Page 134 of 401 FirstFirst ... 3484124132133134135136144184234 ... LastLast
Results 1,331 to 1,340 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1331
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    திருச்சி பாஸ்கர் சார்,

    தங்களின் பதிவில் நடிகர்திலகத்தின் பின்னாளைய அரசியல் ஈடுபாட்டை நுட்பமாக அலசியுள்ளீர்கள். பெருந்தலைவர் காமராஜ் மறைவுக்குப்பின் தனிக்கட்சி கண்டிருக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றில் மட்டும் சற்று மாறுபடுகிறேன்.

    காமராஜ் மறைவுக்குப்பின் பழைய காங்கிரசை (ஸ்தாபன காங்கிரசை) இவர் கைப்பற்றியிருக்க வேண்டும். அன்றைய நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது ஸ்தாபன காங்கிரஸ் மட்டும்தான். இந்திரா காங்கிரஸ் அப்போது ஒரு லெட்டர் பேட் கட்சி மட்டுமே.

    எனவே மிகப்பெரிய தொண்டர்படையை கொண்ட ஸ்தாபன காங்கிரசை சிவாஜி கைப்பற்றி, அதன் தலைமை ஏற்று நடத்தியிருக்க வேண்டும். பெருந்தலைவருக்குப்பின் பழைய காங்கிரசில் செல்வாக்குப்பெற்ற பெரிய தலைவர்கள் யாருமில்லை. பா.ரா. வெல்லாம் சும்மா பேருக்குத்தான் இருந்தார். அந்த நல்ல வாய்ப்பையும் கோட்டைவிட்டார் நடிகர்திலகம்.

    1989-ல் சம்மந்தமில்லாத யாரையோ முதல்வராக்குவதற்கு இவர் கட்சி ஆரம்பித்தார். அப்போது அ.தி.மு.க. 'ஜா' அணி என்றும் 'ஜெ' அணி என்றும் பிரிந்து இருக்க, இரட்டை இல்லை சின்னமும் முடக்கப்பட்டு இருக்க, தி.மு.க.வுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று பரவலாக தெரிந்தது. அப்போது தி.மு.க.தலைவர் தமிழக முன்னேற்ற முன்னணிக்கு 25 இடங்கள் தருவதாக தூது அனுப்பினார். அதை ஏற்று கூட்டணியில் சேர்ந்திருந்தால் 15 எம்.எல்.ஏ.க்களாவது ஜெயித்திருக்க முடியும். திருவையாறு அவமானமும் ஒட்டாமல் இருந்திருக்கும். ஹும்.. எல்லாம் போச்சு.

    நடந்தவற்றை இப்போது போஸ்ட்மார்ட்டம் பண்ணி என்னபயன் என்ற விரக்திதான் மிச்சமாகிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1332
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 5

    'ராஜபார்ட் ரங்கதுரை'.

    நினைவிருக்கிறது.

    அரைக்கால் சட்டைப்
    பருவத்திலிருந்த அந்த
    எண்பதுகளின் ஒரு தினத்தில்,
    நெருங்கிய தோழர்கள்
    இருவருடன், அப்போதுதான்
    புதிதாக உருவாகியிருந்த,
    ஊருக்கும்,தனக்கும் மிக நீண்ட
    தூர இடைவெளி வைத்திருந்த
    டூரிங் திரையரங்கத்திற்கு,
    ஒரே மிதிவண்டியில்,அதுவும்
    இரவு 10.30 மணிக் காட்சிக்குப்
    போனது..

    நினைவிருக்கிறது.

    நாலு தெரு தாண்டினதும்
    மிதிவண்டி திடுக்கிட்டு
    வேகம் குறைந்தது.

    அந்தத் தெருவிலிருந்து
    திரையரங்கம் நோக்கிச்
    செல்லும் ஒரு முக்கியச் சந்தில்
    மனிதர்களை விட நாய்கள்
    அதிகம் வசித்து வந்தன
    பின்வாங்கவும் முடியாத
    பாதிப் பயணத்தில்,மேலுமெங்களைத் திடுக்கிடச் செய்யும் விதமாக புஷ்டியான ஆறு நாய்கள் எங்கள் சதை பறித்து,எடை குறைக்க ஓடி வர..
    மிதிவண்டியை ஓட்டிய
    இரண்டு கால்கள் தவிர பாக்கி
    நான்கு கால்களையும்,
    நான்கு கால் பிராணிகளுக்குத் தரும் விருப்பமின்றி,அவரவர் நெஞ்சு வரைக்கும் தூக்கி வைத்துக்கொண்டு,
    தப்பித்தோம்.
    ---------
    ரங்கதுரை..

    எல்லாவற்றையும் மறக்க
    வைத்தார்.

    நாடக நடிகராக, கண் நிறைந்த
    கதாநாயகனாக வரும் நடிகர்
    திலகம்,படத்தின் ஒவ்வொரு
    அங்குலத்தையும் அழகுறச்
    செய்திருந்ததில் ஆச்சரியம்
    இல்லை என்பதால்,
    இன்று வரை என்னால் மறக்க
    முடியாத அந்தப் படத்தின்
    ஒரு பாடலை மட்டும்
    பகிர்கிறேன்.

    "தில்லை அம்பலத்
    தலமொன்றிருக்குதாம்" என்கிற
    நந்தனார் பாடல்.

    போய் வருவதற்குக் கேட்ட
    அனுமதி மறுத்து எஜமானன்
    போய் விட..

    "நாளை போகாமல் நான்
    இருப்பேனோ?"-என்று ஏங்கித்
    தவித்துப் பாடும் பாடல்.

    அவரே பாடியிருப்பாரோ
    எனும் ஐயத்துடன் அந்தப் பதினாலு வயசில் எனக்கு வந்த மிரட்சி,

    இதோ. .இப்போது பார்க்கும்
    போதும் இருக்கிறது.

    இத்தனை ஈடுபாட்டுக்கு, இது
    ஒன்றும் அவருக்கு முதல்படம்
    இல்லை.

    இத்தனை தத்ரூபமான
    வாயசைப்பிலிருந்தால்தான்
    படம் ஓடுமென்கிற நிலை
    இல்லை.

    ஆனாலும்..

    அய்யா, பாடலுக்கு உயிர்
    ஊட்டுகிறார்.

    உன்னதமாக்குகிறார்.

    ஒரு தெய்வீக இசைஞரும்,
    ஓர் தெய்வீகப் பாடகரும்
    தன் பொருட்டுச் செய்த இசை
    உதவிக்கு, அந்த மகா கலைஞன் செய்த பதில் மரியாதை இந்தப்
    பாடல்.

    செய்வதைத் திருந்தச் செய்வது
    என்பார்களே..அதன் இரண்டு
    நிமிஷ உதாரணம் இந்தப்
    பாடல்.
    --------
    இரண்டரை மணி நேரம் தீர்ந்து,
    இந்தப் பாடலின் ரீங்காரத்துடன் திரும்பும் வழியில்..

    பத்து மணிக்குத் துரத்திய
    ஆறில் இரண்டு நாய்கள் மட்டும் படுத்துக் கிடந்தன.

    இப்போது..

    நாய்களிடமிருந்து ஒரு
    குரைப்பு கூட இல்லை.

    துரத்தியடிக்கும் வேகம்
    இல்லை.

    நிறைந்த மனசோடு திரும்பும்
    எங்களுக்கும் பயமில்லை.
    -------
    மகிழ்வும், நிம்மதியுமாய்
    நெஞ்சு நிமிர்த்தி வரும்
    சிவாஜி ரசிகர்களை,
    எந்த நாய்தான் என்ன செய்து
    விட முடியும்?


  4. #1333
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    RAJAPART RANGADURAI IS A GREAT ACTING SCOPE MOVIE.OUR THALAIVAR DID VERY WELL.UNFORGETTABLE MOVIE FOR MANY.
    மகிழ்வும், நிம்மதியுமாய்
    நெஞ்சு நிமிர்த்தி வரும்
    சிவாஜி ரசிகர்களை,
    எந்த நாய்தான் என்ன செய்து
    விட முடியும்? superb aathavan ravi
    Last edited by vcs2107; 3rd September 2015 at 08:34 PM.

  5. Likes Russellbzy liked this post
  6. #1334
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by senthilvel View Post
    இந்த முகத்தில்
    பொருந்தியது போல்
    வேறெந்த
    முகத்திலும்
    பொருந்தாது
    ஒப்பனை.

    அழகு-
    மிகவும்
    விரும்பிற்று..
    எங்கள்
    அப்பனை.

    Sent from my GT-S6312 using Tapatalk

  7. #1335
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ஆதிராம் சார் ,
    முதலில் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! எதற்காக தெரியுமா ? பெரும்பாலும் நடிகர்திலகத்தின் அரசியலை விவாதிக்கும் போது நம் திரி நண்பர்கள்
    அதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்! நீங்கள் அதில் ஆர்வம் காட்டி பதில் அளித்தமைக்கு முதற்கண் நன்றி! சிவாஜி அரசியலில் வெற்றிபெறாவிட்டாலும்
    சுமார் 30 வருடங்களுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டவர்! நாட்டின் முக்கிய தலைவர்களுடன் எல்லாம் இணைந்து அரசியலில் பணிஆற்றியவர்!
    அவர் காலத்திலேயே அரசியலில் பலர் கோடிகளை குவித்தபோது தான் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசியலுக்காக இழந்தவர்! இப்படிப்பட்ட உத்தமனின்
    அரசியலை விவாதிப்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை! என் ஒரே மன ஆதங்கம் அவருடைய மக்கள் செல்வாக்கை பயன்படுத்த தெரியாமல் அவர்
    வீணாக்கிவிட்டாரே என்பது தான்! நீங்கள் கூறியபடி காமராஜர் மறைவுக்கு பின்பு அவர் ஸ்தாபனகாங்கிரசை கைப்பற்றி அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும்!
    அது தான் என் கருத்துமாகும்! அதில் சிலரது உள்குத்து காரணமாக சிக்கல் ஏற்பட்டிருந்தால் அவர் தனி கட்சி கண்டிருக்கலாம் என்பதே சரி!
    நம் சிங்க தலைவர் சிவாஜியின் அரசியல், சினிமா எதுவாக இருந்தாலும் நம் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை!
    மீண்டும் தங்களுக்கு நன்றி !

  8. Thanks adiram thanked for this post
    Likes adiram, ifohadroziza, Harrietlgy liked this post
  9. #1336
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    ஞாயிற்றுக்கிழமையின்
    பள்ளி வளாகம் போல
    வெறிச்சோடிக் கிடந்த
    பழைய காலத்துத்
    திரையரங்கங்கள்,
    "பராசக்தி"க்குப் பிறகுதான்
    பரபரப்பாயின.

    "யார் என்னை வாழ வைப்பார்?"-என்று
    ஏங்கித் தவித்த தமிழ்,
    இந்த உத்தமக் கலைஞனின்
    உச்சரிப்பு வீட்டுக்குள்தான்
    உற்சாகமாய் வாழ்ந்தது.

    குளித்த புத்துணர்வோடு
    நடந்து செல்லுகையில்
    வந்து மோதும்
    சாயங்காலக் காற்றின் சுகத்தை
    சிவாஜி படங்களே தருகின்றன.

    என் தாத்தா,பாட்டிக்கு சிபாரிசு
    செய்ததும்,
    அப்பா,அம்மாவுக்கு சிபாரிசு
    செய்ததும்,
    நான்,என் மனைவிக்கு
    சிபாரிசு செய்வதும்..
    சிவாஜி படங்களாகவே
    இருக்கின்றன.

    அவ்வாறே சிபாரிசு
    செய்வார்கள்..
    என் மகனும்,பேரனும்
    அவரவர் மனைவியருக்கு.




    Sent from my GT-S6312 using Tapatalk

  10. Thanks Russellbzy thanked for this post
  11. #1337
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    கொஞ்சம் வித்தியாசமாக..
    காவலரை
    வைத்திருக்கிறோம்..
    சிறையில்.
    இதயச் சிறையில்.

    Sent from my GT-S6312 using Tapatalk

  12. Likes Russellbzy, KCSHEKAR, ifohadroziza liked this post
  13. #1338
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    நல்லவற்றை
    நாட்டுக்கு
    அறிமுகம் செய்தவரும்,

    நல்லவரையே
    நமக்கு
    அறிமுகம் செய்தவரும்.

    Sent from my GT-S6312 using Tapatalk

  14. Thanks ifohadroziza thanked for this post
    Likes KCSHEKAR, ifohadroziza, Russellmai liked this post
  15. #1339
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    From Facebook


    படத்தினால் பாடலா. . பாடலினால் படமா ?
    இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் மறக்க. முடியாதவை.. மெல்லிசை மன்னரின் அற்புத படைப்பு... சிவாஜி KR.விஜயா ஜோடியின் அருமையான நடிப்பு,அழகிய கலர் படம்....அதுவும் ஊட்டியின் இயற்க்கை காட்சிகள்.. வேறு என்ன வேண்டும். நமக்கு..

    அங்கே மாலை மயக்கம்
    படம் : ஊட்டி வரை உறவு
    குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
    இசை : எம்.எஸ்.வி.
    பாடல் : கண்ண்தாசன்
    நடிகர்கள் : சிவாஜி, கே.ஆர்.விஜயா
    அங்கே மாலை மயக்கம் யாருக்காக
    இங்கே மயங்க்கும் இரண்டு பேருக்காக
    இது நாளை வரும் என்று காத்திருந்தால்
    ஒரு நாளல்லவோ வீணாகும்
    (அங்கே)
    ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
    அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
    கூடச் சொல்வது காவிரி ஆறு
    கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
    (அங்கே)
    கேட்டுக் கொள்வது காதலின் இனிமை
    கேட்டால் தருவது காதலி கடமை
    இன்பம் என்பது இருவரின் உரிமை
    யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
    லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
    லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
    ஆஹாஹாஹா..ஆஹாஹாஹா
    ஓஹோஹோஹோ.ஹ¥ஹ¥ஹ¥ஹ¤ம்..
    (அங்கே)

  16. Likes Russellbzy, ifohadroziza, Russellmai liked this post
  17. #1340
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ஆதிராம் சார்,
    நீங்கள் திருவையாறு பற்றி சொன்னீர்கள் அல்லவா! அப்போது நடந்த சம்பவங்களை சொல்கிறேன்! அந்த தொகுதி 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற
    பொது தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதி! திமுகவின் செல்வாக்கு பெரிதும் சரிந்திருந்த அந்த நேரத்திலும் அந்த கட்சி தனித்து போட்டியிட்டு
    வெற்றி பெற்ற இடம்!! அதாவது அந்த தொகுதி திமுக கோட்டை என்றே சொல்லலாம்! அப்படிப்பட்ட பாதுகாப்பில்லாத risk ஆன தொகுதியை தவறுகள்
    மட்டுமே அரசியலில் செய்வேன் என்று செயல்பட்ட நம் தலைவர் சிவாஜி தேர்ந்தெடுத்தார்! தமிழகம் முழுவதும் இருந்த நம் தொண்டர்கள் பெரும்பாலும்
    சிவாஜியை நிற்க சொன்ன தொகுதி நாகர்கோவில் ஆகும்! நாங்கள் திருச்சியில் இருந்து சென்னை கட்சி அலுவலகத்துக்கும், அன்னை இல்லத்துக்கும் தந்தி, கடிதங்கள் திருவையாறில் நிற்கவேண்டாம் என்று அனுப்பினோம்! ஒரு பிரோஜனமும் இல்லை! சரி நேரில் சந்திக்க முடிந்தால்
    அவரிடமே சொல்லலாம் என்று சென்னை கட்சி அலுவலகம் சென்றோம்! அந்த சமயங்களில் அவர் பெரும்பாலும் தினமும் கட்சி அலுவலகம் வருவார்!
    சிவாஜி அங்கு ரொம்ப ரொம்ப பிஸி யாக இருந்தார்! பொறுமையாக காத்திருந்து அவரை சந்தித்த போது அவர் எங்கோ செல்ல எழுந்து விட்டார்!
    அந்த அவசரத்திலும் என்னப்பா பசங்களா என்ன விஷயம் என்று கேட்டார்! அவர் புறப்பட்டு கொண்டே பேசியதால் எங்களால் விளக்கமாக கூறமுடியா
    விட்டாலும், நீங்கள் திருவையாறில் நிற்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை விரிவாக காரணங்களை இந்த கடிதத்தில் கூறியுள்ளோம் என்று நாங்கள் கொண்டு சென்றிருந்த கடிதத்தை அவர் கையில் கொடுத்தோம்! அவர் அருகில் நின்றிருந்த ராஜசேகரன் கடிதத்தை அவராகவே வாங்கிகொண்டு நான் என்னவென்று விசாரிக்கிறேன் நீங்கள் புறப்படுங்கள் என்று சிவாஜியிடம் கூறிவிட்டார்! சிவாஜியும் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்!
    பின்பு ராஜசேகரிடம் விவரங்களை கூறி நாங்கள் பல தந்தி , கடிதங்கள் அனுப்பினோமே பார்க்கவில்லையா என்று ஆர்வமாக கேட்டால் அவர் வெகு
    சாதாரணமாக பார்த்தோம் என்று கூறினார்! தலைவர் அதை படித்தாரா என்று நாங்கள் கேட்டதுக்கு ஏனப்பா அவர் ஒரு மாநில தலைவர் , அவருக்கு பல
    வேலைகள் இருக்கும் மேலும் தேர்தல் நேரத்தில் கடிதங்களை படித்துகொண்டா இருக்க முடியும் என்று சற்று எரிச்சலுடன் பேசினார்! நான் அவரிடம்
    சரி நீங்கள் கடிதத்தை படித்தீர்களா உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டதுக்கு தலைவர் எங்கு நின்றாலும் ஜெயிப்பார்! போய் உங்கள் தொகுதியில்
    வேலையை பாருங்கள் என்றார்! நாங்கள் சார் அது dmk கோட்டை கொஞ்சம் யோசியுங்கள் என்றதுக்கு அரசியலை நீங்கள் எங்களுக்கு கற்று தருகிறீர்களா
    என்று கோபமாக கூறி விட்டு சென்று விட்டார்! விதி வலியது சார்!
    ராஜசேகரன் சிவாஜிக்கு வலது கரம் போல் செயல்பட்டவர்! அவரை சுற்றி இருந்தவர்கள் லட்சணம் இப்படிதான் இருந்தது!

  18. Thanks adiram thanked for this post
    Likes ifohadroziza liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •