போன்ற மூன்றாந்தரமான படங்களுக்கு ,முதல் தர பதிவு போட்டு,இங்கிருக்கும் குழந்தை உள்ளங்களுடன் லைக் வாங்கும் மூன்றாந்தர புகழை ஒதுக்கி, கடலூரை சார்ந்து ,உன் அனுபவங்களை கொண்டு ,நல்ல நாவல் ஒன்று விஸ்தாரமாக எழுது. இது எனது வேண்டுகோள்.(கடைசி பதிவும் கூட)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks vasudevan31355, chinnakkannan thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  15. #2228
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    You are quite right Madhu Sir...Shakila is correct....I was just thinking of Manohara at that time..a bit confusion,,,Girija was the pair for NT in Manohara?
    error corrected
    senthil

  16. #2229
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    sivasankari sivanandalahari from Jagathalaprathapan(1961) by a super singer

    I was listening to super singer in vijay tv. A young girl sang 'sivasankar sivananda lahari' rendered by Sirkazhi Govindarajan in the movie (Tamil version). It was a fantastic performance by the young girl.



    I hope she makes music her career!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  17. Likes chinnakkannan liked this post
  18. #2230
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி கோ.

    //லைக் வாங்கும் மூன்றாந்தர புகழை ஒதுக்கி//

    இல்லை கோ. தவறான கண்ணோட்டம். இந்த லைக்குக்காக, மூன்றாந்தர புகழுக்காக நான் இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை. ஒரு பதிவை நன்றாக அலசி ஆராய்ந்து முடிந்தவரை சரியான தகவல்களுடன் தர நிச்சயம் ஒரு நாள் ஆகிறது. இந்த லைக்குகளுக்காக நான் ஒரு பதிவுக்கு ஒரு நாள் செலவிடுவதாக வைத்துக் கொண்டால் அதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. மிஞ்சி மிஞ்சி எத்தனை பேர் லைக் போட்டு விடுவார்கள்? நண்பர்கள் ஒரு ஆறேழு பேர் தானே? அதுவும் அவர்களே திரும்பத் திரும்ப. நமக்கே போரடிக்காது?ஆனால் உறுப்பினர் அல்லாத பார்வையாளர்கள் தினம் 600 பேருக்கு மேல் மதுரகானங்கள் பார்க்கிறார்களே! அவர்கள் விரும்பாமலா தொடர்ந்து மதுர கானங்கள் நான்காம் பாகம் வெற்றியுடன் பீடுநடை போடுகிறது?

    இன்றைய காலை 10 மணி நிலவரப்படி மதுர கானங்கள் பாகம் நான்கின் பார்வையாளர் கணக்கு இது.

    Replies: 2,228
    Views: 42,010

    சின்னா மே 22-ல் ஆரம்பித்து வைத்தார். கிட்டத்தட்ட இன்றுவரை 70 நாட்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 600 பார்வையாளர்கள். Replies ம் அதிகம். இது சாதனைதானே? போன மூன்றாம் பாகம் சின்னக் கண்ணன், கல்நாயக் இருவரின் உழைப்பிலேயே அபார வெற்றியடைந்தது. மற்ற நண்பர்களின் உழைப்பும் இதில் சேரும்.

    பாலா பாடல்களின் வீடியோவை யூ டியூபிலிருந்து இழுத்துப் போட்டுவிட்டு மேலே 'இது 'குழந்தை உள்ளம்' படத்தில் பாலா பாடிய அருமையான பாடல் என்ற ஒரு வரியோடு தொடரை நான் தர முடியும். அதற்கும் இதே லைக்குகள்தான். நான் அதைச் செய்யலாமே! இவ்வளவு வேலைப் பளுவை சுமக்க வேண்டிய அவசியமே இல்லையே. சுளுவாகவே லைக் வாங்கி விடலாமே!

    என்னைப் பொறுத்த வரையில் பதிவிட்டால் எனக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் ஆதரங்களோடு கிளீனாகக் கொடுக்க வேண்டும். பாலா தொடரில் வெறும் பாடலை மட்டும் கொடுத்து விட்டு நான் மறு ஜோலி பார்க்கலாம். ஆனால் அது எந்தப் படம், அந்தப் படத்தின் டெக்னீஷியன்கள் யார் யார், அந்தப் படத்தின் கதை, பாடலாசிரியர், வெளியான வருடம், படத்தில் நடித்த நட்சத்திரங்களைப் பற்றிய விவரம் எதையுமே தராமலும் நான் லைக் வாங்கலாம். எனக்கு அது உடன்பாடு இல்லை.

    ஒரு வரிக்கும் அதே பாராட்டுதல்கள்தான். ஒரு முழுப் பக்கப் பதிவிற்கும் அதே பாராட்டுதல்தான். ஆனால் ஒரே வரியில் முடித்து அதை நான் வாங்கலாமே!

    பாடல் ஆய்வோடு சேர்ந்து மற்ற விவரங்களையும் (எனக்குத் தெரிந்த) தந்தால் படிக்கும் நண்பர்கள் அந்தப் படத்தைப் பற்றிய முழு விவரங்களும் தெரிந்து கொள்வார்கள்.. அதை அவர்கள் விரும்புவார்கள் என்றுதான் இவ்வளவு சிரமங்கள் எடுத்துப் பதிகிறேனே தவிர நீங்கள் சொன்ன லைக்குகளுக்காக அல்ல. இத்தனை வருடமாக பார்க்காத லைக்குகளா?

    பாருங்கள்... ராகவேந்திரன் சார் 'காவியத் தலைவி' பதிவிற்கு எவ்வளவு அருமையாக பின்னூட்டம் அளித்திருக்கிறார் என்று. அந்தப் படத்துடன் வெளியான தலைவரின் படங்கள், இதர படங்கள், வருட விவரங்கள் அந்தப் படங்களைப் பார்த்த விதம் என்று எவ்வளவு அழகாக மலரும் நினைவுகளில் தானும் மூழ்கி நம்மையும் அந்த நாட்களுக்கே அழைத்துச் சென்று விட்டார்! இதெல்லாம் சுவீட் மெமரீஸ் அல்லவா!

    எனக்கும் ரெண்டு வரியில் போட்டு விட்டால் வேலை மிச்சம்தானே! நேரமும் ரொம்ப மிச்சம். ஏதோ எனக்குத் தெரிந்ததை, அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரே எண்ணமே தவிர லைக்கோ, பாராட்டோ வேண்டி இவ்வளவு பெரிய பதிவுகள் இட வேண்டிய அவசியமே இல்லை. ஐந்தாறு லைக்குகளுக்காக யாராவது இவ்வளவு டைம் செலவழிப்பார்களா? லைக்குகளுக்கு ஆசைப்பட்டால், இதையே என்னுடைய பேஸ் புக்கில் பதிவிட்டால் ஒரு நாளைக்கு கணக்கில்லா லைக்குகள் வாங்க முடியுமே. அதை நான் விரும்பவில்லை. இங்கே இருக்கும் நண்பர்கள் அனைவரும் பழகிவிட்டதை விடவா?

    மது அண்ணாவைப் பாருங்கள். உடல் முடியாத இந்த நிலையிலும் தன்னை வருத்தி மதுர கானங்களில் அசாத்தியமான பாடல்களைத் தருகிறார். ஏன்? லைக்குகளை விரும்பியா? இல்லை...தனக்குப் பிடித்ததை நம்முடன் பகிர்ந்து கொள்ளத்தானே. (அவருடைய சமீபத்திய 'கதை கதையாம் காரணமாம்' 'பொன்னான வாழ்வு' வரிகள் இன்ப ஷாக்.)

    நீங்கள் சொன்னபடி பதிவுகளை விளக்காமல் ஒரு பாலா பதிவை உங்களுக்காகவே அடுத்த பதிவாக போடுகிறேன். நீங்களே எப்படி இருக்கும் என்று சொல்லுங்களேன்.

    இங்கிருப்பவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்களே! அது நல்லதுதானே! குழந்தைகளும், தெய்வங்களும் ஒன்றல்லவா!

    இந்தப் பதிவைக் கூடக் லைக்குகளுக்கு விரும்பிதான் நான் போட்டேன் என்று சொன்னாலும் சொல்வீர்கள். அப்படி இருந்தால் அதுவும் எனக்கு சந்தோஷமே. இதுவும் பெரி.....ய்ய்ய்ய்ய பதிவுதான். உங்களுக்காகவே பாலாவின் அடுத்த பதிவு விரைவில்.

    அப்புறம் தாங்கள் கூறியபடி 'கோவேறு கழுதைகள்' கண்டிப்பாக படிக்கிறேன். தாங்கள் என் மீது, என் எழுத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி!

    //உன் அன்னையுடன் பழகியதாலோ என்னவோ ஒரு கூடுதல் ஒட்டுதல் இந்த பதிவில்//

    அம்மா உங்களை விசாரிக்காத நாளே இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றி. எனக்கு ஒரு அன்புச் சகோதரர் இப்படி. (லைக் போடுவீர்கள்தானே!)

    //கடலூரை சார்ந்து ,உன் அனுபவங்களை கொண்டு ,நல்ல நாவல் ஒன்று விஸ்தாரமாக எழுது. இது எனது வேண்டுகோள்//

    நிச்சயமாக கோ. எனக்கும் ரொம்ப நாளாக அப்படி ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்குத் திறமை வேண்டுமே. முயற்சி செய்து பார்க்கிறேன்.

    //(கடைசி பதிவும் கூட)//

    !!!!!!!!!!! ?????????????????????? புரியவில்லை கோ
    Last edited by vasudevan31355; 31st July 2015 at 11:27 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  19. Thanks Gopal.s thanked for this post
    Likes Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •