Page 11 of 401 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #101
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dr. Abdul Kalam's sudden demise! A great loss to the humankind. Simple human being, who's an inspiration to generations.

    We pray to Almighty that the departed soul may rest in peace.


    R. Parthasarathy

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    A great loss to the entire nation !

    Kalaam sir has been an inspiration to almost every true Indian.

    His guarantee and confidence lecture with regard to Koodaankulam Power Project unfortunately went to the deaf years of the Govt intially due to dirty politics..!

    the project is now on and is safe !

    Such an asset to the nation !

    Regards
    RKS

  4. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  5. #103
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவுப் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை

    மிக்க நன்றி ரவிகிரண் சூர்யா, மேற்காணும் வீடியோவிற்கு.

    ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இதயத்தையும் பிளந்து அதன் உள்ளே இருக்கும் கருத்தை எடுத்து அப்படியே தன் உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் சீமான். அவருக்கு நமது உளமார்ந்த நன்றிகள்.

    யாரையும் எதிர்பார்க்காமல், நமது இதய தெய்வத்திற்கு நாமே எந்த விதமான நினைவு கட்டிடத்தையும் செய்து கொள்ளலாம். குறிப்பாக என் உள்மனதில் கிடக்கும் விருப்பமான அவரது திரைப்பட ஆவணக் காப்பகம், நூலகம், பிரார்த்தனைக் கூடம் போன்றவற்றை அவரும் வெளிப்படுத்தியிருப்பது உள்ளபடியே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அன்னை இல்லத்தைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் புகழைக் காக்க ரசிகர்களின் எண்ணங்களை அவர்களும் கொண்டுள்ளார்கள் எனத் தான் நான் நினைக்கிறேன். தனக்காக பொதுமக்களிடமோ அல்லது அரசிடமோ எந்த விதமான உதவியோ அல்லது பொருளோ பெறக்கூடாது, தன்னால் பொது சொத்திற்கு ஒரு பைசா கூட செலவு வரக்கூடாது என அவர் குடும்பத்தில் கூறியிருக்கிறார் என நான் கேள்விப்படுகிறேன். அதே போன்று எது செய்தாலு்ம் செய்து விட்டுத்தான் சொல்ல வேண்டும் எனவும் அவர் கட்டளையிட்டிருக்கிறார் எனவும் நான் கேள்விப்பட்டுள்ளேன். இந்த நிலையில் நடிகர் திலகத்தின் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் தாங்களே நினைவிடம் அமைக்கவும் அன்னை இல்லத்து நமது அன்புச் சகோதரர்கள் தயங்க மாட்டார்கள், அதில் அவர்கள் முதல் முயற்சி எடுக்கவும் முன் வருவார்கள், என்பது என்னுடைய நம்பிக்கை.

    என் தனிப்பட்ட எண்ணமாக நான் கூற விரும்புவது, அரசோ அல்லது அரசியல்வாதிகளோ செய்வதை விட பற்பல மடங்கு சிறப்பாக நடிகர் திலகத்திற்கு நினைவிடத்தை ரசிகர்கள் செய்வார்கள். அது அவருக்கு மட்டுமே நடக்கும். சந்திரசேகரின் விருப்பம் மட்டுமல்ல இது, அவரைப் போன்ற பல கோடி ரசிகர்களின் நீ்ண்ட நாள் விருப்பமும் கூட.

    சீமானின் உரையில் அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் அதையும் தாண்டி இந்நாட்டின் சிறந்த குடிமகனாக அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறிப்பிட்டுப் பேசியது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

    மேடையில் பேரவைத் தலைவரும் அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகியும் இணைந்து கலந்து கொண்டது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

    நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டோமானால் எதிர் காலத்தில் இந்நாட்டை ஆளப்போவது யார் என்பதை நம்முடைய சக்தியே தீர்மானிக்கும் என்பது உறுதி. அப்படிப்பட்ட பலம் வாய்ந்த சிவாஜி ரசிகர் பட்டாளம், காமராஜர் ஆட்சியை நடிகர் திலகம் சிவாஜியைத் தலைவராக ஏற்று யார் நடத்த முன்வந்தாலும் அவரை ஆதரித்து ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
    Last edited by RAGHAVENDRA; 28th July 2015 at 12:42 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #104
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    லட்சிய கனவு காணும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தாரக மந்திரம் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #105
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    லட்சிய கனவு காணும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தாரக மந்திரம் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
    My sincere condolences for one of the TRUE AND HONEST DIGNATORY OF OUR COUNTRY,

  8. #106
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நடிகர் திலகம் 16-வது பாகத்தை அமர்க்களமாக துவக்கிய நண்பர் சிவாஜி செந்தில் அவர்களுக்கு வாழ்த்துகள். தாமதத்திற்கு மன்னிக்க. இன்றே கண்டேன்.
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #107
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    மக்களின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்திய தேசத்தின் மாபெரும் இழப்பு. தமிழர் என்பதால் நமக்கு சற்று அதிகமும் கூட. அன்னாரின் மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
    .........-`҉҉´-
    -`҉҉´..)/.-`҉҉´-
    ....¨´“˜~.)/¸.~“˜¨
    ........¨´“˜~.“˜

  11. #108
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதில்தானே வாழ்கிறேன்...

    அதில்தானேன்னு ஆரம்பித்து வாழ்கிறேன்னு முடிக்கும் அந்த குரலில் என்ன மாயமோ?மந்திரசக்தியோ மனதை அப்படியே பிழிந்து விடுகிதே!
    வார்தைகளை இழுக்கிற இழுப்புக்குஎன்ன சக்தியோ,மனசு உடம்பு இரண்டையும்
    சொல்ல முடியாத உணர்ச்சிக்கு கொண்டு சென்றுவிடுகிறது.மனது என்ன பாரத்தில் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால்அந்த பாரத்தை மறக்கடிக்கச் செய்து விடும்.அடிமனதை ஊடுருவி அப்படியே உடம்பு முழுவதும் பரவி ஒவ்வொரு செல்லுக்குள்ளும்ஒரு மாற்றம் நிகழ்வதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.ஒரு தடவை கேட்டாலே பல மணி நேரத்திற்கு மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.

    பாடலுக்கு முன் வரும்ஹம்மிங்
    தாலாட்டுவது போல் இருக்கும்.
    அடுத்து செல்வமே யைஇழுத்தபின் சிறிது நிறுத்தி ஒரே முகம் வரைக்கும் மெல்லிசையில ஆரம்பிக்கும் பாடல் பார்க்கிறேன் என்பதில் ட்ரம்ஸ் பிரயோகித்தலில் வேகம் எடுக்கும்.பாடல் சூப்பர்என்பதை காட்டி விட்ட இடம் அது.நிமிர வைக்கும்இசை யில் எழும் மனதுஅதன்பின் வரும் வரிகளை உச்சரிக்கும் குரல்தான் நம்மை கிறங்கச்செய்கிறது.

    செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
    ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
    அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
    இளவானத்தில் தென்றல் வந்தாலும்

    மனதை அப்படியே தைத்துவிடும். மேகம்வந்தாலும்.,தென்றல் வந்தாலும்
    என்பதில் இசையும் குரலும் செய்யும்மேஜிக் என்ன என்றே தெரியாது.அப்படி ஒரு ஈர்ப்புக்கு உள்ளாவோம்.என்ன என்று தெரியாத இசை எப்படி மயங்க வைக்கும் என்று கேள்வி
    வந்தால்
    பதில் ;
    உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முடியுமா?என்பதுதான்.இசையும் கலையும் அது போல்தான்.

    உனைத்தானே நினைக்கிறேன்
    எனும்போது,
    நெஞ்சுக்கூட்டிலிருந்து மூச்சு வெளிவர தயங்கும்.முச்சு சத்தம் அனுபவிப்பதை தடை செய்யுமோ என்பதால்.

    என் ஆசைகள் நெஞ்சினில் நீயே
    அதில் ஆயிரம் கனவுகள் நீயே
    உணர்ச்சிகள் உச்சியை அடித்து உள்ளங்கால் வரை ஓடும்.கிளர்ச்சியை ஏற்படுத்தும் வார்த்தைகள்,குரலின் பாவம்,இசை.திரையில் பார்க்கும்போது
    விஸ்வரூபமாக்கும்.

    அதில்தானே வாழ்கிறேன்.
    பாமரனையும் மயக்கும்
    படித்தவனையும் மயக்கும்
    என்ன மாயமோ? மந்திரசக்தியோ?
    அந்தக் குரலுக்கு...

    நான் பாடும் கீதம் நீ தந்த ராகம்
    நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம்
    நாள்தோறுமேஆதாரமே நீயல்லவோ
    நாள் ஆயிரம் ஆராதனை நான் செய்யவோ
    ஓஓஓஓஓஓ,.....
    நதிமூலம்பார்க்கக்கூடாது.பார்க்கமுடியாது
    அதனால் என்ன பெருமை?ஆனால் சேரும் இடம்.?



    நடிகர்திலகத்தால் இப்பாடலுக்கு வரம் கிடைத்தது.
    ஓங்காரமாய் விளங்கும் நாதம்அதில்
    ரீங்காரமே இன்ப கீதம்
    Last edited by senthilvel; 28th July 2015 at 05:28 PM.

  12. #109
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks RAGHAVENDRA, eehaiupehazij thanked for this post
  14. #110
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செந்தில்வேல்
    தங்களுடைய எழுத்தின் சிறப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. தாங்கள் தேர்வு செய்யும் பாடல்கள், இங்கு அதிகம் அலசப்படாதவையாக இருக்கின்றன. அதற்கே தங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
    குறிப்பாக அமர காவியம் என்றாலே ஏதோ தீண்டத்தகாதைத் தொட்டு விட்டது போல் ஒதுக்கப் பட்டதை உடைத்து அதில் இருக்கும் அந்த அருமையான இசையை, மெல்லிசை மன்னரின் தனித்துவமான இசையமைப்பை, பாடகர் திலகத்தின் நெஞ்சை உருக்கும் குரலை, நினைவுகளை மீட்டும் வரிகளை, அனைத்தையும் தன் அமைதியான நடிப்பால் தூக்கிப் பிடித்துள்ள நடிகர் திலகத்தின் மேன்மையை அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    பாடலின் சூழ்நிலையை அறிந்து அந்த இசையில் அந்த பாத்திரத்தின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப மேடைப் பாடகரின் நிலைமைய இப்பாடலில் சித்தரித்திருப்பார். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் மெல்லிய சோகத்தை தன் முகத்தில் கொண்டு வந்து பார்ப்பவர்களுக்கு தன் முகத்திலேயே அந்த காட்சியின் உட்பொருளை உணர்த்திவிடுவார்.

    இதே போலத் தான் மோகன புன்னகை பாடலும். வாசு சார் சொன்னதை நான் அப்படியே வழிமொழிகிறேன். என் மனதில் உள்ளதை அப்படியே அவர் எழுதி விட்டார்.

    என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai, ifohadroziza liked this post
Page 11 of 401 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •