Page 100 of 401 FirstFirst ... 50909899100101102110150200 ... LastLast
Results 991 to 1,000 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #991
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மணிமண்டப அறிவிப்பிற்கான பாராட்டுக்களை, அலைபேசியிலும், திரியிலும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது எண்ணமெனும் நானெடுத்து வண்ண மலர்ப் பூத்தொடுத்து நன்றியெனும் மாலைதனை காணிக்கையாக்குகிறேன்.

    முதலில் நான் ஏற்கனவே இத்திரியில் கடந்த வருடங்களில் குறிப்பிட்ட மாதிரி, குறிப்பாக நான் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் இணைந்த பிறகுதான் கடந்த சில வருடங்களாக, நண்பர்களால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படும்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன்.

    அவற்றில் இந்த வருடப் பிறந்தநாள் என்பது எனக்கு, என் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாளாக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை. நேற்று காலையிலிருந்து, நள்ளிரவு வரை வந்த அலைபேசி அழைப்புகளைப் பற்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை. இரவு தூக்கமும் இல்லை. ஏதேதோ நடிகர்திலகம் பற்றிய பல நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டே இருந்தது. இன்னும் பல அலைபேசி அழைப்புகளுக்கு (missed calls ) (திரு.நெய்வேலி வாசு சார் உள்பட) பதிலலளிக்கவில்லை . நான் எடுத்து பேசவில்லை என்ற வருத்தமும் சிலருக்கு இருக்குமே என்ற கவலை எனக்கு.

    இதற்கெல்லாம் யார் காரணம்? நடிகர்திலகத்திற்கு சேவை செய்ய, அவர் புகழ் பரப்ப, என்னைவிட மிகவும் மூத்த ரசிகர்கள் பலர் இருக்க, விண்ணிலிருந்து நடிகர்திலகத்தால் எனக்கிடப்பட்ட உத்தரவா? அல்லது நான் முற்பிறவியில் செய்த பாக்கியமா?

    நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபம் கோரி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கடந்த ஜூலை 21 ஆம் நாள், சென்னையில், நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு இக்கோரிக்கைக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள், நமது ரசிகர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.

    ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதத்தில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் பணி தொடங்கப்பட்டு, மணிமண்டபம் விரைவில் அமையவேண்டும் என்று உங்களைப் போலவே நானும் விழைகிறேன்.

    மனதில் தோன்றும் பலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உணர்ச்சி மிகுதியால் வார்த்தைகள் வரவில்லை.

    எதுவாக இருந்தாலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட எனக்கு இறைவன் சக்தியை அளிக்கவேண்டும், நண்பர்களின் தொடர் ஆதரவும் வேண்டும் என்பதே இப்பிறந்தநாளில் நான் விடுக்கும் கோரிக்கை, வேண்டுகோள், பிரார்த்தனை.

    மீண்டும் அனைவருக்கும் நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #992
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Dear CHANDRASEKARAN,

    Happy Birthday. God bless you.

    Regards.

  4. #993
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எந்த தேவதையின் குரலோ?

    "நீதி "
    -நீங்கள் சொல்லும்
    "புளியா மரம்" உச்சரிப்புக்கு
    அடுத்தவன் தொடையிலடித்துச்
    சிரித்திருக்கிறோம்.

    அம்மா..!

    அந்த மாதிரியான
    உற்சாகச் சிரிப்பை
    மீண்டும் தந்தீர்கள்..இன்று!
    ------
    "கலாட்டா கல்யாணம்"
    -பொம்மை போலவே ஆடி
    புருவம் உயர்த்த வைத்தீர்கள்.

    அம்மா..
    பூரித்து, உங்களை வியந்து
    மீண்டும்
    புருவம் உயர்த்த வைத்தீர்கள்..
    இன்று.
    --------
    "அன்பைத் தேடி"
    - சாவிலா வீட்டின்
    சாம்பல் கொணரக் கிளம்புகிற
    பெண்ணாக
    எங்கள் இதயம் நெகிழ்த்தினீர்கள்.

    அம்மா..!
    மீண்டுமெங்களை
    நெகிழச் செய்தீர்கள்..இன்று.
    -------
    "அவன்தான் மனிதன்"
    -அழகாய் இசை பாடி,
    புன்னகை முகத்துடன்
    எம் தலைவனை
    ஆட வைத்ததீர்கள்.

    அம்மா..!
    தலைவனின் ரசிகர்களை
    சந்தோஷமாய்
    ஆட வைத்தீர்கள்..இன்று.
    ---------
    அந்த உன்னதக் கலைஞனுக்கு
    நீங்கள் செய்யவிருக்கிற
    கௌரவம் மகத்தானது.

    அந்த கலைஞன்
    உயிரோடும்,உயிர்ப்போடும்
    வாழ்ந்த நிமிஷங்களில்..
    கலை செய்யும் மும்முரத்தில்
    கணப் பொழுதும்
    ஓய்வு கொண்டதில்லை.

    அரசு கட்டப் போகும்
    அந்தப் புது வீட்டிலாவது
    அய்யன்
    புகழ் உறக்கம் கொள்ளட்டும்.

    அம்மா..!
    உங்களின் அறிவிப்புக்குப் பின்
    சட்டசபை மேசைகளில்
    எழுப்பப்பட்ட
    அந்த சத்தம்..
    எங்களின் நன்றிப் பாடலுக்கான
    தாளமாகிறது.
    --------
    அம்மா..!
    இனியது தந்த உங்களை
    இதயம்
    நன்றியுடன் நினைக்கும்.

    இன்றிரவு
    எங்கள் தலையணைகளை
    ஆனந்தக்கண்ணீர் நனைக்கும்.












    Sent from my GT-S6312 using Tapatalk

  5. #994
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2011
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான கவிதை திரு. ஆதவன் ரவி அவர்களே! இதை நீங்கள் முதல்வருக்கே அனுப்பி வைக்கலாம்!

    நட்புடன்,
    சிவாஜிதாசன்

  6. #995
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    நண்பர்களே, திரு சந்திரசேகர் அவர்களே, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!! நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அரசே கட்டித்தரும் என்ற செய்தி நமது கத்தில் ஒலிக்கிறது!!!

    ஆனால், தினமலர் இந்த செய்தியின் அடியில் சில அறிவு கெட்ட ஜீவிகள் அதைக் குறித்து தரம் தாழ்ந்து விமரிசனம் செய்திருக்கிறார்கள், தயவு செய்து நமது நண்பர்கள் அங்கு சென்று தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  8. #996
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    இன்று (27-08-2015) இரவு 9 மணி முதல் 10 மணி வரை, மக்கள் தொலைக்காட்சியில் "அச்சமில்லை" என்ற விவாத நிகழ்ச்சியில் - நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபம் குறித்த விவாதத்தில் பங்கேற்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, sss liked this post
  10. #997
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    NT's Numerology : Part 3 / Number Two

    எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
    எண் இரண்டு
    இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
    இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
    எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் !
    நடிகர்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !

    காதல் என்பது சுகானுபவமே ..காதலர்கள் கருத்தொருமித்து காத்திடும் வரை...கருத்து விரிசலில் காதல் சுவர் ஆட்டம் கண்டால் ...மனித மனமும் விரிசல் கண்டு...இரண்டாகிறதே!
    காதலியை நினைத்து வாழ்ந்திட ஒரு மனம் ....அவளை மறந்து வாழ்ந்திட இன்னொரு மனம்....Dr Jekyll and Mr Hyde போல!!

    இரண்டின் முதலிடம்: இரண்டாட்டத்தில் திண்டாடும் வசந்த மாளிகை வேந்தர் !!



    Place 2 : Raja / இரண்டிலொன்று நீ என்னிடம் சொல்லு ..பூவா தலையா...காயா பழமா...உண்டா இல்லையா....



    இரண்டு கைகள் நான்கானால் ....இருவருக்கேதான் எதிர்காலம்!!

    [url]https://www.youtube.com/watch?v=G8U1ACU5Hdk
    Last edited by sivajisenthil; 27th August 2015 at 12:46 PM.

  11. Likes Russellmai, ainefal liked this post
  12. #998
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது நண்பர் ஒருவர்அடிக்கடி ஒரு காட்சியை வியந்து சொல்லிக்கொண்டே இருப்பார்.அது சுமதி என் சுந்தரி படத்தில் வரும் ஒரு ஆலயமாகும் மங்கை மனது பாடல் தான்.அவசரப்பட்டு வேறு சிந்தனைக்கு ஓடி விடாதீர்கள்.விஷயம் பாடலைப் பற்றியதல்ல.பாடல் நல்ல பாடல்தான்.
    நண்பர் குறிப்பிடும் காட்சி ....?

    பாடலின் ஆரம்பம் இசையில் துவங்கும்.சரியாக ஏழு அல்லது எட்டு விநாடிகள் சென்றபின் அந்தக்காட்சி காண்பிக்கப்படும்.
    நண்பர் சொல்கிறார்...
    "பெட்டுல படுத்து தூங்கிட்டிருக்கிற மாதிரி தலைவரை காட்டுவாங்க பாருங்க.சும்மா ரெண்டு மூணு செகண்ட் தான்யா அந்த சீன் இருக்கும்.என்ன ஒரு தெளிவு ,என்ன ஒரு பொலிவு அந்த முகத்தில்.கள்ளம் கபடம் தெரியாத குழந்தையைப் பார்க்கும்போது என்ன இன்பம் கிடைக்குமோ அது போல இருக்கும் அந்த முகம்.எனக்கு அந்த ஒரு சீனு போதும்.

    இன்னும் சொல்லிக்கொண்டே போவார்.நான் எழுத வந்தது வீரபாண்டிய கட்டபொம்மனின் நித்திரையைப்பற்றி.

    தனது அவசர முடிவால்ஒற்றனை தவறாக சந்தேகிக்க நேர்வது,மேலும் கோபத்தில் அவனை சாட்டையால் விளாசுவது,மறுநாள் ஊமைத்துரையின் மூலம் உண்மை உணர்வது,தவறுக்கு பிராயச்சித்தமாக சவுக்கடி வாங்குவது என்ற பல கோர்வையான காட்சிகளை அடுத்து...

    சவுக்கடியால் ஏற்பட்ட காயங்களினால் சிரமப்படும் மன்னரைசாந்தப்படுத்த பாடல் ஒன்று பாடப்படுகிறது.பாடல் துவங்கும்போது வலது கையால் தலையைத் தாங்கி ஒருக்களித்துப் படுத்திருக்கும் அந்தகாட்சி சிலிர்க்க வைக்குமே.
    பாடல் முடியும் முன்னரே மன்னர் உறங்கி விடுகிறார்.இப்போது பார்க்க வேண்டுமே நடிகர்திலகத்தை. அவர் முகத்தை.என்ன ஒரு சாந்த சொரூபம்?
    அப்போது மந்திரி வருகிறார்.ஆங்கிலேய அதிகாரிஒருவர் மன்னரை பார்க்கவிரும்புவதாக சொல்ல ராணியார் மன்னருக்கு சுகமில்லை நாளை பார்க்கலாம் என்று சொல்ல அந்த சமயம் விழித்துக் கொள்ளும் மன்னர் சற்றுப் பொறுங்கள் வந்து விடுகிறேன் என்று சொல்வார்.நல்ல காட்சி.
    அடுத்து வரும் அவர் நடைக்கு அசராதவர்கள் உண்டோ?

  13. #999
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Shri. Chandrasekaran,

    Belated happy returns of the day.

    Your monumental efforts have finally yielded result.

    Great day and great news!

    Regards,

    R. Parthasarathy

  14. #1000
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •