Page 259 of 400 FirstFirst ... 159209249257258259260261269309359 ... LastLast
Results 2,581 to 2,590 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2581
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    'ஆடுகின்ற கைகளை' தேடிக் கொணர்ந்த தங்களுக்கு நன்றிகள் ஆயிரம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2582
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் மார்னிங் ஆல்


    //Mallika sherawat kooda ellam compare senja saami kaNNai kuthidum...// மதுண்ணா.. காலங்கார்த்தால சிரிக்க வச்சுட்டீஙக்..ஹப்புறம் இந்த ஆயிரம் கைகளுக்கும் நன்றி..

    சி.செ, வாசு, காஞ்ச் பாடல்களுக்கு நன்றி.. ரவி(யா) ஜெய்(யா) தெரியவில்லை ஒருவருடன் ஜோடி சேர்ந்து அவர் பாடும் பாட் கேட்டால் நான் தருவேன் என்பது போல வரும்.. நானே போஸ்ட் பண்ணியதாய் நினைவு.. மறுபடி தேடிப் பார்க்கவேண்டும்

    பழைய குறள் தான்

    தீஞ்சுவை கொண்டிருக்கும் தேனைப்போல் தித்திக்கும்
    காஞ்சனையைக் கண்டுவந்தார் கண்..

    வரட்டா

  4. #2583
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முகநூலில் ஒரு பதிவு...இதைப் பார்த்ததும் படித்ததும் சி.க. சாரின் நினைவு தான் உடனே வந்தது.



    இப்படி இருந்தால்.....எப்படி இருக்கும்....?

    மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

    கணவன்: என்ன?

    மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

    கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

    மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

    கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..
    (மறுநாள் இரவு)

    கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
    மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

    கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

    மனைவி: ம்ம்… எப்படி டா!!!

    கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
    நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

    மனைவி: நரகமா???

    கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

    (வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)
    மேற்காணும் பதிவிற்கான இணைப்பு-

    https://www.facebook.com/sindinga.ne...509028/?type=1

    இதில் உள்ள ஜீவன் நிச்சயம் பார்ப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இதைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்த பாடல்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks chinnakkannan thanked for this post
  6. #2584
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்.. மிக அழகான பதிவு..பொருத்தமான பாடல்.. எனை நினைவு கொண்டமைக்கு நன்றி..


    பொற்கொடியே பூம்பாவாய் பொன்வண்டே பூங்கொடியே
    அற்புதமாய்ச் சொன்னாயே ஆரணங்கே - சொற்பதத்தில்
    சொக்கியே சொல்லிடுவேன் சுந்தரியே நீயில்லா
    சொர்க்கம் நரக மெனக்கு..

    வேந்தரென உமைச்சொன்னார் விந்தையிலை
    ஏந்தி ரசித்தேதான் இட்டீரே -பூந்தமிழில்
    நண்ப ருமைப்பெறவே நானென் தவம்செய்தேன்
    என்றே அறிந்திலே னே..
    Last edited by chinnakkannan; 12th August 2015 at 12:05 PM.

  7. Likes eehaiupehazij liked this post
  8. #2585
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    25

    பாலாவின் தொடரில் 25 ஆவது சிறப்புப் பாடல்



    ''அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன்''

    'கண்காட்சி'

    தமிழ் கொஞ்சும் தன்னிகிரில்லாப் பாடல்.

    தரணி மீதிலே தமிழ் பரப்பும் பாடல்.

    ரதி மன்மதன் பாடும் ரகசியங்களின் பாடல்.

    குரல் மன்மதனின் குளிர்க் குரலால் குற்றால சுகம் தரும் பாடல்.

    ரதியும் நாணும் ராட்சஸியின் ரகளைத் தமிழ் கொஞ்சும் பாடல்.




    1971-ல் வெளிவந்த 'ஸ்ரீ விஜயராணி பிக்சர்ஸ்' 'கண்காட்சி' திரைப்படத்தில் கண் கொள்ளாக் காட்சியுடன் நம் கருத்தில் நிறைந்த பாடல்.

    ஒரு கண்காட்சியில் (வட சென்னையில் நடந்த ஒரு கண்காட்சியிலும் எடுத்திருப்பார்கள்) நடக்கும் பல்வேறு சம்பவங்களின் கோர்வைகளும், தொகுப்புக்களும்தான் இப்படத்தின் கதை. கலை, இசை, நாட்டியம், நகைச்சுவை, கொள்ளைக் கூட்டம், வில்லத்தனம், போலீஸ் என்று பல்சுவைகளையும் சுவைபடச் சொல்லும் இந்தக் 'கண்காட்சி'யில் சிவக்குமார், 'குமாரி' பத்மினி, 'கள்ளபார்ட்' நடராஜன், ஏ.சகுந்தலா, சுருளி, மனோரமா, கோபாலகிருஷ்ணன் என்று பலரும் வண்ணக் கலவையாகக் கவருகின்றனர். தமிழுக்கும், தமிழிசைக்கும், தமிழ் நாட்டியத்திற்கும் பெருமை சேர்ப்பது ஒன்றே இயக்குனரின் நோக்கம் போலும். அதை அலுக்காமல் ஜனரஞ்சகத்தோடு தந்ததிலும் வெற்றியே.

    தமிழ்ப் பாரம்பரியக் கலையை பறைசாற்றும் ஜோடியாக ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான ஜோடி (திருமலை தென்குமரி, ராஜராஜ சோழன், கண்காட்சி) சிவக்குமார், 'குமாரி' பத்மினி, மேலை நாட்டுக் கலைகளின் பெருமையை பீற்றும் விதமாக வில்லத்தனம் கலந்த 'கள்ளபார்ட்' நடராஜன், A.சகுந்தலா ஜோடி என்று இரு ஜோடிகளுக்கும் 'நீயா நானா' போட்டிகள். இடையில் சுருளி, மனோரமாவின் பல்வேறு கெட் -அப்கள். இறுதியில் இருவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிப் பூச்சுற்றலும் உண்டு 'புதிய பறவை' கிளைமாக்ஸ் போல.


    'குன்னக்குடி'யின் இசையில் தமிழ்ப் பாரம்பரியம் பேசும் பாடல்கள்.

    'குறவர் குலம் காக்கும் குமரா நீ வாழ்க!'

    'அனங்கன் அங்கஜன்'...

    'காடை பிடிப்போம்... கௌதாரி பிடிப்போம்'....

    'துள்ளும் மங்கை முகம்' (தொடரில் அடுத்தது)



    'சின்ன சின்னக் கண்ணா வா'.... (புல்லாங்குழலின் ஓசை கேட்டு)

    'காணும் கலையெல்லாம் கண்காட்சி' (வித வித டியூன்களில் கலக்குவார் எம்.ஆர்.விஜயா.)

    என்று அற்புதமான பாடல்கள்.

    சீர்காழி, பாலா, ஈஸ்வரி, சரளா, பி.ராதா, பி.பி.ஸ்ரீனிவாஸ், எம்.ஆர்.விஜயா, பொன்னுச்சாமி, மனோரமா என்று ஏகப்பட்டபேர் பாடியிருப்பார்கள்.


    வண்ண ஒளிப்பதிவு டபள்யூ.ஆர்.சுப்பாராவ். ஒரே வார்த்தை. அமர்க்களம். கதை, வசனம், இயக்கம் 'அருட்செல்வர்' ஏ.பி.நாகராஜன்.

    கலர்ஃபுல்லான செட்டிங்குகள் கண்களைக் கவருவது உண்மை.

    இப்போது தொடரின் பாடலுக்கு வருவோம்.

    கண்காட்சியில் ரதி மன்மதன் ஆட்டம். சிவக்குமார் மன்மதனாகவும், குமாரி பத்மினி ரதியாகவும் மிகப் பொருத்தம். இவர்களுக்குக் குரல் பாலா, ஈஸ்வரி.

    பாடலின் முன்னால் போட்டி நடனம். 'கள்ளபார்ட்',சகுந்தலா உடம்பில் எலக்ட்ரிக் சீரியல் செட் பல்புகளைக் கட்டிக் கொண்டு 'தகதக' வென உடல் ஜொலிக்க, கிடாரின் 'கிடுகிடு' ஓசைக்கு 'கடகட'வென ஆடுவார்கள். அப்போது அது ரொம்பப் புதுமை.

    மோர்சிங் இதமாய் ஒலிக்க, அத்துடன் மேள ஒலி சேர்த்துக் கொட்டி முழங்க, 'அருட்செல்வர்' ஏ.பி.நாகராஜன் அவர்களின் மென்மையான குரலில், தெளிவாக, அழகான, தூய தமிழ் முன்னுரையுடன் பாடல் தொடங்குவது அம்சம். தமிழ் நம் காதில் அமுதமாய்ப் பாய்கிறது.


    'வெண்ணிலவைக் குடை பிடித்து
    வீசு தென்றல் தேர் ஏறி
    மென்குயில்தான் இசை முழங்க
    மீன் வரைந்த கொடி அசைய
    கண்கவரும் பேரழகி
    கனகமணிப் பொற்பாவை
    அன்னநடை ரதியுடனே
    அழகுமகன் வில்லேந்தி
    தண்முல்லை தாமரை மா
    தனிநீலம் அசோகமெனும்
    வண்ணமலர்க் கணை தொடுத்தான்
    வையமெல்லாம் வாழ்கவென்றே!'


    இயக்குனரின் உரை முடிந்து இப்போது பாடல் துவங்கும்.

    ஈஸ்வரியின் 'கணீர்'க் குரலில் 'படபட' வென பொரிந்து தள்ளியது போல் வார்த்தைகள் விடாமல் வந்து விழும். மிக மிக அருமையான வரிகள். ராட்சஸிக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? சும்மா பொறி பறக்கிறது.

    பாலா ஃபாலோ பண்ணுவார் மிக அருமையாக. தெளிவான தமிழ் உச்சரிப்பில். ஜோடி அருமையாக இருக்கும். மன்மதன் புகழை ரதி எப்படியெல்லாம் புகழ்கிறார்! மதனும் அப்படியே!

    மன்மதன் இல்லையென்றால் வாடிடும் இவ்வையகம் என்ற பொருள்படும் வரிகள் மிகவும் சுவை

    'வா'... எனும் போது பாலா பேஸ் குரலில் அதிர்வலைகள் கொடுப்பது ஜோர். பாலாவுக்கு சவால் பாடல்தான். ஆனால் வழக்கம் போல பூ... என்று ஊதி விடுவார்.



    'குமாரி' பத்மினி பூக்கள் கொண்ட உடை தரித்து ரதியாக வெகு அழகு. இவரிடம் இன்னொரு சிறப்பு. உடலை மிகவும் ஸ்லிம்மாக வைத்திருப்பார். அதனாலேயே ரதி வேடமும் டாப். சிவக்குமாரும் கொள்ளை அழகு.

    இந்தப் பாடலைக் கேட்கும் போது நம்மிடம் உற்சாகம் 'ஜம்'மென்று தொற்றிக் கொள்வதை கண்கூடாய் உணரலாம்.




    அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும்
    வணங்கும் என் உயிர் மன்னவா!
    அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும்
    வணங்கும் என் உயிர் மன்னவா!
    மண்ணுயிர்க்கின்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா?

    கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின்பொங்கும்
    கனிந்தோங்கும் கயற்கன்னியே!
    கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின்பொங்கும்
    கனிந்தோங்கும் கயற்கன்னியே!
    அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே!

    ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும்
    இன்பம் தேடலும் உன் செயலல்லவா!
    ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும்
    இன்பம் தேடலும் உன் செயலல்லவா!
    நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா!

    அழகுதமிழே! பழகும் இசையே! அமுத நிலையே!
    உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார்
    அழகுதமிழே! பழகும் இசையே! அமுத நிலையே!
    உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார்
    சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

    மணம் கொஞ்சும் மலர் மஞ்சம் அடைந்துள்ளம்
    குளிர்ந்தங்கம் கலந்தன்பின் நலம் காணுவோம்

    குணம்கொள் பெண் அணங்கே! உன் மனம் கொண்டென் மனம்தந்தேன்
    இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

    கலந்தன்பின் நலம் காணுவோம்

    இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

    மன்னா வா..

    கண்ணே வா...

    நீ வா!

    வா......

    அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும்
    வணங்கும் என் உயிர் மன்னவா!


    பாடலைக் கேட்டு வரிகளை எழுதுவதற்குள் மண்டை காய்ந்தே விட்டது.

    பாடலின் கிளியரான வீடியோவுக்கு கீழே சொடுக்குங்கள்.

    http://www.dailymotion.com/video/x15...971_shortfilms
    Last edited by vasudevan31355; 12th August 2015 at 12:23 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2586
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //குமாரி' பத்மினி பூக்கள் கொண்ட உடை தரித்து ரதியாக வெகு அழகு. .//.

    மன்னவா கண்ணே வா வா வா ஆ ஆ... // இழையல் நன்றாக இருக்கும்..

    இனி மற்றவர்களின் பாராட்டு வரிகளில் இரண்டாவதாக....

    ஜி. நலமா..இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.

  10. Likes eehaiupehazij liked this post
  11. #2587
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்த் திரையுலகின் பொன்னான தருணங்கள் : தங்கத் தடவல் மிடாஸ்கள் (மைதாஸ்கள்)!! / Midas Touch (with Goldfingers)!!

    தங்கவிரல் 1 / Goldfinger 1 : T.R. Mahalingam / டி ஆர் மகாலிங்கம்

    தமிழ்த் திரையுலகின் ஆரம்பகட்ட சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதரும் பி யு சின்னப்பாவும் தங்க முட்டையிடும் மந்திரவித்தை மங்கத் தொடங்கும் போது அவர்களைப் போலவே பாடல் திறமையும் அவர்களை விடவே கூடுதல் நடிப்புத் திறமையும் கொண்ட ஒரு சாயலில் ஜெமினிக்கே முன்னோடியாக அதிரடி நுழைவினைத் தந்தவர் டி ஆர் மகாலிங்கம் அவர்கள் ! சாகாவரம் பெற்ற பல பாடல்களை தனது பிரத்தியேகக் குரல்குழைவில் தந்ததோடு சமூகப் படங்களிலும் நிறைவான நடிப்பை அந்தக் காலகட்ட வரை முறைகளுக்குள் குறைவின்றி நல்கி ரசிகர்களைப் பெற்றவர்! தொட்டதெல்லாம் பொன்னாக்கிய மைதாஸாக ஒரு குறிப்பிட்ட கால வட்டத்துக்குள் தங்கவிரலாளராக வாழ்வாங்கு வாழ்ந்தவரின் நினைவலை மதுர கான வரிசை !!


    செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்னும் கூற்றை மெய்யாக்கிய பாடக நடிக சிரோமணி கந்தர்வ கான எழிலரசர் மகாலிங்கம் அவர்கள் !!
    பெயரைக் கேட்கும்போதே அதிரும் வண்ணம் நமது மனதுக்குள் சிம்மாசனமிடும் பாடல் காட்சி மாலையிட்ட மங்கை (1958) யில்'செந்தமிழ்த் தேன்மொழியாள்...நிலாவென சிரிக்கும்...' பாடல் காட்சியமைப்பில் அவரது குழைவுக் குரலும் பண்டரிபாய் அவர்களின் சகோதரி மைனாவதியின் நடன அசைவுகளுமே!



    இந்த சாகாவரம் பெற்ற பாடலைப் போலவே சிரஞ்சீவித்துவம் கொண்ட ஏராளமான பாடல்களை அவர் வாரி வழங்கியிருந்தாலும் ......
    இரண்டாவதாக நமது நினைவில் நிலைத்து நின்று நமது மனதை அள்ளிக் கொண்டு செல்லும் மதுர கானம் திருவிளையாடலில் நடிகர்திலகத்தின் இணைவில் சிவபெருமானை
    நினைந்து உளம்கசிந்து பாடிய தேன்மதுர கானமான 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' பாடலே !


    ஏனைய புகழ்பெற்ற பாடல் காணொளிகளின் யூ டியூப் லிங்க்ஸ் :

    மழை சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே .....ஆட வந்த தெய்வம் சமூகப்படத்தில்!

    https://i.ytimg.com/vi/7unLk8rkpuk/mqdefault.jpg

    ராஜராஜ சோழருடன் தென்றலோடு உடன்பிறந்த செந்தமிழ் பெண் பற்றி..!

    https://i.ytimg.com/vi/RZmazN1bPgQ/mqdefault.jpg
    Last edited by sivajisenthil; 12th August 2015 at 06:35 PM.

  12. Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #2588
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    டி.ஆர். எம்மின் நினைவுக்கு வந்த பாடல்கள்

    நமசிவாயமெனச் சொல்வோமே அகத்தியர்
    ஆடைகட்டி வந்த நிலவோ - அமுத்வல்லி

    அந்தக் குரலே ஒரு வித்யாசமான கணீர்க் குரல்..ம்ம்

  14. Likes eehaiupehazij liked this post
  15. #2589
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    யாருமே வரலையே.

    என்ன பண்ணலாம்..

    அபிராமியை வேண்டிக்கலாம்! (யார்ப்பா எந்த அபிராமின்னுகேக்கறது!)

    *

    கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும்

    கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும்
    கழுபிணியிலாத உடலும்

    சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்

    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்

    தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
    துன்பமில்லாத வாழ்வும்

    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்

    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!

    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!

    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
    பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


    *

    ம்ம் இந்தப் பாட்டை வீட்டுக்குப் போய்த் தான் கேக்கணும்..!

    *




    எழுதியவர் அபிராமி பட்டர்
    பாடியவர் சீர்காழி கோவிந்த ராஜன்
    படம் திருமலை தென் குமரி..
    பாடலை கட் அண்ட் பேஸ்டியவர்.. சி.க
    Last edited by chinnakkannan; 12th August 2015 at 04:43 PM.

  16. Likes eehaiupehazij liked this post
  17. #2590
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சின்னக்கண்ணன்,
    ஒரு நியாய, தர்மம் வேண்டாமா? இப்படியெல்லாமா பதிவுகள் போடுவது? ‘திருமகள் தேடி வந்தாள்...’ பதிவைத்தான் சொல்கிறேன். அந்த பாடலுக்குள் இப்படிப்பட்ட அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.
    அதிலும் திருமலை திருப்பதி பால் பழங்கள்.. வரிகளுக்கு உங்களின் விளக்கம். தாங்க முடியல சாமி. கண்ணில் நீர்முட்ட சிரித்து வயிற்றுவலி வந்தால் அதற்கு என்ன மருத்துவம் என்பதையும் இதைப் போன்ற பதிவுகளில் குறிப்பிட்டு விடவும். நன்றி.

    திரு.சிவாஜி செந்தில்,
    தங்களின் கலர் கலரான கற்பனையும் அதை நீங்கள் விவரிக்கும் பாங்கும் அருமை. பாராட்டுக்கள். நன்றி.

    திரு. ரவி சார்,
    திருக்குறளும் திரை இசையும்... நல்ல கான்செப்ட். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? அன்பும், நகைச்சுவையும் குழைத்த உருவமான (அவதாரை பார்த்து சொல்கிறேன்) சின்னக் கண்ணன், நீங்கள் பயப்படுவது போல உங்களை திட்டமாட்டார்.
    ஒவ்வொரு குறளையும் ஒன்றே முக்கால் அடி எழுதிய வள்ளுவப் பெருந்தகையால் இன்னும் காலடி எழுதியிருக்க முடியாதா என்ன? மனித சமுதாயம் மேம்பட உதவும் அறிவுப் பெட்டகமாம் திருக்குறளை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர் காலடியை விட்டு வைத்துள்ளார். வாசு சார் கூறியிருப்பது போல உங்கள் பதிவுகளை படிக்க பெரிய கூட்டமே உண்டு. அதில் (லேட்டாக படித்தாலும்) நானும் ஒருவன்.

    அருமையான பூ பாடல்களை போட்ட நண்பர் எங்கே? என்னை சந்திரமண்டலத்துக்கு அனுப்புவதாக சொல்லி, அவர் போயிருக்கிறாரா? விரைவில் திரும்புவார் என்று நினைக்கிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •