Page 101 of 400 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1001
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Enjoy your holidays chinnakkaNNan ! We are also going on vacation to California from the end of this month for four weeks ! Our fun is with the grandchildren !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1002
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோவிலெல்லாம் ஏதுக்கு கொஞ்சும் குமரிக்காய்
    பாவில் இசைப்போமே பண்ணைத்தான் – தூவிடும்
    சாரலாய் நெஞ்சைச் சரம்போல் நனைத்துதான்
    தூறும் அழகோ சுகம்.



    thanks rajraj sir..
    Last edited by chinnakkannan; 14th June 2015 at 01:28 AM.

  5. #1003
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Pazhaiya write up and puthiya song

    அந்த யூத் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் ஹிஸ் லவர்.. (மேஜர் சுந்தர் ராஜனைப் போல): எஸ்..அந்த க் கட்டிளம் காளை தன் மனம் கவர்ந்த கட்டிளம் காளிக்காக (ஓ அர்த்தமே மாறிடுதோ) இளமை ததும்பும் மங்கைக்காக அந்த மாமர நிழலில் மாலை நேரத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்..

    “ஹாய்” எனத் துள்ளிக் குதிக்கும் சூரிய காந்திப்பூவாட்டாம் அவளும் வேகமாய் வந்து அவனைப் பார்க்கிறாள்..”ஸாரிப்பா (மே.சு..:மன்னிங்க அத்தான்!) கொஞ்சம் தாமதமாய்டுச்சு.. ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டு இருந்தீங்களோ..

    ”இல்லை டியர்.. வாழ்க்கைங்கறது என்ன..கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் காத்திருத்தல் தானே..

    வார்த்தை வருமென்று மழலையிலே காத்திருந்து
    …வாகாக அன்னையினை அழைத்துவிட்டுப் பூத்திருந்து
    கூர்ந்து கவனித்துக் கல்விதனைக் கற்கையிலே
    ..கொள்ளை கொண்டுவிடும் இளமைக்காய்க் காத்திருந்து
    சேர்ந்தே வாலிபமும் வந்துவிட துணைதேடல்
    ..செல்லும் வாழ்க்கையிலே மகவுக்காய்க் காத்திருந்து
    ஊற்றும் ஒருகாலம் வற்றிவிடல் போலத்தான்
    ..ஓடிவந்த முதுமையிலே காத்திருப்போம் முடிவுக்கே..

    இல்லையா டியர்”

    “ஹேய் வாட் ஹேப்பண்ட் ( .: அன்பான முட்டாள் அத்தானே என்னாச்சு..கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா இந்த மாலைவேளையில் ஒரு ஒய்யாரச் சிங்காரி சிருங்காரங் கொண்டு உன்னைத் தேடி ஓடி வந்தாக்க இப்படியா சொல்றது.! இவ்ளோ நீள வாக்கியம்கறதால கொஞ்சம் மூச்சு வேற வாங்குது! )
    என்ன பண்றதுமனக்களைப்பு டியர்..

    சரி போம் ஓய் ஒரு ரொமாண்டிக் பாட் நான் வேணுமானா பாடட்டா..

    பாடேன்..


  6. Likes Russellmai, vasudevan31355, Gopal.s liked this post
  7. #1004
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ( என்னால் ஓஹோ என எழுதவேவராது.)

    ஓஹோ!

    சின்னா!

    'முத்துக் குளிப்பவ்ரே கொஞ்சம் பக்கத்தில வாங்க'.

    எத்தனை முறை கேட்டாலும் முத்துதான்.

    இந்தப் பாடலை ரவி த்ரெட்டில் தரவேற்றி எழுதிய ஞாபகம் வந்து விட்டது. ராகவேந்திரர் கொடுத்த உற்சாகத்தினால் செய்தேன். இப்படத்தின் எந்த தகவல்களும் அப்போது இல்லாத நிலையில் ராஜ் டிஜிட்டல் பிளசில் அதிர்ஷ்டவசமாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை அப்லோட் செய்து பதித்தேன்.(2011)



    'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா ('பணமா பாசமா' புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழி மாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)

    'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

    இப்படத்தின் vcd,dvd எதுவும் அப்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். ஆனால் இப்போது வாங்கி விட்டேன். ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே

    "முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...

    பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை 'விஜய்' தொலைக்காட்சியில் கூட முன்பு ஒருமுறை போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியை மீண்டும் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.

    என்ன பாட்டுய்யா அது! 'சத்தியம் தவறாதே' ரவி, விஜயநிர்மலா ஜோடி. பாட்டுக்கள் ஒவ்வொன்றும் டாப் ரகம். இப்போது உங்கள் ரசனையால் இங்கேயே நானும் ரசிக்கிறேன்.

    உங்கள் விடுமுறை நாட்கள் இனிதே கழிய வாழ்த்துக்கள் சின்னா!
    Last edited by vasudevan31355; 14th June 2015 at 08:13 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes adiram, chinnakkannan, Russellmai liked this post
  9. #1005
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக மிக அரிதான இந்தப் படத்தில் தோன்றும் நட்சத்திரம் யார் என்று தெரிகிறதா?

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1006
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  11. #1007
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 83

    முத்து - தொடர்ச்சி

    இந்த பாடல் CK விற்கு சமர்ப்பணம் - அருமையான பாடல் - அந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த ஒன்று - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - இந்த பாடலும் , "முத்து குளிக்க வாரீங்களா " என்ற பாடலும் - ஆச்சியின் நடிப்பும் , நாகேஷ் அவர்களின் நகைச்சுவையும் கலந்த பாடல் - பாடல்களுக்காக பதிவுகளை போடுவதில்லை எனவே எல்லா பாடல்களையும் போட முடிவதில்லை -- சில உதாரணங்களை மட்டுமே தருகிறேன் .


  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, chinnakkannan, rajeshkrv liked this post
  13. #1008
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 84


    பவழம் ( Coral)


    Unlike most other gemstones which are of mineral origin, Coral is organic, formed by living organisms. It forms from branching, antler-like structures created from coral polyps in tropical and subtropical ocean waters. When the coral polyps die, the hardened skeleton remains, and this material is what is used as a gemstone. Most coral is white, but nature can create coral in several other colors, including the popular orange to red forms. This Red Coral, or Precious Coral as it is often known by, is the most used gemstone form of Coral. In fact, the color known as coral is derived from the typical pinkish-orange color of many red Coral gemstones.








    அகத்தியரின் லலிதா நவரத்தின மாலை 4 - பவழம்

    "சிந்தை நிறம்ப வளம் பொழி பாரோ
    தேம் பொழி லாமிது செய்தவ யாரோ "

    அம்பிகை நல்ல அறிவினை தரக்கூடியவள் - மழை போல அந்த உயர்ந்த அறிவை தருபவள் யாரோ அவளை நமஸ்கரிக்கிறேன் ..

    நமது எண்ணங்கள்

    அன்னை அறிவை மட்டுமா நமக்குத்தருகிறாள் , நல்ல பண்புகள் , எல்லோரயும் சமமாக நினைக்கும் சுபாவம் , சுய நலம் , தற்பெருமை இல்லாத அதே சமயத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இத்தனையும் அல்லவா நமக்கு ஊட்டுகிறாள் - இதனால் பவழமும் அவளிடம் , வயிரம் , முத்துக்கள், நீலம் தோற்றதைப்போன்று தோற்றுப்போய் விடுகிறது . அம்பிகையை விட அன்னை உயர்ந்தவள் ஆகுகிறாள் இங்கே .

    உண்மை சம்பவம் 11 :

    என் நண்பனின் அன்னை எங்கள் எல்லோரிடமும் முடிந்தவரை தருமம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் - ஒரு முறை மிகுந்த ஏழ்மை நிலைமையில் இருக்கும் ஒருவனிடம் , எங்களிடம் சொல்வதைப்போலவே தருமம் முடிந்தவரை செய் என்றாள் - அவன் சிரித்தான் - " அம்மா என் தினக்கூலி ரூபாய் 10 முதல் 30 வரியும் தான் - சராசரியாக மாதத்திற்கு ருபாய் 750 லிருந்து 800 வரைக்கிடைக்கலாம் - என்னால் எப்படி அம்மா தருமம் செய்ய முடியும் ? "

    அந்த தாய் கொடுத்த அறிவுரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் கூட கிடைத்திருக்காது --- " தம்பி உன்னால் ஒரு ருபாய் தானம் செய்ய முடியுமா தினமும் ? " அவன் சொன்னான் - " முடியும் அம்மா "

    " அது போதும் ! ஒரு காரியம் செய் - மளிகை கடைக்கு செல்- ஒரு ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை வாங்கு - அதை ஒரு எறும்பு புற்றில் போடு - அங்கே இருக்கும் ஆயிரம் எறும்புகளின் வயிறு நிறையட்டும் . யார் சொன்னது , மனிதர்கள் வயிறுதான் நிறைய வேண்டும் என்று ? அன்ன தானத்திற்கு மேல் ஒரு சிறந்த தானம் இல்லையப்பா !"

    அந்த ஏழை இன்று ஒரு கம்பெனியின் முதலாளி - அந்த அன்னை சொன்ன அறிவுரை அவனை ஒரு மாடி வீட்டு செல்வந்தனாகியது .....

    "பவழ நிறம் அவன் செவ்விதழ் "----- திருமங்கை ஆழ்வார் - உருக வைக்கும் ரங்கனின் நினைப்பு .....




    காதுகளில் தென் பாயும் அடுத்த பாடல் உங்களுக்காக

    Last edited by g94127302; 14th June 2015 at 12:40 PM.

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #1009
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 85


    பவழம் ( Coral)

    ( repeat )


  16. Likes Russellmai liked this post
  17. #1010
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
    உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
    உன் இளநடை மலயமாருதம் ஆகும்
    உன் மலர் முகம் சாரமதியென கூறும்
    நீ ஒரு ராகமாலிகை
    உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
    நீ ஒரு ராகமாலிகை...



    Thanks to Banu Oussaine Issoup & youtube for the video, MSV for the amazing composition
    and Balu for the superb singing!

  18. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •