Page 136 of 401 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1351
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Shri MSV Gopi shows the Photo.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai, ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1352
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Shri Murali Srinivas welcoming the audience
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai, ainefal liked this post
  6. #1353
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Charming NT onscreen
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #1354
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Banner image paying tribute to Mellisai Mannar
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai, ainefal liked this post
  10. #1355
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like










    Fans paying floral tribute
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1356
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Fans with MSV Gopi
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. #1357
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Shri G. Swaminathan, Shri Murali Srinivas and me (shaking hands) with MSV Gopi. At the right hand corner is one of the members of NTFANS. Shri Surendra Babu
    Last edited by RAGHAVENDRA; 5th September 2015 at 10:44 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Russellmai liked this post
  15. #1358
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் திருச்சி பாஸ்கர் சார்,

    நடிகர்திலகத்தின் அரசியல் ஈடுபாடு குறித்த தங்களுடைய தொடர் பதிவுகளுக்கு முதல் நன்றி.

    திருவையாறு தொகுதியில் 1977-ல் தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற்றதால் அது தி.மு.க.கோட்டை என்று குறிப்பிட்டீர்கள். ஆனால் நான்கு முனைப்போட்டி நடந்த அந்த 1977 சட்டமன்ற தேர்தலில் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் 20-க்கு 12 தொகுதிகளில் தி.மு.க வென்று சாதனை நிகழ்த்தியது. தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் அலையடித்த அந்த தேர்தலில், சட்டமன்றத்தில் திமுக 48 இடங்களில் வென்று அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக அமர மிக முக்கிய காரணம் சென்னையில் மொத்தமுள்ள 14-ல் 13 இடங்களை வென்றதும், தஞ்சையில் 20-க்கு 12 இடங்களை வென்றதும்தான். (அதே ஆண்டு மார்ச்சில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை சென்ற ஒரே தொகுதியில் வென்ற திமுக, சட்டமன்றத்தில் இந்த வெற்றியை எதிர்பார்க்கவே இல்லை).

    அதனால்தான் மறுநாள் முரசொலியில் "தலைநகரும் தஞ்சையும் கழக கோட்டைகள் ஆயின" என்று தலைப்பு செய்தியிட்டு மகிழ்ந்தனர். (தஞ்சையில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, குத்தாலம், திருவிடைமருதூர், நன்னிலம், வலங்கைமான், மயிலாடுதுறை, திருவாரூர், சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்ற, பட்டுக்கோட்டை, பாபநாசம் தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்ற, நாகப்பட்டினம், மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி தொகுதிகள் வழக்கப்படி கம்யூனிஸ்டுகள் பிடிக்க, கும்பகோணம் தொகுதியை மட்டும் (எஸ்.ஆர்.ராதா) அதிமுக பிடிக்க முடிந்தது (எம்ஜிஆர் ஆட்சியைப்பிடித்த தேர்தல் அது)

    இனி 1989 திருவையாறுக்கு வருவோம்...

    இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இயல், இசை இரண்டிற்கும் பெயர்போனது திருவையாறு என்பது எல்லோருக்கும் தெரியும். தியாகையர் அங்கே தங்கி பல கீர்த்தனைகள் இயற்றி, பாடினார் என்பார்கள். இப்போதும் திருவையாறு இசை ஆராதனை விழா வெகு விமரிசையாக நடக்கிறது. சரி, நாடகம்?. அதையும் பூர்த்தி செய்யும் விதமாக தங்கள் தொகுதியில் நின்ற நாடகமன்னன், நடிப்பின் நாயகனை தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக்கி, "கலையின் இருப்பிடம் எங்கள் ஊர். அதனால்தான் ஒரு பூரணத்துவம் பெற்ற கலைஞனையே எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அனுப்பியுள்ளோம்" என்று கொக்கரித்திருக்க வேண்டாமா?. வாய்ப்பை தவற விட்டனரே.

    திமுகவின் துரை. சந்திரசேகரன் உள்ளூர்க்காரர். அவரை எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு சிவாஜி கணேசன்?.

    1954 முதல் அரசியலில் உள்ள ஒரு கலைஞன், தமிழகத்தின் பெருமைகளை உலகறிய செய்த உன்னத கலைஞன், முதன்முதலாக தான் தேர்தலில் போட்டியிட தங்கள் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறானென்றால் ஒட்டுமொத்த திருவையாறே விழாக்கோலம் கண்டிருக்க வேண்டாமா?. செய்தார்களா?.

    திரு எம்ஜிஆரை விட்டு விடுவோம். அவரை யாருடனும் ஒப்பிடுவது எனதருமை மற்றுத்திரி நண்பர்களுக்குப் பிடிக்காது என்பதால்.

    ஒரு நடிகன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது.

    ஒரு நடிகன் ஐசரிவேலன் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது.

    ஒரு நடிகன் ராதாரவி தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது

    ஒரு நடிகன் நெப்போலியன் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது

    ஒரு நடிகன் எஸ்.வி.சேகர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது

    ஒரு நடிகன் சரத்குமார் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக முடிகிறது.

    ஒரு நடிகன் ராமராஜன் தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராக முடிகிறது.

    ஆனால்....

    தமிழகத்தையே தன் பேச்சால், நடிப்பால், கலையால் தலைநிமிரச்செய்த ஒரு சிவாஜி கணேசன் வெற்றிபெற முடியாது, வெற்றிபெற கூடாது இந்த தமிழ்நாட்டில். அப்படித்தானே..?.

    மற்றவர்களுக்கு வேண்டுமானால் திருவையாறு ‘புண்ணியபூமி’யாக இருக்கலாம், ஆனால் என்னைப்பொறுத்தவரை அது என் தலைவனை தோற்கடித்த ‘பாவபூமி’.
    Last edited by adiram; 5th September 2015 at 12:23 PM.

  16. Likes Russellbzy, Harrietlgy liked this post
  17. #1359
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு அதிரம் சார் அண்ட் திருச்சி பாஸ்கர் சார்

    தமிழக அரசியல் பற்றி பேசி பயனில்லை. மனிதாபிமானம் கொண்ட மனசாட்சிக்கு கட்டுப்படும் எவரும் உணர்சிவசபடுபவர்கள் ஆவர் !

    அரசியலின் முதல் disqualification இந்த மேற்கூரியவயாகும். சிரித்துகொண்டு கழுத்தறுக்கும் கலையில் விற்பன்னராக வல்லுனராக இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றிபெற முடியும் என்பது காலம் காலமாக இருக்கும் நிலைப்பாடு. அல்லது வேறு எந்த துறையும் சாராமல் கர்மவீரரை போல முழுவதும் அரசியலில் இருக்கவேண்டும்....இந்த இரெண்டும் நடிகர் திலகம் செய்யவில்லை.

    முதன் முதலில் பெரியார்பால் அன்புகொண்டு திராவிட கொள்கைகள் சிலவற்றுடன் தன்னுடைய கருத்து ஒத்துபோனதால் அந்த கொள்கைகளுக்காக தம்முடைய உழைப்பை வழங்கினார். பிறகு அண்ணா அவர்களை சேர்ந்தவர்களின் சதியால் அதில் இருந்து விலகி, கர்ம வீரருடன் தம்மை ஐகியபடுத்திகொண்டார் ! அவருக்கு பிறகு அவர் நேர்மை அறிந்த இந்திரா அவர்களுடன் இனைந்து செயல் பட்டார்...இதற்க்கு பிறகு அவர் சந்தித்தது எல்லாமே போலி அரசியல்வாதிகள்தான் சார் !

    அரசியலில் சாதுர்யமும் சானக்க்யதனமும் மிக முக்கியம்...!
    அது மக்கள் திலகத்திடம் இருந்தது ! சதுரங்க களத்தில் காயை எப்படி நகர்த்தவேண்டும் என்ற முறை மக்கள் திலகம் அறிந்தவர்..அதில் முதல் தர விற்பன்னரும் கூட ! மேலும் மிகவும் முக்கியமான அவருடைய நேரம் காலம் மற்றும் சூழல் மிகவும் கைகொடுத்தது ! அதை அவர் செவ்வனே பயன்படுத்திகொண்டார் தம்முடைய எண்ணத்தை நிறைவேற்றிகொள்ளும் விதமாக !

    திரை உலகை பொருத்தவரை, திறமை என்ற ஒன்று மற்ற எவரை காட்டிலும் நடிகர் திலகத்திடம் பல கோடி மடங்கு அதிகம் இருந்ததால் திரை உலகை பொருத்தவரை அவரை வளர்ச்சியை தடுக்கவோ அல்லது அவரது தொழிலில் அவரை வெற்றி கொள்ள எவராலும் முடியவில்லை கடைசி வரையிலும் ஒரு பெரும் காட்டிர்க்கே சக்ரவர்த்தியாக சாம்ராட்டாக இருந்தார் நடிகர் திலகம் ! மக்கள் திலகம் முதல்வரான பிறகு அவர் ஒரு காலம் வரையில் காங்கிரஸில் இருந்துவிட்டு கட்சி ஏதும் தொடங்காமலே இருந்திருக்கலாம்...ஆனால் தமிழக மக்களை பற்றி அவர் தெரிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பு அமைந்தது அவர் அரசியலுக்கு வந்தது. தேர்தல் தோல்வி என்பது நிரந்தரம் என்று அவர் கருதாமல் இருந்திருக்க வேண்டும்...
    அல்லது அவர் அதற்க்கு பிறகாவது சந்தர்ப்பவாத அரசியல் செய்திருக்கவேண்டும்...தன்னுடைய நேர்மை தவறக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததால் வந்த பயன்...!

    அவர் கால் தூசு பெறாத கண்டவனெல்லாம் நடிகர் திலகத்தின் அரசியல் பற்றி பேசும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது..!

    இன்று சரணம் போடுபவனும்...அடிமை போல எங்கோ போகும் தலைவனுக்கு தன்னுடைய வீட்டில் இருந்தபடி வெட்கம், மானம், ரோஷம், சூடு சொரணை இல்லாமல் மண்டியிடும் ஜால்ரா அடிக்கும் அடிமைகளுக்கு தான் அரசியல் சரிவரும் சார் ! நேர்மையின் உறைவிடமான நமக்கு அரசியல் சரிப்பட்டு வராது ! அதை பற்றி பேசி பயன் இல்லை...அரசியல் என்பது இன்று உலக fraud களின் கூடாரம் !

    Let us not talk about it !!

  18. Thanks adiram thanked for this post
    Likes Russellbzy, Harrietlgy liked this post
  19. #1360
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்



    நடிகர் திலகத்தின் பாடல் இல்லாமல் 'கிருஷ்ண ஜெயந்தி'யா?

    இதோ அற்புதமான ஒரு பாடல்.

    துள்ளி ஓடும் அந்த சின்னக் கண்ணனை அள்ளி வாரி,

    'கண்ணா! மணிவண்ணா! ஆயர்குல மணிவிளக்கே எங்கள் மன்னா!
    வண்ணப் பசுங்கிளியே! வார்த்தெடுத்த பொற்சிலையே!
    எண்ணமெனும் சோலையிலே இசை பாடும் இளங்குயிலே
    இசை பாடும் இளங்குயிலே!

    எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான்
    நல்ல செங்கமலச் சிரிப்பிரிக்கும் மன்னன் பாட்டுத்தான்'

    'வா கண்ணா வா' என்று நம்மை அழைத்து என்றும் வற்றாத ஜீவனுள்ள நடிப்பைத் தந்து,

    'நடிகர் திலகம்' இடுப்பொடித்து, பட்டு வேட்டியும், சிகப்பு வர்ணச் சொக்காயுமாய், இடுப்பில் அங்கவஸ்திரம் கட்டி, சுஜாதாவுடன் ஆடும்போது அள்ளிக் கொண்டு போகும்.

    'சின்னக் கண்ணன் செல்லக் கண்ணன் சுட்டிப் பிள்ளைதான்
    படுசுட்டி பிள்ளைதான்
    அள்ளிக்கொண்ட கை மணக்கும் வண்ண முல்லைதான்'

    (எங்கள் வீட்டில்)

    'மணிவண்ணன் பாட்டுத்தான்
    எங்கள் கண்ணன் பாட்டுத்தான்

    கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
    தட்டுங்கடி கையைத் தட்டுங்கடி'

    கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் நடிகர் திலகம், வி.கே.ராமசாமி ஜெயகணேஷ், சுஜாதா, வடிவுக்கரசி, நாகேஷ் மற்றும் ஊர் மக்கள்.

    'முத்துக்கருமணி சத்தமிட
    வண்ணக் கோல வளையல்கள் ஓசையிட

    சுத்திச் சுத்தி வந்து ஆடுங்கடி
    சுந்தரக் கண்ணனைப் பாடுங்கடி'

    (கொட்டுங்கடி)

    இப்போது உறியடித் திருவிழா நடக்கும். வி.கே.ராமசாமி தொடை தட்டி உறியடிக்கப் போகுமுன் நடிகர் திலகத்தின் முகத்தில்தான் எத்தனை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி! வி.கே.ஆர் உறியடிக்க முடியாமல் திணற, அடுத்து சுஜாதா நடிகர் திலகத்தை உறியடிக்கத் தள்ளிவிட, கம்பீரமாக களத்திற்குள் 'நடிகர் திலகம்' மீசையைத் தடவியபடி நுழைந்துவிட, சுற்றிலும் உள்ள பெண்மணிகள் இவர் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்ற, நடிகர் திலகம் எம்பி எம்பி உறியை அடிக்க முயல்வது வெகு அழகு.

    இப்போது நெஞ்சு நிமிர்த்தி, மீசை முறுக்கி, பின்னால் வீரமாக பின்னோக்கி நடந்து சென்று, பின் படு ஸ்டைலாக ஓடி வந்து உறியை கம்பால் அடித்து பதம் பார்ப்பாரே! அதகளம்தான்.

    கன்னிப் பெண்கள் மத்தியிலே கண்ணன் ஆட, நடிகர் திலகத்தின் கோலாகல கோலாட்ட நாட்டிய முத்திரைகள் ஆரம்பமாகும். கைகளில் இரண்டு கோலாட்டக் குச்சிகளை வைத்துக் கொண்டு என்ன அழகாக, வாகாக, நளினமாக ஸ்டெப்ஸ் வைப்பார் தெரியுமா!

    'கோலாட்டம் இது கோலாட்டம்
    கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்'

    'நடிகர் திலகம்' அருமையான முக பாவத்தில் இரண்டு கால்களையும் ஒன்று மாற்றி ஒன்று வைத்து கோல்களைத் தட்டியபடி,

    'கண்ணனின் திருமுகம் பாலாட்டம்'

    என்று பாட,

    'கண்கள் இரண்டும் வேலாட்டம்
    கன்னம் தாமரைப் பூவாட்டம்
    சிந்தும் புன்னகை பொன்னாட்டம்'

    என்று சுஜாதா தொடர்வார்.

    அடுத்து வழுக்கு மரம் ஏறும் போட்டி. எண்ணெய் தடவிய வழுக்கு மர உச்சி ஏறி, உச்சியில் இருக்கும் கலசப் பானையிலிருந்து பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இதிலும் சிலர் முயன்று தோற்க, நாயகர் வி.கே.ஆரை உசுப்பிவிட, வி.கே.ஆர் சந்தோஷத்துடன் தலையாட்டி சென்று பெரிய ஏணி ஒன்றை எடுத்து வருவாரே பார்க்கலாம்! ஏணியில் ஏறி பரிசுப் பொருளைக் கவர்வதற்காம்.

    அடுத்து 'நடிகர் திலகம்' வழுக்கு மரத்தில் 'சரசர' வென கொஞ்சம் கொஞ்சமாக ஏற, கணவன் ஏறுவதைப் பார்க்கும் சுஜாதா கைகளால் 'அப்.. அப்' என்று சொல்வது போல கைகளை உயர்த்தி திலகத்தை உற்சாகப்படுத்துவார். (சுஜாதா ஆக்ஷனில் அசத்துவார் இந்த இடத்தில்) நடிகர் திலகமும் மேலே ஏறி கலசப் பானையை திறக்கும் போது ஆரவாரம், விசில் சப்தம் பறக்கும் திரையில் அல்லாமல் படம் பார்க்கும் திரை அரங்கு உட்பட. (சுஜாதாவின் முகத்தில்தான் எத்துணை பெருமை தாண்டவமாடுகிறது 'நடிகர்திலகம்' கலசப் பானையைக் கைப்பற்றியவுடன்!)

    இப்போது அப்படியே டிராக் மாறும்.

    கண்ணன் 'நடிகர் திலகம்' மடியில் அமர்ந்திருக்க, ஆரத்தி எடுக்கப்பட்டு பாடல் தொடரும்.

    கோகுல பாலா! எங்கள் கோதை மணாளா!
    கோபியர் நேசா! வேணுகான விலாசா!

    பொன்மணிக் கால்களில் கிண்கிணி கொஞ்சிடும்
    புன்னகை மன்னா!
    போக்கிரிக் கண்ணா!

    மன்னன் தோளில் பூச்சாத்தி
    மஞ்சள் நீரில் ஆராத்தி

    நந்தகுமாரா!
    நவநீத ஜோரா!
    என்றும் உந்தன் பேர் வாழி!

    அருமையான கிருஷ்ண ஜெயந்தி பாடல். வயதான நடிகர் திலகத்தின் சிறுபிள்ளை விளையாடுத்தனமான ஜாலி நடிப்பு. பார்த்து அனுபவியுங்கள். அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடுங்கள். நம் 'ரங்கனி'ன் புகழையும் சேர்த்துத்தான்.


    Last edited by vasudevan31355; 5th September 2015 at 12:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •