Page 42 of 401 FirstFirst ... 3240414243445292142 ... LastLast
Results 411 to 420 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #411
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனைகள் எல்லோருக்கும் தெரியாதா இப்போது என்ன அவசியம் என்று ஒருநண்பர் கேட்டார் !
    சிவாஜி ரசிகர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் ! சிவாஜி மற்ற எந்த ஒரு நடிகரை விடவும் சிறந்த நடிகர் என்றும் நடிப்பில்
    அவரை மிஞ்சும் ஒரு நடிகர் இன்னும் பிறக்க வில்லை என்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் , இல்லைஎன்று நடிப்பவர்கள் பற்றி
    நாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை! ஆனால் சிவாஜி மற்ற எல்லா நடிகர்களையும் விட அதிக சாதனைகளை படைத்தார் என்ற உண்மை
    மக்களிடம் சென்று அடையவில்லை! அன்று முதல் இன்று வரை பத்திரிக்கைகள் அவரை மிக சிறந்த நடிகராக மட்டுமே செய்திகள் வெளிஇட்டார்களே
    அன்றி அவரின் பட சாதனைகளை பற்றி பெரிதாக செய்திகள் இட்டதே இல்லை ! அரசியல் காரணமாக 1967 க்கு பிறகு அவரின் திரைசாதனைகள்,
    மறைக்க பட்டன! மேலும் அரசியலில் சிவாஜி வெற்றிபெறாமல் போனதால் இன்றைய தலைமுறையினர் அவரின் நடிப்பு திறன் பற்றி ஓரளவு
    தெரிந்து கொண்டாலும ,அவரின் பாக்ஸ்ஆபீஸ் சாதனைகளை அறியவில்லை! அரசியலில் வெற்றி பெற்றவர் தான் சினிமாவிலும் அதிகம்
    சாதித்து இருப்பார் என்று நம்புகிறார் கள் ! எனவே தான் என்னால் முடிந்த தை மக்களுக்கு தெரியபடுத்துகிறேன்!
    சிவாஜியின் அரசியல் பற்றியும் வரும் நாட்களில் எழுதும் எண்ணம் உள்ளது !
    என் பதிவுகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் ! ஆனால் நான் எதை பற்றி பதிவிட்டாலும், அந்த செய்திகளில் உண்மை மட்டுமே இருக்கும்!
    நன்றி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #412
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நண்பர் திரு.பாஸ்கர் அவர்களே!



    சற்று தாமதமான வரவேற்பிற்கு மன்னிக்கவும்.

    வருக! வருக! என நடிகர் திலகம் திரிக்கு தங்களை மனதார வரவேற்கிறேன்.

    நடிகர் திலகத்தின் சாதனைகளை, சத்திய உண்மைகளை உரக்க உரைக்கும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி!

    தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.

    திருப்பம் பதிவைப் படித்து மனமுவந்து பாராட்டியதற்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Thanks Russellbzy thanked for this post
  5. #413
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முரளி சார்!

    'திருப்பம்' பதிவைப் படித்து பாராட்டியதற்கும், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டிருந்த காட்சியும் அருமையே! முதலில் நண்பர் ஜெய்யிடம் நட்பு பாராட்டி பின் அவர் போக்கு சரியில்லை என்று தெரிந்ததும் பிடிகொடுக்காமல் பேசுவது அமர்க்களம். இந்தக் காட்சியில் தலைவரது டயலாக் டெலிவிரி அசாதாரணமாக, அலட்சியமாக, அற்புதமாக இருக்கும். இந்தக் காட்சியைப் பற்றிக் கூட தனியே எழுதலாம். அவ்வளவு சிறப்பான காட்சி.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks eehaiupehazij thanked for this post
  7. #414
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Baskar Trichi View Post
    சிவாஜியின் சாதனைகள் எல்லோருக்கும் தெரியாதா இப்போது என்ன அவசியம் என்று ஒருநண்பர் கேட்டார் !
    சிவாஜி ரசிகர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் ! சிவாஜி மற்ற எந்த ஒரு நடிகரை விடவும் சிறந்த நடிகர் என்றும் நடிப்பில்
    அவரை மிஞ்சும் ஒரு நடிகர் இன்னும் பிறக்க வில்லை என்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் , இல்லைஎன்று நடிப்பவர்கள் பற்றி
    நாம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை! ஆனால் சிவாஜி மற்ற எல்லா நடிகர்களையும் விட அதிக சாதனைகளை படைத்தார் என்ற உண்மை
    மக்களிடம் சென்று அடையவில்லை! அன்று முதல் இன்று வரை பத்திரிக்கைகள் அவரை மிக சிறந்த நடிகராக மட்டுமே செய்திகள் வெளிஇட்டார்களே
    அன்றி அவரின் பட சாதனைகளை பற்றி பெரிதாக செய்திகள் இட்டதே இல்லை ! அரசியல் காரணமாக 1967 க்கு பிறகு அவரின் திரைசாதனைகள்,
    மறைக்க பட்டன! மேலும் அரசியலில் சிவாஜி வெற்றிபெறாமல் போனதால் இன்றைய தலைமுறையினர் அவரின் நடிப்பு திறன் பற்றி ஓரளவு
    தெரிந்து கொண்டாலும ,அவரின் பாக்ஸ்ஆபீஸ் சாதனைகளை அறியவில்லை! அரசியலில் வெற்றி பெற்றவர் தான் சினிமாவிலும் அதிகம்
    சாதித்து இருப்பார் என்று நம்புகிறார் கள் ! எனவே தான் என்னால் முடிந்த தை மக்களுக்கு தெரியபடுத்துகிறேன்!
    சிவாஜியின் அரசியல் பற்றியும் வரும் நாட்களில் எழுதும் எண்ணம் உள்ளது !
    என் பதிவுகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் ! ஆனால் நான் எதை பற்றி பதிவிட்டாலும், அந்த செய்திகளில் உண்மை மட்டுமே இருக்கும்!
    நன்றி
    நன்றி பாஸ்கர் அவர்களே நீங்கள் கூறுவது உண்மைதான்


    தங்களுடைய பதிவுகள் மூலம் சிவாஜி புகழ் பரவுவது மட்டுமல்லாமல் திருச்சியின் புகழும் தங்கள் மூலம்
    பரவட்டும். ஏனெனில் எல்லா கால கட்டத்திலும் திருச்சியில் சிவாஜியின் படங்கள் அளவில்லா சாதனைகளை அள்ளி குவித்திருப்பதை உலகுக்கு உணர்த்துங்கள்


    தொடர்ந்து படங்களை வெளியிட்டும் 50களில் 60களில் 70களில் 80களில் அவர் படைத்திட்ட முறியடிக்க முடியாத சாதனைகளை குறிப்பாக திருச்சியின் சாதனைகளை தெளிவாக எதிர்பார்கிறேன்


    தொடரட்டும் உங்கள் பணி

  8. Thanks Russellbzy, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  9. #415
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அங்கும் இங்கும் / Here and There 3

    தியாகம் 1976 / நடிகர்திலகம் / லட்சுமி

    நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ..ஒன்று மனசாட்சி!


    அமானுஷ் 1975 உத்தம் குமார் / ஷர்மிளா தாகூர்
    Last edited by sivajisenthil; 11th August 2015 at 10:25 PM.

  10. #416
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அங்கும் இங்கும் అక్కడ ఇక్కడ इधर उधर(அக்கட இக்கட/ இதர் உதர்) 4
    வசந்த மாளிகை /பிரேம் நகர்

    நடிகர்திலகம்





    ANR





    ராஜேஷ் கன்னா




  11. #417
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி 1952 முதல் 1988 வரை 36 வருடங்கள் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வெற்றி பவனி வந்தார் ! 1989 க்கு பிறகு அவருக்கு இதயத்தில் basemaker கருவி பொருத்தப்பட்டு டாக்டர்கள் இனி அதிகம் நடிக்க கூடாது,என்று கூறிய பிறகு,படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்து கொண்டார்! 36 வருடங்கள் வருடம் தவறாமல், சராசரியாக ஒரு வருடத்துக்கு ஏழு முதல் எட்டு படங்கள் நடித்த சிவாஜி 1989 1990 இரண்டு வருடங்கள் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை! 1991 முதல் கடைசியாக அவர் கடைசியாக நடித்த 1999 வரை ஒன்பது வருடங்களில் அவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை வெறும் 12 மட்டுமே !
    மேலும் அந்த 12 படங்களிலும் ஒரு படத்தில் கூட சராசரியாக சுமார் இரண்டு மணி 30 நிமிடங்கள் ஓடும் ஒரு திரைபடத்தில் சிவாஜி வரும் காட்சிகள் நாற்பது
    நிமிடங்களுக்கு மேல் இருந்ததில் லை ! சில படங்களில் அதை விடவும் குறைவாக வருவார்! இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவர் கடைசி காலத்தில்
    துக்கடா வேடங்களில் நடித்தார் என்று சிலர் கேலி பேசுவது வாடிக்கை ! அவர் வாய்ப்பின்றி சிலர் போல் சிறு வேடங்களில் நடிக்கவில்லை!
    உடல் நலம் இல்லா விட்டாலும் நெருங்கிய திரையுலக த்தினரின் வேண்டுகொளுக்காகவும் கடைசி வரை தமிழ் சினிமாவில் தன்னால் முடிந்த பங்களிப்பை
    அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் காரண மாகவும் கெளரவம் பார்க்காமல் பெருந்தன்மையுடன் நடித்தார்!
    இல்லை இல்லை அவர் கிடைத்த வேடத்தில் எல்லாம் நடித்தார் என்றால் நான் அப்படி கூறும் நண்பர்களை ஒன்று கேட்கிறேன் !
    சேரன் , பாலா, ks ரவிக்குமார், சுஹாசினி போன்றவர்களின் படங்களில் சிவாஜி உடல்நலம் காரணமாக நடிக்க மறுத்துவிட்டார் என்று அவர்களே
    கூறிய செய்திகளை படிக்கவில்லையா?
    பொதுவான ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டி இந்த விளக்கம் ! இனி 1952 முதல் 1988 வரை சிவாஜியின் சாதனைகள் காண்போம்!

  12. #418
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி தமிழ் திரையுலகில் படைத்த பல சாதனைகள் வேறு எவராலும் இன்றைய தினம் வரை முறியடிக்கப்பட வில்லை !
    அதற்கு முன்பு மற்றும் ஒரு விளக்கம்! வசூல் சாதனைகளை பொறுத்தவரை சிவாஜி உட்பட எந்த நடிகருக்கும் நிரந்தரமில்லை!
    மக்கள் தொகை பெருக்கம் உயரும் திரைஅரங்க கட்டணங்கள் போன்ற காரணங்களால் அடுத்தடுத்த கால கட்டங்களில் எந்த ஒரு படத்தின் வசூலும்
    வேறு ஒரு படத்தினால் முறியடிக்க பட்டே வந்திருக்கிறது! இது காலத்தின் கட்டாயம்! சுருக்கமாக ஒரு விளக்கம்!
    உலகம் சுற்றும் வாலிபன் ,திரிசூலம், முந்தானைமுடிச்சு ,முதல்மரியாதை, கரகாட்டகாரன், படையப்பா, சிவாஜி, தசாவதாரம்,துப்பாக்கி, மங்காத்தா
    என்று தொடர்ந்து இன்று பாகுபலியில் வந்து நிற்கிறது! இன்றைய 12/08/2015 நிலவரப்படி 85 ஆண்டுகள் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல்
    பெற்ற படம் பாகுபலி . அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அந்த தமிழ்படத்தின் நாயகன் ஒரு தெலுங்கு நடிகர்!
    எனவே வசூல் சாதனைகளை விட்டுவிட்டு 12/08/2015 இன்றைய தினம் வரை முறியடிக்க இயலாத சிவாஜியின் தனிப்பெரும் சாதனைகளை
    காண்போம் !
    நன்றி !

  13. Thanks RAGHAVENDRA thanked for this post
  14. #419
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    வரும் ஆகஸ்ட் 15ம் நாளன்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில், என்றென்றும் எம்.எஸ்.வி. என்ற தலைப்பில் மெல்லிசை மன்னரைப் பற்றி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் பார்வையாளராக அடியேனும் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். இரவு 8 முதல் 10 வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மெல்லிசை மன்னருடன் பணி புரிந்த திரு மதுரை ஜி.எஸ்.மணி, ஒலிப்பதிவு நிபுணர் திரு சம்பத், திருமதி வாணி ஜெயராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளனர். திருவாளர் முகேஷ் மற்றும் திருமதி மாலதி ஆகியோர் சில பாடல்களைப் பாடியுள்ளனர்.

    தவறாமல் காணுங்கள்.

    நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Thanks Russellbzy thanked for this post
  16. #420
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன் சார்
    நவராத்திரி நிழற்படங்களின் தொகுப்பு..
    பார்க்கப் பார்க்க பிரமிப்பு
    இதன் பின் தெரிவது
    தங்களின் அயராத உழைப்பு...

    தங்களுக்கு உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellbzy thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •