Page 68 of 400 FirstFirst ... 1858666768697078118168 ... LastLast
Results 671 to 680 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #671
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 44

    ஜனணியின் தொடர்ச்சி :

    உண்மை சம்பவம் -5

    பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

    அன்று மிகவும் டென்ஷன் ஆக இருந்தேன் . அதுவரையில் அப்படி ஒரு படப்படப்பு , கோபம் , பொறுமை இன்மை எனக்கு வந்ததே இல்லை - ஒரு பெரிய கம்பெனியில் MD யாக இருக்கும் நான் என் கீழ் வேலை செய்யும் பல நபர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்துதான் பழக்கம் . உணர்ச்சிவசப்பட்டால் என்னை லீடர் என்று ஒரு பியூன் கூட மதிக்க மாட்டான் - ஆனால் அன்று ஏனோ அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு இருந்தேன் .. இருக்காதே பின்னே ?? - 20000 கோடி மதிப்புள்ள ஆர்டர் government மூலம் எங்களுக்கு வரவேண்டியிருந்த நாள் அன்று - இதற்காக நான் பட்ட கஷ்ட்டங்களைப்பற்றி எழுத ஒரு தனித்திரியே வேண்டும் .

    இன்னும் கடிக்க கை விரல்களில் நகங்கள் இல்லை - மற்றவர்களின் கைகளைத்தான் இரவல் வாங்க வேண்டும் ... இந்த ஆர்டர் மட்டும் கிடைத்து விட்டால் , நாட்டுக்கே ஒரு பெரிய infrastructure யை கொடுத்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கும் . எவ்வளவு பேர்களுக்கு வேலை வாய்ப்பை என்னால் தர முடியும் - நினைத்தாலே இனிக்கின்றது - கிடைத்தவுடன் ஒரு execution டீம் யை உருவாக்கவேண்டும் --- மனம் எங்கோ மிதந்து ---- இன்று மூன்று மணிக்குள் முடிவு தெரிந்துவிடும் . எங்களுடன் மோதியவர்களில் பலர் வெளிநாட்டினர் - பண பலமும் அதிகமாக விளையாடும் - எங்களின் பலமே - எங்களின் தன்னம்பிக்கையும் , உண்மையாக உழைப்பது மட்டுமே - இந்த திமிகலங்களுடன் மோதி ஜெய்க்க முடியுமா ??

    என் டீம் என் பரபரப்பை பார்க்க முடியாமல் , என் cabin பக்கமே வரவில்லை . போன் அலறியது - சரோ தான் பேசினாள் " அம்மாவுக்கு மூச்சு தட்டுகிறது - உங்கள் பெயரைத்தவிர அவளின் உதடுகளில் வேறு எந்த வார்த்தையுமே வருவதில்லை . கஞ்சியை வேண்டா வெறுப்பாகத்தான் குடித்தாள் - அப்போலோ விற்கு அழைத்து செல்ல வேண்டும் - இன்று சீக்கிரம் வர முடியுமா ?"

    " சரோ என் நிலைமை தெரியாமல் பேசுகிறாய் - இன்று ஆர்டர் வரும் நாள் - இங்கு நான் இருந்தாக வேண்டும் - chairmanக்கு பதில் சொல்ல வேண்டும் - அம்மாவை அழைத்துச்செல் - 3மணிக்கு மேல் வருகிறேன் " போனை தொடர விரும்பவில்லை .

    மனம் பின்னோக்கி நகர்ந்தது - அம்மா என்னை தந்தையின் மறைவு தெரியாமல் வளர்த்தவள் - அவளுக்காக அவள் என்றுமே வாழ்ந்தவள் இல்லை - எவ்வளுவு தியாகங்கள் செய்திருப்பாள் - 18 வருடங்களுக்கு பிறகு நான் பிறந்தேனாம் - அவள் இருந்த தெருவில் அவள் பெயரை சொன்னால் யாருக்குமே தெரியாது - ஒ அந்த மலடியா - இப்படியே வலது பக்கம் போய் அப்பால ---- இப்படித்தான் அவளை அடையாளம் கண்டார்கள் . நான் பிறந்தவுடன் அவள் முகத்தில் கர்வம் நிரந்தரமாக குடி கொண்டது .

    ஒவ்வொரு முறையும் என் வளர்ச்சிக்கு பின்னால் , வெற்றிக்கு முன்னால் அவள் தான் இருந்தாள் - என் ஆபீஸ் பிரச்சனைகளையும் அவளிடம் தான் பகிர்ந்து கொள்வேன் , பிறகுதான் என் சரோவிடம் .
    அவளுக்கு தெரியும் - ஒரு மகத்தான ஆர்டர் எனக்கு இன்று கிடைக்கும் நாள் என்று.

    எண்ண அலைகளை என் secretary கலைத்தாள் - " சார் உங்களை பார்க்க உங்கள் அன்னையார் வந்திருக்கிறார் "-- அம்மாவா , நம்ப முடியவில்லை - சரோ சொன்னாளே உடம்பு முடியவில்லை என்று - எப்படி என் ஆபீஸ்க்கு வந்தாள் , எதற்க்காக - அலை மோதின கேள்விக்குறிகள் ---

    விழுந்தடித்துக்கொண்டு அம்மாவை என் cabin க்கு அழைத்துவந்தேன் - பல தடவைகள் அவள் இங்கு வந்திருக்கிறாள் - தனியாகவும் , என் மனைவியுடனும் - அம்மாவிருக்கு என் cabin ரொம்ப பிடிக்கும் - அவள் இருக்கும் போட்டோ என் குடும்பத்துடன் , அப்பாவின் போட்டோ , சுற்றி இருக்கும் வேலைப்பாடுகள் நிறைந்த அறை . கூப்பிட ஆட்கள் , மனதை சாந்தப்படுத்தும் A /C . சரோவின் கைகளால் சமைத்த அருமையான உணவின் வாசனை ------- பின்னொலியில் MS இன் இனிய குரல் மிருதுவாக - அம்மாவிற்கு பிடித்த பாடல் "குறை ஒன்றும் இல்லை கோவிந்தா "

    " என்ன அம்மா - இவ்வள்ளவு தூரம் - சரோ உடம்பு சரியில்லை என்றாளே -- நானே வருவதாக இருந்தேன் .... "

    இல்லை சேகர் - உன்னை காலையில் பார்க்க முடியவில்லை - சீக்கிரமாக போய் விட்டாய் - வரேன் அம்மா என்று இன்று சொல்லிக்கொள்ளவே இல்லை - மனது சரியில்லை - உனக்கு ஆர்டர் வேறு கிடைக்கவேண்டும் , பார்த்துவிட்டு போகலாம் என்று டிரைவரிடம் சொல்லி ( சரோவிற்கு தெரியாது நான் இங்கு வந்தது --) அழைத்துச்செல்ல சொன்னேன் .

    சேர்மன் அழைப்பதாக secretary சொல்ல , அம்மாவை இருக்க சொல்லிவிட்டு விரைந்தேன் - 10 நிமிடங்கள் - திரும்பினேன் அம்மாவை ஆஸ்பத்திரி உடனே கூட்டி செல்ல வேண்டும் என்ற நினைப்புடன் ------

    " என் cabin காலியாக இருந்தது - அம்மாவை தேடினேன் - யாருமே பார்க்காத என் அம்மா அங்கு எப்படி இருந்திருக்க முடியும் ? என் மன பிரமையா ???

    கடிகாரம் மூன்று மணியை எட்டிப்பிடித்தது - சரியாக 3.30 - போன் மீண்டும் பாடியது " சேகர் வாழ்த்துக்கள் ! ஆர்டர் கிடைத்துவிட்டது " ஒன்றுமே காதில் விழவில்லை - இதுவும் கனவோ ?? chairman என் அறையில் வந்து என்னை கட்டி தழுவிக்கொள்ளும் போது தான் இது உண்மை என்று தெரிந்தது - என் நீண்ட உழைப்பும் , கனவும் பலித்தது , என் அம்மாவின் ஆசி ஒன்றினால் மட்டுமே ..

    " சேகர் இன்று முதல் நீயும் போர்டு member . அதற்கும் என் வாழ்த்துக்கள் " chairman குரல் எங்கோ ஒலித்தது . சரோவின் போன் - " அம்மா வை அப்போலோவில் அட்மிட் செய்துவிட்டேன் - மருத்துவர்கள் எதுவும் சொல்ல மறுக்கிறார்கள் - பயமா இருக்கு - சீக்கிரம் வாருங்கள் ---- சரோ -- போன் வைக்கும் சத்தம் ....

    காரை எடுத்துக்கொண்டு ஓடினேன் --- ICU -- அம்மா வின் வெறும் எலும்புகளே உள்ள அந்த உடலில் பல tubes இணைக்கப்பட்டுள்ளன - அம்மாவை யாரோ கைபிடித்து இழுக்கிண்டார்கள் - போக மறுக்கிறாள் . என்னை பார்க்க வேண்டுமாம் ...

    அம்மாவின் கைகளை தடவித்தருகிறேன் -- அம்மா ஆர்டர் கிடைத்து விட்டதம்மா - இன்று முதல் உன் மகன் ஒரு board of director ரும் கூட ..... அம்மா கண்ணைத்திறந்து பார் - உன் சேகர் --- என்னோடு பேசும்மா ---- கண்களை ஒரு முறை திறக்கின்றாள் - உதடுகளில் ஆசிர்வாதங்கள் முட்டிக்கொண்டு வருகின்றன - சேகர் நல்லா இரு - எல்லோருக்கும் உதவியாக இரு --- கடைசி வார்த்தைகள் ----- congratulation mesages எல்லாம் ஒரு நொடியில் condolence மெசேஜ் ஆக மாறியது

    ஆர்டரின் நகலும் , என் உத்தியோக உயர்வுக்கான letter ம் அவள் காலடியை சரணடைகின்றன .இந்த புண்ணியவதியின் பாதங்களை விடவா நாங்கள் உனக்கு உயர்ந்தவர்களாக போய் விட்டோம் என்று என்னைப்பார்த்து சிரித்தன ..




    Last edited by g94127302; 5th June 2015 at 12:30 PM.

  2. Likes rajeshkrv, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #672
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 45

    ஜனணியின் தொடர்ச்சி :

    "அம்மா "- உதடுகள் அருமையாக இணையும் வார்த்தை - நீ இருக்கும் போது இணைந்தன - இன்று வெறும் "மா " என்று உதடுகளை பிரிக்கும் வார்த்தைகள் தானே என் நாக்கில் இருக்கின்றன -----

    " வேறோர் தெய்வத்தை போற்றவில்லை, வேறோர் தீபத்தை ஏற்றவில்லை அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன், உன்னை அம்பிகையாய் தூக்கி வைத்தேன் "


  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes gkrishna, rajeshkrv liked this post
  6. #673
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 46

    ஜனணியின் தொடர்ச்சி :

    மஞ்சள் வெயில்
    மாலையிட்ட பூவே
    மஞ்சள் வெயில்
    மாலையிட்ட பூவே

    உன் வண்ணம்
    உந்தன் எண்ணம்
    நெஞ்சின்
    இன்பம்

    மஞ்சள் வெயில்
    மாலையிட்ட பூவே

    பொன்னின் தோற்றமும்
    பூவின் வாசமும்
    ஒன்றிணைந்து தேகமோ

    பிள்ளை மொழி அமுதமோ
    பிஞ்சு முகம் குமுதமோ

    பூமுகம்
    என் இதயம் முழுதும்
    பூவென
    என் நினைவைத்தழுவும்
    நெஞ்சில் கொஞ்சும்

    மஞ்சள் வெயில்
    மாலையிட்ட பூவே

    மேகம் நீர் தரும்
    பூமி சீர் தரும்
    தெய்வம் நல்ல பேர் தரும்
    இன்பப் புனல் ஒடிடும்
    இன்னிசைகள் பாடிடும்
    வாழ்வெல்லாம் நம் உறவின்
    நலங்கள்
    நாள் எல்லாம் உன் நினைவின்
    சுகங்கள்
    வாழும்
    நாளும்

    ( மஞ்சள் வெயில்)
    திரைப்படம் : நண்டு

    Last edited by g94127302; 5th June 2015 at 08:14 AM.

  7. Likes vasudevan31355 liked this post
  8. #674
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 47

    ஜனணியின் தொடர்ச்சி :


    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    நீ எங்கே இனி நான் அங்கே
    என் சேய் அல்ல தாய் நீ
    அழகிய கண்ணே உறவுகள் நீயே
    .
    அழகிய கண்ணே.....
    .
    சங்கம் காணாதது தமிழும் அல்ல
    தன்னை அறியாதவள் தாயுமல்ல
    சங்கம் காணாதது தமிழும் அல்ல
    தன்னை அறியாதவள் தாயுமல்ல
    என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
    நான் கண்டேன் வெள்ளி நிலா
    .
    அழகிய கண்ணே.....
    .
    சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
    அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
    சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
    அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
    என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
    என் தெய்வம் மாங்கல்யம் தான்
    .
    அழகிய கண்ணே.....
    .
    மஞ்சள் என்றென்றும் நிலையானது
    மழை வந்தாலுமே கலையாதது
    மஞ்சள் என்றென்றும் நிலையானது
    மழை வந்தாலுமே கலையாதது
    நம் வீட்டில் என்றும் அலைமோதுது
    என் நெஞ்சம் அலையாதது
    .
    அழகிய கண்ணே.....
    .
    திரைப்படம் : உதிரிப்பூக்கள்,
    வெளியான ஆண்டு : 1979,
    இசை: இளையராஜா,
    பாடியவர்: எஸ்.ஜானகி.

  9. #675
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனணி தொடர்வாள்

  10. #676
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    திரையில் பக்தி-3

    ஒரு படம் வருடக்கணக்காக ஓடியது என்றால் அது ஹரிதாஸ் மட்டும்தான்.

    தியாகராஜ பாகவதர் அந்த பெண் பித்தன் வேடத்தில் ராஜகுமாரியுடன் ரொமான்ஸ் ஆகட்டும் பின் திருந்தி அடிபட்டு பக்தி ரசம் சொட்ட சொட்ட தெய்வபித்து பிடித்தவராக மாறுவதாகட்டும் எல்லாமே அருமை.

    எப்படி மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடலை மறக்க முடியாதோ, அதே போல் கிருஷ்ணா முகுந்த முராரே பாடலை மறக்கவே முடியாது.
    தந்தைக்கு காலை அமுக்கிக்கொண்டே இவர் பாடும் பாடல் மெய் சிலிர்க்கத்தான் செய்யும்.... இன்று கேட்டாலும் பக்தி ரசம் சொட்டும்


  11. Likes uvausan, gkrishna, chinnakkannan liked this post
  12. #677
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கவிஞனும் கண்ணனும்


    (சின்ன) கண்ணா, வருகிறேன் உனைத் தேடி!

    காதல் வயப்பட்டவனுக்கு கண்டதெல்லாம் சொர்க்கம் என்பார்கள். அவ்வளவு சந்தோஷம் அவன் மனதை நிறைத்திருக்கும்.

    மனதைப் பறிகொடுத்தல் காதல் ஒன்றில் மட்டுமே சாத்தியம். சாதாரண மனிதர்களுக்கே, அல்ப ஜீவன்களுக்காகவே இவ்வாறு மனதை இழப்பதில் சந்தோஷம் என்றால் அந்த பரமாத்மாவிடம் காதல் கொண்டால், அவனுக்கே ஆளாமே என்றால், அவனாகவே ஆகிவிட்டால் எத்தனை சந்தோஷம் என்று யாராலாவது அளந்து சொல்ல முடியுமா?

    இதுவே சிற்றின்பத்துக்கும் பேரின்பத்துக்கும் உண்டான வித்தியாசம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    அமரகவி பாரதி தன்னை பெண்ணாக பாவித்து அவள் ஒருவன் மேல் மையல் கொள்கிறாள். அந்த ஒருவன் வேறு யாரோ அல்ல. புருஷோத்தமனான கண்ணன். அவனே காதலன். அந்த காதலில் அவள் படும் உணர்ச்சிகளை உயிருள்ளவையாக்கி மெருகூட்டிய தமிழில் பருகும்போது கிடைக்கும் ஆனந்தம் தான் உண்மையிலே பரமானந்தம்.

    ''என் உயிருக்குயிரான தோழியரே, என் மனத்தை பிளந்து உள்ளே ஓடும் உணர்ச்சிகளை கொட்ட முடியாமல் துடிக்கின்றேன்.

    ​நேரம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. தூக்கம் நெருங்கவில்லையே. நீங்கள் இருப்பதும் நினைவில் இல்லையடி. கும்மாளமடிக்கிரீர்கள். எனக்கு ஏனோ சந்தோஷம் இல்லையே. இரவில் திருடும் திருடன் கூட தூக்கத்தில் ஆழ்ந்து கீழே பொத்தென்று விழும் நேரம் ஆனபோதிலும் பொட்டு தூக்கம் கூட என்னை அணுகவில்லையே.

    வீட்டில் என்ன கோலாகலம் நடத்துகிறீர்கள். சத்தம் ஊரைக் கூட்டுகிறது. உங்களது உற்சாக கூச்சல். வீட்டில் அம்மா என்று ஒருவள் இருக்கிறாள் என்று கூட ஞாபகம் இல்லாமல் போய் விட்டதே.

    உங்கள் பேச்சில் சாரம் இருக்கிறது என்கிறீர்கள். எனக்கோ சலிப்பு தான் வருகிறது.

    எவ்வளவோ நாள் நானும் பொறுத்திருந்து பார்த்தாகி விட்டது. நாளுக்கு நாள் இது அதிகமாகத்தான் போகிறது.

    கூனன் ஒருவன் வந்தான். மெதுவாக நாணிக் கோணி பின்னலிட்ட கொண்டையில் மலர்கள் கலைந்து கீழே விழுமாறு இழுத்தான் என்கிறீர்கள்.

    ஒரு யானை மதம் பிடித்து வேகமாக பிளிரிக் கொண்டு வஞ்சியின் அருகில் ஓடியது, அவள் அலறிக்கொண்டே மூர்ச்சையுற்றாள் என்று கதை சொன்னீர்கள்.

    வெண்ணைப் பானையிலிருந்த அத்தனை வெண்ணையும் தோழி ரோகிணி விழுங்கியதால் வயிற்று நோய் தாங்கவில்லை என்றீர்கள். சிரிப்பு வரவில்லை.

    ​பண்ணையில் வேலையா யிருந்த ஒரு ​உழவன் மனைவியை பத்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டு ஆசையாய் முத்தமிட்டார்கள் என்றீர்கள்.

    ​ஒரு பெண்ணுக்கு சோசியம் பார்த்து சொல்கிறேன் என்று ஒருவன் சொல்ல கை நீட்டினாள் . அவள் கையைப் பார்த்து விட்டு உனக்கு 40 அரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள வரப்போகிறார்கள் என்று ஒரு வாய் கஞ்சி குடித்து விட்டு அவளுக்குப் பரிசம் போட்டம் மாமன் வருவதற்குள் அந்த ஜோசியனின் நல்ல காலம் அவன் சென்றதை சொன்னீர்கள்.

    ​ஒரு பெண்ணோடு கோபத்தில் மற்றவள் சண்டை போட்டாள் என்றீர்கள்.

    ​வித்தைகள் கற்றவள் என்று ஒரு பெண்ணைப் பற்றியும் மேற்கு திசையில் அவ்வூர் மக்கள் பேசும் பல பாஷைகள் அவள் பேசுவாள் என்றெல்லாம் மூட்டை மூட்டையாக பொய் சொன்னீர்கள்.

    எனக்கு ஏதடி தூக்கம்?

    உங்களால் எனக்கு இம்சையாக தான் இருக்கிறது.

    உங்கள் வாத்தியங்களை மூடி மூலையில் சார்த்துங்கள். வீணை, தாளங்கள் எனக்கு வேண்டவே வேண்டாம். கண்ணுக்கு தெரியாமல் எங்காவது கொண்டு வையுங்கள்.

    கதவு ஜன்னல் எல்லாம் சார்த்துங்கள். முணுக் முணுக் என்று ஒரு சிறு தீபம் மட்டும் எரியட்டும் அதை மேல் பக்கம் சுவற்றில் மாடத்தில் வைத்து விட்டு இங்கிருந்து எல்லோரும் இடத்தைக் காலி செய்யுங்கள். உங்கள் வீட்டை பார்க்கபோங்கள்.

    ​கண்ணா நீ என் மனதை ஆக்ரமித்த போது என் மனம் வேறு எதிலும் செல்லவில்லை என்பது புரிகிறதா?

    தோழிகள் எல்லோரும் சென்று விட்டார்கள்.

    ​என் நண்பி ஒருத்தி தூக்கமுன் கண்களை தழுவட்டுமே என்று அடிக்கடி பாடுவாள். என் கண்கள் தூக்கத்தை தழுவுமா? ​

    ​கண்ணா உன்னை இன்றிரவு கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் அதற்கு முன்னாடி தூக்கம் வருமா நீயே சொல்?

    வா கண்ணா வா, என் நண்பிகள் யாரும் இல்லை. எல்லோரையும் அனுப்பிவிட்டேன்.

    என்ன சொல்கிறாய் நீ? என்னை வரச்சொல்கிறாயா கண்ணா?

    இதோ வருகிறேன். உன்னைப் பார்க்க ஓடோடி வருகிறேன்.? சொல் எங்கே வரவேண்டும்?

    என்னது? கடைத்தெருவில் கிழக்கே வெண்கல பாத்திரங்கள் செய்து விற்கும் வாணிகர் கடை வீதி இருக்கிறது. அங்கே, அந்த தெரு முனையிலா? எதிர்ப்பக்கம் இருக்கும் வெளி ஓரத்திலா?

    அங்கே வந்தால் உனைக் கண்ணா, நான் காண முடியுமா, இதோ பறக்கிறேன்.

    என் கண்கள் இந்த நிலையில் தூங்குபவையா?

    உன்னைக்கண்டு இரு கரங்களாலும் கட்டி அணைப்பதற்கு முன் தூக்கம் வருமா ??

    இந்த அழகான கற்பனையை தெள்ளு தமிழ் கவிதை வடிவில் படிக்கிறீர்களா? நான் வெறுமே தகர குவளையில் காற்று ஏற்படுத்துகிற சப்தத்தைப் போல ஏதோ எழுதினேனே தவிர இந்த கவிதை தரும் இன்பம் என் குவளையில் ஏது? பாரதியார் பாரதியார் தான்.


    கண்ணன் - என் காதலன்

    உறக்கமும் விழிப்பும்


    ​​
    நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி - உங்கள்
    நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
    சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே - என்ன
    தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
    ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! - அன்னை
    ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
    சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், - மிகச்
    சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . ... 1

    நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது
    நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
    கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
    கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
    ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
    அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
    பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
    பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், ... 2

    பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
    பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
    நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
    நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
    கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
    கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
    வித்தைப் பெயருடைய வீணியவளும்
    மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், ... 3

    எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
    என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
    சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
    தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
    மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
    மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
    நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
    நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். ... 4

    (பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

    கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
    கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
    பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
    பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
    வெண்கல வாணிகரின் வீதி முனையில்
    வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
    கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
    கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? ... 5

    gkrishna

  13. Likes kalnayak, chinnakkannan liked this post
  14. #678
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ரவியின் ஜனணி படிக்கும் போது மீண்டும் ஒரு ஜனனம் எடுத்தது போல் இருக்கிறது.தொடருங்கள் .வாழ்த்துகள்.

    ராஜேஷ் இன் பக்திரசம் படித்த உடன் மனதில் தோன்றிய ஒரு உணர்வு . நெல்லை மாவட்டத்தின் கிராமங்களின் பெயர்களில் கூட பக்திரசம் ததும்பியது...வாசுதேவநல்லுர் காசிதர்மம் பெரியகோவிலன்குளம் சிவசைலம் கோவிந்தபேரி ஸ்ரீவைகுண்டம்,ஆழ்வார் திருநகரி,வீர ராகவ புரம் பாபநாசம் தென்காசி ..எல்லா மாவட்டங்களிலும் இம்ம்மதிரி நிச்சயம் இருக்கும்
    gkrishna

  15. Thanks uvausan thanked for this post
    Likes rajeshkrv, chinnakkannan liked this post
  16. #679
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ராஜேஷின் பக்திரசம் ஏற் 'படுத்திய' தாக்கம் -

    ''உள்ளங்கவர் கள்வன்......''

    நம்மில் நிறைய பேர் பிறக்கு முன்பே தியாகராஜ பாகவதர் கொடி கட்டி பறந்தார். தமிழ் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான். அதோடு அவருடைய சிறப்பு அம்சம், முகம் கோணாமல் கந்தர்வ கானமாக பாடுவார். பாகவதரின் நடிப்பை விட பாடல்களுக்காகவே படங்கள் வருஷக்கணக்கில் ஓடின என்றால் அதுவே உண்மை. ஒரு படத்தில் குறைந்தது 25-30 பாட்டாவது இருக்கும். ஒவ்வொரு படமும் 3 மணிக்கு குறையாமல் ஓடும். கொடுத்த காசுக்கு ரசிகர் கள்மனம் நிறைந்து பாடிக்கொண்டே வீடு திரும்புவார்கள்.

    எனக்கு தெரிந்து ரிக்ஷா வண்டி இழுத்துக்கொண்டு வரும் ஒருவர அவரது பெயர் கூட கோவிந்தசாமி அல்லது கோபால சாமீ

    அவரின் favourite 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி '' பாடிக்கொண்டு தான் எங்களை ரிக்ஷாவில் இழுத்துச் செல்வார். கர்நாடக சங்கீதம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவ MKT ஒரு மூல காரணம் எனலாம். தமிழ் நாட்டில் முக்கால் வாசி பேர் ஜில்பா (பாகவதருடைய தலை முடி மாதிரி பின் கழுத்து வரை ) சிகை அலங்காரம் செய்து கொண்டு திரிந்தார்கள்.

    முதல் வரிசை தெலுங்கு பாட்டு மட்டுமே பாடிய கர்நாடக இசை வித்வான்களுக்கு பாகவதர் மேல் உள்ளூர ஒரு பொறாமை உணர்ச்சி இருந்தது. காரணம் அவரது காந்த சக்தி தோற்றம், நெருங்க முடியாத கணீர் குரல், ஜன ஆகர்ஷணம். ஒரு சரியான ஜோடியாக பாபநாசம் சிவன் பாடல்கள் அவருக்கு அமைந்தது வரப் பிரசாதம்.

    இது இருக்கட்டும்.



    சிந்தாமணி என்று ஒரு படம். சிந்தாமணி என்கிற வேசியாக நடித்தவர் அச்வத்தம்மா (நடிகை அஸ்வதம்மா புகைப்படம் கிடைக்குமா என்கிற இழுத்து போர்த்திய ஆந்திர பெண்மணி. அவள் படத்தை அனேக வீடுகளில் மாட்டி வைத்து ரசித்த காலம். மன்னார்குடியில் ஒரு வீட்டில் அரிசி குதிரின் மேல் அவள் படம் தொங்கியது கவனம் இருக்கிறது.

    இணையத்தில் கிடைத்த நடிகை அஸ்வதம்மா புகைப்படம்




    பாகவதர் தான் பில்வ மங்கள். பில்வ மங்கள் யாரா?

    வேசி மீது கண்மூடித்தனமாக மையல் கொண்ட ஒரு வாலிபன். ஒரு இரவு. கொட்டும் மழையில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் சிந்தாமணி வீட்டுக்கு போகவேண்டும் என்ற ஈர்ப்பு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் புரண்டோட அங்கு மிதக்கும் ஒரு பிணம் தோணியாகிறது. அக்கரை சேர்ந்தாலும் வேசி வீடு வாசல் சார்த்தபட்டிருக்கிறதே?.

    உப்பரிகையில் அவள் குரல் கேட்க எப்படி மேலே செல்லலாம் என்று யோசிக்கும் பில்வமங்கள் ஒரு கயிறு கிளையில் தொங்குவதை கவனித்து அதைப் பிடித்துக்கொண்டு மரம் ஏறி அதன் வழியாக அவள் உப்பரிகையில் செல்கிறான்.

    ''ஏன் இந்த நேரம் வந்தாய்? ஏன் உன்மீது இவ்வளவு ரத்தம்? யாரையாவது கொலை செய்தாயா?''

    '' நானா? கொலையா ?என் மீது ரத்தமா? ''

    பிலவ மங்கள் திகைக்கிறான். சிந்தாமணி யோடு அவனும் வெளியே வந்து பார்க்க பெரிய பாம்பு ஒன்று செத்து உப்பரிகை அருகே கிடக்கிறது. அதன் ரத்தம் அவன் மீது எப்படி வந்தது?

    பில்வ மங்கள் நடந்ததை சொல்கிறான். தீராக் காமம் காதல் வயப்பட்டு இரவு நேரம், மழை, வெள்ளம், பாம்பு எதையும் லட்சியம் செய்யாமல், ஒரு பிணத்தையே தோணி யாக யாக உபயோகித்து பாம்பைக் கயிறாக உபயோகித்து அவளை அடைந்தது அறிகிறாள்.

    அழியும் இந்த தேகத்தில் மீது இத்தனை மோகம் கொண்ட நீ அழியாத பரந்தாமன் (அந்த வாசுதேவன்,கோபாலன் ) மீது துளியாவது மனதை ஈடுபடுத்தினால் எத்தனை புண்யம் பெறுவாய். வலுக்கட்டாயமாக பாபத்தை சேர்த்து மூட்டை கட்டிக்கொள்கிறாயே என்று அவனுக்கு இதமாக சொல்கிறாள். கல்லும் கரையும் அவள் பக்திப் பேச்சு பில்வமங்களை சிதைத்து ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன் உருவாகிறான்.

    பின்னர் லீலா சுகர் என்ற பெயர் கொண்டு அசாத்திய மாக ஒரு 108 ஸ்லோகங்கள் உருவாகிறது. அதுவே ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ரிதம்.

    எனது நண்பர் ஒருவர் மும்பையிலிருந்து இந்த புத்தகத்தை நேற்று எனக்கனுப்பி ரசியுங்கள் என்று சொல்லுமுன்பே அசை போட ஆரம்பித்ததன் விளைவே இந்த பூர்வ பீடிகை.

    ஜெய தேவர் அஷ்டபதி, கீத கோவிந்தம் என்னை எப்படி உலுக்கியதோ அதைப்போலவே இந்த புத்தகமும் என்னை ஈர்த்து விட்டது. இரு கண்களில் எந்த கண் உயர்ந்தது?

    என்னை சிந்தாமணி பாடல்களால் கவர்ந்த MKT ஆத்மா சாந்தி பெறவும், மும்பை நண்பர் S விஸ்வநாதன் ஆயுர் ஆரோக்யத்துடன் நீண்டு வாழவும் அந்த கிருஷ்ணனையே ''சித் சோரை'' யே பிரார்த்திக்கிறேன்.

    சிட்சோர் யார் என்று புரியவில்லையா ?சித் = சித்தம் சோர் = கள்ளன் . பில்வ மங்கள் இப்படித்தான் லீலா சுகராக மாறியபின் கிருஷ்ணனை அழைக்கிறார். தமிழில் அதி அற்புதமாக இதையே ''உள்ளங்கவர் கள்வன் ' என்று அழைக்கிறோம்.



    Last edited by gkrishna; 5th June 2015 at 11:26 AM.
    gkrishna

  17. Likes uvausan liked this post
  18. #680
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாங்க கிருஷ்ணா ஜி.. பில்வ மங்கள் பற்றி அடியேன் எழுதியிருந்த போஸ்டிற்கான லிங்க்..

    http://www.mayyam.com/talk/showthrea...1%3B-3/page344

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •