Page 194 of 402 FirstFirst ... 94144184192193194195196204244294 ... LastLast
Results 1,931 to 1,940 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1931
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    தன்னலம் தேவைதான். ஆனால், அது பொது நலமாகப் பரிணமிக்க வேண்டும்.

    - புரட்சித்தலைவர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1932
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!



    கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

    மாறுவேட மதுரம் 1: கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் / படகோட்டி

    வில்லன்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு காதலி சரோஜாதேவியை சந்திக்க வளையல்காரர் கெட்டப்பில் கனகச்சிதமாகப் பொருந்தும் மக்கள்திலகம் அத்தனை வளையல் சரங்களையும் சர்வசாதாரணமாக தனது வலிமை வாய்ந்த தோள்களில் தாங்கி சோபாவின் மீது குதித்தமர்ந்து ஆடிப் பாடுவது மிஸ் பண்ணக் கூடாத கண்கவர் ஆடல் பாடல் காட்சியமைப்பே !

    எண்ணற்ற மாறுவேட கெட்டப்களில் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் எனது கணிப்பில் இதற்கே முதலிடம்! ஏனெனில் ஏகப்பட்ட சுமைகளுடன் அலட்டிக்கொள்ளாமல் அவர் ஆடியிருக்கும் விதமே அலாதி !

    Congrats Sivajisenthil Sir on reaching the 2000th Milestone.


  4. Thanks Russellbpw, eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw liked this post
  5. #1933
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1934
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalaiventhan View Post


    நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல உலகம் சுற்றும் வாலிபனை 1978-ம் ஆண்டு வரை வெளியான ஏதாவது ஒரு படம் வசூலில் முறியடித்ததாக திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஆதாரத்தோடு கூறியிருந்தால் ஏற்கிறோம்.

    நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் கூறியிருப்பது போல , ‘‘பக்குவம் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.... அல்லாதவர்....????’’

    ....என்று வார்த்தைகளை நாம் விடமாட்டோம். பக்குவம் உள்ளவர்களாகவே மற்றவர்களையும் குறிப்பாக திரு.ஆர்.கே.எஸ். அவர்களையும் மதிக்கிறோம். அவர் ஏற்பார் என்று நம்புகிறோம். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    இனிய நண்பர் திரு கலைவேந்தன்,

    பக்குவம் உள்ளதால் தான் நான் பக்குவமாக சொன்னேன்..எந்த வார்த்தையையும் நான் விடவில்லை. தங்கபதக்கத்தின் வசூலை அதற்க்கு முன்னரும் அதற்க்கு பின்னரும் திரிசூலம் வரும் வரை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று தான் கூறினேன்...

    உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி குறை ஒன்றும் கூறவில்லையே...சார் !

    நீங்கள் எப்படி உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி நம்பிக்கை வைகிரீர்களோ, நாங்களும் தங்கபதக்க வசூல் பற்றி நம்பிக்கை வைக்கிறோம் அவ்வளவே..உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு.....!

    மேலும்...உலகம் சுற்றும் வாலிபன் வசூல் மொத்த வசூலும் திரை அரங்கு வாரியாக நாட்கள் வாரியாக தயாரிப்பாளரோ அல்லது விநியோகச்தரோ பத்திரிகை விளம்பரம் கொடுத்து வந்துள்ளதா ? ( அதாவது ரிக்க்ஷாகாரன் 51 நாள் வசூல் விளம்பரம்...அல்லது பட்டிக்காடா பட்டணமா 6 வார திரை அரங்கு வாரியான விளம்பரம் போல ) அல்லது அப்படி வந்த விளம்பரத்தை அடிபடையாக வைத்து வசூல் பற்றி இங்கு தகவல் புனயபட்டுள்ளதா ? அதுவும் இல்லை...! இதே நிலை தான் தங்கபதக்கம் திரைப்படத்திற்கும்....!

    நீங்கள் எப்படி உங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் மற்றும் அவர்கள் கூறும் தகவலை வைத்து எதுவும் முறியடிக்கவில்லை...இல்லை..என்று கூறுகிறீர்களோ...அதே போல எங்களிடம் உள்ள தகவலை வைத்து நாங்களும் எங்கள் திரைப்படத்தின் வசூல் அதற்க்கு முன்னர் வந்த வசூல் சாதனையை முறியடித்தது ..தங்கபதக்க வசூலை திரிசூலம் முறியடித்தது என்று கூறினேன்....இதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை..!

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு ! அவ்வளவே ! இந்த பக்குவத்தை பற்றிதான் பேசினேன் !

    நீங்கள் குறிப்பிட்ட பணமா பாசமா பிரிண்ட் கிடைக்கும் பட்சத்தில் அதனை நானே வெளியிட்டு...பணமா பாசமா என்றும் வசூல் கொடுக்கும் படம் என்பதை உங்களுக்கு நிச்சயம் புரியவைப்பேன்...இந்த otr ..atr ...கான்செப்ட் எல்லாம் சும்மா நமது வசதிக்கு ஏற்ப பேசுவது...அவ்வளவுதான்..! பிரிண்ட் கிடைக்கும் பட்சத்தில், பிரிண்ட் போடும் திரை அரங்கங்கள் கணிசமாக இருக்கும் பட்சத்தில் எல்லாமே atr ரக படங்களே !

    மறக்க முடியுமா, கவலை இல்லாத மனிதன், முகம்மது பின் துக்ளக், பத்ரகாளி மற்றும் பல படங்கள் சென்னை நகரை தொடர்ந்து வளம் வந்து...18 போர்டு, 21 போர்டு அரங்கு நிறைவு கண்ட நிகழ்சிகள் தாராளம் உண்டு....சம்பாதித்தபின்னர்...யாரும் ஒரு polyster பிரிண்ட் போட்டதாக தெரியவில்லை...அவர் அவர் ....திரை உலகம் நலிவடைய நலிவடைய இந்த தொழிலில் சம்பாதித்ததை வைத்து வேறு வேறு தொழிலில் சென்று விட்டார்கள் !

    இதுதான் உண்மை...அல்லாது மற்ற படங்கள் விநியோகித்தவர்கள் எல்லாம் ஓட்டாண்டியாய் போகவும் இல்லை...மக்கள் திலகம், நடிகர் திலகம் படங்களை சாதரணமாக மறு வெளியீடு பிரிண்ட் மூலம் வெளியிட்டவர் எல்லாம் கோடீஸ்வரகள் ஆகவும் இல்லை !

    இந்த துறையில் அதிக நாட்டம் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் அல்லது ரஜினிகாந்த், கமலஹாசன் அல்லது சரத்குமார் அல்லது இதர நடிகர்கள் படங்களை வைத்து தொடர்ந்துகொண்டிருக்கிரார்கள். இவ்வளவு தான் விஷயம்..! இதற்க்கு எதற்கு நமக்குள் இவ்வளவு buildup ?

    அன்புடன்

    rks

  7. #1935
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஒட்டப் செட்டப் கெட்டப் கெட்டிக்காரர்களின் மாறுவேட மதுர கீதங்கள் / fancy super songs!

    கெட்டப் கெட்டிக்காரர் 1 : மக்கள் திலகம் MGR

    மாறுவேட மதுரம் 2: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் / குடியிருந்த கோயில்

    ஆடல் பாடல் அமர்க்களங்களில் அதிக அளவு மனதை ஈர்ப்பது படுவேகமான ஸ்டெப்புகளில் பலே பலே என்று உற்சாகக் கூக்குரலில் பட்டையைக் கிளப்பும் பஞ்சாப் சிங்குகளின் பங்கரா நடனமே ! இயல்பாகவே மக்கள் திலகத்தின் முகவாகுக்கு எல்லா மாறு வேடங்களுமே ஜாடிக்கேற்ற மூடியாக அசத்தலாகப் பொருந்தியதை நாம் மனமகிழ்வுடன் ரசித்திருக்கிறோம் !
    நடனத் தாரகை எல் விஜலட்சுமியுடன் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம் பெற்ற காலத்தை வென்று வளரும் நடனக் கலைஞர்களுக்கும் ஒரு முன் மாதிரியாக இன்றளவும் நின்று நிலைத்திட்ட ஆடலுடன் பாடலை கேட்டு நடனக் காட்சியமைப்பில் அவருக்கு இணையாக ஆட வேண்டும் என்ற உந்துதலில் மக்கள் திலகம் இவ்வகை நடன அசைவுகளைப் பலமுறை சலிக்காமல் பயிற்சி செய்ததன் விளைவே இன்று தொழில்முறை நடனக் கலைஞர்களும் வியந்து போற்றும் வண்ணம் செதுக்கப் பட்ட இப்பாடலின் சுறுசுறு விறுவிறு மொறுமொறு ஆடல் நிகழ்வு !!


    எனது கணிப்பில் இரண்டாவதாக வரிசைப் படுத்தப் பட்டாலும் MGR என்றதும் உடனே நினைவில் மேலேறி வருவது இந்த சிங் கெட்டப்பே!

    Last edited by sivajisenthil; 13th August 2015 at 09:53 PM.

  8. Likes ainefal liked this post
  9. #1936
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    "மேலும் பிரசன்னா என்ற வழககறிஞர் திரையுலகில் போற்றப்படவேண்டிய நடிகர் திலகத்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படாதது பற்றியும் இந்த சிலை விவகாரம் தமிழகத்திற்கு ஒரு துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்"

    இந்த பிரசன்னா தி.மு.கழக வழககறிஞர் சரிதானே? பிரசன்னா உனது தலைவர் மற்றும் கழகம் தமிழகத்தில் 27th ஜனவரி முதல் 30th ஜனவரி 1991 வரை, பின்பு 13th மே 1996 முதல் 14th 2001 வரை அதை தொடர்ந்து
    13 th2006 முதல் 14th 2011 ஆட்சியில் இருந்தது. இந்த கால கட்டத்தில் உங்கள் தலைவருக்கு 2ஜீ, 3ஜீ மற்றும் 4ஜீ மட்டும் தான் தெரிந்ததா? அப்போது சிவா
    "ஜி" தெரியவில்லையா? நடிகர் திலகத்துக்கு துரோகம் புரிந்த கட்சியை சார்தவன் நீ. அவரை பற்றி பேசுகிறாய். நடிகர் திலகம் அவர்களுக்கு எந்த நன்மை ஏற்பட்டாலும் அது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் கழக ஆட்சியில் மற்றும் தான் என்பதை உன்னால் மறுக்க முடியுமா?
    Last edited by saileshbasu; 13th August 2015 at 09:58 PM.

  10. #1937
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருநெல்வேலி- தின மலர் -08/08/2015









  11. Likes ainefal liked this post
  12. #1938
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    வங்ககடலோரம் விழிதிருக்கும் தங்க தலைவா. "சுனாமிக்கும்" தோல்வியை பரிசாக கொடுத்த எங்கள் புரட்சிதலைவர் மனித சக்தியின் ஏக பிரதிநிதி, இயற்கையை என்றும் வெல்லும் பொன்மனசெம்மலே. தங்களது புகழை யாராலும் "அசைக்க" முடியாது.
    Last edited by saileshbasu; 14th August 2015 at 10:23 AM.

  13. #1939
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    யுகேஷ்பாபு சார் அவர்களுக்கு நடிகர்திலகம் திரியின் சார்பிலும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்





    அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.

  14. Likes ainefal liked this post
  15. #1940
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை வண்டியூர் ஸ்ரீ பழனிமுருகன் திரைஅரங்கில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
    பிரம்மாண்ட வெற்றிபடைப்பு, மற்றும் வெள்ளிவிழா படமான "அடிமைப்பெண் "
    கடந்த 08/08/2015 முதல் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது.


    நான், நண்பர்கள் ஹயாத் மற்றும் நாகராஜன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் 09/08/2015 அன்று மேட்னி காட்சி பார்த்து ரசித்தோம். ரசிகர்கள் ஆரவாரம் நன்றாக இருந்தது. சமீபத்தில் இந்த மாதிரி நல்ல பிரிண்ட் பார்க்கவில்லை. அரங்க ஒலியமைப்பும் பிரமாதம். மாலைக் காட்சிக்கு மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் பெருந்திரளாக திரண்டு வந்திருந்தனர்.

    திரைப்படத்தின் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.



  16. Likes ainefal liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •