Page 41 of 400 FirstFirst ... 3139404142435191141 ... LastLast
Results 401 to 410 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #401
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றிகள் கல்நாயக்.

    நான் இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மற்ற திரிகளில் பங்கு பெற்றதை விட மதுர கானங்களில் தாங்கள் அதிகம் சந்தோஷத்துடன் பங்கு பெற்றதாக சொல்லியிருந்தீர்கள். நிஜமாகவே எனக்கு மிகப் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மதுர கானங்கள் அந்த அளவிற்கு தங்களை ஈர்த்தது ஒரு புறம் இருந்தாலும் தாங்கள் பாகம் மூன்றின் நாயகராக சி.கவுடன் சேர்ந்து சற்று டல்லடித்த இந்தத் தேரை வடம் பிடித்து இழுத்து அற்புத பங்களிப்பைத் தந்தீர்களே! அதை என்னால் மறக்க இயலாது. அதற்காக மீண்டும் என் நன்றிகள். சி.கவுக்கும்தான். பிள்ளைகள் படிப்பின் காரணமாகவும், சில சொந்த அலுவல்கள் காரணாமாகவும் நான் அப்போது ஒன்றிரண்டு மாதங்கள் முழுமையாக பங்கு பெற இயலாமல் போனது. இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி விட்டேன். தற்போது கிருஷ்ணாவும் சேர்ந்து கொண்டு ஜமாய்க்கிறார். ராஜ்ராஜ் சாரின் ஜுகல் பந்தி பங்களிப்பும் சுவை குன்றாத ஜோர். ராஜேஷ் அரிய பாடல்களுடன் பின்னுகிறார். ராகவேந்திரன் சாரும். இன்னும் பெயர் விட்டுப் போன நண்பர்களும் தங்கள் ஒத்துழைப்பை மிகச் சிறப்பாக நல்கி வருகிறார்கள். அனைவருக்கும் மிக்க நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #402
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    வாசு,

    பிழைப்பதற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை.
    ஒருபக்கம் உங்கள் பதிவைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் வாஸ்தவமான உண்மை. தமிழன் ஏமாளியே! எங்கும் அவன் ஏயக்கப்படுவான். சொன்னா மாதிரி பிழைப்புக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes RAGHAVENDRA liked this post
  6. #403
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    வாசு,

    எனது கடலூர் வருகை தற்சமயம் மிகவே குறைந்துள்ளது. ஏதாவது விஷேசம் என்றால் வருவேன். பார்க்கலாம். அதற்கு நீங்கள் கிடைக்க வேண்டுமே!!!
    நீங்கள் கடலூர் வரும் போது சொல்லுங்கள். அடுத்த நிமிடம் நான் அங்கு இருப்பேன் எந்த வேலை இருப்பினும். உங்களை சந்திக்கும் மகிழ்ச்சியை விட வேறு என்ன இருக்கிறது நடிகர் திலகத்தின் அங்க அசைவுகளை ரசிப்பதைத் தவிர.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #404
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக் வாசு.. இருவரும் பட்டையைக் கிளப்புகிறீர்கள்..

    கல் நாயக் இன்னிக்கு குஷி மூடாக எழுத நினைத்தேன்..ஆனால் எழுதாமல் முன் பு எழுதிய பாட்டுக்களையே வைத்து எழுதிவிட்டேன்.. கம்ப்யூட்டரில் இருக்கும் படத்தை எப்படி அப்லோட் செய்வது வாசுஜி..

    ஹப்புறம்.. பூமழை பாடல்களும் வெரி நைஸ்.. முதல் பாடல் கேட்டேன் நாகார்ஜூன் பாட் கேக்க வேண்டும் பட் அந்த ப் படம் பார்த்த நினைவு.. நாகார்ஜூன் அமலா திருமணத்துக்கு முன் எடுத்த படம் தானே? ஒரு விளம்பர ஏஜன்ஸியில் சேருவார் நாகார்ஜூன்.. செப்பலுக்கான ஒன் லைன் ஸ்லோகன் சொல்லச் சொல்லுவார் அமலா..

    Where ever you go I am there என்பார் நாகார்ஜூன்.. சொர்ண புஷ்பம் சற்றே சிவந்து முறைக்க புன்னகையுடன் செப்பலைச் சொன்பேன் என்பார் நாகார்ஜுன் இதானா எனத் தெரியவில்லை..

    வாசு ஃபோனில் கிருஷ்ணாவுக்கும் ஊக்க டானிக் கொடுத்து வாருங்கள்..அவருடைய எழுத்துக்களும் சொர்ண புஷ்பத்தின் கன்னத்தைப் போல பாலீஷ் போட்ட ஆப்பிளாய்ப் பளபளக்கின்றன!

    கல்ஸ் நீங்கள் இருப்பது சென்னையா வேறெங்கு..

    வாசு .. பாலும்பழமுமிற்கு உங்களது பின்னூட்டம் ஜோர்.. ஆக்சுவலாகப் பார்த்தீர்களென்றால் - யாருமே சொல்லாதது- அமெரிக்கையாய் மெத்த ப் படித்த டாக்டராக வெகு அழகாக ந.தி நடித்திருப்பார்... சரோஜாதேவி வெகு பொருத்தமென்றாலும் இழுத்துப் போர்த்தி வருவது கொஞ்சம் கோபம் தான்..திடீரென கடைசியில் தங்கையை அவர் யார் நாகேஸ்வர ராவிற்கு மணம் செய்து கொடுப்பது மட்டுமே இடிக்கும்..தொழில்பாட்டுகளில் வரும் என நினைக்கிறேன் - எழுதினால்.

    அந்த எம்.ஆர்.ராதா சொல்லும் சீன்..அது சரி..டாக்டர் நா நர்ஸ் கல்யாணம் பண்ணிக்கணும் நிஜம்மாகவே நன்றாக இருக்கும்.. நான்பேச நினைப்பதெல்லாமில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை போன்ற வரி பாடல்களில் தென்படுவது வெகு அபூர்வம்.. ம்ம் ஆனால் அதைப் படிக்க நிறையவே வெகுபின்னால் போக வேண்டி இருந்தது.. நன்றுங்காணும்.. கீப் இட் அப்..

    இன்னிக்கும் வெய்யில் தான்..தாங்கவே முடியவில்லை..வீட்டில் இருந்தாலும் கூட கண்ணைக் கட்டுகிறது ஹ்யுமிடிட்டி.. என்னதான் ஏஸிக்குள் இருந்தாலும் ஒரு நொடி அனல் காற்று பட்டால் உடம்பு அமலாவாகப் போகிறது..ஸாரி டைப்போ..அலமலத்துப் போகிறது!

  8. #405
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ராஜ்ராஜ் சாரின் ஜுகல் பந்தி பங்களிப்பும் சுவை குன்றாத ஜோர். // அதான் அவர்கிட்ட ஒரு தொடர் வேற கேட்டிருக்கேனே..தருவார்..இல்லீங்களா..

  9. #406
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக்,

    நாகார்ஜுனன், அமலா நடித்து ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த 'சிவா' தெலுங்குப்படம் (அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பு) தமிழில் 'உதயம்' என்ற பெயரில் வெளியாகி பட்டை கிளப்பி ஓடியது தங்களுக்குத் தெரியும். இதன் விளைவே நாகார்ஜுனாவும், அமலாவும் நிறையப் படங்களில் இணைந்தது. காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. 'உதயம்' படத்திற்கு இசை நம் 'இசைஞானி' பாடல்கள் ரொம்பப் பிரபலம். தெலுகு 'டப்' பாடல்கள் போலவே இராது. இந்தப் படம் 'இதய கீதம்' படத்திற்கு முன்னமேயே வெளியாகி விட்டது. அதாவது 1989 அக்டோபரில் 'சிவா' வெளியானது. அதே வருடத்தில் உதயமும் தமிழில் வந்து விட்டது. இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. இதே வருடம் சூப்பர் ஸ்டார் நடித்த 'சிவா' தமிழ்ப்படமும் வெளியானது என்று நினைவு. ஆக தெலுங்கிலும், தமிழிலும் 'சிவா' என்ற பெயரில் தனித்தனியாக படம் வெளியாயின. அதனால்தான் நாகர்ஜுனன் நடித்த 'சிவா' தெலுங்குப் படத்தை ரஜினியின் 'சிவா' படத்தால் அதே பெயரில் வெளியிடாமல் 'உதயம்' என்ற பெயரில் வெளியிட்டிருப்பார்கள் என்பது என் கணிப்பு. நாகர்ஜுனன் படம் 'ஷிவா' (shiva) என்றே உச்சரிக்கப்பட்டது. ரஜினியோடது (siva). இது அமிதாப்ஜி நடித்த 'கூன் பஸினா' இந்திப் படத்தின் ரீமேக். அமிதாபிற்கு ஜெமினி மகள் ஜோடி. தமிழில் ரஜினிக்கு ஷோபனா.

    அது மட்டுமல்ல. இந்த தம்பதி ஜோடி கிராயி தாதா, நிர்ணயம், சின்ன பாபு போன்ற படங்களிலும் இணைந்து நடித்து இளசுகளை சுண்டி இழுத்தனர்.



    இதே தம்பதியரின் குழந்தை அகில் 'சுட்டிக் குழந்தை' படத்தில் நடித்து தன் தாத்தா, அப்பா, அம்மா, பெயரைக் காப்பாற்றியது. தபுவும், நாகார்ஜுனாவும் இதில் நடித்திருந்தார். இது baby's day out ன் தழுவல் என்று அனைவருக்கும் தெரியும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes chinnakkannan liked this post
  11. #407
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    udhayam (1989)



    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes chinnakkannan liked this post
  13. #408
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னமோ போங்க 15
    கண்ணன், யசோதை, நந்தகோபர் பற்றிய தகவல்களெல்லாம் பாகவதத்தில் நிறையவே வரும் என நினைக்கிறேன்..

    ஆனாக்க நந்தகோபரும் யசோதையும் டூயட்டா கிஷ்ணாவைக் கொஞ்சியிருக்காகளா..தமிழ் சினிமாவில மட்டும் தான் கொஞ்சுவாங்க போலருக்கு..என்னமோ போங்க

    மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு
    செண்பகப் பூப்போட்டு பாடு ஒரு செந்தமிழ்த் தாலாட்டு
    *



    டி.எம்.எஸ் சூலமங்கலம் ராஜலஷ்மி ( குரல் தனியாகத் தெரியும்) ஹீரோ (யாருக்கு வேணும்) ஹீரோயின் யார்..!

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  15. #409
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //திடீரென கடைசியில் தங்கையை அவர் யார் நாகேஸ்வரராவிற்கு மணம் செய்து கொடுப்பது மட்டுமே இடிக்கும்//

    நாகேஸ்வரராவ் எங்கிருந்து வந்தாரய்யா? ஒரு வேளை இன்று நிறைய நாகார்ஜுனனைப் பற்றி பதிவுகள் போட்டதால் அவர் அப்பா ஞாபகத்தில் 'பாலும் பழமும்' சாப்பிட்டீர்களோ?(அந்த மனிதருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.)இல்லை அமலா என்றதும் அனைத்தையும் மறந்துடுவீர்களோ?

    அது மலையாளக் கரை பிரேம் நஸீர் அய்யா பிரேம் நஸீர்.
    Last edited by vasudevan31355; 29th May 2015 at 09:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes chinnakkannan liked this post
  17. #410
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஹீரோ (யாருக்கு வேணும்)//

    அடப் பாவி மனுஷா! நாங்க விட்டுடுவோமா? அது ராஜ பாண்டியன். நடிகர் திலகம் நாடக மன்றத்தில் முக்கியமான ஒரு நடிகர். 'தங்கப் பதக்கம்' நாடகத்தில் மகன் ரோல் செய்தவர்

    'பாரத விலாஸ்' படத்தில் நடிகர் திலகத்தையும், 'சி.ஐ.டி' சகுந்தாலாவையும் இணைத்து படம் பிடித்து, நடிகர் திலகத்திடம் பணம் கறக்கும் வில்லன். நாலணா திருவிழா கண்ணாடி போட்டு காமெராவை தோள்களில் தொங்க விட்டிருப்பார். பாவம் இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

    சரி! இப்படிச் சொன்னால் ஈஸியாக கேட்ச் செய்து விடுவீர்கள். உங்கள் வழிக்கே வருகிறேன்.

    என் ராட்சஸி பாடும் அதியற்புத பாடல் 'மின்மினிப் பூச்சிகள் கண்களில் தென்படும் நியூ வேவ் கேர்ள்' பாடலில் இவரைப் பாருங்கள்.(பாடல் முடியும் போது சூயிங்கம் மென்றபடி என்டர் ஆவார்). 'பாரத விலாஸி'ல் சகுந்தலாவின் காபரே. இப்போது வாயெல்லாம் பல்லாக இருக்குமே. அதான் எங்க சி.க.

    சி.க.

    இன்னைக்கு முழுக்க ஒரு மார்க்கமாவே இருக்கீக. என்ன சமாச்சாரம்? ம்..
    Last edited by vasudevan31355; 29th May 2015 at 09:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •