Page 92 of 401 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #911
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    வியப்பு.

    ஒரு சிங்கம்,
    குதிரை மீது
    எறி வருவதை
    எல்லோரும்
    வியப்புடன்
    பார்க்கிறார்கள்.

  2. Likes uvausan, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #912
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஆதவன் ரவி அவர்களே
    வருக வருக...
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #913
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajidhasan View Post
    மீண்டும் சிவாஜி தாசன்!

    கடந்த சில மாதங்களாக இந்த திரியில் பங்களிப்பு ஏதும் செய்யாமல் வெறும் பார்வையாளனாக இருந்த என்னிடம் இப்போது ஏன் நீங்கள் எதுவும் எழுதுவதில்லை என்று திரு. ராகவேந்தர் சார், திரு. முரளி சார், திரு. நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் இந்த திரியின் 16ம் பாகத்தின் துவக்கத்தில் வாழ்த்து சொல்ல வந்தபோது திரு. சிவாஜி செந்தில் சார் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. மேலும் கடந்த ஞாயிறு அன்று சாந்தி திரையரங்கில் மாலைக் காட்சி திரு. முரளி சார், திரு.நெய்வேலி வாசுதேவன் சார் மற்றும் அவரது மகன் ஆகியோரோடு அமர்ந்து ரசித்தது ஒரு புது உத்வேகத்தை தந்துள்ளது. இனிவரும் காலங்களில் என்னுடைய பங்களிப்பு சிறப்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

    நட்புடன்
    சிவாஜிதாசன்
    வாருங்கள் வந்து நம் திரியை மெருகேற்றுங்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #914
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    ஆசான்.

    கற்றும் கொடுக்கும் இனம்
    தமிழனம்.

    நடிப்பென்றால்
    இதுதானென்று,
    கற்றுக் கொக்கும்
    தமிழனத்திற்கே
    கற்றுக் கொடுத்தவர்...
    நீங்களன்றோ..?

  7. #915
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2011
    Posts
    0
    Post Thanks / Like
    அதிரடி கவி, ஆதவன் ரவி அவர்களுக்கு, வாழ்த்துக்கள்!

    அழகான பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட எல்லா ஆண்களும் மட்டுமின்றி நடிகர் திலகம் அவர்களை ரசிக்கின்ற ஒவ்வொருவரும் கவிஞர்கள் தான் என்பதை நிருபித்திருக்கின்றீர்கள்.

    நட்புடன்
    சிவாஜிதாசன்

  8. Likes Russellmai liked this post
  9. #916
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2011
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி lic முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சி மையத்தின் சார்பாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் நான் கலந்து கொண்டு உரையாடினேன். அதில் நடிகர்திலகம் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளேன். அதனுடைய கானொளி விரைவில் உங்கள் பார்வைக்கு...

    நட்புடன்,
    சிவஜிதாசன்

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #917
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajidhasan View Post
    கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி lic முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சி மையத்தின் சார்பாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் நான் கலந்து கொண்டு உரையாடினேன். அதில் நடிகர்திலகம் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளேன். அதனுடைய கானொளி விரைவில் உங்கள் பார்வைக்கு...

    நட்புடன்,
    சிவஜிதாசன்
    அருமை சிவாஜி தாசன். ஆவலுடன் காத்திருக்கிறேன். காத்திருக்கிறோம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #918
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome Mr Athavan Ravi Sir to this wonderful & glorious thread of ACTING GOD as well as EMPEROR OF BOX OFFICE OF

    WORLD CINEMA.

  13. #919
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தமிழன் கடமை



    ஒரு விஷயம்.

    'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அது ஒரு உலகப் பொதுமறை போல. திருக்குறள் போல. அவர் இவர் என்றில்லாமல் எல்லோரும் சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை உடையது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போற்றி வைத்துக் கொண்டாடப்படுவது. கொண்டாடப்படவும் வேண்டியது.

    நடிகர் திலகம் ரசிகளுக்கென்று பல படங்கள் உள்ளன. தெய்வ மகன், ராஜா, திரிசூலம் இப்படிப் பல. இவைகளும் பொது மக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றாலும் சிவாஜி ரசிகன் என்பவன் இந்தப் படங்களின் மேல் அதிக உரிமை எடுத்துக் கொள்வான். சொந்தமும் கொண்டாடுவான்.

    கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் படங்களெல்லாம் அப்படி அல்ல. சிவாஜி ரசிகர்களையும் மீறி உலகமே கொண்டாடப்பட வேண்டிய உன்னதங்கள். கொண்டாடிய உன்னதங்களும் கூட.

    உதாரணத்திற்கு நடிகர் திலகத்தின் படம் ஒன்றையே எடுத்துக் கொள்வோம். 'திரிசூலம்' நடிகர் திலகம் நடித்த படங்களில் வசூலில் முதன்மையானது. கட்டபொம்மனை விடவும் கூட. இது அனைவரும் அறிந்தது. இப்போது ஒரே நேரத்தில் கட்டபொம்மனும், திரிசூலமும் மறுவெளியீடு காண்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தின் பொதுவான தந்தையாக ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவி குழந்தைகளை முதலில் கட்டபொம்மன் படத்திற்குதான் அழைத்துச் செல்வான். பிறகு சிவாஜி ரசிகனாக தான் மட்டுமோ அல்லது குடும்பத்தோடு சேர்ந்தோ திரிசூலம் பார்ப்பான். வசூலில் கொடிகட்டியது என்பதற்காக திரிசூலம் கட்டபொம்மனுக்கு இணையாகி விடாது.

    வசூல், ஓட்டம் இதையெல்லாம் தாண்டி ஒரு தமிழனால், அவன் சிந்திய ரத்தத்தால் நம் தமிழ்ப் பட உலகை உலக அளவில் தலை நிமிரச் செய்த ஒரு படம். உலகையே நம்மை திரும்பிப் பார்க்க வைத்த படம். இப்படி ஒரு நடிகன் ஒருவன் இருக்கிறானா என்று அனைத்து நாடுகளும் வியந்து வியந்து பார்த்த படம். விருதுகளை தமிழனுக்கு அள்ளித் தந்த படம். அந்த உன்னத நடிகனை 'இங்கு வந்து எங்கள் நாட்டுக்கு பெருமை சேர்' என்று அவரை அழைத்து அழைத்து மரியாதை அளிக்க வைத்த படம். இது யாருக்குப் பெருமை? தமிழராய்ப் பிறந்த நம் அனைவருக்கும்தானே! இந்தியனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும்தானே!

    ஜாதி, மத, இன, மொழி, ரசிக வேறுபாடுகளையெல்லாம் வேரறுத்து நம் பெருமையை அந்நியர் உணர வழிவகை செய்த படமல்லவா? இந்தப் படத்தின் வெற்றியில் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமையடைய வேண்டுமல்லவா? நம் தேச பக்தியை மீண்டும் நாம் வெளிப்படுத்த நமக்குக் கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பமல்லவா?

    பிள்ளைகளிடம் கட்டபொம்மன் கதையைக் காட்டி, பாடுபட்டு எப்படியெல்லாம் சுதந்திரம் பெற்றோம் என்று சுதந்திர உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டிய படமல்லவா? ஒரு அருமையான வாய்ப்பு அல்லவா?

    தாய், தந்தை, மனைவி மக்கள் என்று குடும்பத்துடன் சென்று தலை நிமிர்ந்து, நெளியாமல், வளையாமல் பார்த்து, ஆணி அடித்தாற் போன்று அமர்ந்து கட்டபொம்மனோடு வாழ்ந்து கண்ணீரோடு திரும்பும் கௌரவத்தை இது போன்ற ஒரு சில காவியங்கள் மட்டும்தானே அளிக்க முடியும்? இன்றும் கூட குடுமபம் குடும்பமாக அரங்குகளில் கட்டபொம்மனைக் காண்கிறார்கள் என்றால் அது யாருக்குப் பெருமை? கட்டபொம்மனை சிறுமைப்படுத்துவதால் அது யாருக்கு இழிவு? தமிழர்களாகிய நமக்கேதானே? வசூல், இத்தனை நாட்கள் ஓடியதா... கூட்டம் கூடியதா... இல்லையா என்றெல்லாம் விவாதிப்பதற்கு அப்பாற்பட்ட ஒரு அற்புதக் காவியமல்லவா இது! பேதங்கள் மறந்து ஒவ்வொருவரும் அந்த வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த வீரனின் பெருமையை பறை சாற்ற வேண்டிய நேரமல்லவா? பாகுபாடுகளுக்கும், வேறுபாடுகளுக்கும் இடம் தராமல், பழி உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் நீ பெரியவன்..நான் பெரியவன் என்ற அற்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் அனைவரும் உண்மையான தமிழர்களாக கட்டபொம்மனை கண்டு அவனை நினைவு கூர்வது ஒன்றே நாம் தமிழன் என்பதை உணர்த்தும். பறை சாற்றும். அதுவே கட்டபொம்மனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியும், கடமையும் ஆகும்.

    சிவாஜியின் புகழ் பரப்பவோ அல்லது இந்தப் படம் வசூலில் எல்லாப் படங்களையும் முந்த வேண்டும் என்ற சொற்ப சந்தோஷங்களுக்காகவோ இந்தப் பதிவை நான் இட வில்லை. உலகம் முழுதும் என்றோ மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்ட காவியம்தான். இப்போது ஒவ்வொரு தமிழனும் இந்தப் படத்திற்கு அளிக்க வேண்டிய பங்கைப் பற்றித்தான், முக்கியத்துவத்தைப் பற்றிதான் நட்பு ரீதியாக நினைவுபடுத்துகிறேன். அதுவே அன்றி வேறு எந்த நோக்கமும் என் பதிவில் இல்லை.

    இப்போதைய இளையதலைமுறைகளுக்கு நம் கட்டபொம்மனைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஏற்றார் போல டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு புதுப் பொலிவுடன் வந்திருப்பதால் பெரியவர்களாகிய நமக்கு இன்னொரு அருமையான சந்தர்ப்பம். பழைய படம்தானே என்று அவர்கள் சலிக்கக் கூடும். ஆனால் நம் ஒவ்வொருவரின் கடமையும் என்னவென்றால் அவர்களை அழைத்து சென்று அந்த மாவீரனின் வீர வரலாற்றை அவர்களின் நெஞ்சில் பதிய வைப்பதே ஆகும். அவர்கள் மனதில் சிவாஜி என்ற நடிகன் பதிவதைவிட கட்டபொம்மன் என்ற கருஞ்சிறுத்தைதான் பதிவான். அவர்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டுவான். அறிவை ஊட்டுவான். வீரத்தை ஊட்டுவான். நல்ல தமிழை ஊட்டுவான். தன்மானத்தை ஊட்டுவான். அடிமைத்தனத்தை விரட்டுவான்.

    அப்படிப்பட்ட பெருமை தரக் கூடிய விஷயத்தை நாம் தவற விடலாமா?

    எனவே அனைவரும் மனமாச்சரியங்கள் மறந்து அந்த மாபெரும் வீரனை குடும்பத்துடன் சென்று கண்டு தரிசித்து வாருங்கள். ஒரு தகப்பனாக பிள்ளைகளுக்குத் தன் இன்னொரு கடமையைச் செய்யுங்கள். பெருமை தானாக உங்களை வந்து அடையும்.

    இது ஒன்றே அனைவரிடமும் நான் வேண்டுவது.
    Last edited by vasudevan31355; 26th August 2015 at 11:41 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks sss thanked for this post
    Likes sss, J.Radhakrishnan, Russellmai liked this post
  15. #920
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    எவரால் முடியும்..?

    தம்பியின் ஒற்றனை
    அவசரப்பட்டு
    தவறாகக் கருதி
    சாட்டையால் அடித்து..

    பின் தனது தவறுணர்ந்து
    அவனிடமிருந்தே
    சாட்டையடி தண்டனை
    பெற்றுக் கொள்ளத்
    தயாராகும் போது..

    அந்த நல்ல ஒற்றன்,
    மாறுவேடத்திலிருப்பது
    மன்னன் என்பதறியாமல்
    மாளாத ஆத்திரத்துடன்
    மன்னனின்
    மடி பிடித்து இழுக்கிறான்.
    ---------
    பேட்டி காணப்
    போன இடத்தில்,
    வீரனின் விழி நெருப்பில்
    பொசுக்கப்பட்ட அவமானத்தில்,
    ஜாக்ஸன் துரையும்
    மடி மீது
    கை வைத்திழுக்கிறான்.
    ----------
    தவறுணர்ந்து
    தனக்கான தண்டனையாக
    அந்த முதல் மடியிழுப்பைப்
    புன்னகையோடு
    ஏற்றுக் கொள்ளும்
    நடிப்பின் வெளிப்பாடு...

    அதிகார போதையும்,
    ஆணவமும் கூடிப் போய்
    ஆற்றல் மிக்க வீரனை
    அவமதிக்கும் நோக்கத்தில்
    செய்யப்படும்
    இரண்டாம் மடியிழுப்புக்கு
    வெடிக்கும் கோபத்தின்
    வெளிப்பாடு..

    எங்கள் நடிகர் திலகம் போல்
    இரண்டையும்
    வித்தியாசப்படுத்த
    எவரால் இயலும்..?

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •