Page 160 of 401 FirstFirst ... 60110150158159160161162170210260 ... LastLast
Results 1,591 to 1,600 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1591
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அரசு செலவில் நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் கட்டுவதா என புதிய தலைமுறை பருவ இதழ் வெளியிட்டிருக்கும் கருத்துரை சற்றும் ஏற்புடையதாக இல்லை என்பது மட்டுமல்ல, மிகுந்த கண்டனத்திற்குரியது.. இல்லை என்பார்க்கு ஒரு வேளை உதவியளித்து ஊரெங்கும் விளம்பரம் தேடும் நாளில் அவ்வாறு வருபவரை அழைத்து அவருடைய திறனறிந்து அதற்கேற்ப பணி தேடியளித்து அவர்களுடைய இருண்ட வாழ்க்கைப் பாதையில் ஒளி வெள்ளம் பாய்ச்சியவர் நடிகர் திலகம். தன்னுடைய திரைப்படங்களில் மிகைப்படுத்தப்பட்ட நாயகத்தன்மைகளின்றி, அன்றாட வாழ்வில் மக்கள் தங்கள் குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி அதற்கு தீர்வளித்து, அதன் மூலம் ஒவ்வொரு இல்லத்திற்கும் இல்லறம் சுபிட்சமாக வாழ வழி செய்த சமுதாயப்பணிக்கு சொந்தக்காரர். சீனப்போராகட்டும், வங்கப்போராகட்டும், இயற்கைப்பேரிடர்களாகட்டும், இந்தியாவில் எங்கெல்லாம் சமுதாயம் பாதிக்கப்படுகிறதோ, என்றெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அவையனைத்திற்கும் தன்னுடைய பங்களிப்பினை சம்பந்தப்பட்ட மய்ய அல்லது மற்றும் மாநில அரசின் மூலம் உதவியவர். இவற்றின் மதிப்பெல்லாம் விலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்ற திருக்குறளை வேதவாக்காகக் கொண்டு பின்பற்றியவர். அது மட்டுமல்ல அந்த உதவி மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடத்திக்காட்டியவர். பட்டியலிட்டு மாளாது அவர் செய்த உதவிகள். மனசாட்சி, தமிழுணர்வு இவையெல்லாம் கழற்றி வைத்து விட்டு எழுதப்பட்ட கருத்துரையாகக் காட்சியளிக்கிறது புதிய தலைமுறை பருவ இதழ் வெளியிட்டுள்ள தலையங்கம். தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக இன்றளவும் கோடிக்கணக்கில் கேளிக்கை வரியினை அரசுக்கு வசூலித்துத் தந்து கொண்டிருக்கும் அந்த உண்மையான தேசபக்தனுக்கு சென்னையில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தமிழன் வாழும் அத்தனைப் பகுதிகளிலும் அவருடைய சாதனைகள் நற்பணிகள் உள்ளிட்டவைகளை சித்தரிக்கும் அருங்காட்சியகத்தோடு அமைந்த மணி மண்டபம் கட்டவேண்டும் என்பதே நம் கோரிக்கை.
    Last edited by RAGHAVENDRA; 9th September 2015 at 05:41 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1592
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அலுவலக பணி மற்றும் வெளியூர் பயணம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திரியை பார்வையிடவோ அல்லது பங்களிப்பு செய்ய இயலாத நிலைமை. அந்த நேரத்தில் வேதனைக்குரிய சில விஷயங்கள் நடந்திருக்கின்றது. அதில் முதன்மையானது நடிகர் திலகத்தின் சிலை பற்றிய விவகாரம்.

    நிறுவப்பட்ட நாள் முதல் இன்று வரை கடந்த 9 வருடங்களில் ஒரு முறை கூட எந்த விபத்திற்கும் காரணமாக இருந்ததில்லை என்ற போதும் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக விபத்திற்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது என்றால் அதன் பின்னணி பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள், மக்களை அன்றாடம் பாதிக்கக் கூடிய நிகழ்வுகள் எத்தனையோ இருக்க அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சிலை இந்த இடத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் என்று ஒருவர் வழக்கு போடுகிறார் என்றால் அதுவும் வழக்கு தொடுத்தவர் இறந்து விட்ட பிறகும் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்று முன் வருகிறார்கள் என்றால் இந்த சிலை அங்கே இருப்பது பலரின் கண்ணை உறுத்துகிறது என்பது எளிதாக புரிந்துக் கொள்ளக் கூடியதே.. சிவாஜி சிலை அகற்றப்படுவதையும் கட்டபொம்மன் எடுக்கப்படுவதையும் பார்த்து மனதுக்குள் சந்தோஷமடைபவர்கள் நம்மை சுற்றிலும் இருப்பதைத்தான் நாம் பார்த்து வருகிறோமே! இது நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செய்யப்படுவது என்ற வாதத்திலும் வலுவில்லை. காரணம் நீதிமன்றத்தின் பல உத்தரவுகளும் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

    இது மக்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் எனவே ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு எப்படி செயல்படுத்தபடுகிறது என்பதை அனைவரும் பார்த்து வருகிறோம். ஆட்டோ மீட்டர் கட்டணம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்பட வேண்டும். அது ஏன் நடைமுறைபடுத்தவில்லை என்று நீதிமன்றம் குட்டு வைக்கிறது. கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவினருக்கு வேண்டிய தகவல்களை உதவிகளை ஏன் செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி கேட்கிறது. அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட விளம்பர போர்ட்களை ஏன் இன்னும் அகற்றவில்லை என்று நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறது. அதிகமான நீதிமன்ற அவமதிப்புகளை செய்யும் நிர்வாகம் என்ற பெயர் எடுத்து அதற்காக அரசு தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், மாநகர காவல்துறை ஆணையர் போன்றவர்களே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்கும் நிலை. Which is the nearest jail? என்று நீதியரசர்களே கோவப்படும் அளவிற்கு நீதிமன்ற அவமதிப்புகள். நடந்துள்ளன. .

    அப்படியெல்லாம் இருக்க சிவாஜி சிலைக்கு எதிராக மட்டும் ஏன் இந்த வேகம்? இதையே ஒரு அரசியல் தலைவர் சிலையாகவோ அல்லது ஜாதிக்கட்சி தலைவர் சிலையாகவோ இருந்தால் நிர்வாகம் இப்படி நடந்துக் கொண்டிருக்குமா?

    அவரது போஸ்டர்களில் சாணம் அடித்த அந்த காலம் முதல் அவர் மறையும் வரை அவரை பல்வேறு வழிகளில் களங்கப்படுத்தியவர்கள் அவர் மறைந்து 14 வருடங்களுக்கு பிறகும் அதை தொடர்வதுதான் வேதனை. நடிகர் திலகம் போன்ற ஒரு மனிதன் தமிழ்நாட்டில் பிறந்ததுதான் அவர் செய்த தவறு.

    வேதனையுடன்

  4. #1593
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஜோ,

    சென்ற வாரம் நடைபெற்ற வேதனையான் நிகழ்வுகளில் ஒன்று நீங்கள் இந்த மன்றத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டது. தற்காலிகமான நடவடிக்கை என்றபோதும் நான் இல்லை என்ற காரணத்தினால் மற்றொரு நெறியாளர் எடுத்த முடிவு என்றபோதினும் இந்த திரிகளின் நெறியாளன் என்ற முறையில் வருந்துகிறேன்.

    அதன் பிறகு நீங்கள் ஒரு பதிவை செய்திருக்கிறீர்கள். அரசியல் பற்றி பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு இப்போது நடப்பது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். இங்கே அரசியல் பேச வேண்டாம் என்ற தடை எப்போதும் இடப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை. நாமே பல முறை இந்த திரியில் விவாதித்திருக்கிறோம். ஏன் இதற்கு முந்தைய என்னுடைய பதிவு கூட ஒரு கோணத்தில் அரசியல் பார்வையே.

    ஆனால் வரையறுக்கப்பட்ட நாகரீக எல்லைக்குள் நமது வாதங்கள் முன் வைக்கப்படும்போது அது அனுமதிக்கப்படும். வரம்புகள் மீறப்பட்டு தனி நபர் தாக்குதல்கள் வரும்போதுதான் தவறு என்கிறோம். தவிர்க்க சொல்கிறோம். இந்த மன்றத்திலேயே நெறியாளராக இருந்த உங்களுக்கு நான் இதை சொல்லுவதே அதிகப்பிரசங்கிதனம்.

    அன்றைய தினம் நடிகர் திலகத்தின் சிலை பற்றிய நீதிமன்ற விவாதத்தில் தமிழக அரசு தன நிலைபாட்டை வெளிப்படுத்தியதும் இங்கே திரியில் பல்வேறு கண்டன செய்திகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சில கடுமையான தனி நபர் தாக்குதல்களாக இருந்த காரணத்தினாலேதான் நெறியாளரின் வார்னிங் மெசேஜ் வந்திருக்கிறது. [அதே நேரத்தில் நீங்கள் ஆட்சேபகரமான தனி நபர் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதை அன்றைய தினம் வந்திருக்கும் பதிவுகளை பிறகு படிக்கும்போது புரிந்துக் கொண்டேன்]. ஆனால் வார்னிங் மெசேஜ் வந்த பிறகு நீங்கள் செய்த ஒரு பதிவு [அது நீக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் என்னால் அதை படிக்க முடியவில்லை] உங்கள் இடைக்கால நீக்கத்திற்கு காரணியாக அமைந்திருக்கிறது என்பதையும் புரிந்துக் கொண்டேன். எப்படியிருப்பினும் அது வருந்தத்தக்கதே.

    அரசியல் மாறுபாடுகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். இங்கே பல்வேறு அரசியல் நிலைபாடுடையவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு கருத்து இருக்கும். சிவாஜி ரசிகனின் சிறப்பே அவன் சிந்திக்க தெரிந்தவன் என்பதுதானே. எத்தனையோ மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அடிப்படையில் சிவாஜி ரசிகன் என்ற மையப் புள்ளியில் நாம் அனைவரும் ஒன்று சேர்வோம்! மாறுபட்ட கருத்துகளில் Let us agree to disagree என்று பயணத்தை தொடர்வோம்!

    அன்புடன் .

  5. #1594
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Today's Ananda Vikatan Home page
    மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ)

    மேக்கிங் ஆப் பாகுபலி யை பார்த்திருக்கிறீர்கள்... மேக்கிங் ஆஃப் 'தில்லானா மோகனாம்பாள்' பார்த்திருக்கிறீர்களா..?

    ஹாலிவுட்டில், அந்நாளிலிருந்தே மேக்கிங் எனப்படும் ஒரு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பதிவு செய்யும் வழக்கம் உண்டு. 70 களின் மத்தியில் தயாரான ஜாக்கி ஜானின் திரைப் படங்களில் இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் செருகப்பட்டு, படத்தின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டது.

    ஆனால் இந்த உத்தி தமிழ் சினிமாக்களில் ஆரம்பநாளில் காணப்படவில்லை. பின்னாளில்தான் இம்மாதிரி உத்தி பிரபல கதாநாயகர்களின் படங்களில் பயன்படுத்தப்பட்டது. அதுநாள் வரை புகைப்படங்களாக, படப்பிடிப்புக் காட்சிகளை பதிவு செய்வதோடு சரி.....ஆனால் ஆச்சர்யமாக தமிழகத்தில் 1968 ல் தயாரான, சிவாஜியின் வெற்றிப்படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாளின் படப்பிடிப்பு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    இதை எடுத்தது அதன் படப்பிடிப்புக் குழு அல்ல. தமிழகத்தில் சினிமா தயாரிப்பு குறித்து பார்வையிடுவதற் காக அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழு.

    லுாயிஸ் மேள் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த டாக்குமென்டரியில், தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 4 நிமிடங்களுக்கு நகர்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து, 1969 ல் வெளியான வெற்றிப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'. ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டு, அப்போதைய விகடன் வாசகர்களை வாராவாரம் ஆவலோடு எதிர்பார்க்கவைத்து படிக்கப்பட்ட நாவல் அது.

    கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குனர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தை கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூக படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன்.

    உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும்.

    வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு.
    சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என்.

    ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

    எழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுபோனார் ஏ.பி. என். இதுதான் அன்றைய பட உலகம்.

    இத்தகைய புகழ்பெற்ற படத்தின் காட்சிகள்தான் வெளிநாட்டு டாக்குமென்டரி குழுவினரால் படம்பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்ப்பது நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது. சென்னையில் தயாராகும் சினிமா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமண்டரி படக் காட்சிகள் இப்போது காணக்கிடைப்பது சுவாரஸ்ய அனுபவம். காட்சிகளிடையே சென்னை சினிமா குறித்த வர்ணனை பின்னணியில் இடம்பெறுகிறது.

    அந்த வீடியோ இங்கே...


  6. #1595
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி
    அத்தனை வெளியீட்டிலும் வசூல் அள்ளும் சுரபி
    எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தெள்ளமுது
    எந்தத் தலைமுறையும் பருகத் தவறாத தேனமுது..

    இவ்வாண்டு மட்டும் திருச்சி மாநகரிலே கெயிட்டி, ஸ்ரீரங்கம் ரங்கராஜா, அருணா, முருகன் என மீண்டும் மீண்டும் விநியோகஸ்தரின் கல்லாவை நிரப்பிய ஆனந்த், இன்று முதல் மீண்டும் பாலஸ் விஜயம்.

    தகவல் அண்ணாதுரை அகில இந்திய சிவாஜி மன்றம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellbzy, Russellmai liked this post
  8. #1596
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    இந்த வருடம் அல்ல சார்! ஏப்ரல் இறுதியில் ஆரம்பித்து நான்கே மாதங்களில் இந்த ஐந்து திரையரங்குகளில் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டு வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார் அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த். மறு வெளியீடுகளில் வசந்த மாளிகை ஒரு கின்னஸ் சாதனைதான்.

    அன்புடன்

  9. Likes Russellbzy, RAGHAVENDRA liked this post
  10. #1597
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஆதிராம்,

    திருவையாறு தேர்தல் பற்றி பேசும்போது தமிழகத்தில் நடிகர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக் காட்டி ஒரு பதிவு செய்திருந்தீர்கள். அதில் ஒரு விஷயம் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நடிகர்களுமே [எம்ஜிஆர் உள்பட] ஏற்கனவே இயங்கி வந்த மக்கள் மத்தியில் அறிமுகமான கட்சி வேட்பாளராக நின்று வாக்காளர்களிடையே பரவலான பரிச்சயம் உள்ள சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெற்றார்கள். ஒரு சிலர் கூட்டணி கட்சியாக இருந்தாலும் அந்த கூட்டணிக்கு தலைமையேற்கும் முதன்மை கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். யாரும் புதிய கட்சி அல்லது புதிய சின்னத்தில் நின்று வெற்றி பெறவில்லை.

    இதில் ஒரே ஒரு விதிவிலக்கு. அவர் பெயரை நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது போடுவதற்கு விருப்பமில்லையா என்று தெரியவில்லை. எந்த அரசியல் அனுபவமும் இல்லாமல் எந்த கட்சியிலும் பணியாற்றாமல் புதிய கட்சி ஆரம்பித்து எந்த கட்சியுடனும் கூட்டணியும் வைக்காமல் தனித்து போட்டியிட்டு புதிய சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினரான ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே ! நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் வரலாற்று உண்மை.

    ஆனால் விஜயகாந்திற்கும் முன்னோடி என்றால் அது என்டிஆர் தான். எந்த அரசியல் இயக்கத்திலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் இல்லாமல் 1982 ம் ஆண்டு மார்ச் மாதம் தனிக் கட்சி ஆரம்பித்து தனித்தே போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியையும் பிடித்தவர் என்டிஆர். உலக வரலாற்றிலே அரசியல் அனுபவம் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி ஆரம்பித்த ஒன்பதே மாதங்களில் ஆந்திராவில் ஆட்சியை பிடித்தவர் என்டிஆர் ஒருவரே!

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 9th September 2015 at 11:17 PM.

  11. Likes Russellbzy, RAGHAVENDRA liked this post
  12. #1598
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி பாட்டு-6

    தாளமும்,வேகமுமாய் மனுஷனை அசத்திய பாடலிது.

    "லட்சுமி வந்தாச்சு"படம் எங்கள் ஊரில் வந்த போது,
    இதன் இயக்குநரான அமரர்.ராஜசேகர் இயக்கிய "மாவீரன்"
    இன்னொரு திரையரங்கில்
    ஓடிற்று.

    ஒரே ஒரு தெரு தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் வந்து விடுகிற திரையரங்கில் ஓடிய
    மாவீரனுக்குப் போகாமல்
    இரண்டரை கி.மீ.தாண்டி நான்
    போய் லட்சுமி வந்தாச்சு பார்த்ததற்கு..படம் பரிசாயிற்று.

    இந்தப் பாட்டு- கூடுதல் சந்தோஷம் தந்த பரிசாயிற்று.
    --------
    மிகச் சிரமப்படுத்தும் நீளமான
    ராகப் பாதையில் கவனமாய்ப்
    பயணிக்கும் அமரர்.மலேஷியா
    வாசுதேவன் அவர்களின்
    கம்பீரக் குரல்..

    மழைக்குப் பிறகான மண்வாசனை தரும் இதத்தை
    மனதுக்குத் தந்த ரவீந்திரன்
    அவர்களின் இனிய இசை..

    ஜெயசித்ராவும்,ரேவதியும்
    பச்சை பரப்பிய புல்வெளியில்
    சுழன்றாடும் நாட்டியம்..

    நாயகராய் நம் நடிகர் திலகம்..

    வெற்றிக் கூட்டணியில் ஜெயிக்கிறது பாட்டு.
    -------
    குதிக்கும் உடம்பும்,கொத்து முடி சதிராட்டமும், தாளம் போகிற போக்கிற்குத் தானாய்
    மாறும் முகபாவமுமாய்..

    பின்னுகிறார் நம்மாள்.

    "நீ ஒரு"-வலது கையால் அழகான அபிநயம்.

    "பிருந்தாவனம்"- இரண்டு
    கைகளாலும் ஒரு புல்லாங்குழலைக் கற்பித்து,கிருஷ்ணன் போல் வாசித்து,
    முகத்தில் ஒரு நடன அசைவு.

    ஒரே ஒரு வார்த்தை.

    ஒரு நூறு விளக்கம்.

    அய்யன் தரும் ஆச்சரியங்கள்
    எங்களுக்குப் பழக்கம்.



  13. Likes Russellbzy, Russellmai, RAGHAVENDRA liked this post
  14. #1599
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பார்ந்த திரி நண்பர்களே
    நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
    என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
    இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
    முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன் !!
    செந்தில்


    FOR IMMEDIATE RELEASE 20 August 2015

    Indian Scientists to Receive Prestigious Water Quality Award

    ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
    This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.

    நடிகர்திலகத்துக்கு மானசீகமாக இப்பெருமையை அமரரின் ஆசிவேண்டிசமர்பிக்கிறேன்
    திரிசார்ந்த பங்களிப்புகளை மீண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் நண்பர்களின் இணைவில் தொடங்குகிறேன்
    Last edited by sivajisenthil; 10th September 2015 at 02:42 AM.

  15. #1600
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பேராசிரியர் முனைவர் செந்தில் சார்
    தங்களுடைய சாதனை, சாதனை மன்னன் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் உரித்தான பெருமையாகும். கடல் கடந்த நாடுகளின் தமிழர் தலைவன் நமது நடிகர் திலகத்தின் அருமை தொண்டராயிற்றே..
    உமக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •