Page 133 of 401 FirstFirst ... 3383123131132133134135143183233 ... LastLast
Results 1,321 to 1,330 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1321
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,366
    Post Thanks / Like
    Moderator's Note : Please stop bringing in political discussions into this thread.
    Do restrain yourselves as such discussions has the potential to attract attention from unwanted quarters.


    p/s: Hubbers who continue discussing politics will be given leave for a few days, to cool themselves down.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1322
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    காணொளிக்கு நன்றி சிவாஜிகணேசன்.இன் இணையதளம் மற்றும் யூட்யூப்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  5. #1323
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Today's Tamil The Hindu .

    சிவாஜியின் அரசியல்

    ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர், ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர்.
    தொடர்புக்கு: writermuthukumar@gmail.com



    பிப்ரவரி 10, 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார் சிவாஜி.

    நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை என்பார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, அவரைத் திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளில்தான் அதிகம் பார்க்க முடியும்.

    அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடிக்க ஆள் தேடியபோது முதலில் கிடைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அந்த இடத்துக்கு வந்தார் நடிகர் கணேசன். அவருடைய நடிப்பைப் பார்த்து, ‘சிவாஜி’கணேசன் ஆக்கினார் பெரியார். பெயர் வைத்தவர் பெரியார் என்றாலும், சிவாஜிக்கு அண்ணாவின் மீதுதான் அதிகபட்ச ஈர்ப்பு. கருணாநிதி போன்றவர்களோடு நட்பு.

    திராவிட இயக்கம்

    பெரியாரிடமிருந்து விலகி திமுகவைத் தொடங்கிய சமயத்தில், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் கே.ஆர். ராமசாமிக்கு அடுத்து செல்வாக்கு நிரம்பிய திரை நட்சத்திரம் சிவாஜி மட்டுமே. பின்னாளில் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். என்று பல நடிகர்கள் திமுகவில் இணைந்து பிரச்சார மேடைகளை அலங்கரித்தனர். திராவிட நாடு கோரிக்கையைத் திமுக மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்த சமயம், திருச்சி லால்குடியில் நடந்த திமுக மாநாட்டில் ஈவெகி சம்பத் பேசினார். அந்தப் பேச்சு சிவாஜியை உணர்ச்சிவயப்படுத்தியது. அடுத்துப் பேசிய சிவாஜி, “அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, (திராவிட நாட்டு விடுதலை) போரில் ஈடுபடுவேன்” என்று முழங்கினார்.

    1957-ல் தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. பலத்த சேதம். நிவாரண நிதி திரட்டித் தாருங்கள் என்றார் அண்ணா. ஆகட்டும் என்று சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் களமிறங்கினர். கையில் துண்டேந்தி, ‘பராசக்தி' வசனம் பேசி நிதி திரட்டினார் சிவாஜி. அதிக நிதி அவருக்கே திரண்டது. ஆனால், அண்ணாவின் பரிசும் பாராட்டும் எம்ஜிஆருக்கே கிடைத்தது. அண்ணாவைச் சுற்றியுள்ளோர் செய்த சதி என்று சந்தேகப்பட்டார் சிவாஜி. சந்தேகம் கொடுத்த சோர்வால் முடங்கிக்கிடந்த சிவாஜியைத் தோள் தட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். வாருங்கள், திருப்பதி போய் வரலாம். போனார்கள். மறுநாள் பத்திரிகைகளில் செய்தி, ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்’ என்று. ‘திருப்பதி கணேசனுக்குக் கோவிந்தா’என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். படச் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. வழக்கமான செய்திதான். அது சினிமா விவகாரம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் விவகாரம் என்பது புரிந்தது சிவாஜிக்கு. இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

    காங்கிரஸ் இயக்கம்

    விரக்தியின் விளிம்பில் நின்ற சிவாஜியை காமராஜர் என்ற காந்தம் கவர்ந்திழுத்தது. இனி காமராஜரே என்னுடைய வழிகாட்டி என்று சொன்னார் சிவாஜி. சிவாஜி காங்கிரஸில் இணைந்ததில் அண்ணாவுக்கு வருத்தம்தான். அதனாலென்ன, ‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று சொல்லிவிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளராக, பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டார் சிவாஜி. 1967 தேர்தலில் காமராஜரும் காங்கிரஸும் தோற்று, திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் சிவாஜி பாதை மாறவில்லை. மேலும், தீவிரமாகவே கட்சிப்பணி செய்தார். காங்கிரஸ் கட்சி உடைந்தபோது காமராஜரின் பக்கமே நின்றார் சிவாஜி. 1971 தேர்தலில் சிவாஜி - எம்ஜிஆர் இடையே கடும் வார்த்தை யுத்தங்கள் நடந்தன. “என்னைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியுமா?” என்று கேட்டார் சிவாஜி. “என் படத்தின் வசூலை உன்னுடைய படத்தால் விஞ்ச முடியுமா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார் எம்.ஜி.ஆர். மூத்த தலைவர்களின் தலையீட்டுக்குப் பிறகே தனிமனிதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது.

    தேர்தல் தோல்விக்குப் பிறகு, இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும் இணைப்பதில் ஆர்வம் செலுத்திய தலைவர்களுள் சிவாஜியும் ஒருவர். 1973 புதுச்சேரி தேர்தலின்போது காமராஜரும் இந்திராவும் கூட்டணி அமைத்தனர். ‘காவிரியும் கங்கையும் சங்கமித்துவிட்டன’ என்று சிலாகித்தார் சிவாஜி. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் இணைந்தார் சிவாஜி. அவருக்குக் கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுத்தார் இந்திரா. 1980 தேர்தலில் திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்தபோது, “என் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்றாகிவிட்டது” என்றார் சிவாஜி. பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, “நாடாள கலைஞர் இருக்கிறார், நடிப்பதற்கே போகட்டும் எம்.ஜி.ஆர்” என்று பேசினார் சிவாஜி. அந்தச் சமயத்தில் திரை நட்சத்திரம் நர்கீஸ் மரணமடையவே, அவர் வகித்துவந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சிவாஜிக்குக் கொடுத்தார் இந்திரா. தேசிய அளவில் இந்திரா காந்தி உள்ளிட்டோருடன் நல்ல நட்பு இருந்தாலும் இங்கே மூப்பனார், சிவாஜி கோஷ்டி மோதல் ஏகப்பிரபலம். தேர்தல் வரும்போதெல்லாம் சிவாஜி கோஷ்டிக்கென்று தனியே ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்தான் இன்றைய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

    தமிழக முன்னேற்ற முன்னணி

    எம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது காங்கிரஸ் கட்சி வி.என்.ஜானகியை ஆதரிக்க வேண்டும் என்றார் சிவாஜி. ஆனால், ஜெயலலிதா அதிமுகவையே ஆதரிப்போம் என்று சொல்லிவிட்டார் ராஜீவ். அந்த நொடியில் ராஜீவ் - சிவாஜி உறவு கசந்தது. விளைவு, சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பதவி விலகினர். மொத்தமாக விலகிவிடலாம் என்றனர் சிவாஜி ரசிகர்கள். சிவாஜி, 10 பிப்ரவரி 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். 1989 தேர்தலில் அதிமுக (ஜா) பிரிவுடன் கூட்டணி அமைத்தார் சிவாஜி. அவருடைய கட்சிக்கு 50 இடங்கள் தரப்பட்டன. திருவையாறு தொகுதியில் சிவாஜி போட்டியிட்டார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் பவானிசாகரில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆரின் மறைவு, சிவாஜியின் ஆதரவு என்ற இரண்டு அம்சங்களும் வி.என்.ஜானகிக்குக் கைகொடுக்கவில்லை. திருவை யாறில் தோற்றுப்போனார் சிவாஜி. அத்தோடு கட்சியைக் கலைத்துவிட்டு, அரசியலிலிருந்து ஒதுங்கினார் சிவாஜி.

    ஜனதா தளம்

    வேண்டாம் என்று விலகிப்போன சிவாஜியை மீண்டும் அரசியல் களம் அழைத்தது. ராஜீவ் காந்திக்கு எதிராகத் தேசிய அளவில் அணியமைத்த வி.பி.சிங், தன்னுடைய ஜனதா தளம் கட்சியின் தமிழகத் தலைவராக சிவாஜி செயல்பட வேண்டும் என்று கோரினார். கடந்த காலக் கசப்பனுபவங்களைச் சொல்லி மறுதலித்தார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் நண்பரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வழியே தான் நினைத்த காரியத்தைச் சாதித்தார் வி.பி. சிங். தமிழக ஜனதா தளத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் சிவாஜி. பின்னர் நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஜனதா தளம் இடம்பெற்றது. கருணாநிதியும் சிவாஜியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ஆனால், தேர்தல் முடிவுகள் எதுவும் சாதகமாக அமையவில்லை. அத்தோடு அரசியலிலிருந்து முற்று முழுதாக விலகினார் சிவாஜி. ‘சக்சஸ்' என்ற வார்த்தையின் வழியே திரைத் துறைக்குள் நுழைந்த சிவாஜி, ஏனோ அந்த வார்த்தையை அரசியல் களத்தில் உச்சரிக்கவே முடியவில்லை!

  6. Thanks Russellisf thanked for this post
  7. #1324
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1325
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    Courtesy : Internet

  9. Thanks Russellbzy, Subramaniam Ramajayam thanked for this post
  10. #1326
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Barani View Post
    Today's Tamil The Hindu .

    சிவாஜியின் அரசியல்

    ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர், ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர்.
    தொடர்புக்கு: writermuthukumar@gmail.com



    பிப்ரவரி 10, 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார் சிவாஜி.

    நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை என்பார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, அவரைத் திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளில்தான் அதிகம் பார்க்க முடியும்.

    அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடிக்க ஆள் தேடியபோது முதலில் கிடைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அந்த இடத்துக்கு வந்தார் நடிகர் கணேசன். அவருடைய நடிப்பைப் பார்த்து, ‘சிவாஜி’கணேசன் ஆக்கினார் பெரியார். பெயர் வைத்தவர் பெரியார் என்றாலும், சிவாஜிக்கு அண்ணாவின் மீதுதான் அதிகபட்ச ஈர்ப்பு. கருணாநிதி போன்றவர்களோடு நட்பு.

    திராவிட இயக்கம்

    பெரியாரிடமிருந்து விலகி திமுகவைத் தொடங்கிய சமயத்தில், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் கே.ஆர். ராமசாமிக்கு அடுத்து செல்வாக்கு நிரம்பிய திரை நட்சத்திரம் சிவாஜி மட்டுமே. பின்னாளில் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். என்று பல நடிகர்கள் திமுகவில் இணைந்து பிரச்சார மேடைகளை அலங்கரித்தனர். திராவிட நாடு கோரிக்கையைத் திமுக மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்த சமயம், திருச்சி லால்குடியில் நடந்த திமுக மாநாட்டில் ஈவெகி சம்பத் பேசினார். அந்தப் பேச்சு சிவாஜியை உணர்ச்சிவயப்படுத்தியது. அடுத்துப் பேசிய சிவாஜி, “அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, (திராவிட நாட்டு விடுதலை) போரில் ஈடுபடுவேன்” என்று முழங்கினார்.

    1957-ல் தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. பலத்த சேதம். நிவாரண நிதி திரட்டித் தாருங்கள் என்றார் அண்ணா. ஆகட்டும் என்று சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் களமிறங்கினர். கையில் துண்டேந்தி, ‘பராசக்தி' வசனம் பேசி நிதி திரட்டினார் சிவாஜி. அதிக நிதி அவருக்கே திரண்டது. ஆனால், அண்ணாவின் பரிசும் பாராட்டும் எம்ஜிஆருக்கே கிடைத்தது. அண்ணாவைச் சுற்றியுள்ளோர் செய்த சதி என்று சந்தேகப்பட்டார் சிவாஜி. சந்தேகம் கொடுத்த சோர்வால் முடங்கிக்கிடந்த சிவாஜியைத் தோள் தட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். வாருங்கள், திருப்பதி போய் வரலாம். போனார்கள். மறுநாள் பத்திரிகைகளில் செய்தி, ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்’ என்று. ‘திருப்பதி கணேசனுக்குக் கோவிந்தா’என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். படச் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. வழக்கமான செய்திதான். அது சினிமா விவகாரம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் விவகாரம் என்பது புரிந்தது சிவாஜிக்கு. இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
    .....

  11. Likes Russellbzy liked this post
  12. #1327
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Kattabomman thursday 3.00 pm show 90% full as per 1.30 pm status
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  13. Likes Russellbzy liked this post
  14. #1328
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ரவிகிரன் சார் ,
    ஹிந்துவில் வந்த சிவாஜி அரசியல் கட்டுரை நண்பர் பரணி சார் பதிவிட்டது கண்டோம்! அந்த கட்டுரையில் காலபோக்கில் ஏற்பட்ட அவரின் அரசியல் மாற்றங்களை பற்றி மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள்! அவரின் அரசியல் வெற்றி காணமுடியாத காரணத்தை சொல்லவில்லை! உண்மையான காரணத்தை
    இதுவரை எவரும் சரியாக சொன்னதில்லை! நான் சொல்கிறேன்! அனைத்து சிவாஜி ரசிகர்களும் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
    மிகவும் சுருக்கமாக சொல்கிறேன்! பொதுவாக மக்களிடம் பிரபலமான எந்த நபராக இருந்தாலும் தான் சேர்ந்துள்ள கட்சியில் இருந்து விலகிபோவதுக்கு
    அந்த நபருக்கு அந்த கட்சியில் இழைக்கப்பட்ட அநீதி தான் முக்கிய காரணமாக இருக்குமேயின்றி நிச்சயம் கொள்கை கோட்பாடுகள் உண்மையான காரணமாக இருக்காது! சிவாஜி திமுக வில் இருந்து விலகவும் சிலர் கூட்டணி அமைத்து அவர் வளர்ச்சியை தடுக்க நினைத்து அண்ணாவையும் தங்கள்
    பக்கம் இருக்க செய்து நடத்திய வஞ்சகமே காரணம்! அதன் பிறகு சிவாஜி காமராஜர் கூட இணைந்து அரசியல் நடத்தியதில் எந்த குறைபாடும் இன்றி
    சிறப்பாகவே செயல்பட்டார்! மக்கள் செல்வாக்கும் சிவாஜிக்கு அமோகமாகவே இருந்தது! காமராஜர் இறப்புக்கு பின்பு அவர் செய்த தவறுகள் அவரின்
    அரசியல் செல்வாக்கை பெரிதும் பாதித்தது! அந்த சம்பவங்களை நான் ஏற்கனவே கூறிவிட்டதால், மீண்டும் கூற விரும்பவில்லை! சிவாஜியின் அரசியல்
    வெற்றி காண முடியாமல் போனதுக்கு இன்னுமொரு மிக முக்கியமான காரணம் உள்ளது! எந்த ஒரு துறையிலும் ஒருவர் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல
    வேண்டுமானால் திறமை, உழைப்பு செல்வாக்கு எல்லாம் இருந்தாலும் அந்த உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற ஆர்வம், ஆசை இயல்பாகவே இல்லையென்றால் அந்த நபரால் அந்த நிலையை அடைய முடியாது! சிவாஜிக்கு நடிப்பில் இருந்த உண்மையான ஆர்வம் அவரை திரைஉலகின் சக்கரவர்த்தி ஆக்கியது! மற்றவர்களின் எதிர்ப்புகள், சூழ்ச்சிகள் அவரை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை! ஆனால் அரசியலில் முதலமைச்சர்
    ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு அறவே இல்லை! எனவே அவர் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை! திட்டமிடாத செயல்களால் உருப்படியான
    பலன் கிடைக்கவில்லை! காமராஜர் மறைவுக்கு பின்பு சிவாஜி தனிக்கட்சி கண்டு காமராஜரின் கொள்கைப்படி, திமுக, அதிமுக கட்சிகளை மிக கடுமையாக
    எதிர்த்து காமராஜர் தொண்டர்களையும் சிவாஜியின் ரசிகர் பட்டாளத்தையும், ஒருங்கிணைத்து தீவிர அரசியல் செய்திருந்தால் சிவாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவும் இருந்தார் என்று வரலாறு கூறியிருக்கும்! இன்று ஒரு சிலைக்கும் , மனிமண்டபத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை வந்திருக்காது! என் பதிவை பார்த்து விட்டு சிலர் சிவாஜி முதல்வர் ஆகியிருப்பாராம் என்று கிண்டலடிக்கலாம்! அதற்கு என்ன பெரிய படிப்பு என்ற தகுதியா
    வேண்டும்? எதை செய்தால் மக்கள் ஒட்டு போடுவார்கள் என்ற நுட்பத்தை அறிந்து செய்ய வேண்டியதை செய்திருந்தால் நிச்சயம் சிவாஜிக்கும் அது சாத்தியமாகிஇருக்கும்! சிலர் கூறுவது போல் சிவாஜி நல்லவர் , உத்தமர் , அதனால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை என்று சொல்வது தவறு!
    அப்படி கூறுபவர்கள் அரசியலில் வெற்றிகண்டவர்கள் அனைவரும் நல்லவர்கள் இல்லையென்று கூறுவார்களா? சிவாஜி அரசியலில் நல்லவராக
    இருந்தது நல்ல விசயம் தான்! ஆனால் வல்லவராக இல்லாமல் போனதுதான் சிக்கலே! மகாபாரத போரிலே எதிரிகள் வலுவறிந்து, அவர்களை வெல்ல
    கிருஷ்ணர் சில சூழ்ச்சிகளை செய்வார்! அரசியலில் தேர்தல் போரில் வெல்ல சில சூட்சமங்கள் புரிந்து சில சூழ்ச்சிகள் செய்து எதிரிகளை வெல்ல வேண்டும்!
    சிவாஜிக்கு அந்த தந்திரங்கள் இயல்பாகவே தெரியவில்லை! அதனால் வலுவானவராக இருந்த போதிலும் வல்லவராக இல்லாததால் அரசியலில் வெற்றி
    காண முடியவில்லை! என் தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவென்றால் சிவாஜி காமராஜர் மறைவுக்கு பின்பு ஒன்று தனிக்கட்சி கண்டிருக்க வேண்டும்!
    அல்லது அரசியலை விட்டு விலகி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் ! இந்திரா காங்கிரஸில் சேர்ந்ததால் அது அகில இந்திய கட்சி
    என்பதால் அவர்கள் தமிழ்மாநில அரசியலை, காங்கிரஸ் தொண்டர்களின் மன உணர்வுகளை கண்டுகொள்ளவே இல்லை! திமுக, அதிமுக விடம்
    பாராளுமன்ற சீட்டுக்களுக்காக மாறி மாறி கூட்டணி அமைத்து காங்கிரஸ் பலத்தை சிதைத்து பலவீனமாகினார்கள்! காங்கிரஸ் செயல்களால் சிவாஜியின்
    அரசியல் செல்வாக்கும் வெளியே தெரியாமல் குறைந்து கொண்டே வந்தது! 1988 இல் தனிக்கட்சி கண்டபோதும் அவர் மேலும் சில தவறுகள் செய்தது
    அவரை படு குழியில் தள்ளிவிட்டது! மகாபாரத கர்ணன் , அர்ச்சுனனைவிட பலசாலியாக இருந்த போதும் தன் வலிமையை ஒவ்வொரு காலகட்டதிலும்
    கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நட்புக்காக சேரகூடாதவர்களோடு சேர்ந்து கடைசியில் எப்படி வீழ்ந்தானோ , அப்படிதான் நம் அன்புக்குரிய தலைவர்
    சிவாஜியும் அரசியலில் .....
    இது என் கருத்து மட்டுமல்ல ! இதுதான் உண்மையும் கூட!!
    நன்றி !

  15. #1329
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Our hopes are with Mr KC and I am confident that he will come out with flying colours in High Court if not

    at Supreme Court. Mr KC is the real THALAPATHY.
    All our eyes are looking at kc sir at the momet iF not through the court hope he will chart out a detailed plan through a masssive PERANI OR FASTING TO RETAIN THE STATUE AT MARINA ITSELF. THOUASNDS OF FOLLOWERS ARE PREPARED FOR THE CAUSE.
    Last edited by Subramaniam Ramajayam; 3rd September 2015 at 03:21 PM.

  16. #1330
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    Kattabomman thursday 3.00 pm show 90% full as per 1.30 pm status
    Then why they are changing the film by friday. any VANCHAGAM HEREALSO.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •