Page 230 of 400 FirstFirst ... 130180220228229230231232240280330 ... LastLast
Results 2,291 to 2,300 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2291
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    22

    'கல்யாண ராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும்'



    இன்றைய பாலா தொடரில் வந்தே விட்டது. முரளி சார் ஆசையாகக் கேட்ட 1970-ன் 'மாணவன்' வந்தே விட்டான். தேவர் தயாரித்த 'மாணவன்' இவன். ஜெய்சங்கர் மாணவனாம்.



    முத்துராமன், லஷ்மி, சௌகார், (கொஞ்ச நாளாகவே சௌகார் மயமாகவே இருக்கிறது) சுந்தரராஜன், வி.எஸ்.ராகவன், மாஸ்டர் கமலஹாசன் வாலிப கமலஹாசனாக, நாகேஷ், அசோகன், தேங்காய், சச்சு, ஜெயகுமாரி, ராதாபாய் என்று பெருந்திரளாக நட்சத்திரங்கள். தேவர் வேறு ஒழுங்காக பணத்தை செட்டில்மெண்ட் செய்து விடுவார்.

    கதை வசனம் பாலமுருகன். பாடல்கள் வாலி மற்றும் திருச்சி தியாகராஜன். இசை சங்கர்-கணேஷ் இரட்டையர்கள். இயக்கம் வழக்கம் போல எம்.ஏ.திருமுகம்.

    மிருகங்கள் அதிகம் இல்லாத தேவர் படம். ஆனாலும் யானை உண்டு.

    தேவர் பிலிம்ஸ் கதை பற்றி சொல்ல வேண்டுமா?...

    ஏழை சௌகார். சூதாட்டக் கணவன் அசோகன். சூதாட்டத் தகராறில் ஒரு ஆளை தெரியாமல் குத்திக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போகிறார். சௌகாரின் பையன் நன்றாகப் படிப்பவன். சௌகார் வேலை செய்யும் வீட்டு முதலாளி வில்லன் ஓ.ஏ.கே.தேவர் 'வேலைக்காரி மகனுக்கு படிப்பு எதுக்கு? என்று கேலி பேச, அதையே சவாலாக ஏற்று 'என் மகனைக் கலெக்டர் ஆக்குகிறேன்' என்று அவரிடம் சவால் விட்டு சென்னை சென்று ஒரு ஸ்கூலில் ஆயாவாகச் சேர்ந்து கஷ்டப்பட்டு பையனைப் படிக்க வைக்கிறார். பையன் வளர்ந்து ஜெய் ஆகிறான்.

    அம்மாவுக்கு கஷ்டம் தரக் கூடாதே என்று ஜெய் படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுகிறார். சாரணர் இயக்க மாணவனாக நடு ரோட்டில் டிராபிக் கண்ட்ரோல் செய்கிறார். வழக்கம் போல பணக்கார லஷ்மியுடன் மோதல் செய்து பின் காதல் புரிகிறார். எம்.ஏ படித்து மாகாணத்தில் முதல் மாணவனாகிறார். அவர் படித்த கல்லூரியிலேயே லெக்சரர் வேறு ஆகிறார். வில்லன் மாணவன் ஒ.ஏ.கே தேவரின் முத்துராமனைக் கண்டிக்கிறார். சண்டை போடுகிறார். கல்லூரியை விட்டு நீக்குகிறார்.

    முத்துராமன் பழி வாங்க மறைந்திருந்து ஜெய்யைக் கொலை செய்யத் துணிய, வேறு ஒரு மாணவர் ஜெய்க்குப் பதிலாக இறந்து போகிறார். அந்த கொலைப்பழி ஜெய் மேல் விழுகிறது. ஜெய் ஜெயிலுக்குப் போகிறார். பின் முத்துராமன் உண்மைக் குற்றவாளி என்று நாகேஷ் மூலம் தெரிய, ஜெய் விடுதலை ஆகிறார். முத்துராமன் ஆயுள்கைதி ஆகிறார்.

    அப்புறம் ஜெயசங்கர் அம்மாவின் கலெக்டர் சபதத்தை நிறைவேற்ற ராப்பகலாகப் படிக்கிறார். கலெக்டரும் ஆகிறார். வில்லன் ஒ.ஏ.கே தேவர் தன் பையன் முத்துராமன் ஜெயிலுக்குப் போனதால் ஜெய்யை ஒழிக்க சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார்.

    ஜெய் கலெக்டர் ஆகி ஒருமுறை ஜெயில் விசிட் போகிறார். அங்கே திருந்திய முத்துராமனைப் பார்க்கிறார். அங்கு கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அசோகன் முத்துராமன் மூலமாக ஜெய் தன் மகன் என்று தெரிந்து கொள்கிறார். விடுதலை ஆகி வெளியே வருகிறார்.

    ஜெய் கலெக்டர் ஆனதால் ஊர் மக்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். அந்த விழாவில் வில்லன் ஒ.ஏ.கே தேவர் ஜெயசங்கரை ஒழித்துக் கட்ட வேலை செய்ய, ஜெயிலில் இருந்து வந்த அசோகன் தன் பிள்ளை ஜெய் உயிரைக் காப்பாற்றி விடுகிறார். தாயின் சபதம் நிறைவேறியது. ஊரே சௌகாரை பெருமையாக நினைக்கிறது. குடும்பம் ஒன்று சேர்ந்து நமக்கு நிம்மதியை அப்போதுதான் தருகிறது.

    படம் பார்த்து முடித்ததும் நீண்ட களைப்பும், ஆயாசமும் ஏற்பட்டு களைப்பு தீர நமக்கு ஒரு கப் பாயாசம் தேவை. தேவரின் கொடுமைகளில் ஒன்று.


    ஜெய்சங்கரும், லஷ்மியும் பாடும் பாடலான இந்தத் தொடரின் பாடல் 'கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்' ஒன்று இப்படத்தின் மிகப் பெரிய ஆறுதல். பாடல் படமாக்கலில் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. அஸ் யூஷுவல்தான்.

    'சின்ன சின்ன பாப்பா' (சௌகார் குழந்தைகளுக்கு புத்திமதி)

    பாடலும்

    குட்டி பத்மினி வாலைக் குமரியாக, கமல் பச்சிளம் பாலகனாக, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே ஆடிப் பாடும்,

    'விசிலடிச்சான் குஞ்சுகளா'

    பாடலும் பிரசித்தம். அப்போது இருந்த நிலையில் பலர் இப்பாடலை முகம் சுளித்து நான் பார்த்திருக்கிறேன். இப்போது அது ஒன்றுமே இல்லை.



    சங்கர் கணேஷ் அமர்க்களம் செய்வார்கள் இந்தப் பாடலில். உற்சாகமான ஆரம்ப மியூசிக் பாடல் நெடுகிலும் தொடரும்.

    'ஆஹா ஹா ஹா ஹா' என்று பாலா பரவச ஹம்மிங் தர, பதிலுக்கு சுசீலா 'லல்லலல்லலா...லல்லலல்லலா' என்று பட்டை கிளப்ப, 'ஒ.. ஹோ ஹோ' என்று மீண்டும் பாலா ஓஹோவென்று பாட, சுசீலா மீண்டும் 'லல்லலல்லலா' முடித்துவிட்டு அப்படியே அதனுடன் 'ஆஹா ஹா ஹா' வையும் அருமையாக இணைத்துவிட, காலம் முழுதும் கேட்டுக் கொண்டிருக்க ஒரு அருமையான பாடல் இந்த 'மாணவன்' படத்தின் மூலம் நமக்குக் கிடைத்தது. பாலாவின் தொடர்ச்சியான 'லெல்லலெல்லலா'...லெல்லலெல்லலா' வெல்லத்தின் இனிப்பு. மனிதர் பின்னி விடுவார் பின்னி.

    சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்களில் (அதுவும் பாலா சுசீலா என்றால் இரட்டையர்கள் இணையில்லா உற்சாகம் கொள்வார்கள். எத்தனை பாட்டுக்கள் இது மாதிரி! வாவ்! கிரேட்!) மிகவும் குறிப்பிட வேண்டிய பாடல் இது. பாலா சுசீலா இருவரின் ஆரம்ப ஹம்மிங் மட்டுமே போதும். பாடலை முழுவதும் கேட்கவே வேண்டாம். ஹம்மிங் மட்டுமே அவ்வளவு அருமை.

    தேவர் மனம் மகிழவே,

    'மின்னுகின்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்
    மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்'

    வரிகள் சேர்க்கப்பட்டுள்ளது நன்றாகத் தெரியும். வேல், மயில் என்று தேவர் மனம் குளிர்ந்திருப்பார்.

    நெடுந்தூரப் பயணம் பேருந்தில் மேற்கொண்டால் வழியில் பெரிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டுகளில் பல சிறுவர்கள் நாம் கொறிப்பதற்கு ஏதாவது ஒன்றை விற்பார்கள். அப்படி ஒரு முறை நான் வறுத்த முந்திரி என்று ஒரு பாக்கெட்டைத் தெரியாமல் வாங்கித் தொலைத்து விட்டேன். பிரித்து சாப்பிட்டால் எல்லா முந்திரியும் ஒரே சொத்தை. வாயெல்லாம் வீணாகி விட்டது. இறுதியில் ஒரே ஒரு முழு முந்திரி ஒன்ற ஜோராக செக்கச் செவேல் என்று கையில் பட்டது. அதை சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்ட். அந்தப் பாக்கெட்டில் அந்த ஒரு முந்திரிதான் நன்றாக அவ்வளவு அம்சமாக இருந்தது. என் வாழ்நாளில் சொத்தைகளுக்கு நடுவே தேவாமிர்தமாக வாய்த்த அந்த முந்திரியை மறக்கவே முடியாது. அது போலத்தான் இந்த சொத்தைப் படமும் அதில் முந்திரி போல் சுவை அளித்த முரளி சார் விரும்பிய பாடலும்.




    ஆஹா ஹா ஹா ஹா

    லல்லலல்லலா...லல்லலல்லலா

    ஒ.. ஹோ ஹோ

    லல்லலல்லலா...லல்லலல்லலா ஆ ஹா ஹா ஹா ஹா

    லல்லலல்லலா.. லல்லலல்லலா

    ஒ...ஹோ ஹோ ஹோ

    லெல்லலெல்லலா'...லெல்லலெல்லலா

    ஒஒஒஒ.....ஒ

    கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
    காதல் வந்த நேரம் என்னவோ

    வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
    தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ

    கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
    காதல் வந்த நேரம் என்னவோ

    வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
    தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ

    நாணலென்னும் காலெடுத்து முன்னால் வர
    நூறு வகை சீதனமும் பின்னால் வர

    நாணலென்னும் காலெடுத்து முன்னால் வர
    நூறு வகை சீதனமும் பின்னால் வர

    நாள் மணநாள் தேடினாள்
    தான் சுகம்தான் நாடினாள்

    கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
    காதல் வந்த நேரம் என்னவோ

    வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
    தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ

    மின்னுகின்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்

    மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

    மின்னுகின்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்

    மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

    வா

    பக்கம் வா

    நெருங்கி வா

    தா

    தொட்டுத் தா

    தொடர்ந்து தா

    கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
    காதல் வந்த நேரம் என்னவோ

    வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
    தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ


    Last edited by vasudevan31355; 3rd August 2015 at 12:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Richardsof thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2292
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அதில் முந்திரி போல் சுவை அளித்த முரளி சார் விரும்பிய பாடலும். // வாசு.. மாணவன் பார்த்தேனா என நினைவில்லை..ஆனால் ஸ்ரீதேவி ரிலீஸ் என ப் புகையாக நினைவில். நினைவு தெரிந்தும் பார்த்ததில்லை..பட்

    நீங்கள் போட்ட இந்தப் பாட்..ஜிகு ஜிகுவென வேகமாய் ஆரம்பித்து வேகமாய்முடியும்..எனக்கும் பிடிக்கும்..

    //குடும்பம் ஒன்று சேர்ந்து நமக்கு நிம்மதியை அப்போதுதான் தருகிறது. // ஐயோ பாவம் சார் நீங்க.. வாசகர்களுக்காக எவ்வளவு சோகமான கதையையும் விலாவாரியாக எழுதித் தர்றீங்க.. தாங்க்ஸ்..( நான் இனிமேபார்ர்க நினைப்பேன் இந்தப் படத்தை ம்ஹுஹும்.. )

    இன்னொரு படம் பார்த்த நினைவு ஜெய் லஷ்மி தான்..லஷ்மி டபுள் ஆக்ட் அம்மா பெண்ணா வருவாங்க தாத்தா வா மேஜர்..ரொம்பப் படுத்தலான படம்..ஹையா பெயர் நினைவில்லை..

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  6. #2293
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //அதில் முந்திரி போல் சுவை அளித்த முரளி சார் விரும்பிய பாடலும். // வாசு.. மாணவன் பார்த்தேனா என நினைவில்லை..ஆனால் ஸ்ரீதேவி ரிலீஸ் என ப் புகையாக நினைவில். நினைவு தெரிந்தும் பார்த்ததில்லை..பட்

    நீங்கள் போட்ட இந்தப் பாட்..ஜிகு ஜிகுவென வேகமாய் ஆரம்பித்து வேகமாய்முடியும்..எனக்கும் பிடிக்கும்..

    //குடும்பம் ஒன்று சேர்ந்து நமக்கு நிம்மதியை அப்போதுதான் தருகிறது. // ஐயோ பாவம் சார் நீங்க.. வாசகர்களுக்காக எவ்வளவு சோகமான கதையையும் விலாவாரியாக எழுதித் தர்றீங்க.. தாங்க்ஸ்..( நான் இனிமேபார்ர்க நினைப்பேன் இந்தப் படத்தை ம்ஹுஹும்.. )

    இன்னொரு படம் பார்த்த நினைவு ஜெய் லஷ்மி தான்..லஷ்மி டபுள் ஆக்ட் அம்மா பெண்ணா வருவாங்க தாத்தா வா மேஜர்..ரொம்பப் படுத்தலான படம்..ஹையா பெயர் நினைவில்லை..
    'விஜயா'.

    நிறைய எழுதி விட்டேன் இதைப் பற்றி.

    Last edited by vasudevan31355; 3rd August 2015 at 12:08 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2294
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஐயோ பாவம் சார் நீங்க//

    பரிதாபப்பட நீங்களாச்சும் இருக்கீங்களே

    //( நான் இனிமேபார்ர்க நினைப்பேன் இந்தப் படத்தை ம்ஹுஹும்.. )//

    நான் இனிமே எழுத நினைப்பேன் இந்த மாதிரி.. ம்ஹுஹும்
    Last edited by vasudevan31355; 3rd August 2015 at 12:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2295
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார், கிருஷ்ணா சார், கல்நாயக், ஆதிராம் சார், வினோத் சார் அனைவரும் எங்கே போனார்கள்? யாரையும் காணலியே?

    அவசியம் அனைவரையும் வருமாறு அழைக்கிறேன். மது அண்ணா கூட மீண்டு வந்து விட்டாரே. கல்ஸ், என்ன ஆயிற்று? வேலைப் பளுவா?

    கிருஷ்ணா சார், அவசியம் வர வேண்டும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2296
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - இரண்டு காரணங்களால் இங்கு வந்து பதிவுகள் போட மனம் வரவில்லை

    1. உங்கள் கம்பெனி வேலை நிறுத்தம் சீக்கிரம் முடிவடைந்து , உங்களுக்கும் , உங்கள் நிர்வாக அனைத்து நண்பர்களுக்கும் எல்லா பிரச்சனைகளும் சீக்கிரமே முடிவடைந்து சந்தோஷம் திரும்ப வேண்டும் என்று அந்த இறைவனை ப்ராத்தனை செய்து கொண்டிருப்பதால் பதிவுகள் போட நேரம் கிடைப்பதில்லை .

    2. உங்கள் பதிவுகளை நீங்கள் எழுதும் அதே ரசனையுடன் படித்து புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக பதிவுகள் போடும் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள வேண்டும் - குறுக்கே பதிவுகள் போட்டு அதன் அழகை கெடுத்துவிடக்கூடாது ( ck திட்டுவதும் குறையும் ----)

    வேறு எந்த காரணமும் இல்லை . ஒரு அணிலின் சேவை கூட உங்கள் பார்வையில் படுவதை எண்ணி மிகவும் பெருமை படுகிறேன் .

  10. #2297
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //விஜயா'.

    நிறைய எழுதி விட்டேன் இதைப் பற்றி.//

    ஓய்.. நீர் எங்கே இதை ப்பற்றி எழுதியிருக்கிறீர்..எந்தபாகம்..பாகம் சொல்லி பக்கம்குறிக்கவும்!

    எம் ஆர் ராதா டூயட் படம் பற்றி எழுதியிருக்கிறீரா..

    ( ck திட்டுவதும் குறையும் ----) // ரவி.. நான் இனிமே திட்டலீங்ணா.. வாங்க வாங்க ஜாலியா..வேணும்னா ஒங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க்..வாசு ஒன் லைனராக செந்தில்வேல் போஸ்டிற்கு பதிலாக எழுதிய சில ந.தி பாடல்களில் ஒன்றை செந்தில்வேல் போட்டுவிட்டார்..இன்னும் சில இருக்கின்றன..அதை உங்கள் பாணியில் அனலைஸ் செய்யுமேன்..(வேண்டும் வேண்டும் உங்கள் உறவு..இ.டி.சி) (பிகு செய்து கொண்டீர்களானால் ஹைதராபாத்திற்கு வந்து திட்வேன் )

  11. #2298
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    TRICHY - 1975 RARE ADVTS


  12. Likes Russellmai, Richardsof, RAGHAVENDRA liked this post
  13. #2299
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes Russellmai, Richardsof, RAGHAVENDRA liked this post
  15. #2300
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes Russellmai, Richardsof, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •